Tamil Anmegam+Kolangal
Open in Telegram
2 703
Subscribers
-124 hours
+17 days
+2030 days
Posts Archive
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(07.09.2026)
༺🌷༻
🌸🌼🌿உங்கள் ஆனந்த வாழ்க்கை..
༺🌷༻
"வெற்றியும், ஆனந்தமும் உங்கள் எண்ணத்தைப் பொறுத்திருக்கிறது" என்று கூறுகிறான் நெப்போலியன். எவ்வளவு ஆழ்ந்த வாசகம் இது!
“நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன்!" என்று நீங்கள் எண்ணுங்கள். கப்பலே கடலில் மூழ்கினாலும் கவலைப்படக் கூடாது.
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது அந்த நாட்டு மன்னன் நீரோ அமைதியாகப் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்! என்ன நடந்தாலும் கவலைப்படாத நெஞ்சம் வேண்டும். துன்பத்தை ஏற்றுக்கொண்டு இன்பம் காண வேண்டும். கவலைகளை மறந்தவர்கள், கவலைகளைத் துறந்தவர்கள் கவலைகளைப் பொருட்படுத் தாதவர்கள் ஆகியோர்தாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
༺🌷༻
ஒருவன் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பான். ஆனால் அவனுடைய வாழ்க்கை துன்பக் கடலில் மூழ்கியிருக்கும். மற்றொரு வன் பரம ஏழையாக இருப்பான். ஆனால் அவன் இன்பக் கடலில் நீந்திக் கொண்டிருப்பான். எல்லாம் அவரவர் மனத்தைப் பொறுத்தது. இன்பமடைந்து அமைதியுற்று வாழ ஒரே வழி மகிழ்ச்சியோடு நினைப்பதும், மகிழ்ச்சியோடு செயல் புரிவதுமே ஆகும். "இன்றைக்காவது நான் மகிழ்ச்சியோடு இருப்பேன் என்று எழுந்தவுடன் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்கிறார் பிரான்ஸ் நாட்டின் தத்துவஞானி ஒருவர்.
༺🌷༻
எனவே எதற்கும் கவலைப்படாமல், மனப்பக்குவத்தோடு வாழுங்கள்! கவலையில்லாத மனிதன் இந்த மகரயாழ் உலகில் எவருமில்லை. ஆனால் கவலைகளை மனத்தில் கொள்ளாமல் அவற்றை ஊதித் தள்ளிய மனிதராக நீங்கள் இருக்கலாம், அல்லவா? உங்களுக்கு வரும் கவலைகளை ஊதித் தள்ளுங்கள். நீங்கள் எதற்கும்
கவலைப்படாதீர்கள்.
✒️ ~ புலவர் S.செளதாமினி
M.A.,M.Ed.,REHP.
தலைமையாசிரியர்(ஓய்வு),
தாராபுரம்.
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(05.09.2026)
༺🌷༻
🌸🌼🌿"மென்மையே மேன்மை"
༺🌷༻
ஒரு சிறுவன் தன் வீட்டுத் தோட்டத்தைச் சுத்தம் செய்வதாகச் சொல்லி அங்கிருந்த முட்புதர்களை வெட்டிக் கொண்டிருந்தான். அப்படி வெட்டியபோது அவனது தந்தை ஆர்வமாக வளர்த்த செர்ரி செடியையும் வெட்டிச் சாய்த்து விட்டான். வீட்டிலிருந்தவர்களுக்குப் பயம். காரணம் அவனது தந்தை கடும் கோபக்காரர். மேலும் அவர் நேசித்த செடியை வேறு வெட்டி விட்டானே! என்று கவலையோடு இருந்தார்கள்.
༺🌷༻
அன்று மாலை சிறுவனின் தந்தை தோட்டத்தின் பக்கம் வந்தார். செர்ரி செடி வெட்டப்பட்டுள்ளதைக் கண்டு கோபமாக இதை யார் வெட்டியது?" என்று கேட்டார். சிறுவன் வேகமாக வந்து அப்பா, நான் தான் தெரியாமல் வெட்டி விட்டேன் என்று கூறினான். #மகரயாழ் தந்தை கோபம் தணிந்து சரி, இனி இப்படித் தவறு செய்யாதே" என்று சொல்லிச் சென்றார்.
༺🌷༻
அவர் கோபப்படாததன் காரணத்தை வீட்டிலிருந்தவர்கள் கேட்டார்கள். அப்போது அந்தச் சிறுவனின் தந்தை தனது தவறை, உண்மையை வெளிப்படையாகத் தைரியமாகச் சொல்கின்றவனை நாம் தண்டித்தால், நாளை அவன் உண்மையை மறைக்கக் கற்றுக்கொள்வான்" என்று கூறினார். அந்தச் சிறுவன் பின்னாளில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன்தான்.
༺🌷༻
உண்மையைத் தைரியமாகச் சொல்லும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு முதலில் கற்றுத் தர வேண்டும். இதற்கு உண்மை பேசுபவர்களாக நாம் விளங்க வேண்டும். உண்மை பேசுவது என்பது நம்பிக்கையோடு செயல் புரிய உதவும்.
"மென்மையாக நடந்துக் கொள்வதைவிடப் பலம் தரும் வேறில்லை."
✒️ ~ டாக்டர். மெ.ஞானசேகர்,
📚 "எண்ணங்கள் வெற்றிகள்"
📅(வெளியீடு ~ 2019)
©️ Coral Publications,
Chennai~ 09,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
ிவிட்டேன். இப்போது எனது பசி அடங்கவேண்டும் என்றால் உன்னை நான் கொன்றே ஆகவேண்டும்” என்று கொக்கரித்தானாம்.
༺🌷༻
அதற்கு சிஷ்யன், "அரக்கனே எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன. அதே சமயம் உனக்கு வேறு நல்ல பசியாக உள்ளது என்றாய், எனக்குச் சில மணி நேரம் அவகாசம் கொடு, நான் வறியவன் கொடுத்த பொருளையும் திருடன் கொடுத்த பொன் மூட்டையையும் காசிநாதர் உண்டியலில் போட்டுவிட்டு உடனே வந்துவிடுகிறேன். பிறகு என்னைச் சாப்பிடு" என்றானாம்.
"இதனை நான் எப்படி நம்புவது?” என்று அரக்கன் கேட்க,
"இருவரும் மந்திரம் படித்தவர்களே, நான் நெருப்பின் மீது சத்தியம் செய்துவிட்டுச் செல்கிறேன்” என்று சிஷ்யன் கூற,
༺🌷༻
அரக்கனும் சம்மதிக்கவே சிஷ்யனும் விடை பெற்றுச் சென்றான். காசிநாதருக்குக் காணிக்கைகளைச் செலுத்திவிட்டுத் திரும்பி வந்து அந்த இடத்தைப் பார்த்த சிஷ்யனுக்கு ஒரே அதிர்ச்சி. அரக்கனைக் காணவில்லை. அங்கும் இங்கும் தேடிப்பார்த்தான், சிறிது நேரம் கழித்து ஒரு தேவர் அங்கு வந்து, "நீங்கள் இன்னும் பலநாட்கள் தேடினாலும் அந்த அரக்கன் வரமாட்டான். ஏனெனில் அது நான்தான், நான் அரக்கன் சாபத்திலி ருந்து விமோசனம் பெற்றுவிட்டேன். தாங்கள் எனக்கு அளித்த சத்தியத்திற்கு இணங்க, நாணயத்துடனும் நம்பிக்கையுடனும் திரும்பி வந்ததால் விமோசனம் கிடைத்துவிட்டது. இன்று முதல் நான் தேவனாக மாறிவிட்டேன். எனக்கு விமோசனம் அளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி" என்று கூறி மறைந்தாராம்.
சிஷ்யன் வந்த வழியிலேயே குருவைச் சந்திக்கப் புறப்பட்டான். சிறிது நாட்கள் சென்றதும், ஒரு அரசன் பானையின் மீது அமர்ந்து ஊர்வலம் சென்று கொண்டிருந்தான். யோகியைக்கண்டதும் கீழே குதித்து "என்னை ஆசீர்வதியுங்கள்" என்று கூறினான்.
༺🌷༻
"யாரப்பா நீ?" என சிஷ்யன் கேட்க, "நான்தான் உங்களிடம் கொள்ளை அடித்த திருடன். உங்களிடம் பொன்மூட்டையைக் காசிநாதர் உண்டியலில் போடச் சொல்லிக்கொடுத்துவிட்டு ஒரு மரத்தடியில் படுத்து உறங்கினேன், அரசர் இறந்ததால் யானை என் கழுத்தில் மாலையைப்போட்டு என்னை இந்த நாட்டிற்கு அரசனாக்கிவிட்டது" என்று கூறினாராம், சிஷ்யனும் அவரை ஆசீர்வதித்துவிட்டு குருவைச் சந்திக்க நடந்தாராம்.
போகும் வழியில் ஒரு பெரிய நகைக் கடை இருந்தது. அதிலிருந்து முதலாளி வெளியே வந்து
"ஐயா என்னை ஆசிர்வதியுங்கள்" என்று கூற..
༺🌷༻
"நீ யாரப்பா?" என்று சிஷ்யன்கேட்க நான்தான், உங்களிடம் ஒரு ரூபாய் கொடுத்து காசிநாதர் உண்டியலில் போடச் சொன்ன வறியவன். உங்களிடம் ஒரு ரூபாய் கொடுத்த நேரம் அரசர் வைத்த அதிர்ஷ்டசாலிப் போட்டியில் ஒரு லட்சம் மகரயாழ் பொன் விழுந்தது. நான் நகைக் கடை அதிபராகிவிட்டேன்" என்றான். சிஷ்யனுக்கு ஒரே வியப்பு. என்ன அற்புதம் இவையெல்லாம் கனவில் கூடச் சாத்தியமாகாதது போல் இருக்கிறதே என்று எண்ணியவாறே குருவைச் சந்தித்து, நடந்தவை அனைத்தையும் குருவிடம் கூறிவிட்டு,
"ஒரு சின்ன சந்தேகம் குருவே!" என்றான். “என்ன?" என்றார் குரு.
"ஒரு ஏழை வறியவனுக்குக் காசிநாதர் அருளால் செல்வம் கிடைத்தது, அது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால், ஒரு திருடனை எப்படிப் பெரிய நாட்டிற்கு ராஜாவாகக் கடவுள் மாற்றினார். மேலும் மனித மாமிசத்தைத் தின்னும் ஒரு அரக்கனை எப்படி ஒரு தேவனாகக் கடவுள் மாற்றினார்” எனக் கேட்க.
༺🌷༻
"உலகில் உள்ள எல்லா மனிதர்களும் ஒரு சந்தர்ப்பத்திலாவது உண்மையானவனாக, நல்லவனாக, நம்பிக்கையுள்ளவனாக, நாணயமுள்ளவனாக நடந்து கொள்கிறானா? என்பதை அறிந்துகொள்ளக் கடவுள் மனிதனைச் சோதிக்கிறார். அந்தச் சோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கே நல்ல அருளை வழங்கிச் சிறப்பிக்கிறார்" என்றார்.
"ஆனால் இன்றைய சூழ்நிலையில் எல்லா இருந்தால், இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள் மனிதர்களும் எவ்வளவு அநியாயம் செய்துகொண்டு என்று நினைத்துப் பார்" என்று கூற அதெல்லாம் சரி குருவே ஒரு வறியவன் பெரிய செல்வந்தனாகிவிட்டான், ஒரு திருடன் ஒரு நாட்டுக்கு அரசனாகிவிட்டான், ஒரு அரக்கன் அனைவரும் போற்றும் தேவனாக மாறிவிட்டான், இதில் எனக்கென்ன லாபம்? என்னைப் பயன்படுத்தியதில் கடவுளுக்கு என்ன சிறப்பு?" என்று கேட்டானாம்.
༺🌷༻
உடனே குரு...
"யாருக்குமே பயனில்லாமல், ஒன்றுக்குமே உபயோகமில்லாத உன்னைப் பயன்படுத்தி, எவ்வளவு பெரிய பெரிய அற்புதத்தை நடத்தியிருக்கிறார் என்றால், சதா உழைப்பு நம்பிக்கை, நாணயம், நேர்மை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களை எப்படியெல்லாம் சிறப்படையச் செய்வார். எனவே கடவுளின் சிறப்பு என்ன என்பதை நீயே கொஞ்சம் நினைத்துப்பார்," என்றாராம் குரு
வியந்துவிட்டான் சிஷ்யன்.
இந்தக் கதையைக் கேட்ட நண்பர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியூருக்குப் புறப்பட்டார்.
(அவர் இப்பொழுது எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார்.)
✒️ ~ நாமக்கல் ஏ.எஸ்.சந்துரு
📚 "உனக்கு நிகர் நீயே"
📅(வெளியீடு ~ 2006)
©️ தாமரை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை ~ 98,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(03.09.2026)
༺🌷༻
🌸🌼🌿கடவுளின் சிறப்பு என்ன?
༺🌷༻
🌿நீண்ட பதிவு:
ஒருமுறை என் நண்பர் என்னிடம் வந்தார். "நான் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கிறேன். என்னை யாரும் மதிக்க மாட்டேன் என்கிறார்கள். நான் பூமியில் இருந்து என்ன பயன்? பேசாமல் இந்த ஊரைவிட்டே போய்விடலாம் என்று இருக்கிறேன்” என்று புலம்பினார்.
நான் நண்பரை நோக்கி “நீங்கள் அதை உடனே செய்யுங்கள், போகும்போது கூட யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்புங்கள்" என்றேன்.
நான் சொன்னதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர், "என்ன நண்பரே! என்னைச் சமாதானப்படுத்தி, எங்கும் போகவேண்டாம் என்பீர்கள் என நினைத்தேன். ஆனால் நீங்களோ! எடுத்த எடுப்பிலே உடனே கிளம்பச் சொல்கிறீர்கள்” என்றார்!
அதற்கு நான், “இப்பொழுதுதான் உங்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்ச்சி ஏற்பட இயற்கை வழிவிட்டுள்ளது. அதை நீங்களும் சரியாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்” என்றேன், பிறகு ஒரு கதை சொல்லத் தொடங்கினேன்.
༺🌷༻
ஒரு குருகுலத்தில் ஒரு சிஷ்யன் தினமும் உண்பதும், உறங்குவதுமாகவே இருந்தான். தினமும் காலை எழுந்து உணவு.. பிறகு தூக்கம்.. பின்னர் எழுந்து சாப்பாடு.. பின்னர் விளையாட்டு, கொஞ்ச நேரம் ஓய்வு, பின்னர் அரட்டை, மீண்டும் தூக்கம் எனத் தொடர்ந்து எட்டு வருடங்களாக இப்படியே இருந்து வந்தான். குருவும் இவனைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. காரணம், இவன் பெரிய ஞானியாகத் திகழ்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் அவர் நீண்ட நாட்கள் காத்திருந்தார்.
༺🌷༻
ஒருநாள் திடீரென்று சிஷ்யன் குருவிடம் வந்து "குருவே, வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனக்குத் தினமும் சாப்பாடு, தூக்கம், விளையாட்டு, அரட்டை என்று வாழ்க்கையில் பல வருடங்கள் கழிந்துவிட்டது. நான் யாருக்கும். உபயோகம் இல்லாமல் இருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் ஒரு மாறுதல் தேவை, ஒருயோசனை சொல்லுங்கள். நான் இப்போது எங்கேயாவது போகவேண்டும்போல் இருக்கிறது" என்றானாம்.
குருவும் ''நானும் இதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். உனக்கு நான் இவ்வளவு நாட்கள் என்ன செய்ய வேண்டும் என்று காத்திருந்தேனோ. அதைச் செய்ய நேரம் வந்துவிட்டது" எனக்கூறி என்னருமை சிஷ்யனே! இதோ உனக்குத் தேவையான உணவு, கைச் செலவுக்குப் பணம் இதில் இருக்கிறது, பெற்றுக்கொள். இதை எடுத்துக்கொண்டு நீ காசிக்குச் சென்று காசிநாதரைத் தரிசித்தால் கண்டிப்பாக உன் வாழ்க்கையில் ஒரு மாறுதல் கிடைக்கும்", என்று வாழ்த்தி வழியனுப்பினார்.
சிஷ்யன் அதைப் பெற்றுக்கொண்டு சென்றான். இரண்டு நாட்கள் பயணத்தின் முடிவில் ஒரு வறியவன் "ஐயா, நீங்கள் எங்கே செல்கிறீர்கள்” என்று கேட்டான்.
"நான் காசிநகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்" என்று சிஷ்யன் சொல்ல..
༺🌷༻
"ஐயா நான் காசிக்குக் காசிநாதரை வணங்க இவ்வளவு நாட்கள் திட்டமிட்டு உழைத்துப் பொருள் சேர்த்தேன். ஆனால் இந்த ஊரில் பெரிய கொள்ளைக்காரனால் நான் சேர்த்த பொருள் அனைத்தும் பறிபோய் இன்று சோற்றிற்குக் கூட வழி இல்லாமல் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன், எனவே நான் உழைத்த கடைசி பணம் இந்த ஒரு ரூபாய் காசுதான். இதைக் கொண்டுபோய் காசிநாதர் உண்டியலில் சேர்த்துவிடுங்கள்" என்று கூறினார். அதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான் சிஷ்யன்.
பயண நாட்களில் மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன. திடீரென்று காட்டில் ஒரு பயங்கரக் கொள்ளைக்காரன் "யோகியே.. யார் நீ? எங்கே செல்கிறாய்?" என்று கேட்க.
காசிக்குச் செல்கிறேன் என்றான் சிஷ்யன். உடனே கொள்ளைக்காரன், "உன்னிடம் உள்ள அனைத்துப் பொருட்களையும் கொடுத்துவிடு, இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான். உடனே யோகி தன்னிடம் குரு கொடுத்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டான். கொள்ளைக்காரன் "இடுப்பில் என்ன வட்டமாய் முடிந்து வைத்துள்ளாய்? அது என்ன நவரத்தினமா? உடனே அதை எடு" என்று மிரட்டினான். அதற்கு யோகி "அதை மட்டும் கேட்காதே, அது உனக்கு வேண்டுமானால் என்னைக் கொன்றுவிட்டு எடுத்துச் செல்" என்றான்.
༺🌷༻
"ஏன் அதற்கு மட்டும் என்ன அவ்வளவு மதிப்பு?" என்றானாம் திருடன். அதற்கு யோகி "என்னிடம் காசி நாதர் உண்டியலில் சேர்க்கச் சொல்லி வறியவன் கொடுத்த பணம்தான் அது. நான் உயிருடன் உள்ளவரை கண்டிப்பாகக் காசிநாதர் உண்டியலில் அதைச் சேர்த்துவிட்டுத்தான் அடுத்தவேலை. எனவே, அது வேண்டுமானால் என்னைக் கொன்றுவிட்டு எடுத்துச் செல்" என்றான் சிஷ்யன், உடனே சிஷ்யனின் குணத்தைப் பாராட்டி, "ஞானியே! இதோ என்னுடைய பொன்மூட்டையையும் காசிக்குச் சென்று காசிநாதர் உண்டியலில் சேர்த்துவிடு" என்று தான் கொள்ளை அடித்த பொன்மூட்டை ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றானாம். அங்கிருந்து புறப்பட்ட சிஷ்யன் காசியை நெருங்கிக்கொண்டு இருக்கும்போது..
திடீரென்று ஒரு மனித மாமிசம் தின்னும் அரக்கன் அவ்வழியில் வந்து "யோகியே நில். நான் கற்ற மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்க ஒரு நல்ல சிஷ்யன் கிடைக்காததால் இன்று நான் மனித மாமிசம் தின்னும் அரக்கனாக மாற
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(02.09.2026)
༺🌷༻
🌸🌼🌿வெனிலா ஐஸ்க்ரீமும் பான்டியாக் காரும்...
༺🌷༻
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக விநோதமான ஒரு புகார் வந்திருந்தது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பான பான்டியாக் காரை வாங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.
அந்தக் காரை வாங்கியிருந்த வாடிக்கையாளர் குடும்பத்திற்கு தினமும் இரவு உணவிற்குப் பிறகு ஐஸ்க்ரீம் உண்ணும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஐஸ்க்ரீம் சாப்பிடுவார்கள்.
ஒருநாள் சாக்லெட் ஐஸ்க்ரீம், ஒருநாள் வெனிலா, ஒருநாள் பிஸ்தா இப்படி, இரவு உணவு முடிந்ததும் அன்று எந்த ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று ஓட்டெடுப்பு நடக்கும். எந்த வகை என்பது தீர்மானிக்கப்பட்டதும் குடும்பத் தலைவரான அந்த வாடிக்கையாளர் தனது காரை எடுத்துக்கொண்டு இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஐஸ்க்ரீம் கடைக்குப் போய் அந்த ஐஸ்க்ரீமை வாங்கி வருவார்.
༺🌷༻
அன்றைய ஐஸ்க்ரீம் பிஸ்தாவாகவோ, சாக்லெட்டாகவே இல்லை வேறு எதுவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் வெனிலா சுவை என்றால் போதும். ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தப்பட்டிருந்த பான்டியாக் கார் லேசில் கிளம்பாது. மக்கர் செய்யும். ஒருவேளை பான்டியாக் காருக்கு வெனிலா சுவை என்றால் அலர்ஜியோ என்று நகைச்சுவையாகக் கடிதத்தை முடித்திருந்தார் வாடிக்கையாளர்.
அந்த ஊர் கார் வியாபாரி அந்தப் பிரச்சினையைப் பற்றி அறிந்து கொண்டார். தனது ஆட்களை அனுப்பி சரி பார்த்தார். காரின் சில பாகங்களை மாற்றிப் பார்த்தார். பிரச்சினை தீரவில்லை. வாடிக்கையாளரின் புகார் உண்மைதான் என்று கம்பெனிக்குக் கடிதம் எழுதிவிட்டார்.
༺🌷༻
வாடிக்கையாளர் சொல்வது போல அந்தக் காருக்கு வெனிலா சுவை அலர்ஜி என்று கடிதத்தில் எழுதியிருந்தார்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பொறியாளர்களில் சிறந்த ஒருவரை வாடிக்கையாளருடன் அனுப்பி வைத்தது. அந்தப் பொறியாளர் வாடிக்கையாளருடன் இரவு ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்று வாடிக்கையாளர் சொல்வது உண்மைதான் என்று சொல்லிவிட்டார்.
༺🌷༻
ஆனால் அந்தப் பொறியாளர் அதோடு நிற்கவில்லை. அந்த விநோதமான சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று இன்னும் ஆழமாக ஆராய்ந்தார்.
அவர் வாடிக்கையாளரின் வீட்டு அமைப்பு, ஐஸ்க்ரீம் கடையின் அமைப்பு, வாடிக்கையாளர் காரை ஓட்டும் விதம், வீட்டிலிருந்து கடைக்குச் செல்ல ஆகும் நேரம், கடையில் ஐஸ்க்ரீம் வாங்கி அதைக் காருக்கு எடுத்து வரும் நேரம் எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்தார். கடைசியில் சிக்கலுக்குச் சரியான காரணத்தையும் தீர்வையும் கண்டுபிடித்தார் அந்த பொறியாளர்.
༺🌷༻
அந்த ஐஸ்க்ரீம் கடையில் வெனிலா சுவைதான் அதிகம் விற்பனை யாகும் வகை. அதனால் வெனிலா ஐஸ்க்ரீம் மொத்தமும் கடைவாசலுக்கு மிக அருகே வைக்கப்பட்டிருந்தது. சாக்லெட், பிஸ்தா, பாதாம் ஆகிய வகைகள் கடைக்குள்ளே இருந்தன.
எனவே என்றெல்லாம் வாடிக்கையாளர் வெனிலா ஐஸ்க்ரீம் வாங்குகிறாரோ அன்றெல்லாம் வெகு விரைவில் காருக்குத் திரும்பி விடுவார். உடனே காரைக் கிளப்ப முயற்சிப்பார். வாடிக்கையாளர் வெகு சீக்கிரம் வந்துவிட்டதால் காரின் என்ஜினின் சூடு குளிர்வதற்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை.
༺🌷༻
அப்போதுதான் அணைக்கப்பட்டிருந்த காரின் மகரயாழ் என்ஜின் நல்ல சூட்டில் இருந்தது. அந்த சூட்டில் கார் கிளம்பவில்லை. வெனிலா தவிர மற்ற சுவை வாங்கும் போது வாடிக்கையாளர் காருக்குத் திரும்ப இன்னும் மூன்று நிமிடங்கள்கூட ஆகும். அதற்குள் காரின் என்ஜின் நன்றாகக் குளிர்ந்து அடுத்த முறை கிளம்புவதற்குத் தயாராகிவிடும்.
பிரச்சினை என்ன என்பதைக் கண்டுபிடித்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சில நிமிடங்களில் அதனைச் சீர் செய்துவிட்டது.
🌻சின்ன சிக்கல் என்றாலும் ஆழமாகப் போனால்தான் விடை கிடைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். எந்த சிக்கலிலும் நாம் படிக்க ஒரு பாடம் இருக்கும் என்பதற்கும் இதுவே எடுத்துக்காட்டு.
✒️ ~ வரலொட்டி ரெங்கசாமி,
📚 "வெற்றியின் விதைகள்"
📅(வெளியீடு ~ 2006)
©️ கவிதா பப்ளிகேஷன்,
சென்னை~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(29.08.2026)
༺🌷༻
🌸🌼🌿இது போதுமே!
༺🌷༻
நீங்கள் மருத்துவராக இல்லாதிருக்கலாம் ஆனால், நோயாளியில்லை என்பதே போதும்.
உங்களிடம் செல்வம் குவிந்திருக்கவில்லை என்றாலும், உள்ளதில் திருப்தி அடைகிறீர்கள் அதுவே போதும்.
༺🌷༻
பெயரும் புகழும் சம்பாதிக்கவில்லைதான் ஆனால் என்ன, பழியும், பாவமும் இல்லாமலிருக்க முடிகிறதே.
உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியாதுதான் அதனால் என்ன நன்றாகப் பாடத் தெரிகிறதே அட, இரண்டுமே தெரியாது என்கிறீர்களா இரசிக்கத் தெரிந்திருப்பதே ஒரு வரம்.
༺🌷༻
வாழ்வில் நடக்கும் நல்லவை மகிழ்ச்சியைத் தருகின்றன; கடினமான சூழ்நிலைகள் நமக்கு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
நமக்குக் கிடைப்பதை நிறைவுடன் ஏற்றுக்கொள்ளும்போது மனம் அமைதி பெறுகிறது!
✒️ ~ சி.எஸ்.தேவநாத்
📚 "இந்த மனம் ஒரு நந்தவனம்"
©️ கவிதா பப்ளிகேஷன்,
சென்னை ~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(24.08.2026)
༺🌷༻
🌸🌼🌿வெற்றி உங்கள் மனதில்.
༺🌷༻
அது ஓர் விளையாட்டு மைதானம். மைதானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் தங்களுடைய இருக்கையின் விளிம்பில் அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருந்ததற்குக் காரணம் 100 மீட்டர் தூரத்தை 10 நொடிகளுக்குள் கடந்து விடுவேன் என்று வீரர் ஒருவர் பேட்டி கொடுத்திருந்தது தான். அதனால் மக்கள் அனைவரின் இதயத்துடிப்பும் அந்தப் 10 நொடிக்காக அடித்துக் கொண்டிருந்தது.
நடுவர் துப்பாக்கியை உயர்த்துகிறார். வீரர்கள் தயாராகிறார்கள். டாமாலென்று துப்பாக்கி வெடிக்க..., துப்பாக்கியிலிருந்து விடுபட்ட தோட்டாவாய் அனைத்து வீரர்களும் சீறிப்பாய்ந்து ஓடுகிறார்கள். 1..2..3..4..5..6..7..8.. 9.. .. 10. மைதானம் முழுதும் ஒரே ஆரவாரம். 10 நொடிகளுக்குள்ளாகவே (ஒரு வீரர் ரிப்பனைத் தொட்டிருக்கிறார். மக்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள்.
டி.வி. நிருபர் அந்த வீரரிடம் பேட்டி காண்கிறார். "உங்களால் எவ்வாறு 10 நொடிகளுக்குள் 100 மீட்டர் தூரத்தைக் கடக்க முடிந்தது?" அதற்கு அந்த வீரர் சொன்ன பதில் "என்னால் முடியும் என்று நினைத்தேன். சாதித்தேன். இங்கே இப்போது ஒடி ஜெயிப்பதற்கு முன்னேயே பயிற்சியில் 100 முறை ஓடி ஜெயித்தேன். மனத்திற்குள் 1000 முறை ஓடி ஜெயித்திருக்கிறேன்” என்றார். இது தான் மனதின் சக்தி. நீங்கள் நினைக்கும் உயரத்திற்கேற்பவே உயர்வான செயல்கள் நடக்கும்.
மனித உடல் என்பது பலவித பலவீனங்களைக் கொண்டது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப சோர்ந்து போகக் கூடியது. நேர நேரம் உணவில்லாவிட்டால் அவ்வளவுதான். ஆனால் மனிதனுக்குள் இருக்கும் மனம் என்பது அபரிதமான மகரயாழ் சக்திகளைக் கொண்டது. மனதின் சக்தியை நாம் அளவிடவே முடியாது. மனதினால் எத்தனையோ செயல்களை ஒரு நொடியில் நினைக்கிறோம். சூரியனில் குளிர்காய்ந்து சந்திரனில் ஓய்வெடுக்கிறோம். ஒரே ஒரு கணத்தில் உலகெங்கும் வலம் வருகிறோம். அதற்குக் கட்டுப்பாடுகளோ, எல்லைகளோ கிடையாது. ஒரு செயலை மனதினால் உடனே செய்ய முடிகிறது.
🌻சந்தோஷமான விஷயம்-1
உலகின் எண்ணற்ற சாதனையாளர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் மாபெரும் உண்மை. அவர்களின் சாதனைகள்
அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய மனதின் ஆற்றலே.
மனதின் சக்தியாலே தான் அவர்கள் அனைத்தையும் சாதித்திருக்கிறார்கள்.
🌻சந்தோஷமான விஷயம்-2
நம் அனைவருக்குமே மனம் இருக்கிறது.
🌻சோகமான விஷயம்:
நாம் அந்த மனதின் ஆற்றலை இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளாமலும், பயன்படுத்தாமலும் இருப்பது.
🌻உண்மை :
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவப் பெருந்தகையிலிருந்து எத்தனையோ அறிஞர்கள், ஞானிகள் மனதின் ஆற்றலைப் எண்ணற்ற கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். அது உண்மை தான். உங்கள் மனதில் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு நடக்கும், கிடைக்கும். அதற்கு மனதின் ஆற்றலை, சக்தியை ஒருமுகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். நினைப்பவை அனைத்தையும் உயர்வாக நினைக்க வேண்டும். எவ்வளவு உயர்வான எண்ணங்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வளவு உயர்வான வாழ்க்கை உங்களுக்கு அமையும். இது சத்தியம், நம்புங்கள்.
The Power of Thinking Big.
"வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு."
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும். மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
✒️ ~ பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார் M.A.(Tamil),M.A.(English),
📚 "வெற்றி பெற விரும்புகிறவர்களுக்கு 77 வழிமுறைகள்"
📅(வெளியீடு ~ 2017)
©️ சக்தி பப்ளிஷிங் ஹவுஸ்,
சென்னை~ 13,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(22.08.2026)
༺🌷༻
🌸🌼🌿விருந்தை விடவும் மகிழ்ச்சியளிப்பது.
༺🌷༻
பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அன்னையை காண அந்த இளந்தம்பதிகள் வந்திருந்தனர். அப்போதுதான் சில நாள் முன்பு அவர்களுக்குத் திருமணமாகியிருக்க வேண்டும்.
முகத்தில் கல்யாணக்களை அப்படியே இருந்தது.
'அன்னையே, போன வாரந்தான் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. ஒரு கோயில் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டோம்.
༺🌷༻
எங்கள் திருமண வரவேற்பை சிறப்பாக நடத்த எங்களுடைய பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், நாங்கள் அதை மறுத்து விட்டோம். அந்த ஆடம்பரத்தைத் தவிர்த்ததில் ஐம்பதினாயிரம் ரூபாய் மிச்சமாயிற்று. தங்களுடைய தொண்டு இல்லத்திற்காகத் தாங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று சொல்லிப் பணத்தை அன்னையிடம் தந்தனர்.
அந்தத் தம்பதிகளைப் றி அன்னையவர்கள் பின்பொரு சமயம் இப்படிக் குறிப்பிட்டார். "அவர்களுடைய செயல் புனிதமானது. அது தெய்விக அன்பின் வெளிப்பாடு" என்று.
༺🌷༻
ஆடம்பரமான கொண்டாட்டங்கள் அல்லது பொருட்கள் ஒரு சில மணி நேரமே சந்தோஷம் தரும், உண்மையான மகரயாழ் சந்தோஷம் பணத்தை செலவழிப்பதில் இல்லை, பிறர் கஷ்டத்தை போக்குவதில் இருக்கிறது.
கல்யாண விருந்து அன்று மட்டுமே மகிழ்ச்சியளிக்கும். மற்றவர்களுக்குப் பயன்படும் விதமாய் செய்கிற காரியம் வாழ்க்கையில் நெடுங்காலத்துக்கு நினைத்து மகிழக்கூடியதாய் இருக்கும்.
🌻"Plant flowers in other's gardens and your life becomes a bouquet!"💐
✒️ ~ மனோரஞ்சிதா,
ஆசிரியை,
சத்தியமங்கலம்,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(21.08.2026)
༺🌷༻
🌸🌼🌿மூச்சுத் திணற வைக்கும் அச்சம்.
༺🌷༻
அமெரிக்காவில் இது நடந்தது. விவசாயி ஒருவரின் மகன். பதினான்கு வயது. பண்ணையில் இருந்த பிக்-அப் வேனை ஓட்டும்போது, வண்டி ஒரு குட்டையில் கவிழ்ந்து விட்டது. பையனும் அந்த நீர் நிரம்பிய குட்டையில் விழுந்தான். தலை நீருக்குள் மூழ்கிவிடும் போல் இருந்தது. தந்தையின் கண் முன்னேதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. அவர் பாய்ந்தோடிச் சென்று வண்டியைத் தமது கைகளால் பலங்கொண்ட மட்டும் உயர்த்தினார். மகன் நீரில் இருந்து கரையேறினான்.
༺🌷༻
சாதாரண நேரத்தில் அந்த மகரயாழ் வண்டியைத் தமது கைகளால் அவர் உயர்த்தியிருக்க முடியாது. அப்படியானால் ஆபத்தான நேரத்தில் மட்டும் அது முடிந்ததே?
அதுபற்றி மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, 'நெருக்கடி நிலைகளில் நமக்குள் இருக்கும் அட்ரினல் (Ad-renal) சுரப்பி அதிக அளவில் சுரக்கும். நம் ஆற்றலை அதிகரிக்கும்' என்று பதில் வந்தது.
༺🌷༻
அச்சத்தைப் போலவே நம்பிக்கையும் நமக்குள் . இருக்கிற ஆற்றல்தான். அது பெருமளவில் வெளிப்பட்டு அச்சத்தைப் புறந்தள்ளுகிறது.
🌿மூச்சுத் திணற வைக்கும் அச்சத்தை ஒரே மூச்சில் வெளியேற்றக்கூடியது நம்பிக்கை.
✒️ ~ சி.எஸ்.தேவநாத்
📚 "இந்த மனம் ஒரு நந்தவனம்"
©️ கவிதா பப்ளிகேஷன்,
சென்னை ~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(20.08.2026)
༺🌷༻
🌸🌼🌿சிறிய கல்.
༺🌷༻
இரவும் பகலும் நாள் என்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இனிப்பு என்றொரு சுவையிருந்தால் கசப்பு என்றொரு சுவையும் இருக்கும். பிறப்பு என்றொரு உதயம் இருந்தால் இறப்பு என்றொரு அஸ்தமனமும் இருக்கும்.. இன்பம் என்றொரு ஒளியிருந்தால் துன்பம் என்றொரு நிழல் கூடவே இயைந்து வரும்.
༺🌷༻
இன்பமே வாழ்க்கை என்று இறுமாந்து விடக்கூடாது. துன்பங்கள் வரும்போது துவண்டு போய் விடக்கூடாது. இறைவனை வேண்டும்போது கூட
“துன்பமில்லாத வாழ்க்கை வேண்டும் என்று கேட்காதே! துன்பத்தைத் தாங்கும் துணிச்சலை எனக்குக் கொடு!” என்று கேள். வெயிலில் நடந்தால்தானே நிழல் சுகமாக இருக்கும்!
துன்பம் என்பது துடைத்தெறியும் வியர்வைத் துளியைப் போல. அதையே கவலை என்ற கருங்கல்லாக மாற்றிக்கொண்டு கழுத்தில் கட்டிக்கொண்டு வாழ்க்கை என்ற கடலில் நீந்த முயலக்கூடாது.
༺🌷༻
ஒரு சிறிய கல்லை, உன் கண் எதிரே நெருக்கமாக வைத்துப்பார். அது பெரிய பாறாங்கல்லைப் போல பூதாகாரமாகத் தோன்றி பூமியை மறைத்து விடும்.
அதே கல்லை சற்று எட்டிப் பிடித்து ஏறிட்டுப் பார், ‘அடடா எவ்வளவு சிறிய கல்!” என்று உன் மனம் உனக்கு உணர்த்தும்.
🌿கவலைகளைக்
கண்ணுக்கு அருகில் பிடித்துக்கொண்டு கண்ணை மறைக்கிறதே என்று கலங்காதீர்கள்.
✒️ ~ திரு. டேவிட் பிரதாப்சிங்,
(தலைமையாசிரியர்,
நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி,
உசிலம்பட்டி.)
📚 "இது உங்கள் யுகம்"
©️ மாஸ்டர் பதிப்பகம்,
மதுரை.
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(19.08.2026)
༺🌷༻
🌸🌼🌿வார்த்தைகளை விழுங்க வேண்டிய தருணங்கள்!
༺🌷༻
எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்துவிட முடியாது.
நம் பொருளாதாரக் கஷ்டங்களைச் சொன்னால் அவை குறித்து இரக்கப்படுகிறவர்கள், உதவ முன்வருபவர்கள் மட்டுமல்ல உள்ளூர மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் நாம் ஏன் புலம்ப வேண்டும்? விழுங்க வேண்டியதுதான்.
༺🌷༻
ஊரறியப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காகத் தங்களது வசதி வாய்ப்புகளை, வளங்களைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இதில் மகிழ்பவர்கள் சில சதவிகிதமே. பொறாமைப்பட்டுச் சாகிறவர்களும்; அப்படியா சேதி? உன்னை இனியும் வளர விடுவேனா பார் என்று கெடுதல் வேலையிலும் அவதூறு பிரசாரத்திலும் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு, இவர்கள் குடையும்போது வார்த்தைகளை விழுங்க வேண்டியதுதான்.
༺🌷༻
நாம் பிறரைப் பற்றி எத்துணையோ இரகசியங்களை அறிந்து வைத்திருக்கிறோம். அவை வெளிப்பட்டால் அவர்களுக்குச் சிறுசிறு பாதிப்பிலிருந்து தலைதூக்க முடியாத பாதிப்புகள் வரை ஏற்படலாம் என்பதையும் உணர்ந்திருக்கிறோம். "சும்மா சொல்லுங்க; இருக்கிறதைத் தானே சொல்லப் போறீங்க? கூட்டிக் குறைச்சுப் பேசுகிறவர் இல்லையே நீங்க" என்று தாஜா செய்கிற பாணியில் பேசி விஷயத்தைக் கறக்க நினைப்பவர்களிடமும் வார்த்தைகளை விழுங்க வேண்டியது தான் .
༺🌷༻
பிறரைப் பற்றிய புகார்ப் பட்டியலை வேறு வழியின்றி நாமே முன்வந்து வாசிக்க நேரும்போது, அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் வீரியத்தை மனத்தில் கொண்டு வார்த்தைகளைச் சற்று விழுங்கலாம். நம் நோக்கம் பழி வாங்குவது அல்ல. இனி அத்தவறு மறுபடி நிகழக்கூடாது என்பது. அதற்கு ஏற்றவாறு அடக்கி வாசிக்கலாம். அதுமட்டுமல்ல, கண்டிச்சு வையுங்க. தண்டிச்சிராதீங்க என்றும் நான்கு வார்த்தை சேர்த்துச் சொல்லலாம்.
✒️ ~ லேனா தமிழ்வாணன்,
📚 "ஒரு பக்கக் கட்டுரைகள்"
📅(வெளியீடு ~ 2009)
©️ மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(18.08.2026)
༺🌷༻
🌸🌼🌿மருந்தேயாயினும் விருந்தோடு உண்.
༺🌷༻
சாவை நீக்கும் மருந்தாகிய அமுதம் கிடைத்தால் தாமே உண்டு. சாவாமல் வாழவேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பர். கிடைத்த அமுதத்தில் சிறிதளவு மற்றவர்க்குக் கொடுத்தால் கிடைக்கக்கூடிய நீண்ட ஆயுள் குறைந்துவிடும் என்று நினைப்பார்கள். ஆனால் ஔவை அந்த அமுதத்தை விருந்தோடு பகிர்ந்து உண் என்கிறார்.
"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்பதில் பகிர்ந்து உண்ணும் பண்பை வலியுறுத்துகிறார். இந்தக் கவிதை அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து பிறந்தது எனலாம்.
༺🌷༻
ஒளவைப்பிராட்டி மீது பேரன்பு காட்டியவன் அதியமான். ஒரு மலைப்பிளவிலிருந்து அரியதோர் நெல்லிக்கனியை அவன் அரிதின் முயன்று பெற்றான். அக்கனி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கக்கூடியது. அதை உண்பவர்கள் நீண்டகாலம் வாழ்வார்கள். சாவை நீக்கக்கூடிய அக்கனியை அதியமான் தான் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தால் போர்தான் வளரும்; ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தால் தமிழ் வளரும் என்று கருதி, நெல்லிக்கனியைப் பற்றிச் சொல்லாமல் உண்ணச் செய்தான். உண்ட பின்னரே அது சாவை நீக்கும் தன்மையுடையது என்றான். சாவா மருந்தை விருந்தோடு உண்ணாமல் விருந்தையே உண்ணச் செய்த தியாகத்தை ஒளவை எண்ணி எண்ணி வியந்தார். "நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே" என்று வாழ்த்தினார்.
༺🌷༻
சிவபெருமான் உண்ட நஞ்சு அவரது கழுத்தில் நீல நிறமாய்த் தங்கிற்று. நீலமணிமிடற்று ஒருவன் எனப்பட்டான் சிவன். சாவை நீக்கும் நெல்லிக்கனியை உண்ணாததால் சாவை வரவேற்ற நீ சாவைத் தரும் நஞ்சை உண்டும் சாகாத சிவனைப்போல் நிலைபெற்று வாழவேண்டும் என்று வாழ்த்தினார். இந்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்ற கவிதை. அமுதத்தை விருந்தினரையும் உண்ணச் செய். நீயும் உண். அதியமானைப்போல் தான் உண்ணாமல் விருந்தை உண்ண வைக்காதே என்பார். "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்றார். சாவா மருந்தாக இருந்தாலும் விருந்தினர்க்குத் தந்து (பகிர்ந்து உண்) தானும் உண்ணவேண்டும் என்பது கருத்து.
முனைவர் இ. சேனாவரையன்
தமிழ்த்துறைத் தலைவர் வி.எல்.பி.ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி,
கோவைப் புதூர்,
கோயம்புத்தூர் - 641042
📚 "வாழ்வியல் அறநெறி"
©️ நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
சென்னை ~ 98
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(17.08.2026)
༺🌷༻
🌸🌼🌿"எல்லாம் அழகாகும்''
༺🌷༻
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமயகுரு, "நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.
༺🌷༻
அங்கிருந்த அவரது நண்பர்களும், மகரயாழ் உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமயகுரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்'' எனக் கூறினார்.
அந்தக் கூட்டத்தில் ஒருவன் இருந்தான். சமயகுரு சொன்னதைக் கேட்டதும் ஏளனமாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். ''வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" எனக் கூறி சிரித்தான்.
༺🌷༻
அதற்கு அந்த சமயகுரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார். இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான். பதற்றமே இல்லாத அந்த சமயகுரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்களால் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே,எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக் கேட்ட அந்த மனிதன் வெட்கித் தலை குனிந்தான்.
༺🌷༻
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால்,பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு என அழகாக நம் முன்னோர்கள், கூறி விட்டனர்.
ஒரு சிலர் நினைப்பதுண்டு நாம் நம் மனதில் நினைப்பது எப்படி பிறருக்கு தீமை செய்ய முடியும் என்று ஆனால் நம் எண்ணமானது காந்த ஆற்றலுடன் இணைந்து குறிப்பிட்ட நபரை தாக்க வல்லது என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவேதான் எப்போதும் நல்ல சிந்தனைகளையே நம் மனதில் இருத்திட வேண்டும்.
༺🌷༻
அப்படி நல்ல எண்ணங்களை மனதில் பதிவிட்டால் முதலில் நமது உடலும் உள்ளமும் செழிப்படையும் அதாவது உற்சாகமடையும். இதன் காரணமாக நமது செயல் சிறப்பானதாக அமையும். செயல் சிறப்பானதாக அமைந்திடும்போது வளம் பெருகும். நலம் விழையும் இதுவே உண்மையும் கூட. நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ .... அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே..
🌿"எண்ணங்கள் அழகானால் எல்லாம் அழகாகும்''
✒️ ~ Rtn.V.S.பாஸ்கரன்,
(@ ரோட்டரி பாஸ்கர்)
📚 "நம்பிக்கை விதைகள்"
📅(வெளியீடு ~ 2017)
©️ எழிலினி பதிப்பகம்,
சென்னை~ 08,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(15.08.2026)
༺🌷༻
🌸🌼🌿மனதை மகிழ்ச்சியில் நிரப்புங்கள்.
༺🌷༻
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். அகம் அழகாக இருந்தால், முகம் அந்த அழகை பிரதிபலிக்கும் என்பது இதன் பொருள். எப்போதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. முகத்தை எப்போதும் புன்முறுவலுடன் வைத்துக் கொள்ளப் பழகிவிட்டால், அதுவே காலப்போக்கில் அகத்தையும் அழகுபடுத்திவிடும்.
கவலைகளை எப்போதும் முகத்தில் சுமந்து கொண்டு அலைகின்றவர்களால் வாழ்க்கையின் இனிய கானத்தை ஒருபோதும் கேட்க முடியாது. பிரச்சினைகளே இல்லாதவர்கள் என்று யாராவது
இருக்க முடியுமா? ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சினைகளைத் தங்கள் முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டால் அப்படிப்பட்டவர்களுடன் மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் உரையாடுவதற்கே தயங்குவார்கள். முகத்தில் புன்னகை இருப்பதே ஒரு கவர்ச்சி.
༺🌷༻
புன்னகையுடன் காட்சியளிக்கின்றவர்களுக்குக் கவலையே இல்லையென்று அர்த்தமில்லை. தங்கள் கஷ்டங்களை இவர்கள் முகத்தில் விளம்பரப்படுத்திக் கொண்டு அலைவது இல்லை என்பதுதான் உண்மை புன்னகையுடன் காட்சி தருவதற்கு எவரும் பழகிக் கொள்ளலாம். சிரிப்பு வராமல் சிரித்த பாவத்தை முகத்தில் ஏற்படுத்திக் கொள்வது என்று இதற்கு அர்த்தமில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது வேறு.
பிரச்சினைகளின் உணர்ச்சி விளைவுகளை எப்போதும் முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டு இருப்பது என்பது வேறு.
༺🌷༻
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை என்பதால் எப்போது வேண்டுமானாலும் அதை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் பார்ப்பது ஒரு மனநிலை. இதை ஏற்படுத்திக் கொண்டு விட்டால் முகத்தில் புன்னகையின் சாயல் தானாகவே தோன்றிவிடும். இப்படி ஒரு மகரயாழ் மனோபாவம் உருவாகிவிட்டால், அந்த மகிழ்ச்சியின் விரிவாக்கம் அகத்தையும் நிரப்பி,அதையும் அழகுபடுத்தி விடும்.
༺🌷༻
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைவிட முகத்தின் அழகு அகத்திலும் நிறையும் என்பது தான் வாழ்க்கை அணுகுமுறையாக இருக்க வேண்டும். பார்க்கின்றவர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பழகிக் கொண்டு விட்டால் முகத்தோற்றம் புன்னகை அழகுடன் மிளிர ஆரம்பிக்கும். முகத்தில் வெளிப்படுகின்ற மகிழ்ச்சி பிறரை நம்மை நேசிக்க வைக்கிற வைக்கிறது.
༺🌷༻
மகிழ்ச்சித் தோற்றத்திற்கு மகத்தான சக்தி உண்டு. எவரையும் அது எளிதில் வசீகரித்து விடும். நம்முடைய தோற்றத்திலுள்ள மகிழ்ச்சி, பொலிவு, நம்மைப் பார்க்கின்றவரிடமும் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது.. மகிழ்ச்சி உணர்வு சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. சிந்தையினை வேகப்படுத்துகிறது. எண்ணங்களுக்கு வலிமையினைக் கொடுக்கிறது. மற்றவர்களை நம்மை விரும்பச் செய்கிறது.
வாழ்க்கைக்குச் சுருதி சேர்க்கின்ற ஒன்றுதான் மகிழ்ச்சி மனநிலையாகும். இது வாழ்க்கை பூராவும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
༺🌷༻
அப்போதுதான் வாழ்க்கைக் கச்சேரி இனிமை குன்றாமல் நடைபெறும். எதையும் ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டால், வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் ஒரு பாரமாக, இருக்காது. மகிழ்ச்சி உற்சாகத்திற்கு ஊற்றுக் கண்களாக இருப்பதால், சோர்வின்றி வேலை செய்கின்ற சக்தியினை மகிழ்ச்சியால் மட்டும் தான் கொடுக்க முடியும். மனதை மகிழ்ச்சியில் நிரம்பக் கற்றுக் கொடுக்க முடியும். மனதை மகிழ்ச்சியில் நிரம்பக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும் என்பதை உணர்வீர்கள்.
✒️ ~ குளமங்கல செல்வராசன் D.Lit,
📚 "மனப்பூவின் மகரந்தங்கள்"
©️ குளமங்கலம் பதிப்பகம்,
சென்னை ~ 15,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(13.08.2026)
༺🌷༻
🌸🌼🌿நம்பிக்கையால் எல்லாம் முடியும்.
༺🌷༻
ஒரு பால்காரி ஆற்றுக்கு அக்கரையில் வசித்து வந்த குரு ஒருவருக்குத் தினந்தோறும் பால் கொண்டு போய்க் கொடுப்பது வழக்கம்.
சரியாக
ஒருசமயம் படகுப் போக்குவரத்து நடைபெறவில்லை. ஆதலால், நாள்தோறும் சரியான நேரத்திற்குப் பால் கொண்டுபோய்க் கொடுப்பதில் தடை ஏற்பட்டது. ஒரு நாள் அந்த குரு, 'வேளைக்கு ஒழுங்காக ஏன் பால் கொண்டு வந்து தருவதில்லை?” என்று பால்காரியைக் கடுமையாகக் கோபித்துக்
கொண்டார்.
༺🌷༻
அதற்கு அந்த எளிய பால்காரி அவரிடம், 'சுவாமி, நான் என்ன செய்வேன்? தினமும் அதிகாலையில்தான் வீட்டை விட்டுக் கிளம்புகிறேன். ஆனால் நதிக் கரைக்கு வந்தபிறகு நீண்ட நேரம் ஓடக்காரனுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது' என்று பதில் சொன்னாள்.
அதைக் கேட்டதும் அந்த குரு, 'ஏ பெண்ணே! பகவானுடைய நாமத்தை உச்சரிப்பதால் மக்கள் பிறவியாகிய பெரிய கடலையே தாண்டிக் கடந்து விடுகிறார்கள்! உன்னால் இந்த சிறிய மகரயாழ் ஆற்றைக் கடக்க முடியவில்லையா?' என்று கேட்டார்.
༺🌷༻
கள்ளங்கபடமில்லாத அந்தப் பால்காரி அவர் சொன்னதை அப்படியே நம்பினாள். ஆற்றைக் கடப்பதற்குச் சுலபமான வழி தெரிந்துவிட்டது என்று பெரிதும் மகிழ்ந்தாள்.
அடுத்த நாள்
முதற்கொண்டு குருவுக்கு அதிகாலையிலேயே உரிய நேரத்திற்கு பால் கிடைத்து வந்தது. ஒரு நாள் அவர் பால்காரியிடம், 'நீ முன்பு போல இப்போதெல்லாம் தாமதமாக வருவதில்லையே! எப்படி உன்னால் உரிய காலத்தில் பால் கொண்டுவர முடிகிறது?’ என்று கேட்டார்.
༺🌷༻
'சுவாமி தேவரீர் சொன்னபடியே பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே ஆற்றைக் கடந்து வருகிறேன். இப்போதெல்லாம் நான் ஓடக்காரனுக்காகக் காத்திருப்பதில்லை' என்று பால்காரி பதில் சொன்னாள். குரு இதை எப்படி நம்புவார்? பால்காரியின் வார்த்தையில் நம்பிக்கையில்லாத அவர், 'நீ எப்படி ஆற்றைத் தாண்டி வருகிறாய் என்பதை எனக்கு காட்டுவாயா?' என்று கேட்டார்.
༺🌷༻
பால்காரி சூதுவாது தெரியாதவள். அவள் சம்மதித்து அவரை அழைத்துக் கொண்டு நதிக்கரைக்குப் போனாள். பகவானின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே ஆற்று நீரின்மேல் சர்வ சாதாரணமாக நடந்து போக ஆரம்பித்தாள். அப்படிச் சிறிது தூரம் சென்றதும் பின்னால் திரும்பிப் பார்த்தபோது குரு நடக்க முடியாமல் சிரமப்பட்டுக்கி கொண்டிருப்பதைக் கண்டாள்.
༺🌷༻
அவரது நிலையைச் கண்டதும் அவள், 'சுவாமி! இது என்ன? பகவானின் நாமத்தை வாயால் சொல்கிறீர்கள். ஆனால் அதே சமயம் துணி எங்கே நனைந்துவிடப் போகிறதோ என்று கைகளால் தூக்கிப் பிடித்துக் கொள்கிறீர்கள்!
தங்களுக்குப் பகவானிடத்தில் பரிபூரண நம்பிக்கை இல்லையே!' என்று கேட்டாள்.
🌿பகவானிடத்தில் வைக்கும் தீவிரமான நம்பிக்கை யும் பரிபூரண சரணாகதியுமே எல்லா அற்புதச் செயல்களுக்கும் காரணமாக இருக்கின்றன.
🤘~ ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள்.
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(12.08.2026)
༺🌷༻
🌸🌼🌿 உன்னிடம் துவங்கு.
༺🌷༻
ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவர் காட்டில் விலங்குகளை வேட்டையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய நாட்டினை விரிவுபடுத்துவதிலும் விலங்குகளை வேட்டையாடுவதிலும் தன் கவனத்தினை செலுத்தி வந்தார், அந்த மன்னன் தன் நண்பர்களுடனும் படை வீரர்களுடனும் விலங்குகளை வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். வேட்டையாடும் பொழுது தன் கால்களில் கல்லும், முள்ளும் குத்தியதால் ஏற்பட்ட காயத்தினால் பெரிதும் துன்பப்பட்டான். அப்பொழுது தன் படைவீரர்களிடம் இந்த கானகத்திலுள்ள விலங்குகளையெல்லாம் வேட்டையாடி அவற்றின் முழுவதும் பரப்புமாறு தோல்களைக் கானகம் உத்திரவிடுகிறார் அந்த மன்னன்.
༺🌷༻
அவருடைய படைவீரர்களும் அவ்வாறே கானகத்திற்குச் சென்று கண்ணில்படுகின்ற விலங்குகளை வேட்டையாடிக் கானக நிலப்பரப்பில் பரப்பிவிடுகின்றனர். ஒருநாள் துறவி ஒருவர் அக்கானகத்தின் வழியாகத் தன் பயணத்தை மேற்கொள்கிறார். அப்பொழுது அந்தப் படைவீரர்களின் செயலினைக் கண்டு மனம் வருந்துகிறார். நேராக அரண்மனைக்குச் சென்று மன்னனை காணவேண்டும் என்று வாயில் காவலாளியிடம் கூறுகிறார். துறவி தன்னைச் சந்திக்க வந்திருக்கும் செய்தி மன்னனுக்கு தெரிய வருகிறது. அவரும் ஆவலுடன் துறவியை எதிர்கொண்டு வரவேற்கிறார். துறவியும் மனம் மகிழ்கிறார். பிறகு மன்னனிடம் "நீர் செய்யும் காரியம் தவறு" என்று கூறுகிறார். மன்னனுக்கு எதுவும் விளங்கவில்லை. துறவியைப் பார்த்து தாங்கள் கூறவிருக்கும் கருத்தினை தெளிவாகக் கூறும்படி மன்னன் கூறினார்.
༺🌷༻
அதற்கு துறவி மன்னனிடம் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் வேட்டையாடி விட்டால் தாங்கள் வேட்டையாட விலங்குகளே இல்லாமல் போய்விடும் என்றார். மேலும் தாங்கள் மாற்ற வேண்டியது அந்த மகரயாழ் கானகத்தையல்ல தங்களுடைய எண்ணத்தைத்தான் மாற்றிக் கொள்ளவேண்டும் என்றார் அந்தத் துறவி. ஒரே ஒரு விலங்குடைய தோலினாலான காலணி ஒன்றை தாங்கள் அணிந்தால் போதுமானது. தங்களுடைய கால்களில் எந்தவொரு காயமும் ஏற்படாது அப்படியிருக்க அனைத்து விலங்குகளையும் கொன்று தோலைப் பரப்புவது என்பது வீண் வேலை என்று துறவி மன்னனைப் பார்த்துக் கூறினார். அப்பொழுதுதான் அந்த மன்னன் தான் எவ்வளவு பெரிய தவறினைச் செய்கிறோம் என்று உணர்ந்தார். நாமும் இவ்வாறு தான் மற்றவரிடம் மாற்றத்தை எதிர்நோக்காமல் முதலில் நம்மை மாற்றிக்கொண்டாலே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வரும் என்பதே உண்மை.
༺🌷༻
எல்லோருக்கும் சமூக மாற்றம் அல்லது முன்னேற்றத்தின் மீது அளவு கடந்த அக்கறை உள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை அல்லது முன்னேற்றத்தினை எங்கிருந்து துவக்குவது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது. அந்த சமூக முன்னேற்றத்திற்கான முதல் அடியை நம்மில் இருந்தே துவக்கிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத புரியாத செய்தியாகவே இருந்து வருகிறது.
🌿"உலக மாற்றத்தினை உன்னிடம் துவங்கு"
✒️ ~ Rtn.V.S.பாஸ்கரன்,
(@ ரோட்டரி பாஸ்கர்)
📚 "நம்பிக்கை விதைகள்"
📅(வெளியீடு ~ 2017)
©️ எழிலினி பதிப்பகம்,
சென்னை~ 08,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
