fa
Feedback

فریب کلاهبرداران را نخورید! تل‌متریو این کانال‌ها را شناسایی و برچسب‌گذاری می‌کند 👉 برای مشاهده برچسب، اشتراک تهیه کنید

BBC News Tamil

BBC News Tamil

رفتن به کانال در Telegram

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil

نمایش بیشتر
4 927
مشترکین
-324 ساعت
-197 روز
-12130 روز
آرشیو پست ها
'என் இனிய பொன் நிலாவே' – இளையராஜா இசையில் கிதார் கலைஞர் சதானந்தம் வாசித்த 8 மறக்க முடியாத பாடல்கள் இளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களுக்கு தனது கிதார் இசையால் மெருகூட்டியவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார். இளையராஜா இசையில் அவர் கிதார் வாசித்த 8 முக்கியமான பாடல்கள் குறித்து இந்தக் கட்டுரை விவாதிக்கிறது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இளைஞர்கள் புறக்கணிக்க கூடாத பக்கவாத அறிகுறிகள் எவை? 5 முக்கிய அம்சங்கள் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, இளைஞர்களிடையே பக்கவாத அபாயம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் அதன் ஆரம்ப அறிகுறிகள், உடனடி மருத்துவச் சிகிச்சையின் அவசியம் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்க கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வோம் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'நான் பேயுடன் வாழ்கிறேன்' - ஜப்பானில் இந்த வீடுகளில் குடியேற பலரும் விரும்புவது ஏன்? ஜப்பானில் கொலை, தற்கொலை அல்லது தனிமையில் ஒருவர் உயிரிழந்த வீடுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேய் பற்றிய அச்சத்தையும் மீறி, இத்தகைய வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

ராணுவ ரகசியங்களை அறிய 'ஹனி டிராப்' உத்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் பணியில் உள்ள கடற்படை வீரரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஹனி ட்ராப் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மூலம் ராணுவ ரகசியங்களைப் பெறும் உத்திகள், அவற்றின் வரலாறு மற்றும் ராணுவத்தினர் இலக்காகும் காரணங்களை இந்தச் செய்தி விளக்குகிறது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் - 2 நாட்களில் அனைவரும் பிடிபட்டது எப்படி? தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்தது என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

ஸ்பெயின் ரயில் விபத்து: பாதிப்பின் தீவிரத்தைக் காட்டும் 10 படங்கள் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, இரு ரயில்கள் மோதிய விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை. மனதை வருத்தக்கூடிய சில காட்சிகள் இதில் உள்ளன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

நள்ளிரவில் கடத்தப்பட்ட 1 வயது குழந்தை - 35 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் ராணிப்பேட்டை போலீசார் மீட்டது எப்படி? ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை சுமார் 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திராவில் இருந்து காவல்துறை மீட்டுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

புடவையுடன் வெறுங்காலில் ஓடிய கவிதா தேவியின் கனவு நிறைவேறாமல் போனது ஏன்? "அன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது, உயரம் தாண்டுதலின்போது கால் வழுக்கி, என்னுடைய பல மாத கடின உழைப்பு வீணாகிவிடும் என்று நான் நினைக்கவில்லை." 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'யாருடன் இருந்தாய் என கேட்டார்கள்' - சிறுநீர் பாதை தொற்று குறித்த தவறான புரிதலால் அவதூறுகளை சந்திக்கும் பெண்கள் நாள்பட்ட சிறுநீர்ப் பாதைத் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், அது தொடர்பான தங்களது அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், சிறுநீர்ப் பாதைத் தொற்று குறித்து சமூகத்தில் நிலவும் அவப்பார்வையை உடைக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

அர்னாப் புயல் கரையை கடந்தது - தமிழ்நாட்டில் இனி மழை நிலவரம் என்ன? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயல் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'ராமாயணா' படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்ததற்கு விமர்சனங்கள் எழுவது ஏன்? சாய் பல்லவியை சீதையாக நடிக்க வைத்தது, இப்படம் தொடர்பான விவாதப் புள்ளிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சாய் பல்லவியை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததை பலரும் விமர்சித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து - குறைந்தது 10 பேர் உயிரிழப்பு ஸ்பெயினில் மாட்ரிட் நகருக்குத் தெற்கே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

திருப்பூர்: ஆகாயத் தாமரையால் அழியவிருந்த பறவைகள் சரணாலயம் மீட்கப்பட்டது எப்படி? பிபிசி கள ஆய்வு திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஆகாயத்தாமரைகள் 70 சதவீதத்துக்கும் மேலான நீர்ப்பரப்பை ஆக்கிரமித்ததால் பறவைகளின் வருகை குறைந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் மூலம் குளம் மீட்கப்பட்டு வருகிறது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'தினமும் சிங்கம் உலவும்' கிராமத்தில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? குஜராத்தின் கிர் வனப்பகுதி அருகேயுள்ள வளதார் கிராமத்தில் சிங்கத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கங்கள், சிறுத்தைகளின் நடமாட்டத்தால் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் 17 பேரில் மேலும் இருவரைப் பிடித்த போலீசார் தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பியோடிய தப்பிச் சென்ற மேலும் இரண்டு கைதிகளை போலீசார் பிடித்துள்ளனர். சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், நேற்று வரை 13 பேர் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறையினர் மேலும் இருவரைப் பிடித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்? இஸ்ரேல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளின்படி எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காமல் போனால், அரசாங்கம் எப்படி அமைக்கப்படும்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'ஆண் ஓவியர்களைவிட துணிச்சல் மிக்க' நிர்வாண ஓவியங்களை வரைந்த முதல் பெண் ஓவியர் மறுமலர்ச்சிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த ஓவியரான லாவினியா ஃபோண்டானா, நிர்வாணப் பெண் உருவத்தை வரைந்த முதல் தொழில்முறை பெண் ஓவியர். இவரது துணிச்சலும் கலைத் திறமையும் காலம் கடந்து பாராட்டப்படுவது ஏன்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

உணவுப் பழக்கம் ஒருவரின் கவனிக்கும் திறனை எப்படி பாதிக்கும்? மருத்துவர்கள் விளக்கம் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொடர்பான கவலைகள், உணவுப் பழக்கத்தை விவாதப் பொருளாக மாற்றியுள்ளன. உண்மையில் ஒருவருடைய உணவுப் பழக்கம் அவரது கவனிக்கும் திறனில் தாக்கம் செலுத்துமா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

'73 வயதில் கார் ஓட்டும் பஞ்சாப் மூதாட்டி' - வைரல் ஆவதன் பின்னணி இவர் கார் மற்றும் இதர வாகனங்களை ஓட்டும் காணொளிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தேனி சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு எத்தகையது? தவறு நடந்தது எங்கே? தேனியில் சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம், சிறைத்துறை பாதுகாப்பு, அதன் உள்கட்டமைப்பு குறித்த விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது? ஒரு சிறையின் பாதுகாப்பு அமைப்பு எத்தகையதாக இருக்கும்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil