ar
Feedback
Tamil Anmegam+Kolangal

Tamil Anmegam+Kolangal

الذهاب إلى القناة على Telegram

தமிழ் ஆன்மீகம்+கோலங்கள்

إظهار المزيد
2 645
المشتركون
+524 ساعات
+157 أيام
+2630 أيام
أرشيف المشاركات
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (04.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿பிரபஞ்சம் முழுக்க நமக்கு குரு கிடைத்துக் கொண்டே இருப்பார். ༺🌷༻ இந்திய தாந்திரீக மரபுகளில் வழிபாட்டுக்குரியவர் தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் ஸ்வரூபமான தத்தாத்ரேயரை 'குருக்களுக்கெல்லாம் குரு என்று சொல்வார்கள். 'யது' என்ற அரசன் தனக்கான குருநாதரைத் தேடி காட்டுக்குள் அலைந்தபோது தத்தாத் ரேயரைக் கண்டு,"எனக்கு நீங்கள் குருவாக முடியுமா?" எனக் கேட்டான். 'வாழ்க்கையே எல்லோருக்கும் குரு' என்றார். தத்தாத்ரேயர். 'நம்மைச் சுற்றியுள்ள எதுதான் நமக்கு பாடம் சொல்லித் தருவதில்லை?' என்று கேட்ட தத்தாத்ரேயர் தன்னுடைய 24 ஆசிரியர்களை யதுவுக்கு அறிமுகம் செய்தார். எவர் தனக்குச் செய்யும் இழிவையும் பொருட்படுத்தாது யாவற்றையும் தாங்கும் பூமி, எல்லா மாசுகளையும் அழித்து எப்போதும் சுத்தமாயிருக்கும் நெருப்பு, எந்த வாசனையையும் எடுத்துச் சென்று சேர்த்தாலும் அந்த வாசனையை தன்னுள் ஏற்றிக்கொள்ளாத காற்று, எல்லையிருப்பது போல் தோன்றி, எல்லை இல்லாது விரியும் வானம், அனைத்து உயிர்களையும் மலரச் செய்யும் நீர், பார்வைக்கு வளர்வதும் தேய்வதுமாய்த் தோன்றினாலும் வளராமலும் தேயாமலும் இருக்கும் நிலவு. எல்லா ஆத்மாக்களிலும் உறையும் ஒரே உயிர்போல, எல்லா இடங்களிலும் ஒன்றாக ஒளிரும் சூரியன், தன் உணவுக்காக தேனை எடுக்கும்போதே அந்தத் தேன் தரும் மலர்களின் சந்ததியை பெருக்கி உதவி செய்யும் தேன் என்று விரியும் ஆசிரியர் பட்டியல் மிக வசீகரமானது. ༺🌷༻ "ஆச்சார்ய தேவோ பவ'" என்று கற்பிப்பவர்களுக்கு தெய்வத்துக்கு சமமான இடம் தந்த கலாசாரம் நம்முடையது. பாடத்தை மகனிடமிருந்தும் கேட்கலாம் என்று சிவனே, சற்று தலைசாய்த்து,வாய்பொத்தி முருகனிடம் பாடம் கேட்ட நம் பண்பாட்டின் உயர்கூறு, வேறு எந்த தேசத்திலும் காண முடியாதது. உண்மையில் நம் பிள்ளைகள்தான் நமது பெரும் ஆசிரியர்கள். நான் என் பெண்ணிடமிருந்து தினமும் கற்கிறேன். சிரிப்பின் பரிசுத்தத்தையும் கண்ணீரின் பவித்திரத்தையும் அவளிடமே தரிசித்து கற்கிறேன். ༺🌷༻ நாய்களுடனும் மனைவிகளுடனும் எதிரே வந்த புலையனை "விலகு விலகு" என்றாராம் ஆதிசங்கரர். "எது விலக வேண்டும்? ஆன்மாவா? உடலா?" என்று திருப்பிக் கேட்டானாம் அவன். எல்லா உயிரிலும் ஒளிர்வது ஒரே மகரமாழ் ஆத்மாதான் என்ற ஞானத்தின் தரிசனம் ஆதிசங்கரருக்கு அங்கே கிடைத்தது. பாடம் யாரிட மும் கேட்கலாம் என்பதுதான் பாரதம் போற்றும் ஞான மரபு. ༺🌷༻ சுற்றி உள்ள எதுவும் நமக்கு குருதான். வாழ்வின் ரகசியத்தை, தோல்வியை ஜெயிக்கும் வலிமையை, வெற்றியை ஏற்கும் பக்குவத்தை, வலி தாங்கும் ரகசியத்தை, நேசிப்பின் நெகிழ்வை. யார் யாரோ நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். முழுதும் நிரம்பி இருக்கும் தேநீர் கோப்பையில் புதுசாய் தேநீர் ஊற்ற முடியுமோ? அதுபோல் நாம் நம் அபிப்ராயங்களால் நிரம்பியிருந்தால் எந்தக் கருத்தும் உள்ளே போக முடியாது. கண், கழுத்து, மனசு எல்லாம் கொஞ்சம் காலியாக இருந்தால் பிரபஞ்சம் முழுக்க நமக்கு குரு கிடைத்துக் கொண்டே இருப்பார். ✒️ ~ திருமதி. பாரதிபாஸ்கர், (பட்டிமன்ற பேச்சாளர்) 📚 "சிறகை விரி, பற" ©️ கவிதா பப்ளிகேஷன், சென்னை ~ 17, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (03.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿படைத்தோர், கொடுத்தோர், பெற்றோர். ༺🌷༻ 🌿நீண்ட பதிவு: "இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளை டாக்டராக வேண்டும் அல்லது இன்ஜீனியராக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட ஆற்றல்களோடு பிறக்கிறது. ஆனால் பெற்றோர்களோ ஜெராக்ஸ் படிகளையே விரும்புகிறார்கள்." ༺🌷༻ அமெரிக்கா சென்றிருந்தபோது பர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஹார்ட் அவர்களுடைய வீட்டில் விருந்தினனாகத் தங்கியிருந்தேன். டாக்டர் ஹார்ட்டின் மனைவி, அவருடைய மகனிடம், "உன்னுடைய குளியலறையைப் பயன்படுத்திக்கொள்ளட்டுமா?" என்று கேட்டார். நான் வியப்படைந்து, "இது உங்க வீடு, அவர் உங்களுடைய பிள்ளை. உங்கள் வீட்டிலிருக்கும் குளியலறையைப் பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்கிறீர்களே?" என்று கேட்டேன். "எங்கள் அறையை உங்களுக்குக் கொடுத்துவிட்டோம். எனவே, நாங்கள் எங்கள் மகனுடைய அறையிலிருக்கும் குளியலறையைத்தான் பயன்படுத்த முடியும். இது எங்கள் வீடுதான் என்றாலும் அந்தக் குளியலறை என் மகனுடைய அறையில் இருப்பதால் அவனுடைய அனுமதியைப் பெற்றுத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். ༺🌷༻ இதற்கே வியப்படைகிறீர்கள். உங்களை எங்கள் விருந்தாளியாக அழைத்து இந்த வீட்டில் தங்க வைப்பதற்குக்கூட எங்கள் மகனின் அனுமதியைப் பெற்றோம். இவையெல்லாம் இந்த நாட்டின் மரபு!'' என்றார் அவர். மேலைநாடுகளிலிருந்து வேண்டாத பழக்கவழக்கங்களை எடுத்துக் கொள்ளும் நாம் இத்தகைய நல்ல #மகரயாழ் பண்பாடுகளை ஏன் கற்றுக் கொள்வதில்லை? அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் தங்களுடைய பிள்ளைகள் என்றாலும், அவர்களுக்குச் சுதந்திரம் தருகிறார்கள்; அவர்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்புத் தருகிறார்கள். ༺🌷༻ நம் நாட்டில் என்ன நடக்கிறது? என் நண்பரின் மகன் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தான். அவனுக்குத் திருமணமாகிப் பிள்ளைகளும் இருக்கின்றன. அவன் தன் குடும்பத்தைக் குற்றாலத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்தான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட நண்பர், "எங்கேடா போறே?” என்று மகனிடம் கேட்டார். அவன், "குற்றாலம்" என்றான். நண்பர், "எப்படிப் போறே?" என்று கேட்டார். அவன், "வாடகைக் கார் ஏற்பாடு செய்திருக்கிறேன்'' என்றான். அவ்வளவுதான். நண்பருக்குக் கோபம் வந்துவிட்டது. "இன்னும் நான் உயிரோடு இருக்கேண்டா" என்று கத்தினார். அவருடைய மகன் முகம் சுருங்கியவனாகத் தலை குனிந்தபடி வீட்டுக்குள் சென்றுவிட்டான். நண்பருக்குக் கோபம் வரக் காரணம் அவர் குடும்பத் தலைவராம். அவருடைய மகன் அவரைக் கேட்காமலேயே குற்றாலத்துக்குப் போக முடிவு செய்து, #மகரயாழ் காரும் ஏற்பாடு செய்துவிட்டானாம். தன் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி தோன்றிவிட்டது என்று அவருக்குக் கோபம். ༺🌷༻ நம்முடைய பிள்ளைகளை நாம் கொத்தடிமைகளாக நடத்துகிறோம். அவர்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு எள்ளளவு மரியாதை கூடத் தருவதில்லை. நாம் எப்படி விரும்புகிறோமோ, அப்படித்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கொடுமையான சர்வாதிகாரிகளைப் போல அவர்களை அடக்கி ஆள்கிறோம். ༺🌷༻ இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் 'பிள்ளைகளை நாம்தாம் உண்டாக்கினோம். அவர்கள் நம்முடைய உடைமை' என்று நினைக்கும் அறியாமைதான். பிள்ளைகளை நாம் உண்டாக்கவில்லை; உண்டாக்க முடியாது. பிள்ளைகளை நாம் படைக்கவில்லை. அவர்கள் நம் வழியாக வருகிறார்கள். பிள்ளைகள் இந்த உலகத்துக்குள் நுழையப் பெற்றோர்கள் வாசலாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். அதனால் தமிழ் அவர் களைப் 'பெற்றோர்' என்கிறது. இது ஒரு ஞானச்சொல். ༺🌷༻ அதாவது அவர்கள் 'படைத்தோர்' அல்லர்; 'கொடுத்தோ'ரும் அல்லர்; 'பெற்றோர்'. இறைவன் தரப் பெற்றோர். தாயும் தந்தையும் பிச்சை கேட்க இணைந்த இரு கரங்கள். பிள்ளை, அந்தக் கரங்களில் இறைவன் இட்ட பிச்சை. ~ ✒️கவிக்கோ அப்துல் ரகுமான், (கவிஞர்: பேச்சாளர்: கவிக்கோ பட்டம் பெற்றவர்; தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர்: நூல் பல படைத்தவர்) ©️விகடன் பிரசுரம் 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

பட எண்ணினர். ༺🌷༻ அந்த நேரத்தில் குள்ளநரி அங்கே வேகமாக வந்தது. அவர்களைப் பார்த்து மீண்டும் பேசியது. "ராமன் என்னும் பிராமணக் குழந்தை இறந்த பின்னர் மீண்டும் உயிர் பெற்றது. ஷேவேதர் என்னும் ராஜரிஷியின் மகன் அகால மரணமடைந்தான். அறவாழ்க்கை வாழ்ந்த மன்னன் அந்த மகனை மீண்டும் உயிர்பெற்று எழச் செய்தான். இறந்த குழந்தையை எண்ணிக் கதறும் உங்களுக்காகவும் ஏதேனும் ஒரு சித்தர், முனிவர் அல்லது தேவதை கருணைகாட்டி உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்ய முன்வரக்கூடும்." தாயார் மீண்டும் குழந்தையைத் தன் மடியில் போட்டுக் கொண்டாள். மீண்டும் எல்லோரும் அழுதனர். ༺🌷༻ குள்ளநரியும், கழுகும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தன. ஒன்றின் கேள்விக்கு மற்றொன்று பதில் சொல்லியது. இரண்டும் தத்தம் கருத்துக்களை வேதங்களின் அடிப்படையில் தெரிவித்தன. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்ததும் அங்கு பயங்கர மிருகங்கள் வந்து தொல்லை தரும் என்று கழுகு பெற்றோர்களை பயமுறுத்தியது. ༺🌷༻ அன்னை பார்வதிதேவி🙌 இந்தப் பெற்றோர்களின் நிலைகண்டு இரங்கி, அந்தக் குழந்தை மீண்டும் உயிர் பெறச் செய்யுமாறு சிவபெருமானிடம் பிரார்த்தித்தாள். சிவபெருமான் அந்தக் குழந்தைக்கு மீண்டும் உயிர்தந்து, நூறு வயதுவரை வாழவும் அருள் புரிந்தார். இறந்த குழந்தை மீண்டும் உயிர்பெற்று எழுந்ததுகண்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக #மகரயாழ் வீடு திரும்பினர். அவர்கள் சிவபெருமானை வணங்கினர்; போற்றினர். சூரியன் மறைந்ததும் இறந்த குழந்தையின் மாமிசத்தைத் தின்ன விரும்பிய குள்ளநரி, பெற்றோர்கள் சூரிய அஸ்தமனம் வரை அங்கு இருக்க வேண்டும் என்று விரும்பியது. கழுகு குழந்தையின் உடலை சூரியன் மறைவதற்குள் தின்ன வேண்டும் என்று விரும்பியது. குழந்தைக்கு மீண்டும் உயிர்வந்தபோது இரண்டும் ஏமாற்றப்பட்டன. இரண்டும் வேதனை அடைந்தன. ༺🌷༻ இந்த உலகில் உள்ள மனிதர்களில் பெரும்பாலோர் சுயநலத்தையே நாடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சுயநலம் கருதியே பிறருக்கு நல்லுபதேசம் செய்கின்றனர். (கருத்து கூறும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சில லாப கணக்குகள் இருக்கும். அதை நோக்கியே அவர்களின் கருத்துக்களும் இருக்கும்.) அவர்களின் வழி தனி வழி. அவர்களை நம்பி ஏமாறாதீர்கள். உங்கள் சுயசிந்தனையின்படி செயல்படுங்கள். எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஒரு காரியத்தையும் நன்கு சிந்தித்து செயலாற்றுங்கள். ✒️ ~ ஸ்ரீ சுவாமி சிவானந்தா, (சிவானந்தா ஆஸ்ரமம், இராசிபுரம், சேலம்) 📚 "நீதிநெறிக் கதைகள்" 📅(வெளியீடு ~ 1983) ©️ THE DIVINE LIFE TRUST SOCIETY, Sivananda Nagar, U. P., India. 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (02.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿அவர்களின் வழி தனி வழி. ༺🌷༻ 🌿 நீண்ட பதிவு: மைமிச வனத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. நீண்ட நாட்களாக குழந்தைச் செல்வத்தைப் பெறாத ஒரு பிராமணன், கடுந்தவம் செய்தபின் ஒரு மகனைப் பெற்றான். ஆயினும் அந்தக் குழந்தை, இழுப்பு நோயால் இறந்து போயிற்று. பெற்றோர் கள் மிகவும் வருந்தினர். அவர்கள் குழந்தையை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். இடுகாட்டிலும் அவர்கள் அழுது புலம்பினர். அவர்களின் அழுகுரலைக் கேட்டு அங்கு ஒரு கழுகு வந்து பின்வருமாறு பேசிற்று. "இங்கே கவனியுங்கள். உலகம் முழுவதும் இன்பம், துன்பம் இரண்டையும் அனுபவிக்கிறது. உறவும், பிரிவும் மாறிமாறி வருகிறது. இறந்த உறவினர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து வருகிறவர்களும், இந்த உடல்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களும் தம் செயலின் விளைவாக, இந்த உலகில் வாழ்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலம் முடிவடைந்ததும் மரணத்தைத் தழுவு கின்றனர். ஒருவன் ஆயுட்காலம் முடிந்து இறந்த பின்னர் அவன் நண்பனாக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் மீண்டும் உயிர்பெற்று வாழமுடியாது. ༺🌷༻ அனைத்து உயிர்களின் இறுதிநிலையும் இதுதான். நிலையற்ற உலகில் பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. அழிகின்ற ஒருவர் விதித்துள்ள வழியில் செல்லுகின்ற மனிதனை, உயிர் துறந்தவனை யார் மீட்க முடியும் ? குழந்தையின்மீது வைத்துள்ள பாசத்தைவிட்டு, வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்". கழுகின் வார்த்தைகளைக் கேட்டவுடன் பெற்றோர்களின் வேதனை ஓரளவுக்குக் குறைந்தது. கழுகின் கருத்துக்குச் செவிசாய்த்து அவர்கள் வீடு திரும்பினர். ༺🌷༻ இந்த நேரத்தில் ஒரு நரி தன் வளையிலிருந்து வெளியே வந்தது. அது பெற்றோர்களைப்பார்த்து பின்வருமாறு கூறியது: "உங்களுக்குக் குழந்தையின் மீது பாசமே இல்லையா ? சூரியன் இன்னும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறான். உங்கள் உணர்ச்சிகளை அச்சமின்றி வெளிப்படுத்துங்கள். குழந்தை மீண்டும் உயிர் பிழைக்கக்கூடும். குழந்தையின்மீது வைத்திருந்த பாசம் அனைத்தையும் துறந்துவிட்டு ஏன் இப்படி இரும்பு இதயத்துடன் செல்லுகிறீர்கள்? உங்களுக்கு குழந்தையின் மீது அன்பு இருப்பது உறுதி. பறவைகளும் மிருகங்களும்கூட தமது குழந்தைகளிடம் செலுத்துகின்ற அன்பை கவனியுங்கள். இறந்த மகனுக்காக இன்னும் சிறிது நேரம் கண்ணீர் சிந்துங்கள்; இன்னும் சிறிது நேரம் அவனை அன்புடன் பார்த்துக் கொண்டிருங்கள். உயிர் அனைவர்க்கும் இனியது. அன்பின் செல்வாக்கை அனைவரும் உணருகின்றனர்". குள்ளநரியின் பேச்சு, பெற்றோரின் மனத்தை மாற்றியது. அவர்கள் இன்னும் சிறிதுநேரம் அங்கு இருக்கத் தீர்மானித்தனர். ༺🌷༻ கழுகு மீண்டும் வந்து பேசியது: "இந்தக் குள்ள நரி, கொடியது; சிறுமதி படைத்தது; முட்டாள் போல பேசக்கூடியது. இதன் பேச்சைக் கேட்டு ஏன் திரும்பிப் பார்க்கிறீர்கள் ? பஞ்சபூதங்களாலான இந்த உடலுக்காக ஏன் வருந்துகிறீர்கள் ? இந்த உடலில் இப்போது இறைவன் குடியிருக்கவில்லை. இந்த உடலில் இப்போது ஆத்மா இல்லை. இந்த உடல் இப்போது அசைவற்று மரக்கட்டைபோலக் கிடக்கிறது. இதற்காக ஏன் வருந்துகிறீர்கள் ? உங்களுக்காக ஏன் நீங்கள் வருத்தப்படக்கூடாது. உங்களைப் பாவத்திலிருந்து விலக்கி உங்களைத் தூய்மைப்படுத்தக்கூடிய அறச் செயல்களில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? தவத்தின் மூலம் எதனையும் பெறலாம். நீங்கள் வருந்துவதால் பயன் என்ன? தவம் செய்யுங்கள். நீண்ட ஆயுளுடன் வாழும் குழந்தையைப் பெறுங்கள். இறப்பு என்பது உடலோடு பிறக்கிறது. செல்வம், மாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள், குழந்தைகள் எல்லாம் தவத்தின் மூலமே பெறப்படுகிறது. தவம் யோகத்தின் விளைவு. தந்தை தன் செயல்மூலம் மகனைத் தடுக்க முடியாது. மகன் தன் செயல்மூலம் தந்தையைத் தடுக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தம் நற் செயல் மற்றும் தீய செயலின் விளைவாக இந்தப் பொதுப் பாதையில் செல்லத்தான் வேண்டும். வருந்துவதால் என்ன பயன்? இறந்தவருக்காக ஏன் வருந்துகிறீர்கள்? அனைவருக்கும் எஜமானனாக காலம் இருக்கிறது. அது தன் இயல்புக்கேற்ப அனைத்தையும் பாரபட்சமின்றி நோக்குகிறது. கர்வம் உடைய இளைஞன் அல்லது பச்சிளங்குழந்தை, முதியவர் அல்லது கருவில் உள்ள குழந்தை ஆகிய யாராயினும் இறக்கத்தான் வேண்டும். உலகத்தின் இயல்பு இத்தகையது". ༺🌷༻ குள்ளநரி இடை மறித்து, "ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். உழைப்பும் லட்சியமும் இணையும்போது பலன் கிடைக்கிறது. பின் ஏன் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு திரும்புகிறீர்கள்? சூரியன் அஸ்தமனம் ஆகும்வரை இங்கேயே இருங்கள்” என்றது. கழுகு மீண்டும் பேசியது: "இன்று எனக்கு ஆயிரம் வயது பூர்த்தியாகிறது. எந்த ஒரு பிராணி யும் இறந்த பின் உயிர்பெற்று எழுந்ததை நான் காணவில்லை. இறந்த குழந்தையின் இந்த உடலை விட்டுச் செல்லுங்கள். இதற்கு மிருகத்தின் தன்மை இல்லை. இந்த உடலைவிட்டுப் பிரிந்த உயிர் வேறு ஒரு உடலில் குடிகொள்ளும்". கழுகின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பெற்றோர்கள் அங்கிருந்து புறப்

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (01.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿கடவுளை சந்தேகப்படாதீர்கள் ༺🌷༻ நள்ளிரவு. அந்த சோளக் கொல்லையில் திடீரென ஏதோ சலசலப்பு. சோளக் கொல்லையைக் காவல் காத்துக்கொண்டு இருந்தவன் சத்தம் கேட்டு ஓடி வந்தான். அங்கு மாடு ஒன்று மேய்ந்துகொண்டு இருந்தது. 'மாட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மெள்ள அருகில் சென்றான். ஆனால், மாடு இவனைப் பார்த்துவிட்டது. உடனே இவன் வேகமாகத் தாவி. மாட்டின் வாலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். மறுகணம், மாடு மேலெழுந்து பறக்க ஆரம்பித்தது. அப்போதுதான் தெரிந்தது, அது சிவபெருமானின் நந்தி என்று. நந்தி, கயிலாயத்தை நோக்கிப் பறக்க, இவனும் அதன் வாலைப் பிடித்து தொங்கியபடி பறந்தான். இருவரும் கயிலாயத்தை அடைந்தனர். ༺🌷༻ சிவனாரை கண்டதும், "இது நியாயமா? உங்கள் நந்தி அங்கு என் சோளக் கொல்லையை நாசம் செய்துவிட்டது" என்று முறையிட்டான். கவலை வேண்டாம். இழப்பை ஈடுகட்ட இதோ! பை நிறைய தங்கக் காசுகள்" என்று ஒரு பையைக் கொடுத்தார் இறைவன். அவரை வணங்கி, பணிவுடன் பையைப் பெற்றுக் கொண்டவன், நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்து சேர்ந்தான். வீட்டை அடைந்ததும், 'இது, உண்மையிலேயே தங்கக் காசுதானா?" என்று அவனுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே ஒரேயொரு மகரயாழ் காசை மட்டும் எடுத்துக்கொண்டு தன் நண்பனின் நகைக் கடைக்குச் சென்றான். ༺🌷༻ தங்கக் காசை நண்பனிடம் தந்து, இது தங்கம்தானா? உரசிப் பார்த்துச் சொல்" என்றான். நண்பனும் உரசிப் பார்த்தான். 'அட! விலை மதிப்பு இல்லாத தங்கமாயிற்றே! இது, இவனுக்கு எப்படிக் கிடைத்தது?' என்று யோசித்த நண்பன், "இது வெறும் பித்தளைதான். உன்னை ஏமாற்றியவர் யார்?" என்று கேட்டான். இவனும் நடந்ததை விவரித்தான். அன்றிரவு, மீண்டும் நந்தி வந்தது. பித்தளையைக் கொடுத்து ஏமாற்றுவது உனக்கு அழகா?' என்று இறைவனைக் கேட்க வேண்டும் என முடிவு செய்தவன், நந்தியின் வாலைப் பிடித்தான். நந்தி உயரே எழும்பியது. நம்ம ஆசாமி, அதன் வாலைப் பிடித்தபடி தொங்கிக்கொண்டு இருந்தான். அப்போது, எவரோ, இவன் காலைப் பிடித்து இழுப்பதாக உணர்ந்தான். மெள்ளக் குனிந்து பார்த்தான். ༺🌷༻ அட! 'பித்தளை' என்று பொய் சொன்ன நண்பன். (தங்க காசு எங்கிருந்து இவனுக்கு கிடைத்தது என்று தெரிந்து கொண்டு நாமும் அதை போல் தங்க காசுகளை பெற வேண்டும் என்று அந்த நண்பன் இவனுக்கு தெரியாமல் இருளில் இவ்வளவு நேரம் மறைந்திருந்தான்.) ஆசை யாரை விட்டது? நந்தி பறந்துகொண்டு இருக்க அதன் வாலைப் பிடித்தபடி இவன், இவனது காலைப் பிடித்தபடி நண்பன்! நண்பன் கேட்டான்: "ஆமாம்! உனக்கு எவ்வளவு தங்கக் காசுகள் கொடுத்தார்கள்?" உடனே, நந்தியின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருந்த நம்ம ஆசாமி, உற்சாகத்துடன் இரண்டு கைகளையும் விரித்து, 'இவ்வளவு என்றான். அவ்வளவுதான்! இரண்டு பேரும் பூமியில் இருந்த அதே சோளக் கொல்லையில் வந்து விழுந்தனர். ༺🌷༻ இந்தக் கதை சொல்லும் நீதி என்ன? வாலைப் பிடித்தவன், கடவுளை சந்தேகப்பட்டான். காலைப் பிடித்தவன், பேராசைப்பட்டான். கடவுளை சந்தேகப்படுகிறவர்களுக்கும் பேராசைப்படுகிறவர்களுக்கும் இதுவே கதி என்கிறது ஆன்மிகம்! கடவுளை சந்தேகப்பட்டால், 'பொத்'தென்று விழ நேரிடும். உஷார்! ✒️ ~ தென்கச்சி கோ.சுவாமிநாதன், 📚 "நினைத்தால் நிம்மதி" ©️ விகடன் பிரசுரம், சென்னை ~ 02, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (30.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿பண்பின் சிறப்பு. ༺🌷༻ பண்பின் சிறப்பு இராமாநுஜர் வைணவத்தில் மகா முனி. அவர் திருப்பதிக்குச் சென்றபோது, அவரை வரவேற்க பெரிய திருமலை நம்பிகள் மலையில் இருந்து இறங்கி வந்துவிட்டார். திருமலை நம்பி இராமாநுஜருக்கு தாய்மாமன் என்பதோடு, பரம பக்தருமாவார். ༺🌷༻ 'இந்தச் சின்னவனை உபசரிக்கத் தாங்கள் இறங்கி வரவேண்டுமா? யாரேனும் ஒரு சாதாரண ஆளை அனுப்பியிருக்கலாமே?' என்று பணிவுடன் கேட்டார். பெரிய நம்பி சொன்னார். 'நாமும் அப்படித்தான் நினைத்தோம். ஆனால், நம்மைவிட யாரும் சாதாரண ஆளாய் தென்படவில்லை. அதுதான் நாமே வந்தது' என்று. ༺🌷༻ மற்றவர்களைத் தாழ்த்தி, தம்மை உயர்வாகக் கருதிக்கொள்ளும் பழக்கம் பெரியோர்களிடம் கிடையாது. அவர்கள் தன்னடக்கமும், பணிவும் நிரம்பப் பெற்றவர்கள். பண்புதான் சிறந்தவர்களை மிகச்சிறந்தவர்களாக்கி விடுகிறது. அவர்களிடம் இருந்து நாம் நிறையவே கற்றுக்கொள்ள முடியும். ✒️ ~ சி.எஸ்.தேவநாத் 📚 "இந்த மனம் ஒரு நந்தவனம்" ©️ கவிதா பப்ளிகேஷன், சென்னை ~ 17, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (27.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿அன்புடன் கொடுப்போம், அன்பை பெறுவோம். ༺🌷༻ கீரைக்காரி ஒருத்தி எனக்கு வாடிக்கையாகக் கீரை தருவாள். கீரையும் நன்றாக இருக்கும். நான் அதிகம் பேரம் பேசுவதில்லை. ஒரு கட்டுக் கீரையில் அவளுக்கு நாலணா அல்லது எட்டணா லாபம் கிடைக்கும். அதை நான் மிகச் சமார்த்தியமாக வாக்குவாதம் செய்து குறைத்து பாதியாக்கி விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. தலை சுமையோடு கழுத்து நரம்பு புடைக்க காலை வெய்யிலில் அவள் சுற்றுவதைப் பார்க்கப் பாவமாகக் கூட இருக்கும். இதுவும் நான் பேரம் பேசாததற்கு ஒரு காரணம். அத்தோடு காலை நேரப் பொன்னான பொழுதில் ஐந்து நிமிடத்தை நாலணாவிற்கு என்று தத்தம் செய்ய முடியாத என் நிலை வேறு. இதைப்போல் சின்ன சின்ன விஷயங்களில்தான் டென்ஷன் கூடுவதாக என் கணிப்பு. ༺🌷༻ சில நாள்கள் ஆனதும் அவளே சுதந்திரமாக கேட்டைத் திறந்து வராண்டாவில் உட்கார்ந்து கீரையைக் கொடுத்துவிட்டு தண்ணீர் வாங்கிக் கீரை மீதும் தெளித்துக் கொண்டு கிளம்புவாள். ஒருநாள் ஒரு சிறிய பிளாஸ்டிக் பக்கெட்டில் நீரும், இரண்டு ரூபாய் காசையும் வெராண்டாவில் வைத்துவிட்டு நான் உள்ளே வேலையாக இருந்தேன். கீரைக்காரி வந்தபோது "காசும் தண்ணியும் வெச்சிருக்கேன். கீரையை வெச்சுட்டுப் போ" என்றேன். அவளும் அப்படியே செய்தாள். இதுவும் வாடிக்கை ஆகிப்போனது ༺🌷༻ ஒருநாள் அவள் "இனிமே இங்கே ஒரு பேப்பர் வெச்சு வை" என்றாள். அன்று சிறிது நேரம் கழித்துக் கீரைக்கட்டை எடுக்க வந்தபோது பக்கெட் காலியாக இருந்தது. காசைக் காணவில்லை. இது அன்றாடம் நிகழ்வதுதான். ஆனால் அன்று அதிகப்படியாக கீரை ஆயப்பட்டு நறுக்க ஆயத்தமாக பேப்பரில் அடுக்கப்பட்டு இருந்தது. கீரைக் கழிவையும் காணவில்லை. கையில் எடுத்துச் சென்றுவிட்டாள் போலும். மறுநாள் ஒரு பிளாஸ்டிக் மூடி போட்டு ஒரு டம்ளர் மோரையும் வெராண்டாவில் வைத்தேன். மோர் டம்ளர் காலியாயிற்று. ༺🌷༻ அடுத்த நாள் ஆய்ந்த கீரைக்கு அருகே மணம் வீசும் நான்கு மனோரஞ்சித மலர். எனக்கு உடம்பு ஆடிப்போயிற்று. அடுத்த நாள் இரண்டு ரூபாய் அதிகம் வைத்தேன். அன்று ஆய்ந்த கீரையும் மனோரஞ்சித மகரயாழ் மலரும் நான் வைத்த அதிகப்படியான இரண்டு ரூபாயும் வெராண்டாவில் இருந்தன. "பூக் குடுத்ததுக்கு அம்மா துட்டு வெச்சிருக்காப்புல" என்று என் கணவரிடம் கோபித்துக் கொண்டாளாம் அவள். ༺🌷༻ தருவதும் பெறுவதும்தான் வாழ்க்கை . ஆனால் அதில் உண்மை இருப்பது அவசியம். என்னால் கொடுக்க முடிந்ததை நான் கொடுத்தேன். அவள் கொடுக்க விரும்பியதை அவளும் அன்போடு கொடுத்தாள். ஓரிடத்தில் விழும் பள்ளம் மற்றோர் இடத்தை மேடாக்கும். அன்புடன் கொடுப்போம், அன்பை பெறுவோம். ✒️ ~ கவிஞர் புனிதவல்லி, 📚 "நாம் வெற்றி சிகரத்தை எட்டி பிடிப்போம்" 📅(வெளியீடு ~ 2007) ©️ ஜெயமணி வெளியீடுகள், சென்னை ~ 24, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

photo content
+3

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (26.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿பூலோகமே இருண்டு விட்டதாக... ༺🌷༻ ஜார்ஜ் மூர் என்ற பிரபல நாவலாசிரியர், கவிதையிலும் கற்பனையிலும் திளைத்த மேதை. அப்படிப்பட்டவருக்குக் கூட இளமையில் கர்வம் அதிகமாக இருந்தது. ஒருநாள் டப்ளின் நகர "பிரபுக்களின் சபை" தலைவர் டாக்டர் வால்ஷ் என்பவருக்குக் கீழ்க்கண்டபடி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அன்புள்ள பிரபுக்களின் சபை தலைவர் அவர்களே! உங்களுக்குச் விஷயம் தெரியாதோ? நான் மகரயாழ் பிரபுக்கள் சபையை விட்டு வெளியேறி விட்டேன். -இப்படிக்கு, ஜார்ஜ் மூர் *༺🌷༻* இதற்கு உடனே சுடச்சுட பதிலும் கிடைத்தது. "அன்புள்ள ஜார்ஜ் மூர்! எருதின் கொம்பில் ஈ உட்கார்ந்ததே! அந்தக் கதை தெரியுமா? இதோ அந்தக்கதை: ஓர் ஈ ஒரு எருதின் கொம்பில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தது. போகும்போது ஈ "எருதாரே நான். போய் வரட்டுமா?" என்று கேட்டது. அதற்கு எருது " ஓ ஈயா! நீ என்னைக் கேட்டுக்கொண்டு வரவில்லை; என்னைக் கேட்டுக்கொண்டு என் கொம்பில் உட்காரவும் இல்லை. உண்மையில் நீ என் கொம்பில் இருந்ததே எனக்குத் தெரியாது. நீ வந்ததினால் எனக்கு லாபமுமில்லை; நீ போவதனால் எனக்கு நஷ்டமுமில்லை. மகராஜனாய் உன் இஷ்டம் போல் போய் வா" என்றது. -இப்படிக்கு, சபை தலைவர் டாக்டர் வால்ஷ் *༺🌷༻* 🌿நீதி : சிலர் தான் இல்லாவிட்டால் எதுவுமே நடவாது என்று எண்ணுகிறார்கள். அவ்வாறு எண்ணுவது அறியாமையே ஆகும். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு விட்டதாக நினைத்துக்கொள்ளுமாம். 💎தமிழ்நாட்டுப் பழமொழி *✒️ ~ ரோஜா முத்தையா* *📚நகைச்சுவை நீதிக்கதைகள்* *©️செல்வி பதிப்பகம்* *காரைக்குடி* *💐நன்றி🙏* ༺🌷மகரயாழ்🌷༻

photo content
+4

*🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *_தலையில் தாங்க முடியாத பாரங்களை சுமக்கும் போதெல்லாம்.._* *_தவறாமல் ஒட்டிக்கொள்கிறது பெற்றோரின் நினைவு.._* *_அவர்கள் கடந்த வலியை விட.._* *_நாம் அதிகம் கடக்க வில்லை என்று.!!_* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🏵️▬▬▬C®️K▬▬▬🏵️*

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (23.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿உனக்குக் கைதட்ட வேண்டும். ༺🌷༻ தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களில் புகழ் பெற்றவர் எஸ். ஜி. கிட்டப்பா என்பவர். இவர் இசையரசி கே. பி. சுந்தராம்பாளின் கணவர். ஒரு வழக்கில் சாட்சியாக உயர்நீதிமன்றக் கூண்டில் கிட்டப்பா ஏறினார். சிட்டப்பா இரண்டாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்தவர். அவரை விசாரணை செய்த வழக்கறிஞர் நார்ட்டன் துரை மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞர். கூண்டிலிருந்த கிட்டப்பாவை நார்ட்டன் கேட்டார்: ༺🌷༻ "உங்கள் பெயர் என்ன?" “கிட்டப்பா" நடிகர் பதில் சொன்னார். "உங்கள் தொழில்?" "நான் ஒரு நடிகன்." "நடிகன் என்றால் கூத்தாடிதானே?" "ஆமாம்." "அது ஒரு மட்டமான தொழில்தானே?" ஆனால் என் அப்பாவின் தொழிலைவிட இது "ஆமாம். மேலானது.'' "உங்கள் அப்பாவின் தொழில் என்ன?" "அவர் உங்களைப் போல ஒரு வக்கீல். ༺🌷༻ வழக்கு மன்றமே கலகலத்துச் சிரித்தது. மெத்தப் படித்த நார்ட்டன் துரை கிட்டப்பாவை அவமானப்படுத்த முயன்று தோற்றுப் போனார். கிட்டப்பா வெற்றிபெறக் காரணம் என்ன? #மகரயாழ் துணிவு, தன்னம்பிக்கை. நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்து அவர்களைச் சமாளித்த அனுபவம் ஆகியவையே கிட்டப்பா நிமிர்ந்து நிற்கத் துணை ஆயின. ༺🌷༻ சர்ச்சில் சொன்னார், "மேடைப்பேச்சில் நான் வெற்றி பெறக் காரணம் தன்னம்பிக்கைதான். கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாரையும்விட என்னை நான் அறிவாளியாக நினைத்துக்கொள்வேன். ஆனாலும் யாரையும் அவமதித்துப் பேசமாட்டேன்"என்று. 🌿"நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் உன் மனச்சாட்சி உனக்குக் கைதட்ட வேண்டும். அது தான் சிறப்பான வாழ்க்கை" (பேச்சாளர், கட்டுரையாளர்; தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டுக்கான பரிசை இரண்டு முறை பெற்றவர்; காவிரித் தீர்ப்பாயத்திற்கும் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிற்கும் மொழி பெயர்ப்பாளர்; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வாளர்; நூல் பல படைத்தவர்.) ✒️ ~ பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன், 156, சரபோஜி நகர், மருத்துவக் கல்லூரிச் சாலை, தஞ்சாவூர். 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (16.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿இரக்கம் காட்டு... ஆனால்.... ༺🌷༻ அந்த மன்னருக்கு நிறைய குதிரைகள் தேவைப்பட்டன. எனவே, வெளி தேசத்திலிருந்து வந்த குதிரை வியாபாரியிடம் குதிரைகளை வாங்கினார். இன்னும் குதிரைகள் இருந்தாலும் கொண்டு வாருங்கள்" என்றார் மன்னர். உடனே அந்த வியாபாரி. "உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு சில நாட்கள் அவகாசம் தேவை மன்னா! ஏனெனில், பல இடங்களில் அலைந்து திரிந்து குதிரைகளை வாங்கி வர வேண்டும். தவிர. கொஞ்சம் முன் பணமும் தேவை" என்றான். அவ்வளவுதானே என்று குதிரை வியாபாரியிடம் பத்தாயிரம் பொற்காசுகளை முன் பணமாக வழங்கி அனுப்பி வைத்தார் மன்னர். பல மாதங்கள் கடந்தன. ஆனால், குதிரை வியாபாரி வரவே இல்லை. ༺🌷༻ ஒரு நாள் அமைச்சரை அழைத்த மன்னர், "அமைச்சரே! நம் நாட்டில் எவரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதே என் ஆசை, அப்படி ஏமாந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். எனவே, நம் தேசத்தில் உள்ள ஏமாளிகளைப் பட்டியல் எடுங்கள்" என்று உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சரும் ஓரிரு நாளில், பட்டியலுடன் மன்னரை சந்தித்தார். "என்ன அமைச்சரே! ஏமாந்தவர்களின் பட்டியலைத் தயார் செய்து விட்டீர்களா?" என்றார் மன்னர். உடனே, தான் கொண்டு வந்திருந்த பட்டியலை வழங்கினார் அமைச்சர், ༺🌷༻ பட்டியலை வாங்கிப் படித்த மன்னருக்கு அதிர்ச்சி! பின்னே? ஏமாளிகளது பட்டியலில் முதலிடத்தை வகித்தது மன்னரது பெயராயிற்றே. "என்ன இது?" என்று ஆத்திரத்துடன் கேட்டார் மன்னர். "மன்னிக்க வேண்டும் மன்னா! முன்பின் அறிமுகமே இல்லாத குதிரை வியாபாரியிடம், அவன் யார். எந்த ஊர் என்று எதுவும் விசாரிக்காமல், பத்தாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தீர்களே.என்னாயிற்று? குதிரை வியாபாரி பணம் வாங்கிச் சென்று பல மாதங்களாகிவிட்டன. இனியும் வருவான் என்கிற நம்பிக்கை எனக்குத் துளியும் இல்லை" என்று பவ்யமாக ஆனால் தைரியமாக எடுத்துரைத்தார் அமைச்சர். ༺🌷༻ இதைக் கேட்ட மன்னர், "சரி, ஒருவேளை குதிரை வியாபாரி வந்து விட்டால் என்ன செய்வீர்கள்?" என்று எதிர்க் கேள்வி கேட்டார். அமைச்சர் அமைதியாக பதில் சொன்னார்: "பட்டியலில் உள்ள தங்களது பெயரை அழித்துவிடுவேன்; அதற்கு பதிலாக குதிரை வியாபாரியின் பெயரை எழுதிவிடுவேன்" ༺🌷༻ அதுவும் சரிதான். ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாதவனும் ஏமாளிதானே! 🍀மௌனகுரு சுவாமிகளின் உபதேசங்களில் ஒன்று: இரக்கம் காட்டு, ஆனால் ஏமாந்து போகாதே! ✒️ ~ தென்கச்சி கோ.சுவாமிநாதன், 📚 "நினைத்தால் நிம்மதி" ©️ விகடன் பிரசுரம், சென்னை ~ 02, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (15.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿உனக்கு நிகர் நீயே. ༺🌷༻ ஒரு இளைஞர் கூட்டம் காட்டு வழியே தனது நண்பனின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது. அந்த வழியே போகும்போது ஒரு பாம்பு திடீரென்று குறுக்கிடுகிறது. அப்போது அனைவரும் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து அதை அடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு இளைஞன் அடித்த கல் மட்டுமே அந்தப் பாம்பின் தலையில் பட்டு அந்தப் பாம்பை இறக்கச் செய்துவிடுகிறது. மற்ற இளைஞர்கள் அடித்த கற்கள் அனைத்தும் பல வேறுபட்ட இடங்களில் பட்டு பல்வேறு திசைகளில் சென்று விழுந்தன. ஆனால் அவர்களில் ஒரு இளைஞனது கல் மட்டும் எப்படிச் சரியான, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான அந்தப் பாம்பின் தலையில் பட்டு வீழ்த்தியது. இந்த இடத்தில் நமது உள்மனத்தின் வேலை என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது எந்த ஒரு இடத்தில் நாம் இருந்தாலும் சரி, எங்கு நாம் சென்றாலும் சரி, அந்தச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தினால் தனது மனநிலையோ அல்லது தனது உடல் நிலையோ பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற கருத்தில் நமது உள்மனம் கவனமாக இருக்கும். ༺🌷༻ எனவே, அவர்களின் பயணத்தின் குறுக்கே வந்த பாம்பினால் கண்டிப்பாக மனநிலையில் முதலில் ஒரு மாற்றம் அதாவது அது விஷமுடைய ஒரு ஜந்து. எனவே அது கடித்தால் கண்டிப்பாக மரணம் நிச்சயம். எனவே அதை உடனடியாக அடித்தாக வேண்டும் என்று அனைத்து இளைஞர்களின் உள்மனமும் முடிவெடுத்து பாம்பின்மேல் கல்லெறியத் தூண்டியது. அத்தனை இளைஞர்களும்தான் அந்தப் பாம்பின்மேல் கல்லெறிந்தார்கள். ஏன்? ஒரு இளைஞர் அடித்த கல் மட்டும் குறி தவறாமல் அந்தப் பாம்பின் தலையைக் குறிபார்த்தது. மற்றவை எல்லாம் ஏன் குறி தவறின? நன்றாகச் சிந்தியுங்கள். குறிவைத்துச் சரியாகக் கல்லெறிந்த அந்த இளைஞனின் மனநிலை ஒருமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்ட நிலைதான் அந்த இளைஞனால் பாம்பைக் கொல்ல முடிந்தது. ༺🌷༻ அதாவது அந்த இளைஞனின் வலிமை, சக்தி, திறமை, வீரம், விவேகம், விடாமுயற்சி, வெறி, நம்பிக்கை இவை அனைத்தும் ஒரு நொடியில் ஒருமுகப் படுத்தப் பட்டு, தனது இலக்கான அந்தப் பாம்பை மட்டும் கவனத்தில் கொண்டு, மற்ற தனிப்பட்ட சிந்தனைகளான கோபம். வெறுப்பு, தூக்கம், துரோகம், நயவஞ்சகம், மற்றும் அனுபவித்த அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒரு நொடியில் மூட்டை கட்டி வைத்து விட்டு தனது குறிக்கோளுக்கு இணங்க அந்த இளைஞனின் கூரிய பார்வை சரியாக நிச்சயிக்கப்பட்ட இலக்கின் மீது மட்டுமே சரியாக ஒருமுகப் படுத்தப்பட்டுச் செயல்பட்டதால் அவனுக்கு வெற்றி கிடைத்தது. ༺🌷༻ மாறாக, ஏனைய சக நண்பர்களும்தான் கையில் கல்லினை எடுத்தார்கள். ஏன் அவர்களால் அந்தப் பாம்பை அடிக்க முடியவில்லை என்றால்? அவர்களின் மனநிலையை ஒருமுகப்படுத்தாததே காரணம். நன்கு குழம்பிய குளத்தின் அடிப்பரப்பை நாம் கண்ணால் பார்க்க முடியுமா? ஆனால் தெளிந்த குளத்தில் நம் முகம்கூடத் தெரியும். எனவே, அந்த இளைஞர்களின் மனநிலை குழம்பிய குளம்போல் காணப்பட்டதால் அவர்கள் சரியாகத் தமது இலக்கினை நோக்கிச் செயல்பட முடியவில்லை. ✒️ ~ நாமக்கல் ஏ.எஸ்.சந்துரு 📚 "உனக்கு நிகர் நீயே" 📅(வெளியீடு ~ 2006) ©️ தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை ~ 98, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KKAyKQS7B1WIdnSbqOYoud?s=sh&p=a&mlu=4

photo content

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (12.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿எல்லா வெற்றியிலும் எளிதாகவே வரும். ༺🌷༻ தொலைநோக்குச் சிந்தனை, எதிலும் நேர்மறையான பார்வை, விடாமுயற்சி, உழைப்பின் மீதான நம்பிக்கை, எந்த நேரத்திலும் எதற்காகவும் துவண்டு போகாத மனோதைரியம், குழப்பம் இல்லாமல் முடிவுகளை எடுக்கும் திறன், மற்றவர் கருத்துக்கும் மதிப்பளித்துக் கேட்கும் மனப்பான்மை... இவையனைத்தும் யாரிடம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர். வெற்றியாளரின் வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள். மேலே குறிப்பிட்ட அத்தனை விசயங்களையும் அவர்கள் கடைபிடித்திருப்பார்கள். வெற்றியாளராவது என்பது மூன்று நிமிடத்தில் ஒரே பாடலில் பணக்காரர் ஆகும் திரைப்படம் போன்றதல்ல. பல நாள், பல போராட்டங்களைச் சந்தித்து நல்ல அனுபவங்களை கற்றுக் கொண்டால்தான் வெற்றிபெற முடியும். ༺🌷༻ எவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாதீர்கள். எவ்வளவு சாதித்தீர்கள் என்று சொல்லுங்கள் என்கிறார் ஜேம்ஸ் லிங்க் என்ற அறிஞர். எனவே நாம் எவ்வளவு உழைத்தோம் என்பதைவிட, எவ்வளவு சாதித்தோம். ஒரு சாதனையாளராய் வெற்றியாளராய் இருக்கிறோம் என்பதே முக்கியம். ༺🌷༻ நான் எனக்கு மட்டும் அது கிடைத்திருந்தால் நல்ல வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தால், நானும் ஜெயித்திருப்பேன். என்ன செய்வது கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று புலம்பும் சிலரை நாம் பார்த்திருப்போம். இவர்கள் இப்படி சாக்குபோக்கு சொல்லியே தோற்றுப் போகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் தங்களின் அடையாளத்தையும் தொலைத்து விடுகிறார்கள். எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கி முயற்சி செய்பவர்களே வெற்றி பெற முடியும். 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார் கிரண்பேடி. இன்று தேசிய அளவில் புகழ் பெற்று விளங்குகிறார். 1993ஆம் ஆண்டு தில்லி திகார் சிறையில் மேலதிகாரியாகப் பணிக்குச் செல்கிறார். ༺🌷༻ திகார் சிறை என்பது பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு, பல்வேறு தவறுகளால் சிறைக்கு வந்தவர்களின் கூடாரமாக இருந்தது. அவர்களைக் கண்ட கிரண்பேடி கொஞ்சமும் பின்வாங்கவில்லை. மாறாக சிறைக் கைதிகளின் மீதான அவரது பார்வை வித்தியாசமாகப் படுகிறது. தவறு செய்பவர்களை எப்போதும் குற்றவாளிகளாக மட்டுமே பார்க்காமல், முதலில் மனிதர்களாய் பார்க்க வேண்டும் என்று செயல்படுகிறார். கைதிகளுக்கு மகரயாழ் தியானம், யோகாசனம், மனநல ஆலோசனைகள் என்று வழங்கப்பட்டதன் மூலம் சிறைச்சாலையில் அமைதியையும் மனமலர்ச்சியையும் கொண்டு வந்தார். ༺🌷༻ மிகப்பெரிய குற்றங்களை செய்தவர்களை எல்லாம் அடைத்து வைத்திருந்த திகார் சிறை, கிரண்பேடியின் நடவடிக்கையால் திகாகர் ஆசிரமமாக மாறியது. பெரிய குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்று பயந்து பின்வாங்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள சூழலை தனக்குச் சாதமாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் கிரண்பேடி. மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப் படுவது வறுமையினால் அல்ல, விடா முயற்சியினால்தான் என்று எடிசன் சொல்வது போல முயற்சி, முயற்சி, முயற்சி... இதுதான் நமது வெற்றிக்கான தாரக மந்திரம். முயற்சி செய்தால் தெய்வத்தால் முடியும் என்று ஆகாததுகூட நம்மால் திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ༺🌷༻ உங்களுக்கான வெற்றியின் இலக்கை சரியாக நிர்ணயம் செய்து கொண்டு அதிலிருந்து விலகிவிடாமல் தொடருங்கள். இலக்கைச் சென்றடைவீர்கள். உடனே மேலே செல்ல வேண்டுமென்று எண்ணாதீர்கள். ஒவ்வொரு படியாக ஏறிச் சென்றால்தான் இலக்கைத் தொடமுடியும். எம்பிக்குதிக்க முயன்றால் விழுந்து விடுவோம். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் போதெல்லாம் புதுப்புது பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதற்காக துவண்டுவிடாமல் ஒவ்வொன்றாய் தீர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். ✒️ ~ நந்தவனம் சந்திரசேகர், 📚 "சிகரங்களின் கதவுகள் திறந்திருக்கின்றன..." ©️ அருள்மொழிப் பிரசுரம், சென்னை ~ 15, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (11.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿முடியாதது என்பது முயலாதது மட்டுமே. ༺🌷༻ ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அற்வித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார். ༺🌷༻ அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள். ༺🌷༻ ஆகவே இளைஞர்களே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. முடியாதது என்பது முயலாதது மட்டுமே. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" ༺🌷༻ என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு மகரயாழ் அக்னி இருந்திருக்கிறது. ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் உங்களுக்கு வானம் எல்லையல்ல. ༺🌷༻ இளைஞர்களே உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். போகும் பாதையில் தடைக் கற்கள் இருக்கலாம். சிறியதாக இருந்தால் தாண்டிப் போங்கள். பெரியதாக இருந்தால் அதன் மீது ஏறிப் போங்கள், அல்லது சுற்றிப் போங்கள். ஆனால் அதைக் கண்டு நின்று உங்கள் பயணத்தை நிறுத்தி மட்டும் விடாதீர்கள். முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை. ✒️ ~ என். கணேசன், தன்னம்பிக்கை எழுத்தாளர், 📚தோல்வி என்பது இடைவேளை 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻

🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (10.06.2026) ༺🌷༻ 🌸🌼🌿மகிழ்ச்சிக்கு வழி... ༺🌷༻ மகிழ்ச்சிக்கு வழி "தான்' என்கிற அகந்தை கொண்டவன் அந்த அரசன். அவன் வேட்டைக்குச் சென்றபோது காட்டில் ஒரு துறவியைச் சந்தித்தான். அவரிடம், 'எனது வீரத்தால் பல நாடுகளை நான் ஜெயித்திருக்கிறேன். என்னுடைய கருவூலத்தில் பொன்னும், மணியும் குவிந்து கிடக்கிறது. என் அந்தப்புரத்தில் ஏராளமாய் அழகிய பெண்கள். ஆனால், நான் சிறிதும் மகிழ்ச்சியில்லாத வனாய் இருக்கிறேன். எனக்கொரு வழி சொல்லும்' என்று கேட்டான். தவத்தில் இருந்து விழித்த யோகி, 'நான்' செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்'' என்று கடுமையாக சொன்னார். ༺🌷༻ 'தகுந்த பதில் சொல்லாமல் என்னை அவமானப் படுத்துகிறீரா?' அரசன் வாளை ஓங்கி அவரை வெட்டப் போனான். துறவி சற்றும் அஞ்சாமல் அவனை உற்றுப் பார்த்தார். "நீ ஒரு முட்டாள். 'நான்' என்கிற அகந்தை செத்தால்தான் உனக்கு சந்தோஷம். புரிந்ததா' என்று சொன்னார். ༺🌷༻ அகந்தையற்றவர் மகிழ்ச்சி அடைகிறார். அவரால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சி. எங்கும் மகிழ்ச்சியைப் பரவச் செய்பவரே இறைவனுக்குப் பிரியமானவர். ✒️ ~ சி.எஸ்.தேவநாத் 📚 "இந்த மனம் ஒரு நந்தவனம்" ©️ கவிதா பப்ளிகேஷன், சென்னை ~ 17, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻