en
Feedback

Don't get caught by a cheater! Telemetrio finds and tags such channels 👉 If you want to see the tag, subscribe

உழவனின் தேடல் ©

உழவனின் தேடல் ©

Open in Telegram

குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal

Show more
1 373
Subscribers
No data24 hours
-27 days
-930 days
Posts Archive
தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள்! https://pachaiboomi.net/34896007-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=34896007-2 நீரின்றி அமையாது உலகு. எனவே, தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். வீராணம் ஏரி அமைவிடம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அருகில். கட்டப்பட்ட காலம்: கி.பி.907-கி.பி.953 வரை. கொள்ளளவு: 41.48 மில்லியன் கன மீட்டர் (1,465 மில்லியன் கன அடி) செம்பரம்பாக்கம் ஏரி அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம். கட்டப்பட்ட காலம்: பல்லவர் காலம். கொள்ளளவு: 88 மில்லியன் கன மீட்டர் (3,120 மில்லியன் கன அடி) […]

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்! https://pachaiboomi.net/499697-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=499697-2 மக்காச்சோளம், தமிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கியமான தானியப் பயிராகும். இப்பயிரில், விதைத்தது முதல் அறுவடை வரை, பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கி, மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, அமெரிக்கன் படைப்புழு, தண்டுத் துளைப்பான், கதிர்த் துளைப்பான் போன்ற பூச்சிகளும், அடிச்சாம்பல் நோய், டர்சிகம் இலைக்கருகல் நோய், மேடிஸ் இலைக்கருகல் நோய், துரு நோய், தண்டழுகல் நோய், பட்டை இலை உறை நோய் போன்ற நோய்களும் தாக்கி, பயிரின் வளர்ச்சியையும், […]

வெள்ளாடுகள் – ஏழைகளின் நடமாடும் வங்கி! https://pachaiboomi.net/46789656-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=46789656-2 தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் வெள்ளாடு வளர்ப்பு, விவசாயத்தின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. குறைந்த இடவசதிப் பராமரிப்பில் அதிக இலாபம் தருவதால், வெள்ளாடு வளர்ப்பு, இன்று முக்கியத் தொழிலாக வளர்ந்து வருகிறது. தற்போது, படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள், சுய வேலை வாய்ப்பில் ஈடுபட விரும்பும் மகளிர், தொழிலதிபர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என, பல்வேறு தரப்பினரும் வெள்ளாடுகளை வளர்க்க விரும்புகின்றனர். இந்த வெள்ளாடுகள், இறைச்சி, தோல், பால், உரோமம் மற்றும் சாணத்துக்காக வளர்க்கப்படுகின்றன. […]

பயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு! https://pachaiboomi.net/5896004-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5896004-2 உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரையை சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிர்களின் பூக்கும் பருவத்தில் உரிய சத்து மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், பயிர் வளர்ச்சிக்கும், காய்கள் பிடிப்புக்கும் மற்றும் மகசூல் மேம்படவும் உதவலாம். பூக்கும் பருவம்  பயறுவகைப் பயிர்களில் பூக்கும் பருவம், மகசூலைத் தீர்மானிக்கும் முக்கியமான பருவமாகும். இக்காலத்தில் நிலவும் வறட்சி, அதிக வெப்பம், சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால், பூக்கள் உதிர்வதுடன், காய்கள் பிடிப்பதும் பாதிக்கப்படும். எனவே, பயிரின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, பரிந்துரை அளவிலான சத்துகளை […]

இந்தியாவின் முக்கிய வெள்ளாட்டினங்கள்! https://pachaiboomi.net/3789956-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3789956-2 இந்தியாவில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. எளிதில் அடையாளம் காணத்தக்க தோற்றம் மற்றும் குணங்களில், வெவ்வேறு பகுதிகளில் இந்த ஆடுகள் உள்ளன. ஒவ்வொரு இனத்தின் பெயரும், வாழும் பகுதி, நிறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ இருபது வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வெள்ளாட்டு இனங்களைப் பற்றிப் பார்ப்போம். கன்னியாடுகள் இந்த ஆடுகள், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான, விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி ஆகிய […]

இந்திய செம்மறி ஆட்டினங்கள்! https://pachaiboomi.net/4685996-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4685996-2 ஊரக மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகச் செம்மறி ஆடுகள் விளங்கி வருகின்றன. பொதுவாகச் செம்மறியாடு என்று கூறினாலும், உலகளவில் இதில் பல்வேறு இனங்கள் உள்ளன. இவ்வகையில், இந்தியாவில் உள்ள முக்கியச் செம்மறி ஆட்டினங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோயம்புத்தூர் ஆடுகள் இந்தச் செம்மறி ஆட்டினம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரவியுள்ளது. இது, கம்பளி உற்பத்திக்காக வளர்க்கப்படும் ஓர் இனமாகும். வெள்ளை நிறத்திலுள்ள இந்த ஆடுகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில், கறுப்பு அல்லது நீலநிறப் பட்டைகள் காணப்படும். வயது வந்த […]

மீன்களில் மறைந்துள்ள மருத்துவப் பொக்கிஷங்கள்! https://pachaiboomi.net/6548943095-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6548943095-2 மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், பல்வேறு உயிரியல் செயற்பாட்டுச் சேர்மங்களின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. மீன்களின் தோல், செதில்கள், சளிப்படலம், இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படும் புரதங்கள், பெப்டைடுகள், கொலாஜன், கரோட்டினாய்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை, மருத்துவ ஆராய்ச்சிகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தச் சேர்மங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, திசு மறுசீரமைப்புப் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கலாம். எனவே, மீன்களில் காணப்படும் உயிரியல் மூலக்கூறுகளை ஆராய்ந்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல் […]

குளிர்கால அயர்ச்சியில் இருந்து கறவை மாடுகளைப் பாதுகாத்தல்! https://pachaiboomi.net/9678467-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=9678467-2 கோடைக்கால வெப்பத்துக்கு நிவாரணமாக அமையும் குளிர்காலம், கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்குப் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று அதிகமாகும் போது, இந்த விலங்குகள் குளிர்கால அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இதனால், அவற்றின் உடல் நலம், பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன் பெரிதும் பாதிக்கப்படும். குளிர் அழுத்தம் என்பது, குறைந்த வெப்ப நிலையை மட்டும் குறிக்காது. சுற்றுச்சூழல், சத்துகள், மேலாண்மை மற்றும் விலங்கின் உடலியலுக்கு இடையிலான சிக்கலான தொடர்பும் இதில் அடங்கும். உடல் வெப்பத்தைப் […]

நெல் தன் வரலாறு கூறுதல்! https://pachaiboomi.net/5793956-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5793956-2 உணவே உயிர். அந்த உணவின் உயிர்நாடி நான். நான் தான் நெல் பேசுகிறேன். மனிதர்கள் என்னை நெல் என்றும், அரிசி என்றும், சோறு என்றும், பல பெயர்களில் அழைக்கிறார்கள். என் வாழ்வின் பயணத்தையும், அந்தப் பயணப் பாதையையும் குறித்து, உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் புல் வகையைச் சேர்ந்த பயிராவேன். மனித குலத்தின் மிகப் பழமையான உணவுப் பயிர்களில் ஒன்றாகவும், உலக மக்களின் முக்கிய உணவாகவும் விளங்கும் பெருமை எனக்குண்டு. குறிப்பாக, இந்தியரின் உணவிலும், தமிழரின் […]

UHD வேளாண் வணிகம் (1-15)October 2026 Original Pdf File

வேளாண் வணிகம் (1-15)October 2026
வேளாண் வணிகம் (1-15)October 2026

நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்! https://pachaiboomi.net/689945645-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=689945645-2 ஆடிப்பட்டம் தேடி விதை என்பது, தமிழ்ப் பழமொழி மட்டுமல்ல; இது, தலைமுறை தலைமுறையாக் கடத்தப்பட்ட வேளாண் ஞானத்தின் வெளிப்பாடாகும். தமிழ்நாட்டு விவசாயிகள் பல நூற்றாண்டுகளாக, தமிழ் மாதமான ஆடியை, விதைப்புக்கு ஏற்ற மங்களப் பருவமாகக் கருதி வருகின்றனர். இந்த நம்பிக்கை வெறும் பாரம்பரியத்தில் மட்டுமல்ல; காலநிலை, மண் மற்றும் பயிர் வளர்ச்சியைப் பற்றிய அறிவியல் புரிதலிலும் வேரூன்றி உள்ளது. கடுமையான கோடை முடிவுக்கு வரும் போது, தென்மேற்குப் பருவமழை; குளிர்ச்சியான நிலையையும், மண் ஈரப்பதத்தையும், புத்துணர்வைத் தரும் […]

காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை! https://pachaiboomi.net/680705-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=680705-2 கடந்த சில ஆண்டுகளாக, கோடைக்கால வெப்பத் தாக்கம் (Heat Stress)  அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகள் (Heat Waves), நீண்டகால வறட்சி, காற்றின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற, காலநிலை மாற்றத்தின் விளைவுகள்; மனிதர்களை மட்டுமன்றி, கால்நடை மற்றும் பறவை வளர்ப்புத் தொழிலையும் பெரியளவில் பாதித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகளுக்கு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ICAR) தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. வெப்ப அழுத்தத்தை முன்கூட்டியே கணித்து, […]

மீன்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் சத்து மருந்துகள்! https://pachaiboomi.net/378596-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=378596-2 மீன் வளர்ப்பில் நல்ல வளர்ச்சி, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் குறைவான இறப்புக்கு, தரமான தீவனமும், நல்ல நீர்த்தர நிர்வாகமும் அவசியம். ஆனால், அதிக வெப்பம், நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை, அதிக மீனிருப்பு, மீன்களைக் கையாளுதல், நீரின் உப்புத் தன்மையில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றால், மீன்களில் அழுத்தம் (Stress) ஏற்படலாம். இதனால், மீன்களின் இயல்பான உடலியல் செயல்கள் பாதிக்கப்படுவதுடன், வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றல், தற்காப்புச் செயல்களுக்குத் திருப்பப்படலாம். நீண்டகால அழுத்தம், நோயெதிர்ப்புத் திறனையும் பாதிக்கக்கூடும். இந்த அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான […]

தென்னை சாகுபடியில் உர மேலாண்மை! https://pachaiboomi.net/5489500355-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5489500355-2 தென்னை சாகுபடியில் மகசூலைப் பெருக்க, உர மேலாண்மை மிகவும் முக்கியம். மண்ணின் தன்மை, மரத்தின் வயது, பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உரமிடுவதன் மூலம், மரத்தின் வளர்ச்சியையும், காய்ப்புத் திறனையும் மேம்படுத்தலாம். தென்னை மரத்துக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன, சரியான அளவில் கிடைக்க வேண்டும். மேலும், தொழுவுரம், கம்போஸ்ட் போன்ற இயற்கை உரங்களையும் இட்டால், தென்னை சாகுபடி சிறப்பாக இருக்கும். ஆண்டுக்கு எவ்வளவு உரம்? நன்கு வளர்ந்து காய்ப்பில் உள்ள தென்னை […]

ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்! https://pachaiboomi.net/57969007-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=57969007-2 கால்நடை வளர்ப்பில், பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில், தரமான பசுந்தீவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீவனச் செலவைக் குறைத்து, ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீனத்தை, சொந்த நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். புல்வகை, பயறுவகை மற்றும் மரவகைத் தீவனப் பயிர்களை இணைத்து வளர்ப்பதன் மூலம், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகளைச் சமச்சீராக வழங்க முடியும். அதிக மகசூலைத் தரும் நேப்பியர் புல் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் இரகமான கோ-5, பாசன வசதியுள்ள நிலங்களில் ஆண்டு […]

மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு! https://pachaiboomi.net/589359050-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=589359050-2 வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் பல்வேறு வழிமுறைகளில், மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தல் மிக முக்கியமானது. தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதால், மகசூலும் கூடும். மேலும், தேன் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருவாயும் உயரும். தேன் மெழுகு, பல்வேறு தொழிற்சாலைகளின் தேவைக்குப் பயன்படும். தேனீக்கள் வளர்ப்பில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, நல்ல வளர்ப்பிடம், நல்ல தேனீக்கள் மற்றும் நல்ல பராமரிப்பு. தேனீக்கள் வளர்ப்பிடம் அதிகளவில் மலர்கள் பூக்கும் […]

பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை! https://pachaiboomi.net/5803505/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5803505 பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்த பிறகு கட்டுப்படுத்துவதை விட, ஆரம்ப நிலையிலேயே அவற்றின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, உரிய கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்வது சிறந்தது. இதற்கு, பெரோமோன் பொறிகள் மற்றும் ஒட்டும் பொறிகள் பயன்படுகின்றன. அதாவது, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை மட்டுமே நம்பி இருக்காமல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில், இந்தப் பொறிகளைப் பயன்படுத்தி, பூச்சிகளின் தாக்குதலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கலாம். பெரோமோன் லூர்கள் செயல்படும் விதம் பெரோமோன் லூர்கள், குறிப்பிட்ட பூச்சி இனங்களின் ஆண் அந்துப்பூச்சிகளை ஈர்க்கும் […]

வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!    https://pachaiboomi.net/76904056-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=76904056-2 தென்னந்தோப்பில் வெட்டிவேரை சாகுபடி செய்தால், காற்றின் வெப்பம் குறையும். மழைநீரைச் சேமிக்கவும் உதவுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். வெட்டிவேரைப் பயன்படுத்தி, குளிர்ச்சி தரும் பொருள்களைத் தயாரிக்கலாம். கை விசிறிகள்,  தட்டிகள், வாசனைப் பத்திகள், மாலைகள், கம்ப்யூட்டர் இருக்கைகள், பாய்கள் மற்றும் யோகா பாய்கள், கார் இருக்கைகள், பாய்கள், சென்ட் வகைகள், அழகு பொம்மைகள் மற்றும் கடவுள் பொம்மைகள், கூடைகள், பைகள், தொப்பிகள் போன்ற பலவிதமான பொருள்களைத் தயாரிக்க, வெட்டிவேர் பயன்படுகிறது. கிராமங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் […]

சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்! https://pachaiboomi.net/5689607-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5689607-2 தோட்டக்கலைப் பயிர்களை, கரிசல் மண், செம்மண் ஆகிய இரு மண் வகைகளிலும் பயிரிடலாம். உரிய பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடுவதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டலாம். குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலப் பகுதியில், மா, திராட்சை, நெல்லி, ஆரஞ்சு, சப்போட்டா, காப்பி, வெற்றிலை, ஏலக்காய், பாக்கு, முந்திரி, கேரட், தக்காளி, பூக்கோசு, மரவள்ளி, கொடி வகைகள், கீரை வகைகள், மிளகாய், ரோஜா, மல்லிகை, மஞ்சள், செடி முருங்கை முதலியவற்றை சாகுபடி செய்யலாம். மணல் நிறைந்த மண்ணில் மல்லிகை […]