உழவனின் தேடல் ©
رفتن به کانال در Telegram
குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal
نمایش بیشتر1 391
مشترکین
+124 ساعت
-37 روز
-1030 روز
آرشیو پست ها
1 391
மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!
https://pachaiboomi.net/6796907-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6796907-2
உணவுப் பொருள்களில், காய்கறிகள் மற்றும் அவற்றைச் சார்ந்த பொருள்கள், 27 சதம் இடம் வகிக்கின்றன. இந்தியாவில் காய்கறிகள் 7.98 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகின்றன. இதன் மூலம், 129.07 மில்லியன் டன் காய்கறிகள் உற்பத்தி ஆகின்றன. காய்கறிகளில், உயிர்ச் சத்துகள், தாதுச்சத்துகள், மாவுச்சத்து, புரதச்சத்து ஆகிய சத்துகளும், அதிகளவில் நார்ச்சத்தும் உள்ளன. அன்றாடம் ஒரு மனிதன் 300 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டுமென, சத்தியல் வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், இந்தியாவில் இந்த அளவு 180 கிராமாக […]
1 391
சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்!
https://pachaiboomi.net/579506-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=579506-2
எண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கிய இடம் வகிப்பது சூரியகாந்தி. இப்பயிர், குறுகிய காலத்தில் அறுவடைக்கு வருவதுடன், குறைந்த நீரிலும் வளரக்கூடியது. தமிழ்நாட்டில், இறவை மற்றும் மானாவாரி முறையில், சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. நவீன சாகுபடி உத்திகளை முறையாகக் கடைப்பிடித்தால், நல்ல மகசூலைப் பெறலாம். ஏற்ற மண் சூரியகாந்திக்கு, நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், கரிசல் மண், வண்டல் மண், மணல் கலந்த களிமண் ஆகியன ஏற்றவை. அதிக நேரம் நீர்த்தேங்கி நிற்கும் நிலங்களைத் தவிர்க்க வேண்டும். மண்ணின் […]
1 391
இந்தியாவின் முக்கிய நாயினங்கள்!
https://pachaiboomi.net/6795066e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6795066e
இந்தியாவில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாயினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில், இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட நாய்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இராஜபாளையம்: தமிழ்நாட்டின் இராஜபாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த நாய்கள், கம்பீரமான தோற்றம் மற்றும் விசுவாசத்துக்குப் பெயர் பெற்றவை. இவை, வாட்டசாட்டமான உடலுடன், வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். கோம்பை: இது, தமிழ்நாட்டில் காணப்படும் வலுவான மற்றும் உறுதியான இந்திய இனமாகும். இந்த நாய்கள், கச்சிதமான உடலமைப்பு மற்றும் குட்டையான முடியுடன் இருக்கும். […]
1 391
விளைபொருள்களின் மதிப்பைக் கூட்டினால் வருமானம் கூடும்!
https://pachaiboomi.net/6795056-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6795056-2
உடலுக்கு நன்மை தரும் உணவுகளில் ஒன்றான வாழைப்பழத்தை, நமது உணவுப் பழக்க வழக்கத்தில் இருந்து என்றென்றும் அகற்ற இயலாது. அறுவடைக்குப் பிறகு, பலவிதக் காரணங்களால் வாழைப் பழங்கள் அதிகளவில் வீணாகின்றன. விரைவில் கெட்டு விடும் தன்மையுள்ள இந்தப் பழங்களை, குளிர் சாதனப் பெட்டியில் வைத்தும் பாதுகாக்க முடியாது. ஆக, அறுவடைக்குப் பிறகு, மொத்த உற்பத்தியில் 22 சதவீதப் பழங்கள் வீணாகின்றன. இதைப்போல, அதிகப் பயன்பாடின்றி, நிறையத் தோப்புகளில் வாழைப்பூக்கள், காய்கள், தண்டுகள் அதிகளவில் வீணடிக்கப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கான […]
1 391
உவர்நீர் மீன் வளர்ப்பில் நோய்த்தடுப்பு முறைகள்!
https://pachaiboomi.net/5794096-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5794096-2
நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தியைப் பெருக்கக் கூடிய, தீவிர மீன் வளர்ப்பு மற்றும் வணிகமய மீன் வளர்ப்பு முறை, உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும், உணவு உற்பத்தித் துறையாக உருவாகி உள்ளது. மற்ற உணவு உற்பத்தித் துறைகளைப் போலவே, மீன் வளர்ப்பில் பின்பற்றப்படும் தீவிர வளர்ப்பு முறைகள் மற்றும் இத்துறை வேகமாக வளர்ந்து வருவதால், நோய் சார்ந்த சிக்கல்களும் ஏற்படுகின்றன. பொதுவாக நோய்கள்; வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் அல்லது கண்டறியப்படாத மற்றும் புதிதாக உருவாகும் நோய்க் கிருமிகளால் […]
1 391
கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுதல்!
https://pachaiboomi.net/5794905-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5794905-2
கரும்புத்தோகை மற்றும் கரும்பாலைக் கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுவது குறித்து இங்கே பார்க்கலாம். » காய்ந்த கரும்புத் தோகையை, 15 செ.மீ. உயரம், 7 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் பரப்ப வேண்டும். » அதற்கு மேல், 5 செ.மீ. உயரத்துக்கு கரும்பாலைக் கழிவைப் பரப்ப வேண்டும். » அதற்கு மேல், நூறு கிலோ தோகைக்கு, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ ஜிப்சம் மற்றும் ஒரு கிலோ யூரியா வீதம் எடுத்துப் பரவலாகத் […]
1 391
பயிர்க்கழிவுகள் வீணல்ல; வருமானம் தரும் வளம்!
https://pachaiboomi.net/7896950-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7896950-2
ஒரு பயிரின் மகசூல் போக, மீதமுள்ள பயிரின் பாகங்கள் பயிர்க் கழிவுகள் எனப்படும். நெல் வைக்கோல், மக்காச்சோளத் தட்டை, கரும்புத்தோகை, தென்னை மட்டை என்று, அனைத்துப் பயிர்களிலும் கழிவுகள் உண்டு. பெரும்பாலான விவசாயிகள் இந்தக் கழிவுகளை, நிலத்திலேயே எரித்து விடுகின்றனர். இதனால், மண்வளம் பாதிக்கப்படுவதோடு, காற்று மாசும் ஏற்படுகிறது. உண்மையில் பயிர்க் கழிவுகள் என்பவை வீணானவை அல்ல. அவற்றைச் சரியாக மேலாண்மை செய்தால், மண்ணுக்கு உரமாகவும், கால்நடைக்குத் தீவனமாகவும் மற்றும் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க […]
1 391
SECRETS BEHIND BUFFET SETUP
Flow comes first – Plates are placed first, followed by salads, appetizers, main courses, and desserts to reduce congestion.
Height creates appeal – Different stand heights, risers, and decorative elements make the buffet look luxurious and visually balanced.
The 60-second rule – Guests should be able to understand the buffet layout within about a minute without asking for directions.
Temperature control is critical – Hot dishes stay above 60°C, while cold items are kept below 5°C to maintain food safety.
Small batches, frequent refills – Luxury hotels refill food more often instead of displaying large quantities, ensuring freshness and an elegant presentation.
Labels matter – Every dish is clearly labeled, especially for allergens and dietary preferences such as vegetarian or gluten-free options.
Most popular dishes are strategic – High-demand items are placed at multiple stations to prevent long queues.
Cleanliness never stops – Staff continuously wipe spills, replace serving utensils, and keep the buffet looking untouched.
Lighting enhances presentation – Proper lighting makes food appear fresher, more vibrant, and more appetizing.
Teamwork is the real secret – Behind every flawless buffet is a coordinated team of chefs, stewards, and Food & Beverage professionals working together.
For Jobs Join us on WhatsApp, Visit Frobia.com
1 391
விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை!
https://pachaiboomi.net/6797095-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6797095-2
வேளாண்மையில் குறைந்த உற்பத்திச் செலவில் அதிக மகசூலை பெறுவதற்கு, மண்வள மேலாண்மை மிகவும் முக்கியமானது. ஒரு நிலத்தில் பயிரிடுவதற்கு முன், அதன் சத்து நிலை, அமிலநிலை, காரநிலை மற்றும் நுண் சத்துகளின் அளவை, அறிவியல் முறையில் அறிந்து கொள்ள உதவுவது மண் பரிசோதனை. விதைப்புக்கு முன் மண் பரிசோதனை செய்வதன் மூலம், பயிரின் தேவைக்கேற்ற உரங்களைத் துல்லியமாக இட்டு மகசூலைக் கூட்டுவதுடன், மண்ணின் நீண்டகால வளத்தையும் பாதுகாக்கலாம். மண் பரிசோதனையின் அவசியம் மண் பரிசோதனை மூலம், மண்ணிலுள்ள […]
1 391
வேர் மண்டலத்தைப் பாதுகாக்கும் சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ்!
https://pachaiboomi.net/78056-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=78056-2
விவசாயத்தில் மகசூல் இழப்புக்குப் பயிர் நோய்கள் முக்கியக் காரணமாக உள்ளன. பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நூற்புழுக்கள் போன்ற நோய்க் காரணிகள்; வேர், தண்டு, இலை, பூ, காய் என, பயிரின் பல்வேறு பகுதிகளைத் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இரசாயன மருந்துகள் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை அதிகமாகவும் தொடர்ந்தும் பயன்படுத்துவதால், மண் மாசு, நீர் மாசு, நச்சு எச்சங்கள், பயனுள்ள நுண்ணுயிரிகளின் பாதிப்பு மற்றும் நோய்க் கிருமிகளில் மருந்து எதிர்ப்புத் திறன் போன்ற பிரச்சினைகள் […]
1 391
கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!
https://pachaiboomi.net/790606-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=790606-2
இந்திய வேளாண்மையில், கால்நடை வளர்ப்புத்துறை (Animal Husbandry Sector), அதிக வளர்ச்சியுள்ள முக்கியத் துணைத் துறையாக விளங்கி வருகிறது. பால், இறைச்சி, முட்டை மற்றும் பிற கால்நடைப் பொருள்களின் உற்பத்தி மிகுந்து வருவதால், கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியில், சத்துகள் பாதுகாப்பில், வேலை வாய்ப்பில், இத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கால்நடை வளர்ப்புத் துறையில், கோழி வளர்ப்புத் தொழில் (Poultry Sector) மிக வேகமாக வளர்ந்து வரும் துணைத் தொழிலாகத் திகழ்கிறது. குறைந்த முதலீடு, குறுகிய உற்பத்திச் […]
1 391
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையக் கீரை இரகங்கள்!
https://pachaiboomi.net/578495-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=578495-2
கடலூர் மாவட்டம், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம், காய்கறிகள் ஆராய்ச்சி மற்றும் புதிய இரகங்கள் உற்பத்தில் ஈடுபட்டு வருகிறது. இவ்வகையில், இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்ட கீரை இரகங்கள் மற்றும் அவற்றின் சாகுபடி முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம். பாலூர் சிறுகீரை-1 (பிஎல்ஆர்-1) இந்தக் கீரை, வடகிழக்கு மண்டலத்தின் பருவநிலை மற்றும் மண் தன்மைகளுக்கு மிகவும் ஏற்றது. கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பலவகை மண் வகைகளில் பயிரிட ஏற்ற இந்தக் […]
1 391
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையப் புடலை இரகங்கள்!
https://pachaiboomi.net/678595-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=678595-2
கடலூர் மாவட்டம், பாலூரில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், காய்கறி ஆராய்ச்சி நிலையம், காய்கறிப் பயிர்களில் புதுப்புது இரகங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வகையில், புடலங்காயில் வெளியிட்டுள்ள புதிய இரகங்கள் மற்றும் அவற்றின் சாகுபடிக் குறிப்புகளைப் பார்க்கலாம். பாலூர் புடலை 1 – வெள்ளை நீட்டு இரகம் (பிஎல்ஆர்-1) 2007-இல் வெளியிடப்பட்ட இரகம். வடகிழக்கு மண்டலத்தில் பயிரிட ஏற்றது. அதிக மகசூலைத் தரக்கூடியது. கவர்ச்சியான வெள்ளை நிறம் கொண்டது. காய்கள் முறுக்கும் தன்மை […]
1 391
பருத்தியில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு!
https://pachaiboomi.net/7969404-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7969404-2
பருத்தியைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சியான மாவுப்பூச்சி (பெனோகாக்கஸ் சொலனாப்சிஸ்), பருத்தியின் இலை, காய்கள் மற்றும் இலைக்காம்புகளில் உள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் தாக்குதல் தீவிரமானால், காய்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். மேலும், காய்கள் வெடிப்பது தாமதமாகி, மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும். தாக்குதல் அறிகுறிகள் தொடக்கத்தில், மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இங்கும் அங்குமென ஒரு சில செடிகளில் மட்டுமே இருக்கும். நுனிக்குருத்து, இலைகள், காய்கள் ஆகியவற்றை இப்பூச்சிகள் தாக்கிச் சாற்றை உறிஞ்சும். இதனால், செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, […]
