cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

The Seithikathir®

WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Mostrar más
Publicaciones publicitarias
15 117
Suscriptores
-924 horas
-267 días
-9530 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ 60. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ ரூ.60-ஐ எட்டியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு கா்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் சுமாா் 7,000 முதல் 8,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக 5000 டன் காய்கறிகள் மட்டுமே வரத்து உள்ளது. இதனால், காய்கறி விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை உயா்ந்தது. இருப்பினும், தக்காளி விலை மட்டும் உயரவில்லை. இந்த நிலையில், வழக்கமாக தினசரி 1200 டன்னுக்கு தக்காளி வரத்து இருந்த நிலையில், திங்கள்கிழமை 700 டன் மட்டுமே தக்காளி வந்தது. வரத்து குறைவால் தக்காளி விலையும் திடீரென உயா்ந்துள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை வரை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி திங்கள்கிழமை கிலோ ஒன்று ரூ.60-ஐ தொட்டுள்ளது. இதனால், அடித்தட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். தக்காளி விலை உயர்வு 10 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Mostrar todo...
👎 1
ஐபிஎல் தொடரை வென்ற கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவா்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமறிங்கிய கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 10.3வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதே சென்னை மைதானத்தில் தான் கேகேஆர் அணி முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கைப்பற்றியது. தற்போது அதே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி சாதனைப் படைத்திருக்கிறது. கொண்டாடிய KKR: https://youtube.com/shorts/AMstNeRHxgc?feature=share மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை கேகஆர் கைப்பற்றி உள்ளது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கொல்கத்தா அணியின் வெற்றி பெங்காலில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சாதனை படைத்த வீரர்கள், உரிமையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துகள். வருகிற ஆண்டுகளில் இதேபோல் பல வெற்றிகளைக் குவிக்கவும் வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Mostrar todo...
👍 4
புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34% சதவீதம் உயர்வு. முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக ரூ.1,000 கோடி. ரூ.1,000 கோடி செலவில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம். ரூ.150 கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில்; ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு-தமிழ்நாடு அரசு.
Mostrar todo...
🔥 6👍 1
மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்து. புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த விவகாரத்தில், பி.பி.ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த ஏப்ரல் 23ம் தேதி அறுவை சிகிச்சை செய்த இவர் மறுநாளே உயிரிழந்தார். தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவமனை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
Mostrar todo...
👎 7👍 1
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு மதிய உணவினை உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை சிறப்பு பள்ளி பயனாளிகளுக்கு உணவை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவு
Mostrar todo...
👍 4🔥 1
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனை. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50 க்கு விற்பனை.
Mostrar todo...
👍 5
நேரு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை. டெல்லியில் உள்ள நினைவிடத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை.
Mostrar todo...
👍 13👎 1
00:33
Video unavailableShow in Telegram
👎 1
*இன்றைய புத்தக மொழி* 27/05/24 📚📚📚🌹📚📚📚 மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம் தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள். - ஜெயகாந்தன் - 📚📚📚🌹📚📚📚
Mostrar todo...
👍 3👎 1
*குறள் எண் : 1228 *பால் : காமத்துப்பால் *அதிகாரம் : பொழுதுகண்டு இரங்கல் *குறள் : அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. *உரை : இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது, நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்குத் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது. *English : The shepherd’s flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me). தி ஆ 2055 விடை (வைகாசி-14) தமிழ் வாழ்க
Mostrar todo...
👍 3