ru
Feedback
நமது மருத்துவர்

நமது மருத்துவர்

Открыть в Telegram

மக்களின் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து மருத்துவச் செய்திகளும் MBBS ,M.D, BSMS, M.D(S)& BDS மருத்துவர்களால் கீழ்க்கண்ட நமது மருத்துவர் எனும் நமது டெலகிராம் சேனலில் இடம் பெறும். தினந்தோறும் ஓரிரு முக்கிய செய்திகள் மட்டுமே இடம்பெறும்.

Больше
1 079
Подписчики
-124 часа
-27 дней
+1030 дней

Загрузка данных...

Облако тегов
Нет данных
Возникли проблемы? Пожалуйста, обновите страницу или обратитесь к нашему support-менеджеру .
Входящие и исходящие упоминания
---
---
---
---
---
---
Привлечение подписчиков
сент. '26
сентябрь '26
+21
в 0 каналах
август '26
+33
в 0 каналах
Get PRO
июль '26
+37
в 0 каналах
Get PRO
июнь '26
+30
в 0 каналах
Get PRO
май '26
+20
в 0 каналах
Get PRO
апрель '26
+26
в 0 каналах
Get PRO
март '26
+22
в 0 каналах
Get PRO
февраль '26
+20
в 0 каналах
Get PRO
январь '26
+25
в 0 каналах
Get PRO
декабрь '25
+21
в 0 каналах
Get PRO
ноябрь '25
+11
в 0 каналах
Get PRO
октябрь '25
+26
в 0 каналах
Get PRO
сентябрь '25
+14
в 0 каналах
Get PRO
август '25
+16
в 0 каналах
Get PRO
июль '25
+22
в 0 каналах
Get PRO
июнь '25
+19
в 0 каналах
Get PRO
май '25
+26
в 0 каналах
Get PRO
апрель '25
+51
в 0 каналах
Get PRO
март '25
+22
в 0 каналах
Get PRO
февраль '25
+22
в 0 каналах
Get PRO
январь '25
+76
в 0 каналах
Get PRO
декабрь '24
+83
в 0 каналах
Get PRO
ноябрь '24
+70
в 0 каналах
Get PRO
октябрь '24
+80
в 0 каналах
Get PRO
сентябрь '24
+63
в 0 каналах
Get PRO
август '24
+131
в 0 каналах
Get PRO
июль '24
+13
в 0 каналах
Get PRO
июнь '24
+18
в 0 каналах
Get PRO
май '24
+12
в 0 каналах
Get PRO
апрель '24
+11
в 0 каналах
Get PRO
март '24
+41
в 0 каналах
Get PRO
февраль '24
+18
в 0 каналах
Get PRO
январь '24
+20
в 0 каналах
Get PRO
декабрь '23
+484
в 0 каналах
Дата
Привлечение подписчиков
Упоминания
Каналы
28 сентября0
27 сентября+1
26 сентября+1
25 сентября0
24 сентября+1
23 сентября+2
22 сентября0
21 сентября+1
20 сентября+5
19 сентября+1
18 сентября0
17 сентября0
16 сентября0
15 сентября0
14 сентября+1
13 сентября+2
12 сентября+1
11 сентября0
10 сентября+1
09 сентября+2
08 сентября+1
07 сентября0
06 сентября0
05 сентября0
04 сентября0
03 сентября+1
02 сентября0
01 сентября0
Посты канала
World Rabies Day 2025 Pledge.pdf1.94 MB

2
கடித்த நாயைக் கட்டி வைத்து அடுத்த பத்து நாட்கள் கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் அந்த நாய் இறந்து விட்டால் அதற்கு ரேபிஸ் இருப்பது கிட்டத்தட்ட உறுதி. ரேபிஸ் நோய்க்கு எதிராக நாம் தடுப்பூசியை உடனே போட்டுக்கொள்வதால் அந்த நாயிடம் இருந்து நமக்கு வருவது பெரும்பாலும் தடுக்கப்படும். இந்த தடுப்பூசி கடித்த ஒரு நாளுக்குள் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பு. 6. நாய் கடித்துவிட்டால் உடனே செய்ய வேண்டிய முதலுதவி என்ன? எல்லா நாய் கடியையும் ரேபிஸ் பாதித்த நாய் கடியாகவே கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக தெரு நாய் கடித்தால் சிறிதும் தாமதம் அலட்சியம் இருக்கக்கூடாது. நாய் கடித்த இடத்தை பதினைந்து நிமிடங்கள் குழாய் நீரில் சோப் போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் அந்த காயத்தில் வைரஸ் இருந்தால் அவற்றைக் கொல்ல வாய்ப்பாக அமையும் பொதுவாக நாய் குதறிய இடத்தில் தையல் போடப்படுவதில்லை. இதற்கான காரணம்..தையல் போடும் போது ஊசி மூலம் சருமத்தின் வெளிப்புறம் இருக்கும் வைரஸ் ஆழ்திசுக்களுக்குள் சென்று விடக்கூடாது என்பதே ஆகும். மேற்சொன்ன முதலுதவியை செய்து விட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு செல்வது சிறப்பு 7. ரேபிஸ் நோயின் அறிகுறிகள் யாது??? நாயைப்பொறுத்த மட்டில் நோய் பாதித்த நாய் இரண்டு வகையில் நடந்து கொள்ளலாம். முதல் வகை - வெறி பிடித்து பைத்தியம் போல் அங்கும் இங்கும் அலையும். வாயில் இருந்து எச்சில் வடியும். பார்ப்பவரை எல்லாம் துரத்தி துரத்தி கடிக்கும் இரண்டாம் வகை - சாதுவாக மாறி எந்த அசைவும் இன்றி படுத்திருக்கும். யாராவது அருகில் வந்தால் கடிக்கும் மனிதர்களைப்பொறுத்த வரை 80% பேருக்கு நோய் அறிகுறி என்பது தண்ணீரைப்பருகுவதில் கடும் சிரமம் . பிறகு தண்ணீரைக்கண்டாலே அதிர்ச்சி. காற்று வேகமாக அடித்தாலே அச்சம் . வெளிச்சம் கண்டாலே பயம். வெறி .ஆக்கிரோஷம் பித்து பிடித்த நிலை பிறகு சிகிச்சை பலனின்றி மரணமே இதற்கு தீர்வாக அமையும் 20%பேருக்கு வாதம் வந்தது போல உடல் முழுவதும் செயலிழந்து பிறகு மரணம் சம்பவிக்கும். அறிகுறிகள் தோன்றிவிட்டால் வைரஸ் மூளையை எட்டிவிட்டது என்று அர்த்தம் அதற்குப்பிறகு குணப்படுத்துவது என்பது முடியாத விசயம் எனவே செல்லப்பிராணிகள் வளர்க்கும் சொந்தங்களே நாயை பிள்ளைகள் போல வளர்த்து வாருங்கள். அவற்றுக்கு நல்ல உணவு இடம் கூடவே வெர்ட்டினரி மருத்துவரிடம் சிகிச்சை கூடவே முறையான ரேபிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசி வழங்கிடவும். செல்ல நாய் எப்போதும் உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வெளியே சுற்றித்திரிந்தால் வெறி நாய் அதைக்கடித்து அதற்கும் ரேபிஸ் வந்து வீட்டில் உள்ள மனிதர்களுக்கும் பரப்பும் வாய்ப்பு உண்டு. நாய்களை செல்லமாகவே வளர்த்தாலும் அவற்றை வாயோடுவாய் முத்தம் கொடுப்பது. மனிதர்களின் வாய் பகுதியை நக்க அனுமதிப்பது ஆபத்து. மீறி நாய் கடித்தால் நாயின் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் சிறிது இருந்தாலும் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவும் காரணம் அறிகுறிகள் தோன்றிய பின் ரேபிஸ் நோய்க்கு மரணம் மட்டுமே தீர்வு நன்றி ரேபிஸ் நோயால் ஒரு செல்ல நாயோ அதை வளர்க்கும் மனிதரின் உயிரோ பறிபோய் விடக்கூடாது என்ற நோக்கில் இந்த கட்டுரை எழுதப்பட்டது. Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை Dog Bite first aid || World Rabies Day முதலுதவி கண்டிப்பாக செய்த பிறகு மருத்துவமனை செல்ல வேண்டும் #Rabies #firstaid #vaccine #rabiesawareness #rabiesfree #rabiesprevention #September28 #September28th #WorldRabiesDay #rabiesvaccine #dogbite #sep28 #sept28 #doctor #healthtips
57
3
வீட்டில் செல்ல நாய் வளர்க்கும் சகோதர சகோதரிகளின் கனிவான கவனத்திற்கு Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை வீட்டில் செல்ல நாய் வளர்ப்பதில் பலருக்கும் நாட்டம் இருக்கும் ஆனால் நாய் மூலம் உயிர் கொல்லும் ஒரு நோய் மனிதனுக்கு பரவலாம் என்பதையும் அந்த நோயின் அறிகுறிகள் தோன்றிவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை மரணம் தான் அந்த நோய் தரும் வேதனைக்கு ஒரே மருந்து என்பதையும் பலரும் அறிவதில்லை. இதுவரை உலகில் இருபதுக்கும் குறைவானோரே அந்த கொடிய நோய் வந்து சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்திருக்கின்றனர். ஆம்... ரேபிஸ் எனும் கொடிய வைரஸ் நோய் குறித்து தான் பேசுகிறேன். மருத்துவ அறிவியல் இத்தனை முன்னறிவிட்ட நிலையிலும் இந்த நோய் கிட்டத்தட்ட 100% இறப்பு விகிதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது என்றால் இதன் தீவிரத்தை நாம் உணர வேண்டும். ரேபிஸ் மற்றும் செல்ல நாய் வளர்ப்பு குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயமான விசயங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம். கீழ்க்காணும் கட்டுரை உலக சுகாதார நிறுவன வழிகாட்டால், இந்திய அரசின் ரேபிஸ் குறித்த அறிவுரைகள் மற்றும் எனது சொந்த அனுபவங்களை வைத்து எழுதப்படுகிறது 1. வளர்ப்பு செல்ல நாய் வளர்க்கலாமா??? தாராளமாக வளர்க்கலாம். ஆனால் அவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டு வளர்க்க வேண்டும். நம்மைப்போலவே அவற்றையும் பராமரித்து வர வேண்டும். முக்கியமாக அவற்றிற்கு வழங்க வேண்டிய தொற்று நோய் தடுப்பூசிகளை முறையே வழங்கி வளர்க்க வேண்டும். நமக்கு எப்படி குடும்ப மருத்துவர் இருக்கிறாரோ அதைப்போலவே அவற்றிற்கும் விலங்கு நல சிறப்பு நிபுணரிடம் அவ்வப்போது சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசிகளை அட்டவணைப்படி முறையாக வழங்க வேண்டும். 2. செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் வராமல் காக்கும் தடுப்பூசிகள் இருக்கின்றனவா?? ஆம். ஒரு நாய்க்குட்டி பிறந்ததில் இருந்து மூன்றாவது மாதம் - ரேபிஸ் நோய் அந்த நாய்க்கு வராமல் இருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அதற்குப்பிறகு பிரதி வருடம் ஒருமுறை ரேபிஸ் நோய்க்கு எதிரான பூஸ்டர் ஊக்க ஊசி வழங்கப்பட வேண்டும். 3. தடுப்பூசி முறையாக வழங்கப்படாத செல்ல நாய்கள் வளர்ப்பாளர்களை கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும் ??? தமிழக அரசின் மேற்கோள்படி நாய் கடித்து விட்டால் அந்த நாய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சந்தேகத்தின் பலன் கடிபட்டவருக்கு வழங்கப்பட்டு உடனே மனிதர்களுக்கு நோயைத்தடுக்கும் ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும். இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் கூறுவது உங்களது செல்லப்பிராணிக்கு முறையாக ரேபிஸ் தடுப்பூசிகளை கொடுத்து இருந்தால் உங்களுக்கு அவை கடிப்பதால் ரேபிஸ் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறது. 4. செல்ல நாய்கள் வழி எப்படி ரேபிஸ் பரவுகிறது ??? நம்மில் நாய்கள் வளர்க்கும் சிலர் முறையாக அவற்றை பராமரித்து தங்களது பிள்ளைகள் போல அவற்றுக்கு ஏற்ற உணவு இடம் தடுப்பூசிகள் என்று வளர்க்கிறார்கள். தங்களது வீடுகளுக்குள் மட்டும் வைத்து வெளிப்புற நாய்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு வளர்க்கிறார்கள் இது பாதுகாப்பான வளர்ப்பு முறை. ஆனால் வளரும் நகர்ப்புறங்களில் கிராமப்புறங்களில் வளர்ப்பு நாய்களை வீட்டுக்குள் மட்டும் வைத்து வளர்ப்பது கடினம். இதனால் அந்த நாய்கள் வீட்டிலும் இருக்கும் வெளியேவும் சுற்றித்திரியும். அந்த வளர்ப்பு நாயானது வெறி நாய் கடி நோயால் பாதிக்கப்பட்ட நாயால் கடிக்கப்பட்டால் அதற்கும் ரேபிஸ் வரும். அந்த ரேபிஸ் வந்த நாய் வீட்டில் உள்ளவர்களை கடித்தால் ரேபிஸ் மனிதர்களுக்கும் பரவும் 5. முறையாக தடுப்பூசி போடப்படாத முறையாக வீட்டுக்குள் மட்டும் வைத்து வளர்க்கப்படாத நாய்கள் கடித்து விட்டால் என்ன செய்வது ? நம்மில் பலரும் செய்யும் தவறு. நாம் வளர்க்கும் நாய்க்கு எந்த நோயும் இருக்காது என்று தவறான நம்பிக்கை கொள்வது. மேலும் அவற்றுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது. ஒருவேளை பாதுகாப்பற்ற உங்களது செல்ல நாய் கடித்து விட்டால் உடனே உங்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். இதை Post Exposure Prophylaxis என்கிறோம் கடித்த நாய்க்கு ரேபிஸ் இருக்குமா இருக்காதா? என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது. உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்படும். 0,3,7,28 நாள் என்று முறையாக அந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
55
4
#WorldRabiesDay #RabiesFreeWorld #RabiesPrevention #RabiesAwareness #EndRabiesNow #ZeroBy30 #OneHealth #நமது_மருத்துவர் #ரேபீஸ் #ரேபீஸ்_விழிப்புணர்வு #ரேபீஸ்_தடுப்பு #வெறிநாய்க்கடி #தடுப்பூசி #உயிர்காப்போம் #மருத்துவவிழிப்புணர்வு
1
5
செப்டம்பர் 26 அன்று கடைப்பிடிக்கப்படும் இரண்டு முக்கிய சுகாதார விழிப்புணர்வு தினங்கள்! 🌍💚 💊 உலக கருத்தடை தினம் (World Contraception Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பான கருத்தடை முறைகள், பொறுப்பான குடும்பத் திட்டமிடல், கர்ப்பத்தைத் திட்டமிடுதல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கம். 🌿 உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் (World Environmental Health Day) ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் நாள். தூய்மையான காற்று, பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம், முறையான கழிவு மேலாண்மை போன்றவை மக்கள் நலனில் ஏற்படுத்தும் தாக்கத்தை நினைவூட்டுகிறது. 💚 ஆரோக்கியமான குடும்பமும்… 🌱 ஆரோக்கியமான சுற்றுச்சூழலும்… 🤝 இணைந்தால்தான் ஆரோக்கியமான சமுதாயம்! #WorldContraceptionDay #WorldEnvironmentalHealthDay #September26 #FamilyPlanning #ContraceptionAwareness #ReproductiveHealth #EnvironmentalHealth #HealthyFamily #HealthyEnvironment #PublicHealth #HealthAwareness #குடும்பநலம் #கருத்தடை #குடும்பத்திட்டமிடல் #சுற்றுச்சூழல்நலம் #சுகாதாரவிழிப்புணர்வு #நமது_மருத்துவர்
91
6
file_000000003ecc81f495f36ce24ef46a78.png
83
7
Нет текста...
83
8
🤟 வார்த்தைகள் இல்லாமலும் பேச முடியும்… குரல் இல்லாமலும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்! சர்வதேச சைகை மொழிகள் தினம் — செப்டம்பர் 23 மனிதன் தனது தேவைகளையும் உணர்வுகளையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப் பயன்படுத்திய பழமையான தகவல் தொடர்பு முறைகளில் சைகைகளும் ஒன்று. 🤟 சைகை மொழி என்பது வெறும் கை அசைவுகள் அல்ல. கைகளின் பல்வேறு வடிவங்கள், அசைவுகள், முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகளை இணைத்து கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் முழுமையான மொழி. 🌍 உலகில் ஒரே ஒரு சைகை மொழி கிடையாது. இந்திய சைகை மொழி (ISL), அமெரிக்க சைகை மொழி (ASL), பிரிட்டிஷ் சைகை மொழி (BSL) என பல்வேறு சைகை மொழிகள் உள்ளன. அவற்றுக்கும் தனித்தனி சொற்கள், இலக்கண அமைப்புகள் மற்றும் பயன்பாட்டு முறைகள் உள்ளன. 🇺🇸 அமெரிக்க சைகை மொழியில் ஆங்கில எழுத்துக்களின் 26 எழுத்துகளையும் ஒரே கையால் குறிக்கும் முறைகள் உள்ளன. 🇮🇳 இந்திய சைகை மொழியில் பொதுவாக இரு கைகளையும் பயன்படுத்தும் சைகைகள் அதிகம் காணப்படுகின்றன. அதனால்… சைகை மொழி என்பது “சைகை காட்டுவது” மட்டுமல்ல; அதுவும் ஒரு முழுமையான மொழிதான். 📚 சைகை மொழி வளர்ச்சியின் வரலாற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Charles-Michel de l'Épée முக்கியமான முன்னோடியாகக் கருதப்படுகிறார். காது கேளாதவர்களின் கல்விக்காக சைகைகளை முறையாகப் பயன்படுத்தும் அணுகுமுறையை அவர் வளர்த்தார். 🧠 மேலும், தகவல் தொடர்பு என்பது காது கேளாதவர்களுக்கு மட்டுமல்ல. மொழியைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் பாதிக்கும் சில நரம்பியல் நிலைகளில், தேவைக்கேற்ப மாற்று தகவல் தொடர்பு முறைகள் பயன்படுத்தப்படலாம். Global aphasia போன்ற நிலைகளில், நோயாளியின் திறனைப் பொறுத்து சைகைகள் உள்ளிட்ட மாற்று தகவல் தொடர்பு முறைகள் உதவியாக இருக்கலாம். 📺 இன்று தொலைக்காட்சி செய்திகள், கல்வி, அரசு சேவைகள், அவசரகாலத் தகவல்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் சைகை மொழிக்கான அணுகல் அதிகரித்து வருகிறது. ஆனால் மிக முக்கியமானது… காது கேளாத ஒருவர் நம்மிடம் பேச முயற்சிக்கும்போது, நாம் அவரைப் புரிந்துகொள்ள முயற்சிப்போமா? 🤟 நாம் சில அடிப்படை சைகைகளை கற்றுக்கொண்டால் கூட, ஒருவரின் தனிமையை குறைத்து, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். ஒரு மொழியை மதிப்பது என்பது அந்த மொழியைப் பேசுபவர்களை மதிப்பதும்தான். ❤️ 🌍 இந்த சர்வதேச சைகை மொழிகள் தினத்தில், “அவர்களும் நம்மைப் போலவே பேசுகிறார்கள்… நாம் அவர்களின் மொழியைக் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்ற விழிப்புணர்வை உருவாக்குவோம். 🤟 சைகை மொழி — கைகளால் பேசும் மொழி. புரிதலால் இணைக்கும் மொழி. #WorldSignLanguageDay #InternationalSignLanguageDay #SignLanguage #DeafAwareness #InclusiveSociety #September23 #Sep23 #சைகைமொழி #சர்வதேசசைகைமொழிகள்தினம் #நமது_மருத்துவர்
192
9
🌹 ரோஜா என்றாலே காதல்தான் நினைவுக்கு வருகிறதா? அப்படியானால், செப்டம்பர் 22-க்கும் ரோஜாவுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளுங்கள்… 🌹 உலக ரோஜா தினம் (World Rose Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது காதலுக்கான ரோஜா அல்ல… புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கான அன்பு, அக்கறை மற்றும் நம்பிக்கையின் அடையாளம். ❤️ இந்த நாளின் பின்னணியில் மெலிண்டா ரோஸ் என்ற கனடாவைச் சேர்ந்த சிறுமியின் வாழ்க்கைக் கதை குறிப்பிடப்படுகிறது. புற்றுநோயுடன் போராடிய அவர், மிகக் குறுகிய காலமே வாழ்வார் என்று கூறப்பட்ட நிலையிலும், அதைவிட நீண்ட காலம் வாழ்ந்து, அந்த நாட்களை மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவும், கவிதைகள் எழுதவும் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது நினைவாகவே உலக ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது. 🌹 அதனால்தான் இன்று புற்றுநோயாளிகளுக்கு ரோஜாக்கள் வழங்கப்படுகின்றன. ரோஜா என்பது இங்கு ஒரு பூ மட்டுமல்ல… ❤️ அன்பு 🤝 அக்கறை 🌱 நம்பிக்கை 💪 மனவலிமை ஆகியவற்றின் அடையாளம். புற்றுநோய் சிகிச்சையில் மருந்துகளும், அறுவை சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் முக்கியமானவை. ஆனால்… “நீங்கள் தனியாக இல்லை… நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று சொல்லும் ஒரு வார்த்தையும், அன்புடன் பிடிக்கும் ஒரு கையும், நம்பிக்கையுடன் கொடுக்கும் ஒரு ரோஜாவும் அவர்களின் மனதிற்கு துணையாக இருக்கலாம். ❤️ 💊 மருந்துகளால் உடலைக் குணப்படுத்த முயற்சிப்பது ஒரு வகை சிகிச்சை… ❤️ அன்பாலும் ஆதரவாலும் மனதிற்கு நம்பிக்கை அளிப்பதும் சிகிச்சைப் பயணத்தின் ஒரு முக்கியமான பகுதிதான். புற்றுநோயாளிகளுக்கு பரிதாபம் வேண்டாம்… புரிதல் வேண்டும். தனிமை வேண்டாம்… துணை வேண்டும். பயம் வேண்டாம்… நம்பிக்கை வேண்டும். 🌹 இந்த World Rose Day-ல் ஒரு ரோஜாவை மட்டும் கொடுக்காதீர்கள்… “நீங்கள் தனியாக இல்லை” என்ற நம்பிக்கையையும் கொடுங்கள். உலக ரோஜா தின வாழ்த்துகள்! 🌹 #WorldRoseDay #RoseDay #CancerAwareness #CancerCare #CancerSupport #Hope #CancerPatients #September22 #உலகரோஜாதினம் #நமது_மருத்துவர்
140
10
தேசிய சத்துணவு மாதத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், #போலிக்_அமிலத்தின் அத்தியாவசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.... Folic acid என்பது வைட்டமின் பி 9. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. உணவில் folate ஆகவும், folic acid என்ற வகையில் suppliments ( மாத்திரைகள்) ஆகவும் கிடைக்கிறது. உணவில் இருந்து பெறப்படுவது கிடைக்காமல், குறைபாடு ஏற்படின், விரைவாக உடலுக்குக் கிடைப்பதற்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. தாய்மையை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண், மருத்துவரிடம் சென்று தன்னுடைய கர்ப்பத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்கு முன்பாகவே, கருவிலுள்ள குழந்தையின் மூளை, முதுகெலும்பு மற்றும் நரம்பு மண்டலம் உருவாகிவிடுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இதை கூறிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் வளர் இளம் பருவத்தினர், திருமணம் ஆன புதுப்பெண்களும் இதை கருத்தில் கொள்வதே இல்லை. முதல் 31 நாட்களிலேயே மத்தியநரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சி துவங்கிவிடும். இதை முறையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு போலிக் அமிலம் மிக மிக அத்தியாவசியம். இந்த நுண்சத்தில் குறைபாடு ஏற்பட்டால், நரம்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சி தடைபட்டு, பச்சிளம் குழந்தையின் முதுகெலும்பு முடிவடையும் இடத்தில், வெளித்தள்ளப்பட்ட ஒரு கட்டி போன்ற வளர்ச்சியை உருவாக்கி விடுகிறது. இந்நிலையை spina bifida என்று கூறுவோம். இந்த நிலையால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியே பாதிப்படைகிறது. நகர்ப்புறத்தில், மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைபாடு இருந்தால் கண்டறியப்பட்டு சரி செய்யப்படும். இந்தியாவில், 1000 குழந்தை பிறப்புக்கு, 4 அல்லது 5 குழந்தைகள் இந்நிலையுடன் பிறக்கிறார்கள். இது உலக அளவில் அதிகம்தான். ஆனால், சரியான மருத்துவ பரிசோதனைகள், கண்காணிப்பு இல்லாமல் கிராமப்புறத்தில் இருப்பவர்களும், மருத்துவதை தவிர்ப்பவர்களும் போலிக் அமிலம் குறைபாடு இருந்தால், இந்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களாகட்டும், திருமணமான புதுப்பெண்களாகட்டும், தங்களுடைய உணவில் போலிக் அமிலம் போதுமான அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிக .அவசியம், இதில், அவர்களுடைய பெற்றோர்களும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். தாயகப்போகும் பெண், சத்துக்குறைபாட்டுடன் இருக்கும் தருவாயில், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவேகூட 0.4 முதல் 0.8 மில்லிகிராம் போலிக் அமிலத்தை மருத்துவரின் ஆலோசனைக்குப்பின் முறையாக எடுத்துக்கொள்ளலாம். என்றாலும் தினசரி அளவு 1 மில்லிகிராமை தாண்டக்கூடாது. அதனைத் தொடர்ந்து கரு உருவானபின்பு முதல் மூன்று மாதங்களுக்கு இந்த போலிக் அமிலத்தை தொடரலாம். போலிக் அமிலம் மாத்திரைகள், போலிக் அமிலம் சேர்க்கப்பட்ட உணவு தயாரிப்புகள் ஒருபுறமிருக்க...... போலிக் அமிலம் இயற்கையிலேயே நிறைவாக உள்ள உணவுகளை வளரிளம் பருவ வயதிலிருந்தே பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே நிறைவான கர்ப்பத்தையும், ஆரோக்கியமான குழந்தைப்பேறையும் தரவல்லது. போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் (மில்லி கிராமில்) மட்டன் (188), கடலை பருப்பு (186), ஈரல்(176), கீரை (149), பச்சை பருப்பு (140), எள்(134), பசலை(123), புதினா(114), வெண்டைக்காய்(105), துவரை(103), கருவேப்பிலை(93.9), முட்டை(78), கம்பு(45.5), கோதுமை(36.6) உணவுப் பொருட்களை சேர்க்கும்போது, போலிக் அமிலத்தின் உட்கிரகிப்பை அதிகப்படுத்தும் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளையும் சேர்த்து சமைப்பது நல்லது. எடுத்துக்காட்டு: பசலைக்கீரை நெல்லிக்காய் ரசம், இரண்டு மூன்று தானியங்களுடன் கடலை பருப்பு, பச்சை பருப்பு சேர்த்து இட்லி அல்லது தோசை தயாரிப்பது, அதிக புளி உடயோகிப்பதை குறைத்து நெல்லிக்காய், தக்காளி சேர்ப்பது. புருஷன் வீட்டுக்கு போகப்போகும் பெண்ணே...! பட்டு கண்ணே...! புருவத்தை தீட்டவும், கரும் புள்ளியை மறைக்கவும், கேசத்தை நேராக்கவும், முகத்திலுள்ள பள்ளத்தை பட்டி பார்க்கவும், தோலை ப்ளீச் பண்ணவும் பியூட்டி பார்லருக்கு நடையாக நடக்கும் நீங்கள்...... திருமணத்திற்கு முன்பே மருத்துவரையும், உணவியல் வல்லுனரையும், சத்துணவு ஆலோசகரையும் சந்தித்து உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொண்டால், இரு குடும்பத்தினரும் மகிழும் அளவிற்கு எந்த சிக்கலும் இல்லாமல் அழகான... ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம். -- வண்டார்குழலி ராஜசேகர் --
157
11
மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு.. மருத்துவ உதவிக்கு 6385240452 Dr Saranya MBBS.,DCH., Pediatrician For online consultation Or to fix direct appointment மேலும் குழந்தைகள் நல மருத்துவர் சரண்யா அவர்களின் வீடியோக்களுக்கு General health awareness videos https://www.instagram.com/doctorsaranyaarjunan?stkn=MXMyNG51YTl5YTdyYg== Narcissism related videos https://www.instagram.com/doctorsaranyaarjunan?stkn=MXMyNG51YTl5YTdyYg==
150
12
யூரின் புரோட்டீன் லீக்கேஜ் என்றால் என்ன? யூரின் டெஸ்ட் எடுக்கிறோம். அதில் Protein Trace, +,++,+++ என்றெல்லாம் வருகிறதே. அது என்ன? கிட்னி ரத்தத்தை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகிறது. சிறிய பொருட்களான யூரியா, யூரிக் அமிலம், கிரியேட்டினின், சோடியம், பொட்டாசியம், சல்பேட், பாஸ்பேட் போன்ற உப்புகள் மற்றும் நீர், விட்டமின்கள், தாதுக்கள் அதில் இருக்கும். இதன் மாலிக்குலார் எடை 67000டால்டனுக்கு கீழ் இருக்கும். அதாவது அவை சிறிய கெமிக்கல்கள் ஆகும். கிட்னியில் உள்ள வடிகட்டி பெரிய பொருட்களை சிறுநீரில் புகாமல் தடுத்து விடும். சுகர், பிரஷர், நீண்ட காலம் எடுக்கும் வலி நிவாரணி மருந்துகள், சர்வ ரோக நிவாரணிகள் போன்ற பல விஷயங்களால் இந்த வடிகட்டி டேமேஜ் ஆகி, கொஞ்சம் பெரிய பொருட்களான புரதம் இதன் வழியே லீக் ஆகி யூரினுக்குள் வந்து விடும். யூரினில் புரதம் என்பது பொதுவாக ஆல்புமின் என்ற புரதமே. ஆரம்பகட்ட கிட்னி டேமேஜ் இருப்பவருக்கு யூரினில் புரதம் 30-300மிளிகிராம் அளவே இருக்கும். இது தான் Microalbuminuria. இது trace எனவும் கொள்ளலாம். 1+ என்பது 1000மிளிகிராம் (1 கிராம் அளவு). அது அதிகமாகும். பொதுவாக ஒருவருக்கு சுகரையும், பிரஷரையும் கண்ட்ரோல் செய்தாலே, கிட்னியின் வடிகட்டியில் உள்ள ஓட்டை மறைந்து விடும். யூரினில் புரதம் வராது. ஆனால் கிட்னி டேமேஜ் அதிகம் ஆனால் கிரியேட்டினின் அளவுகள் கூடும். அதன் பின்பு கிட்னி டேமேஜை இல்லாமல் ஆக்க முடியாது. சிலர் அவர்களின் தேவைக்கு குறைவாக நீர் குடிக்கும் போதும், காய்ச்சலின் போதும், கிட்னி கற்கள் இருந்தாலும், யூரினில் தற்காலிமாக புரதம் இருக்கும். அவர்கள், தங்கள் பிரச்சினையை சரி செய்த பின் மறுபடி யூரின் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டும். நார்மலாகி விடும். Microalbuminuria சில சமயம் தெரியாவிட்டால், Urine albumin/creatinine ratio அல்லது Protein/creatinine ratio எனும் டெஸ்டுகள் எடுப்பார்கள். இவையும் நார்மலாக இருக்க வேண்டும். தற்போது வாட்சப்பில் சுற்றிவரும் "யூரினில் புரதம் இருந்தால், உணவில் புரதம் எடுக்கக்கூடாது" என்பது அறியாமையே. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. சுகர், பிரஷரை கண்ட்ரோல் செய்யுங்கள், அவ்வளவே. ரத்தத்தில் புரதம் அதிகரிக்க முடியாது. ஈரல் அதை உடைத்து யூரியாவாக மாற்றி, யூரினில் வெளியேற்றி விடும். தினமும் நாம் உணவில் எடுக்கும் பல விட்டமின்களை, கிட்னி யூரின் வழியாகத் தான் வெளியேற்றுகிறது. அதனால் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா? உணவில் உள்ள உப்பு, குடிக்கும் நீர் ஆகியவை யூரினில் நார்மலாக வெளியேறுகிறது. அதனால் நாம் அனைவரும் உப்பை மற்றும் நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு முட்டாள்தனம்! அதே போல் தான் இதுவும். சுகர் பிரஷர் பேஷண்டுகள் ரெகுலராக யூரின் Microalbuminuria டெஸ்ட் செய்ய வேண்டும். நன்றி. Dr. V. Hariharan, MD, D(Diab), Diabetologist.
161
13
🦠 செப்சிஸ் (Sepsis) என்றால் என்ன? 📅 செப்டம்பர் 13 – உலக செப்சிஸ் தினம் “ஒரு தொற்று… உடலின் உயிர் காக்கும் அமைப்பையே பாதிக்கும்போது?” நம் உடலில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளால் தொற்று ஏற்படலாம். பொதுவாக, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune system) அந்தத் தொற்றை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் சில நேரங்களில், தொற்றை எதிர்த்துப் போராடும் உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாடு ஒழுங்கற்ற முறையில் மிகத் தீவிரமாக செயல்படலாம். இதன் காரணமாக உடல் முழுவதும் அழற்சி மற்றும் பிற உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு, முக்கிய உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும் நிலையே “செப்சிஸ் (Sepsis)”. 👉 எளிமையாகச் சொன்னால், “தொற்றுக்கு எதிராக உடல் போராடும்போது, அந்தப் போராட்டம் கட்டுப்பாட்டை இழந்து உடலின் முக்கிய உறுப்புகளையே பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான நிலை – செப்சிஸ்.” 🫁 எந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்? செப்சிஸ் தீவிரமடையும் போது, 🫁 நுரையீரல் ❤️ இதயம் மற்றும் இரத்த ஓட்டம் 🧠 மூளை 🫘 சிறுநீரகங்கள் 🫀 கல்லீரல் 🩸 இரத்த உறைதல் அமைப்பு போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படலாம். அதனால் செப்சிஸ் உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலை ஆகும். 🦠 எந்தத் தொற்றிலிருந்து செப்சிஸ் ஏற்படலாம்? செப்சிஸ் என்பது ஒரு குறிப்பிட்ட வகை தொற்றால் மட்டும் ஏற்படுவதில்லை. பின்வரும் தொற்றுகள் காரணமாகவும் ஏற்படலாம்: 🔹 நுரையீரல் தொற்று – Pneumonia 🔹 சிறுநீரகப்பாதை/சிறுநீரகத் தொற்று 🔹 வயிற்றுப் பகுதியில் ஏற்படும் தொற்று 🔹 தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுகள் 🔹 அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொற்றுகள் 🔹 பிற பல்வேறு பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுகள் 🚨 செப்சிஸின் ஆபத்தான அறிகுறிகள் என்ன? ஒருவருக்கு தொற்று இருப்பதாகத் தெரிந்த நிலையில், உடல்நிலை திடீரென மோசமடைவதை கவனிக்க வேண்டும். ⚠️ மூச்சு வேகமாகுதல் அல்லது மூச்சுத்திணறல் ⚠️ இதயத் துடிப்பு அதிகரித்தல் ⚠️ காய்ச்சல் அல்லது உடல் வெப்பநிலை மிகவும் குறைதல் ⚠️ குழப்பம், மயக்கம் அல்லது விழிப்புணர்வு குறைதல் ⚠️ இரத்த அழுத்தம் குறைதல் ⚠️ சிறுநீர் அளவு குறைதல் ⚠️ கடுமையான உடல் சோர்வு ⚠️ தோல் குளிர்ச்சியாகுதல் அல்லது நிறத்தில் மாற்றம் ⚠️ வழக்கத்திற்கு மாறாக வேகமாக உடல்நிலை மோசமாதல் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. தொற்றுடன் ஒருவரின் பொது உடல்நிலை வேகமாக மோசமடைந்தால், செப்சிஸ் போன்ற தீவிர நிலையை மருத்துவர்கள் உடனடியாக மதிப்பீடு செய்ய வேண்டும். 👶👴 யாரிடம் கூடுதல் கவனம் தேவை? செப்சிஸ் யாருக்கும் ஏற்படலாம். ஆனால் குறிப்பாக, 👶 பிறந்த குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் 👴 வயதானவர்கள் 🤰 கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்கள் 🩸 நீரிழிவு நோயாளிகள் 🛡️ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 🎗️ புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் 🏥 சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 🫀 நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் ஆகியோரிடம் அதிக விழிப்புணர்வு அவசியம். ⏱️ செப்சிஸில் “நேரம்” ஏன் முக்கியம்? செப்சிஸ் வேகமாக தீவிரமடையக்கூடியது. ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, காரணமான தொற்றை கண்டறிந்து, தேவையான பரிசோதனைகள் செய்து, சரியான சிகிச்சையை தாமதமின்றி தொடங்குவது மிகவும் முக்கியம். தேவையான சூழ்நிலையில் மருத்துவமனையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antimicrobials), திரவச் சிகிச்சை, ஆக்சிஜன் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை ஆதரிக்கும் பிற சிகிச்சைகள் வழங்கப்படலாம். சுயமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தொடங்குவதும், மருத்துவ உதவியைத் தாமதிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ❤️ ஒரு முக்கியமான உண்மை! ❌ “செப்சிஸ் என்றால் இரத்தத்தில் கிருமி இருப்பது மட்டுமே” என்று நினைப்பது சரியான விளக்கம் அல்ல. ✅ செப்சிஸ் என்பது ஒரு தொற்றுக்கு உடல் அளிக்கும் ஒழுங்கற்ற/கட்டுப்பாடற்ற பதிலால் ஏற்பட்டு, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான நிலை. 🌍 இந்த உலக செப்சிஸ் தினத்தில்… தொற்றை அலட்சியம் செய்யாதீர்கள். உடல்நிலை திடீரென மோசமடைந்தால் தாமதிக்காதீர்கள். அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறுங்கள். 🩺 செப்சிஸை அறிந்துகொள்வோம்… உயிர்களைக் காப்போம்! செப்டம்பர் 13 – உலக செப்சிஸ் தினம் #WorldSepsisDay #SepsisAwareness #Sepsis #SepsisPrevention #MedicalAwareness #HealthAwareness #நமது_மருத்துவர்
265
14
Нет текста...
212
15
Нет текста...
238
16
Нет текста...
229
17
✅உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ✅ஒரு உயிரைக்காக்க,மேலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க,ஒரு குறிப்பிட்ட தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவரை மீட்க என்று பலவற்றுக்கு முதலுதவி பயன்படுகிறது. ✅மூளை பாதிக்கப்பட்டால் கோமா நிலையும்,இதயம் பாதிக்கப்பட்டால் நாடித்துடிப்பு இறங்குவதும்,நுரையீரலில் சிக்கல் உண்டானால் மூச்சு சிக்கல்களுக்கு உண்டாகும். முதலுதவி செய்ய நீங்கள் மருத்துவராகவோ,நர்சாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ✅பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய முறையில் முதல் உதவி கிடைத்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. ✅எனவே ஒருவர் பாதிப்புக்கு உள்ளான தயங்காமல் முதலுதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும். ✅முதலில் பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா ரத்த ஓட்டம் சுவாசப் பாதையில் அடைப்பு சுவாசம் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். எவ்வகை பாதிப்பானாலும் இந்த மூன்றும் அவசியம். ✅ஒருவர் மயக்கமடைந்து விட்டால் அவரை சூழ்ந்து நிற்கக்கூடாது. காற்றோட்டத்திற்கு வழி வகை செய்ய வேண்டும் #worldfirstaidday #firstaid #september #sep2ndsaturday
235
18
🥥🌴 இயற்கையின் அற்புதப் பரிசு – தேங்காய்! 🌴🥥 📅 உலக தேங்காய் தினம் – செப்டம்பர் 2 நம் சமையலறையில் தினமும் பயன்படுத்தப்படும் தேங்காய், சுவைக்காக மட்டுமல்ல… நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் உணவு. 🥥 சிற்றுண்டியாக சிறிதளவு தேங்காய் – அனைவருக்கும் ஏற்றது! நீரிழிவு நோயாளிகளும் கூட, சர்க்கரை சேர்க்காமல், அளவோடு தேங்காயை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். 👉 காலை அல்லது மாலை பசிக்கும் நேரத்தில் சிறிதளவு தேங்காய் துண்டுகளை எடுத்துக்கொள்ளலாம். 💚 தேங்காயில் நார்ச்சத்து இருப்பதால் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும். ⚠️ ஆனால் ஒரு முக்கியமான விஷயம்… தேங்காயில் கொழுப்பும் கலோரியும் அதிகம். எனவே, “ஆரோக்கியமானது” என்று நினைத்து அதிகமாக சாப்பிட வேண்டாம். குறிப்பாக உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அல்லது கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் அளவில் கவனம் செலுத்துவது நல்லது. ❌ தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் என்று சொல்ல முடியாது. ✅ அளவோடு எடுத்துக்கொண்டால், சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக தேங்காயை சேர்த்துக்கொள்ளலாம். 🌴 நம் பாரம்பரிய உணவு… நம் ஆரோக்கியத்திற்கும் துணை! 🥥 சிறிதளவு தேங்காய் – சுவையானதும், இயற்கையானதுமான ஒரு சிற்றுண்டி! உலக தேங்காய் தின வாழ்த்துகள்! 🌿 #WorldCoconutDay #Coconut #HealthySnacking #DiabetesAwareness #HealthyEating #Nutrition #நமது_மருத்துவர்
342
19
Нет текста...
315
20
Influenza IEC.pdf
397