ch
Feedback
Seithikathir - Tamil News

Seithikathir - Tamil News

前往频道在 Telegram

Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014

显示更多

📈 Telegram 频道 Seithikathir - Tamil News 的分析概览

频道 Seithikathir - Tamil News (@seithikathir) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 10 374 名订阅者,在 新闻与媒体 类别中位列第 18 000,并在 印度 地区排名第 38 168

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 10 374 名订阅者。

根据 12 七月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 -161,过去 24 小时变化为 -6,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 16.02%。内容发布后 24 小时内通常能获得 4.35% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 1 663 次浏览,首日通常累积 452 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 4

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014

凭借高频更新(最新数据采集于 13 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 新闻与媒体 类别中的关键影响点。

10 374
订阅者
-624 小时
-347
-16130

数据加载中...

吸引订阅者
七月 '26
七月 '26
+2
在0个频道中
六月 '26
+3
在0个频道中
Get PRO
五月 '26
+4
在0个频道中
Get PRO
四月 '26
+1
在0个频道中
Get PRO
三月 '26
+2
在0个频道中
Get PRO
二月 '26
+1
在0个频道中
Get PRO
一月 '26
+2
在0个频道中
Get PRO
十二月 '25
+8
在0个频道中
Get PRO
十一月 '25
+52
在1个频道中
Get PRO
十月 '25
+24
在0个频道中
Get PRO
九月 '25
+6
在0个频道中
Get PRO
八月 '25
+6
在0个频道中
Get PRO
七月 '25
+11
在0个频道中
Get PRO
六月 '25
+6
在0个频道中
Get PRO
五月 '25
+25
在0个频道中
Get PRO
四月 '25
+12
在1个频道中
Get PRO
三月 '25
+16
在1个频道中
Get PRO
二月 '25
+48
在0个频道中
Get PRO
一月 '25
+89
在0个频道中
Get PRO
十二月 '24
+39
在0个频道中
Get PRO
十一月 '24
+56
在1个频道中
Get PRO
十月 '24
+78
在1个频道中
Get PRO
九月 '24
+36
在0个频道中
Get PRO
八月 '24
+46
在0个频道中
Get PRO
七月 '24
+58
在0个频道中
Get PRO
六月 '24
+112
在1个频道中
Get PRO
五月 '24
+80
在0个频道中
Get PRO
四月 '24
+199
在2个频道中
Get PRO
三月 '24
+390
在1个频道中
Get PRO
二月 '24
+75
在0个频道中
Get PRO
一月 '24
+76
在2个频道中
Get PRO
十二月 '23
+147
在2个频道中
Get PRO
十一月 '23
+49
在0个频道中
Get PRO
十月 '23
+15
在0个频道中
Get PRO
九月 '23
+396
在0个频道中
Get PRO
八月 '23
+693
在0个频道中
Get PRO
七月 '23
+571
在0个频道中
Get PRO
六月 '23
+998
在0个频道中
Get PRO
五月 '23
+596
在0个频道中
Get PRO
四月 '23
+267
在0个频道中
Get PRO
三月 '23
+318
在0个频道中
Get PRO
二月 '23
+471
在0个频道中
Get PRO
一月 '23
+229
在0个频道中
Get PRO
十二月 '22
+435
在0个频道中
Get PRO
十一月 '22
+467
在0个频道中
Get PRO
十月 '22
+983
在0个频道中
Get PRO
九月 '22
+438
在0个频道中
Get PRO
八月 '22
+323
在0个频道中
Get PRO
七月 '22
+155
在0个频道中
Get PRO
六月 '22
+117
在0个频道中
Get PRO
五月 '22
+30
在0个频道中
Get PRO
四月 '22
+34
在0个频道中
Get PRO
三月 '22
+82
在0个频道中
Get PRO
二月 '22
+54
在0个频道中
Get PRO
一月 '22
+191
在0个频道中
Get PRO
十二月 '21
+120
在0个频道中
Get PRO
十一月 '21
+277
在0个频道中
Get PRO
十月 '21
+118
在0个频道中
Get PRO
九月 '21
+101
在0个频道中
Get PRO
八月 '21
+121
在0个频道中
Get PRO
七月 '21
+124
在0个频道中
Get PRO
六月 '21
+372
在0个频道中
Get PRO
五月 '21
+693
在0个频道中
Get PRO
四月 '21
+355
在0个频道中
Get PRO
三月 '21
+171
在0个频道中
Get PRO
二月 '21
+112
在0个频道中
Get PRO
一月 '21
+9 671
在0个频道中
日期
订阅者增长
提及
频道
13 七月0
12 七月0
11 七月0
10 七月0
09 七月0
08 七月0
07 七月+1
06 七月0
05 七月0
04 七月0
03 七月0
02 七月0
01 七月+1
频道帖子
📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow  ✅ Share  ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩

2
📊 Poll கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் அரசின் முடிவு... Poll: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26946
981
3
📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow  ✅ Share  ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩
1 264
4
📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow  ✅ Share  ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩
488
5
டைட்டன்: காலத்தின் வரலாறு! படிக்க: https://www.sindhai.com/others/titan-not-the-history-of-a-watch-but-the-history-of-time-1320997
2 233
6
அப்போதுதான் ஒரு உண்மை தெளிவாகிறது. நம்பிக்கை சாதித்துக் காட்டி சம்பாதிக்கப்படுகிறது. விலை குறையலாம். தரம் குறையக்கூடாது என்ற டாட்டாவின் முடிவு மதிப்பை உயர்த்தியது. இந்தக் கதை தோல்வியையும் மறைக்கவில்லை. "Try Again. Fail Again. Fail Better." தோல்வி ஒரு முடிவு அல்ல. அடுத்த முயற்சிக்கான அனுபவம். தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் எழும் நிறுவனங்கள்தான் காலத்தை வெல்லும். இறுதியில் இந்தப் பயணம் ஒரு வாட்சைப் பற்றி பேசவில்லை. காலத்தை வெல்லும் நிறுவனங்கள் எப்படி உருவாகின்றன என்பதைத்தான் பேசுகிறது. நேரத்தைவிட நமது சிந்தனைகள் இரண்டு அடி முன்னே இருக்க வேண்டும் என்று கூறும் A Titan Story, நாமும் ஒரு டாடா என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. அதனால்தான் இந்தத் தொடர் முடிந்த பிறகும், மனதில் நிற்பது Titan என்ற பிராண்ட் அல்ல... அதை உருவாக்கிய சிந்தனை. தொலைநோக்கு. நம்பிக்கை. தலைமைத்துவம். புதுமை. தரம். நீடித்து நிற்கும் ஒவ்வொரு நிறுவனமும், இறுதியில் இந்த ஐந்து மதிப்புகளின் மீதே கட்டப்படுகிறது.
2 504
7
🔴 ஒரு வாட்சின் கதை அல்ல... காலத்தை வென்ற ஒரு சிந்தனையின் கதை! பதிவு: ஜி.எஸ். பாலமுருகன் – https://www.facebook.com/share/p/1CkX7FpZpJ/ ஒரு நிறுவனத்தை உருவாக்குவது எது? பணமா? தொழில்நுட்பமா? பெரிய அலுவலகங்களா? இல்லை... மற்றவர்கள் பார்க்காத எதிர்காலத்தை சிலர் மட்டும் முன்கூட்டியே நம்பும் தைரியமா? Made in India: A Titan Story பார்த்த பிறகு மனதில் நீண்ட நேரம் நின்ற கேள்வி இதுதான். இது ஒரு வாட்சின் கதை அல்ல. ஒரு சிந்தனை எப்படி ஒரு நிறுவனமாக வளர்கிறது, ஒரு நிறுவனம் எப்படி ஒரு பிராண்டாக மாறுகிறது என்பதற்கான பயணம். 1970களின் இந்தியாவில் வாட்ச் சந்தையில் உள்நாட்டு பிராண்டாக HMT-தான் ஆதிக்கம் செலுத்தியது. அப்படிப்பட்ட காலத்தில், "இன்னொரு வாட்சை உருவாக்கலாம்" என்று அவர்கள் நினைக்கவில்லை. "உலகம் திரும்பிப் பார்க்கும் ஒரு இந்தியப் பிராண்டை உருவாக்க வேண்டும்" என்று நினைத்தார்கள். அந்த ஒரு சிந்தனையே இந்தக் கதையின் முதல் வெற்றி. அந்தப் பாதை எளிதாக இல்லை. Quartz தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தபோது பலருக்கு அது புரியவில்லை. புதிய சிந்தனையை முதலில் ஏற்றுக்கொள்வதே சவால். ஆனால் அதை மற்றவர்களையும் நம்ப வைப்பதுதான் அதைவிட பெரிய சவால். அங்கிருந்துதான் தொழில்நுட்பப் பயணம், மனிதர்களின் பயணமாக மாறுகிறது. வரலாறு எப்போதும் இப்படித்தான் இருக்கும். டைப்ரைட்டரில் இருந்து கம்ப்யூட்டர், கம்ப்யூட்டரில் இருந்து ஸ்மார்ட்போன், இன்று ஏ.ஐ. ஒவ்வொரு புதிய சிந்தனையும் முதலில் சந்தேகத்தையே சந்திக்கும். அதை நம்புகிறவர்கள்தான் பின்னாளில் வரலாறு எழுதுகிறார்கள். அதனால்தான் இந்தப் பயணம் ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. உத்வேகம் மட்டும் போதாது; அதைச் செயல்படுத்தும் தைரியம்தான் வெற்றியை உருவாக்குகிறது. "No Discussion. Only Demonstration." இந்த ஒரு வரி, ஒரு வசனம் அல்ல; ஒரு நிறுவனத்தின் பண்பாடு. பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கும், செய்து காட்டுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இது சொல்லிவிடுகிறது. அதேபோல், "உங்கள் எண்ணங்கள் வாட்ச் மாதிரியே ரொம்ப சின்னதாக இருக்கிறது" என்ற வரியும் ஒரு நிறுவனத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்கிறது. பல நேரங்களில் நம்மை உலகம் தடுக்கவில்லை; நாமே நம்முடைய சிந்தனைக்கு எல்லை போட்டு விடுகிறோம். இன்று "பைத்தியக்காரத்தனம்" என்று தோன்றும் துணிச்சல்தான், நாளை "தொலைநோக்கு" என்று பாராட்டப்படுகிறது. இங்கிருந்துதான் இந்தக் கதையின் மையம் தொடங்குகிறது. எந்த நிறுவனத்தையும் கட்டிடங்கள் நடத்துவதில்லை; மனிதர்கள்தான் நடத்துகிறார்கள். மனிதர்களை வழிநடத்துவது பதவியல்ல, தலைமைத்துவம். யாராவது ஆலோசனை கேட்டு வந்தால் Tata உடனே பதில் சொல்லவில்லை. ஒரு கதையைச் சொன்னார். ஒரு கேள்வியைக் கேட்டார். முடிவை அவர்களே எடுக்க வைத்தார். ஏனென்றால் ஒரு தலைவர் எல்லா முடிவுகளையும் எடுப்பதில்லை; முடிவெடுக்கக்கூடிய மனிதர்களை உருவாக்குகிறார். ஆனால் இந்தக் கதை ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. நம்பிக்கை கொடுத்தால் மட்டும் போதாது; சரியான மனிதர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். எந்த நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்தும் அதன் மனிதர்கள்தான். அதே நேரத்தில், அவர்கள் தங்களுக்குள் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. சந்தை எப்படி மாறுகிறது, போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால் மாற்றத்தை முதலில் புரிந்துகொள்பவர்கள்தான், இறுதியில் சந்தையை வழிநடத்துகிறார்கள். நல்ல யோசனைகள் எப்போதும் ஒரு அறையில் பிறப்பதில்லை. டீ குடிக்கும் நேரத்தில், சிரித்துப் பேசும் தருணங்களில், ஒரு சிறிய இனிப்பைப் பகிர்ந்துகொள்ளும் நிமிடங்களிலும் பிறக்கலாம். மனிதர்கள் நெருக்கமாகும் இடத்தில்தான் நம்பிக்கை உருவாகிறது. நம்பிக்கை உருவான இடத்தில்தான் புதுமை பிறக்கிறது. சில நேரங்களில் ஒரு லட்டு கூட மேஜிக் செய்துவிடும். இந்தப் பயணம் குடும்பத்தையும் மறக்கவில்லை. ஒரு தலைவருக்கும் குழப்பம் வரும். மன அழுத்தம் வரும். அந்த நேரத்தில் வீட்டில் நடக்கும் ஒரு சாதாரண உரையாடல், அலுவலகத்தில் கிடைக்காத தெளிவைக் கொடுத்துவிடும். ஒரு பெரிய நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால், அமைதியாக நிற்கும் குடும்பமும் இருப்பதை இந்தக் கதை அழகாக நினைவூட்டுகிறது. அந்த நம்பிக்கையோடும், அந்தக் குழுவோடும் இந்தியாவில் வெற்றி கிடைத்தது. ஆனால் ஒரு கேள்வி இன்னும் மீதமிருந்தது. உலகமும் இதை ஏற்றுக்கொள்ளுமா? ஆரம்பத்தில் இந்தியப் பொறியாளர்களின் திறமையை உலகம் பெரிதாக மதிக்கவில்லை. கூட்டாண்மைக்கும் தயங்கியது. ஆனால் தரமும் தொழில்நுட்பமும் பேச ஆரம்பித்த பிறகு, அதே உலகம் திரும்பி வந்து கைகோர்க்க முனைந்தது.
1 567
8
✨ நாம் அறிந்த செய்திகளின் அறியாத கதை பதிவு: ஜி.எஸ். பாலமுருகன் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பல மாதங்கள் படிக்கப்படாமல் அலமாரியில் கிடப்பது பலருக்கும் நடக்கும். அப்படித்தான் மூத்த பத்திரிகையாளர் ராஜா வாசுதேவன் எழுதிய “மீண்டும் தலைப்புச் செய்திகள்” நூலும் என்னிடம் ஆறு மாதங்களுக்கும் மேலாக இருந்தது. ஒரு நாள் இனியும் தள்ளிப் போடக் கூடாது என்று எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 514 பக்கங்கள் கொண்ட இந்த நூல், வெறும் ஒரு பத்திரிகையாளரின் நினைவுக் குறிப்பாக இல்லாமல், கடந்த மூன்று தசாப்தங்களில் தமிழக அரசியல் மற்றும் ஊடக உலகில் பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்த ஆவணமாக இருப்பது புரிந்தது. பள்ளி, கல்லூரி நாட்களில் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த பல நிகழ்வுகளை மீண்டும் சந்தித்த உணர்வையும் அது கொடுத்தது. 38 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலின் முதல் பலம் அதன் கட்டமைப்பு. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு செய்தியுடன் தொடங்குவதில்லை; அந்தச் செய்தியுடன் தொடர்புபடுத்தும் ஒரு வரலாற்றுப் பின்னணி தகவலிலிருந்து தொடங்குகிறது. பின்னர் சம்பவம், செய்தியறை அனுபவம், அதன் தாக்கம் என நகர்கிறது. இதனால் இது வெறும் செய்தித் தொகுப்பாக இல்லாமல், செய்தியையும் அதன் பின்னணியையும் இணைத்து சொல்லும் நூலாக மாறுகிறது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம், திமுக–பாஜக கூட்டணி, அதிமுக–காங்கிரஸ் கூட்டணி, பிரேமானந்தா, கல்கி சாமியார் விவகாரம், கருணாநிதி கைது, சுனாமி பேரழிவு, பிரபாகரன் பேட்டி, நித்தியானந்தா சர்ச்சை என ஒரு தலைமுறை பார்த்த முக்கிய செய்திகளின் பின்னணி இதில் பதிவாகியுள்ளது. நூலின் குறிப்பிடத்தக்க அம்சம், நாம் செய்திகளாக பார்த்த நிகழ்வுகளின் பின்னணியை வெளிச்சமிடுவதுதான். தகவல் சேகரிப்பு, ஆபத்தான பயணங்கள், ஆசிரியர் முடிவுகள், அரசியல் அழுத்தங்கள் போன்றவற்றை தனது அனுபவங்கள் வழியாக பதிவு செய்கிறார். பிரபாகரன் தொடர்பான அத்தியாயங்கள் நூலின் மிகவும் சுவாரஸ்யமான பகுதிகளில் ஒன்று. இலங்கைக்குச் சென்று அவருடைய பேட்டியை ஒளிபரப்புவதற்கான முயற்சிகள், அதற்கான சவால்கள், அக்கால அரசியல் சூழல் போன்றவை விரிவாக விவரிக்கப்படுகின்றன. நூலை வாசிக்கும் போது பழைய செய்திகளோடு சேர்ந்து அந்தக் கால நினைவுகளும் மீண்டு வருகின்றன. அந்த வகையில் ஜெயலலிதா–சசிகலா நடத்திய ஆடம்பர திருமணம் மற்றும் கருணாநிதி கைது தொடர்பான அத்தியாயங்கள் இந்த நூலின் சிறந்த பகுதிகளில் சிலவாக எனக்குத் தோன்றின. பணியில் சமயோசிதம், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவை உணர்த்துகின்றன. நூலில் என்னை கவர்ந்த மற்றொரு அம்சம், ஆசிரியர் தனது பணியிட அனுபவங்களை அலங்கரிக்க முயலவில்லை என்பதுதான். அலுவலக அரசியல், கருத்து வேறுபாடுகள், செய்தி முடிவுகள், வெற்றிகள், தோல்விகள் என பல விஷயங்களை வெளிப்படையாக பதிவு செய்கிறார். குறிப்பாக ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு குறித்த பகுதிகள் கவனிக்கத்தக்கவை. ஒரு செய்தித் தலைப்பு வெறும் சொற்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கலை என்பதையும் உணர்த்துகிறது. செய்தியைத் தேர்வு செய்வதும், அதற்கு பொருத்தமான தலைப்பை வழங்குவதும் செய்தியியலின் முக்கியமான படைப்பாற்றல் என்பதை இந்த நூல் நினைவூட்டுகிறது. அதற்கு நல்ல உதாரணம் அதிமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர்பான அத்தியாயம். அதைப் படித்த பிறகு அதற்கு வைக்கப்பட்ட “கூட்டணிக்கு தீவைப்பு” என்ற தலைப்பு எவ்வளவு பொருத்தமானது என்பதை உணர முடிகிறது. நூலை வாசிக்கும் போது ஆசிரியரின் செய்தியியல் திறன் மட்டுமல்ல, ஒரு வலுவான குழுவை உருவாக்கி வழிநடத்திய திறனும் வெளிப்படுகிறது. எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றி ஒரே ஒருவரின் உழைப்பால் உருவாகாது; திறமையான குழு, தெளிவான வழிகாட்டுதல் மற்றும் கூட்டுப் பணியால்தான் சாத்தியமாகும் என்பதை ஆசிரியரின் அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்த நூலை ஊடகத் துறையினருக்கான நூல் என்று மட்டும் வகைப்படுத்த முடியாது. வரலாறு, அரசியல், ஊடகம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள வாசகர்களுக்கும் இது பயனுள்ள வாசிப்பாக அமைகிறது. “மீண்டும் தலைப்புச் செய்திகள்” நூலை வாசித்து முடித்த பிறகு கிடைப்பது ஒரு புத்தக வாசிப்பு அனுபவம் மட்டுமல்ல. செய்திகளை உருவாக்கிய மனிதர்களின் உழைப்பையும், ஒரு காலத்தின் அரசியல் மற்றும் ஊடக வரலாற்றையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும் இந்த நூல், சமகாலத் தமிழ் செய்தியியல் அனுபவங்களை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு முக்கிய ஆவணம். https://www.facebook.com/share/p/1EaEyp1gkM/
1 763
9
没有文字...
1
10
முழு கட்டுரையை வாசிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26100
முழு கட்டுரையை வாசிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26100
2 479
11
📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow ✅ Share ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩
2 466
12
📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.
525
13
📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.
670
14
📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.
675
15
கட்டுரை படிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/25736
கட்டுரை படிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/25736
1 631
16
📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.
748
17
🔴 இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்! கருத்து பதிவு: ஜி.எஸ். பாலமுருகன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளுடன், முதல்வர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் அ.தி.மு.க. வென்ற நான்கு தொகுதிகளிலும் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். திருச்சி கிழக்கு தொகுதியின் அரசியல் சூழல் வேறுபட்டதாக இருந்தாலும், இந்த இடைத்தேர்தல் முழுமையாக மக்கள் தீர்ப்பின் மதிப்பைப் பற்றிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. ஆளும் கட்சியான த.வெ.க.வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இது மிக முக்கியமான இடைத்தேர்தல். குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு. தொகுதிக்கு நல்லது செய்வார்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளாமல், வெறும் 20 நாட்களிலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து, அதிகாரம், பதவிக்காக ஆளும் கட்சியில் இணைந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது. வாக்காளர்கள் ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல; ஒரு கட்சி, கொள்கை மற்றும் சின்னத்திற்கும் சேர்த்துதான் வாக்களிக்கிறார்கள். மக்களின் விருப்பத்திற்கும், தேர்தல் தீர்ப்புக்கும் மாறாக நடந்துகொள்ளும் போக்குக்கு இந்த இடைத்தேர்தலில் பதில் அளிக்கப்பட வேண்டும். ராஜிநாமா செய்தவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அக்கட்சியில் இருந்தே பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதுதான் தார்மீக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் சரியான அணுகுமுறையாக இருக்கும். எதிர்க்கட்சிகள், குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசியல் வேறுபாடுகளை தாண்டி ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். இது வெறும் அரசியல் அல்ல; தேர்தல் ஒழுக்கம் பற்றிய சோதனை. நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தி.மு.க. ஆதரவு வழங்க வேண்டும். ஏற்கனவே, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட, பொது வேட்பாளர் யோசனையை முன்வைத்துள்ளார். இதனால், அ.தி.மு.க. நிறுத்தும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் எந்தக் கட்சிக்கும் தயக்கம் இருக்கக் கூடாது. ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் வி.சி.க., வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளும் கூட, எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரத்தை விமர்சித்துள்ளன. எனவே, பொது வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் அந்தக் கட்சிகளும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நாகரீகம். ஏற்கனவே, தி.மு.க. - அ.தி.மு.க. இணைந்து செயல்பட முயன்றதாக பேசப்பட்ட நிலையில், ஒருவேளை அ.தி.மு.க. நிறுத்தும் பொது வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தால், அந்த அரசியல் அணுகுமுறையை வாக்காளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் இந்த இடைத்தேர்தல் வெளிப்படுத்தும். பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தாலும் விமர்சனங்கள் எழும். “ஆளும் கட்சியை தடுக்க இரு திராவிடக் கட்சிகளும் கைகோர்க்கின்றன” என்று பிரச்சாரம் செய்யப்படும். ஆனால் அதற்கு, “மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பின் மதிப்பை காக்கவே இணைந்து குரல் கொடுக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகள் பதிலளிக்க வேண்டும். அந்த விளக்கம் பொதுமக்களிடையே எடுபடும். ஏனெனில் பொதுமக்கள், அதிகார அரசியலை விட நியாய அரசியலையே அதிகம் மதிக்கிறார்கள். இன்று ஒன்றாக நிற்கவில்லை என்றால், நாளை இதே நிலை மற்ற கட்சிகளுக்கும் ஏற்படலாம். ஆனால், இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற பழைய அரசியல் வாதத்தை முன்வைத்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களம் காணாமல் பின்வாங்கினால், அது தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் எதிர்கால பாதை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும். அந்த நம்பிக்கை உடையத் தொடங்கினால், எதிர்க்கட்சிகளின் இடமே குறைந்து போகும். இல்லையெனில் நாளை எதிர்க்கட்சிகளே தேவையற்றதாகிவிடும். இடைத்தேர்தலில் ராஜிநாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களே மீண்டும் போட்டியிட்டாலும் சரி, அல்லது த.வெ.க. சார்பில் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் சரி, அந்த வேட்பாளர்கள் 'டெபாசிட்' இழக்கும் அளவுக்கு மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுதான் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலாக அமையும். அப்படியான தீர்ப்புதான் இனி இதுபோன்ற அரசியலை யாரும் எளிதாக முயற்சிக்க முடியாத சூழலை உருவாக்கும்.
3 736
18
மேலும், ஒரு வாக்காளர் எந்த தொகுதியில் வாக்கு வைத்திருக்கிறாரோ அங்கு மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார். அப்படியிருக்க, போட்டியிடும் வேட்பாளர்களும் அந்த தொகுதியை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். “இறக்குமதி வேட்பாளர்” அரசியலுக்கும் முடிவு கட்ட வேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவுகள் வெறும் எண்கணித அரசியலாக மாறிவிட்டால், தேர்தல் முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான தேர்தலாக மட்டும் பார்க்கப்படாது. த.வெ.க.வின் வளர்ச்சி, அ.தி.மு.க.வின் அமைப்பு வலிமை, மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு என பெரிய கேள்விக்கான சோதனையாகவும் அவை மாறக்கூடும். தேர்தல் நடைமுறைகள் மாறுவது ஒருபுறம் இருக்கட்டும். ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கும் அரசியல் நடைமுறைகளுக்கு மக்கள் சரியான பதிலை அளிக்க வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது. வாக்காளர்களின் நம்பிக்கையை மீறும் அரசியல் நகர்வுகளுக்கு மக்களே ஜனநாயக ரீதியாக பதிலளிக்கும் போது மட்டுமே, இதுபோன்ற 'கூத்துகள்' எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்படும். எனவே, தற்போதைய நிகழ்வுகளை தனிப்பட்ட கட்சி பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், இந்திய தேர்தல் மற்றும் ஜனநாயக அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் சம்பவமாக அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதிக்கப்படாத ஜனநாயகம், இறுதியில் மக்கள் நம்பிக்கையையே இழக்கும்.
2 540
19
🔴 நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த அரசியலை நினைத்துவிட்டால்... கட்டுரையாளர்: ஜி.எஸ். பாலமுருகன். “மக்கள் என்ன வெறும் ஓட்டு போடும் இயந்திரம் என்று அரசியல் கட்சிகள் எண்ணத் தொடங்கிவிட்டனவா?” தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் புதிதல்ல. ஆனால் மக்கள் ஓட்டு போட்ட மை கூட இன்னும் அழியாத நிலையில், மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்திருப்பது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடத் தயாராக இருக்கும் இந்த ராஜினாமா நாடகம், தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் மறுசீரமைப்பின் அறிகுறியாகவும், ஜனநாயக நெறிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பும் சம்பவமாகவும் மாறியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இந்திய தேர்தல் அமைப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் தனிநபர்களைவிட கட்சி, சின்னம், கூட்டணி மற்றும் தலைமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்களிக்கின்றனர். அப்படியிருக்க, ஒரு சின்னத்தில் வெற்றி பெற்று வெகு சில நாட்களிலேயே மற்றொரு சின்னத்தில் மீண்டும் தேர்தல் களத்தை சந்திக்கத் தயாராக இருப்பது, மக்கள் என்ன வெறும் ஓட்டு போடும் இயந்திரம் என்று அரசியல் கட்சிகள் எண்ணத் தொடங்கிவிட்டனவா என்ற தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா நிகழ்வின் பின்னணியில் அதிகார சமநிலை மற்றும் கூட்டணி கணிதம் தொடர்பான காரணிகள் உள்ளன. தற்போது த.வெ.க. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவை நம்பியே ஆட்சி தொடர்கிறது. இதனால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை எண்ணிக்கை ரீதியாக சமநிலைப்படுத்தும் முயற்சிதான் இது. வடமாநிலங்களில் மட்டுமே காணப்பட்ட இதுபோன்ற போக்குகள், அரசியல்மயமான தமிழகத்திலும் தென்படத் தொடங்கியுள்ளது காலத்தின் கோலம். • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால் ராஜினாமா செய்து மீண்டும் வேறு சின்னத்தில் போட்டியிடும் நடைமுறை அப்போது உருவாகவில்லை. இதனால், தற்போதைய நிகழ்வு புதிய மற்றும் ஆபத்தான போக்கை உருவாக்கியுள்ளது. இது வெறும் கட்சி தாவல் அல்ல; எதிர்கால திசையை சோதிக்கும் நகர்வாகவும் இது மாறியுள்ளது. இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது தேர்தல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளாகும். ஒரு எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற பிறகு அவர் அந்தக் கட்சியின் பிரதிநிதியாக செயல்பட வேண்டுமா? அல்லது எந்த நேரத்திலும் கட்சி மாறும் சுதந்திரம் இருக்க வேண்டுமா? என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. தேர்தல் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு தற்போதைய சூழலில் வெளிப்படையாக தெரிகிறது. ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் அரசியலில் வேரூன்றத் தொடங்கினால், ஜனநாயகத்தின் அடிப்படை அர்த்தமே கேள்விக்குறியாகிவிடும். அப்படியான சூழல் உருவாகும் போது, தேர்தல் நடைமுறைகள், மக்கள் தீர்ப்பு மற்றும் பிரதிநிதித்துவ அரசியல் ஆகியவற்றின் அவசியம் என்ன என்ற கேள்வியும் எழத் தொடங்குகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற உடனடியாக ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணையும் எம்.எல்.ஏ.க்களுக்கு கடுமையான தகுதி நீக்க விதிகள் கொண்டு வர வேண்டும். 10 அல்லது 15 ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை, அரசியல் சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல், இத்தகைய சூழல்களில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக, இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்கும் நடைமுறையையும் பரிசீலிக்க வேண்டும். அல்லது நோட்டாவையே மக்கள் அதிருப்தியின் குறியீடாக அங்கீகரிக்க வேண்டும். தொகுதி காலியாகும் சூழலில் தேர்தல் ஆணையம் நிர்வாக பிரதிநிதியாக ஐ.ஏ.எஸ். அளவிலான அதிகாரியை நியமிக்கும் நடைமுறையையும் பரிசீலிக்கலாம். இத்தகைய மாற்றங்கள் கொண்டு வந்தால் மட்டுமே ராஜினாமா அரசியலுக்கு கட்டுப்பாடு ஏற்படும். மேலும், ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடைமுறையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
2 146
20
📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.
789