cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஆட்சித்தமிழில் சேருங்கள்; ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Більше
Рекламні дописи
95 031
Підписники
-2324 години
-1067 днів
-27530 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

இன்று குரூப்-1 முதல்நிலை தேர்வு எழுதும் தேர்வர்கள் அனைவருக்கும் ஆட்சித்தமிழ் வாழ்த்துகள்... 💐💐💐
Показати все...
புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகமும் நிறைவேற்றமும்: 2023 ஆகஸ்ட் 11 இல் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்கள், பாஜக எம்பி பிரிஜ் லால் தலைமையிலான 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. திருத்தங்களுடன் இந்தச் சட்டங்களை 2023 டிசம்பர் 12இல் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். டிசம்பர் 21இல் மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லை. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக 140க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சட்டங்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை என உள் துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார். அமலாக்கம்: 👉புதிய சட்டங்களின் அடிப்படையில், ஜூலை 1 முதல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன. 👉மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஹாசிரா காவல் நிலையத்தில், திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் பதிவான வழக்கு - இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு. நள்ளிரவு 12.10க்கு இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 👉இதையடுத்து, சத்தீஸ்கரின் கபீர்தாம் பகுதியில் அடிதடித் தகராறு தொடர்பாக இன்னொரு வழக்கு பதிவானது.
Показати все...
புதிய குற்றவியல் சட்டங்கள் 👉புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுவிட்டன. 👉பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தச் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் நிலையில், இச்சட்டங்களின் பின்னணி குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம். பின்னணி: 👉2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். 👉அதன் நீட்சியாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களை மாற்றிப் புதிய சட்டங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது. 👉 கரோனா பொதுமுடக்கக் காலத்தில், இச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றுவந்தன. அதன்படி 👉இந்தியத் தண்டனைச் சட்டம் 1860 (ஐபிசி [Indian Penal Code]) - பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) என்றும்; 👉இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (சிஆர்பிசி [Code of Criminal Procedure]) – பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும்; 👉இந்திய சாட்சி சட்டம் 1872 (ஐஇஏ[Indian Evidence Act]) – பாரதிய சாட்சிய அதினியம் (பிஎஸ்பி) என்றும் மாற்றப்பட்டிருக்கின்றன. 👉ஐபிசி என்பது குற்றங்கள், அதற்கான வரையறைகள், விளக்கங்கள், விதிவிலக்குகள், குறைந்தபட்ச அல்லது அதிகபட்சத் தண்டனைகள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய தொகுப்பு. 👉சிஆர்பிசி என்பது ஒரு குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் - குற்றம் இழைத்தவர்கள் என இரண்டு தரப்பினரையும் காவல் துறை எப்படி அணுகுவது, வழக்கை நீதிமன்றம் வரை எப்படிக் கொண்டுசெல்வது என்பது தொடர்பானது. 👉 ஐஇஏ ஒரு குற்ற வழக்கின் சாட்சியங்களைக் கையாள்வது தொடர்பானது. 👉இந்த மூன்று சட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள்தான் தற்போது அமலுக்கு வந்திருக்கின்றன.
Показати все...
ஜூலை -1: தேசிய மருத்துவர்கள் தினம்! (பி.சி.ராய் பிறந்த தினம்) 👉 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 👉மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2- வது முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) பிறந்த தினத்தைத்தான் டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடுகிறார்கள். 👉1882-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார் ராய். 1962-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தனது 80-வது வயதில் அவர் மறைந்தார். 👉கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். 👉அவரது அளப்பரிய சேவை கருதி இந்திய அரசு அவருக்கு 1961-ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது. 👉முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்தார். இவரது பிறந்த நாளான ஜூலை 1-ம் தேதியிலேயே இவர் மரணம் அடைந்தார். 👉அவரின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 👉இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு கடந்த 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது. 👉உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒருவர் உண்டு என்றால் அவர்கள் டாக்டர்தான். 👉 டாக்டர்களைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) கொண்டாடப்படுகிறது.
Показати все...
Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.