தமிழர்கள் திருநாள் 🙏🐅 🐘🎏🙏 இனிய நல்வாழ்த்துக்கள்🙏பனை மரங்கள்போலச்செழித்து வாழ்க வளத்துடன் நலத்துடன் வளர்க வெல்க செந்தமிழ்🙏
Open in Telegram
ஒற்றுமை ஓங்குக.வாழ்க வளத்துடன் வளர்க வெல்க . நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது மரபணுக்களைக் காப்போம்; நமது நாட்டைக் காப்போம் . வாழ்க வளத்துடன் வளர்க வெல்க செந்தமிழ் நாடு. வாழ்க வளத்துடன் வளர்க வெல்க செந்தமிழ்.
Show more989
Subscribers
-124 hours
-87 days
-1330 days
Data loading in progress...
Similar Channels
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '260
in 0 channels
August '26
+30
in 0 channels
Get PRO
July '26
+43
in 0 channels
Get PRO
June '26
+33
in 0 channels
Get PRO
May '26
+46
in 0 channels
Get PRO
April '26
+32
in 0 channels
Get PRO
March '26
+21
in 0 channels
Get PRO
February '26
+23
in 0 channels
Get PRO
January '26
+19
in 0 channels
Get PRO
December '25
+25
in 0 channels
Get PRO
November '25
+24
in 0 channels
Get PRO
October '25
+18
in 0 channels
Get PRO
September '25
+18
in 0 channels
Get PRO
August '25
+28
in 0 channels
Get PRO
July '25
+16
in 0 channels
Get PRO
June '25
+36
in 0 channels
Get PRO
May '25
+25
in 0 channels
Get PRO
April '25
+25
in 0 channels
Get PRO
March '25
+29
in 0 channels
Get PRO
February '25
+34
in 0 channels
Get PRO
January '25
+79
in 0 channels
Get PRO
December '24
+119
in 0 channels
Get PRO
November '24
+97
in 0 channels
Get PRO
October '24
+123
in 0 channels
Get PRO
September '24
+89
in 0 channels
Get PRO
August '24
+102
in 0 channels
Get PRO
July '24
+54
in 0 channels
Get PRO
June '24
+47
in 0 channels
Get PRO
May '24
+51
in 0 channels
Get PRO
April '24
+42
in 0 channels
Get PRO
March '24
+60
in 0 channels
Get PRO
February '24
+67
in 0 channels
Get PRO
January '24
+72
in 0 channels
Get PRO
December '23
+75
in 0 channels
Get PRO
November '23
+20
in 0 channels
Get PRO
October '23
+29
in 0 channels
Get PRO
September '23
+9
in 0 channels
Get PRO
August '23
+10
in 0 channels
Get PRO
July '23
+8
in 0 channels
Get PRO
June '23
+16
in 0 channels
Get PRO
May '23
+22
in 0 channels
Get PRO
April '23
+11
in 0 channels
Get PRO
March '23
+9
in 0 channels
Get PRO
February '23
+9
in 0 channels
Get PRO
January '23
+30
in 0 channels
Get PRO
December '22
+14
in 0 channels
Get PRO
November '22
+28
in 0 channels
Get PRO
October '22
+31
in 0 channels
Get PRO
September '22
+31
in 0 channels
Get PRO
August '22
+47
in 0 channels
Get PRO
July '22
+260
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 07 September | 0 | |||
| 06 September | 0 | |||
| 05 September | 0 | |||
| 04 September | 0 | |||
| 03 September | 0 | |||
| 02 September | 0 | |||
| 01 September | 0 |
Channel Posts
https://www.facebook.com/share/v/1Jj2A4ZfKP/
மேகங்களை உருவாக்க முடியுமா....
ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் எப்போது மேகமாகிறது ...?
உலகம் அறிய வேண்டிய அறிவியல் உண்மை பதிவு 90
தமிழர் வேளாண்மை
| 2 | நீரின்றி அமையாது உலகு:
https://www.facebook.com/share/v/1L7JvLT6vr/
நீரை அமைப்பது என்றால் என்ன....
நீரின்றி அமையாது உலகு....
நீர் எங்கே எப்படி பாதுகாப்பாய் அமைக்கப்படுகிறது.....
உலகம் அறிய வேண்டிய அறிவியல் உண்மை....பதிவு 91
தமிழர் வேளாண்மை
உள்ளேயும் வெளியேயும் அதிகரிக்கும் பூமியின் வெப்பத்தை.... யார் ஒழிக்கிறார்கள்.... எப்படி....
..............................................................................
திருவள்ளுவன் தமிழில் மாத்திரமே நீரின்றி அமையாது உலகு என்று எழுதியிருக்கிறான்....
உலகில் வேறு யாரும் எந்த மொழியிலும் இதுபோல எழுதி இருப்பதாக தெரியவில்லை ....
நீரின்றி அமையாது உலகு எனவே நீரை அமைத்துக் கொள் என்று அறிவுரை கூறியிருப்பதாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் ...
இதை மனித இனத்துக்கு பயன்படாமல் ஒரு செய்தியாக மட்டுமே திருவள்ளுவன் சொல்லி இருப்பான் என்று எனக்கு தெரியவில்லை ....
அதுபோல ஒரு நூலை எழுத வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை ....
அது போன்ற ஒரு நூல் திருக்குறள் இல்லை ....
இதை அறிவுரை என்று எடுத்துக் கொண்டாலே மனித இனத்திற்கும் பூமிக்கும்.....
பிற உயிர்களுக்கும் மிகப் பெரிய பயன் இருக்கிறது.-
ஏனென்றால் இங்கு மாத்திரமே நம்மால் வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை பூமிக்கு உள்ளேயும் சேர்க்க முடியும்.....
இவ்வாறு அமைக்கப்படும் நீர் நிலத்திற்கு மேலேயும் நிலத்தின் உள்ளேயும் பல அற்புதமான பின் விளைவுகளை செய்கிறது....
இது பாலைவனங்களிலோ பனிப் பிரதேசங்களிலோ நடைபெறாது ...
மேட்டில் இருந்து
கடலை நோக்கி ஓடுகின்ற நீரை...
வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை நிலத்திலே உள்ளேயும் வெளியேயும் சேர்த்து வைப்பதால்...
கடலுக்கு செல்லும் நீர் தடுக்கப்பட்டு நிலத்தின் உள்ளே நீர் சென்று நிலப் பகுதி கடல் மட்டத்தை விட மேலே | உயருகிறது ....
நிலத்தின் உள்ளே இருக்கும் அதிகப்படியான வெப்பம் நீராவியாகி கடத்தப்படுகிறது .....
தேவையான வெப்பம் நீரினால் தேக்கி நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது....
பூமியின் கீழ் இருக்கும் உயிர்களுக்கு பாதுகாப்பான உயிர் வாழும் சூழலை உருவாக்குகிறது ....
பூமிக்கு வெளியே தேக்கி வைக்கும் நீரால் ....
சூரியனிடமிருந்து வரும் அதிகப்படியான வெப்பம் சமப்படுத்தப்படுகிறது ....
நீர் தேக்கி நிறுத்தப்படாவிட்டால் பூமியில் ஈரம் தங்கி நிற்காவிட்டால் ....
விதைகள் முளைப்பதில்லை....
உயிர்கள் வாழ்வதில்லை ....
பனிப்பிரதேசங்களைப் போலவோ பாலைவனங்களைப் போலவோ இது இல்லாமல் மழை பொழியும் பூமியாக இருக்கிறது....
மழையாக நீர் பொழிந்தாலும் அது பூமியிலே நிற்காமல் கடலை நோக்கி ஓடிவிடுகிறது ....
ஆகவே அந்த நீரை தேக்கி நிறுத்தி அமைவிடம் கொடுத்தால் உயிர்கள் செழிக்கும் ....
பூமியின் இயற்பியலும்....
வெப்பம் அதிகரிக்காமலும் குறையாமலும் பாதுகாப்பாய் இருக்கும்
ஆனால் இதை வரப்புகளை உயர்த்தி தான் செய்ய வேண்டும் ...
இல்லாவிட்டால் மழை நீர் கடலை நோக்கி ஓடிக் கொண்டேதான் இருக்கும் ....
நீருக்கு அமைவிடம் தயார் செய்து அதை அமைக்க வேண்டிய அவசியத்தை மனிதனுக்கு உணர்த்துவதற்காக தான்....
நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவன் அறிவுரை சொன்னதாக நான் புரிந்து கொள்கிறேன் ....
அதை நான் செய்கிறேன்
அது சிறப்பாக இருக்கிறது....
நீரின்றி அமையாது உலகு...
என்பது என்னைப் பொருத்த வரையில் நீரை அமைக்க வேண்டும் என்ற செய்முறை அறிவை ....
செய்ய வேண்டிய வேலையை சுட்டிக்காட்டுவதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன் ...
உங்கள் அனைவருக்கும் நன்றி...
https://www.facebook.com/share/p/1GnHgAGwvW/
பசிக்க தாய்நாடும் பாலகன் போலவே
புசிக்க மழைநாடும் பூமியும் தானாம்
பசிக்க புழுக்கத்தால் பார்பூமி ஏங்கிட
வசிக்க தாய்வானம் வழங்கி மகிழும்.
சின்னஞ்சிறு குழந்தைகள் பசியெடுத்துவுடன் பெற்ற தாயைத்தேடி ஓடும். அதுபோல பூமியும் தனது தாகத்தை தீர்க்க ஒருவிதமான புழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தாய் என்னும் வானத்தை நோக்கி மழையை நாடும். வானமும் கருமேகத்தை உண்டாக்கி மழையைத்தந்து மகிழும். இதில் ஒரு வியப்பு என்னவெனில் கரையை உயர்த்துவதின் மூலமாகவும், வெப்பாத்திக்குழிகள் மூலமாகவும் புழுக்கத்தை அதிகப்படுத்தி மேகத்தை ஈர்த்து மழைபொழிய வழிவகுக்கலாம் என்பதை வேளாண்ஞானி ஞானப்பிரகாசம் ஐயா அவர்கள் கண்ட வழியாகும்.
https://www.facebook.com/share/p/19MZtrjhAK/
அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்க நலத்துடன் வளத்துடன் வாழ்க வளர்க வெல்க 🙏🏻 நமது ஐயனார் உண்டு நமது ஐயனாரே 🙏🏻💸💸🙏🏻 | 51 |
| 3 | உள்ளேயும் வெளியேயும் அதிகரிக்கும் பூமியின் வெப்பத்தை.... யார் ஒழிக்கிறார்கள்.... எப்படி....
..............................................................................
திருவள்ளுவன் தமிழில் மாத்திரமே நீரின்றி அமையாது உலகு என்று எழுதியிருக்கிறான்....
உலகில் வேறு யாரும் எந்த மொழியிலும் இதுபோல எழுதி இருப்பதாக தெரியவில்லை ....
நீரின்றி அமையாது உலகு எனவே நீரை அமைத்துக் கொள் என்று அறிவுரை கூறியிருப்பதாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் ...
இதை மனித இனத்துக்கு பயன்படாமல் ஒரு செய்தியாக மட்டுமே திருவள்ளுவன் சொல்லி இருப்பான் என்று எனக்கு தெரியவில்லை ....
அதுபோல ஒரு நூலை எழுத வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை ....
அது போன்ற ஒரு நூல் திருக்குறள் இல்லை ....
இதை அறிவுரை என்று எடுத்துக் கொண்டாலே மனித இனத்திற்கும் பூமிக்கும்.....
பிற உயிர்களுக்கும் மிகப் பெரிய பயன் இருக்கிறது.-
ஏனென்றால் இங்கு மாத்திரமே நம்மால் வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை பூமிக்கு உள்ளேயும் சேர்க்க முடியும்.....
இவ்வாறு அமைக்கப்படும் நீர் நிலத்திற்கு மேலேயும் நிலத்தின் உள்ளேயும் பல அற்புதமான பின் விளைவுகளை செய்கிறது....
இது பாலைவனங்களிலோ பனிப் பிரதேசங்களிலோ நடைபெறாது ...
மேட்டில் இருந்து
கடலை நோக்கி ஓடுகின்ற நீரை...
வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை நிலத்திலே உள்ளேயும் வெளியேயும் சேர்த்து வைப்பதால்...
கடலுக்கு செல்லும் நீர் தடுக்கப்பட்டு நிலத்தின் உள்ளே நீர் சென்று நிலப் பகுதி கடல் மட்டத்தை விட மேலே | உயருகிறது ....
நிலத்தின் உள்ளே இருக்கும் அதிகப்படியான வெப்பம் நீராவியாகி கடத்தப்படுகிறது .....
தேவையான வெப்பம் நீரினால் தேக்கி நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது....
பூமியின் கீழ் இருக்கும் உயிர்களுக்கு பாதுகாப்பான உயிர் வாழும் சூழலை உருவாக்குகிறது ....
பூமிக்கு வெளியே தேக்கி வைக்கும் நீரால் ....
சூரியனிடமிருந்து வரும் அதிகப்படியான வெப்பம் சமப்படுத்தப்படுகிறது ....
நீர் தேக்கி நிறுத்தப்படாவிட்டால் பூமியில் ஈரம் தங்கி நிற்காவிட்டால் ....
விதைகள் முளைப்பதில்லை....
உயிர்கள் வாழ்வதில்லை ....
பனிப்பிரதேசங்களைப் போலவோ பாலைவனங்களைப் போலவோ இது இல்லாமல் மழை பொழியும் பூமியாக இருக்கிறது....
மழையாக நீர் பொழிந்தாலும் அது பூமியிலே நிற்காமல் கடலை நோக்கி ஓடிவிடுகிறது ....
ஆகவே அந்த நீரை தேக்கி நிறுத்தி அமைவிடம் கொடுத்தால் உயிர்கள் செழிக்கும் ....
பூமியின் இயற்பியலும்....
வெப்பம் அதிகரிக்காமலும் குறையாமலும் பாதுகாப்பாய் இருக்கும்
ஆனால் இதை வரப்புகளை உயர்த்தி தான் செய்ய வேண்டும் ...
இல்லாவிட்டால் மழை நீர் கடலை நோக்கி ஓடிக் கொண்டேதான் இருக்கும் ....
நீருக்கு அமைவிடம் தயார் செய்து அதை அமைக்க வேண்டிய அவசியத்தை மனிதனுக்கு உணர்த்துவதற்காக தான்....
நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவன் அறிவுரை சொன்னதாக நான் புரிந்து கொள்கிறேன் ....
அதை நான் செய்கிறேன்
அது சிறப்பாக இருக்கிறது....
நீரின்றி அமையாது உலகு...
என்பது என்னைப் பொருத்த வரையில் நீரை அமைக்க வேண்டும் என்ற செய்முறை அறிவை ....
செய்ய வேண்டிய வேலையை சுட்டிக்காட்டுவதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன் ...
உங்கள் அனைவருக்கும் நன்றி...
https://www.facebook.com/share/p/1GnHgAGwvW/ | 30 |
| 4 | பசிக்க தாய்நாடும் பாலகன் போலவே
புசிக்க மழைநாடும் பூமியும் தானாம்
பசிக்க புழுக்கத்தால் பார்பூமி ஏங்கிட
வசிக்க தாய்வானம் வழங்கி மகிழும்.
சின்னஞ்சிறு குழந்தைகள் பசியெடுத்துவுடன் பெற்ற தாயைத்தேடி ஓடும். அதுபோல பூமியும் தனது தாகத்தை தீர்க்க ஒருவிதமான புழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தாய் என்னும் வானத்தை நோக்கி மழையை நாடும். வானமும் கருமேகத்தை உண்டாக்கி மழையைத்தந்து மகிழும். இதில் ஒரு வியப்பு என்னவெனில் கரையை உயர்த்துவதின் மூலமாகவும், வெப்பாத்திக்குழிகள் மூலமாகவும் புழுக்கத்தை அதிகப்படுத்தி மேகத்தை ஈர்த்து மழைபொழிய வழிவகுக்கலாம் என்பதை வேளாண்ஞானி ஞானப்பிரகாசம் ஐயா அவர்கள் கண்ட வழியாகும்.
https://www.facebook.com/share/p/19MZtrjhAK/ | 29 |
| 5 | மேகத்தை முத்தமிடும்
உயரத்தில்
மகிழ்ச்சிக் கிளை பரப்பிய
#சோடிப்பனையே
சோடியாய் உயர்ந்து
நிற்பதில்
எத்தனை அழகிய கம்பீரம்
நீ வளர்ந்த அளவு
ஆழமாய்ப்
பிடித்து வைத்துள்ளாய்
மேகத்துளிகளை
மண்ணுக்குள்
தகிக்கும் கோடையில்
தண்ணென்ற நுங்கு தந்து
இனிக்க இனிக்கத்
தணிக்கிறாய் வெப்பத்தை
பின்னிப்பிணைந்த நேசத்தால்
இதயத்தில்
கனிவெனும் நிறமியைச்
சேர்த்து வையுங்கள்
குருதிநாளங்களில்
அன்புச் சோகை
வாராமல் அவை பார்த்துக்கொள்ளும்
என்ற படிப்பினை தரும்
#பனையே!
நீயும் ஓர் ஆசிரியனே!
#பனையே #நமக்குஎன்றும்துண.😊 .
ஆயிரக்கணக்கான பனைமரங்கள் அடர்த்தியாக ஒரே இடத்தில் ...#பனைக்காடு என்றே சொல்லாலம்.. அனைத்து மரங்களிலுமே காய்ந்த பனை ஓலைகள் வெட்டப்படாமல் பயன்படுத்தாமல் உள்ள நிலையில் .. பார்த்து மகிழ்ந்தேன்...😁
சமூகப் பொருளாதாரத்தை வளர்க்கும் பனைமரங்கள்
💥 #பனைவிவசாயம் 🌴💯 #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥💪
#palmtrees #Palm #பனைமரம் | 87 |
| 6 | No text... | 83 |
| 7 | (உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விரிவாக ஆன்லைன் மூலம் திருமந்திர சிவயோக whatsaap வகுப்பில் முழுமையாக யோகங்களை தேவைப்படுபவர்கள் பயில்பவர்கள்.
ராம் குமார்: +918148285865.
கட்டணம் உண்டு)
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து.....
- சித்தர்களின் குரல். shiva shangar https://www.facebook.com/share/p/1DqzK5zZe9/ | 74 |
| 8 | சிறுவயதில் தர்மலிங்க சுவாமிகள் சொல்லி தந்த இந்த மந்திர விளையாட்டு நவாக்ஷரி மந்திர விளையாட்டு. அன்று விளையாட்டாக ஜெபிக்க தொடங்கிய மந்திர வித்தை இன்று விஷ்வரூபம் எடுத்து அதுவே விளையாடுகிறது.
தெளிந்த ஞானமும், செல்வமும் பெற்றிட திருமூலர் பெருமான் அருளிச் செய்த நலம் தரும் நவாக்ஷரி மந்திரம்.
(1) க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் சிவயநம...
(2) ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் சிவயநம...
(3) ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் சிவயநம...
(4) ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவயநம...
(5) கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சிவயநம...
(6) கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் சிவயநம...
(7) ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் சிவயநம...
(8) ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் சிவயநம...
(9) ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் சிவயநம...
மந்திர பலன் இது....
"நாவு அசைந்தால் , நாடு அசையும்" என்கிறார்.....
முதல் மந்திரம்:
-----------------------------
க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் சிவயநம...
பலன்:
நலம் தரும், ஞானம் தரும், கல்வி தரும். வந்த வினையும், வருகின்ற வல் வினையும் போக்கும். தீவினை அண்டாமல் பாதுகாக்கும். இறை நிலையை நிறை நிலையாகப் பெற்றுத் தரும் என்கிறார் என்குரு திருமூலர்....
இரண்டாம் மந்திரம்:
---------------------------------------
ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் சிவயநம...
பலன்:
கால காலனை வென்றிடலாம். என்றும் இளமையோடு இருக்கலாம். பெயர், புகழ் ஓங்கி வாழ்வாங்கு வாழலாம். பொன், பொருள் அனைத்தும் பெறலாம். அமரர்கள் வாழ்வும் அடையலாம் என்கிறார் என்குரு திருமூலர்....
மூன்றாம் மந்திரம்:
------------------------------------
ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம்
ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் சிவயநம....
பலன்:
எல்லோரையும் வசியம் செய்யும் மிகப் பெரும் ஆற்றல் பெறலாம். தேவாதி தேவர்களும், மன்னாதி மன்னர்களும் நம் வசம் ஆவார்கள். எதிரியை வெல்வது மிகவும் எளிதாகி விடும் என்கிறார் என்குரு திருமூலர்....
நான்காம் மந்திரம்:
-------------------------------------
ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவயநம...
பலன்:
வாஹீஸ்வரியை நேராகக் கண்டு நாம் அனைத்து நலனையும் பெறலாம். வித்தை அனைத்தையும் கை வரப் பெறலாம்.
ஒவ்வொரு நாளும் புனிதமான நாளாக, மன நிறைவு உள்ள நாளாகக் கழியும் என்கிறார் என்குரு திருமூலர்....
ஐந்தாம் மந்திரம்:
----------------------------------
கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சிவயநம....
பலன்:
காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றின் நாமம் கெட்டு, பிறவி வேர் அறுக்க வல்லது. தேவாதி தேவர்களும் வணங்கி வழிபடக் கூடிய பெரும்பேறு கிடைக்கும் என்கிறார் என்குரு திருமூலர்....
ஆறாம் மந்திரம்:
-------------------------------
செல்வச் சிறப்பு பெற
கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் சிவயநம...
பலன்:
சிந்தை களிக்க, செல்வச் செழிப்புடன் வாழ என்கிறார் என்குரு திருமூலர்....
ஏழாம் மந்திரம்:
-----------------------------
ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் சிவயநம...
பலன்:
பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வல்லது. கண்ணுக்குள்ளும், உடலுக்குள்ளும் யோக நிலையில் அனுபவிக்கக் கூடிய அனுபவத்தைத் தர வல்லது.
சுவை, ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை ஐந்தின் வகையைத் தெரிந்து வாழ வைப்பது. என்கிறார் என்குரு திருமூலர்....
எட்டாம் மந்திரம்:
---------------------------------
ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் சிவயநம....
பலன்:
மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரை யோக நிலை அனுபவங்கள் அனைத்தும் பெறுவதற்கான மந்திரம்.
என்றும் இளமையோடு இருக்க, நன்றே தரும் ஞான மாமருந்து என்கிறார் என்குரு திருமூலர்....
ஒன்பதாம் மந்திரம்:
-------------------------------------
ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் சிவயநம
பலன்:
தானே சிவமாக விளங்கும் ஒரு அரும் பெரு நிலையை அடையலாம்.
நம் உடலிலும், உயிர் உணர்விலும் இறை ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ளும் அருட் பெரும் மந்திரம் இது. என்கிறார் என்குரு திருமூலர்....
தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, நவாக்ஷரி மந்திர சித்தியை, நம்குரு திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார். திருமந்திரத்தின் வாயிலாக, திருமந்திர சிவயோக whatsaap வகுப்பில் கற்க ஆரம்பிப்போம்.. | 59 |
| 9 | உலகத்துலேயே #கள்ளுக்கானதடை உள்ள மாநிலம் #தமிழ்நாடு...!
#கள் #palmtrees
#palm #பனை
#பனங்கள்
கள் அப்படினா என்ன எத்தகையது ?
#பெண்பனை மரத்தில் பாளை இருக்கும் அதிலிருந்து தான் பனங்குலை வரும் அதுலருந்து தான் #நுங்கு , அந்த நுங்கு தான் பனம்பழம் அதாவது அடுத்த தலைமுறை..
இப்போ இந்த பாளையை அறுத்து அதன் ஆற்றலை ஒரு பானையில் சேகரித்தால் அது தான் கள் , இந்த பனையின் கள் அந்த மரத்தின் sexual ஆற்றலின் நீர் வடிவம் , ஆம் அந்த பாளையை அறுக்காமல் விட்டால் அடுத்த தலைமுறை உருவாகும் அதிலிருந்து அதை நாம் எடுத்து குடிச்சிடுறோம்...இதில் அவ்வளவு ஆற்றல் இருக்கு...மீன் முட்டை மாதிரி...ஆனா மீன் முட்டையை விட பல மடங்கு ஆற்றல் மிக்கது...
ஒரு மனிதன் நீண்ட ஆயுளோடு வாழ அவனின் கிட்னி ஆற்றல் தான் முடிவு செய்கிறது அந்த ஆற்றல் தான் sexual essence இங்க பனையின் ஆயுள் அதிகம்னா அதோட sexual essence ஆற்றல் எத்தகையதுனு கற்பனை செய்து பாத்துக்கோங்க....பெண்ணோட கருமுட்டை ஆற்றல் வாய்ந்தது அதுல பல சத்துக்கள் உண்டு அதனாலத்தான் வேற்றுப்பரிமாணங்கள் அவைகளை உண்பதற்கு வரும்னு மாதவிடாய் காலத்தில் பத்திரமாக பெண்களை பார்த்துக்கொண்டனர் வெளியே செல்லவிடாமல்..சரி இது வேற department இப்போ விசயத்துக்குள்ள போவோம். ..
இப்போ பனையின் sexual juice ஆற்றலை நீர் வடிவில் நாம குடித்தால் நமக்கு கிட்னி ஆற்றல் அதிகரிக்கும்...பனை சில தலைமுறைகளை உருவாக்கும் ஆற்றலை நாம் குடிக்க அந்த ஆற்றல் நமக்கு வருது...இதனால் கிட்னி நன்றாக இருந்தால் என்ன கிடைக்குமோ அந்த ஆற்றல் கள் குடிப்பவர்களுக்கு அதிகரிக்கும்...
உடல் பலம் , ஆண்மை பலம் , எலும்போட ஆற்றல் அதிகமாகும் ...பஞ்ச பூத ஆற்றலான நீரின் தன்மை கொண்ட பாகம் கிட்னி அப்போ கள் நம்மளோட உடற்சூட்டை குறைக்கிறது ...வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்குது...
ஆயுள் அதிகரிக்கும்....
பனையின் கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பகுதியில் போய் பாருங்க வயசானாலும் உடல் வலு குறைந்திருக்காது ஆனால் இந்த தலைமுறை சாராய கலாச்சாரத்தில் இறங்கி பிறகு மேலே நான் சொன்ன எல்லாமே எதிர்மறையாக நடக்கும்...
உலகத்துலேயே #கள்ளுக்கானதடை உள்ள மாநிலம் #தமிழ்நாடு...!
#கள் #palmtrees #palm #பனை
பனங்களுக்கான தடையை நீக்கினால் பனை பொருளாதாரம் உயரும்:
#டாஸ்மாக் வருமானத்தை விரும்பும் #ஆளுங்கட்சி யோ, #எதிர்கட்சி யோ இந்த தொழிலை ஆதரிக்காது.
💥 #பனைவிவசாயம் 🌴💯 #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥💪
#palmtrees #Palm #பனைமரம் | 59 |
| 10 | No text... | 66 |
| 11 | நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார். தியேட்டரில் எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில் வைத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் பாலையாவுக்காகவே படம் பார்த்தவர்கள்தான் ஏராளம். அந்த கதை சொல்லும் காமெடியின் போது, படம் பார்க்கிறவர்கள், நாகேஷைப் பார்க்கவே மாட்டார்கள். பாலையாவின் முகத்தையும் எக்ஸ்பிரஷனையுமே பார்த்துச் சிரித்தார்கள்.
‘ஊட்டி வரை உறவு’ படத்தில் சிவாஜியின் அப்பாவாக படம் முழுக்க காமெடியில் தனி ராஜாங்கம் நடத்தியிருப்பார். ஒரு பக்கம் மனைவியை சமாளித்து, இன்னொரு பக்கம் மகனை சமாளித்து, அடுத்து கே.ஆர்.விஜயாவை சமாளித்து, நடுவே நாகேஷை சமாளித்து என காமெடிக் கபடி ஆடியிருப்பார் பாலையா.
கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு, அலட்டல் ஆகியவற்றையெல்லாம் ஒருங்கே கொண்டு வந்த ‘திருவிளையாடல்’ ஹேமநாத பாகவதர், பாலையா எடுத்த புது ஸ்டைல் அவதாரம்.
பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தில் மூன்று மகன்களையும் மருமகள்களையும் கவனிக்கிற, கவனித்துப் பொருமுகிற, கிண்டலடிக்கிற கேரக்டரை ரொம்ப அசால்ட்டாகச் செய்திருப்பார். ‘வரவு எட்டணா’வை பாடலில் இவரின் உடல் மொழி அசாத்தியமானது.
தில்லானா மோகனாம்பாள்’ சிவாஜியையும் நாகஸ்வரத்தையும் பத்மினியையும் தில்லானாவையும் மறக்கவே முடியாது. அப்படித்தான் பாலையாவையும் மேளத்தையும் எப்படி மறக்கமுடியும்?
‘திருவாரூர் வரை போயிட்டு வரேன்’ என்பார் சிவாஜி. ‘தம்பி நானும் வரேன் தம்பி’ என்றார் பாலையா. ‘அங்கே எனக்கு பீடாக்கடைக்காரனைத் தெரியும்ணே’ என்பார் சிவாஜி. சட்டென்று இவர் ‘எனக்கு சோடாக்கடைக்காரனைத் தெரியும்’ என்பார். ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் போவார். அவர் பின்னே சென்று வாசம் பிடிப்பார். இன்னொரு இடத்தில் ‘என்ன... ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு’ என்பார். ‘ஒண்ணுமில்ல தம்பி, பித்த உடம்பா, கப்புன்னு தூக்கிருச்சு’ என்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘நலந்தானா’ பாட்டில் சிவாஜி வாசித்துக் கொண்டே இருக்கும் போது, அந்த வாசிப்பில் நெகிழ்ந்து வியந்து, சிவாஜியை அப்படி லேசாகத்தொடுவார். நாம் மனம் விகசித்துப் போய்விடுவோம்.
’காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்து, இயக்குநர் ஸ்ரீதரிடம் சென்றார் இயக்குநர் ஒருவர். ஹீரோவா யாரைப் போடப் போறீங்க?’ என்று ஸ்ரீதர் கேட்டார். ‘ரவிச்சந்திரன் கேரக்டருக்கு அந்த நடிகரைப் போடலாம்னு இருக்கேன்’ என்றார். ‘ஹீரோ கேரக்டருக்கு யாரைப் போடப் போறீங்க?’ன்னு கேட்டேன் என்றார் ஸ்ரீதர். ‘முத்துராமன் கேரக்டருக்கா? அதுக்கு இந்த நடிகரைப் போடலாம்னு ஐடியா’ என்றார். ‘படத்துல ஹீரோ கேரக்டரை யார் செய்யப் போறாங்க?’ என்று கேட்டதும் ‘ஓ... நாகேஷ் கேரக்டருக்குத்தானே சார். அந்த நடிகர்தான்’ என்று சொன்னார். ‘படத்துல ஹீரோ பாலையாதான். அவர் நடிச்ச கேரக்டருக்கு யாரைப் போடப்போறீங்க? அவருக்கு பதிலா அந்த கேரக்டரைப் பண்றதுக்கு யாராவது இருக்காங்களா?’ என்று ஸ்ரீதர் கேட்க, அந்த இயக்குநர் மெளனமாகிப் போனார்.
ரீப்ளேஸ்மெண்ட்’ என்றொரு வார்த்தை உண்டு. பாலையா எனும் மகத்தான கலைஞனுக்கு ‘ரீப்ளேஸ்மெண்ட்’ இதுவரை எவரும் வரவில்லை. அதுதான் பாலையா ஸ்பெஷல்.
1914ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பிறந்த டி.எஸ்.பாலையா, 1972ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி காலமானார்.
டி.எஸ்.பாலையா அவர்களின் 114 ஆவது பிறந்தநாள் இன்று! | 75 |
| 12 | அசோகர் உங்க மகருங்களா?’ - மகா கலைஞன் டி.எஸ்.பாலையா அவர்களின் பிறந்தநாள் இன்று!
நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜிகணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு. ’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிடுவார்’ என்று சிவாஜியே சொல்லியிருக்கிற நடிகர்கள், எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா. இன்னொருவர் டி.எஸ்.பாலையா.
தனித்துவம் மிக்க நடிகர். அன்றைய நெல்லைச்சீமைக்காரர். சாதாரணக் குடும்பம்தான் அவருடையது. சிறுவயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார் பாலையா. அப்போதே, இவரின் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள்.
எம்ஜிஆரின் முதல் படம் எது என்று கேட்டால், ‘சதி லீலாவதி’ என்று சொல்லிவிடுவோம். டி.எஸ்.பாலையாவின் முதல் படம் எது என்று கேட்டால், மலங்க விழிப்போம். பாலையாவின் முதல் படமும் ‘சதி லீலாவதி’தான். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய அந்தப் படத்தில், வில்லத்தனத்திலேயே மிரட்டியிருப்பார்
அவள் ஒரு தொடர்கதை’யில் ஏகப்பட்ட பேர் அறிமுகமானது போல், ‘ஒருதலைராகம்’ படத்தில் நிறைய பேர் அறிமுகமானது போல், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அதிகம் பேர் அறிமுகமானது போல், ‘சதி லீலாவதி’ படத்தில், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, கே.ஏ.தங்கவேலு முதலானோரும் அறிமுகமானார்கள். எல்லீஸ் ஆர்.டங்கனின் அறிமுகங்கள் எவருமே சோடை போகவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மனதில் பதிந்தார்கள். இதில், டி.எஸ்.பாலையா கொஞ்சம் ஸ்பெஷல்தான். வில்லன் வேடத்தில் மிரட்டினார். குணச்சித்திர கேரக்டரில் உருவவைத்தார். காமெடி ரோலில் குலுங்கவைத்தார்.
கொல்கத்தாவில் படப்பிடிப்பு. எம்ஜிஆருக்கு ஒரு வேஷம் கொடுக்கப்பட்டது. பாலையாவுக்கு கேரக்டர் ஏதுமில்லை. வேறுவிஷயமாக வந்தவர், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தார். அந்த இயக்குநருக்கு சட்டென்று மின்னல்... எம்ஜிஆருக்கு கொடுத்த வேடத்தை, பாலையாவுக்குக் கொடுத்துவிட்டார். அன்றைக்கு எம்ஜிஆர் முகம் சுருங்கித்தான் போனது. ஆனால், பின்னாளில் இதுபற்றிச் சொன்ன போது... எம்ஜிஆர் சொன்னது இதுதான்... ‘அந்தக் கேரக்டரை பாலையா செய்திருந்தார். பாலையா செய்தது போல், என்னால் அந்த அளவுக்கு அந்தக் கேரக்டரைப் பண்ணியிருக்கமுடியாது’ என்று மனம் திறந்து சொன்னார். அத்தனை மகத்தான கலைஞனாக அப்போதே பரிணமித்தார் பாலையா.
ஒருகட்டத்தில், ஹீரோ வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு மூன்று படங்களில் நாயகனாக வலம் வந்தார். ஆனால் அடுத்தடுத்த படங்களில், அட்டகாசமான கேரக்டர் ரோல்கள் கிடைக்கவே ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காட்டி வியப்பூட்டினார்.
அண்ணாவின் ‘வேலைக்காரி’ படத்தில் பகுத்தறிவுவாதியாக நடித்ததுதான் பாலையாவின் வாழ்வில் இன்னொரு ஏற்றம்; மாற்றம். அந்தக் காலத்தில் பகுத்தறிவு பேச பயப்படுவார்கள். காங்கிரஸ்காரர் என்று வெளியே சொல்லும்படி நடந்த பாலையா, அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தார். ‘மதுரை வீரன்’ படத்தில் வில்லன் இவர்தான். ஜெமினியின் ‘மாமன் மகள்’ படத்தில் இவர் வரும் இடங்களெல்லாம் தெறித்துச் சிரித்தார்கள். காமெடியும் வில்லத்தனமும் கலந்த கதாபாத்திரம், அன்றைக்கு இவருக்கு மட்டுமல்ல... சினிமாவுக்கே புதுசு.
பாலையாவின் உடல் மொழி புது ரகம். அவரின் பார்வை உருட்டல், மிரட்டும். கொஞ்சம் சிரிப்பு சேர்த்த இவரின் வில்லத்தனம், சினிமாவுக்குப் போட்டது புதிய பாதை.
‘பாகப்பிரிவினை’ படத்தில், சிவாஜி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, நம்பியார் முதலானோருடன் பாலையாவும் நடித்தார். ஆனால் சுப்பையாவின் அண்ணனாகவும் சிவாஜியின் பெரியப்பாவாகவும் தன் தேர்ந்த நடிப்பால், அருமையான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நெகிழச் செய்திருப்பார் பாலையா
அந்த காலகட்டத்தில்தான், இயக்குநர் ஸ்ரீதர் புதிய முயற்சியில் இறங்கினார். ஸ்ரீதர் படமென்றாலே காதல் படம், சோகப் படம், சீரியஸ் படம் என்றே இருந்தது. ‘ஒரு காமெடிப் படம் எடுத்தால் என்ன?’ என்று தோன்றியதன் விளைவு... காதலிக்க நேரமில்லை’. முத்துராமன், ரவிச்சந்திரன், நாகேஷ் எனப் பலரும் நடித்திருந்தார்கள். ஆனாலும் டைட்டிலில் முதலில் இடம் பெற்றது... டி.எஸ்.பாலையாவின் பெயர்.
படம் முழுக்க முத்துராமன் வர மாட்டார். ரவிச்சந்திரன் வரமாட்டார். நாகேஷ் வரமாட்டார். ஆனால், முத்துராமனுடன், நாகேஷுடன், ரவிச்சந்திரனுடன், வி.எஸ்.ராகவனுடன், காஞ்சனா -ராஜஸ்ரீயுடன் என படம் நெடுக வலம் வருவார். நம் வயிறைப் பதம் பார்ப்பார்
வாக்கிங் ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு, வேஷ்டியை பிடித்துக் கொண்டு, இந்தப் பக்கம் குதித்து, அந்தப் பக்கம் குதித்து, பாலையா செய்த சேட்டைகள்... சிரித்துச் சிரித்து கண்ணீரே வந்துவிடும் நமக்கு. ‘அசோகர் உங்க மகருங்களா?’, ‘அவர் பாக்கெட்ல நாலஞ்சு கப்பல் ஓடுது, கப்பல் ஓடுது’ என்பாரே... ‘பெத்த தகப்பன் கேக்கறேன், பெத்த தகப்பன் கேக்கறேன்’ என்பன போன்ற பல இடங்கள்... | 49 |
| 13 | https://www.facebook.com/share/p/1EhnrDRpbT/
நட்பில் கமுகு அனையர்" என்ற வரிகள் நாலடியார் நூலில் உள்ள நட்பாராய்தல் அதிகாரத்தின் 216-வது பாடலில் இடம்பெற்றுள்ளது. நாள்தோறும் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்தால் மட்டுமே பலன் தரும் பாக்கு மரத்தைப் (கமுகு) போன்றது கீழானவர்களின் நட்பு என்பதை இப்பாடல் விளக்குகிறது.
நாலடியார் பாடல் (216)
"கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு."
நண்பர்களின் வகைகளும் மரங்களும்
கடையாயார் (கீழானவர்): பாக்கு மரம் (கமுகு)
நாளும் இடைவிடாமல் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால் மட்டுமே பலன் தரும்.
தினமும் உதவி செய்து கொண்டே இருந்தால் மட்டுமே நல்லவராக இருப்பார்.
இடையாயார் (நடுத்தரமானவர்): தென்னை மரம்
அங்கும் இங்குமாகச் சில நாள் தண்ணீர் விடாமல் விட்டாலும், பின் கவனித்தால் பலன் தரும்.
பழைய உதவியை நினைவில் கொண்டு இயைந்து நடப்பார்.
தலையாயார் (சிறந்தவர்): பனை மரம் (பெண்ணை)
நடுகின்ற காலத்தில் செய்த நீர்ப்பாய்ச்சலை மட்டுமே என்றைக்கும் நினைவில் கொள்ளும்.
முன்னாள் செய்த உதவியை எக்காலமும் மறவாமல் என்றும் உறுதியாக இருக்கும் உண்மையான நட்பு. | 37 |
| 14 | No text... | 25 |
| 15 | நட்பில் கமுகு அனையர்" என்ற வரிகள் நாலடியார் நூலில் உள்ள நட்பாராய்தல் அதிகாரத்தின் 216-வது பாடலில் இடம்பெற்றுள்ளது. நாள்தோறும் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்தால் மட்டுமே பலன் தரும் பாக்கு மரத்தைப் (கமுகு) போன்றது கீழானவர்களின் நட்பு என்பதை இப்பாடல் விளக்குகிறது.
நாலடியார் பாடல் (216)
"கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு."
நண்பர்களின் வகைகளும் மரங்களும்
கடையாயார் (கீழானவர்): பாக்கு மரம் (கமுகு)
நாளும் இடைவிடாமல் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால் மட்டுமே பலன் தரும்.
தினமும் உதவி செய்து கொண்டே இருந்தால் மட்டுமே நல்லவராக இருப்பார்.
இடையாயார் (நடுத்தரமானவர்): தென்னை மரம்
அங்கும் இங்குமாகச் சில நாள் தண்ணீர் விடாமல் விட்டாலும், பின் கவனித்தால் பலன் தரும்.
பழைய உதவியை நினைவில் கொண்டு இயைந்து நடப்பார்.
தலையாயார் (சிறந்தவர்): பனை மரம் (பெண்ணை)
நடுகின்ற காலத்தில் செய்த நீர்ப்பாய்ச்சலை மட்டுமே என்றைக்கும் நினைவில் கொள்ளும்.
முன்னாள் செய்த உதவியை எக்காலமும் மறவாமல் என்றும் உறுதியாக இருக்கும் உண்மையான நட்பு. | 53 |
| 16 | No text... | 106 |
| 17 | அணை (Dam): தொடர்ச்சியாக ஓடும் ஆற்றின் குறுக்கே நீரைக் தடுத்து நிறுத்துவதற்காகக் கட்டப்படும் செயற்கைக் கட்டமைப்பு ஆகும் (எ.கா: மேட்டூர் அணை, வைகை அணை).
ஏரி (Lake / Irrigation Tank): நிலப்பரப்பில் உள்ள இயற்கையான பள்ளத்திலோ அல்லது மூன்று பக்கமும் மண் கரைகளாக்கப்பட்ட பரப்பளவிலோ நீரைத் தேக்கி வைக்கும் நீர்நிலையாகும் (எ.கா: செம்பரம்பாக்கம், வீராணம்).
அணைகள் வரிசையில் ஏரியைச் சேர்க்கலாமா?
தொழில்நுட்ப ரீதியாக (Strictly Speaking): "அணைகள்" என்ற துல்லியமான வகைப்பாட்டின் கீழ் ஏரிகளைச் சேர்ப்பது தவறு.
செயல்பாட்டு ரீதியாக (Practically): கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மலைகளோ அல்லது பெரிய ஆற்று அணைகளோ இல்லை. அங்கு பெரிய ஏரிகளே அணைகளுக்கு நிகராகப் பில்லியன் கன அடி கணக்கில் நீரைச் சேமித்து, மாவட்டத்தின் பிரதான பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாகச் செயல்படுகின்றன.
எனவே, ஒரு மாவட்டத்தின் நீர் வள பட்டியலை உருவாக்கும் போது, "அணைகள் மற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்/ஏரிகள்" (Dams and Major Reservoirs/Lakes) என்று தலைப்பிட்டுத் தொகுப்பதே புவியியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மிகச் சரியான அணுகுமுறையாகும்.)
#தமிழ்நாடு #TamilNaduDams #அணைகள் #WaterResources | 106 |
| 18 | 1-கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
2-கீழ்ணை அல்லது அணைக்கரை – கொள்ளிடம் ஆறு (காவிரியின் கிளை ஆறு)
(தஞ்சாவூர் ஒரு சமவெளி டெல்டா மாவட்டம் என்பதால், இங்கு நிலப்பரப்பில் நீரைத் தேக்கி வைக்கும் பெரிய "மலைப்பகுதி சேமிப்பு அணைகள்" (Storage Dams) எதுவும் கிடையாது.
இருப்பினும், பாசன நீரைக் முறைப்படுத்தவும் நிலத்தடி நீர்மட்டத்தைப் உயர்த்தவும் கட்டப்பட்ட சில முக்கிய தடுப்பணைகள் (Check Dams / Regulators) இப்பட்டியலில் சேர்க்கத்தக்கவை:
திருவையாறு தடுப்பணை – காவிரி ஆறு (திருவையாறு பகுதி)
கும்பகோணம் அரசலாறு தடுப்பணை – அரசலாறு (காவிரியின் கிளை ஆறு)
சாத்தனூர் / திருப்பனந்தாள் தடுப்பணைகள் – மண்ணியாறு மற்றும் வீராசோழன் ஆறு)
*காஞ்சிபுரம் மாவட்ட அணைகள்:-
1- செம்பரம்பாக்கம் ஏரி – அடையாறு நீர்வழி (குன்றத்தூர் வட்டம்)
2- தென்னேரி – பாலாறு நீர்வழி (வாலாஜாபாத் வட்டம்)
3- உத்திரமேரூர் ஏரி – செய்யாறு நீர்வழி (உத்திரமேரூர் வட்டம்)
4- ஸ்ரீபெரும்புதூர் ஏரி – மழைநீர் சேகரிப்பு மற்றும் உள்ளூர் ஓடைகள் (ஸ்ரீபெரும்புதூர் வட்டம்)
5- பழையசீவரம் தடுப்பணை / அணைக்கட்டு – பாலாறு மற்றும் செய்யாறு இணையும் பகுதி (வாலாஜாபாத்)
6- செவிலிமேடு தடுப்பணை – பாலாறு (காஞ்சிபுரம் வட்டம்)
*மதுரை மாவட்டம்:-
1-சாத்தியாறு அணை (Sathiyar Dam): வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள பிரதான சேமிப்பு அணை.
2-பேரணை அணைக்கட்டு.
3-விரகனூர் மதகணை / தடுப்பணை
4-வண்டியூர் ஏரி
5-மாடக்குளம் கண்மாய்
நாமக்கல் மாவட்டம் (மாவட்டம் முழுமையாக விடுபட்டுள்ளது):
1-ராசியாறு அணை (Rasiyaru Dam): கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முக்கிய அணை.
முக்கிய அணைக்கட்டுகள் & கதவணைகள் (Anicuts & Barrages):
ஜெடர்பாளையம் அணைக்கட்டு (Jedarpalayam Anicut): காவிரி ஆற்றின் குறுக்கே பரமத்தி வேலூர் வட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான நீர்த்திருப்பு அணைக்கட்டு. இது ராஜா வாய்க்கால், கொமரபாளையம் வாய்க்கால் உள்ளிட்ட பிரதான பாசனக் கால்வாய்களுக்கு நீரைத் திருப்பிவிடப் பயன்படுகிறது.
சோளசிராமணி கதவணை (Solasiramani Barrage): காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் உற்பத்திக்காகவும் பாசனக் நீர் மேலாண்மைக்காகவும் அமைக்கப்பட்ட கதவணை.
மோகனூர் கதவணை / தடுப்பணைகள்: காவிரியின் குறுக்கே நாமக்கல் - கரூர் எல்லைப் பகுதியில் நீர்மட்டத்தை உயர்த்தவும் குடிநீர் திட்டங்களுக்கும் அமைக்கப்பட்ட கட்டமைப்புகள்.
இது போக இன்னும்
மீதமுள்ள 11 மாவட்டங்களின் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: இந்த 11 மாவட்டங்களும் பெரும்பாலும் சமவெளி, டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளாக இருப்பதால், இங்கு மலைப்பகுதி சேமிப்பு அணைகள் (Storage Dams) கிடையாது. மாறாக, ஆற்று நீரைக் திருப்பும் அணைக்கட்டுகள் (Anicuts), தடுப்பணைகள் (Check Dams), கதவணைகள் (Barrages) மற்றும் பிரம்மாண்டமான பாசனக் கண்மாய்கள்/ஏரிகள் பிரதான நீர் மேலாண்மைக் கட்டமைப்புகளாகச் செயல்படுகின்றன.
விடுபட்ட 11 மாவட்டங்கள் & அவற்றின் நீர் நிலைகள்
*செங்கல்பட்டு மாவட்டம்
1. மதுராந்தகம் ஏரி
2. வாயலூர் தடுப்பணை
3. நெம்மிலி தடுப்பணை
4.கொளவாய் ஏரி
*இராணிப்பேட்டை மாவட்டம்
1. காவேரிப்பாக்கம் ஏரி
2. வாலாஜா அணைக்கட்டு
3. மகேந்திரவாடி ஏரி
* இராமநாதபுரம் மாவட்டம்
1. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
2. பார்த்திபனூர் மதகணை / அணைக்கட்டு
3. இராமநாதபுரம் பெரிய கண்மாய்
4.கமுதி பெரிய கண்மாய்
* தூத்துக்குடி மாவட்டம்
1. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு
2. மருதூர் மேலணை
3. மருதூர் கீழணை
4. கடம்பாகுளம் ஏரி
* அரியலூர் மாவட்டம்
1. பொன்னேரி ஏரி
2. ஆனைக்காரன் சத்திரம் தடுப்பணை
3. வெள்ளாறு தடுப்பணைகள்
*புதுக்கோட்டை மாவட்டம்
1. கவின்நாடு கண்மாய்
2. நெய்வாசல் அணைக்கட்டு
3. அம்பலக்காரன் சத்திரம் கதவணை
* சிவகங்கை மாவட்டம்
1. மானாமதுரை அணைக்கட்டு / தடுப்பணை
2. சிவகங்கை பெரிய கண்மாய்
3. பிரான்மலை–சிங்கம்புணரி பகுதி தடுப்பணைகள்
* மயிலாடுதுறை மாவட்டம்
1. மணல்மேடு தடுப்பணை
2. மேலையூர் தடுப்பணை
* திருவாரூர் மாவட்டம்
1. வடுவூர் ஏரி / நீர்த்தேக்கம்
2. மூங்கில்குடி தடுப்பணை
3. பாண்டவையாறு கதவணை
*நாகப்பட்டினம் மாவட்டம்
1. தலைஞாயிறு தடுப்பணை
2. உப்பனாறு கதவணை
*சென்னை மாவட்டம்
(பெரிய அணை / நீர்த்தேக்கம் இல்லை)
2. போரூர் ஏரி
3. ரெட்டேரி
4. பூண்டி நீர்த்தேக்கம் – திருவள்ளூர் மாவட்டம்
5. புழல் நீர்த்தேக்கம் – திருவள்ளூர் மாவட்டம்
6. சோழவரம் ஏரி – திருவள்ளூர் மாவட்டம்
7. செம்பரம்பாக்கம் ஏரி – செங்கல்பட்டு மாவட்டம்
(அமைப்பியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அணை (Dam) என்பதும் ஏரி (Lake/Tank) என்பதும் இரு வேறுபட்ட நீர் மேலாண்மை அமைப்புகளாகும்.
முக்கிய வேறுபாடுகள்: | 48 |
| 19 | 1. வாணியாறு அணை – வாணியாறு
2. தொப்பையாறு அணை – தொப்பையாறு
3. சின்னாறு அணை – சின்னாறு
4. நாகாவதி அணை – நாகாவதி
5. கேசர்குளி அணை – கேசர்குளி
6. ஈச்சம்பாடி அணை – தென்பெண்ணையாறு
7. பஞ்சப்பள்ளி அணை – சின்னாறு
*திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. பரப்பலாறு அணை – பரப்பலாறு
2. குடகனாறு அணை – குடகனாறு
3. நங்காஞ்சியாறு அணை – நங்காஞ்சியாறு
4. குதிரையாறு அணை – குதிரையாறு
5. மருதாநதி அணை – மருதாநதி
6. சிறுமலையாறு அணை – சிறுமலையாறு
7-பாலாறு - பொருந்தலாறு அணை (Palar-Porandalar Dam): பழனி அருகில் உள்ள மாவட்டத்தின் மிக முக்கிய பெரிய அணை.
8-வரதமாநதி அணை (Varadhamanathi Dam): பழனி மலையடிவாரத்தில் உள்ள அணை.
9-வரட்டாறு அணை (Varattar Dam).
*விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. பிளவக்கல் பெரியாறு அணை – பெரியாறு
2. பிளவக்கல் கோவிலாறு அணை – கோவிலாறு
3. வெம்பக்கோட்டை அணை – வைப்பாறு
4. குல்லூர்சந்தை அணை – அர்ஜுனா ஆறு
5. கோல்வார்பட்டி அணை – வைப்பாறு
6. ஆனைக்குட்டம் அணை – அர்ஜுனா ஆறு.
*கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. கோமுகி அணை – கோமுகி ஆறு
2. மணிமுக்தா அணை – மணிமுக்தா ஆறு
3. பெரியார் அணை – மணி ஆறு
4. சூளாங்குறிச்சி அணை – கோமுகி ஆறு.
5. திருக்கோவிலூர் அணைக்கட்டு – தென்பெண்ணையாறு.
*கடலூர் மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. வீராணம் ஏரி – வெள்ளாறு/கொள்ளிடம் நீர்வழி
2. வாலாஜா ஏரி – வாலாஜா ஓடை
3. பெருமாள் ஏரி – வெள்ளாறு
4. கெடிலம் அணைக்கட்டு – கெடிலம் ஆறு
5. தொழுதூர் அணைக்கட்டு – வெள்ளாறு
6. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு – வெள்ளாறு
7-வெலிங்டன் நீர்த்தேக்கம்– கடலூர் மாவட்டம்
*(கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கீழ்ச்செருவாய் பகுதியில் அமைந்துள்ளது.)*
*திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்கள்:
1. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் – கொசஸ்தலையாறு
2. புழல் ஏரி – கொசஸ்தலையாறு நீர்வழி
3. சோழவரம் ஏரி – ஆரணி ஆறு
4. தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் – கொசஸ்தலையாறு
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அணைகள் / அணைக்கட்டுகள்:
1. வீடூர் அணை – சங்கராபரணி ஆறு
2. எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு – தென்பெண்ணையாறு
3. தளவானூர் அணைக்கட்டு – தென்பெண்ணையாறு
*திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்கள்:
1. ஆண்டியப்பனூர் அணை – ஆண்டியப்பனூர் ஆறு
2. ராஜாத்தோப்பு அணை – மல்லப்பள்ளி ஆறு
3. நாயக்கனேரி அணை – நாயக்கனேரி ஓடை
*வேலூர் மாவட்டம் அணைகள்:
1. மோர்தானா அணை – கௌண்டன்யா மகாநதி
2. பொன்னை அணைக்கட்டு – பொன்னை ஆறு
3. மேல்மொணவூர் அணைக்கட்டு – பாலாறு
*திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முக்கிய அணைகள் / அணைக்கட்டுகள்:
1. பொன்னணியாறு அணை – பொன்னணியாறு
2. முக்கொம்பு மேலணை – காவிரி
3. புலிவலம் அணைக்கட்டு – உய்யக்கொண்டான் ஆறு
4.கொடிங்கால் அணைக்கட்டு – காவிரி நீர்வழி.
*கரூர் மாவட்டத்தின் முக்கிய அணைகள் / அணைக்கட்டுகள்:
1. ஆத்துப்பாளையம் அணை – நொய்யல் ஆறு (தேக்க அணை)
2. நங்காஞ்சியாறு அணை – நங்காஞ்சியாறு (தேக்க அணை)
3. மாயனூர் கதவணை/தடுப்பணை – காவிரி ஆறு
4. நெரூர் தடுப்பணை – காவிரி ஆறு
5. புகளூர் தடுப்பணை – காவிரி ஆறு
6. கட்டளை அணைக்கட்டு – காவிரி ஆறு
7. செட்டிப்பாளையம் தடுப்பணை – அமராவதி ஆறு
*நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்கள்:
1. அவலாஞ்சி அணை (Avalanche Dam) – அவலாஞ்சி நீர்வழி
2. எமரால்டு அணை (Emerald Dam) – எமரால்டு நீர்த்தேக்கம்
3. போர்த்திமந்து அணை (Porthimund Dam) – போர்த்திமந்து நீர்வழி
4. குந்தா அணை (Kundah Dam) – குந்தா ஆறு / நீர்வழி
5. பைக்காரா அணை (Pykara Dam) – பைக்காரா ஆறு
6. கிளன்மார்கன் அணை (Glenmorgan Dam) – கிளன்மார்கன் நீர்வழி
7. முகூர்த்தி அணை (Mukurthi Dam) – முகூர்த்தி ஆறு
8. மேல்பவானி அணை (Upper Bhavani Dam) – பவானி ஆறு
9. சாண்டினல்லா அணை / காமராஜ் சாகர் அணை – சாண்டினல்லா நீர்வழி
10. மரவக்கண்டி அணை (Maravakandy Dam) – மரவக்கண்டி ஆறு
11. பார்சன்ஸ் வேலி அணை (Parsons Valley Dam) – பார்சன்ஸ் வேலி நீர்வழி
12. குந்தஹ்பாலம் அணை (Kundahpalam Dam) – குந்தா நீர்ப்பிடிப்பு பகுதி
13. கத்தேரி அணை (Katteri Dam) – கத்தேரி அருவி / ஓடை
14. பெகும்பஹல்லா அணை (Pegumbahalla Dam) – பெகும்பஹல்லா ஓடை
15. பங்கிதப்பால் அணை (Bangitappal Dam) – மேல் நீர்ப்பிடிப்பு ஓடைகள்
16. மேலை நீர்ப்பிடிப்பு அணைகள் 1, 2, 3 (Western Catchment Dams 1, 2 & 3) – பைக்காரா நீர்மின் திட்டத்திற்கான நீர்த்திருப்புப் பகுதி
*பெரம்பலூர் மாவட்டம் அணை (Perambalur District):
1-மருதையாறு அணை – மருதையாறு.
2-விஸ்வக்குடி அணை – கல்லாறு / சின்னாறு (வேப்பந்தட்டை வட்டம்)
*தஞ்சாவூர் மாவட்ட அணைகள் (Thanjavur District): | 26 |
| 20 | தமிழ்நாட்டில் அரசால் வகைபடுத்தப்பட்ட CWC NRLD large dam பட்டியலில் வரும் அணைகள் 127. மலைப்பகுதி சேமிப்பு அணைகள் (Storage Dams), ஆற்று நீரைக் திருப்பும் அணைக்கட்டுகள் (Anicuts), தடுப்பணைகள் (Check Dams), கதவணைகள் (Barrages) மற்றும் பிரம்மாண்டமான பாசனக் கண்மாய்கள்/ஏரிகள் பிரதான நீர் மேலாண்மைக் கட்டமைப்பு மொத்தம் சேர்த்தால் கிட்டதட்ட 194 .
இருப்பினும் மாவட்ட வாரியாக உள்ள முக்கிய அணைகள் மட்டும் படத்தில் உள்ளது கீழே விபரமாக அனைத்து அணைகளும் கொடுத்துள்ளேன்
கீழே 👇👇
இங்கு மலைப்பகுதி சேமிப்பு அணைகள் (Storage Dams), அணைகள் இல்லாத மாவட்டத்தின் ஆற்று நீரைக் திருப்பும் அணைக்கட்டுகள் (Anicuts), தடுப்பணைகள் (Check Dams), கதவணைகள் (Barrages) மற்றும் பிரம்மாண்டமான பாசனக் கண்மாய்கள்/ஏரிகள் பிரதான நீர் மேலாண்மைக் கட்டமைப்பு விபரமும் சேர்த்து உள்ளதுஉள்ளது
கீழே
👇👇👇
*சேலம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய அணைகள்:-
1-மேட்டூர் அணை – காவிரி ஆறு
2-காரியக்கோவில் அணை – காரியக்கோவில் ஆறு
3-ஆணைமடுவு அணை – ஆணைமடுவு ஆறு
4-பூலாம்பட்டி அணைக்கட்டு – காவிரி ஆறு
5-கெட்டிமுத்தியாறு அணை – கெட்டிமுத்தியாறு
*ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணைகள்:-
1-பவானிசாகர் அணை – பவானி ஆறு
2-வரட்டுப்பள்ளம் அணை – வரட்டுப்பள்ளம் ஆறு
3-குண்டேரிப்பள்ளம் அணை – குண்டேரிப்பள்ளம் ஆறு
4-ஒரத்துப்பாளையம் அணை – நொய்யல் ஆறு
5-கொடிவேரி அணைக்கட்டு – பவானி ஆறு
6-பெரும்பள்ளம் அணை (Perumpallam Dam): சத்தியமங்கலம் / பவானி படுகையில் அமைந்துள்ள பிரதான அணை.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அணைகள்:
1. ஆழியாறு அணை – ஆழியாறு (பொள்ளாச்சி)
2. சோலையாறு அணை – சோலையாறு (வால்பாறை)
3. பிள்ளூர் அணை – பவானி ஆறு (மேட்டுப்பாளையம்)
4. அப்பர் ஆழியாறு அணை – ஆழியாறு (வால்பாறை)
5. காடம்பாறை அணை – காடம்பாறை ஆறு (வால்பாறை)
6. மேல் நீராறு அணை – நீராறு (வால்பாறை)
7. கீழ் நீராறு அணை – நீராறு (வால்பாறை)
*திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. அமராவதி அணை – அமராவதி ஆறு (உடுமலைப்பேட்டை)
2. திருமூர்த்தி அணை – பாலாறு / பி.ஏ.பி திட்டம் (உடுமலைப்பேட்டை)
3. உப்பாறு அணை – உப்பாறு (தாராபுரம்)
4. வட்டமலைக்கரை ஓடை அணை – வட்டமலைக்கரை ஓடை (வெள்ளக்கோவில்)
5. நல்லதங்காள் ஓடை அணை – நல்லதங்காள் ஓடை (தாராபுரம்)
*தேனி மாவட்டத்தின் முக்கிய அணைகள்:-
1-வைகை அணை – வைகை ஆறு.
2-சோத்துப்பாறை அணை – வராகநதி.
3-மஞ்சளாறு அணை – மஞ்சளாறு.
4-சண்முகாநதி அணை – சண்முகாநதி.
5-வீரபாண்டி அணைக்கட்டு – முல்லையாறு.
6-கும்பக்கரை அணைக்கட்டு – பாம்பாறு.
7-(முல்லைப் பெரியாறு அணை – தேனி மாவட்டம்
*(புவியியல் ரீதியாக கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும், தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்பட்டு, தேனி மற்றும் வைகை பாசனப் பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவதால், தேனி மாவட்டப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.)*
*திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணைகள்
1-பாபநாசம் அணை (காரையாறு அணை) – தாமிரபரணி ஆறு.
2-மணிமுத்தாறு அணை – மணிமுத்தாறு.
3-சேர்வலாறு அணை – சேர்வலாறு.
4-பச்சையாறு அணை – பச்சையாறு.
5-கொடுமுடியாறு அணை – கொடுமுடியாறு.
6-நம்பியாறு அணை – நம்பியாறு.
7-தலையணை – தாமிரபரணி ஆறு.
நாங்குநேரி பெரிய குளம்
*தென்காசி மாவட்டத்தின் முக்கிய அணைகள்.
1-கருப்பாநதி அணை – கருப்பாநதி
2-அடவிநயினார் கோவில் அணை – சிற்றாறு.
3-குண்டாறு அணை – குண்டாறு.
4-ராமாநதி அணை – ராமாநதி.
5-கடனாநதி அணை – கடனாநதி.
*கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய அணைகள்:-
1. பேச்சிப்பாறை அணை – கோதையாறு
2. பெருஞ்சாணி அணை – பரளியாறு
3. சிற்றாறு-I அணை – சிற்றாறு
4. சிற்றாறு-II அணை – சிற்றாறு
5. முக்கடல் அணை – முக்கடல்
6. மாம்பழத்துறையாறு அணை – மாம்பழத்துறையாறு
7. பொய்கை அணை – உள்ளாறு
*திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. சாத்தனூர் அணை – தென்பெண்ணையாறு
2. செண்பகத்தோப்பு அணை –கமண்டல நதி / கமண்டலாறு.
3. குப்பநத்தம் அணை – செய்யாறு
4. கல்லாற்று அணை – கல்லாறு
5. மிருகண்டாநதி அணை – மிருகண்டாநதி
6.தேசூர் ஏரி
7.மாமண்டூர் ஏரி.
அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் / செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது.
வரலாற்றுப் பின்னணி: பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் 'சித்ரமேக தடாகம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
*கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. கிருஷ்ணகிரி அணை (KRP அணை) – தென்பெண்ணையாறு.
2. கெலவரப்பள்ளி அணை – தென்பெண்ணையாறு.
3. பாம்பாறு அணை – பாம்பாறு.
4. சின்னாறு அணை (பஞ்சப்பள்ளி அணை) – சின்னாறு.
5. பாரூர் ஏரி / நீர்த்தேக்கம் – தென்பெண்ணையாறு.
*தருமபுரி மாவட்டத்தின் முக்கிய அணைகள்: | 29 |
