cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

The Seithikathir®

WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. WE THANK YOU FOR YOUR TRUST IN US.

إظهار المزيد
مشاركات الإعلانات
15 111
المشتركون
-224 ساعات
-167 أيام
-7730 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

துருக்கியில் வீதியில் உலாவும் 40 லட்சம் தெரு நாய்கள்... நாய்களை அப்புறப்படுத்த நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா... தெரு நாய்கள் குறுக்கே வருவதால் ஏற்படும் விபத்துக்கள், தெரு நாய் கடிக்கு ஆளாகும் மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வரும் வாரத்தில் துருக்கி நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்ய உள்ளது. துருக்கியில் சுமார் 40 லட்சம் தெருநாய்கள் வீதிகளில் உலா வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெரு நாய்களை தத்தெடுக்கும் முறையை ஊக்குவிக்கவே தாங்கள் மசோதா கொண்டு வர இருப்பதாக ஆளும் கட்சி கூறுகிறது. இன்னொரு புறம் , அங்கு தெரு நாய்களை கருணை கொலை செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெறும் 2.7 சதவீதம் பேர் மட்டுமே தெருநாய்களை கருணை கொலை செய்ய ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
إظهار الكل...
மதியம் 3 மணிக்கு இன்ட்ரவல்.. காத்து வாங்கிய எஸ்பிஐ வங்கி.. போட்டோ எடுத்தவருக்கு நேர்ந்த கதி. பொதுவாகாவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பதாகவும் வங்கி வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் சாமானிய மக்களிடம் பொதுக்கருத்து நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி அல்லாத மொழி மாநிலங்களின் வங்கி காசோலை மற்றும் பிற தகவல்கள் அம்மாநில மொழிகளில் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து சர்ச்சையாவதுண்டு. அந்த வகையில் இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துகலையாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர் என்றும் உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்த நபரின் பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த ரிப்ளையை டேக் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள எஸ்பிஐ கிளை எங்கு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட தாமதம் செய்ததால் எஸ்பிஐ வங்கி சர்ச்சையில் சிக்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
إظهار الكل...
பீகாரில் சோகம்: வெப்ப அலையில் சிக்கி 19 பேர் பலி. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், பீகாரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் அலுவலர் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மதிய நேரத்தில் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையால் டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக அல்லோலப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வைரல் ஆகியுள்ளது. WATCH: https://youtube.com/shorts/zIxnHDa0txw?feature=share • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
إظهار الكل...
😱 1
😱😭 தண்ணீர் பஞ்சத்தின் கோர தாண்டவம்... WATCH: https://youtube.com/shorts/zIxnHDa0txw?feature=share ஒரு குடம் தண்ணீருக்காக அல்லோலப்படும் மக்கள்... - ஷாக் வீடியோ ***
إظهار الكل...
😱😭 டெல்லியில் தண்ணீர் பஞ்சத்தின் கோர தாண்டவம்! | Delhi Water Crisis | Viral Video | AAP | Shorts |

😱😭 டெல்லியில் தண்ணீர் பஞ்சத்தின் கோர தாண்டவம்! | Delhi Water Crisis | Viral Video | AAP | Shorts |#delhi | #water | #crisis | #aap | #viralvideo | #viral |...

👍 4
Photo unavailableShow in Telegram
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார் 2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் சஸ்பெண்ட் நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அறிக்கை சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை என்கவுன்ட்டர் செய்த வெள்ளத்துரை
إظهار الكل...
👍 21😁 3
பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை பிரிட்டனிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி தனது பெட்டகத்துக்கு மாற்றியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தங்கத்தில் பாதியளவுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிலாந்து வங்கியிலும் சர்வதேச பங்கீடு வங்கியிலும் வைத்திருந்தது. பாக்கி தங்கத்தை தன் வசம் வைத்திருந்தது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி, 100 டன் தங்கத்தையும் தன் வசம் மாற்றியிருக்கிறது. இதன் மூலம், தங்கத்தை பாதுகாக்க இங்கிலாந்து வங்கிக்கு ரிசர்வ் வங்கி செலுத்த வேண்டிய பாதுகாப்புக் கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியான ரிசர்வ் வங்கியின் ஆண்டு புள்ளிவிவரப்படி, ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாக 822.10 டன்கள் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 794.63 டன்களாக இருந்தது. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 கடந்த 1991ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 18ம் தேதிக்கு இடையில், பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட நெருக்கடியின்போது, அதனை சமநிலைப்படுத்த, மத்திய ரிசர்வ் வங்கி 46.91 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலும் ஜப்பான் வங்கியிலும் அடகு வைத்து, 400 மில்லியன் டாலர் பணத்தை திரட்டியது. இதற்கிடையே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் தங்கத்தை வாங்கியிருந்தது. அதுபோல, 2009 ஆம் ஆண்டில், மத்திய அரசு தனது சொத்துக்களை பெருக்கும் நடவடிக்கையாக 6.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 200 டன் தங்கத்தை வாங்கியது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி தனது கொள்முதல் நடவடிக்கை மூலம் தங்கப் பங்குகளில் கவனம் செலுத்தி நிலையான வளர்ச்சியை தொடர்ந்து பராமரித்து வருகிறது. இந்தியாவின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.75 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இது 8.7 சதவீதமாக அதிகரித்தது. மும்பையின் மின்ட் ரோடு மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டடங்களில் இந்த கையிருப்பு தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள், இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 17 சதவீதத்தை பெட்டகங்களில் வைத்துள்ளன. அதாவது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 36,699 டன்கள் தங்கம் வங்கிகளின் கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
إظهار الكل...
👍 7 2
சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள்: உஷாராக இருக்க எச்சரிக்கை. சென்னை: சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்பி, பலர் ஏமாந்து வருகின்றனர். பல முன்னணி நிறுவனங்கள், 'ஆன்லைன்' வாயிலாக தங்களது நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்களை, 'டிஜிட்டல்' விளம்பரம் செய்து வருகின்றன. இது போன்று விளம்பரம் செய்ய, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில், வேலை, கடன் வசதி, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் என, பல வகைகளில் மோசடி கும்பல்கள், போலி டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கி, விளம்பரங்கள் செய்ய துவங்கி விட்டன. விபரம் தெரியாத மக்களும், அவற்றை உண்மை என நம்பி, போலி விளம்பரங்களின், 'லிங்க்' பயன்படுத்தி, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர். குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள், மொபைல் போன் உதிரிபாகங்கள், பிரபல பிராண்ட் காலணிகள் என, பல பொருட்கள் 50 முதல் 90 சதவீதம் வரை எங்களிடம் கிடைக்கும் எனக்கூறி, போலி விளம்பர கும்பல் ஏமாற்றி வருகிறது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: பிரபல வாட்ச் நிறுவனத்தின் பெயரில் பேஸ்புக்கில் விளம்பரம் வந்தது. அதில், தள்ளுபடி விலை என்று கூறப்பட்டிருந்தது. குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி பணம் செலுத்தினோம். ஐந்து நாட்கள் கழித்து, அதே நிறுவன பக்கத்தில் பார்த்த போது, அது போலி என்று தெரிய வந்தது. மோசடி கும்பல் பயன்படுத்திய மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. இனி சமூக வலைதளங்களில் வரும் விளம்பரத்தை நம்பி பொருட்கள் வாங்கும் போது, எச்சரிக்கையுடன் உண்மை தன்மையை பார்த்து வாங்க வேண்டும். டிஜிட்டல் விளம்பரங்களுக்கான கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி கண்காணித்தால் மட்டுமே, இம்மாதிரியான மோசடியை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
إظهار الكل...
2
Photo unavailableShow in Telegram
கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்! தமிழ்நாடு கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கு ஜூன் 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.) உள்ளன. இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்பட 3 பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. இந்த நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையம் மூலம் ஜூன் 3 ஆம் முதல் ஜூன் 21 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
إظهار الكل...
👍 3
கோவை To அமெரிக்கா. இனி கோவையில் இருந்து அமெரிக்க செல்லலாம். கோவையில் இருந்து அமெரிக்க, கனடாவிற்க்கு ஜூன் 2 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம். டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனக்டிங் ஃப்ளைட் மூலம் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டோராண்டாவிற்கு செல்ல முடியும் டெல்லியில் இருந்து கோவை வந்து சேர விமான வசதியும் உள்ளது.
إظهار الكل...
👍 2