ch
Feedback
நமது மருத்துவர்

நமது மருத்துவர்

前往频道在 Telegram

மக்களின் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து மருத்துவச் செய்திகளும் MBBS ,M.D, BSMS, M.D(S)& BDS மருத்துவர்களால் கீழ்க்கண்ட நமது மருத்துவர் எனும் நமது டெலகிராம் சேனலில் இடம் பெறும். தினந்தோறும் ஓரிரு முக்கிய செய்திகள் மட்டுமே இடம்பெறும்.

显示更多
1 057
订阅者
+324 小时
+157
+1630
吸引订阅者
七月 '26
七月 '26
+19
在0个频道中
六月 '26
+30
在0个频道中
Get PRO
五月 '26
+20
在0个频道中
Get PRO
四月 '26
+26
在0个频道中
Get PRO
三月 '26
+22
在0个频道中
Get PRO
二月 '26
+20
在0个频道中
Get PRO
一月 '26
+25
在0个频道中
Get PRO
十二月 '25
+21
在0个频道中
Get PRO
十一月 '25
+11
在0个频道中
Get PRO
十月 '25
+26
在0个频道中
Get PRO
九月 '25
+14
在0个频道中
Get PRO
八月 '25
+16
在0个频道中
Get PRO
七月 '25
+22
在0个频道中
Get PRO
六月 '25
+19
在0个频道中
Get PRO
五月 '25
+26
在0个频道中
Get PRO
四月 '25
+51
在0个频道中
Get PRO
三月 '25
+22
在0个频道中
Get PRO
二月 '25
+22
在0个频道中
Get PRO
一月 '25
+76
在0个频道中
Get PRO
十二月 '24
+83
在0个频道中
Get PRO
十一月 '24
+70
在0个频道中
Get PRO
十月 '24
+80
在0个频道中
Get PRO
九月 '24
+63
在0个频道中
Get PRO
八月 '24
+131
在0个频道中
Get PRO
七月 '24
+13
在0个频道中
Get PRO
六月 '24
+18
在0个频道中
Get PRO
五月 '24
+12
在0个频道中
Get PRO
四月 '24
+11
在0个频道中
Get PRO
三月 '24
+41
在0个频道中
Get PRO
二月 '24
+18
在0个频道中
Get PRO
一月 '24
+20
在0个频道中
Get PRO
十二月 '23
+484
在0个频道中
日期
订阅者增长
提及
频道
11 七月+2
10 七月+3
09 七月+2
08 七月+2
07 七月+2
06 七月+3
05 七月+1
04 七月+3
03 七月+1
02 七月0
01 七月0
频道帖子
🌍 உலக மக்கள் தொகை தினம் – ஜூலை 11, 2026 இந்த ஆண்டின் கருப்பொருள்: "இளைஞர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை – இன்றும் எதிர்காலத்திற்காகவும் நனவாக்குதல்." ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அதன் இயற்கை வளங்கள் மட்டுமல்ல; அதன் இளைஞர்களின் கனவுகளும் திறமைகளும் ஆகும். ஒவ்வொரு இளைஞருக்கும் 🎓 தரமான கல்வி, 🩺 நல்ல உடல்நலம், 💼 வேலைவாய்ப்பு, 👨‍👩‍👧‍👦 தாங்கள் விரும்பும் நேரத்தில் குடும்பத்தை அமைக்கும் உரிமை, ⚖️ சமத்துவமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதே நிலையான வளர்ச்சிக்கான அடித்தளம். மக்கள் தொகை என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அது மனித வளம். அந்த மனித வளத்தை வலுப்படுத்துவது இன்றைய இளைஞர்களின் கனவுகளுக்கு மதிப்பளிப்பதிலிருந்தே தொடங்குகிறது. இன்றைய இளைஞர்களை வலுப்படுத்துவோம்... நாளைய இந்தியாவை வளப்படுத்துவோம்! 🇮🇳 #உலக_மக்கள்_தொகை_தினம் #WorldPopulationDay2026 #Youth #இளைஞர்கள் #கல்வி #உடல்நலம் #சமத்துவம் #குடும்பநலம் #நமது_மருத்துவர்

2
没有文字...
61
3
🚨 "குழந்தைகள் திடீரென சோர்வாகவோ, அச்ச உணர்வோடோ இருந்தால் அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்!" Credits to தினத்தந்தி நாளிதழ் சமீப காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் மனதை வேதனைப்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு நல்ல உணவு, கல்வி, மருத்துவம் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பொறுப்பு அல்ல. அவர்களின் பாதுகாப்பு, உடல் எல்லைகள் (Body Safety), மற்றும் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதையும் வயதுக்கு ஏற்ற மொழியில் கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர் மற்றும் ஆசிரியரின் முக்கியமான சமூகக் கடமையாகும். 👨‍👩‍👧 பெற்றோர் கவனத்திற்கு: 🔹 அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை யாரேனும் சாக்லேட், பரிசு அல்லது வேறு ஏதேனும் பொருள் கொடுத்தால் வாங்கக்கூடாது; அவர்களுடன் எங்கும் செல்லக்கூடாது என்பதை குழந்தைகளுக்குத் தெளிவாகச் சொல்லுங்கள். 🔹 'Good Touch' – 'Bad Touch' பற்றி சொல்லிக் கொடுங்கள் உடலின் தனிப்பட்ட பகுதிகள், பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் ஆகியவற்றை வயதுக்கு ஏற்ற வகையில் விளக்குங்கள். 🔹 குழந்தையின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள் திடீர் சோர்வு, பயம், தனிமை விரும்புதல், பேசாமல் இருப்பது, பள்ளிக்குச் செல்ல மறுப்பது போன்ற மாற்றங்கள் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 🔹 ஒவ்வொரு நாளும் குழந்தையுடன் நேரம் செலவிடுங்கள் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது குடும்பமாக அமர்ந்து உணவருந்துங்கள். குழந்தை மனம் திறந்து பேசும் சூழலை உருவாக்குங்கள். 🔹 காது கொடுத்து கேளுங்கள் குழந்தை சொல்லும் சிறிய விஷயத்தைக்கூட கவனமாகக் கேளுங்கள். அவர்கள் பயம் அல்லது கவலையை வெளிப்படுத்தினால், குற்றம் சாட்டாமல், அன்புடன் அணுகுங்கள். 🔹 "எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லலாம்" என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள் குழந்தை உண்மையைச் சொன்னால் கோபப்படாமல், முதலில் நம்புங்கள், அமைதியாகக் கேளுங்கள், பாதுகாப்பாக உணர வையுங்கள். 🌱 ஒரு குழந்தையின் பாதுகாப்பு, நமது சமூகத்தின் பொறுப்பு. "குழந்தைகளுக்கு பயத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டாம்; பாதுகாப்பாக வாழும் அறிவைக் கற்றுக்கொடுப்போம்." ❤️ — டாக்டர் லூக் ரவி செல்லையா #ChildSafety #BodySafety #GoodTouchBadTouch #Parenting #ChildProtection #SafeChildhood
171
4
没有文字...
127
5
👀 மறைந்த பின்னும் வாழலாம்... பிறர் கண்கள் வழியே! ✨ திரையுலகின் திரைக்கதை திலகம் K. Bhagyaraj அவர்களின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஆனால், அந்தத் துயரத்தின் மத்தியிலும் மனதை நெகிழ வைக்கும் ஒரு மனிதநேயச் செய்தி... அவர் கண் தானம் செய்ததன் மூலம், இருவருக்கு மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவே உண்மையான "மறைந்தும் வாழ்தல்." ❤️ 🩺 கண் தானம் பற்றி தெரிந்துகொள்வோம்: ✅ ஒருவர் உயிரிழந்த 4–6 மணி நேரத்திற்குள் கண்கள் பாதுகாப்பாகப் பெறப்பட வேண்டும். ✅ வயது ஒரு தடையல்ல. கண்ணாடி அணிபவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் கண் தானம் செய்யலாம். ✅ சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் (சில குறிப்பிட்ட தொற்றுநோய்களைத் தவிர) பொதுவாக கண் தானம் செய்ய முடியும். ✅ கண் தானத்தின் மூலம் பெறப்படும் கருவிழி (Cornea), கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை அளிக்க உதவுகிறது. 🌿 நாம் மறைந்த பிறகும் நம் கண்கள் இந்த உலகை இன்னொருவருக்குக் காட்ட முடியும். இன்றே உங்கள் குடும்பத்தினருடன் கண் தானம் குறித்து பேசுங்கள். உங்கள் விருப்பத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஒருவரின் இறுதி முடிவு... இருவரின் வாழ்வில் புதிய விடியலாக மாறட்டும்! 💚 #கண்தானம் #EyeDonation #DonateEyes #GiftOfSight #OrganDonation #HealthAwareness #MedicalAwareness #Bhagyaraj #VisionForEveryone #TamilNadu #நமது_மருத்துவர்
157
6
没有文字...
134
7
மெனோபாஸ் என்பது ஒரு நோய் அல்ல; பெண்களின் வாழ்க்கையில் இயல்பாக நிகழும் ஒரு மாற்றம். ஆனால் அது முன்கூட்டியே ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவது மிகவும் அவசியம். சரியான வாழ்க்கை முறை, சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை ஆகியவை மெனோபாஸ் காலத்தையும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கடக்க உதவும்.
285
8
🌸 முன்கூட்டியே வரும் மெனோபாஸ்: இதயத்தைப் பாதுகாக்க உடனே பரிசோதனை அவசியம்! 40 வயதை எட்டும் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றக் காலமாக இருப்பது மெனோபாஸ் (Menopause). இந்தக் காலகட்டத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைவதால் பல்வேறு உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, உடல் சோர்வு, எரிச்சல், கவனம் குறைதல், மனஅழுத்தம் போன்றவை மட்டுமல்லாமல், கருத்தரிக்கும் திறன் முடிவடைவதும் பல பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகள், ஐரோப்பிய பெண்களுடன் ஒப்பிடும்போது தெற்காசியப் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே ஏற்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதனால், குறிப்பாக முன்கூட்டிய மெனோபாஸ் (40 வயதிற்கு முன்) ஏற்பட்டால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியப் பெண்களுக்கு மெனோபாஸ் எப்போது? இந்திய மெனோபாஸ் சொசைட்டி ஆய்வின்படி, இந்தியப் பெண்களுக்கு சராசரியாக 46.6 வயதில் மெனோபாஸ் ஏற்படுகிறது. அதேசமயம் மேலைநாட்டு பெண்களுக்கு இது சராசரியாக 51 வயதில் ஏற்படுகிறது. 40 வயதிற்கு முன்பே மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுவிட்டால் அது முன்கூட்டிய மெனோபாஸ் (Early Menopause) எனப்படுகிறது. முன்கூட்டிய மெனோபாஸிற்கான காரணங்கள் இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்: - பரம்பரை மற்றும் மரபணுக் குறைபாடுகள் - டர்னர் சிண்ட்ரோம் போன்ற மரபணு நோய்கள் - தன்னுடல் தாக்கு (Autoimmune) நோய்கள் - தைராய்டு மற்றும் முடக்கு வாதம் போன்ற நோய்கள் - ஹார்மோன் மாற்றங்கள் - கீமோதெரபி சிகிச்சைகள் - புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் - சில ரசாயனங்களின் பாதிப்பு அம்மா அல்லது சகோதரிகளுக்கு முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்பட்டிருந்தால், மற்ற குடும்பப் பெண்களுக்கும் அதே அபாயம் அதிகமாக இருக்கலாம். "மாதவிலக்கு நின்றுவிட்டதே... நிம்மதி!" என்று நினைப்பது தவறு பல பெண்கள் மாதவிலக்கு நின்றுவிட்டால் பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான எண்ணம். 40 வயதிற்கு முன் மாதவிலக்கு நின்றாலோ, தொடர்ந்து 3 மாதங்கள் மாதவிலக்கு வரவில்லையோ அல்லது இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட்டாலோ, உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் பரிசோதனைகள் மூலம் இது உண்மையான மெனோபாஸ்தானா அல்லது வேறு காரணமா என்பதை உறுதி செய்து, தேவையெனில் ஹார்மோன் சிகிச்சையை பரிந்துரைப்பார். ஏன் இதய பரிசோதனை அவசியம்? மெனோபாஸ் ஏற்படுவதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், பெண்களின் இதயத்தையும் பாதுகாக்கும் முக்கிய ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் குறையும்போது: - இதய நோய் அபாயம் அதிகரிக்கும் - கொலஸ்ட்ரால் மாற்றங்கள் ஏற்படும் - எலும்பு பலவீனம் அதிகரிக்கும் - ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் உயரும் அதனால் மெனோபாஸ் ஏற்பட்ட பெண்களுக்கு பின்வரும் பரிசோதனைகள் அவசியம்: - மார்பக பரிசோதனை - கர்ப்பப்பை வாய் பரிசோதனை - நீரிழிவு பரிசோதனை - கொலஸ்ட்ரால் பரிசோதனை - எலும்பு அடர்த்தி பரிசோதனை மெனோபாஸின் அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. பொதுவாக, - திடீரென உடல் சூடாகுதல் (Hot Flush) - அதிக வியர்வை, குறிப்பாக இரவில் (Night Sweats) - தூக்கமின்மை - மனப்பதட்டம் - காரணமில்லாத பயம் - மனஅழுத்தம் - படபடப்பு - பெண் உறுப்பில் உலர்வு மற்றும் எரிச்சல் - அடிக்கடி சிறுநீர்ப் பாதை தொற்று - நீர்க்கடுப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வாழ்க்கை முறை மாற்றமே சிறந்த தீர்வு மெனோபாஸ் காலத்தை ஆரோக்கியமாகக் கடக்க: ✅ தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். ✅ சமச்சீரான உணவைத் தேர்வு செய்யுங்கள். ✅ காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரிக்குங்கள். ✅ இனிப்பு, பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை குறையுங்கள். ✅ கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். ✅ உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். ✅ தசை வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகளை நிபுணர் ஆலோசனையுடன் செய்யுங்கள். ✅ போதுமான, ஒழுங்கான தூக்கத்தைப் பெறுங்கள். தடுக்கும் உணவுகள் முன்கூட்டிய மெனோபாஸ் அபாயத்தைக் குறைக்க: - ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் - ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் - பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள் இவற்றை அன்றாட உணவில் சேர்ப்பது ஹார்மோன் சமநிலையைப் பேணவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். ஆய்வு கூறுவது 26 நாடுகளைச் சேர்ந்த 1,11,619 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்: - 9.5% பெண்களுக்கு 40 வயதிற்கு முன்பே மெனோபாஸ் ஏற்பட்டுள்ளது. - 15.3% பெண்களுக்கு 40–44 வயதிற்குள் மெனோபாஸ் ஏற்பட்டுள்ளது. நினைவில் கொள்ளுங்கள்
269
9
没有文字...
152
10
காலம் கெட்டு கிடக்கு ~ நியாண்டர் செல்வன்
181
11
ஜூலை 1 முதல் ஒரு மாதம் தொடர்ந்து தினம் ஆறு முட்டை சாப்பிடலாம் என நினைத்தேன் ஆனால் ஜூலை1க்கு இன்னும் நாள் இருக்கு. ஏன் காத்திருக்கணும் என இன்றே துவங்கி ஆறு முட்டைக்கு பதில் ஒன்பது முட்டை சாப்பிட்டுவிட்டேன். பிரேக்பாஸ்டுக்கு இரண்டு மதியம் மூன்று டின்னருக்கு நாலு தினம் ஆறு முட்டைகள், தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வந்து போய் சேர்ந்துவிடுவேன், கொலஸ்டிரால் அதிகரிக்கும் என எல்லாம் டென்சனாக வேண்டாம். கேள்வி அது அல்ல. உயிரியல் ரீதியில் உடலில் என்னன்ன மாற்றங்கள் நிகழும் என்பதுதான் கேள்வி. முதற்கண் தினமும் நம் ஈரல் 2000 மிகி கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும். முட்டை ஒன்றில் 180 மிகி கொலஸ்டிரால் இருக்கிறது. ஆறு முட்டையில் 1080 மிகி கொலஸ்டிரால் உள்ளது. அதனால் சில நாட்களில் இது தொடர்ந்தால், ஈரல் தினமும் 920 மிகி கொலஸ்டிராலை உற்பத்தி செய்தால் போதும். அதாவது ஈரலுக்கு வேலை குறையும் (Negative Feedback Loop). இதோ அடுத்த 30 நாட்களில் உங்கள் உடலில் நிகழும் முக்கிய உயிரியல் மாற்றங்கள்: உணவு வழி கொலஸ்டிராலுக்கு உங்கள் உடலின் மரபணு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதைப் பொறுத்து இது மாறுபடும். உலக மக்கள் தொகையில் சுமார் 70% பேர் 'ஹைப்போ-ரெஸ்பாண்டர்ஸ்' (Hypo-responders). அதாவது, இவர்கள் எவ்வளவு முட்டை சாப்பிட்டாலும் கல்லீரல் உடனே தனது சொந்த கொலஸ்டிரால் உற்பத்தியைக் குறைத்து சமநிலைப்படுத்திவிடும். இரத்த கொலஸ்டிரால் அளவும் மாறாது. ஆனால், மீதமுள்ள 30% மக்கள் 'ஹைப்பர்-ரெஸ்பாண்டர்ஸ்' (Hyper-responders) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் கல்லீரலால் உணவு வழியே வரும் அதிகப்படியான கொலஸ்டிராலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இதனால், இவர்களுக்கு இரத்தத்தில் உள்ள LDL ("கெட்ட" கொலஸ்டிரால்) அளவு குறிப்பிடத்தக்க அளவு உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த LDL உயர்வு ஆபத்தானது அல்ல. முட்டை சாப்பிடுவதால் அதிகரிக்கும் LDL துகள்கள் சிறிய, அடர்த்தியான (ஆபத்தான) வடிவத்தில் இருக்காது. அவை பெரிய, மிதக்கும் தன்மையுடைய (Large, buoyant) துகள்களாக மாறுகின்றன. இவை இரத்த நாளங்களின் சுவர்களை எளிதில் ஊடுருவாது என்பதால் இதயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதே நேரத்தில், முட்டை உடலுக்கு நன்மை செய்யும் HDL கொலஸ்டிராலைத் தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆறு முட்டைகள் சாப்பிடும்போது அது 'பெப்டைட் YY' (PYY) மற்றும் 'GLP-1' போன்ற பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை அதிகம் சுரக்கச் செய்கிறது. இதனால் பசி தூண்டும் 'க்ரெலின்' (Ghrelin) ஹார்மோன் குறைந்து, நீண்ட நேரத்திற்குப் பசி எடுக்காமல் திருப்தியாக இருக்க உதவும். காலையில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்குப் பதிலாக முட்டையை எடுக்கும்போது, இன்சுலின் உணர்திறனை (Insulin sensitivity) மேம்படுத்த உதவும். 6 முட்டைகளில் இருந்து சுமார் 800 மிகி 'கோலின்' சத்து கிடைக்கிறது (தேவை 425-550 மிகி). இது நினைவாற்றலுக்குத் தேவையான 'அசிடைல்கோலின்' (Acetylcholine) என்ற நரம்பியல் கடத்தியை உருவாக்கவும், கல்லீரலில் தேங்கும் கொழுப்பை வெளியேற்றவும் மிகவும் அவசியம். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள 'லுடீன்' (Lutein) மற்றும் 'ஸீஅக்ஸாந்தின்' (Zeaxanthin) ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண்களின் விழித்திரையில் (Retina) குவிந்து, கண்புரை மற்றும் நீல நிற ஒளியின் (Blue light) பாதிப்பிலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. ஆண்கள் தினமும் முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடும்போது, அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பும் கொலஸ்டிராலும் லேடிக் செல்களை (Leydig cells) சென்றடைந்து, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை நேரடியாகத் தூண்டுகின்றன. தவிர முட்டையில் உள்ள மிக முக்கியமான தாதுச்சத்து துத்தநாகம் (Zinc) ஆகும். இது ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பிற்கும் இன்றியமையாதது. முட்டையில் உள்ள டி-அஸ்பார்டிக் அமிலம் எனும் அமினோ அமிலம், மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, அதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. 6 முட்டைகளில் சுமார் 3 கிராம் 'லியூசின்' உள்ளது. இது தசை வளர்ச்சியைத் தூண்டும் 'mTOR' என்ற மூலக்கூறு பாதையைச் செயல்படுத்துகிறது. வெறும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதை விட, மஞ்சள் கருவோடு சேர்த்து முழு முட்டையாகச் சாப்பிடும்போது தசை நார்களைப் பழுதுபார்க்கும் திறன் உடலுக்கு 40% அதிகமாகக் கிடைக்கிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. மற்றபடி: எனக்கு கிட்னி பாதிப்பு உண்டு, ஈரல் பிரச்சனை உண்டு நான் தினம் ஆறு முட்டை சாப்பிடலாமா என எல்லாம் கேட்கவேண்டாம் :-) உடல்நலன் சார்ந்த சிக்கல் இருப்பவர்கள் மருத்துவரிடம் கேட்டுவிட்டு எந்த டயட் முயற்சியையும் மேற்கொள்ளவும். மற்றபடி தினமும் பஜ்ஜி, வடை எடுப்பவர்கள் "இனிமேல் பஜ்ஜிக்கு பதில் ஆறு முட்டை பப்ஸ் எடுக்கறேன்" என எல்லாம் சொல்லிக்கொண்டு என்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் :-)
198
12
✅“ஒருசிலர் திருமணம் செய்துகொள்வதற்கு முன்புகூட என்னிடம் வந்து கேட்பார்கள். சொல்லப்போனால், மணமகனுக்கோ மணமகளுக்கோ கூட வெண்புள்ளி இருக்காது. ✅அவர்களின் தாத்தாவுக்கோ அல்லது பாட்டிக்கோ இருந்திருக்கலாம். திருமணம் செய்துகொள்வதால், தங்களுக்கும் வெண்புள்ளி பாதிப்பு ஏற்படுமா என்று கேட்பார்கள். ஆனால், ஒருவரைத் தொடுவதன் மூலம் வெண்புள்ளி பரவாது,” என்றார். ✅நிறைய பேர் வெண்புள்ளியை தொழுநோய் (leprosy) என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வெண்புள்ளி என்பது தொற்றுநோய் அல்ல என்பதால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். ஜூன் 25 உலக வெண்புள்ளி நோய் தினம் உலக விட்டிலிகோ நோய் தினம் #june25 #vitiligo #MamtaMohandas #worldvitiligoday #vitiligoawareness #june #month #dermatology #skin #actresses #tamil #vitiligoawarenessmonth
187
13
✅விட்டிலிகோ என்று அழைக்கப்படும் வெண்புள்ளி என்பது சருமம் சார்ந்த ஒரு நோய். வெண்புள்ளி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி உலக வெண்புள்ளி தினமாகக் (World Vitiligo Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ✅ தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) கூற்றுப்படி, இந்தியாவில் வெண்புள்ளி பாதிப்பு 0.25% முதல் 4% வரை உள்ளது. குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு 8.8 சதவீதம் வரை செல்கிறது. ✅ நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி, உடலுக்கு எதிராக செயல்படுவதால் வெண்புள்ளி ஏற்படுகிறது என்கிறார் இந்திய சருமநோய், பால் வினை நோய் மற்றும் தொழுநோய் மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள மருத்துவர் தினேஷ் குமார். ✅ “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் வெண்புள்ளி ஏற்படலாம். மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் நிறமி உற்பத்தி செய்யும் செல்கள் இதில் அழிக்கப்படுகின்றன. ✅ மெலனோசைட்டுகள் நமது சருமத்துக்கு பழுப்பு நிறத்தை அளிக்கும் மெலனின் என்பதை உற்பத்தி செய்கின்றன. இந்த செல்களின் இழப்பு வெள்ளைத் திட்டுகளை ஏற்படுத்தி நிற இழப்புக்கு வழிவகுக்கின்றன,” என்றார். 🟩ஒருவருக்கு வெண்புள்ளி ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்று குறிப்பிடும் தினேஷ், அதேநேரத்தில் காரணம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளதாகத் தெரிவித்தார். 🟩வெண்புள்ளி ஏற்படுவதற்கான காரணம் 1⃣வெண்புள்ளி ஏற்படுவதற்கான காரணம் நரம்புகளின் செயலிழப்பால் சீர்கேடான நரம்பு சப்ளை ஏற்படுவதைத் தொடர்ந்து மெலனோசைட்டுகள் சேதமடையலாம் 2⃣மெலனோசைட்டுகள் தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக்கொள்ளும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர் 3⃣சில நேரங்களில் உடல் அதனுடைய சொந்த திசுவை அந்நிய பொருள் என்று நினைத்து அழிக்கிறது. இது தன்னுடல் தாங்குதிறன் (Auto immune) எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது. மெலனோசைட் சேதமடைவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். ✅ சிலருக்கு பரம்பரையாக மரபணு சார்ந்து வெண்புள்ளி ஏற்படலாம் என்று தெரிவித்த தினேஷ், “ தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்த சோகையின் தீவிர நிலை போன்ற நோய்களோடு சேர்ந்தும் வரலாம். ✅வெண்புள்ளி துரிதமாக அதிகரிப்பதற்குச் சில நேரங்களில் மன அழுத்தமும் காரணமாக இருக்கிறது,” என்கிறார். 🟩வெண்புள்ளியின் வகைகள் உடலில் பல்வேறு பாகங்களிலும் வெண்புள்ளி ஏற்படலாம். அது தோன்றும் பாகத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையாக அவை அழைக்கப்படுகின்றன. 1⃣உதடு- முனை வெண்புள்ளி (Lip-tip vitiligo)- உதடு, கை-கால் விரல்களில் ஏற்படும் 2⃣பிரிவுகளாக ஏற்படும் வெண்புள்ளி (Segmental vitiligo)- உடலின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பொதுவான வெண்புள்ளி (Generalized vitiligo) 3⃣சருமம் முழுவதும் மெலனோசைட்களால் பாதிக்கப்பட்டு, முழுமையாக வெள்ளையாகிவிடும் ✅இதேபோல் உதட்டின் உள்பகுதி, பிறப்புறுப்பின் உள்பகுதி போன்ற இடங்களில் ஏற்படும் வெண்புள்ளி மியுகோசல் வெண்புள்ளி (Mucosal vitiligo) என்று அழைக்கப்படுகிறது. 🟩வெண்புள்ளிக்கான சிகிச்சை “வாய்வழிவாக அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் உடலில் பூசும் களிம்புகள்(Creams) மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது ஒரு வகை. இது நோய் பரவுவதை நிறுத்தி பெரும்பாலான பகுதிகளில் நிறமியை மீண்டும் பெற உதவுகிறது. அடுத்ததாக UV தெரப்பி. இதில், பாதிக்கப்பட்ட பகுதியில் புற ஊதா ஒளி செலுத்தப்பட்டு அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்றாவதாக இருப்பது அறுவை சிகிச்சை. உடலில் வெண்புள்ளி பாதிப்பில்லாத பகுதியில் இருந்து தோலை எடுத்து நிறமில்லாத இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் மாற்றுவது. இது ஸ்கின் க்ராப்டிங்க்' (Skin Grafting) என்று அழைக்கப்படுகிறது. எனினும், வெண்புள்ளி பரவல் நிலைத்தன்மையை அடைந்த பிறகுதான் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும்,” என்று விளக்கினார். 🟩முழுவதுமாக குணப்படுத்த முடியாது மேற்கொண்டு பேசிய அவர், “வெண்புள்ளி என்பது ஆட்டோ இம்யூன் நோய். எனவே, இதை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வெண்புள்ளி ஏற்படலாம். சிகிச்சையால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியும், மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் அவ்வளவுதான். எனவே, சிகிச்சையை நிறுத்திய பிறகு நோய் மீண்டும் ஏற்படலாம். வெண்புள்ளி தொடர்பாக ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதன் மூலம் திறம்பட சிகிச்சை அளிக்க முடியும். முறையான சிகிச்சைகள், தொடர் கவனிப்பு ஆகியவை மூலம் நிறமியை முழுமையாக பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது,” எனவும் தெரிவித்தார். 🟩வெண்புள்ளி தொற்றுநோயா? வெண்புள்ளி தொற்றுநோய் என்ற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. ஆனால், நிச்சயமாக வெண்புள்ளி தொற்றுநோய் இல்லை என்று மருத்துவர் தினேஷ் தெரிவித்தார்.
214
14
没有文字...
153
15
https://youtu.be/LFZh8Ok-9ko?si=vNnroSWEkBscOJXy
289
16
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை நான் ஆதரிப்பதில்லை. ஏன் ? டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் பலரும் "இனிப்பு" சேர்க்க வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் பக்கத்து வீட்டுகாரர் கூறினார் என்றும் வாக்கிக் நண்பர் கூறினார் என்றும் சீனி சேர்ப்பதை நிறுத்தி விட்டு தங்களுக்கு தோதாக நாட்டு சர்க்கரை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள் இது தவறென்று அவர்கள் உணர வேண்டும் நீரிழிவு நோயர்களைப் பொருத்தமட்டில் சீனி நாட்டு சரக்கரை பனங்கற்கண்டு கருப்பட்டி தேன் இனிப்பான பழங்கள் என்று அனைத்தும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக உயர்த்துபவையே இதில் சீனியும் நாட்டு சர்க்கரையும் கரும்பில் இருந்து வருபவையே எனவே இரண்டும் நீரிழிவு நோயரின் ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில் ஒன்று தான் என்று உணர வேண்டும் இதற்கடுத்த படியாக சுகர் ஃப்ரீ எனும் மாத்திரையை பொடியை பலர் பயன்படுத்தி வருகிறார்கள் சுகர் ஃப்ரீ தீவிரமாக ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில்லை என்றாலும் நமது மூளையில் இனிப்பு சுவை உருவாக்கும் போதை என்பது தொடர்ந்து சுகர் ஃப்ரீ உபயோகப்படுத்துபவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும் என்ன ? இனிப்பு சுவை போதையை உருவாக்குமா? ஆம்... ஒவ்வொரு முறை நாம் இனிப்பு சுவையை சுவைக்கும் போதும் மூளையின் ஊக்கமளிக்கும் மண்டலம் தூண்டப்பட்டு மறுமுறை இனிப்பு சுவையை விரும்பி உண்ணச் செய்கிறது. இதனால் நாம் இனிப்பு சுவை தரும் போதைக்கு அடிமையாகிறோம் எப்படி மது அருந்துபவர் கொகைன் கஞ்சா போன்றவற்றை எடுப்பவர் அந்த விசயங்கள் தரும் போதைக்கு அடிமையாகிறாரோ அதே போல் தான் இந்த இனிப்பும் செய்கிறது. இதனால் தான் சீனியை நிறுத்தச் சொன்னால் நம் மனம் நாட்டு சர்க்கரைக்குத் தாவுகிறது நாட்டு சர்க்கரையை நிறுத்தச் சொன்னால் பனங்கருப்பட்டிக்குத் தாவுகிறது அதையும் நிறுத்தச் சொன்னால் இறுதியில் சுகர் ஃப்ரீக்கு வருகிறது இப்படி சுகர் ஃப்ரீ போட்டு பருகுபவர்களுக்கு இந்த இனிப்பு சுவை மீது மூளைக்கு போதையும் அடிமைத்தனமும் இருந்து கொண்டே இருக்கும் எனவே எப்போதெல்லாம் இனிப்பான ஸ்வீட் (இனிப்புப் பண்டங்கள்) சாக்லேட்( இனிப்புக் கட்டி) ஐஸ்க்ரீம்( பனிக்கூழ்) அல்வா ( இனிப்புக் களி) போன்றவற்றைக் காணுங்காள் நாக்கு ஊறி மூளையில் உள்ள போதை மையம் தூண்டப்பட்டு அதை உண்பார்கள் கூடவே தேவைக்கு மீறியும் அரிசி கோதுமை போன்ற தானியங்களினால் செய்யப்பட்ட உணவுகளைக் குறைத்து உண்டாலும் நொறுக்குத் தீனி விசயத்தில் எல்லை மீறுபவர்களாக இருப்பார்கள் இவ்வாறு மாவுச்சத்து சார்ந்த இனிப்பு சார்ந்த விசயங்களை தொடர்ந்து அதிகமாக உண்ணச் சொல்லி மூளை உந்திக் கொண்டே இருப்பதை தான் "க்ரேவிங்" ( அடங்காத அவா) என்று அழைக்கிறோம் இத்தகைய க்ரேவிங்கை மனதால் கட்டுப்படுத்துவது கடினம் இந்த க்ரேவிங்கை வெகுவாகக் கட்டுப்படுத்திட முதன்முதலில் செய்ய வேண்டியது "இனிப்பு சுவை கொண்ட அனைத்தையும் முற்றிலும் ஒதுக்குவதாகும்" Complete Abstinence from Sweet Taste is the First Step Towards Diabetes Control . இன்னும் ஸ்டீவியா சுக்ராலோஸ் எரித்ரிடால் சைலிடால் அஸ்பார்டேம் உள்ளிட்ட சுகர் சப்ஸ்டிட்யூட்ஸ் சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணும் போது அதை உண்ணும் நீரிழிவு நோயர்களை அந்த உணவுகள் ஒரு வகையில் ஏமாற்றுகின்றன. இதனால் ஒரு அசட்டை எண்ணம் உருவாகிறது. இதை Complacence என்கிறோம். அதாவது சீனி போட்டு செய்த பதார்த்தமாக இருந்தால் இது சுகரை ஏற்றி விடும் என்று பயம் இருக்கும். எனவே 50 கிராம் மட்டுமே உட்கொள்ளும் இடத்தில், சுகர் ஃப்ரீ சேர்க்கப்பட்ட ஸ்வீட்டாக இருந்தால் மனதில் இது சுகரை ஏற்றாது என்ற எண்ணம் பதியப்பட்டு 500 கிராம் கூட எடுக்கும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் தாங்கள் சாப்பிட்ட ஸ்வீட் மாவுப்பொருளால் செய்யப்பட்டதை மறந்து அந்த மாவுச்சத்து உள்ளே சென்றால் சுகர் ஏறும் என்பதையும் மறந்து அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு உருவாகும். எனவே நீரிழிவு நோயர்கள் இன்றிலிருந்து தாங்கள் பருகும் தேனீரையோ ( டீ) கொட்டை வடிநீரையோ ( காபி) சீனி நாட்டு சர்க்கரை பனங்கற்கண்டு கருப்பட்டி சுகர் ஃப்ரீ தேன் என்று எதையும் கலக்காமல் பருகலாம் பாலில் கூட லாக்டோஸ் எனும் இயற்கையான இனிப்பு இருப்பதால் அடங்காத நீரிழிவு இருப்பவர்கள் பால் டீ பால் காபி பருகுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இனிப்பு சேர்க்காத ப்ளாக் டீ இனிப்பு சேர்க்காத ப்ளாக் காபி இனிப்பு சேர்க்காத க்ரீன் டீ என்று பருகுவது அவர்கள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும் மந்திரமாகும் இதைக் கூற எனக்குத் தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன் காரணம் நான் கடந்த பத்து வருடங்களாக இனிப்பு சுவை கொண்ட எதையும் உணவில் சேர்ப்பதில்லை நன்றி டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
375
17
DHINA TAMILAGAM 28.05.26 (5) (1).pdf
226
18
没有文字...
241
19
🩸 உலக மாதவிடாய் சுகாதார தினம் – 2026 📅 மே 28 | வியாழக்கிழமை Credits to தின தமிழகம் நாளிதழ் “மாதவிடாய்” என்பது பெண்களின் உடலில் இயல்பாக நடைபெறும் ஒரு ஆரோக்கியமான மாற்றம். அது ஒருபோதும் வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல… மறைக்கப்பட வேண்டியதுமல்ல… ❌ இந்த ஆண்டின் உலக மாதவிடாய் சுகாதார தினக் கருப்பொருள்: 🌍 “மாதவிடாய்க்கு உகந்த உலகத்திற்கான லட்சியக் களம்” இதன் நோக்கம்: ✔️ மாதவிடாய் குறித்து திறந்த உரையாடலை உருவாக்குதல் ✔️ மூடநம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்களை அகற்றுதல் ✔️ அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான மாதவிடாய் பொருட்கள் கிடைக்கச் செய்தல் ✔️ பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் மாதவிடாய்க்கு உகந்த சூழலை உருவாக்குதல் --- 🩺 மாதவிடாய் சுகாதாரம் ஏன் முக்கியம்? மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் உடல்நலத்தை பிரதிபலிக்கும் ஒரு “கண்ணாடி” போன்றது. அதில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். விழிப்புணர்வு தரும் நன்மைகள்: ✅ உடலைப் புரிந்துகொள்ள உதவும் ✅ தொற்று மற்றும் தோல் எரிச்சலைத் தவிர்க்க உதவும் ✅ பாதுகாப்பான மாதவிடாய் பழக்கங்களை உருவாக்கும் ✅ ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக இரத்தப்போக்கு, கடுமையான வலி போன்றவற்றை கவனிக்க உதவும் ✅ தேவையான நேரத்தில் மருத்துவரை அணுக உதவும் --- 🩸 ஆரோக்கியமான மாதவிடாய் பழக்கவழக்கங்கள் 🔸 சானிட்டரி நாப்கின்களை 4–6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள் 🔸 கைகளை சுத்தமாகக் கழுவிய பிறகே பொருட்களைப் பயன்படுத்துங்கள் 🔸 பருத்தி உள்ளாடைகள் அணியுங்கள் 🔸 மாதவிடாய் கோப்பைகள் / reusable pads ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்யுங்கள் 🔸 பயன்படுத்திய பொருட்களை பாதுகாப்பாக அகற்றுங்கள் 🔸 அதிக வலி, அதிக இரத்தப்போக்கு, துர்நாற்றம், ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள் --- 🌸 மௌனத்தை உடைப்போம்… விழிப்புணர்வை வளர்ப்போம்! 🏡 வீட்டிலேயே மாதவிடாய் குறித்து திறந்த மனதுடன் பேசுங்கள் 👧 இளம் பெண்களுக்கு சரியான சுகாதாரப் பழக்கங்களை கற்றுக்கொடுங்கள் 🏫 பள்ளி மற்றும் பணியிடங்களில் மாதவிடாய்க்கு உகந்த சூழலை உருவாக்குங்கள் 📱 சமூக ஊடகங்கள் மூலம் சரியான தகவல்களைப் பகிருங்கள் --- «🗣️ “மாதவிடாய் என்பது பெண்களின் உடல்நலத்தின் முக்கிய அங்கம். அதை மறைப்பதல்ல… புரிந்துகொள்வதே முக்கியம்.” — Dr. சுபத்ரா, PT, MD (OG), DNB, DRM மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்» «🩷 “மாதவிடாய் பற்றிய மௌனத்தைக் கலைப்போம்! பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மாதவிடாய் முறைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்!”» --- 🌺 பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்போம் 🌺 விழிப்புணர்வை பரப்புவோம் 🌺 ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் — நமது மருத்துவர் #MenstrualHygieneDay #MHDay2026 #WomenHealth #PeriodAwareness #MenstruationMatter
244
20
🦟 மலேரியா காய்ச்சல் – விழிப்புணர்வே பாதுகாப்பு! மலேரியா என்பது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு ஆபத்தான காய்ச்சல் நோயாகும். இது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனாபிலிஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. ⚠️ மலேரியாவின் முக்கிய அறிகுறிகள் ✅ காய்ச்சல் விட்டுவிட்டு வருதல் ✅ நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல் ✅ அதிக வியர்வை ✅ தீவிர தலைவலி ✅ உடல் சோர்வு இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 🩸 இலவச இரத்தப் பரிசோதனை & சிகிச்சை காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள 🏥 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 🏥 அரசு மருத்துவமனை சென்று இலவசமாக இரத்தப் பரிசோதனை செய்து, முழுமையான சிகிச்சை பெறுங்கள். 🚫 கொசுக்கள் உருவாகாமல் தடுப்போம் 🛑 மேல்நிலை / கீழ்நிலை நீர் தொட்டிகளை மூடி வைத்தல் 🛑 குடங்கள், பாத்திரங்கள் வாரம் ஒருமுறை சுத்தம் செய்தல் 🛑 மழைநீர் தேங்காமல் பாதுகாத்தல் 🛑 கிணறுகளை மூடி வைத்தல் 🛑 சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தல் 🛏️ கொசு கடியிலிருந்து பாதுகாப்பு ✔️ கொசு வலைக்குள் தூங்குங்கள் ✔️ ஜன்னல், கதவுகளுக்கு வலை பொருத்துங்கள் ✔️ மலேரியா பாதித்தவர்கள் கட்டாயம் கொசு வலை பயன்படுத்த வேண்டும் 🌿 “கொசுவை கட்டுப்படுத்தினால்… மலேரியாவைத் தடுக்கலாம்!” #MalariaAwareness #மலேரியா #PublicHealth #HealthAwareness #TamilNadu #NHM
253