உழவனின் தேடல் ©
前往频道在 Telegram
குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal
显示更多1 384
订阅者
-224 小时
+17 天
-630 天
帖子存档
1 384
தென்னை சாகுபடியில் உர மேலாண்மை!
https://pachaiboomi.net/5489500355-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5489500355-2
தென்னை சாகுபடியில் மகசூலைப் பெருக்க, உர மேலாண்மை மிகவும் முக்கியம். மண்ணின் தன்மை, மரத்தின் வயது, பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உரமிடுவதன் மூலம், மரத்தின் வளர்ச்சியையும், காய்ப்புத் திறனையும் மேம்படுத்தலாம். தென்னை மரத்துக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன, சரியான அளவில் கிடைக்க வேண்டும். மேலும், தொழுவுரம், கம்போஸ்ட் போன்ற இயற்கை உரங்களையும் இட்டால், தென்னை சாகுபடி சிறப்பாக இருக்கும். ஆண்டுக்கு எவ்வளவு உரம்? நன்கு வளர்ந்து காய்ப்பில் உள்ள தென்னை […]
1 384
ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!
https://pachaiboomi.net/57969007-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=57969007-2
கால்நடை வளர்ப்பில், பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில், தரமான பசுந்தீவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீவனச் செலவைக் குறைத்து, ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீனத்தை, சொந்த நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். புல்வகை, பயறுவகை மற்றும் மரவகைத் தீவனப் பயிர்களை இணைத்து வளர்ப்பதன் மூலம், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகளைச் சமச்சீராக வழங்க முடியும். அதிக மகசூலைத் தரும் நேப்பியர் புல் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் இரகமான கோ-5, பாசன வசதியுள்ள நிலங்களில் ஆண்டு […]
1 384
மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!
https://pachaiboomi.net/589359050-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=589359050-2
வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் பல்வேறு வழிமுறைகளில், மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தல் மிக முக்கியமானது. தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதால், மகசூலும் கூடும். மேலும், தேன் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருவாயும் உயரும். தேன் மெழுகு, பல்வேறு தொழிற்சாலைகளின் தேவைக்குப் பயன்படும். தேனீக்கள் வளர்ப்பில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, நல்ல வளர்ப்பிடம், நல்ல தேனீக்கள் மற்றும் நல்ல பராமரிப்பு. தேனீக்கள் வளர்ப்பிடம் அதிகளவில் மலர்கள் பூக்கும் […]
1 384
பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!
https://pachaiboomi.net/5803505/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5803505
பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்த பிறகு கட்டுப்படுத்துவதை விட, ஆரம்ப நிலையிலேயே அவற்றின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, உரிய கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்வது சிறந்தது. இதற்கு, பெரோமோன் பொறிகள் மற்றும் ஒட்டும் பொறிகள் பயன்படுகின்றன. அதாவது, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை மட்டுமே நம்பி இருக்காமல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில், இந்தப் பொறிகளைப் பயன்படுத்தி, பூச்சிகளின் தாக்குதலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கலாம். பெரோமோன் லூர்கள் செயல்படும் விதம் பெரோமோன் லூர்கள், குறிப்பிட்ட பூச்சி இனங்களின் ஆண் அந்துப்பூச்சிகளை ஈர்க்கும் […]
1 384
வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!
https://pachaiboomi.net/76904056-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=76904056-2
தென்னந்தோப்பில் வெட்டிவேரை சாகுபடி செய்தால், காற்றின் வெப்பம் குறையும். மழைநீரைச் சேமிக்கவும் உதவுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். வெட்டிவேரைப் பயன்படுத்தி, குளிர்ச்சி தரும் பொருள்களைத் தயாரிக்கலாம். கை விசிறிகள், தட்டிகள், வாசனைப் பத்திகள், மாலைகள், கம்ப்யூட்டர் இருக்கைகள், பாய்கள் மற்றும் யோகா பாய்கள், கார் இருக்கைகள், பாய்கள், சென்ட் வகைகள், அழகு பொம்மைகள் மற்றும் கடவுள் பொம்மைகள், கூடைகள், பைகள், தொப்பிகள் போன்ற பலவிதமான பொருள்களைத் தயாரிக்க, வெட்டிவேர் பயன்படுகிறது. கிராமங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் […]
1 384
சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!
https://pachaiboomi.net/5689607-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5689607-2
தோட்டக்கலைப் பயிர்களை, கரிசல் மண், செம்மண் ஆகிய இரு மண் வகைகளிலும் பயிரிடலாம். உரிய பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடுவதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டலாம். குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலப் பகுதியில், மா, திராட்சை, நெல்லி, ஆரஞ்சு, சப்போட்டா, காப்பி, வெற்றிலை, ஏலக்காய், பாக்கு, முந்திரி, கேரட், தக்காளி, பூக்கோசு, மரவள்ளி, கொடி வகைகள், கீரை வகைகள், மிளகாய், ரோஜா, மல்லிகை, மஞ்சள், செடி முருங்கை முதலியவற்றை சாகுபடி செய்யலாம். மணல் நிறைந்த மண்ணில் மல்லிகை […]
1 384
பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?
https://pachaiboomi.net/4795606-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4795606-2
பசுவை, இலட்சுமி என்றும், கோமாதா என்றும் அழைத்தாலும், அது நன்றாகப் பால் தரும் போது மட்டும் கவனிப்பது, பால் வற்றியதும் கண்டு கொள்ளாமல் விடுவது, உயிர் வாழ்ந்தால் போதுமென்ற பாணியில் அரைகுறையாகத் தீவனமிடுவது, பெரும்பாலான விவசாயிகளின் குணமாக உள்ளது. இந்த எண்ணம் தவறானது மட்டுமல்ல, தரமான தீவனத்தைத் தராமல் இருப்பது, சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்வதைப் போன்றது. ஒரு பசு ஈன்றதும் அதன் மடியில் பால் சுரப்பது, அந்தப் பசுவின் கன்றைக் காக்கத் தான். இதை […]
1 384
நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!
https://pachaiboomi.net/5796997-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5796997-2
நமது உணவில் முதலிடத்தில் இருப்பது நெல்லரிசிச் சோறு. எனவே, நெல்லின் தேவை அதிகமாக இருப்பதால், நீர்வளம் உள்ள பகுதிகளில் நெல் சாகுபடி பெருமளவில் நடைபெறுகிறது. சாகுபடிக் காலத்தில் நெற்பயிரைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், இந்த நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். குலை நோய் அறிகுறிகள்: இலைகளில் கண் வடிவப் புள்ளிகள் தோன்றும். கழுத்துப் பகுதியில் பழுப்புப் புள்ளிகள் தோன்றும். கதிர்கள் ஒடிந்து தொங்கும். கணுக்கள் கறுப்பாக மாறி ஒடிந்து […]
1 384
குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!
https://pachaiboomi.net/789506-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=789506-2
தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற மாற்றுப் பயிர்களாகச் சிறுதானியப் பயிர்கள் விளங்குகின்றன. குறைந்த நீரிலும், வறட்சியான நிலையிலும் வளர்வதால், இந்தப் பயிர்கள், மானாவாரி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை ஆகும். கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு ஆகியன, தமிழகத்தில் பயிரிடப்படும் சத்துமிகு சிறுதானியப் பயிர்களாகும். குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்து விடும். நிலம் தயாரிப்பு சிறுதானிய சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள நிலமே ஏற்றது. நிலத்தை நன்கு உழவு […]
1 384
கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!
https://pachaiboomi.net/589707-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=589707-2
கறவை மாடுகளில் மலட்டுத் தன்மையை உண்டாக்குவதில், சூலக நீர்க்கட்டி (Cystic Ovary) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூலகத்தில் உள்ள நுண் குமிழ்கள் 2.5 செ.மீ.க்கு அதிகமாகவும், பத்து நாட்களுக்கு மேலும் நிலையாக இருந்தாலே, அதனைச் சூலக நீர்க்கட்டி என்று கூறுகிறோம். இந்தச் சூலக நீர்க்கட்டி, கறவை மாடுகளின் ஒரு சூலகத்திலோ அல்லது இரண்டு சூலகங்களிலோ காணப்படும். சினைப்பருவச் சுழற்சியின் போது உருவாகும் நுண் குமிழ்கள் வெடித்து 8-12 மணி நேரம் கழித்து, சினை முட்டையை வெளிப்படுத்துவது, […]
1 384
கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!
https://pachaiboomi.net/579607-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=579607-2
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பருவமழை பொய்த்து விவசாயம் பாதிக்கப்படும் காலங்களில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில், கால்நடை வளர்ப்பின் பங்கு முக்கியமானது. இருபதாம் கால்நடைக் கணக்கெடுப்பின்படி, கறவை மாடுகளின் வளர்ச்சி 18 சதவீதமும், நாட்டினக் கறவை மாடுகளின் வளர்ச்சி 10 சதவீதமும் அதிகரித்து உள்ளன. ஆயினும், இந்தியாவில் உள்ள கலப்பினக் கறவை மாடுகளின் சராசரி பால் உற்பத்தி 7.8 லிட்டர் […]
1 384
மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!
https://pachaiboomi.net/5897007-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5897007-2
மாஞ்செடிகள் வறட்சியைத் தாங்கி வளர்வதற்கு, அவற்றின் வேர் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். இதற்கு, நன்மை செய்யும் உயிர் உரங்கள் பல உள்ளன. வேர் வளர்ச்சி சிறப்பாக அமைய, மண்புழு உரத்துடன், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவைக் கலந்து, மாஞ்செடிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், வறட்சியால் காய்ந்து போகும் நிலை ஏற்படாது. பச்சைப் பசேலென வளர்ந்து நின்று நல்ல மகசூலைத் தரும். மா சாகுபடி சிறப்பாக அமைவதற்குப் பல்வேறு பயிர்ப் பாதுகாப்பு முறைகள் உள்ளன. […]
1 384
எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!
https://pachaiboomi.net/68967046-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=68967046-2
கிராமங்களில் உள்ள ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரமாக எருமைகள் விளங்குகின்றன. நம் நாட்டின் பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு முக்கியமானது. எருமைப்பாலில் 7 சதம் கொழுப்புச் சத்து உள்ளது. எருமை வளர்ப்பில் முக்கியப் பிரச்சினை, பால் வற்றிய காலத்துக்கும், அடுத்த கன்றை ஈனும் காலத்துக்குமான இடைவெளி அதிகமாக இருப்பது தான். கன்றை ஈன்ற ஆறு மாதத்துக்குள் எருமைகள் சினைப் பிடிக்காவிடில், எருமை வளர்ப்பு இலாபமற்றதாக அமையும். எருமைகளின் இன விருத்தியில் பலவிதச் சிக்கல்கள் உள்ளன. அவையாவன: கருப்பை […]
1 384
பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!
https://pachaiboomi.net/5896044-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5896044-2
அறுபதில் இருந்து 120 நாட்களில் விளையக்கூடிய, அறுபதாம் குறுவை, கருங்குறுவை, பூங்கார், கார், குழியடிச்சான், சிங்கினிக்கார், அன்னமழகி, உவர்முண்டா, குள்ளங்கார் போன்ற, குறுகிய கால இரகங்கள், குறுவைப் பட்டத்தில் பயிரிட ஏற்றவை. நூற்றி முப்பதில் இருந்து 140 நாட்களில் விளையக்கூடிய, தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச்சம்பா, வாசனைச் சீரகச்சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிவப்புக்கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடைவாழை போன்ற, மத்திய கால இரகங்கள், சம்பா பட்டத்தில் பயிரிட ஏற்றவை. நூற்றி நாற்பதில் இருந்து […]
1 384
தேனின் மருத்துவக் குணங்கள்!
https://pachaiboomi.net/47956060-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=47956060-2
தேன் (Honey) என்றால் இனிப்பு. இனிப்பு என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தரும் இந்தத் தேன், நமக்கு நலந்தரும் மருந்தாகவும் விளங்குகிறது. தேனில் நமக்குத் தேவையான முக்கியச் சத்துகளும், மருத்துவக் குணங்களும் (Medicinal properties of Honey) உள்ளன. தேனில், பி1, பி2, பி4, பி5, பி6, சி, இ ஆகிய வைட்டமின்களும், அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், குளோரின், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், குளுக்கோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் அமிலம், சிட்ரிக் […]
1 384
விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!
https://pachaiboomi.net/4769957-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4769957-2
விவசாயிகள், தங்களின் தொழிலில் இலாபமில்லை என்பதும், சாகுபடியைக் குறைவாகச் செய்தால் இழப்பைக் குறைக்கலாம் என்பதும், அதிகமாகச் செலவழிக்காமல் இருந்தால் நஷ்டமே வராது என்பதும், பொய்யான கற்பனையாகும். விவசாயத்தை, இலாப நஷ்டக் கணக்குப் பார்க்கும் தொழிலாக நினைப்பதில் தவறில்லை. அப்படிப் பார்த்தால், நிரந்தர வைப்புத் தொகைக்கு வட்டி வருவதைப் போலத்தான், சாகுபடி மூலம் உங்களுக்குக் கிடைக்கும் பொருள், பணம் போன்றவை. பல தலைமுறைகளாகப் பேணிக் காக்கப்பட்ட மதிப்புமிகு நிலம், இப்போது உங்களிடம் உள்ளது. எனவே, நீங்கள் உங்கள் நிலத்தின் […]
1 384
மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!
https://pachaiboomi.net/4685906-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4685906-2
தமிழக விவசாயிகள் மலர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், அதைச் செய்யத் தயங்குகிறார்கள். நல்ல மண்வளம் உள்ள விவசாயிகள், தயக்கம் காட்டி மலர் சாகுபடியைத் தள்ளிப் போடுவது தவறு. அதாவது, நீரில்லை. ஆளில்லை, சந்தை வசதி இல்லை, போக்குவரத்து வசதியில்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டால், குறுகிய காலத்தில் மனம் போல் காசு பார்த்துக் கரையேறலாம். மலர்களை இணைப்பயிராகத் தேர்வு செய்பவர்கள் நல்ல வரவினைப் பெற, முறையான சாகுபடி உத்திகளைக் கையாள […]
1 384
மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!
https://pachaiboomi.net/6796907-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6796907-2
உணவுப் பொருள்களில், காய்கறிகள் மற்றும் அவற்றைச் சார்ந்த பொருள்கள், 27 சதம் இடம் வகிக்கின்றன. இந்தியாவில் காய்கறிகள் 7.98 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகின்றன. இதன் மூலம், 129.07 மில்லியன் டன் காய்கறிகள் உற்பத்தி ஆகின்றன. காய்கறிகளில், உயிர்ச் சத்துகள், தாதுச்சத்துகள், மாவுச்சத்து, புரதச்சத்து ஆகிய சத்துகளும், அதிகளவில் நார்ச்சத்தும் உள்ளன. அன்றாடம் ஒரு மனிதன் 300 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டுமென, சத்தியல் வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், இந்தியாவில் இந்த அளவு 180 கிராமாக […]
1 384
சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்!
https://pachaiboomi.net/579506-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=579506-2
எண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கிய இடம் வகிப்பது சூரியகாந்தி. இப்பயிர், குறுகிய காலத்தில் அறுவடைக்கு வருவதுடன், குறைந்த நீரிலும் வளரக்கூடியது. தமிழ்நாட்டில், இறவை மற்றும் மானாவாரி முறையில், சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. நவீன சாகுபடி உத்திகளை முறையாகக் கடைப்பிடித்தால், நல்ல மகசூலைப் பெறலாம். ஏற்ற மண் சூரியகாந்திக்கு, நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், கரிசல் மண், வண்டல் மண், மணல் கலந்த களிமண் ஆகியன ஏற்றவை. அதிக நேரம் நீர்த்தேங்கி நிற்கும் நிலங்களைத் தவிர்க்க வேண்டும். மண்ணின் […]
1 384
இந்தியாவின் முக்கிய நாயினங்கள்!
https://pachaiboomi.net/6795066e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6795066e
இந்தியாவில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாயினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில், இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட நாய்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இராஜபாளையம்: தமிழ்நாட்டின் இராஜபாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த நாய்கள், கம்பீரமான தோற்றம் மற்றும் விசுவாசத்துக்குப் பெயர் பெற்றவை. இவை, வாட்டசாட்டமான உடலுடன், வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். கோம்பை: இது, தமிழ்நாட்டில் காணப்படும் வலுவான மற்றும் உறுதியான இந்திய இனமாகும். இந்த நாய்கள், கச்சிதமான உடலமைப்பு மற்றும் குட்டையான முடியுடன் இருக்கும். […]
