cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஆட்சித்தமிழில் சேருங்கள்; ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Show more
Advertising posts
95 556Subscribers
-1124 hours
-3067 days
-1 66330 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

ஏப்ரல் - 24 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்! 👉அடித்தட்டு மக்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24 நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 73-வது திருத்தத்தைக் கொண்டாடும் வகையில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதியை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக (NPRD) கொண்டாடுகிறது. 👉முன்னாள் பிரதமர் ராஜிவ் -1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வந்தார். 👉பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. 👉அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 👉மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. 👉பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். 👉இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.
Show all...
குரூப்-2A முதன்மைத் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...
Show all...
ஏப்ரல் - 22 உலக பூமி தினம்! 👉 பூமியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 👉இயற்கை வளம், சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். 👉1970-ல் 150 ஆண்டுகால தொழிற்சாலை கழிவால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்ககோரி சில நாடுகளில் லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். 👉இதுவே பூமி தினமாக உருவெடுத்தது. 👉முதல் உலக பூமி தினம் அமெரிக்காவில் 1970, ஏப்.22ல் கடைபிடிக்கப்பட்டது. 👉1990-ம் ஆண்டில், ஐ.நா சபையால் 'புவி தினம்' அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 👉இந்த நாளில் பூமியின் இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமல் காக்கும் நோக்கில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
Show all...
ஏப்ரல் - 21 தேசிய குடிமைப் பணிகள் தினம்! 👉நாட்டின் வளர்ச்சியில் 'சிவில் சர்வீசஸ் ' எனும் குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 👉1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி டெல்லி 'மெட்கால்பே' இல்லத்தில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், இந்திய குடிமைப் பணி அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) ஆற்றிய உரையை நினைவு கூர்ந்திடும் வகையில் 2006 ஏப்ரல் 21ல் தேசிய குடிமைப் பணிகள் தினம் கொண்டாடப்பட்டது. 👉சர்தார் வல்லபாய் படேல் தான் குடிமைப் பணிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 👉மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 👉நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ்.,(நிர்வாகம்), ஐ.பி.எஸ்.,(காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 21-ம் தேதி தேசிய குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. 👉இன்றைய நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அரசு அதிகாரிகளுக்கு, சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
Show all...