ru
Feedback

Не попадитесь на канал ботавода! Telemetrio находит и помечает такие каналы 👉 Хотите видеть метку — оформите подписку

BBC News Tamil

BBC News Tamil

Открыть в Telegram

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil

Больше
5 018
Подписчики
-624 часа
-367 дней
-13830 дней
Архив постов
இசையமைப்பாளர் தேவா காலமானார் - 400க்கும் மேலான பாடல்களை உருவாக்கிய 'தேனிசைத் தென்றல்' அண்ணாமலை, பாட்ஷா உள்பட சுமார் 400க்கும் மேலான படங்களின் இசையமைப்பாளர் தேவா காலமானார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

பிரிந்து சென்ற மனைவி; ஆத்திரத்தில் இரண்டரை வயது மகனை உயிருடன் எரித்துக் கொன்றதாக தந்தை கைது போதைப் பழக்கம் கொண்டவரான அசோக் ராவல், மனைவி தன்னைப் பிரிந்து சென்ற கோபத்தில் தனது இரண்டரை வயது மகனை எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

ஜோசப் லரோச்: எதேச்சையாக டைட்டானிக் கப்பலில் பயணித்த ஒரே கறுப்பின மனிதர் என்ன ஆனார்? கடந்த 1912இல் டைட்டானிக் கப்பலில் பயணித்து, அதன் பேரழிவில் தற்செயலாக சிக்கிய ஒரே கறுப்பின மனிதரான லரோச்சும் அவரது குடும்பமும் என்ன ஆனது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

நேஹா போராவை விடுவித்த போலீஸ், 'காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே கைது' - டெல்லியில் என்ன நடக்கிறது? அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவை நீண்ட நேரம் காவலில் டுத்து வைத்திருந்த டெல்லி காவல்துறை பின்னர் விடுவித்தது. சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. என்ன நடக்கிறது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

சென்னையில் பழைய வானிலை ரேடார் தரவுகள் நம்பகமானவையா? மாற்றும் ஏற்பாடுகள் என்ன? சென்னையில் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எஸ்-பேண்ட் வானிலை ரேடார் 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதன் தரவுகள் எவ்வளவு நம்பகமானவை என்ற கேள்வி எழுந்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

வெள்ளை சுறாக்களை கொடூரமாக வேட்டையாடும் ஓர்க்கா சகோதரர்கள் ஈரலை மட்டும் உண்பது ஏன்? பெருங்கடலின் உச்ச வேட்டையாடிகளுக்கு இடையேயான கொடூரப் போர் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

சௌதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான மரண தண்டனை மாத்திரமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து சௌதி அரேபியா நோக்கி பயணித்த சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம்பிடித்த ஜனாதிபதி வழக்கறிஞர் உபுல் குமரப்பெரும, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

நீங்கள் பேசுவதை உங்கள் செல்போன் ஒட்டுக் கேட்கிறதா? விளம்பரம் வருவது பற்றிய ஒரு பார்வை அலைபேசிகள் நமது அன்றாட உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனவா? இதற்கான விடை 'ஆம்' என்றும் இருக்கலாம், 'இல்லை' என்றும் இருக்கலாம். உண்மை என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தடுப்புக் காவலில் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே - டெல்லியில் என்ன நடக்கிறது? 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜித் தீப்கேவை டெல்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது. "டெல்லி கன்னோட் பிளேஸ் பகுதியில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் இருப்பதால், உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைக்கிறோம்" என்று அவரிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

சௌதியில் வங்கதேச தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - எதற்காக? 'தஸீர்' என்பது என்ன? குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சித்தி அக்தர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக செளதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

அன்று லாரா, இன்று ஹோப்: வெஸ்ட் இண்டீசின் புதிய நம்பிக்கை நட்சத்திரத்திடம் 'தோனியின் தாக்கம்' டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி, ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து, தற்போது டி20 கிரிக்கெட்டுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஷாய் ஹோப் உருவெடுத்துள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தமிழ்நாட்டில் விருத்த சேதனம் (சுன்னத்) செய்யும் ஒரு இந்து சமூகம் எது தெரியுமா? தென்னிந்தியாவில் ஒரு இந்து தமிழ் சமூகம் பல ஆண்டுகளாகவே ஆண்களுக்கான ‘விருத்த சேதன’ சடங்கைப் பின்பற்றிவருகிறது. அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தருமபுரியில் 13 ஆண்டுகளாகக் கிடைக்காத மகனை ஏஐ உதவியுடன் கண்டுபிடித்து தாயுடன் சேர்த்து வைத்த போலீஸ் தருமபுரியில் 13 ஆண்டுகளாக மகனைப் பிரிந்து வாடிய தாயின் வேதனையை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தீர்த்து வைத்து, போலீசார் மகனை மீட்டு குடும்பத்துடன் சேர்த்தது எப்படி? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

டெல்லி போலீஸ் போராட்டக்காரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இதயத்தில் அடைப்பு ஏற்பட்டாலே கட்டாயம் ஆஞ்சியோபிளாஸ்டி வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம் மாரடைப்பு ஏற்பட்டாலே ஆஞ்சியோபிளாஸ்டி செய்தாக வேண்டுமா? எத்தகைய சூழ்நிலைகளில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யாமலே சிகிச்சைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாகவே தீர்வு காண முடியும்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

முஸ்லிமாக மதம் மாறுவோருக்கு இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களை எப்படி பாதிக்கும்? இஸ்லாமிய மதத்திற்கு ஒருவர் மாறுவதால், அதுவரை அவருடைய சமூக அந்தஸ்தின் அடிப்படையில் கிடைத்து வந்த இடஒதுக்கீடு உரிமை கிடைக்காது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் விளைவுகள் என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

முதலமைச்சர், பிரதமராக 25 ஆண்டுகள் - மோதி தற்போது எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோதி 25 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததைப் பற்றிப் பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவர் எதிர்கொண்டிருக்கும் பத்து முக்கிய சவால்கள். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

ஞானேஷ் குமார் பதவி விலக கோரி சென்னையில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் - தலைவர்கள் பேசியது என்ன? 'எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

ராகுல் காந்தியின் மனு தொடர்பாக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட 'சிறப்பு தீவிர திருத்த' நடவடிக்கையை எதிர்த்து ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

"அச்ச உணர்வு, பதற்றம்"; ரியாத்தில் ஹூத்தி தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்கள் எப்படி உள்ளனர்? சௌதி அரேபியா மீது ஹூத்தி குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் அங்குள்ள தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்று அறிய பிபிசி தமிழ் சிலரிடம் பேசியது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil