ar
Feedback
சிவசக்தி டெலிகிராம் சேனல்

சிவசக்தி டெலிகிராம் சேனல்

الذهاب إلى القناة على Telegram

எம் கடன் பணிசெய்து கிடப்பதே

إظهار المزيد
486
المشتركون
لا توجد بيانات24 ساعات
-37 أيام
لا توجد بيانات30 أيام
أرشيف المشاركات
ஒழுக்கம் மட்டுமே இறைநிலை ஒரு கிராமத்தில் வெகு காலமாக மழையே பெய்யாமல் இருந்தது . கிணறுகள் குளங்கள் எதிலும் துளி நீர் கூட இல்லை.... அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடைசியாக மழையை வருவிக்கும் ஒருவரை தங்கள் கிராமத்துக்கு அழைத்து வரலாம் என்று முடிவு செய்தனர்.... மழையை வருவிக்கும் சக்தி காெண்டவர் தூரத்து கிராமம் ஒன்றில் வசித்து வந்தார்.. அவருக்கு தூது அனுப்பி செய்தி சாெல்லப் பட்டது... மழையின்றி நிலங்கள் எல்லாம் தரிசாக கிடக்கிறது என்றும் முடிந்தவரை மழை சீக்கிரம் வர வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது... மழையை வருவிப்பவரும் உடனடியாக கிராமத்திற்கு வர ஒப்புக் காெண்டார்... அவராே பழுத்த முதியவராக இருந்தார்... அந்தக் கிராமத்தில் தனக்கென்று தன்னந் தனியாக ஒரு குடிசை வேண்டுமெனவும் மூன்று நாட்களுக்கு தன்னை அங்கே யாரும் தாெந்தரவு செய்யக் கூடாது என்பதுமே அவர் இட்ட நிபந்தனை.... அவருக்கு உணவு தண்ணீர் எதுவுமே தேவை இல்லை எனவும் கூறி விட்டார்... அவருடைய நிபந்தனைகள் ஏற்றுக் காெள்ளப் பட்டன.... மூன்றாம் நாள் மாலையில் அந்தக் கிராமத்தின் மீது கருத்த மேகங்கள் திரண்டன... சட சடவென மழை பெய்யத் துவங்கியது.... அடி அடியென பெய்த மழையில் அந்தக் கிராமமே மகிழ்ச்சியில் திளைத்தது... மழையை வருவித்த முதியவர் தங்கியிருந்த குடிசை முன்பாக நன்றியுடன் அந்த கிராமத்து மக்கள் கூடினர்.... இந்த அற்புதத்தை எப்படி சாதித்தீர்கள்? எங்களிடம் தாங்கள் கூற வேண்டும் என்றனர்... 'அது மிகவும் எளிமையானது' என்று மழையை வருவித்த முதியவர் கூறத் தாெடங்கினார்.... கடந்த மூன்று நாட்களாக நான் என்னை ஒழுங்கில் வைத்து இருந்தேன்... நான் ஒழுங்கிற்குள் வந்தால் இந்த உலகம் ஒழுங்கிற்குள் வரும் என்பது எனக்குத் தெரியும்.. வறட்சி நீங்கி மழை வரும் என்பதும் எனக்கு தெரியும் என்றார்.... நீங்கள் ஒழுங்குக்குள் இருக்கும் பாேது உங்களை சுற்றி இயங்கும் முழு உலகமும் உங்களுக்காக ஒழுங்குக்கு வரும். உங்கள் ஒழுங்கு குலையும் பாேது உங்களை சுற்றி இயங்கும் முழு உலகின் ஒழுங்கும் குலையும்.... ஓஷாே....

ஏழாம் அறிவிற்கான தூண்டுகோள்கள்: நமக்கு ஏழாம் அறிவு உயிர்பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். ➤ முதல் ஆறு அறிவுகள் சரியாக வேலை செய்ய வேண்டும். ➤ பொழுதை வீணாகப் போக்குவதில் அதிக நேரத்தைச் செலவிடக்கூடாது. ➤ தீய மற்றும் எதிர்மறையான செய்திகள் மற்றும் பேச்சுவார்த்தையும் கேட்டலையும் தவிர்க்க வேண்டும். ➤ உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அக்கறையும் செலுத்த வேண்டும். ➤ உணவிற்காக எந்த உயிரையும் கொல்லக் கூடாது. ➤ நமக்குப் பிடித்த கலைகள் மற்றும் பாடங்களைக் கற்றுக்கொள்வதில் நேரத்தைச் செலவிட வேண்டும். கற்றதைப் பிறருக்குப் போதிக்க வேண்டும். ➤ அமைதியாகத் தனிமையில் அமர்ந்து நம்மை நாமே கண்காணிக்கப் பழகவேண்டும். நம்முள் இருக்கும் புதையலின் குரலைக் கேட்க முயலவேண்டும். மேற்கூறியவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே மனம் ஒருநிலைப்படும். மனம் ஒருநிலைப்பட்டால் மட்டுமே, நாம் யார் என்பதை நம் உள்ளுணர்வு வெளிப்படுத்தும். அதற்கேற்பச் செயல்பட்டால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். உணவைச் சீர்படுத்தி, குடிநீரை நெறிப்படுத்தி, எண்ணங்களை நேர்படுத்தி, அன்பைப் பெருக்கி, செய்யும் செயல்களைப் புனிதப்படுத்தி, எல்லா உயிர்களையும் நம் உயிர்போல் நேசித்து, இயற்கையை வணங்கி, கடவுளைப் போற்றி ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே ஏழாம் அறிவு திறவு கொள்கிறது. இதுவே அடுத்த எட்டாம் அறிவை நோக்கி இட்டுச் செல்லும். உங்களைத் தேடும் புதையல் நூலிலிருந்து

*"தினம் ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில்,* *மூலவர் : சாஸ்தா.* *கேப் ரோடு,* *ஆசிரமம்,* *சுசீந்திரம் அஞ்சல்-629 704,* *கன்னியாகுமரி.* *காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை, மாலை 6:00 மணி 7:00 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.* *+91-94434 94473, 94430 02731.* *சிறப்பு : பங்குனி உத்திரத்தை ஒட்டி இவருக்கு வரும் 7, 8ல் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பொதுவாக சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுதம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் சாஸ்தா இல்லை. எதிரில் யானை, குதிரை வாகனங்கள் உள்ளன.* *புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது.* *பிரகாரத்தில் மாடன் தம்பிரான், பூதத்தார், ஈனன், வன்னியர் ஆகிய தெய்வங்கள் இருக்கின்றனர்.* *கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.* *பிரார்த்தனை நிறைவேறியவுடன் சாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.* *யாக குண்ட தீர்த்தம் : அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசூயா தன் கணவர் மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவளைப் போல பெண்கள் கணவருடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அனுசூயா அவர்களை சாப்பிட அழைத்தாள். நிர்வாண நிலையில் பரிமாறினால் தான் தாங்கள் சாப்பிடுவோம் என்று துறவிகள் நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்ட அனுசூயா சற்றும் கலங்கவில்லை. தன் கணவர் அத்திரியின் பாதத்தை பூஜித்த தீர்த்தத்தை கையில் எடுத்தாள். அதை மும்மூர்த்திகள் மீது தெளித்தாள். மூவரும் குழந்தைகளாயினர். பின்பு மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசூயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர். இவ்வாறு அத்திரி ஆஸ்ரமம் அமைத்து தங்கியதால் இத்தலம், "ஆஸ்ரமம்' என்று அழைக்கப்பட்டு ஆஸ்ராமம் என திரிந்தது. அத்திரி உண்டாக்கிய தீர்த்தம், இக்கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இதை யாக குண்ட தீர்த்தம் என்கிறார்கள். சிவனுக்குரிய வில்வமே இத்தலத்தில் விருட்சம். இங்குள்ள மூன்று வில்வ மரங்களில் 3 இலை, 5 இலை, 9 இலை என வெவ்வேறான எண்ணிக்கையில் கிளை விடுவது சிறப்பு.* *பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவை குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர்.* *பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையைத் தடவ கண்பார்வை கிடைத்தது. வியந்தவர் சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் "அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா' (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன்) என்று பெயர் பெற்றார்.* *பொதுவாக சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார் ஆனால், இக்கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுதம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் சாஸ்தா இல்லை. எதிரில் யானை, குதிரை வாகனங்கள் உள்ளன.*

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁சந்திரன் உய்யு மாறு தயையேபு ரிந்து சடைமீது சூடு பெருமான்_ _🍁சுந்தரி பாகன் நீறு துதைமார்பன் எந்தை சுடர்சூலம் ஏந்தும் இறைவன்_ _🍁தெந்தென என்று வண்டு மதுவுண்டு பாடு திருநாவ லூரில் உறையும்_ _🍁அந்தரர் கோனை நாளும் அலர்தூவி ஏத்த அறுமுன்பு செய்த வினையே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_சாபத்தால் தேய்ந்து அழியவிருந்த சந்திரன் உய்யும்படி மிக இரங்கி அருள்புரிந்து தன் சடைமேல் சூடிய பெருமான் !! அழகிய உமையை ஒரு பாகமாக உடையவன் !! மார்பில் திருநீற்றைப் பூசியவன் !! எம் தந்தை !! கையில் நெருப்பையும் சூலத்தையும் ஏந்திய இறைவன் !! பூக்களின் மதுவை உண்டு வண்டுகள் தெந்தென என்று ஒலிக்கின்ற திருநாவலூரில் உறைகின்ற தேவர்கள் தலைவனான சிவபெருமானைத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1553///4272🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹வேணு புரக்கோன் எழுந்தருள விடைகொண் டிருந்த வாகீசர் பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றிசைத்துப் பேணி இருந்தங் குறையுநாள் பெயர்வார் வீழி மிழலையமர் தாணு வின்தன் செய்யகழல் மீண்டுஞ் சார நினைக்கின்றார். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அந்நிலையில் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளவே, அவரிடம் விடை கொண்டு அங்குத் தங்கியிருந்த திருநாவுக்கரசரும், தாம் கொண்ட அன்பினால் திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கிப் போற்றி செய்து, அங்கு வீற்றிருந்த அமயத்து, அங்கிருந்தும் புறப்பட்டுச் செல்வாராகித் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் சிறந்த திருவடிகளை மீளவும் அடைந்து வணங்க நினைப்பவராய்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருமந்திரம்🌹🙏* *☀️திருமுறை🔟☀️* *🦚பாடல்:2913///3000🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹உழவொன்று வித்து ஒருங்கின காலத்து 🌹எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி 🌹தழுவி வினைசெய்து தான்பய வாது 🌹வழுவாது போவன் வளர்சடை யோனே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *அகண்ட சிவத்தை அடைவிக்கும் உழவு என்பது சீவன் செய்யும் தவம் ஆகும். அந்தத் தவத்தால் சீவனின் உள்ளம் ஒருமை அடையும். எண்ணங்கள் என்னும் மழை அங்கு பெய்யாது. சிவ பூமிக்குரிய சக்தி பொருந்தும். மலபரிபாகம் உண்டாகும். வினைகள் தம் போகத்தைத் தாரா. அங்கு வளரும் ஒளிக் கதிர்களை உடைய சிவன் வந்து பொருந்தி விளங்குவான்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸திருமூலர்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹திருக்கச்சியேகம்பம்🌹* *🦚பாடல்:0957///1070🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹எத்தைக்கொண் டெத்தகை யேழை யமனொ டிசைவித்தெனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக் கோகுசெய்தாய் முத்திற் றிரளும் பளிங்கினிற் சோதியு மொய்பவளத் தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ?* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை3️⃣☀️* *🌹திருக்கொச்சைவயம்🌹* *🦚பாடல்:0957///1358🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹ஏலமா ரிலவமோ டினமலர்த் தொகுதியா யெங்குநுந்திக் கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும் நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே யஞ்சனீயே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *மடநெஞ்சமே ! மணம் கமழும் ஏலம், இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு, அழகிய மிளகுக் கொடிகளோடு, நன்கு பழுத்த கனிகள் கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக ! நீ அஞ்சாதே.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருஞானசம்பந்தர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருவருட்பா🌹🙏* *☀️திருமுறை2️⃣☀️* *🦚இரண்டாம் தொகுதி🦚* *🌹அருள் மொழி மாலை🌹* *🌷திருவொற்றியூர்🌷* _🌻அஃதாவது பிச்சைத் தேவர் நங்கையின் மனைக்குப் போந்து கவர் பொருள்பட வழங்கி யருளிய மொழிகட்கு நங்கை தோழியோடு உரையாடி யுசாவுவதாம். தேவரது அருண் மொழிகளே பொருளாய் நின்று சொல் மாலையாவதால், இஃது அருண் மொழி மாலை என்ற பெயர் பெறுகிறது._ *🦚பாடல்:1737///5818🦚* ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ 🌹ஒற்றி நகரீர் மனவாசி யுடையார்க் கருள்வீர் நீரென்றேன் பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார் மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுணரும் வகைநான்கும் அற்றி டென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *விளக்கம் :* *திருவொற்றியூரை யுடைய பிச்சைத் தேவரே, மனமாகிய குதிரையை யூர்வார்க்கே நீர் உமது திருவருளை வழங்குவீர் என்று சொன்னேனாக, வாசியைப் பற்றிச் “சி” என்று தொடங்கிச் சிவா என்று ஓதிப் பயில்பவர்க்கே யாம் திருவருள் வழங்குவது என்று மொழிந்தார். அது கேட்டு, நான் இதனை உணரமாட்டேன் ஆகின்றேன் என்றேனாக, அவர் நீ வருந்த வேண்டா, உணர்ந்து கொள்ளும் வகை நான்கையும் ஒழித்து விடுக என மொழிகின்றார். அத்தேவராகிய ஐயர் சொன்ன அருள் மொழிக்குப் பொருள் என்னையோ.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🦚🔥வள்ளலார்🔥🦚* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣    *திருமுறை ஓதுவோம்*      *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠     *_🌷சிவ வணக்கம்🌷_* *🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்  உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷        *🌷சிவன் துதி🌷* *🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_சமய குரவர்கள் துதி_* *🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!* *🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!* *🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!* *🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_* *🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.* *_திருநாவுக்கரசு சுவாமிகள்_* *🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.* *_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_* *🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.* *_மாணிக்கவாசகர் சுவாமிகள்_* *🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_*

வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். தற்பெருமையான பேச்சுகளை தவிர்க்கவும். கால்நடை செயல்களில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் மாற்றமான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் அவிட்டம் : உதவிகள் சாதகமாகும். சதயம் : செயல்களில் கவனம். பூரட்டாதி : மாற்றமான நாள். --------------------------------------- மீனம் ஆகஸ்ட் 01, 2026 அவசரம் இன்றி எதிலும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம் பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும். ரேவதி : குழப்பம் நீங்கும்.

சுபகாரிய தொடர்பான செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிருகசீரிஷம் : திருப்தியான நாள். திருவாதிரை : தெளிவுகள் உண்டாகும். புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும். --------------------------------------- கடகம் ஆகஸ்ட் 01, 2026 விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் புனர்பூசம் : நம்பிக்கையை மேம்படுத்தும். பூசம் : நெருக்கடியான நாள். ஆயில்யம் : கருத்துக்களில் கவனம். --------------------------------------- சிம்மம் ஆகஸ்ட் 01, 2026 எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மகம் : ஆதாயம் உண்டாகும். பூரம் : அலைச்சல் ஏற்படும். உத்திரம் : கனவுகள் பிறக்கும். --------------------------------------- கன்னி ஆகஸ்ட் 01, 2026 நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும். அஸ்தம் : மேன்மை ஏற்படும். சித்திரை : காரியங்கள் கைகூடும். --------------------------------------- துலாம் ஆகஸ்ட் 01, 2026 உடன் இருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மனதில் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம் சித்திரை : புதுமையான நாள். சுவாதி : குழப்பங்கள் குறையும். விசாகம் : விரயங்கள் உண்டாகும். --------------------------------------- விருச்சிகம் ஆகஸ்ட் 01, 2026 பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் விசாகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அனுஷம் : சாதகமான நாள். கேட்டை : ஆர்வமின்மை குறையும். --------------------------------------- தனுசு ஆகஸ்ட் 01, 2026 நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகப் பணிகளில் முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் மூலம் : முயற்சிகள் கைகூடும். பூராடம் : அலைச்சல் உண்டாகும். உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும். --------------------------------------- மகரம் ஆகஸ்ட் 01, 2026 நண்பர்களிடத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : பொலிவு மேம்படும். திருவோணம் : அறிமுகம் ஏற்படும். அவிட்டம் : நம்பிக்கை மேம்படும். --------------------------------------- கும்பம் ஆகஸ்ட் 01, 2026

Join my WhatsApp group. https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து 01-08-2026 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :* 01-08-2026 தமிழ் ஆண்டு, தேதி - பராபவ, ஆடி 16 நாள் - மேல் நோக்கு நாள் பிறை - தேய்பிறை *நமது சிவசக்தி Whatsapp சேனலில் இனைய👇* https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *திதி* கிருஷ்ண பக்ஷ திருதியை - Jul 31 10:31 PM – Aug 01 11:07 PM கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி - Aug 01 11:07 PM – Aug 02 11:15 PM *நட்சத்திரம்* சதயம் - Jul 31 07:26 PM – Aug 01 08:45 PM பூரட்டாதி - Aug 01 08:45 PM – Aug 02 09:37 PM *கரணம்* வனசை - Jul 31 10:32 PM – Aug 01 10:53 AM பத்திரை - Aug 01 10:53 AM – Aug 01 11:07 PM பவம் - Aug 01 11:07 PM – Aug 02 11:15 AM *யோகம்* சோபனம் - Jul 31 11:53 PM – Aug 01 11:22 PM அதிகண்டம் - Aug 01 11:22 PM – Aug 02 10:29 PM *வாரம்* சனிக்கிழமை *சூரியன் மற்றும் சந்திரன் நேரம்* சூரியோதயம் - 5:58 AM சூரியஸ்தமம் - 6:32 PM சந்திரௌதயம் - Aug 01 8:32 PM சந்திராஸ்தமனம் - Aug 02 8:46 AM *அசுபமான காலம்* இராகு - 9:06 AM – 10:40 AM எமகண்டம் - 1:49 PM – 3:23 PM குளிகை - 5:58 AM – 7:32 AM துரமுஹுர்த்தம் - 07:38 AM – 08:28 AM தியாஜ்யம் - 03:23 AM – 05:02 AM *சுபமான காலம்* அபிஜித் காலம் - 11:50 AM – 12:40 PM அமிர்த காலம் - 01:09 PM – 02:50 PM பிரம்ம முகூர்த்தம் - 04:22 AM – 05:10 AM *ஆனந்ததி யோகம்* அனந்தம் Upto - 08:45 PM காலதண்ட *வாரசூலை* சூலம் - கிழக்கு பரிகாரம் - தயிர் *சூர்யா ராசி* சூரியன் கடகம் ராசியில் *சந்திர ராசி* கும்பம் (முழு தினம்) ______ *சனி ஹோரை* காலை 06:00 - 07:00 - சனி - அசுபம் 07:00 - 08:00 - குரு - சுபம் 08:00 - 09:00 - செவ் - அசுபம் 09:00 - 10:00 - சூரி - அசுபம் 10:00 - 11:00 - சுக் - சுபம் 11:00 - 12:00 - புத - சுபம் பிற்பகல் 12:00 - 01:00 - சந் - சுபம் 01:00 - 02:00 - சனி - அசுபம் 02:00 - 03:00 - குரு - சுபம் மாலை 03:00 - 04:00 - செவ் - அசுபம் 04:00 - 05:00 - சூரி - அசுபம் 05:00 - 06:00 - சுக் - சுபம் 06:00 - 07:00 - புதன் - சுபம் நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். ______ நாளைய (01-08-2026) ராசி பலன்கள் மேஷம் ஆகஸ்ட் 01, 2026 பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாட்டு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : அறிமுகம் ஏற்படும். பரணி : ஆர்வம் அதிகரிக்கும். கிருத்திகை : மரியாதை அதிகரிக்கும். --------------------------------------- ரிஷபம் ஆகஸ்ட் 01, 2026 மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கிய நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். --------------------------------------- மிதுனம் ஆகஸ்ட் 01, 2026 வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். இணையம் மற்றும் வர்த்தக தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும்.

Join my WhatsApp group. https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து சிவமஹா புராணம் பற்றிய பதிவுகள் :* சிவமஹா புராணம் என்பது பதினெண் மஹாபுராணங்களில் ஒன்றாகும். இது சிவபெருமானின் பரம்பொருள் தன்மை, அவரது லீலைகள், சக்தியின் மகிமை, பக்தியின் மேன்மை, தர்மம், யோகம், ஞானம் மற்றும் மோட்ச மார்க்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கும் மிகப் புனிதமான நூலாகக் கருதப்படுகிறது. *1. சிவமஹா புராணத்தின் தோற்றம்* புராண மரபின்படி, சிவபெருமான் முதலில் எண்ணற்ற ஸ்லோகங்களைக் கொண்ட பரமரகசிய ஞானமாக இதனை வெளிப்படுத்தினார். பின்னர் தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்களின் நலனுக்காக அது சுருக்கப்பட்டு பரவியது. வேதவியாசர் அதை மஹாபுராண வடிவில் தொகுத்து வழங்கியதாக சைவ மரபு கூறுகிறது. *2. சிவமஹா புராணத்தின் நோக்கம்* இந்தப் புராணம் மனிதனுக்கு சிவபக்தியை வளர்த்தல், தர்ம வாழ்க்கையை கற்பித்தல், கர்மத்தின் உண்மையை விளக்குதல், சிவலிங்க வழிபாட்டின் மகிமையை எடுத்துரைத்தல், பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமையை உணர்த்தல், பிறப்பு–இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை (மோட்சம்) பெறும் வழியை கூறுதல். *3. சிவமஹா புராணத்தின் அமைப்பு* பழைய மரபுகளில் 12 சம்ஹிதைகள் இருந்ததாகவும், இன்றைய பரவலான பதிப்புகளில் 7 சம்ஹிதைகள் முக்கியமாகக் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. *மரபு கூறும் 12 சம்ஹிதைகள்* 1. வித்யேஸ்வர சம்ஹிதை 2. ருத்ர சம்ஹிதை 3. விநாயக சம்ஹிதை 4. உமா சம்ஹிதை 5. மாத்ரு சம்ஹிதை 6. ஏகாதச ருத்ர சம்ஹிதை 7. கைலாச சம்ஹிதை 8. சதருத்ர சம்ஹிதை 9. கோடிருத்ர சம்ஹிதை 10. ஸஹஸ்ரகோடி ருத்ர சம்ஹிதை 11. வாயவீய சம்ஹிதை 12. தர்ம சம்ஹிதை https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l

https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து சிவ மஹா புராணத்தில் தற்போது அதிகம் அறியப்படும் 7 சம்ஹிதைகள் பற்றிய பதிவுகள் :* *(1) வித்யேஸ்வர சம்ஹிதை* சிவனின் பரம்பொருள் நிலை. சிவலிங்கத்தின் தோற்றம். பஞ்சாட்சர மந்திர மகிமை. பூஜை முறைகள். விரதங்கள். சிவராத்திரி பெருமை ஆகியவற்றை உள்ளடக்கியது. *(2) ருத்ர சம்ஹிதை* மிகப்பெரிய பகுதி. இதில் சதியின் பிறப்பு, தட்சன் யாகம், சதியின் அக்னி பிரவேசம், வீரபத்திரர் அவதாரம், பார்வதி அவதாரம், பார்வதி தவம், சிவ–பார்வதி திருமணம், குமாரசுவாமி பிறப்பு, தாரகாசுரன் வதம், கணேசர் அவதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. *(3) சதருத்ர சம்ஹிதை* ருத்ரனின் பல வடிவங்கள், அர்த்தநாரீஸ்வர தத்துவம், நந்தீஸ்வரர், பைரவர், காசியின் மகிமை ஆகியவற்றை உள்ளடக்கியது. *(4) கோடிருத்ர சம்ஹிதை* இதன் சிறப்பு 12 ஜோதிர்லிங்கங்களின் தோற்றம், சோமநாத், மல்லிகார்ஜுனா, மகாகாளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், கேதார்நாத், பீமசங்கர், காசி விஸ்வநாதர், திரிம்பகேஸ்வரர், வைத்தியநாதர், நாகேஸ்வரர், இராமேஸ்வரம், கிருஷ்ணேஸ்வரம் (கிருஷ்ணேஸ்வர/கிருஷ்ணேஸ்வரர் – கிருஷ்ணேஸ்வர்/கிருஷ்ணேஷ்வர் என்றும் வழங்கப்படுகிறது). *(5) உமா சம்ஹிதை* சக்தி தத்துவம், குடும்ப வாழ்க்கை, பக்தியின் மகிமை, பெண்களின் தர்மம், சிவ–சக்தி ஒன்றே என்ற உண்மை. *(6) கைலாச சம்ஹிதை* யோகம், தியானம், சந்நியாசம், குருவின் பெருமை, ஞானம், ஆன்ம அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *(7) வாயவீய சம்ஹிதை* உலகப் படைப்பு, பிரளயம், காலச் சக்கரம், யுகங்கள், பிரம்மா–விஷ்ணு–ருத்ரர் செயல்கள், மோட்ச மார்க்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சக்திவாய்ந்த நாள். குறிப்பாக, இந்த நாளில் காளி, துர்க்கை மற்றும் மாரியம்மன் போன்ற காவல் தெய்வங்களை வழிபடுவது குடும்பத்தில் உள்ள திருஷ்டிகளையும், தடைகளையும் நீக்கும் என்பது நம்பிக்கை இன்று மாலை வீட்டின் பூஜை அறையில் ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி, அம்மனை ஆவாகனம் செய்து வழிபட வேண்டும். அம்மன் சிலைக்கு அல்லது படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மல்லிகை அல்லது செவ்வரளி பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இராகு கால துர்க்கை பூஜையின் போது (காலை 10:30 - 12:00) எலுமிச்சம்பழ விளக்கு அல்லது நெய் விளக்கேற்றி வழிபட, திருமணத் தடைகள் மற்றும் செவ்வாய் தோஷங்கள் நீங்கும். ஆடி வெள்ளியன்று அம்மனை துதிப்பதற்குரிய சில எளிய மற்றும் சக்திவாய்ந்த மந்திரங்கள்: 1. துர்க்கை அம்மன் மூல மந்திரம் (ராகு கால பூஜை சிறப்பு): "ஓம் தம்பதி வித்மஹே மகா சக்த்யை தீமஹி தன்னோ துர்க்கா ப்ரசோதயாத்" 2. மங்களங்கள் அருளும் ஸ்லோகம்: "ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே ஸரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே" 3. எளிய அம்மன் போற்றி: "ஓம் சக்தி, பராசக்தி, மகாசக்தி போற்றி!" (இதனை 108 முறை கூறலாம்). இந்த மந்திரங்களை இன்று மாலை விளக்கேற்றி 18, 54 அல்லது 108 முறை உச்சரிப்பது குடும்பத்தில் அமைதியையும், சகல சௌபாக்கியங்களையும் தரும். அம்மனுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கல், பாயசம் அல்லது துள்ளுமாவு (வறுத்த பச்சரிசி மாவு, வெல்லம் கலந்தது) பிரசாதமாக படைக்கலாம். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு, பழம்), மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல் தருவது மங்களத்தை பெருக்கும இன்று பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திர விரத நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.