Tamil Anmegam+Kolangal
Відкрити в Telegram
2 681
Підписники
Немає даних24 години
+17 днів
+4530 день
Архів дописів
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(30.07.2026)
༺🌷༻
🌸🌼🌿உலகையே வெல்லலாம்.
༺🌷༻
"ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின்."
காலத்தை அறிந்து (செயலை முடிப்பதற்கு ஏற்ற) இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
மனிதராகப் பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு நாளிலும் டென்ஷனான நேரம், ரிலாக்ஸ்டான நேரம் என்று உண்டு. வெற்றி பெறுபவர்கள் இதனை முழுமையாக அலசி ஆராய்ந்து சரியான நேரங்களில் சென்று வெற்றிகரமாக வேலையை முடித்துக் கொண்டு திரும்புகிறார்கள். இதனைப் பற்றிய அறிவில்லாதவர்கள், தவறான நேரத்தில் சென்று மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி விடுவதோடு "ச்சே இன்னைக்கு என் நேரமே சரியில்ல" என்பார்கள். நேரம் சரியில்லை என்பது உண்மையில்லை. சரியான நேரத்தை அறிந்து அவர்கள் செயல்படவில்லை என்பதே உண்மை.
சிலர் அதிகாலை நேரத்திலேயே எழுந்துவிடுவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் மிகச்சிறந்த மூடில் இருப்பார்கள். நேரம் செல்லச் செல்ல வேலைப்பளு அதிகமாகி அலுவலகம் புறப்படும் நேரத்தில் படு டென்ஷனாக இருப்பார்கள். மீண்டும் அலுவலகத்தில் ஓரளவு வேலைப்பளு குறைந்த பிறகே ரிலாக்ஸான மூடிற்கு வருவார்கள். இதனைத் தெரியாமல் ஒருவர் அவரின் டென்ஷனான நேரத்தில் சென்றுவிட்டால் அவ்வளவுதான். வேலை வெற்றிகரமாக முடிவது கடவுளின் செயல்தான்.
༺🌷༻
அவர் ஒரு பிரபல டைரக்டர். ஷூட்டிங்கிற்கு வந்து விட்டால் அவர் யாரிடமும் முகம் கொடுத்தே பேசமாட்டார். ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தைகள் தான். மேலும் உதவியாளர்கள், சினிமா கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர புதிதாக யாரிடமும் பேசவே மாட்டார். அவரைத் தனியாகச் சந்தித்து நான்கு வார்த்தை பேசிவிடலாம் என்று நினைத்தால் அது முடியாத ஒரு காரியமே. யார் அவரை அணுகினாலும் உதவியாளரைப் பார்க்குமாறு கூறிவிடுவார். ஷூட்டிங்கில் இப்படி என்றால், வீட்டில் அலுவலக விஷயமாக யாரையும் சந்திக்க மாட்டார், பேசவும் மாட்டார். ஒரே வார்த்தையில் அலுவலகம் வந்து பாருங்கள் என்று கூறிவிடுவார்.
༺🌷༻
இவரிடம் பிரகாஷ் என்பவர் அசிஸ்டண்ட் டைரக்டராகச் சேர ஆசைப்பட்டார். அவர்கள் நண்பர்கள் அந்த டைரக்டரிடம் சேர முயல்வது வீண்வேலை எனத் தெளிவாகக் கூறிவிட்டனர்.
இருப்பினும் பிரகாஷ் முயற்சியைக் கைவிடவில்லை. மூன்றே மகரயாழ் மாதங்களில் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார். இப்போது நண்பர்களுக்கெல்லாம் ஆச்சர்யம். பிரகாஷ் எப்படி இதனைச் சாதித்தார் என்று கேட்டபோது இவ்வாறு கூறினார்.
༺🌷༻
வீட்டிலும் அவரைப் பார்ப்பது கடினம். ஷூட்டிங்கிலோ, அலுவலகத்திலோ அருகில் நெருங்குவதே கடினம் என்று தெரிந்து கொண்ட பிரகாஷ், தினமும் காலை முதல் மாலை வரையிலான டைரக்டரின் நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்தார். டைரக்டருக்குத் தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்துள்ளது. அதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். இதைத் தெரிந்து கொண்ட பிரகாஷ் தானும் தினமும் வாக்கிங் போக ஆரம்பித்தார். டைரக்டரிடம் மெல்ல மெல்லப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவருக்கு ஒரு சிறந்த நண்பராகவே ஆகிவிட்டார்.
༺🌷༻
கடைசியில் தான் இவருடைய கோரிக்கையையே டைரக்டரிடம் கூறியுள்ளார். அவரைச் சாதாரணமாகச் சந்திக்க முடியாது என்று தான் எடுத்த முயற்சிகளையும், அதனாலேயே தினமும் வாக்கிங் வந்ததாகவும் உண்மையையும் கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஒரு நிமிடம் ஒன்றுமே பேசாமல் அவரைப் பார்த்துள்ளார். அவ்வளவுதான் நம்மைத் திட்டப்போகிறார் என்று பயத்துடன் பிரகாஷ் காத்திருக்க, டைரக்டர் சிரித்தபடியே அடுத்த நாளிலிருந்து தன்னுடைய அசிஸ்டண்ட் ஆகச் சேர்ந்து கொள்ளும்படி கூறிவிட்டார்.
Know the Place and Time and Act
🍀 காலம் அறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம்.
✒️ ~ பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார் M.A.(Tamil),M.A.(English),
📚 "வெற்றி பெற விரும்புகிறவர்களுக்கு 77 வழிமுறைகள்"
📅(வெளியீடு ~ 2017)
©️ சக்தி பப்ளிஷிங் ஹவுஸ்,
சென்னை~ 13,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(29.07.2026)
༺🌷༻
🌸🌼🌿வாழ்க்கை என்னும் இயந்திரம்.
༺🌷༻
🍀 நீண்ட பதிவு:
சென்னைக்கு அருகே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஒரு கிரானைட் தொழிற்சாலையை நிர்மாணித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் அனைத்தும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
அவற்றுள் கருங்கற்களை பாளம் பாளமாக வெட்டி பளபளவென்று பாலிஷ் போடும் ஒரு ராட்சத இயந்திரம் மிக முக்கியமானது. அதன் விலை மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல். இயந்திரங்களிலேயே கனமானதும் அதுதான்.
எனவே அதை வைக்கும் இடத்தில் மிக வலுவான அஸ்திவாரம் போட வேண்டியிருந்தது. அந்த இயந்திரத்தின் அளவுகளை ஜப்பானியர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்த வகையில் அஸ்திவாரம் போடும் பணியைத் தொடங்கினார்கள். அஸ்திவாரம் அமைக்கும் பணியே பல லட்சங்களை விழுங்கியது.
༺🌷༻
குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அந்த இயந்திரம் சென்னை வந்து சேர்ந்தது. துறைமுகத்தில் இருந்து ராட்சத லாரிகளைக் கொண்டு அந்த இயந்திரத்தை பகுதி பகுதியாகக் கொண்டு வந்து தொழிற்சாலைக்குள் இறக்கினார்கள், பகுதிகளைப் பொருத்தி அதை அதன் அஸ்திவாரத்தில் வைக்க முற்பட்டபோது அது சரியாக 'உட்காரவில்லை'
அஸ்திவாரத்தை மேற்பார்வையிட்ட பொறியாளர் ஏதோ ஓர் இடத்தில் அளவுகளில் சொதப்பியிருந்தார். சிறிய தவறுதான் சரி செய்துவிடலாம் என்று எண்ணி அங்கே கொஞ்சம் இடித்து, இங்கே கொஞ்சம் பூச்சு வேலை பார்த்து, கொஞ்சம் கட்டி, கொஞ்சம் தட்டிவிட்டு, கூட்டிக் குறைத்து அந்தத் தப்பைச் சரி செய்து அந்த இயந்திரத்தை அந்த அஸ்திவாரத்தில் உட்கார்த்திவிட முயற்சி செய்தார்கள், முடியவில்லை.
༺🌷༻
கடைசி முயற்சியாக அந்த இயந்திரத்தைத் தயாரித்த ஜப்பானியக் கம்பெனியின் தலைமைப் பொறியாளரை சென்னைக்கு வரவழைத்து, அஸ்திவாரத்தையும் வந்திறங்கிய இயந்திரத்தையும் காட்டி ஆலோசனை கேட்டார்கள்.
சராசரி ஜப்பானியரைப் போல இருந்த அந்த ஐந்தடி உயர விற்பன்னர் கவனமாக அஸ்திவாரத்தைப் பார்வையிட்டார். பின் அதன் அளவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து குறித்துக் கொண்டார். பின் இயந்திரத்தின் அளவுகளைச் சரிபார்த்து குறித்துக் கொண்டார். சுமார் இரண்டு மணி நேர சோதனைக்குப் பின் சொன்னார்.
༺🌷༻
'ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து நீங்கள் கட்டிய அஸ்திவாரத்தைத் தகர்த்துவிட்டு புதிதாக ஓர் #மகரயாழ் அஸ்திவாரத்தை அமையுங்கள். அப்படிச் செய்யும்போது இந்தத் தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.' பழைய அஸ்திவாரத்தில் இருந்த தவறுகளைப் பட்டியலிட்டுக் கையில் கொடுத்தார்.
பல லட்ச ரூபாய் செலவு, பல வாரங்கள் மனித உழைப்பை வாங்கிய அஸ்திவாரத்தை அடியோடு இடிப்பதா?
'அஸ்திவாரத்தை இடிக்காமல் எதுவும் பண்ண முடியாதா? இந்தியக் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஆதங்கத்துடன் கேட்டார்.
༺🌷༻
அதற்குப் பதிலாக அந்த ஐந்தடி உயர ஜப்பானிய பொறியாளர் பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
'அடிப்படையில் தவறு இருந்தால் அதை மேலிருந்து சரி செய்ய முடியாது. அடிப்படையே சரியில்லை என்றால் அதனை முழுமையாகத் தகர்த்து எறிந்துவிட்டு சரியான அடிப்படையை முதலில் இருந்து உருவாக்குவதுதான் முறை.
༺🌷༻
'அஸ்திவாரத்தில் ஏற்பட்ட பிழைகளை மேற்கட்டடம் கட்டும்போது ஈடுகட்ட முடியாது. அப்படி செய்ய முற்பட்டால் இப்போதைய பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். ஆனால் பின்னால் ஒரு பிரச்சினை வந்தால் அதைத் தீர்க்க ஆகும் செலவு இன்னும் பன்மடங்காக இருக்கும்.'
வெடிகுண்டுகளைப் போல வந்து விழுந்தன வார்த்தைகள்.
༺🌷༻
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! இந்த சமுதாயத்தை அமைக்கும் பணியில் நாம் அடிப்படையில் செய்த தவறுகளை மேற்கட்டடத்தில் இருந்துகொண்டு சரி செய்ய முயல்கிறோம். முடியவில்லை. குழந்தைகள் கல்வியில் அடிப்படையில் அமைய வேண்டிய நாணயம், நேர்மை, நன்னடத்தை போன்ற கோட்பாடுகள் அமையாததால் அதனை மேற்படிப்பின் மூலம் ஈடுகட்டப் பார்க்கிறோம். முடிகிறதா?
༺🌷༻
சரி, சமுதாயத்தை விட்டுத் தள்ளுங்கள். நமது தனிப்பட்ட வாழ்வின் அஸ்திவாரத்தை, அடித்தளத்தைப் பாருங்கள். அதில் அடிப்படையில் ஏதேனும் தவறு இருந்தால் அதனைத் தகர்த்துவிட்டு நல்ல சீர்மையான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அஸ்திவாரப் பணிகள் நடக்கும் போது முன்னேற்றப் பாதையில் பயணம் தாமதப்படும். ஆனால் அதன் பின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உண்டு.
அஸ்திவாரம் வலுவாக, சரியாக இருந்தால்தான் வாழ்க்கை என்னும் இயந்திரம் அதில் செம்மையாக உட்கார்ந்து சரியாக வேலை செய்யும்.
✒️ ~ வரலொட்டி ரெங்கசாமி,
📚 "வெற்றியின் விதைகள்"
📅(வெளியீடு ~ 2006)
©️ கவிதா பப்ளிகேஷன்,
சென்னை~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(28.07.2026)
༺🌷༻
🌸🌼🌿உன்னால் முடியும் தம்பி.
༺🌷༻
அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். ஆங்கிலேய இராணுவப் பாசறையைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான் ஓர் இளம் வீரன். அது இரவு நேரம்.
பாவம், அந்த வீரன்! மூன்று இரவுகளாகத் தொடர்ந்து தூக்கமில்லாமல் அந்தக் காவல் வேலையைச் செய்து கொண்டிருக்கிறான். அன்று அவன் எவ்வளவோ பிரயாசைப்பட்டும் தூக்கம் அவன் கண்களை லேசாக அசத்தி விட்டது.
நிற்கும் இடத்தில் சற்றே சாய்ந்து நின்றபடி ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த வேளையில் - அவனது கெட்ட நேரம் - அந்தப் படையின் தளபதி இரவு நேர சோதனைக்கு வந்துவிட்டார்.
இளம் வீரனின் பக்கத்தில் அவனது துப்பாக்கி சரிந்து கிடக்க அவன் நின்றபடி கண்ணயர்ந்திருந்தான். தளபதி அவன் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் வந்துவிட்டார். தூங்கிக் கொண்டிருந்த வீரனின் பக்கத்தில் இருந்த வீரன் தனது துப்பாக்கியால் இவனது விலாவை இடித்தான்.
༺🌷༻
காதில் கிசுகிசுத்தான். "முட்டாளே, தளபதி வந்திருக்கிறார். சோதனைக்காக, விழித்துக் கொள். கீழே விழுந்து கிடக்கும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு விறைப்பாக நில்,"
அரைத் தூக்கத்தில் இருந்த நமது வீரன் அலறிப் புடைத்துக் கொண்டு கீழே கிடந்த துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி விறைப்பாக நின்றான்.
அதற்குள் படைத்தளபதி அவன் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்
வீரனின் கோலத்தைப் பார்த்த தளபதி அப்படியே தலை சுற்றி மயக்கமாக விழுந்தார்.
༺🌷༻
நடந்தது இதுதான். தூக்கக் கலக்கத்தில் பக்கத்தில் கிடந்த துப்பாக்கியைத் தூக்குகிறேன் பேர்வழி என்று அந்த வீரன் ஒரு பீரங்கியைத் தூக்கித் தோளில் நிறுத்தியிருந்தான்.
அது சாதாரண பீரங்கி இல்லை. முதல் தாள் காலைதான் அந்த பீரங்கியை இருபத்துநான்கு வீரர்கள் சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அங்கே சேர்த்திருந்தனர். 24 வீரர்கள் சிரமப்பட்டுத் தூக்கியதை இவன் அநாயாசமாக ஒரு கையில் தூக்கி நிற்பதைப் பார்த்த தளபதி மயங்கி விழுந்ததில் ஆச்சரியம் என்ன?
༺🌷༻
இந்த நிகழ்வைப் பற்றி மனவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? அந்த வீரன் விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தான். அப்போது மனம் முழுமையாக விழித்திருக்கவில்லை. தன் கையால் தூக்கப் போவது பெரிய பீரங்கி என்பதை மனம் உணர்ந்திருக்கவில்லை.
இது பெரிய பீரங்கி. இதைத் தூக்கி நிறுத்த 24 பேர் வேண்டும். நம்மால் தனியாளாக இதைத் தூக்க முடியாது என்று அந்த வீரனை எச்சரிக்கும் அளவிற்கு அறிவு விழிப்பு நிலையில் இல்லை. அதனால் அவன் எளிதாக அதனைத் தூக்கி விட்டான்.
༺🌷༻
ஆபத்து என்று தெரிந்தவுடன் கையில் இருந்த முறத்தால் புலியை விரட்டிய தாய், தன் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்ததும், கரப்பான் பூச்சிக்கு அஞ்சும் ஒரு தாய், தனது கையால் பாம்பைத் தூக்கிக் கடாசுவது இதெல்லாம் மன வலிமையின் வெளிப்பாடுகள்.
நம்மில் பலரும் ஆபத்து என்று வரும் போது அசாத்தியமான காரியங்களைச் செய்வது இந்த சக்தியினால்தான். இன்னும் சற்று நுட்பமாக இதைப் பார்த்தால் ஒரு செயலைச் செய்ய முடியாமல் போவதற்குக் காரணமே, 'இது நம்மால் முடியாத காரியம்' என்று மனம் தொடர்ந்து ஓலமிட்டுக் கொண்டே இருப்பதால்தான்
༺🌷༻
நான்கு மைல் தூரத்தை ஒரு நிமிடத்திற்குக் குறைவாக ஓடிக் கடக்கவே முடியாது என்று பல வருடங்கள் உலகம் மயங்கிக் கிடந்தது. பின் ஒருவர் அந்த நான்கு மைல் - ஒரு நிமிட வரம்பை உடைத்தெறிந்தார். அதன்பின் பலரும் அந்த சாதனையைச் செய்ய முற்பட்டார்கள்.
புகைவண்டி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அந்த வண்டி மணிக்கு 21 மைல் வேகத்துக்கு மேல் போகவே முடியாது என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தனர் சிலர். ஆனால், இன்று மணிக்கு 300 மைலுக்கு மேல் வேகமாக ஓடும் #மகரயாழ் ரயில்கள் இருக்கின்றன.
༺🌷༻
'உன்னால் முடியும் தம்பி, தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி'
என்ற பாடலை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். முடியாதது என்பது முட்டாள்களின் அகராதிகளுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பல சாதனைகளைப் படைக்க இந்த மனநிலை அவசியம்.
✒️ ~ வரலொட்டி ரெங்கசாமி,
📚 "வெற்றியின் விதைகள்"
📅(வெளியீடு ~ 2006)
©️ கவிதா பப்ளிகேஷன்,
சென்னை~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(24.07.2026)
༺🌷༻
🌸🌼🌿அந்த நதி அதே நதியல்ல.
༺🌷༻
🌿நீண்ட பதிவு:
மகிழ்ச்சிக்கான ஆதாரத்தை மனித இனம் எப்போதுமே கடந்த காலத்தில் தான் தேடுகிறது. "என் குழந்தைப் பருவத்தில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது இப்போது என்னிடம் இல்லை" என்றோ "என் குழந்தைப் பருவம் மிகவும் மோசமானதாக இருந்தது. அது இன்றும் என் நிம்மதியைக் கெடுக்கிறது" என்றோ இந்த நிகழ்காலப் பொழுதை துன்பகரமானதாக ஆக்கிக் கொள்வது மனிதரின் இயல்பாக இருக்கிறது. இதற்கு காரணம், நம்மை நாம் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகக் கருதுவதே!
༺🌷༻
ஆனால் புத்தர் என்ற மெய்ஞானி, நாம் ஒவ்வொரு கணமும் புதிதாகப் பிறக்கிறோம் என்கிறார். நமது உடலில் அணுக்கள் கணந்தோறும் அழிந்து மீண்டும் புதிதாய் உருவாவதை மட்டுமல்ல, ஒவ்வொரு நொடியும் மாறுதலுக்குட்படும் மனதையும் சேர்த்தே அவர் நிலையாமையை இருத்தலின் குறியீடுகளில் முதலாவதாக வைக்கிறார். நேற்றைய என்னுடைய அனுபவங்களோ, கருத்துகளோ, எண்ணங்களோ அது நேற்றைய என்னுடையவை! இன்றிருப்பது புதிதாய் தோன்றிய ஒருவர் என்ற உண்மையை புரிந்து கொள்ளும் போது, மகிழ்ச்சி நிகழ்காலத்திற்குரியதாக மாறுகிறது. "நான் என்பது நேற்றின் தொடர்ச்சியல்ல, இன்றின் புதிய உருவாக்கம்" என்ற மெய்யியலை தெளிவாக விளக்குகிறார் புத்தர்.
༺🌷༻
புத்தர் உரைக்கும் இருத்தலுக்கான குறியீடுகளில் இரண்டவதாக வரும் "அனத்தா" (anatta) என்பதை "ஆன்மா இல்லாமை" என்று நாம் மொழி பெயர்க்கிறோம், புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் "அனத்தா" என்ற சொல்லுக்கான அர்த்தம் "நான்" (I, Me, Myself) என்ற ஒன்றே இல்லை என்பதுதான். நொடிப்பொழுதும் இறக்கி வைக்காமல் நாம் தூக்கி சுமக்கும் "நான்" என்ற சுயம் ஒரு மேலோட்டமான, வழக்கமான உண்மை (conventional reality) மட்டுமே! ஆனால் புத்தரின் உயர் போதனைகளில் விளக்கப்படும் இறுதி உண்மைக் கோட்பாட்டின்படி (ultimate reality) "நான்" என்பது ஒரு மாயை; எல்லாம் அலையாகவும் ஆற்றலாகவும் மாறிக் கொண்டே இருக்கும் மாயை; நிலையற்ற பல #மகரயாழ் கூட்டுப் பொருள்களின் தொகுதி ஆகும்! ஆக, பொருளியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் "நான்" "என்" "எனது" என நாம் பற்றிக் கொண்டுள்ள எதுவுமே உண்மையல்ல. இக்கணத்திலேயே "நான்" என உரிமை கொண்டாட எதுவுமில்லாத போது, நாம் கடந்த காலத்தில் உள்ளதை "நான்" "எனது" என எப்படி பற்றிக் கொள்ள முடியும்?
༺🌷༻
கடந்த காலத்திலிருந்து நகர்ந்து வர முடியாத நிலையை அறிவாற்றல் நகர்வின்மை (cognitive immobility) என உளவியல் வரையறுக்கிறது. இது ஒருவகை நோய்மை. இந்த நிலைக்கு ஆட்பட்ட மனம், கடந்த கால நிகழ்வுகளையும் அனுபவங்களையும் காரணமாக்கி அதிலேயே உறைந்திருக்கும். நிகழ்காலம் எவ்வளவு மகிழ்ச்சியானதாக, நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும் அதை ஏற்க மனம் வராது. இதை (கடந்த காலத்தில்) சிறைப்பட்ட மனம் (entrapped mind) என்றும் உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உறைந்த மனநிலைதான் மாற்றத்தின் முழுமுதல் எதிரி. மாற்றம் நல்லதோ தீயதோ இரண்டுமே அதற்கு ஒன்றுதான். அப்படியானவர்களால், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்க முடியாது; பண்பாட்டு, சமூக மாற்றத்தை ஏற்க முடியாது; அறிவியல் மாற்றங்களையும் ஏற்க முடியாது. மாற்றத்தை மறுதலிப்பதால் அவர்கள் மானுட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எதிரி ஆகின்றனர். இப்பிடிவாதம் கடந்த கால ஏக்கம் சார்ந்த மன அழுத்தத்திற்கும் (nostalgic depression) அவர்களை ஆட்படுத்துகிறது. எதுவும் மாறக் கூடாது என்ற பதட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடவும் தலைபடுகின்றனர்.
༺🌷༻
ஹெராக்ளிட்டஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானியின் இந்த உவமை, மாற்றம் எவ்வளவு துரிதமானது என்பதை ஆழமாக உணர்த்தக் கூடியது: "எந்த மனிதரும் ஒரே நதியில் இரண்டு முறை கால் வைப்பதில்லை. ஏனென்றால் அந்த நதி அதே நதியல்ல, அந்த மனிதரும் அதே மனிதரல்ல." இரண்டாவது அடியை வைப்பதற்குள், முதல் அடியே கடந்த காலமாகிவிடுகிறது எனும் போது நாம் பல நாட்களுக்கு முன்னர், ஆண்டுகளுக்கு முன்னர், பற்பல யுகங்களுக்கு முன்னர் நடந்ததையெல்லாம் நம்முடையது என தூக்கி சுமப்பது தகுமா?
✒️ ~ ஜெயராணி
இதழ் ஆசிரியர்
📚 "போதி முரசு" மாத இதழ்,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(22.07.2026)
༺🌷༻
🌸🌼🌿இந்த உலகத்தில் விலை "மதிப்புள்ளது" எது?
༺🌷༻
ஆன்மிக சாதனையில் பல ஆண்டுகள் பயிற்சி புரிந்தவரும் பிரம்மச்சாரியுமான பக்தன் ஒருவன் ஞானோபதேசம் பெறும் பொருட்டு ஞானி ஒருவரைச் சந்தித்தான்.
ஞானியோ, பாதம் முதல் தலைவரை அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "நான் கேட்கும் வினாக்களுக்கு கவன மாகப் பதில் சொல்!" என்றார். பக்தன் சரி என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினான்.
ஞானி கேட்டார். "மனிதனுடைய உடல் உறுப்புகளில் உயர்ந்தது எது?"
"நாக்கு" பக்தன் பதில்.
"மோசமானது எது?" ஞானி.
"நாக்கு” நறுக்கென்று பதில் சொன்னான்.
"என்ன! இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலா? எப்படி?" புருவத்தை உயர்த்தினார் ஞானி.
༺🌷༻
"ஆம் சுவாமி! இரண்டு வினாக்களுக்கும் உரிய பதில் நாக்குதான். உள்ளத்தில் அன்பும் அருளும் சுரக்கும்போது, நாக்கு இனிமையாகப் பேசுகிறது. அதே உள்ளத்தில் ஆவேசமும் சினமும் எழும்போது நாக்கு பிறர் மனம் நோகும் படி பேசுகிறது. ஆகவே இனிமையாகப் பேசி உயர்ந்த உறுப் பாகவும், பிறர் நோகப் பேசி மோசமான உறுப்பாகவும் திகழ் வதும் நாக்கு ஒன்றே!"
༺🌷༻
பலே! என்று பாராட்டிவிட்டு, இந்த உலகத்தில் விலை "மதிப்புள்ளது" எது? விலை மதிப்பற்றது எது? இரண்டுக்கும் ஒரே சொல்லில் பதில் தந்து விளக்க வேண்டும்!" என்றார் ஞானி.
சற்றும் எதிர்பாராத கேள்வியாயிருந்த போதிலும் பக்தன் தளராது பதில் கூறினான்.
༺🌷༻
"சுவாமி! உலகிலேயே விலை மதிப்புடையது உபதேசம்! விலை மதிப்பற்றதும் உபதேசம்தான். எப்படியென்றால், ஒருவன் வேண்டும்போது உபதேசம் கிடைத்தால் அதனால் அவனுக்கு மனநிம்மதி கிடைக்கிறது. அப்போது அது விலை மதிப்புடைய உயர்ந்த உபதேசமாகிறது. ஒருவன் வேண்டாதபோது யாராவது அவனுக்கு உபதேசம் செய்தால், அவன் உள்ளம் அதை ஏற்காமல், உதாசீனப்படுத்தும். அப்போது விலைமதிப்பற்ற வேண்டாத உபதேசமாகிறது."
பக்தனின் பதில் ஞானிக்கு திருப்தியைத் தந்தது! "பக்தனே, நீ ஆன்மிக சாதனையில் நிறைவு பெற்று விட்டாய்! இனி உனக்கு உபதேசம் தேவையில்லை!" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
✒️ ~ சாம்பசிவம் பிள்ளை,
இளங்குடிப்பட்டி, புதுக்கோட்டை,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(21.07.2026)
༺🌷༻
🌸🌼🌿"மனிதனின் மனோபலம்"
༺🌷༻
ஒரு திருடன் அடிக்கடி தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைத் திருடி... அந்தக் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள சந்தையில் சென்று விற்றுவருவது வழக்கம். ஒரு நாள் இரவு அவன் வழக்கம்போல் தேங்காய்களைத் திருட ஒரு தோட்டத்திற்குச் சென்றான்.
அங்கே ஒரு மரத்தில் மட்டும் நிறைய தேங்காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கின. மற்ற எல்லா மரத்திலும் அறுவடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மரத்தின் கீழே நிறைய முள் கற்றைகளைக் கட்டி யாரும் எளிதில் ஏறாத வண்ணம் பாதுகாத்து இருந்தனர். திருடன் அந்த முள் கற்றை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு பின் மேலேறி எல்லாத் தேங்காய்களையும் பறித்துக்கொண்டு சந்தைக்குச் சென்றான். ஆனால் அவன் தேங்காய் பறிக்கும்போது "சுருக், சுருக்" என்று கடிக்க.. அவன் ஏதோ குளவிதான் கடிக்கிறது என்று நினைத்து தேங்காய்களைப் பறித்தான். இது நடந்தது இரவு 12.00 மணி.
༺🌷༻
அடுத்த நாள் காலையில். அந்தத் தோட்டக்காரர் சுமார் பத்து மணியளவில் தோட்டத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் அதிர்ச்சி
அதாவது யாருமே ஏறப் பயப்படும் அந்தத் தென்னை மரத்தில், ஒரு தேங்காயைக் கூடக்காணோமே என அவருக்கு அளவு கடந்த ஆச்சரியம். அந்தத் தென்னை மரத்தில் ஒரு கருநாகப்பாம்பு கடந்த ஆறுமாதங்களாகவே தங்கியிருந்தது. அதற்குப் பயந்துகொண்டுதான் யாரும் ஏறாமல் இருந்தார்கள்.
༺🌷༻
அது தெரியாமல் யாரும் ஏறிவிட்டால் பாம்பு கடித்து இறந்துவிடுவார்களே என்றுதானே முள்ளைக்கட்டி வைத்தேன். இது தெரியாமல் எவனோ ஏறி, தேங்காய் பறித்துச் சென்றுள்ளான். அவன் என்ன ஆனானோ தெரியவில்லை, அவனைக் கண்டுபிடிக்கணுமே என்று யோசித்தார். இவ்வளவு தேங்காய் திருடியவன் எப்படியும் பக்கத்துச் சந்தைக்குத்தான் போய் விற்றுக்கொண்டிருப்பான். அங்குப் போய்ப் பார்க்கலாம் என்று சந்தைக்குச் சென்றார்.
அங்குத் திருடன் இவருடைய தோப்புத் தேங்காய்களை ஒவ்வொன்றாக விற்றுக்கொண்டிருந்தான். தோட்டக்காரர், அவனருகே சென்றார். சந்தேகமே இல்லை. எல்லாம் அவருடைய தோப்புத் தேங்காய்கள் தான்.
༺🌷༻
"என்னங்க தேங்காய் வேணுமா” அவரைப் பார்த்துக்கேட்டான் அந்தத் திருடன். அது இருக்கட்டும் தம்பி. நேராகவே நான் விசயத்துக்கு வருகிறேன். ஆமா, நேற்று இரவு இந்தத் தேங்காய்களைப் பறித்தாயே, ஏதாவது உன்னைக் கடித்ததுபோல் உணர்ந்தாயா?" என்று கேட்டார்.
“ஏங்க.. நீங்க யாருங்க.?"
"நான்தானப்பா அந்தத் தென்னந் தோப்புக்குச் சொந்தக்காரன்":
༺🌷༻
அதைக் கேட்டதும் திருடன் “என்னடா இது வம்பாப்போச்சு, இவன் ஏன் இங்க வந்து தொலைஞ்சான், நல்லா மாட்டிகிட்டோம்டா” என முணுமுணுத்தவாறே! "ஆமாங்க. தேங்காயைப் பறிச்ச போது ரெண்டுதடவை சுருக்சுருக்குன்னு கடிச்ச மாதிரி இருந்தது. ஆனா என்னான்னு தெரியலிங்க" என்றான்.
ரொம்ப நாளா ஒரு அஞ்சடி மகரயாழ் கருநாகப்பாம்பு மரத்திலேயே இருந்துகொண்டு எல்லோரையும் பயமுறுத்திக்கிட்டு இருந்தது, அதான் கேட்டேன்" என்றார். அதைக் கேட்ட மாத்திரத்தில் வாயில் நுரை கக்கி அந்த இடத்திலேயே பரிதாபமாகச் செத்தான் அந்தத் திருடன்.
༺🌷༻
இந்தக் கதைமூலம் ஒரு மனிதனின் மனபலத்தின் முன் எவ்வளவு கொடிய விஷமும் தனது வேலையை நிறைவேற்ற நிறைய, நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டியுள்ளது என்பதை உணர முடிகிறது. அந்த மனிதனைப் பாம்பு கடித்த போது இரவு 12. அவன் தன்னைப் பாம்புதான் கடித்தது என்று ஊர்ஜிதப் படுத்தும்போது காலை மணி 10.00. ஒரு கருநாகத்தின் விஷம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று உங்களுக்கே தெரியும்.. அது அதிக பட்சம் 1 மணி நேரம்தான் எடுத்துக்கொள்ளும் ஒரு மனித உயிரைக் கொல்ல..
ஆனால் அந்தத் திருடன் மனபலத்தின் முன்னே அந்த விஷமே தோற்றுப்போய்விட்டது. இது எப்படிச் சாத்தியம் என நீங்கள் கேட்கலாம்! ஆனால் இது நடந்துமுடிந்த உண்மைக்கதை.
༺🌷༻
எனவே மனித மனத்திற்கு எல்லையில்லாத பலம் உள்ளது என்பது இதன் மூலம் நன்றாகத் தெரிகிறது அல்லவா.
ஆனால் நாமோ அன்றாட வாழ்வில் உள்ள எந்தச் சிறு தவறைச் செய்தாலும் அதை உடனே திருத்திக் கொள்ளாமல் உடனே ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துத் தனது மனதிற்கு ஒரு பெரிய சமாதானம் சொல்லி, நமது வாழ்வை நடத்துகிறோம்.
✒️ ~ நாமக்கல் ஏ.எஸ்.சந்துரு
📚 "உனக்கு நிகர் நீயே"
📅(வெளியீடு ~ 2006)
©️ தாமரை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை ~ 98,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(20.07.2026)
༺🌷༻
🌸🌼🌿வாழ்க்கை ஓர் இனிய சங்கீதம்.
༺🌷༻
மனித வாழ்க்கை கிடைப்பதற்கு அருமையான பேறு. எக்காரணம் கொண்டும் அதை வீணாக்கி விடக்கூடாது. ஓசையை ஒழுங்குபடுத்தினால் நாதம் பிறப்பதைப்போல வாழ்க்கையை ஒழுங்குபடுத்தினால் இனிய சங்கீதம் வருகிறது. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ரசனையிலிருந்துதான் இன்பம் பிறக்கிறது. நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் ரசனை உணர்வோடு செய்யுங்கள்.
༺🌷༻
உங்களைச் சுற்றிலும் பரவிக் கிடக்கின்ற அழகை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய கண்ணோட்டம் தான் உங்களுடைய வாழ்க்கையினை உருவாக்குகிறது. உங்களுக்கு அமைந்த எல்லைக் கோட்டுக்குள் இனிமையான வாழ்க்கையினை உங்களால் அமைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கை என்பது இனிய சங்கீதம். அந்த இனிய சங்கீதத்தை ரசித்துக் கேட்க நீங்கள் முடிவு செய்து விட்டால், அதன் இனிய ரீங்காரம் வாழ்க்கை பூராவும் உங்களுக்குக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
༺🌷༻
வாழ்க்கை என்பது சூழ்நிலைகளோடும் இணக்கமாக நம்மை இணைத்துக் கொள்கின்ற ஒரு உபாயமே ஆகும். மாறுகின்ற சூழ்நிலைக்கு அனுசரித்துப் போக வேண்டும். அதே சமயம் நாம் அமைத்துக் கொண்டுள்ள வாழ்க்கை வரம்புகளை மாற்றிக் கொள்ளவும் கூடாது. நாம் நினைப்பதைப் போல இது ஒன்றும் பெரிய மகரயாழ்ஸவித்தையல்ல. மனதை சமன நோக்கில் வைத்துக் கொண்டால், அதைத் தேர்வு செய்வது என்பதில் கஷ்டம் இருக்காது.
༺🌷༻
ஒவ்வொருவருக்கென்றும் தனி பாணி உண்டு. அதுபோலவே ஒவ்வொரு வித்வானும் ஏதோ ஒரு ராகத்தை சிறப்பாகப் பாடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். சில ராகங்களை விரும்பிப் பாடுகின்றவர்களும், வேறு சில ராகங்களைத் தொடாமல் விட்டு விடுகின்றவர்களும் உண்டு. அதுபோலத்தான் வாழ்க்கை சங்கீதமும் அமைய முடியும்.
✒️ ~ குளமங்கல செல்வராசன் D.Lit,
📚 "மனப்பூவின் மகரந்தங்கள்"
©️ குளமங்கலம் பதிப்பகம்,
சென்னை ~ 15,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌴🌷🌴✋😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*
*(19.07.2026)*
*༺🌷༻*
*🌸🌼🌿சோதனைகள் மனிதனை எவ்வாறு மாற்றுகிறது...?*
*༺🌷༻*
🌿 நிகழ்வு 1
வியாபாரி ஒருவர் கடலில் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். திடீரென கடலில் ஒரே கொந்தளிப்பு. கப்பல் விபத்துக்குள்ளாகி உடைந்தது.
உடைந்த மரத்துண்டு ஒன்றைப் பிடித்துக்கொண்டு நீந்தி ஒரு தீவுக்கு வந்து சேர்ந்தார். இவர் மட்டும் தனியாக அங்கு வந்து சேர்ந்தார். பயம் அவரை ஆட்கொண்டது.
*༺🌷༻*
கப்பல் உடைந்து கரை ஒதுங்கிய கட்டைகளால் தங்குவதற்கு குடிசை ஒன்றை அமைத்தார். தினமும் கடவுளிடம் பத்திரமாக ஊர்ப்போய் சேர பிரார்த்தனை செய்து வந்தார். பல நாட்களாக அங்கிருந்து வெளியேற வழி ஒன்றும் கிடைக்காமல் திகைத்தார்.
ஒருநாள் அவர் மீன்பிடிக்கச் சென்றபோது அவரது குடிசை தீப்பிடித்து எரிவதைக் கண்டார். ஒடிச்சென்று தீயை அணைக்க முயன்றார், முடியவில்லை. தனக்கென இருந்த ஒரு தங்குமிடமும் இழந்ததை நினைத்து அழுதார்; புலம்பினார். துக்கத்தால் துவண்டார். தனிமை வேறு அவரை வாட்டியது.
*༺🌷༻*
கடவுள் இந்த துக்கத்தையும் ஆனந்தமாக மாற்றினார்.
தூரத்தில் வந்த கப்பல் ஒன்று குடிசை எரியும் நெருப்பைக் கண்டு அந்தத் தீவுக்கு வந்து வியாபாரியை காப்பாற்றியது. அவர் தீவை விட்டு ஊர்போய் சேர வழிவகுத்தது.
ஒரு துன்பம் இன்னொரு நன்மைக்கு காரணமாக இருந்தது.
*༺🌷༻*
🌿 நிகழ்வு 2
ஒரு வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அங்கு ஐந்து உயிர்கள் அடைபட்டு கிடந்தன. பக்கத்து வீட்டுக்காரன் ஓடிச்சென்று எரியும் வீட்டுக்குள் நுழைந்து ஐந்து பேரையும் மீட்டு வந்தான். ஆனால் இவனது கால் ஒன்று தீயில் கருகி வெட்டி எடுக்க வேண்டியதாயிற்று. காலை இழந்ததால்தானே ஐந்து மகரயாழ் உயிர்களை மீட்க முடிந்தது.
*༺🌷༻*
பெரியவர் ஒருவர் கூறினார்: "ஐயோ பாவம்; ஒரு காலை இழந்து விட்டானே!"
இவன் சொன்னான் : "நான் என் காலை இழக்கவில்லை; காலை கொடுத்து உயிரை கொண்டு வந்துள்ளேன்"
இழப்பதை கொடுப்பதாக நினைக்கிறான். துன்பத்தின் மறுபக்கம் மகிழ்ச்சியாகிறது.
*༺🌷༻*
துன்பம் வருவதை யாரும் தவிர்க்க முடியாது. துன்பம் இல்லாமல் யாரும் தப்புவதுமில்லை. துன்பம் வருவது நன்மைக்குத்தான் என்று எண்ணும் மனப்பக்குவம் வரவேண்டும்.
துன்பமில்லாமல் இன்பமில்லை. துன்பத்தின் மறுபக்கம் மகிழ்ச்சி சேர்ந்தே இருக்கிறது. இரண்டையும் சமமாகப் பார்க்கும் மனப்பக்குவம் தேவை. துன்பமும் நிரந்தரமில்லை, மகிழ்ச்சியும் நிரந்தரமில்லை.
துன்பமும் நம் மனதை பாதிக்கவிடக் கூடாது. மகிழ்ச்சியும் நம் மனதை பாதிக்க விடக்கூடாது.
துன்பம் நம்மை தூய்மைப்படுத்த உதவும். துன்பம் இறை அனுபவம் கொடுக்கும்.
*༺🌷༻*
'சோதனைகளே மனிதனை தெய்வமாக்குகிறது' -இது ஒரு கிரேக்கப் பழமொழி.
பெரிய இழப்புகள் மத்தியிலும் சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதற்கு அசத்தலான மனப்பக்குவம் காரணம்.
எல்லாவற்றையும் இழந்தாலும் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறேன் என நினைப்பது இறை அருளால்தான்.
*✒️ ~ டாக்டர். S. ஜெயபாண்டியன்,*
*M.Sc., Ph.D.,*
*பேராசிரியர் (ஓய்வு)*
*நாகர்கோவில்*
*💐நன்றி🙏*
*༺🌷༻மகரயாழ்༺🌷༻*
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(17.07.2026)
༺🌷༻
🌸🌼🌿மக்களைக் காத்த சோழன்!
༺🌷༻
ஒரு மதிய வேளையில் மாமரம் ஒன்றின் கீழ் சோழ நாட்டு மன்னர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவன் மாமரத்தின் மீது தொலைவிலிருந்து கல்லை வீச அது மன்னரின் தலையில் பட்டுவிட்டது. ஓடிச் சென்று அந்தச் சிறுவனை பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள். "மன்னரே, பசிக்குப் பழம் கிடைக்கும் என்று கல்லை வீசினேன். தங்கள் தலையில் பட்டுவிட்டது மன்னியுங்கள்" என்று பாதம் பணிந்து கெஞ்சினான்.
༺🌷༻
மன்னர் அவனுக்குப் பொற்காசுகள் கொடுக்கச் சொன்னார். #மகரயாழ் எல்லோரும் மன்னரை அதிசயமாக நோக்கியபோது பாவம் அவன், அவன் பசிக்கு தன் மீது கல்லை எறியும் மாமரம் பழங்களைக் கொடுக்கின்ற போது, ஆறு அறிவுள்ள நாம் அவனது பசியைப் போக்க வேண்டாமா?" என்று கூறினாராம். மாமரம் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும்போது, மக்களைக் காக்கும் மன்னராகிய நான் என் கடமையைச் செய்ய வேண்டுமல்லவா?" என்று சோழ மன்னர்கள் வாழ்ந்தது ஒரு காலம்.
༺🌷༻
தனது பசிபோக்கும் என்று சிறுவன் மாமரத்தை நம்பியபோது சோழ மன்னன் தெளிவடைந்தான். மக்களைக் காப்பது தன் கடமை என்பதால் பொற்காசினைத் தந்து தன்னைக் காத்துக் கொண்டான்.
✒️ ~ டாக்டர். மெ.ஞானசேகர்,
📚 "எண்ணங்கள் வெற்றிகள்"
📅(வெளியீடு ~ 2019)
©️ Coral Publications,
Chennai~ 09,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(15.07.2026)
༺🌷༻
🌸🌼🌿 "அனைவருமே நல்லவர்களே"
༺🌷༻
ஒரு தமிழ்ப் பேராசிரியர், “நிதானம்” என்ற பதத்தை வாழ்வில் தவறவிடாத மனிதன் என்ற பெருமையைச் சுமந்தவாறே செல்வார். நான் அவரிடம் சென்று "சார் உங்களிடம் ஒரு கேள்வி?" என்றேன்.
"என்ன கேட்கப் போறீங்க?" என்றார். “உங்கள் வகுப்பு மாணவர்கள் ஒழுக்கம் இல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறார்களாமே?"
"அதில் உண்மை எந்த அளவிற்கு என்று தெரியாது, ஆனால் என் மாணவர்கள் நல்ல மாணவர்கள்"
"சரி சார் நம்ம கல்லூரித்தலைவர்(பிரின்ஸ்பால்) எப்படி?"
"அவரு ரொம்ப நல்லவராச்சே!"
"சரி சார். நம்ம கல்லூரி மாணவர் தலைவர்?"
"அவர் ரொம்ப, ரொம்ப நல்லவராச்சே!"
༺🌷༻
இதற்கு மேல் நான். "சார் நான் உங்களிடம் கேட்ட அனைவருமே நல்லவர்களோ, கெட்டவர்களோ எனக்குத் தெரியாது ஆனால் நீங்கள் ரொம்ப நல்லவர் சார்! ஒருவரை அவ்வளவு சீக்கிரம் யாரும் நல்லவர் என்று உடனே கூறிவிடமாட்டார்கள். ஆனால் நீங்களோ கேட்ட அனைவரையும் நல்லவர் என்று சலிக்காமல் கூறுவதைப் பார்த்தால், நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தால், நல்ல எண்ணம் கொண்டவராக இருந்திருந்தால் அனைவரையும் நல்லவர் என்று கூறுவீர்கள்”, என்று மனம் நிறைந்து பாராட்டினேன். இதை ஏன் கூறுகிறேன் என்றால் முன்னே நான் சொன்ன சம்பவத்திற்கும் அவர் நடத்தைக்கும், பின்னர் நான் சொன்ன சம்பவத்திற்கும் இவர் நடந்து கொண்டதற்கும் அடிப்படைக் காரணம் அவரவரின் உள் மனம் தன்னைப்பற்றி எவ்வாறு பதிவுசெய்து வைத்துள்ளதோ அதைப் பொறுத்துதான் சந்திக்கின்ற சூழ்நிலையைக் கூட மாற்றிக்கொள்ளும்.
༺🌷༻
ஒரு சமயம் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளிடத்தில் ஒரு "மனநிலைத் தேர்வு" நடத்தினார். அதாவது தங்களுக்குப் பிடித்த தோழிகளின் பெயர்களை ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுக்கும்படி சொன்னார். மாணவிகளும் அவ்வாறே எழுதிக்கொண்டுவந்து கொடுத்தனர்.
ஆசிரியர் அதை ஒவ்வொன்றாகப் படித்துவிட்டு "காயத்ரி" யார் என்றதும் உடனே ஒரு பெண் எழுந்து" நான்தான் சார்" என்றாள். உடனே உன்னுடைய சீட்டைக் கொடுங்கள் என்று வாங்கி அதைப் படித்துப் பிரமித்து விட்டார். எல்லோருடைய துண்டுச் சீட்டுகளையும் படித்துப் பார்த்துவிட்டேன். அதில் குறைந்தது மூன்று பேர் தங்களுக்குப் பிடித்த தோழிகள் என்று எழுதி இருந்தார்கள். ஆனால் அனைத்திலுமே திரும்பத் திரும்ப, உங்கள் பெயர் வந்து கொண்டிருந்தது.
༺🌷༻
ஆனால் உன்னுடைய சீட்டை வாங்கிப் பார்த்தவுடன் எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி என்றார். உடனே மாணவிகள் அனைவரும் “சார், சார்! காயத்ரி என்னோட பெயரை எழுதி இருக்காளா? என்னோட பெயரை எழுதி இருக்காளா?” என்று ஆவலோடு கேட்டார்கள்.
உடனே ஆசிரியர், "எனக்கு அனைவரும் பிடித்த தோழிகள் என்று காயத்ரி எழுதி இருக்கிறாள்" என்றார். அனைவருமே வியந்துவிட்டார்கள். இதில் ஒரு செய்தியைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அந்த மாணவியின் ஆழ்மனதில் அவள் “நல்ல பெண்" என்ற சான்றிதழ் உறுதியாகவில்லையென்றால் அவளால் எப்படி அனைவருக்கும் பிடித்த தோழியாக இருக்க முடியும். மேலும், அனைத்து மாணவிகளுமே தனக்கு காயத்ரியைப் பிடிக்கும் என்று எழுதி இருக்கிறார்கள் என்றால் அவர்களின் மனநிலையில் அந்தப் பெண்ணைப் பற்றிய சான்றிதழ் எவ்வாறு இருக்கவேண்டும் என நீங்களே யோசித்துப்பாருங்கள்.
༺🌷༻
சரி! இதற்குத் தீர்வுதான் என்ன?
மனப் பயிற்சி எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் மகரயாழ் மனநிலை, அதாவது முதலில் "நான் நல்லவன்", "நான் நல்லவள்”, "என்னைச் சுற்றி உள்ள அனைவரும் நல்லவர்களே" "அனைவருமே நல்லவர்களே”, என்றும் “அனைவரும் நல்லது செய்வதற்காகப் பிறந்து, நல்லது செய்யக் காத்திருக்கிறார்கள்” என்று திரும்பத் திரும்ப, மனதில் கூறிக்கொள்ளுங்கள். மேலும், உங்களின் நேர்மறை மனநிலைப் பற்சிக்கு இது ஒரு நன்மருந்து.
✒️ ~ நாமக்கல் ஏ.எஸ்.சந்துரு
📚 "உனக்கு நிகர் நீயே"
📅(வெளியீடு ~ 2006)
©️ தாமரை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை ~ 98,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(13.07.2026)
༺🌷༻
🌸🌼🌿ராஜ உடை
༺🌷༻
ஒரு நாட்டின் நகரில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பிச்சை எடுப்பதே பிரதான தொழில், பிறந்தது முதல் அவன் வேறு எந்த வேலையும் செய்ததில்லை. அவன் நகரின் மையப்பகுதியில் பிச்சை எடுத்து வந்ததால் சோற்றுக்கு ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. ஒருநாள் நாட்டின் ராஜா நகர்வலம் மேற்கொண்டான். அப்போது மன்னன் அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்தான். அவன் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதைக் கண்ட மன்னன் அவனை அழைத்து, “உன் வாழ்க்கையின் லட்சியம் என்ன?” என்று கேட்டான். அவன் உடனே, ''லட்சியம் என்றால்?" என்று பயந்தபடியே மன்னனை திருப்பிக் கேட்டான். அதற்கு மன்னன், "ஆசைப்பட்டதை அடைவது" என்று பதில் கூறினான்.
༺🌷༻
உடனே அந்தப் பிச்சைக்காரன், ''எனக்கு லட்சியம் எல்லாம் ஒன்றும் இல்லை மன்னா. ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது. நான் பிச்சை எடுக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நான் வெளியே செல்லும்போது என் துணி கிழிந்திருப்பதால் எனக்கு மரியாதையே கிடைப்பதில்லை. அதனால் தாங்கள் தங்களுடைய ஒரு பழைய துணியைத் தந்தால் உதவியாக இருக்கும்" என்று கேட்க, உடனே அந்த மன்னன் பிச்சைக்காரனுக்கு தன் துணி ஒன்றைத் தந்து, "இந்தத் துணி கிழியாது அதனால் நீ தைரியமாக போட்டுக்கொண்டு வெளியே செல்லலாம். உன் கந்தல் துணியைத் தூக்கிப் போட்டுவிடு" என்று கூறிவிட்டு மன்னன் சென்றுவிட்டான். அடுத்தநாள் அந்த ராஜ ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு வெளியே புறப்பட்டான். அப்போது ஒரு கேள்வி அவன் மனதை ஆட்கொண்டது. அரசர் கூறியது தவறாக இருந்து இந்தத் மகரயாழ்ஷதுணியும் கிழிந்து விட்டால் என்ன செய்வது? என்று யோசித்த அவன் ஓரத்தில் கிடந்த அந்த கந்தல் துணியை தன் தோளின் மீது போட்டுக்கொண்டு வெளியே சென்றான். அன்றும் அவனை யாரும் மதிக்கவில்லை.
༺🌷༻
காரணம் அந்த ராஜ உடை மக்களின் கண்களில் படுவதற்கு முன் அவன் தோளில் போட்டிருந்த கந்தல் துணி அவனை அடையாளப் படுத்தி விட்டது.
இதுபோலவே நம் மக்கள் அனைவரும் கந்தல் ஆடையைப் போல கசப்பான நினைவுகளை தன் தோள்மீது சுமந்துகொண்டு நிகழ்காலத்தையும் ரணமாக்கிக் கொள்கிறார்கள்.
༺🌷༻
இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் மோசமான நினைவுகளை கடந்த காலத்தின் பரிசாகப் பெற்றவர்கள். அதில் முதலாமவன் தன் சோகத்தையெல்லாம் தனக்குள்ளேயே வைத்துவிட்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினான். அவனை உலகமே கொண்டாடியது. இரண்டாமவன் தன் கவலையை தன்னுடன் பேசுகிறவர்கள் அனைவரிடத்திலும் தன் சோகக்கதையைக் கூறி திருப்தியடைந்தான். அவன் யாருக்குமே தெரியாதவனாய் வாழ்ந்து மடிந்தான். இதில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பது உங்கள் கைகளில்.
✒️
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(11.07.2026)
༺🌷༻
🌸🌼🌿இக்கணத்தில் வாழ்வது!
༺🌷༻
ஆசிரமம் ஒன்றில் குரு ஒருவர் சாகும் தருவாயில் இருந்தார். சீடர்கள் அவரைச் சூழ்ந்து சோகமாக நின்றனர். அப்போது ஒரு சீடன் வேகமாக ஓடினான். அவனைக் கண்ட வேறு ஒரு சீடன் "எங்கே ஓடுகிறாய்?" என்றான். "குருவுக்கு தருவதற்கு நகரில் சென்று நாவல் பழம் வாங்கப் போகிறேன" என்றான். சக சீடன் 'முட்டாள்! குரு சாகும் தருவாயில் உள்ளார்" என்றான். ஓடிய சீடன் இருக்கட்டும், குருவுக்கு நாவல் பழம் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிவிட்டு ஓடினான்.
༺🌷༻
அரைமணிநேரம் கழித்து பழத்தோடு ஆசிரமம் திரும்பினான். குருவின் வாயில் அந்த நாவல் பழத்தை வைத்தான். சிரித்த முகத்துடன் குரு அதை ருசித்தார். அப்போது ஒரு சீடன் "குருவே இறக்கும் தருவாயில் எங்களுக்கு என்ன செய்தி சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான். குரு அவனைப் பார்த்து "நாவல் பழம் ருசியாக இருக்கிறது" என்று கூறினார்.
༺🌷༻
இப்போது நான் எனது வாயில் நாவல் பழத்தை ருசித்துக் கொண்டுள்ளேன், அதன் சுவை நன்றாக உள்ளது என்ற கருத்தை குரு இங்கு சொன்னார். இதன் அர்த்தம் "இந்த நொடியில் உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை அனுபவி, ருசி" என்பதாகும். இப்படி ஒவ்வொரு நிமிடமும் வாழ்கின்றபோது வாழ்க்கையே ருசியாகிவிடும் என்பது குருவின் போதனை.
༺🌷༻
"தங்க இழைகளாலான கயிற்றில் ஒவ்வொரு இழையும் எப்படி மதிப்புள்ளதோ அதே போல ஒவ்வொரு கணமும் மதிப்புள்ளது"
✒️ ~ டாக்டர். மெ.ஞானசேகர்,
📚 "எண்ணங்கள் வெற்றிகள்"
📅(வெளியீடு ~ 2019)
©️ Coral Publications,
Chennai~ 09,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(10.07.2026)
༺🌷༻
🌸🌼🌿வெறுப்பு விலகட்டும்!
༺🌷༻
நமது வெற்றிப்பயணத்திற்கு அடுத்தவரின் ஒத்துழைப்பும் கட்டாயம் தேவையாகின்றது. மற்றவர்களின் ஒத்துழைப்பில்தான் நம்முடைய வெற்றி உறுதி செய்யப்படுகின்றது.
என்னதான் ஒருவருக்கு ஆற்றலும், அறிவும், திறமையும் இருந்தாலும், அவரே தனித்து நின்று செய்வதை விட, குழுவாக இருந்து செய்வதில் சிறப்பும், வெற்றியும் எளிதாக அமைந்து விட வாய்ப்பு உள்ளது.
༺🌷༻
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடி ஆலோசிக்கும் போது, புதுப்புது கருத்துக்கள் பூக்க வழி கிடைக்கின்றது.
இவைகள் எல்லாம் நல்லனவாய் அமைய வேண்டுமெனில் ஒருவரை ஒருவர் அனுசரித்து ஒத்துப்போக வேண்டியது மிக அவசியமாகின்றது. அப்படி இருக்க, ஒருவரை எதிர்ப்பதால், பகை வளரும். அதனால் பாதிப்பு நமக்குத்தான்.
༺🌷༻
நாம் ஒருவரை வெறுத்து ஒதுக்கும்போது அவர் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆனாவதில்லை ஆனால், நாம் மட்டும்தான் உணர்ச்சி வசப்பட்டு நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.
அது நமக்குத் தேவைதானா?
வெறுத்து ஒதுக்குவதால் விரோதிகள் பட்டியல்தான் நீளும். எதிரிகளால் நமது மகிழ்ச்சிதான் மங்கும்.
நீங்கள் பிறரை வெறுப்பதையும், பிறர் உங்களை வெறுப்பதையும் தவிர்ப்பதற்கு உதவக்கூடிய மனோதத்துவ மகரயாழ் உத்திகளைக் கையாண்டு வெறுப்பினை விரட்டி விடுங்கள்.
༺🌷༻
வெறுப்புக்கு இடம் கொடுக்காதிருந்தால், வெறுப்பு உங்களை எப்படி அண்டும்?
எப்போது வெறுப்பு அகல்கிறதோ அப்போது உள்ளம் தூய்மையாக இருக்கும் நல்ல எண்ணம் நுழையும். நிம்மதி கிட்டும்.
நிம்மதியை இழக்கவைக்கும் வெறுப்பை விலக்கி வைத்தால் வெற்றியின் இலக்குத் தென்படும்.
✒️ ~ குளமங்கல செல்வராசன்,
📚 "நாளை உனதே"
©️ கற்பகம் புத்தகாலயம்,
சென்னை ~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(09.07.2026)
༺🌷༻
🌸🌼🌿அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை...
༺🌷༻
வாழ்வை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் வார்த்தைகள். இவை எப்போது என்ன நிகழும் என்பதை நாம் அத்தனை எளிதாக கணித்திட இயலாது. கடைசி நிமிடத்தில் கூட சில மாற்றங்கள் இருக்கும். நாம் எதிர்பாராத வெற்றிகள் நம்மைச் சேரும். நாம் அடைந்து விட்ட தோல்விகள் சில நேரங்களில் வெற்றிகளை நோக்கி அழைத்துச் செல்லும். நொடிகளில் நிகழும் மாற்றங்கள் சிலரின் வாழ்வையே புரட்டிப் போட்ட கதைகளையும் நாம் படித்ததுண்டு.
*༺🌷༻*
அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை...
என்பது மேலைநாட்டு பழமொழி. எவ்வித தடைகளும் இல்லாமல் பயணிக்கும்போது மனதிலே மகிழ்ச்சி இருக்கலாம். சுவாரசியமாக இருக்குமா ? என்றால் நிச்சயமாக இருக்காது. அடுத்த நிமிடம் என்ன நிகழும் என்ற சுவாரசிய ரகசியத்தை நம்முள்ளே வைத்த காரணத்தினால் தான் நமது வாழ்வு அழகாக நகருகிறது.
*༺🌷༻*
நாளை நமக்கு இதுவெல்லாம் நடக்கும் என்று தெரிந்து விட்டால் அதில் மகரயாழ் துளியளவு கூட சுவாரசியம் இருக்காது. மாறாக ரசனையற்ற ஒரு வாழ்வாக அது அமைந்து விடும். அதுபோலவேதான் நம்மைச் சூழ வரும் பிரச்சினைகளும். தடைகளைத் தாண்டி நாம் பெறும் வெற்றிதான் நமது வாழ்நாள் முழுந்து நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
✒️ ~ நா.சங்கரராமன்,
📚"அகம் செய்ய விரும்பு"
தமிழ்த்துறை பேராசிரியர்,
SSM கல்லூரி,
குமாரபாளையம்,
நாமக்கல்.
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(08.07.2026)
༺🌷༻
🌸🌼🌿வாயிலைத் திறப்போம் - வழி கிடைக்கும்.
༺🌷༻
பென்சில் வேனியா நகரத்தில் ஒரு விசித்திர போட்டி. மூடிய அறைக்குள் யாரொருவர் தொடர்ந்து மூன்று மணி நேரம் கையைத் தட்டுகின்றனரோ அவருக்கு ஒரு அருமையான லெக்ஸாஸ் கார் பரிசு! பரிசின் உயர்வையும் அதற்காக விதிக்கப்பட்ட எளிய போட்டியையும் லேசாக உணர்ந்த பலர் அறைக்குள் சென்று கை கொட்டத் தொடங்கினர். எளிமையான போட்டி என்று நினைத்துச் சென்றவர் தொடர்ந்து கையைத் தட்டுவது எவ்வளவு கடினம் என்று புரிய புரிய ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர்.
༺🌷༻
ஆனால் இறுதியில் ஒருவர் மட்டும் தொடர்ந்து கையைத் தட்டிக் கொண்டே இருந்தார். அவர் முயற்சியில் மகிழ்ந்து போன நகரத் தலைவர் கதவைத் திறந்து பார்த்தார். கடைசி வரை விடா முயற்சியோடு கைதட்டியவர் யார் என்று பார்க்க ஊர்மக்களே அங்கு ஆவலோடு குழுமி இருந்தனர். முயற்சியில் தோற்காத அந்தக் கைத்தட்டல் வீரரைப் பார்க்க அவர்களுக்கு அவ்வளவு ஆசை!
༺🌷༻
வெளியே வந்தவர்களைப் பார்த்தபோது அவர்கள் ஆர்வம் பின்னுக்குப் போய்விட அதிசயம் மேலோங்கிப் போனது.
ஏனென்றால் வந்தவர் இருவர். வலக்கை மட்டும் உள்ள ஒருவர். இடக்கை மட்டும் உள்ள ஒருவர். கைதட்ட ஒரு இடக்கையும் ஒரு வலக்கையும் தேவை. அவை இருவரிடமும் இருந்தன. அவர்கள் போரிலே கைகளை இழந்த போர் வீரர்கள். ஆனால் அவர்களிடம் தேவையான மனவுறுதி இருந்தது. அந்தவுறுதி அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
༺🌷༻
அவர்கள் இருவருக்குமே வெற்றிக் கோட்டையின் வழியைத் திறக்கும் உபாயம் தெரிந்திருந்தது.
வெற்றி வாயில். பொதுவானதுதான். அனேகமாக நுழைவுக் கட்டணம் கூடக் கிடையாது எனலாம். ஆனால் அதைத் திறக்கும் சூட்சுமம் அனைவரும் அறிந்துள்ளனரா என்றால் ஆம் என்று பதில் சொல்ல முடியாது.
நம்மில் பலர் நமக்காக பிறர் வந்து மகரயாழ் வாயிலைத் திறக்கட்டும் என்று காத்திருப்போம்.
பலர் வாயிலுக்கு அந்தப்புறம் உள்ளவர் வந்து வரவேற்கட்டும் என்று காத்திருப்போம். ஏற்கனவே உள்ளே சென்றவர்கள் வந்து அவர்கள் அனுபவத்தைக் கூறட்டும் என்று தாமதிப்போம்.
༺🌷༻
சிலர் வாயில் வரை வந்து, நமக்கு கதவு திறக்க சொல்லிக் கொடுத்த சுட்சுமத்தை மறந்துவிட்டுத் தவிப்போம்.
இவர்களைக் காட்டிலும் மேலும் ஒரு வகையினர் உண்டு. இவர்களை ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருந்தாலும் உலகத் தில் இத்தகைய உணர்வு உள்ளவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
༺🌷༻
அதுதான் வாயிற்படி வரை வருவதுதான் என் வேலை, என்னை யாராவது எதிர்கொண்டு அல்லது பின் தொடர்ந்து வந்து 'ராஜராஜ, ராஜகம்பீர, ராஜமார்த்தாண்ட..இத்யாதி... இத்யாதி' என்று கட்டியம் கூறி அழைத்துச் செல்லவேண்டும். அல்லது வரவேற்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
༺🌷༻
இதுதான் உலகம், கவலையோடு காத்திருப்போர் எதிர் கொண்டு முன் செல்பவர், ஏந்திக் கொள்ள கை விரிப்போர், வெற்றி வாயிலைத் தானே விரைந்து சென்று அடைவோர், முயன்று திறப்போர், முன்னேறுவோர், தலைமை தாங்கு வோர், பின் செல்பவர், பிணக்குற்று ஒதுங்குவோர் வெற்றிப் பாதையைப் பிறர் நெருங்க பாதையைச் செப்பனிட்டுக் கொடுத்தோர் என்று பலர் நிறைந்ததுதான் இந்த உலகம் இதில் நாம் யார் என்பதுதான் கேள்வி?
பயணம் மேற்கொள்ள, தெரியாத இடத்திற்கு வழி விசாரித்துச் செல்ல வேண்டிய நிலையில் இருப்போர், நம்மை உரியநேரத்தில் தயார் செய்து கொண்டு கிளம்பவேண்டும்.
✒️ ~ எஸ்.புனிதவல்லி, எம்.ஏ.,
📚 "வெற்றியே உந்தன் விலை என்ன?"
📅(வெளியீடு ~ 2004)
©️ அநுராகம் பதிப்பகம்,
சென்னை ~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(07.07.2026)
༺🌷༻
🌸🌼🌿முடிந்து போன கல்யாணத்துக்கு மேளம் தட்டக்கூடாது.
༺🌷༻
சுவாமி சின்மயானந்தா அவர்கள் ஒரு முறை மும்பையிலிருந்து டெல்லிக்கு ஆகாய விமானத்தில் பறந்தார். டெல் டெல்லியில் விமானம் தரை இறங்க முடியவில்லை. மீண்டும் விமானம் மும்பைக்குத் திருப்பிவிடப்பட்டது. மும்பைக்குத் திரும்பிய கொஞ்ச நேரத்தில் மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டது.
டெல்லி சேர்ந்தபோது நிருபர் ஒருவர் பயணிகளிடம் அவர்கள் மனநிலை எப்படி இருந்தது என்று பேட்டி கண்டார். ஒவ்வொரு பயணியும் அலுத்துக்கொண்டார். ஆனால், சுவாமி சொன்னார்: "அடுத்து என்ன? ஒரே டிக்கெட்டில் இரண்டு முறை பறந்தேனே! அடுத்து என்ன என்றால் நான் வேதனைப்படுவதால் டெல்லி போய்ச் சேர்ந்துவிடமாட்டேன். மாறாக இந்த நேரத்தைச் சந்தோஷமா ஏத்துக்குவோம் என்று சொல்லிக்கொண்டேன். அடுத்து என்ன என்பதை நான்தான் தீர்மானிக்கிறேன்." நிருபர் அசந்துவிட்டார்.
༺🌷༻
வாழ்க்கை அழகானது; அருமையானது. இரசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். அடுத்து என்ன என்று ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து ஆயிரம் விந்தைகள் சாதிக்கவேண்டும். அடுத்து என்ன என்று திட்டமிட்டுச் செயல்படும் நிறுவனங்கள் இன்று உலக வர்த்தகச் சந்தையில் கொடி கட்டிப் பறக்கின்றன. அடுத்து என்ன என்று நேரத்தை நெறிப்படுத்திப் படிக்கும் மாணவச் செல்வங்கள் வெற்றியின் சிகரத்தைப் பிடித்துவிடுகிறார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று கனவு காணும் மனிதர்கள் நிச்சயம் அவற்றை நனவாக்குவார்கள்.
༺🌷༻
வெற்றிக் கொடி நம் கையில். அடுத்து என்ன என்று ஆக்கப்பூர்வமாகச் செயற்படும்போது, புத்தம் புதுக் கருத்துகள், செயற்பாடுகள் தாமே வந்து நடனமாடும்! அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றீர்களா? புறப்படுங்கள் இந்த நாளை வெற்றி நாளாக மாற்றுங்கள்!
🌿"முடிந்து போன கல்யாணத்துக்கு மேளம் தட்டக்கூடாது. அடுத்து என்ன இருக்கிறது என்று ஒரு வினாடி யோசித்தால் போதும். உலகம் விரிந்திருப்பதைக் காணலாம்!''
✒️ ~ தேமு
(பேச்சாளர், கட்டுரையாளர்; சமுதாய முற்போக்குச் சிந்தனையாளர்: இயற்பெயர் அருள்தந்தை மு. தேவதாஸ். சே. ச: புனித அந்தோனியார் மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர்.)
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(06.07.2026)
༺🌷༻
🌸🌼🌿நதியாக இருங்கள்.
༺🌷༻
மனம் மாறுகிறது.
மனிதர்கள் மாறுகிறார்கள்.
சூழ்நிலைகள் மாறுகின்றன.
மாற்றம் தவிர்க்க முடியாதது என்பது உலக உண்மை. ஆனால், சில விஷயங்கள் விதிவிலக்கானவை. கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது. இதனைப் புரிந்து கொண்டு விட்டால் கவலையும் வருத்தமும், கண்ணீரும் பெருமூச்சும் நம் வாழ்வில் கணிசமாய்க் குறைந்து விடும்.
༺🌷༻
பற்பசையை டியூபில் இருந்து பிதுக்கி எடுக்கலாம். அதை மீண்டும் டியூபிற்குள் செலுத்த முடியுமா?
பசுவின் மடியில் இருந்து கறந்த பாலை மீண்டும் மடிபுகச் செய்ய முடியுமா?
எத்தனை முறை வளைத்தாலும், முறுக்கினாலும் கன்றின் வாலை ஒழுங்கு செய்ய முடியுமா?
༺🌷༻
கடந்த காலத்தின் விரும்பத்தகாதவற்றை விட்டு வந்தால்தான் நிகழ்காலம் நிம்மதியாக இருக்கும். நிகழ்கால நிம்மதியே எதிர்கால மகிழ்ச்சியை உறுதி செய்கிறது.
நதி பின்னோக்கி ஓடுவதில்லை.
நாம் நதியாக இருக்க வேண்டும்.
✒️ ~ சி.எஸ்.தேவநாத்
📚 "இந்த மனம் ஒரு நந்தவனம்"
©️ கவிதா பப்ளிகேஷன்,
சென்னை ~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷
எல்லாம் இன்பமயம்
🌷🌴மகரயாழ்🌴🌷
(04.07.2026)
༺🌷༻
🌸🌼🌿பிரபஞ்சம் முழுக்க நமக்கு குரு கிடைத்துக் கொண்டே இருப்பார்.
༺🌷༻
இந்திய தாந்திரீக மரபுகளில் வழிபாட்டுக்குரியவர் தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் ஸ்வரூபமான தத்தாத்ரேயரை 'குருக்களுக்கெல்லாம் குரு என்று சொல்வார்கள். 'யது' என்ற அரசன் தனக்கான குருநாதரைத் தேடி காட்டுக்குள் அலைந்தபோது தத்தாத் ரேயரைக் கண்டு,"எனக்கு நீங்கள் குருவாக முடியுமா?" எனக் கேட்டான். 'வாழ்க்கையே எல்லோருக்கும் குரு' என்றார். தத்தாத்ரேயர். 'நம்மைச் சுற்றியுள்ள எதுதான் நமக்கு பாடம் சொல்லித் தருவதில்லை?' என்று கேட்ட தத்தாத்ரேயர் தன்னுடைய 24 ஆசிரியர்களை யதுவுக்கு அறிமுகம் செய்தார்.
எவர் தனக்குச் செய்யும் இழிவையும் பொருட்படுத்தாது யாவற்றையும் தாங்கும் பூமி, எல்லா மாசுகளையும் அழித்து எப்போதும் சுத்தமாயிருக்கும் நெருப்பு, எந்த வாசனையையும் எடுத்துச் சென்று சேர்த்தாலும் அந்த வாசனையை தன்னுள் ஏற்றிக்கொள்ளாத காற்று, எல்லையிருப்பது போல் தோன்றி, எல்லை இல்லாது விரியும் வானம், அனைத்து உயிர்களையும் மலரச் செய்யும் நீர், பார்வைக்கு வளர்வதும் தேய்வதுமாய்த் தோன்றினாலும் வளராமலும் தேயாமலும் இருக்கும் நிலவு. எல்லா ஆத்மாக்களிலும் உறையும் ஒரே உயிர்போல, எல்லா இடங்களிலும் ஒன்றாக ஒளிரும் சூரியன், தன் உணவுக்காக தேனை எடுக்கும்போதே அந்தத் தேன் தரும் மலர்களின் சந்ததியை பெருக்கி உதவி செய்யும் தேன் என்று விரியும் ஆசிரியர் பட்டியல் மிக வசீகரமானது.
༺🌷༻
"ஆச்சார்ய தேவோ பவ'" என்று கற்பிப்பவர்களுக்கு தெய்வத்துக்கு சமமான இடம் தந்த கலாசாரம் நம்முடையது. பாடத்தை மகனிடமிருந்தும் கேட்கலாம் என்று சிவனே, சற்று தலைசாய்த்து,வாய்பொத்தி முருகனிடம் பாடம் கேட்ட நம் பண்பாட்டின் உயர்கூறு, வேறு எந்த தேசத்திலும் காண முடியாதது. உண்மையில் நம் பிள்ளைகள்தான் நமது பெரும் ஆசிரியர்கள். நான் என் பெண்ணிடமிருந்து தினமும் கற்கிறேன். சிரிப்பின் பரிசுத்தத்தையும் கண்ணீரின் பவித்திரத்தையும் அவளிடமே தரிசித்து கற்கிறேன்.
༺🌷༻
நாய்களுடனும் மனைவிகளுடனும் எதிரே வந்த புலையனை "விலகு விலகு" என்றாராம் ஆதிசங்கரர். "எது விலக வேண்டும்? ஆன்மாவா? உடலா?" என்று திருப்பிக் கேட்டானாம் அவன். எல்லா உயிரிலும் ஒளிர்வது ஒரே மகரமாழ் ஆத்மாதான் என்ற ஞானத்தின் தரிசனம் ஆதிசங்கரருக்கு அங்கே கிடைத்தது. பாடம் யாரிட மும் கேட்கலாம் என்பதுதான் பாரதம் போற்றும் ஞான மரபு.
༺🌷༻
சுற்றி உள்ள எதுவும் நமக்கு குருதான். வாழ்வின் ரகசியத்தை, தோல்வியை ஜெயிக்கும் வலிமையை, வெற்றியை ஏற்கும் பக்குவத்தை, வலி தாங்கும் ரகசியத்தை, நேசிப்பின் நெகிழ்வை. யார் யாரோ நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். முழுதும் நிரம்பி இருக்கும் தேநீர் கோப்பையில் புதுசாய் தேநீர் ஊற்ற முடியுமோ? அதுபோல் நாம் நம் அபிப்ராயங்களால் நிரம்பியிருந்தால் எந்தக் கருத்தும் உள்ளே போக முடியாது. கண், கழுத்து, மனசு எல்லாம் கொஞ்சம் காலியாக இருந்தால் பிரபஞ்சம் முழுக்க நமக்கு குரு கிடைத்துக் கொண்டே இருப்பார்.
✒️ ~ திருமதி. பாரதிபாஸ்கர்,
(பட்டிமன்ற பேச்சாளர்)
📚 "சிறகை விரி, பற"
©️ கவிதா பப்ளிகேஷன்,
சென்னை ~ 17,
💐நன்றி🙏
༺🌷மகரயாழ்🌷༻
