cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

The Seithikathir®

WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Show more
Advertising posts
15 142
Subscribers
+324 hours
-137 days
-12930 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

*குறள் எண் : 1216 *பால் : காமத்துப்பால் *அதிகாரம் : கனவுநிலை உரைத்தல் *குறள் : நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். *உரை : நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாமல் இருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர். *English : Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me. தி ஆ 2055 விடை (வைகாசி-2) தமிழ் வாழ்க
Show all...
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 4பேர் உயிரிழப்பு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில், ஒருவர் காயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
Show all...
😱 4
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையிலான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு விமான நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பச்சை வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தல்
Show all...
🔴 வாரணாசியில் கும்பகோணம் தமிழர்... தென்காசி ஐஏஎஸ் அதிகாரி... விவரம்: https://youtu.be/hrPO1VzOsPo பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கலில் சுவாரசியமான தகவல்... ***
Show all...
பிரதமர் மோடிக்கு அருகில் இருந்த தமிழர் யார்? | PM Modi Files Nomination From Varanasi | Proposers |

பிரதமர் மோடிக்கு அருகில் இருந்த தமிழர் யார்? | PM Modi Files Nomination From Varanasi | Proposers |#pmmodi | #varanasi | #pmmodinews | #loksabhaelection2024 ...

👎 13👍 11 1
சென்னை:ஈசிஆரில் அதிவேகமாக வந்த கார், குறுக்கே வந்த மாடு மீது மோதி விபத்து மாடு மீது மோதிய பின் மரத்தில் கார் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு படுகாயமடைந்த 2 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை
Show all...
😱 8👍 3
வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை. வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் பொதுவாக பறவைகளின் உடலில் காணப்படும். அப்பறவைகளை கொசுக்கள் கடிக்கும்போது அவற்றின் உடலில் இருந்து கொசுக்களின் உடலுக்கு வைரஸ் பரவுகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ‘கியூலக்ஸ்’ வகை கொசுக்கள் மனிதரைக் கடிக்கும்போது, வெஸ்ட் நைல் வைரஸ் மனிதா்களுக்குப் பரவுகிறது. ஏற்கெனவே கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதே வைரஸ் தற்போது கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அண்மையில் கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து, வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. கேரளத்தில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தரப்பில் மக்களுக்கு கீழ்காணும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://chat.whatsapp.com/LqOwRlX31M285tbICra1oj * வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடியது. * இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் காணப்படுவது இல்லை. * காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகளாகும். * ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் ஏற்படலாம். * மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். * எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம். அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, கழுத்து விரைப்பு, மயக்கம், பலவீனம், பக்கவாதம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் கட்டாயம் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Show all...
👍 8
வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார். வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நேற்றே வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோடி மனுத்தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். கங்கையில் சிறப்பு பூஜையை முடித்த பிறகு பிரதமர் மோடி கப்பலில் பயணம் செய்து கால பைரவர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் வரவேற்றார். கால பைரவர் கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் காலை 10.45 மணிக்கு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் பிரசாரம் வியூகங்கள் குறித்து விவாதித்தார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார். அவர் ரோடு ஷோ நடத்தியபடி ஊர்வலமாக சென்றார். அவருடன் பா.ஜனதா முக்கிய தலைவர்களும் உடன் சென்றனர். இதில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். வழிநெடுகிலும் பிரதமர் மோடியை உற்சாகமாக மக்கள் வரவேற்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவை பிரதமர் மோடி நடத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று காலை 11.40 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வீடியோ: https://youtu.be/dQf8MJq-3nc வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் குறிப்பிட்ட அளவு நபர்களே செல்ல வேண்டும் என்பதால் ரோடு ஷோ, மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு சிறிது தூரத்துக்கு முன்பாக முடிக்கப்பட்டது. வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். வாரணாசி தொகுதி தற்போது பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி பாராளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜ.க-காங்கிரஸ் இடையே பெரிய போட்டி களமாக இருந்துவருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.க. 7 தடவையும், காங்கிரஸ் 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://chat.whatsapp.com/LqOwRlX31M285tbICra1oj
Show all...
👎 22👍 18😁 1
ஆப்ரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அங்கிருந்து வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது! தடுப்பூசி செலுத்திய 10 நாட்களுக்கு பிறகே அனுமதி. https://ihpoe.mohfw.gov.in/vaccination.php என்ற இணையதளத்தில் மஞ்சள் காய்ச்சல் விவரங்கள், தடுப்பூசி மையங்கள் குறித்து அறியலாம். -தமிழ்நாடு அரசு!
Show all...
👏 2
வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை. சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம், விதிகளின்படி குற்றம் வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் -போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம்.
Show all...
👍 5😱 3
ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது உலகின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளமான INDEED.... உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் பணிநீக்க நடவடிக்கை என விளக்கம்...
Show all...
🤔 12👎 3👍 2