cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

Tamil Anmegam+Kolangal

தமிழ் ஆன்மீகம்+கோலங்கள்

Show more
Advertising posts
2 086
Subscribers
-124 hours
+487 days
+11730 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

Photo unavailableShow in Telegram
Audio from சிவானந்தம்
Show all...
AUD-20240711-WA0006.aac1.46 MB
*◄•───✧ உ ✧───•►* *🙏 ஆலயம் அறிவோம் 🙏* *தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு கும்பகோணம் அருள்மிகு கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஆலயம்* *மூலவர்:கரும்பாயிரம் பிள்ளையார்* *பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்* *ஊர்:கும்பகோணம்* *மாவட்டம்:தஞ்சாவூர்* *மாநிலம்:தமிழ்நாடு* *திருவிழா:* *விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி* *தல சிறப்பு:* *கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு.* *திறக்கும் நேரம்:* *காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு மணி 7 வரை திறந்திருக்கும்.* *முகவரி:* *அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில்கும்பகோணம், தஞ்சாவூர்.* *பொது தகவல்:* *கும்பகோணம் தல வரலாறுக்குக் காரணமாகவும் பிரதான சிவாலயமாகவும் விளங்கும் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அருகில் அமைந்துள்ள இந்தப் பிள்ளையாரின் பெருமையறிந்து தரிசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது.* *குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையான கரும்பாயிரம் பிள்ளையார் பக்தர்களின் வாழ்வை இனிப்பாக மாற்றிடுவார் என்பதில் ஐயமில்லை.* *கும்பகோணம் செல்பவர்கள், அவசியம் இந்தப் பிள்ளையாரையும் தரிசித்து வருகிறார்கள்.* *பிரார்த்தனை:* *பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.* *நேர்த்திக்கடன்:* *பக்தர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, சிதறு காய் உடைத்தும், கரும்பை காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.* *தலபெருமை:* *ஒருமுறை, வணிகன் ஒருவன் மாட்டு வண்டியில் கட்டுக்கட்டாகக் கரும்புகளை ஏற்றிக்கொண்டு பயணித்தான். இவ்வூர் எல்லைப் பகுதியைக் கடக்கும்போது அவனுக்கு உறக்கம் வரவே, அருகிலுள்ள திருக்குளத்தின் பக்கத்தில் வண்டியை நிறுத்திவிட்டுக் குளத்து நீரில் முகம் கழுவிக் கொண்டு கரைக்குத் திரும்பினான்.* *அப்போது சிறுவன் ஒருவன் வண்டிக்கு அருகில் நின்றுகொண்டு வண்டியைப் பார்த்தபடியே இருந்ததைக் கண்டான் வணிகன். எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது; ஒரு கரும்பைக் கொடேன் என்று வணிகனிடம் அந்தச் சிறுவன் கேட்டான்.* *கரும்பு கொடுக்க வணிகனுக்கு மனமில்லை. எனவே, ஊஹும்... தர முடியாது என்று மறுத்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். சிறுவன் வண்டி ஓட்டத்தோடு தொடர்ந்து ஓடிக்கொண்டே, கெஞ்சலும் கொஞ்சலுமாக மீண்டும் மீண்டும் கரும்பு கேட்டுக் கொண்டே வந்தான்.* *தெருவில் போய்க் கொண்டிருந்த சிலர் இந்நிகழ்வைப் பார்த்துவிட்டு, ஏனப்பா ! அந்தக் குழந்தை கேக்குது இல்லே. ஒண்ணு ஒடிச்சுக் கொடுத்தா குறைஞ்சா போயிடுவே ! பார்க்கிறதுக்குப் பிள்ளையாராட்டம் எப்படியிருக்கு பார்த்தியா ! என்று சிறுவனைப் பார்த்துக் கூறினார்கள்.* *அப்படியும் வணிகனுக்கு மனம் கனியவில்லை. இவையெல்லாம் கொஞ்சம் வேற மாதிரி கரும்பு. நாணல் குச்சிகள் மாதிரி ! இதை ஒடிச்சு உறிஞ்சினால் உப்பு கரிக்கும்.* *ஆலையில் கொண்டு இயந்திரத்தில் பிழிந்தால்தான் இனிக்கும் ! என்று சிறுவனுக்காக சிபாரிசு செய்தவர்களிடம் பொய் சொன்னான்.* *நல்ல சாறு தரும் கரும்புகளை வண்டி முழுவதும் வைத்துக்கொண்டு நாணல் குச்சிகள் என்றா சொல்கிறாய்.* *அவையெல்லாம் உனக்குப் பயன்படாததாகவே ஆகட்டும் ! என்று கூறிவிட்டு, வண்டியைத் தொடர்ந்து சென்ற சிறுவன் அருகிலுள்ள ஆலயத்துக்குள் நுழைந்து மறைந்துவிட்டான்.* *மறுநாள், அந்த வண்டிக்காரன் சர்க்கரை ஆலையை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.* *அங்கு ஆலை கூலி ஆள் கரும்புக் கட்டுகளின் மேல் கைவைத்துப் பார்த்துவிட்டு கோபம் அடைந்து, ஏனப்பா, இந்த மாதிரி ஏமாத்து வேலை செய்யறே ! வெறும் நாணல் குச்சிகளைக் கட்டிவந்து கரும்புன்னு பொய் சொல்றே ! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று கேட்டான்.* *அதிர்ச்சியடைந்த வணிகன் வண்டியைச் சென்று பார்க்க, எல்லாம் நாணல் குச்சிகளாகவே இருந்தது ! எதுவுமே புரியாமல் தவித்தவன், பின் தன் வீட்டுக்கு வந்து அப்படியே படுத்து உறங்கிவிட்டான்.* *அந்த வணிகனின் கனவில் கரும்பு கேட்ட சிறுவன் தோன்றி, நான்தான் பிள்ளையார். நல்ல கரும்புகளை வெறும் நாணல் குச்சிகள் என்று என்னிடமே பொய் சொன்னாய். இப்போது அது உனக்குப் பயன்படாமலே போய் விட்டது. வணிகனாகிய உனக்கு தர்ம சிந்தனை துளியும் இல்லையே ! என்று இகழ்ச்சியாகக் கூறினான்.* *இதன்பின்னரே, பிள்ளையாரே சிறுவனாக வந்து தன்னிடம் விளையாடியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட வணிகன், சுவாமி ! என்னைச் சோதித்தது தாங்கள்தானா? என் தவறை மன்னித்து அருளுங்கள் ! என்று சொல்லி கோயிலுக்குச் சென்றான்.* *கோபம் விலகிய விநாயகர், நாணல் குச்சிகளை மீண்டும் கரும்புகளாக மாற்றினார். அன்றுமுதல் இந்தப் பிள்ளையார் கரும்பாயிரம் பிள்ளையார் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சற்றே பழைமையான ஆலயம்.* *ஆகம விதிகளின்படி நாள் தவறாமல் வழிபாடுகள் நடை பெறுகின்றன. விநாயகருக்குரிய பண்டிகை நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.* *தல வரலாறு:*
Show all...
*ஆதிகாலத்தில் கும்பகோணம் வராஹபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஒரு யுகாந்தரத்தில், துராத்மாவாகிய அசுரன் பூமியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான்.* *ஜகத்கர்த்தாவாகிய ஸ்ரீவிஷ்ணு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை மீட்டருளினார். அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.* *ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த விநாயகர் கரும்பாயிரம் பிள்ளையார் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.* *சிறப்பம்சம்:* *அதிசயத்தின் அடிப்படையில்:* *கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு.* *அமைவிடம்:* *கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் இக்கோயில் உள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம்:* கும்பகோணம் *அருகிலுள்ள விமான நிலையம்:* திருச்சி *தங்கும் வசதி:* கும்பகோணம் *🌹 வாழ்க வளமுடன் 🌹* *🪐 வாழ்க வையகம் 🪐* *🙏 ஓம் விநாயகா போற்றி 🌷*
Show all...
01:28
Video unavailableShow in Telegram
_*தினசரி தியானம்...! நீர்த்துளி...!!! ஜூலை-11(திருத்தம்) ஆனி-27*_
Show all...
2.44 MB
04:45
Video unavailableShow in Telegram
_*11.07.2024 பஞ்சாங்கம்*_
Show all...
4.28 MB
கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, விபூதிக்குப் பதில் வாழைப்பழங்கள் பிரசாதமாக கொடுத்த சம்பவம். எவர் மனத்தையும் புண்படுத்தக்கூடாது என்பது பெரியவா கொள்கை. நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு.-கிட்டத்துப் பார்வை. கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். பிக்ஷாவந்தனம் செய்ய வந்தார் ஓர் அன்பர். கும்பகோணம் பக்கம், அவருடைய கிராமம். சொந்தமாக வாழைத் தோட்டம் உண்டு. ஏராளமான கறிகாய்களுடன், நான்கு தார் வாழைப்பழங்களையும் கொண்டு வந்தார். பெரிய பெரிய சீப்புகள். ஏராளமான பழங்கள். பெரியவா, தாரிலிருந்த பழங்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தட்டுகளில் வைக்கச் சொன்னர்கள் தொண்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், சொன்னததைச் செய்துதானே ஆகவேண்டும். ஐந்தாறு தட்டுகளில் தனித்தனிப் பழங்களாக வைக்கப்பட்டன. சுமாராக முந்நூறு பழங்கள் இருக்கும். பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும். ஏதோ ஒரு பள்ளிக்கூட குழந்தைகள், நாலு பஸ்களில் வந்திறங்கி தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வாழைப்பழம், பெரியவா தன் கையாலேயே கொடுத்தார்கள். கடைசிப் பையன் வந்தபோது, தட்டில் ஒரு வாழைப்பழம் மட்டுமே இருந்தது! எத்தனை மாணவர்கள் வந்தார்களோ, அத்தனை வாழைப்பழங்கள் மட்டுமே இருந்தன. மாணவர்கள் போனபிறகு, பெரியவாள் சொன்னார்கள்; "குழந்தைகள், கிறிஸ்தவப் பள்ளியிலிருந்து வருகிறார்கள். மெஜாரிட்டி கிறிஸ்தவக் குழந்தைகள். இவர்களுக்கு விபூதி, குங்குமம் கொடுப்பது சரியாக இருக்காது. அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படாது. பழம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான், எல்லோருக்கும் பழத்தைக் கொடுத்தேன்"-பெரியவா. எவர் மனத்தையும் புண்படுத்தக்கூடாது என்பது பெரியவா கொள்கை. "சங்கரமடம் என்பதால், நான் விபூதி கொடுத்திருந்தால், எல்லோரும் கைநீட்டி வாங்கிக் கொள்வார்கள். கொஞ்ச தூரம் சென்றதும், சுவரோரமாக உதறிவிட்டுப் போயிருப்பார்கள்!"--பெரியவா. நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை.
Show all...
Photo unavailableShow in Telegram
எவ்வகைத்தாந் தவஞ்செயினும்      எய்தரிதாம் தெய்வம் எனக்கெளிதிற் கிடைத்தென்மனம்     இடங்கொண்ட தெய்வம் அவ்வகைத்தாந் தெய்வம்      அதற்கப்பாலாந் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே       அப்பாலாந் தெய்வம் ஒவ்வகத்தே ஒளியாகி        ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம்மிக       நன்றான தெய்வம் செவ்வகைத்தென்று அறிஞரெலாம்      சேர்பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற       தெய்வமதே தெய்வம்....! திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்ஜோதிநிலை. திருவருட்பா ஆறாம் திருமுறை. ஐயனின் செம்பொற்கழல்கள் போற்றி அன்பர்கட்கு நற்காலை வணக்கம்.
Show all...
*🐠 மீனம் - லக்னம்:-* *இரவு: 10.40 - 12.20 AM வரை.* *♈ மேஷம் - ராசி:-* *,இரவு: 12.21 - 02.05 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩வியாழன் கிழமை- ஓரை_* *_⛲ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   குரு.     💚   👈சுபம்   ✅ 7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 10-11. புதன்.     💚   👈சுபம்  ✅ 11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1. சனி..   ❤👈அசுபம் ❌ 1-2. குரு.     💚   👈சுபம்   ✅ 2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌠 மாலை: 🔔🔔* 3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 5-6. புதன்.     💚   👈சுபம்  ✅ 6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋
Show all...
*🕉🕉 🌼🌸🌸உ🌼🌸🌸 🕉🕉* *🚩🕉️🔯ௐ நமசிவாய✡️🕉️🚩* *꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂* *🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜*                                     🛣  *திருவெற்றியூரில்* *_பல லட்சம் பக்தர்களின்_* *பாதுகாவலனாக விளங்கும்* *அருளே மஹா சக்தியான*         *_🔥 அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*        *_🛕உடனுறை 🐍_* *_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🥥              🦣🦣🦣🦣 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 ஆனி:~ 𝟮𝟳.* *🌼 【𝟭𝟭• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 】* *🌸 வியாழன்- கிழமை.* *🕉️ 1】வருடம்:~ஸ்ரீ குரோதி:* *{ குரோதி நாம ஸம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்:~ உத்தராயணம்.* *🪵 3】ருது:~ கிரீஷ்ம - ருதௌ:* *💠 4】மாதம்:~ ஆனி: ( மிதுன- மாஸே )* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:* *🌙 வளர் -பிறை.* *♨️ 6】திதி: - பஞ்சமி.* *காலை: 10.19 வரை, பின்பு சஷ்டி.* *🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- சஷ்டி.* *💫 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *☸️ 9】நாள்:~  வியாழக்கிழமை  { குரு வாஸரம் } :-* *கீழ் -நோக்கு நாள்.  ⬇️* *🌟 10】நக்ஷத்திரம்:~.* *பூரம்:- பிற்பகல்: 01.46 வரை பின்பு உத்திரம்.* *🦋 11】நாம- யோகம்:* *வ்யதீபாதம்:- அதிகாலை: 03.27 வரை, பின்பு வரீயான்.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை: 05.58 வரை அமிர்தயோகம், பின்பு பிற்பகல்: 01.46 வரை சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.* *🍄 13】௧ரணம்:  ~ 03.00 - 04.30.* *பாலவம்:- காலை: 10.19 வரை, பின்பு கௌலவம், இரவு: 11.17 வரை, பிறகு தைதுலம்.* *🦚 நல்ல நேரம்:* *காலை: ~ 10.45 - 11.45 PM.* *மாலை: ~ ━━━━━━━━* *🧶 கௌரி- நல்ல நேரம்:-* *மதியம்:~ 12.15 - 01.15 PM.* *மாலை :~ 06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:-* *பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM* *🦏 ௭மகண்டம்:-* *காலை: ~ 06.00 - 07.30 AM.* *⛺ குளிகை:-* *காலை: ~ 09.00 - 10.30 AM.* *🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )* *🌅 சூரிய - உதயம்:-* *காலை:~ 05.59. - AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை:~ 06.36. PM.* *🌏 சந்திராஷ்டம- நட்சத்திரம்:* *பிற்பகல்: 01.46 வரை திருவோணம், பின்பு அவிட்டம்.* *🏵️ சூலம்:  தெற்கு.* *🧉 பரிகாரம்:  தைலம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_🔔இன்றைய-சிறப்பு: 🙏🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *👬 உலக மக்கள் தொகை தினம்.* *🇮🇳 விடுதலைப் போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்த தினம்.* *✍ தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிறந்த தினம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘    *🚩 தின- சிறப்புக்கள்: 🚩* *━━━━━━━ॐ━━━━━━━*      *🌻🌻 ஆனி:~  𝟮𝟳.🎋🎋*        *🌺  𝟭𝟭• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 🌷*    *🕉  வியாழன்- கிழமை 🌼* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅* *_🌎 சந்திராஷ்டம- ராசி:_* *━━━━━━━ॐ━━━━━━━* *☸ இரவு: 07.35 வரை மகரம் பின்பு கும்பம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விஷேசங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஶ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை  தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* *🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் விழா தொடக்கம், தங்க சப்பரத்தில் பவனி வரும் காட்சி.* *🪔 சிதம்பரம் ஆவுடையார் கோயில் ஆகிய ஸ்தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் ரதோத்ஸவம்.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🧘‍♂ குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 நவகிரக சாந்தி செய்ய சிறந்த நாள்.* *🌟 நோயாளிகள் மருந்து உண்ண ஏற்ற நாள்.* *🌟 சித்திரம் வரைய உகந்த நாள்.* *🌟 வழக்குகளை வாதிட நல்ல நாள்.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்:-  ◆◆◆◆_* 📝 *━━━━━━━━━ॐ━━━━━━━━* *🪙 அழுக்கடைந்த கண்ணாடியை பார்க்கலாகாது. இதை பார்த்தால் அறிவு மழுங்கும். அழுகடைந்த கண்ணாடி இருக்கும் வீட்டில் செல்வம் குறையும்.* ⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️    *_♊ லக்ன நேரம்:_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• *📚 _( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *🐂 ரிஷபம் - லக்னம்:-* *காலை: 02.10 - 04.12 AM வரை.* *👬 மிதுன - லக்னம்:-* *காலை: 04.13 - 06.27 AM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *காலை: 06.28 - 08.35 AM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *காலை: 08.36 - 10.37 AM வரை.* *👩‍🔧 கன்னி - லக்னம்:-* *பகல்: 10.38 - 12.37 PM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *பகல்: 12.38  - 02.43 PM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *மாலை: 02.44 - 04.54 PM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *மாலை: 04.55 - 07.02 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *இரவு: 07.03 - 08.56 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *இரவு: 08.57 - 10.39 PM வரை.*
Show all...
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.