485
订阅者
无数据24 小时
无数据7 天
-830 天
帖子存档
https://t.me/sivasakthichannel2
*நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து ஆனி திருவோணம் வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :*
அதிகாலையில் நீராடி வீட்டில் விளக்கேற்றி, துளசி இலைகளால் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.
வழிபாட்டின்போது "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
திருப்பாவை, திருவாய்மொழி போன்ற வைணவப் பிரபந்தங்களைப் படிப்பது மிகவும் சிறப்பாகும்.
இயன்றவர்கள் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்யலாம்.
துளசி மாலை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம்.
*செய்ய வேண்டிய தானங்கள்*
ஆனி திருவோணம் அன்று அன்னதானம், ஆடை தானம், கல்வி உதவி, ஏழை எளியோருக்கு உணவு வழங்குதல், கோயில்களுக்கு துளசி, நெய், எண்ணெய், பூக்கள் வழங்குதல் போன்ற தானங்கள் செய்வது பல மடங்கு புண்ணியத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
*ஆனி திருவோணத்தில் கிடைக்கும் பலன்கள்*
மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
மகாலட்சுமியின் அருளால் செல்வ வளம் பெருகும்.
குடும்பத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும்.
மனக்கவலைகள் குறையும்.
தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி ஏற்படும்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
உடல்நலம் மேம்படும்.
வாழ்க்கையில் நம்பிக்கையும் ஆன்மீக ஈடுபாடும் அதிகரிக்கும்.
https://t.me/sivasakthichannel2
*நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து ஆனி திருவோணம் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :*
ஆனி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன்; அதன் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார்.
எனவே இந்த நாளில் மகாவிஷ்ணு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
மேலும் இந்த நாள் ஆன்மீக வளர்ச்சி, செல்வ வளம், குடும்ப நலம் மற்றும் மன அமைதியை அளிக்கும் புண்ணிய நாளாக போற்றப்படுகிறது.
*திருவோணம் நட்சத்திரத்தின் மகிமை*
திருவோணம் 27 நட்சத்திரங்களில் 22-வது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் ஒழுக்கம், பணிவு, கல்வி, ஞானம், தர்மம், பக்தி மற்றும் செல்வ வளம் ஆகியவற்றை குறிக்கிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக நல்ல குணம், பிறருக்கு உதவும் மனப்பான்மை, இறைநம்பிக்கை மற்றும் நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
*ஆனி திருவோணத்தின் சிறப்புகள்*
இந்த நாளில் மகாவிஷ்ணு, மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறந்த பலன்களைத் தரும்.
குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மனநிம்மதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பு முன்னேற்றம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி புதிய வாய்ப்புகள் உருவாகும்.
திருமணத் தடை, குழந்தைப் பேறு தாமதம் போன்றவற்றிற்காக இந்த நாளில் இறைவனை வேண்டினால் நல்ல பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆனி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம், இறை அருளையும் வளமான வாழ்க்கையையும் வேண்டி வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில் பக்தியுடன் மகாவிஷ்ணுவை வழிபட்டு, தான தர்மங்கள் செய்து, நல்ல செயல்களில் ஈடுபட்டால் மனநிம்மதி, குடும்ப நலம், செல்வ வளம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றை இறையருளால் பெறலாம் என்ற நம்பிக்கை பரவலாக நிலவுகிறது.
நீங்களே செய்யக்கூடிய எளிய வாஸ்து பூஜை
ஒரு கலசத்தில் கங்கை, காவிரி, கோதாவரி போன்ற தீர்த்தங்களுடன் வில்வம், துளசியிட்டு ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 108 முறை ஓதி, இந்த தீர்த்தத்தை வீடு முழுதும் தெளியுங்கள்..!
ஸ்ரீவாஸ்து காயத்ரீ மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
பூர்ஸ்வஸ்தி ரூபாய தீமஹி
தந்நோ வாஸ்து மூர்த்தி பிரசோதயாத்
உங்கள் இல்ல, அலுவலக நிலை வாசல் படிகளிலும், ஆலயங்களிலும் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு மாவிலைத் தோரணம் கட்டி மண்டியிட்டுப் பிரார்த்தித்து புனித நதி தேவதைகளையும், நீரோட்ட தேவதைகளையும், வாஸ்து தேவதைகளையும், வாஸ்து மூர்த்தியையும் ஆவாகனம் ஆகுமாறு வேண்டிடுங்கள்!
வாஸ்து மூர்த்திக்கு உரித்தான எண் 9 என்பதால் நல்ல சுத்தமான தரையில் தூய மண்ணைப் பரப்பி எட்டுத் திக்குகளில் ஓம் எழுதி நடுவில் ஒன்பதாவது முறையாக ஓம் என்று எழுதி மண்ணைச் சுற்றி ஒன்பது செங்கற்களை வைத்துத் தெரிந்த முறையில் ஒரு எளிய ஹோம குண்டத்தைக் கட்டிக் கொள்ளுங்கள்..!
இதனுள் ஒரு பெரிய கற்பூரக் கட்டியை வைத்து அதன் மேல் அரசு, ஆல், புரசு போன்று சமித்துக் குச்சிகளை அடுக்கி வைத்திடுங்கள்
ஒரு மரக் கரண்டியில் தாமரைத் திரி அல்லது பஞ்சுத் திரி வைத்து ஹோமத்திற்காக பசு நெய் வைத்துக் கொண்டு திரியில் ஜோதி ஏற்றி முதலில் ஸ்ரீவிநாயக காயத்ரீ கூறி ஹோம குண்டத்தில் உள்ள கற்பூரத்தை ஏற்றுங்கள்
பிறகு உங்கள் குல தெய்வத்திற்கான காயத்ரீ, பிள்ளையார், சிவன், முருகன் போன்ற அனைத்து தெய்வ மூர்த்தியர்க்கான காயத்ரீ மந்திரம் கூறி அல்லது போற்றித் துதிகளை ஓதி ஹோம வழிபாட்டைத் ஆரம்பியுங்கள்
பின் கீழ்கண்ட ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதியை ஒவ்வொன்றாக கூறி எளிய ஆஹுதிகளை ஹோமத்தில் இட்டு ஹோம வழிபாட்டைத் தொடருங்கள்
ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி
1. ஓம் பூ புவ சுவர்க மங்கள சுவாமியே போற்றி!
2. ஓம் பூ புவ சுவர்க நிலம் பூந்தகையே போற்றி!
3. ஓம் பூ புவ சுவர்க நீர், நிலத் தொகையனே போற்றி!
4. ஓம் பூ புவ சுவர்க புவன வடிவோனே போற்றி!
5. ஓம் பூ புவ சுவர்க பூமத்ய மூர்த்தியே போற்றி!
6. ஓம் பூ புவ சுவர்க பூலோக நாதரே போற்றி!
7. ஓம் பூ புவ சுவர்க பூமண்டல தெய்வமே போற்றி!
8. ஓம் பூ புவ சுவர்க புவன வளச் செல்வமே போற்றி!
9. ஓம் பூ புவ சுவர்க நிலமண்டல தேவா போற்றி!
10.ஓம் பூ புவ சுவர்க தாவரத் துறையுறை தாளா போற்றி!
11. ஓம் பூ பூவ சுவர்க பிருதிவிப் பரம்பொருள் தேவா போற்றி!
12. ஓம் பூ புவ சுவர்க இகபர நிலவழி நித்யனே போற்றி!
13. ஓம் பூ புவ சுவர்க பூநாத கான புவனனே போற்றி!
14. ஓம் பூ புவ சுவர்க அந்தரப் பரம் பொருள் அமுதா போற்றி!
15. ஓம் பூ புவ சுவர்க கீழ்திசை காக்கும் கிரணனே போற்றி!
16. ஓம் பூ புவ சுவர்க மண் உறை மறைவடி மகேசா போற்றி!
17. ஓம் பூ புவ சுவர்க மூலத் தினகரன் முதலுரு போற்றி!
18. ஓம் பூ புவ சுவர்க மறைநில மறைபுலன் மறையே போற்றி!
19. ஓம் பூ புவ சுவர்க வேள்வி முதலாய் விளக்கொளி போற்றி!
20. ஓம் பூ புவ சுவர்க புண்ணியத் திருமால் புறத்துரு போற்றி!
21. ஓம் பூ புவ சுவர்க ஆயிரங் கண் மலர்ப் பரவொளி போற்றி!
22. ஓம் பூ புவ சுவர்க நெய்யுறை சத்திய அழகா போற்றி!
23. ஓம் பூ புவ சுவர்க தர்மத் தலைக் கரு தகையே போற்றி!
24. ஓம் பூ புவ சுவர்க அனைத்துள பருப்பொருள் அருள்மறை போற்றி!
25. ஓம் பூ புவ சுவர்க ஆழிநிலைகொள் அனந்தனே போற்றி!
26. ஓம் பூ புவ சுவர்க ஊழ்வினை அகற்றும் சுந்தரா போற்றி!
27. ஓம் பூ புவ சுவர்க பாழ்மனம் போக்கும் பரந்தாமா போற்றி!
28. ஓம் பூ புவ சுவர்க இதழ் என்றும் இயம்பும் இனியா போற்றி! (இதழ்க் கொடி = ஒரு வகை பூமி கிழங்கு)
29. ஓம் பூ புவ சுவர்க புகழ்பட வாழ்ஒளி வள்ளலே போற்றி!
30. ஓம் பூ புவ சுவர்க தமிழ்த் திருமண் உறை தாடாளா போற்றி [தாடாளன் = பூமியளந்த விக்ரமன்]
31. ஓம் பூ புவ சுவர்க கருத்தூன்றிக் கர்ம எறும்பூரா போற்றி! [எறும்பூர் = திருச்சி திருஎறும்பூர்]
32. ஓம் பூ புவ சுவர்க மருத்துவக் கொடிக்குடி குரு மூர்த்தி போற்றி! [கொடிக்குடி = அற்புத பூமிகா மூலிகை]
33. ஓம் பூ புவ சுவர்க கீற்றுக் காற்றுக் கருவள திருத்தாளா போற்றி!
34. ஓம் பூ புவ சுவர்க காதோலைக் கருத்துக் கண்ணா போற்றி! [ காதோலை = கலச அணிகலன் ]
35. ஓம் பூ புவ சுவர்க பெண்ணினப் பெருமணி பொன்னாளா போற்றி!
36. ஓம் பூ புவ சுவர்க ஓலைப்பாய் ஓர் உறை உருவா போற்றி! [ஓலைப் பாய் = பூமி]
ஆஹுதியில் ஸ்வாஹா எனும் போது அக்னியில் அவசியம் நெய் வார்த்து பொரி, வெட்டிவேர், நவதான்யம் போன்றவற்றை அக்னியில் இட வேண்டும்.
அவரவர் வசதிகேற்ப எளிய வாஸ்து ஹோம பூஜையை நிகழ்த்திடுங்கள்..!
விழி வழியே விழிப்புணர்வு
கண்ணில் உள்ள பாப்பா
வள்ளல் பெருமான் கடைவிரித்த "திருக்கடை"!
உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் ஏழு மாயத் திரைகள். கருப்பு, வெள்ளை, சிவப்பு என கர்ம வினைகள் மூடியுள்ள 'இருள்' கோட்டை
இதையே தைப்பூசம் அன்று வடலூரில் காட்டுகிறார்கள்
வள்ளல் சொன்ன அந்தத் "தனிப்பெருங்கருணை" என்ற சிறு ஒளி கொண்டு,
திரைகளை மெல்ல எரிக்க வேண்டும்.
இதற்கு குரு வேண்டும்.
மாய நீலத் திரை விலகும் கணமே அங்கே நித்யானந்த ஜோதி பேரொளியாய் வெளிப்படும்!
"கண்மணி வாசல் வழியே போனால் - விண்ணக வாசல் திறக்கும்!"
இரு கண்கள் சந்திக்கும் அந்தச் சுழிமுனைப் புள்ளி.
அதுவே இருதயக் கமலத்தின் நுனி; பிராணனின் பிறப்பிடம்!
புறப்பார்வை: பிரபஞ்ச மாயை.அகப்பார்வை: அருட்பெருஞ்ஜோதி!
அந்த ஊசி முனைத் துவாரத்தில் "உணர்வை" (வாசியை) செலுத்த உப்புப் பாவை கடலில் கரைவது போல் 'நான்' எனும் அகந்தை அந்த மகா ஒளியில் கரையும்
"உடம்பினைப் பெற்ற பயனாவது - உடம்பினுள்ளே ஒளியைக் காண்பதே!"
விழி வழி பிராண உணர்வு மேலே ஏற உச்சித் துளையில் (சகஸ்ராரம்) அமுதம்
ஊறும்!
சடம் அழியும் தன்மை மாறும்; ஊன் உடம்பு போய் "ஒளி உடம்பாய்" உயிர் மலரும்!
இது வெறும் வரிகள் அல்ல... வாசி ரகசியம்!
கண்ணுக்குள் இருக்கும் பாப்பாவைக் கொண்டு,
நமக்குள் இருக்கும் இறைவனைச் சந்திக்கும்—
உன்னத யோக தந்திரம்!
சப்தகன்னியர்கள் -1
பிராம்மி தேவி
சப்தகன்னியர்களில் ஒருவரான பிராம்மி தேவி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கருதப்படுகிறார்.
இவரின் மந்திரம்
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்
மந்திரத்தின் பொருள்:
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே:
அன்னப்பறவையை வாகனமாகக் (கொடியாக) கொண்ட தேவியை நாங்கள் அறிகிறோம்.
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி:
கையில் தர்ப்பை அல்லது படைப்புக் கருவிகளைக் கொண்ட தேவியை நாங்கள் தியானிக்கிறோம்.
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்:
அந்தப் பிராம்மி தேவி எங்கள் அறிவைத் தூண்டி, நல்வழியில் வழிநடத்தட்டும்.
பிராம்மி தேவி அறிவாற்றல், படைப்பாற்றல் மற்றும் கல்வியின் அதிபதியாக வணங்கப்படுகிறார்.
இவரின் வாகனம் அன்னப் பறவை..அன்னப்பறவை விவேகத்தின் குறியீடாகும். எனவே, இவர் சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும், தெளிவான அறிவையும் அருள்பவர் என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டுப் பலன்:
இந்த மந்திரத்தை ஓதுவது மனத்தெளிவைத் தரும், கல்வியில் சிறந்து விளங்க உதவும், மேலும் புதிய விஷயங்களைக் கற்கும் திறனை மேம்படுத்தும்..
மாணவர்கள் மற்றும் புதிய நுணுக்கங்களைக் கற்க முயற்சிப்பவர்களுக்கு பிராம்மி தேவியின் வழிபாடு மிகவும் சிறந்தது. இது மந்தமான நிலையைப் போக்கி, கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.
குழப்பமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கவும், மனதின் அலைபாயும் தன்மையைக் கட்டுப்படுத்தி தியான நிலையில் இருக்கவும் இந்த மந்திரம் துணைபுரிகிறது.
பிராம்மி தேவி சப்தகன்னியர்களில் முதல் தெய்வம் என்பதால், குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வீட்டில் உள்ள தீய சக்திகளை நீக்க சப்தகன்னியர் வழிபாட்டில் இவருக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்யும்போது, பிராம்மி தேவியின் சாந்தமான மற்றும் ஒளிமயமான வடிவத்தை மனக்கண்ணில் நிறுத்தி தியானிப்பது உங்கள் கவனத்தை மேம்படுத்தும்.
Repost from திருவாசகத்தேன்
https://t.me/sivasakthigroup
*"தினம் ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,*
*மூலவர் : கைலாசநாதர்.*
*அம்மன்/தாயார் : காமாட்சி.*
*திருமூலஸ்தானம்,*
*காட்டுமன்னார்கோயில்,*
*கடலூர்.*
*காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 4144 267 664.*
*சிறப்பு : பிரதோஷம், சிவராத்திரி. கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு.*
*கி.பி., 710ல் நுசசோழன் என்பவன் இக்கோயிலைக் கட்டினான். முற்கால சோழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. வழுவழுப்பான சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. சான்றாகவும் திகழ்கின்றன.*
*பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.*
*சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.*
*செங்கல் கட்டுமானம் : பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம் அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை.*
*கல்வெட்டுகளும், வரலாறும் : கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம் இதில் காணப்படுகிறது.*
*அகத்தியர் புடைப்புச்சிற்பம் : முப்பெரும் தேவியர்களான, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உலக இன்னல்களைத் தீர்க்க இங்கு உள்ள கைலாசநாதரை வழிபட்டு உள்ளனர். அகத்தியர் சிவனை வணங்குவது போன்றதொரு பெரிய புடைப்புச்சிற்பமும் காணப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் அகத்தியர் சிவனை பூஜிப்பது போன்று உள்ள சந்நிதியில் தினமும் பூஜை நடந்து வருகிறது. கோயில் வளாகம் முழுவதும் பார்த்தீனியம் செடிகளும், முள்புதர்களுமாக காணப்படுகிறது. சுவாமி சிலைகளின் பீடங்கள், கல் தூண்கள், கோயில் மரக்கதவுகள், சுவர்கள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. கொடிமரம், வாகன மண்டபங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகிறது. கலசங்கள் இல்லாமல் விமானங்களும் மொட்டையாக காணப்படுகிறது. ஊர் பொதுமக்கள் இணைந்து ஒரு கால பூஜை மட்டும் நடத்தி வருகின்றனர். இந்த கோயிலைப் புதுப்பிக்க தமிழக பக்தர்கள் முன்வந்தால் மிகப் பெரிய கலைக்கூடம் காப்பாற்றப்படும்.*
*சிவபார்வதி திருமணம் காண உலக உயிர்கள் அனைத்தும் இமயத்தில் குவிந்தனர். இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது. இறைவன் குறுமுனிவரான அகத்தியரை அழைத்து, பூலோகத்தை சமநிலைப்படுத்த வேண்டினார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற பொதிகைக்கு அகத்தியர் சென்றார். வரும் வழியில் பல சிவலிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட லிங்கமே திருமூலஸ்தானம் கைலாசநாதர். பிற்காலத்தில், இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவலிங்கத்தை அகத்தியர் வழிபடும் சன்னதி இங்கு உள்ளது.*
*கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு.*
*திருச்சிற்றம்பலம்*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁வரைபெயர் மதிகேடன் வலிகெட விரலூன்றிச்_
_🍁சுரம்மலி துதிகேட்டு வரமருள் பெருமானை_
_🍁அரையினில் அரவார்த்த அறையணி நல்லூரெம்_
_🍁அரையனை அடைவாரை அருவினை அடையாவே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_கயிலைமலையைப் பெயர்த்த அறிவீனனான இராவணனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி பிறகு, அவன் ஏழு சுரங்கள் பொருந்திய இன்னிசையால் துதிகள் பாடக் கேட்டு இரங்கி, அவனுக்கு வரம் அருளிய பெருமானை !! அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டிய அறையணிநல்லூரில் உறைகின்ற எம் அரசனைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் நெருங்கமாட்டா !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏பெரியபுராணம்🙏*
*☀️திருமுறை1️⃣2️⃣☀️*
*🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்*
*🦚பாடல்:1522///4272🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*கரிய கழுத்தையுடைய தேவ தேவரான இறைவரின் திருவருளால், படியாய்ப் பெற்ற காசினால் பலவாறாகப் பொருந்திய வளங்கள் பலவும் நிறைந்திருப்ப, முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அடியவர் எல்லாரும் வந்து உணவு உண்ணுக என நாளின் இருபோதும் பறைசாற்றி உணவு இட்டனர். அதனால் துன்பம் மிகும் வறுமை நோயைத் தொலைத்திட்டனர்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌼🌸சேக்கிழார்🌸🌼*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹திருமந்திரம்🌹🙏*
*☀️திருமுறை🔟☀️*
*🦚பாடல்:2882///3000🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
🌹குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
🌹உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
🌹முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*தலை என்னும் மலையின் மீது அங்குள்ள ஒளிக் கதிர்கள் கனமழையைப் போலப் பரவும். பிராணன் என்ற மான்கன்று உயரத் தாவித் சீவனின் தலையின் மத்தியில் சென்று மோதும். அங்கு ஊர்த்துவ சகசிரதளம் என்ற ஆயிரம் இதழ்த் தாமைர ஒரு குலை போலப் பழுத்து நிற்கும். அந்தக் குலையில் இருந்து செழித்த சிவக்கனி கீழே உதிர்ந்து விடும். உதிர்ந்த சிவக்கனி கொல்லன் உலையில் உருக்கிய இருப்பு போன்று ஒளிரும். அது சீவனின் மார்புப் பிரதேசத்துக்கு மேலே அமுதத்தைப் பொழியும்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌼🌸திருமூலர்🌸🌼*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹தேவாரம்🌹🙏*
*☀️திருமுறை4️⃣☀️*
*🌹திருவீழிமிழலை🌹*
*🦚பாடல்:0926///1070🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி யஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே ! பேய்களைத் தன் விருப்பப்படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே ! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே ! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌺திருநாவுக்கரசர்🌺*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹தேவாரம்🌹🙏*
*☀️திருமுறை3️⃣☀️*
*🌹🌻திருச்சேறை🌻🌹*
*🦚பாடல்:0926///1358🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹துடிபடு மிடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர்
செடிபடு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமாதேவியைச், சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். இடிமுழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்த உருவினர். இடையில் புலித்தோலாடை அணிந்தவர். செடிபோன்று அடர்த்தியான சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌺திருஞானசம்பந்தர்🌺*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹திருவருட்பா🌹🙏*
*☀️திருமுறை2️⃣☀️*
*🦚இரண்டாம் தொகுதி🦚*
*🌹காதற் சிறப்புக் கதவா மாண்பு*
*🌷திருவொற்றியூர்🌷*
_🌻அஃதாவது காதலன்பு மிகுதலால் தன்னைக் கழறி விலக்குவாரை வெகுண்டுரையாமல், தன் உட்கோளை இனியவாகக் கூறும் நற்பண்பு._
*🦚பாடல்:1706///5818🦚*
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
🌹கோதே மருவார் மால்அயனும்
குறியா நெறியார் என்றாலும்
சாதே மகிழ்வார் அடியாரைத்
தம்போல் நினைப்பார் என்றாலும்
மாதே வருக்கும் மாதேவர்
மௌன யோகி என்றாலும்
காதேர் குழையாய் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*விளக்கம் :*
*காதுக் கழகு செய்யும் குழையை யுடையவளே, குற்றமே யில்லாத தியாகப் பெருமான், திருமாலும் பிரமனும் கருதாத ஞான நெறிக்கண் நிற்பவரெனப் பிற மகளிர் பேசினும், சாதுத் தன்மையை விரும்பும் அவர், அடியார்களைத் தம்மைப்போற் கருதிப் பேணுபவர் எனப்படினும், பெரிய தேவர்கட் கெல்லாம் பெரிய தேவராய் மவுனி யோகியாய் விளங்குபவர் என்று மொழிந்தாலும், நான் அவர்மேற் கொண்ட காதலைக் கனவினும் கையொழியேன்.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி*
*தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🦚🔥வள்ளலார்🔥🦚*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*_🌷சிவ வணக்கம்🌷_*
*🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*🌷சிவன் துதி🌷*
*🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!*
*🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!*
*🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!*
*🌷நீ வாழியென் பார்க்கருள வா !!*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*_சமய குரவர்கள் துதி_*
*🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!*
*🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!*
*🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!*
*🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_*
*🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.*
*_திருநாவுக்கரசு சுவாமிகள்_*
*🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.*
*_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_*
*🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.*
*_மாணிக்கவாசகர் சுவாமிகள்_*
*🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.*
*_🌷அரகர சிவசிவ🌷_*
*_🌷அரகர சிவசிவ🌷_*
*_🌷அரகர சிவசிவ🌷_*
மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும் ஒத்துழைப்பும் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஆசைகள் பிறக்கும்.
சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 01, 2026
எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை விட சூழ்நிலை அறிந்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.
திருவாதிரை : குழப்பம் விலகும்.
புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 01, 2026
பணிபுரியும் இடத்தில் அதிகாரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். வர்த்தக தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : லாபகரமான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 01, 2026
எந்த ஒரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுவது நல்லது. அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : விவேகத்தோடு செயல்படவும்.
பூரம் : ஆலோசனை வேண்டும்.
உத்திரம் : நெருக்கடிகள் மறையும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 01, 2026
தனவரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : இழுபறிகள் குறையும்.
அஸ்தம் : நன்மையான நாள்.
சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 01, 2026
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை விஷயங்களில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : தாமதங்கள் குறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 01, 2026
வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : முடிவுகள் பிறக்கும்.
அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
கேட்டை : ஈடுபாடுகள் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 01, 2026
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலம் ஆதாயகரமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி விஷயங்களில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். கலைதுறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் லாபமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : புதுமையான நாள்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 01, 2026
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அவிட்டம் : கையிருப்புகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 01, 2026
现已上线!2025 年 Telegram 研究 — 年度关键洞察 
