es
Feedback
சிவசக்தி டெலிகிராம் சேனல்

சிவசக்தி டெலிகிராம் சேனல்

Ir al canal en Telegram

எம் கடன் பணிசெய்து கிடப்பதே

Mostrar más
485
Suscriptores
-124 horas
-37 días
Sin datos30 días
Archivo de publicaciones
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁மறைகொடு வாழ்த்து மாணி உயிர்கொல்ல நண்ணி வருகூற்று தைத்த கழலன்_ _🍁நறைமலி கின்ற கொன்றை நளிர்திங்கள் நாகம் நதிசூடு கின்ற சடையன்_ _🍁சிறையணி வண்டி னங்கள் திரள்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்_ _🍁அறவனை எண்ணி நாளும் அலர்தூவி ஏத்த அறும்முன்பு செய்த வினையே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_வேதமந்திரங்களால் வழிபாடு செய்த மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்கு நெருங்கி வந்த கூற்றுவனை உதைத்த கழல் அணிந்த திருவடியினன் !! தேன் மிக்க கொன்றைமலர், குளிர்ந்த சந்திரன், பாம்பு, கங்கை இவற்றைச் சடையில் சூடியவன் !! சிறகுகளையுடைய வண்டுகள் திரள்கின்ற பொழில் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற அறவடிவினனான சிவபெருமானைத் தியானித்துத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1552///4272🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹போமா துணிந்து நீர்அங்குப் போதப் போதா அவ்வமணர் தீமா யையினை யானேபோய்ச் சிதைத்து வருகின் றேன்என்ன ஆமா றெல்லாம் உரைத்தவரை மறுக்க மாட்டா தரசிருப்பத் தாமா தரவால் தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *பாண்டி நாட்டுக்குச் செல்ல ஒருப்பட்ட ஞான சம்பந்தர், நீவிரும் அங்கு வருதல் வேண்டா, அச்சமணர்களின் தீய வஞ்சனைகயெல்லாம் யானே சென்று அழிவித்து வருகின்றேன் என்று கூற, அவர்தம் எழுச்சியையும் உணர்ச்சியையும் மறுக்க மாட்டாதவர் ஆகி, நாவுக்கரசர் அங்குத் தங்க, சிவஞானத் தலைவர் ஆன சம்பந்தர் அவரைப் பிரிந்து தாம் மட்டும் பெருகிய அன்புடன் பாண்டி நாட்டிற்குச் சென்றார்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருமந்திரம்🌹🙏* *☀️திருமுறை🔟☀️* *🦚பாடல்:2912///3000🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும் 🌹எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி 🌹எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு 🌹ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *கொல்லை முக்காதம் பரந்து கிடக்கின்றது. காடு அரைக்காதம் பரவிக் கிடக்கின்றது. எல்லைகள் மயங்கி கிடக்கின்றன இந்த இரண்டும்.! எல்லை மயங்காது இயங்க வல்லவர் மட்டுமே இங்கு ஒல்லையைக் கடந்து தான் செல்ல வேண்டிய ஊரைச் சென்று அடையலாம்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸திருமூலர்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹திருக்கச்சியேகம்பம்🌹* *🦚பாடல்:0956///1070🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி யமணரொடே காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப் போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால் மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே ! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனை, உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை3️⃣☀️* *🌹திருக்கொச்சைவயம்🌹* *🦚பாடல்:0956///1358🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக் குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப் பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *நெஞ்சமே ! அழகான இளயானைத் தந்தங்களோடு, திரட்சியான இரத்தினங்களையும், சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு, குருந்து, மா, குரவம், குடசம் முதலிய மரவகைகளையும், மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி, பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக ! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருஞானசம்பந்தர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருவருட்பா🌹🙏* *☀️திருமுறை2️⃣☀️* *🦚இரண்டாம் தொகுதி🦚* *🌹அருள் மொழி மாலை🌹* *🌷திருவொற்றியூர்🌷* _🌻அஃதாவது பிச்சைத் தேவர் நங்கையின் மனைக்குப் போந்து கவர் பொருள்பட வழங்கி யருளிய மொழிகட்கு நங்கை தோழியோடு உரையாடி யுசாவுவதாம். தேவரது அருண் மொழிகளே பொருளாய் நின்று சொல் மாலையாவதால், இஃது அருண் மொழி மாலை என்ற பெயர் பெறுகிறது._ *🦚பாடல்:1736///5818🦚* ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ 🌹மாட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன் எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா ரெட்டா மெழுத்திங் கெதுவென்றென் உட்டா வகற்று மந்தணர்க ளுரையூர் மாதே யுணரென்றார் அட்டார் புரங்க ளென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *விளக்கம் :* *தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, மதிப்பளிக்கும் என்னால் மதிக்கப்படும் கலையானது உங்கள் மேல் விழுமென்று சொன்னேன்; அவர் அதற்கு உனது கலை எட்டா மெழுத்தைச் சேர்த்துக் கொள்ளும் என்றார்; அது கேட்டு, இங்கு எட்டாம் எழுத்து யாது என்று வினவினேன்; அதற்கு, மனத்தின் வன்மையைப் போக்கும் அந்தணர்கள் வாழும் ஊராகும்; இதனை உணர்ந்து கொள்க என்று, பகைவர்களின் புரங்களை யழித்த அவர் விடை யிறுக்கின்றார்; அந்த ஐயர் சொன்ன அருள்மொழியின் கருத்து என்னையோ?* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🦚🔥வள்ளலார்🔥🦚* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣    *திருமுறை ஓதுவோம்*      *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠     *_🌷சிவ வணக்கம்🌷_* *🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்  உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷        *🌷சிவன் துதி🌷* *🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_சமய குரவர்கள் துதி_* *🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!* *🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!* *🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!* *🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_* *🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.* *_திருநாவுக்கரசு சுவாமிகள்_* *🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.* *_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_* *🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.* *_மாணிக்கவாசகர் சுவாமிகள்_* *🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_*

அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அவிட்டம் : இலக்குகள் உருவாகும். சதயம் : மதிப்புகள் அதிகரிக்கும். பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும். --------------------------------------- மீனம் ஜூலை 31, 2026 பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சலும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம் பூரட்டாதி : அறிவு வெளிப்படும். உத்திரட்டாதி : கவனம் வேண்டும். ரேவதி : அலைச்சல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும். திருவாதிரை : ஆசைகள் அதிகரிக்கும். புனர்பூசம் : அறிமுகங்கள் கிடைக்கும். --------------------------------------- கடகம் ஜூலை 31, 2026 எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மற்றவர்களால் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : விரயம் உண்டாகும். பூசம் : அனுசரித்து செல்லவும். ஆயில்யம் : பொறுப்புகள் மேம்படும். --------------------------------------- சிம்மம் ஜூலை 31, 2026 காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். போட்டி செயல்களில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் மகம் : அறிமுகம் கிடைக்கும். பூரம் : சிந்தித்து செயல்படவும். உத்திரம் : குழப்பங்கள் மறையும். --------------------------------------- கன்னி ஜூலை 31, 2026 உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திரம் : பயணங்கள் உண்டாகும். அஸ்தம் : அனுசரித்து செல்லவும். சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும். --------------------------------------- துலாம் ஜூலை 31, 2026 மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாசனை திரவியங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் கற்பனை வளம் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உருவாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் சித்திரை : புரிதல் உண்டாகும். சுவாதி : லாபங்கள் அதிகரிக்கும். விசாகம் : மேன்மையான நாள். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 31, 2026 உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : ஏற்ற இறக்கமான நாள். அனுஷம் : செலவுகளில் கவனம். கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். --------------------------------------- தனுசு ஜூலை 31, 2026 சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். காப்பீடு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மூலம் : தீர்வுகள் கிடைக்கும். பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திராடம் : மாற்றமான நாள். --------------------------------------- மகரம் ஜூலை 31, 2026 செயல்பாடுகளில் இருந்த தடைகளை அறிவீர்கள். நீண்ட நாள் சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். அந்நியத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : தடைகளை அறிவீர்கள். திருவோணம் : மகிழ்ச்சியான நாள். அவிட்டம் : மாற்றமான நாள். --------------------------------------- கும்பம் ஜூலை 31, 2026 மனதளவில் புதிய இலக்குகள் உருவாகும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேர்வு பணிகளில் கவனத்துடன் இருக்கவும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும்.

Join my WhatsApp group. https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து 31-07-2026 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :* 31-07-2026 தமிழ் ஆண்டு, தேதி - பரபாவ, ஆடி 15 நாள் - மேல் நோக்கு நாள் பிறை - தேய்பிறை *நமது சிவசக்தி Whatsapp சேனலில் இனைய👇* https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *திதி* கிருஷ்ண பக்ஷ துவிதியை - Jul 30 09:30 PM – Jul 31 10:31 PM கிருஷ்ண பக்ஷ திருதியை - Jul 31 10:31 PM – Aug 01 11:07 PM *நட்சத்திரம்* அவிட்டம் - Jul 30 05:43 PM – Jul 31 07:26 PM சதயம் - Jul 31 07:26 PM – Aug 01 08:45 PM *கரணம்* சைதுளை - Jul 30 09:30 PM – Jul 31 10:04 AM கரசை - Jul 31 10:04 AM – Jul 31 10:32 PM வனசை - Jul 31 10:32 PM – Aug 01 10:53 AM *யோகம்* சௌபாக்யம் - Jul 31 12:04 AM – Jul 31 11:53 PM சோபனம் - Jul 31 11:53 PM – Aug 01 11:22 PM *வாரம்* வெள்ளிக்கிழமை *சூரியன் மற்றும் சந்திரன் நேரம்* சூரியோதயம் - 5:57 AM சூரியஸ்தமம் - 6:32 PM சந்திரௌதயம் - Jul 31 7:55 PM சந்திராஸ்தமனம் - Aug 01 7:57 AM *அசுபமான காலம்* இராகு - 10:40 AM – 12:15 PM எமகண்டம் - 3:23 PM – 4:58 PM குளிகை - 7:32 AM – 9:06 AM துரமுஹுர்த்தம் - 08:28 AM – 09:19 AM, 12:40 PM – 01:30 PM தியாஜ்யம் - 03:01 AM – 04:42 AM *சுபமான காலம்* அபிஜித் காலம் - 11:50 AM – 12:40 PM அமிர்த காலம் - 08:17 AM – 10:00 AM பிரம்மா முகூர்த்தம் - 04:21 AM – 05:09 AM *ஆனந்ததி யோகம்* பிரபாபதி Upto - 07:26 PM சௌமியம் *வாரசூலை* சூலம் - West பரிகாரம் - வெல்லம் *சூர்யா ராசி* சூரியன் கடகம் ராசியில் *சந்திர ராசி* ஜூலை 31, 06:37 AM வரை மகரம் ராசி, பின்னர் கும்பம் ______ *வெள்ளி ஹோரை* காலை 06:00 - 07:00 - சுக் - சுபம் 07:00 - 08:00 - புத - சுபம் 08:00 - 09:00 - சந் - சுபம் 09:00 - 10:00 - சனி - அசுபம் 10:00 - 11:00 - குரு - சுபம் 11:00 - 12:00 - செவ் - அசுபம் பிற்பகல் 12:00 - 01:00 - சூரி - அசுபம் 01:00 - 02:00 - சுக் - சுபம் 02:00 - 03:00 - புத - சுபம் மாலை 03:00 - 04:00 - சந் - சுபம் 04:00 - 05:00 - சனி - அசுபம் 05:00 - 06:00 - குரு - சுபம் 06:00 - 07:00 - செவ் - அசுபம் நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். ______ நாளைய (31-07-2026) ராசி பலன்கள் மேஷம் ஜூலை 31, 2026 எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான வாய்ப்பை மேம்படுத்துவீர்கள். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அஸ்வினி : உதவிகள் கிடைக்கும். பரணி : அறிமுகம் ஏற்படும். கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும். --------------------------------------- ரிஷபம் ஜூலை 31, 2026 வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். மூலிகை வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். பயண விஷயங்களில் நிதானம் வேண்டும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பாசன தொடர்பான வசதிகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கிருத்திகை : லாபம் உண்டாகும். ரோகிணி : முன்னேற்றமான நாள். மிருகசீரிஷம் : வசதிகள் மேம்படும். --------------------------------------- மிதுனம் ஜூலை 31, 2026 கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

Join my WhatsApp group. https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை வழிபாட்டின் பலன்கள் பற்றிய பதிவுகள் :* *வழிபாட்டின் பலன்கள்* - அனைத்து விதமான தடைகளும் விலகும். - குடும்பத்தில் சுபிட்சம், செல்வ வளம் மற்றும் ஆரோக்கியம் பெருகும். - மனஅழுத்தம், பயம் மற்றும் கவலைகள் நீங்கும். - தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். - வழக்குகள், பிரச்சினைகள் மற்றும் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். - குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் சிறக்கும். - இறையருள், ஆன்மிக பலம் மற்றும் மன அமைதி கிடைக்கும். - பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும். *காளிகாம்பாள் தேவியின் அருள்* காளிகாம்பாள் தேவியின் திருவடிகளை நம்பிக்கையுடன் சரணடைபவர்களை அன்னை ஒருபோதும் கைவிடமாட்டாள். அவள் பக்தர்களின் கண்ணீரைத் துடைத்து, இருளான வாழ்க்கையில் ஒளியை ஏற்றி, அச்சத்தை அகற்றி, வெற்றிப் பாதையில் நடத்துவாள். ஆடி மாதத்தில் அவளை வழிபடுவது பல மடங்கு புண்ணியத்தையும், தெய்வீக அருளையும் அளிக்கும் என்று ஆகமங்களும் பக்தர்களின் அனுபவங்களும் போற்றுகின்றன. *பிரார்த்தனை* "அன்னையே ஸ்ரீ காளிகாம்பாள் தேவியே! எங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்கள், தடைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கி அருள்புரியுங்கள். எங்கள் இல்லங்களில் ஆரோக்கியம், செல்வ வளம், நல்லிணக்கம், தைரியம் மற்றும் இறைபக்தி என்றும் நிலைத்திருக்க அருள்வாயாக. எங்கள் குடும்பத்தைக் காத்து, தர்மத்தின் வழியில் நடத்தி, நல்வாழ்வையும் நிம்மதியையும் அருள்புரியுங்கள். ஓம் ஸ்ரீ காளிகாம்பாள் தேவியே போற்றி! போற்றி! போற்றி!" ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை ஸ்ரீ காளிகாம்பாள் தேவியை பக்தியுடன் வழிபடுவோர், பராசக்தியின் பரிபூரண அருளைப் பெற்று, துன்பங்கள் நீங்கி, துணிவு, செல்வ வளம், ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக முன்னேற்றத்துடன் வாழ்வார்கள் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும். https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l

https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *"தினம் ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில்,* *மூலவர் : யோகீஸ்வரர்.* *புத்தேரி -629 001,* *நாகர்கோவில்,* *கன்னியாகுமரி.* *காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை வெளியிலிருந்தே தரிசிக்கலாம்.* *+91-4652-275 230, 94871 01770.* *சிறப்பு : பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் கண் திறப்பு வைபவம் நடக்கும். வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது.* *பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார்.* *மூலவராக வணங்கும் சுவரின் மணலையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்கள் இதனை சிறிதளவு நீரில் கரைத்துச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்புகிறார்கள்.* *யோகீஸ்வரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், காவடி எடுத்து காவி வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.* *தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.* *மாம்பால் நைவேத்யம் : வைகாசி விசாகத் தன்று சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கப்படும். "மாம்பால்' எனப்படும் இந்த கலவையை சுவாமிக்கு படைத்து வழிபடுகிறார்கள்.* *பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால், "புற்றேரி' எனப்பட்ட இவ்வூர் "புத்தேரி' என மருவியது.* *முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு "பூலா உடைய கண்டன் சாஸ்தா' என்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார். இங்கேயே ஜீவ சமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், "யோகீஸ்வரர்' என்றும் பெயர் சூட்டினர்.* *கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது.* *திருச்சிற்றம்பலம்*

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁முத்தழல் ஓம்பி னார்கள் மறைநாலும் ஓதி முறையால்வ ணங்கு முதல்வன்_ _🍁செத்தவர் என்பு தன்னை அணியாம கிழ்ந்த திருவாளன் ஒற்றை விடையன்_ _🍁தெத்தென என்று வண்டு தினமூது கின்ற திருநாவ லூரில் உறையும்_ _🍁அத்தனை எண்ணி நாளும் அலர்தூவி ஏத்த அறுமுன்பு செய்த வினையே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என்ற முத்தீ வளர்க்கும் அந்தணர்கள் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதி முறைப்படி வழிபாடு செய்யும் முதல்வன் !! மாண்டவர் எலும்பை மாலையாக அணிகின்ற செல்வன் !! ஒப்பற்ற இடபவாகனன் !! தெத்தென என்று வண்டுகள் எந்நாளும் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற தந்தையைத் தியானித்துத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1551///4272🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹என்று கூற எல்லையிலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்துடையேன் அங்குத் தீங்கு புரிஅமணர் நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறிபா ரித்தன்றி ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம தென்றார் உடைய பிள்ளையார். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *நாவரசர் இவ்வாறு கூறக்கேட்ட ஞானசம்பந்தர், அளவில்லாத பெருமை பொருந்திய திருநீற்றைப் போற்றுகின்ற அவ்விரு பெருமக்களையும் அங்குச் சென்று காணும் கருத்துடையேன். அத்தீமைகளைச் செய்கின்ற சமணர்களின் நிலைமையை அழிவித்துச் சைவ நெறியை வளர்த்தன்றி வேறு ஒரு செயல் செய்ய மாட்டேன்! உம் ஆணை! என்று அருளிச் செய்தவராய்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருமந்திரம்🌹🙏* *☀️திருமுறை🔟☀️* *🦚பாடல்:2911///3000🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹கோரை எழுந்து கிடந்த குளத்தினில் 🌹ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது 🌹நாரை படிகின்றாற் போலல்ல நாதனார் 🌹பாரை கிடக்கப் படிகின்ற வாறே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *உள்ளம் என்ற குளத்தில் ஆசை என்னும் கோரைப் புற்கள் மண்டிக் கிடந்தன. பாசம் என்னும் ஆரையும் அதில் நீண்டு நிறைந்து இருந்தது. ஆரையும், கோரையும் நிரம்பி இருக்கும் குளத்தில் மீன்பிடிக்கும் நாரை போன்றவன் அல்ல நம் நாதன்! அவன் சலனம் அற்ற, தெளிந்த நீர் நிலை போன்ற, தூய உள்ளத்தில் சீவன் என்னும் மீனை பிடிப்பவன் ஆவான்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸திருமூலர்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹திருவையாறு🌹* *🦚பாடல்:0955///1070🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய்நின்றகால் ஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், பொன் போன்ற திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை3️⃣☀️* *🌹🌻திருவிளமர்🌻🌹* *🦚பாடல்:0955///1358🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச் சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய அந்தணர் புகலியு ளழகம ரருமறை ஞானசம் பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை பறையுமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண் நீற்றினை அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை ( விகிர்தர் ), சிந்தையுள் இடையறாது இருத்தும்படி, அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவோர் வினை அழியும்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருஞானசம்பந்தர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻