ar
Feedback
BBC News Tamil

BBC News Tamil

الذهاب إلى القناة على Telegram

RSS feeds from BBC. பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் @BBCSciencetech @BBCEarthExplorer @BBCSport_news @BBCworldoffl All contents are Copyright of bbc.co.uk/tamil Contact/Feedback: @BBCWorldoffl_Bot

إظهار المزيد
5 315
المشتركون
-524 ساعات
-257 أيام
-1830 أيام
أرشيف المشاركات
"தயார் நிலையில் 12 அணு ஆயுதங்கள்" - அமைதிக் காலத்தில் இந்தியா இவ்வாறு செய்வது ஏன்? ஸ்வீடனின் சர்வதேச சுதந்திர சிந்தனைக் குழுவான 'சிப்ரி' (SIPRI) அதாவது ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா முதன்முறையாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 அணு ஆயுதங்களை முன்னணியில் நிலைநிறுத்தியுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

அமெரிக்க கடற்படை தாக்குதலில் இந்திய மாலுமிகள் பலி - ஓமன் அருகே இந்த கப்பல்கள் குறிவைக்கப்பட்டது ஏன்? ஓமன் கடற்கரைக்கு அப்பால் புதன்கிழமை அன்று அமெரிக்க கடற்படை 'செடெபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மற்றொருவரை இன்னும் காணவில்லை. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

காணொளி: விண்வெளியிலிருந்து படமாக்கப்பட்ட சதர்ன் லைட்ஸ் நிகழ்வின் காட்சி சதர்ன் லைட்ஸ் நிகழ்வுகள் நார்தன் லைட்ஸ் நிகழ்வைப் போலவே பரவலாகக் காணப்படுபவை என்றாலும், அவை அவ்வளவு பிரபலமாக அறியப்படவில்லை 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

மெஸ்ஸி, ரொனால்டோ முதல் 18 வயது யமால் வரை - கால்பந்து உலகக் கோப்பையில் கவனம் ஈர்க்கும் 10 வீரர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் ஜூன் 12 தொடங்குகிறது. சுமார் 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களாகக் கருதப்படும் 10 வீரர்கள் பற்றிய தொகுப்பு இது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இரானில் அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை - ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கியதாக இரான் அறிவிப்பு இரான் மீது அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'ராதிகா முதல் பிரியாமணி வரை' - பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்த நாயகிகள் பாரதிராஜாவால் தமிழ்த்திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நாயகிகள் பலரும், தமிழச்சினிமாவைத் தாண்டி அகில இந்திய அளவில் பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் பிரபலமான நட்சத்திரங்களாக ஜொலித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'நீலோத்தி' முதல் 'அடியே அழகே' வரை - ஜஸ்டின் பிரபாகரனுக்கு தனது இசையில் பிடித்த 10 பாடல்கள் 35க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மதுரையில் பிறந்து, திரைப்படக்கல்லுாரியில் படித்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஜஸ்டின் பிரபாகருக்கு இன்று பிறந்தநாள் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

பாரதிராஜா: சிவாஜிக்கு போட்டியாக வர நினைத்தவர் 'இயக்குநர் இமயம்' ஆனது எப்படி? கிராமத்து திரைப்படங்களுக்கு வேறொரு பரிணாமம் அளித்த பாரதிராஜாவின் மறைவு, அந்த நெடிய பாரம்பரியத்தில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

மத்திய கிழக்கை மாற்ற நினைத்த டிரம்ப், நெதன்யாகு இப்போது எதிர்கொள்ளும் அபாயம் என்ன? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இரானை வீழ்த்தி மத்திய கிழக்கை தங்களுக்கு சாதகமாக மாற்ற நினைத்த திட்டம் தோல்வியடைந்து, ஹோர்மூஸ் நீரிணை முடக்கம் மற்றும் ஹெஸ்பொலா விவகாரங்களால் தற்போது அந்தப் பிராந்தியத்தில் ஒரு நிரந்தர நெருக்கடி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது ஏன்? ஜூன் 18 அன்று நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலங்களவைத் தேர்தலின் அரசியல் கணக்கு, பரிசீலனையின் போது காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாறியுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தொப்புளில் சிலருக்கு அரிப்பு, துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? உடலியல் ரீதியாக தொப்புளுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என குறிப்பிடுகின்றனர் மருத்துவர்கள்.ஆனால், தொப்புளில் சிலருக்கு அரிப்பு மற்றும் துர்நாற்றம் எழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு காரணம் என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

பாரதிராஜாவிடம் சினிமா கற்று திரை, அரசியல் உலகில் தடம் பதித்த 4 பிரபலங்கள் யார்? பாரதிராஜாவை பல்கலைக்கழகம் என்று அவருடைய உதவி இயக்குநர்கள் கொண்டாடியிருக்கின்றனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் வெடித்த வன்முறை - சர்வதேச சமூகத்திற்கு இந்தியா விடுத்த வேண்டுகோள் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில், சட்டமன்றத் தேர்தல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி நடத்திய போராட்டத்தின் போது போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வன்முறை மோதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் பாகிஸ்தானை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

48 ஆண்டுகளுக்கு முன்பே 'சினிமாட்டிக் யூனிவெர்ஸ்'- விருதுகளைப் பெற்ற பாரதிராஜாவின் 6 திரைப்படங்கள் தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, சிறந்த இயக்குநருக்கான மாநில விருதையும் பெற்ற பாரதிராஜா சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார். அவருக்கு வயது 84. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

"நேரடியாக மக்களை பாதிக்கும் 2 பிரச்னைகள்" - முதலமைச்சராக 30 நாட்களில் விஜய் சந்தித்த சவால்கள் என்ன? ஜூன் 10 ஆம் தேதியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 30 நாட்களை எட்டுகிறது. இந்தக் காலகட்டத்தில் முதலமைச்சர் பதவியை ஜோசப் விஜய் எதிர்கொண்டது எப்படி? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

முடி உதிர்வு சிகிச்சையில் 'புதிய நம்பிக்கை' - எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது என்ன? முடி உதிர்வுக்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறிவதை நோக்கி விஞ்ஞானிகள் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய முக்கிய முன்னேற்றங்கள் பெண்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விக்டோரியா டெர்பிஷயர் ஆராய்கிறார் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

காலமானார் 'இயக்குநர் இமயம்' பாரதி ராஜா - பிரபலங்கள் இரங்கல் தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

ஹோர்மூஸ் நீரிணையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர் - இரானை குறிவைத்து அமெரிக்கா பதிலடி ஹோர்மூஸ் நீரிணைக்கு மேலே அமெரிக்க ஹெலிகாப்டரை இரான் சுட்டு வீழ்த்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாகக் குற்றம் சாட்டியதுடன், அதற்குப் பதிலடி கொடுப்பதாகவும் கூறினார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

விஜய் தொடங்கிய 'சிங்கப்பெண்' படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

விஜய் அரசின் முதல் மாதத்தில் இந்த 6 அமைச்சர்கள் அதிக கவனம் பெற்றது ஏன்? கடந்த ஒரு மாதத்தில், தவெக-வின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் சர்ச்சையையும், கவனத்தையும் ஈர்த்துள்ளன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil