TAMIL OPTIONAL UPSC
رفتن به کانال در Telegram
THE BEST TEACHER FOR UPSC - TAMIL OPTIONAL IN INDIA (ONLINE & OFFLINE) Contact- @thamizhiyalan
نمایش بیشتر3 426
مشترکین
-124 ساعت
+17 روز
+530 روز
آرشیو پست ها
3 425
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 16.09.2026
📆 நாள்: புதன்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – திருக்குறள் தொடர்ச்சி*
வகுப்பு – 04
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 425
💐💐💐
16.09.26
சக்கையா
தோழமைகளுக்கு
வணக்கம்
காலனின்
கணக்கு நோட்டில்
எழுதப்பட்டிருந்த
பெயர்களின்
வரிசையில்
பெரும்பிழை இருக்கிறது
29 வயதில்
மக்கள் கவிஞன்
பட்டுக்கோட்டையையும்
33 வயதில்
கவிஞர் ஆத்மாநாமையும்
39 வயதில் மகாகவி பாரதியையும்
41 வயதில்
நா.முத்துக்குமாரையும்
அழைத்துக் கொண்ட காலன்
47 வயதில்
நவீனக் கவிஞன்
ஜெ.பிரான்சிஸ் கிருபாவையும்
அழைத்துக் கொண்டான்
அவனது நினைவுநாள் இன்று.
வாழும் காலத்தில்
தன் ஒருசாண் வயிற்றின் பசியை தீர்க்க போராடிய அந்த கவிஞனின் கவிதைகள்
காலத்தை வென்றெடுத்தவை
வாழ்வின் கடைசி காலத்தில் பைத்தியம் என்று சமூகத்தாலும் சந்தேகத்திற்குரிய
ஆசாமி என்று காவல்துறையாலும்
பட்டங்கள் பெற்றுக் கொண்டவன்
அவனுக்காக நினைவேந்தல் கூட்டம் ஒன்றை
தோழர் பாபுசசிதரன் முயற்சியால்
நிமிர் இலக்கிய வட்டம் சார்பாக நடத்தப்பட்டதை
நன்றியுடன் நினைவுகூர்கிறேன்
இந்த நாளில் அந்தக் கவிஞனின் சில கவிதைகளை உங்கள் நினைவிற்கு கொண்டு வருகிறேன்
கவிதை: 1
பகலில் எரியும் மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து சுருள்சுருளாய் விரிகிறது
இருள்
கவிதை: 2
ஜன்னல் வழியே தெரிவது வானத்தின் ஒரு பகுதி தான் என்றான்
முழு வானமும் தெரியும் வசமாய் ஒரு ஜன்னல் செய்ய முடியுமா ?
கவிதை 3
உள்ளங்கையில்
ஆடும் உன் பம்பரத்தில் இன்னும் எத்தனை சுற்றுகள் மீதம் இருக்கிறது இருக்கட்டும்
கவிதை: 4
மனித முகங்கள் மறையும் இம்மிரவுப் பொழுதில்
உறைய தொடங்கும் இருளில்
என் சின்னஞ்சிறு சிறு உலகை
ஒரு சிட்டிகை ஒளியில் எனக்கு சுட்டிக்காட்டுகிறது
கண்ணெதிரே ஒரு மின்மினி பூச்சி
கவிதை:5
என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் வேண்டி
என் முன்னே மண்டியிட்டு கண்ணெதிரே மன்றாடினாள்
என் உயிரினும் மேலான காதலி பெற்றதும் அதை குங்குமப்பொட்டு போல் தன் நெற்றியில்
என் பரிசாக இட்டுக் கொள்ளப் போவதாக முத்தங்களால் சில சாத்தியங்கள் செய்தாள்
ரத்ததான முகாம்கள் பலவற்றில்
புட்டி புட்டியாக பங்களிப்பு செய்தவனுக்கு
ஒரு சொட்டு பொட்டா என்ன
குண்டூசியால் கட்டை விரல் நுனியில் குத்தி முதல் சுற்று ரத்தத்தை பரிசளித்தேன் அவளோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை
கடைசி சொட்டு ரத்தம் தான்
தன் முகத்துக்கு கச்சிதமாக இருக்கும் என்றாள் அதையும் ஈந்தேன் அது ஒரு குங்குமப்பொட்டினும்
கூடுதல் அழகாகத்தான் இருந்திருக்கும்
அதை கண்டு களிக்கத்தான்
நான் இல்லை
கவிதை: 6
பிறந்தவர்களும் இறந்தவர்களும் கலந்து வாழும் இந்த பூமியை விட்டு வெளியேறி பிறந்தவர்கள் மட்டுமே வாழும் அல்லது இறந்தவர்கள் மட்டுமே வாழும்
ஒரு பூமிக்கு செல்லத்தான் புறப்பட்டாய்
யார் யாரிடம் எல்லாமோ
வழி கேட்டாய் யாராலும் உனக்கு உதவ முடியவில்லை உனக்கு பின்னால் இருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில்
உன் பிம்பமே முகத்தை திருப்பிக் கொண்டது
வழிமொழிய நாதியற்ற நிலையில் பிறந்தவர்களும் இறந்தவர்களும் கலந்து வாழும் பூமிக்கு வருத்தத்தோடு திரும்பி வருகிறாய் பிறந்து வருகிறாயா இறந்து வருகிறாயா என்பது உனக்கே புரியவில்லை
💐💐👍💐💐
3 425
சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தற்போது 80ஸ் ஏஐ புகைப்படங்களை உருவாக்கி பதிவிடும் மோகம் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது. ஜென்-ஸி முதல் 80களில் பிறந்தவர்கள் வரை அனைவரும் இந்த ட்ரெண்டில் மூழ்கியிருக்கின்றனர்.
ஒரு சில வினாடிகளில் பழைய விண்டேஜ் தோற்றத்திற்கு மாறும் புகைப்படங்கள் கண்ணுக்கு அழகாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் பூமி சந்திக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் டிஜிட்டல் மென்பொருள் மட்டுமல்ல; சக்திவாய்ந்த தரவு மையங்கள், அதிவேக கணினிகள் மற்றும் பிரம்மாண்ட குளிரூட்டும் அமைப்புகளைக் கொண்ட மிகப்பெரிய கட்டமைப்பு ஆகும்.
ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான பல்கலைக்கழக நிறுவனம் (UNU-INWEH) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் ஏஐ பயன்பாட்டிற்கான தரவு மையங்களின் தண்ணீர் தேவை, சுமார் 130 கோடி இந்திய மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை மிஞ்சிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் நாம் ஒரு ஏஐ படத்தை உருவாக்கும் போது, அதன் பின்னணியில் உள்ள தரவு மையங்களில் அதிவேக கணினிகள் இயங்கி பெரும் வெப்பத்தை வெளியிடுகின்றன. கார்னகி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் ஹக்கிங் பேஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஏஐ படத்தை உருவாக்க 0.01 முதல் 0.29 கிலோவாட் மின்சாரம் செலவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் பலமுறை படங்களை உருவாக்கும் போது, மின்சார நுகர்வு உச்சம் தொடுகின்றது. அமெரிக்காவின் எம்ஐடி (MIT) ஆய்வின்படி, தரவு மையங்களின் மின்சாரத் தேவை சில வருடங்களில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
மின்சாரத்தைத் தாண்டி, கண்களுக்குத் தெரியாத மறைமுக நீர் நுகர்வு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தரவு மையங்களின் வெப்பத்தைத் தணிக்க பிரம்மாண்ட குளிரூட்டும் அமைப்புகளுக்குத் தண்ணீர் அத்தியாவசியமாகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வின்படி, சாட்ஜிபிடியில் வெறும் 20 முதல் 50 உரையாடல்களுக்கு சுமார் 500 மில்லி லீட்டர் தண்ணீர் வரை செலவாகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், கோடிக்கணக்கான உயர்தர ஏஐ படங்களை உருவாக்கும் போது செலவிடப்படும் நன்னீரின் அளவு கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் படைப்பாற்றலுக்கு ஏஐ ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், தேவையில்லாத வைரல் ட்ரெண்டுகளுக்காக இயற்கையைச் சுரண்டுவதும், தனிப்பட்ட புகைப்படங்களின் தரவுகளைப் பொதுவெளியில் விடுவதும் நீண்ட கால பாதிப்புகளை உருவாக்கும்.
பொழுதுபோக்கிற்காக நாம் செய்யும் சிறிய செயல்கள் கூட புவி வெப்பமயமாதலுக்கும் நீர் பற்றாக்குறைக்கும் வித்திடக்கூடும் என்பதால், ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டில் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.
#News21tamil #ai80strending #trendingnow #TamilUpdates #ai80strend
3 425
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 11.09.2026
📆 நாள்: வெள்ளிக்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – திருக்குறள் தொடக்கம்*
வகுப்பு – 01
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 425
தமிழ்நாட்டின் பண்டைய வாழ்நிலை, வரலாறு, பண்பாடு, அடுத்தடுத்த கட்ட நகர்வுகள், இன்றைய வளர்ச்சிப் போக்குகள் ஆகிய அனைத்தையும் குறித்த அறிதல்களையும் புரிதல்களையும் புதிய பார்வையில் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பொதுவுடைமை சார்ந்த அறிஞர்கள் மற்றும் மார்க்சியத்தின் பங்களிப்புகள்தாம் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன என்று தயக்கமின்றிக் கூறலாம்.
தமிழியல் வளர்ச்சியில் கட்சியின் ஈடுபாடு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு எடுத்த முடிவுகளின் அடிப்படையில்தான் ‘தாமரை’ எனும் திங்களிதழ் மலர்ந்தது. அதுபோன்று, ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பும் கட்சி எடுத்த முன்முயற்சியால்தான் தோற்றுவிக்கப்பட்டது.
பேரா. நா.வா. ‘ஆராய்ச்சி’ ஆய்விதழினைத் தொடங்கியபோது, பேரா. நா.வா, அவர்களே குறிப்பிட்டிருப்பது போன்று, அன்று கட்சியின் முன்னிலைத் தலைவர் தோழர் கே. பாலதண்டாயுதம் அவர்கள் தூணாக நின்று தாங்கினார். மற்றொரு முன்னணித் தலைவர் தோழர் ப. மாணிக்கம் வலிமை தரும் ஆற்றலாக விளங்கினார்.
இப்போது, ‘ஜீவாநாவா சிந்தனைப் பள்ளி’ மெய்ந்நிகர் மேடை உரையாடல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத் தோழர்கள் பலரும் பங்குகொண்டுவருவது, கட்சிக்குத் தமிழியல் முன்னெடுப்புகளில் உள்ள ஈடுபாட்டினையே வெளிப்படுத்துகிறது எனலாம்.
தமிழியல் என்ற அளவில், நேரிய முன்னெடுப்புகளிலும், நெடிய ஆய்வு முயற்சிகளிலும், நேரிடையான பங்களிப்புகளிலும், வேறு எந்த இயக்கமும் அரசியல் கட்சி என்ற வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்று முழுமையான ஈடுபாட்டினைக் காட்டவில்லை என்று துணிந்து கூறமுடியும்.
விரிவான பதிவுகள் வேண்டும்
தமிழியல் முன்னெடுப்புகளுக்குத் தமிழகப் பொதுவுடைமையினரின் பங்களிப்புகள் குறித்த சிறு குறிப்புகள் மட்டுமே இவை. சில பெயர்கள் அல்லது அமைப்புகள் விடுபட்டிருக்கலாம். சில நிகழ்வுகள் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், பங்களிப்புகளை எவரும் குறைத்து மதிப்பிட இயலாது. தமிழ்நாடெங்கும் மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் அனைத்தும் இன்னும் விரிவாகத் தொகுக்கப்படவேண்டும்.
தமிழியல் ஆய்வுகள் என்றில்லாமல், கவிதை, சிறுகதை, நாவல், மதிப்பீடு போன்ற பல்வேறு நிலைகளில் பொதுவுடைமையினரின் பங்களிப்புகள் அளப்பரியனவாகும். நூற்றுக்கணக்கான படைப்பாளர்களும் பங்களிப்பாளர்களும் இலக்கிய உலகைச் செழுமைப்படுத்தி வருகின்றனர்.
இவற்றைத் துறை அடிப்படையில் தொகுத்தும் பகுத்தும், வகுத்தும், பங்களிப்பின் விவரங்களுடன் தனித் தனி நூல்களாகவே எழுதவேண்டும்.
ஏனெனில், தமிழியல் வளர்ச்சியில் எந்த இயக்கத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் பின்தங்கியிருக்கவில்லை.
(ஜனசக்தி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி
நூற்றாண்டுச் சிறப்பிதழ் திசம்பர் 2025)
3 425
1975 முதல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் குமரி மாவட்டம் கீரிப்பாறையில் பேரா. நா.வா. தொடங்கி வைத்த முகாம், அடுத்துச் சிவலோகத்தில் தொடர்ந்து, இன்று கன்னியாகுமரியில் ‘பேரா. நா.வா. கலை இலக்கிய முகாம்’ என்ற பெயரில் தொடர்கிறது. படைப்பாளர்களும் ஆய்வாளர்களும் ஓரிடத்தில் சில நாள்கள் ஒன்றாகக் கூடி நடத்திவரும் தமிழியல் கலந்துரையாடல்கள் பல இளம் ஆய்வாளர்களையும் படைப்பாளர்களையும் உருவாக்கிவருகிறது.
ராசபாளையம் தோழர்கள், பண்பாட்டு முகாமினை ஆண்டுதோறும் நடத்தித் தமிழியல் பணிகளை மேம்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் ஆங்காங்குள்ள தோழமைகள் தங்களுடைய ஏற்பாடுகளில் அவ்வப்போது பல்வேறான தமிழக வரலாறு, பண்பாடு உள்ளிட்ட நிகழ்வுகளை ஆர்வமுடன் நடத்துவதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தோழர்கள் கே. முத்தையா, மாயாண்டி பாரதி, ச. செந்தில்நாதன், அருணன், தமிழ்ச்செல்வன் போன்றோரது ஆய்வு முயற்சிகளையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பணிகளையும் மறந்துவிட முடியாது. இவர்களோடு, பண்டைத் தமிழர் வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் ஆர்வம் காட்டி ஊக்கம் தரும் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் நடுவண் அரசியல் குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருட்டிணன் அவர்களையும் குறிப்பிடவேண்டும்.
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு தொடர்பான ஆய்வுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ‘இந்து’ (ஆங்கில நாளிதழ்), ‘சோசியல் சயன்டிஸ்ட்’ போன்ற இதழ்களில் வெளியிடச்செய்து, மார்க்சியக் கண்ணோட்டம் கொண்ட படைப்புகளைத் தமிழ்நாட்டுக்கும் அப்பால் பரவச் செய்த ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் தோழர் என். ராம் அவர்களது பணிகள் மறக்கமுடியாதனவாகும்.
பல்கலைக்கழகங்களில் மார்க்சியத்தின் நுழைவு
தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியன 2017ஆம் ஆண்டினையொட்டி பேரா. நா.வா. நூற்றாண்டு விழா நிகழ்வுகளை நடத்திப் பெருமைப்படுத்தின. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய நூற்றாண்டு விழா நிகழ்வில் தோழர் தோதாத்ரி, மே.து.ரா. ஆகியோர் கலந்துகொண்டனர். சாகித்திய அகாதமியும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையும் இணைந்து, அப்போது துறைத் தலைவராக இருந்த தோழர் நா. ராமச்சந்திரன் ஏற்பாட்டில் 24-08-2017இல் நடத்திய ‘நா.வா. நூற்றாண்டுக் கருத்தரங்கம்’ மார்க்சிய ஆய்வுகளின் ஏற்புக்கான அடையாளமாகும்.
தோழர் ரகுநாதன் ஆய்வுகள் பற்றிய தனிக் கருத்தரங்கம் ஒன்றினைத் திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகம் நடத்தியது. அத்துடன், ‘தொ.மு.சி. ரகுநாதன் நூற்றாண்டுச் சிறப்புக் கருத்தரங்கு’ ஒன்றினை 26-02-2024 அன்று பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை, தோழர் நா. ராமச்சந்திரன் முயற்சியில் சிறப்புடன் கொண்டாடியது.
மேலும், பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது ஆய்வுப் பங்களிப்புகள் பற்றிய கருத்தரங்க நிகழ்வுகள் பல பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் நடந்துள்ளன.
தமிழியல் ஆய்வுகளில் பல அறிஞர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மேலாக மார்க்சியப் பார்வையுடன் வழிநடத்திய தோழர்கள் தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை, க. கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகிய முதல் நால்வரது பெருமை தனித்துப் போற்றப்பட்டது என்பதில் அய்யமில்லை.
தோழமை எல்லைகளைத் தாண்டிய மார்க்சியம்
பொதுவுடைமையினரின் பணிகள் இன்று தோழமை எல்லைகளைத் தாண்டி, பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்கும் அடித்தளமிட்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும். தமிழர் பெருமை என்று நின்றுவிடாமல், தமிழரது பண்பாட்டு வரலாற்றின் தொன்மையை அறிவியல் அடிப்படையில் அகழ்ந்தெடுக்கும் மார்க்சியப் பார்வை இன்று பெரும்பாலான தமிழியல் ஆய்வுகளுக்குத் தூண்டுதலாக இருப்பதுடன், விளக்கமும் தெளிவும் தந்துவருகின்றன என்றால் அது மிகையன்று.
தமிழியலின் ஒவ்வொரு துறையிலும் நா.வா. மாணவர்களும் வழியினரும் பிற மார்க்சியப் பின்னணி கொண்டோரும் முன்னெடுக்கும் ஆய்வுகள், புதிய கண்ணோட்டங்களைத் தந்து, அந்தந்தத் துறைகளின் அடுத்தடுத்த கட்ட ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைந்து வருகின்றன.
பொதுவுடைமை இயக்கத்துடன் அமைப்பளவில் நேரடியாக இல்லாவிடினும், மார்க்சிய அறிஞர்களுடனும் படைப்புகளுடனும் கொண்ட தொடர்புகளால் அறிவியல் பார்வையுடன் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டு வருவோர் பலர். இன்றைய நிலையில், மூத்தோர் சிலர் மட்டுமல்லாது, புதிய தலைமுறையினரும் பெருமளவில் இவர்களில் அடங்குவர். மார்க்சியத் தாக்கத்தின் விளைவுகளால் எழுந்த இவர்களுடைய முயற்சிகள், தமிழியலின் ஆழமான பதிவுகளாகத் தோன்றியிருக்கின்றன; தொடர்ந்து வருகின்றன.
3 425
மார்க்சிய ஆய்வுகளில் தடம் பதித்த பேராசிரியர்கள் நா.வா., ஆ. சிவசுப்பிரமணியன், ந. முத்துமோகன் ஆகியோரது நூல்களைப் பற்றிய தொடர் சொற்பொழிவுகள் நடைபெற்றுவருகின்றன. சிந்துவெளி ஆய்வறிஞரும் முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளருமான தோழர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ என்ற நூல் குறித்துக் கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்தி 17 சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். ‘பண்டைத் தமிழ்ச் சமூகம் : அறிந்ததும் அறியாததும்’ என்ற தலைப்பில் முன்னோட்டத்தோடு 19 அமர்வுகளில் மே.து.ரா. உரை நிகழ்த்தியிருப்பதுடன், திங்கள்தோறும் மேலும் இந்தத் தொடர் நீள்கிறது.
இவற்றுடன், தமிழரின் தொன்மை, இலக்கியம், வரலாறு, மெய்யியல், மார்க்சிய அறிவியல் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஈழத்துப் பேராசிரியர் ந. ரவீந்திரன், பேரா. திராவிடமணி, தோழர்கள் ப.கு. ராஜன், வி. சிவராமன் போன்றோர் தொடர் உரையாடல்களை நிகழ்த்தி வருகின்றனர். இவையன்றி, பல்வேறு தனித் தலைப்புகளில் தமிழியல் ஆய்வுகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அமர்வுகள் இதுவரை நடந்துள்ளன. தோழர்கள் கனிமொழி செல்லத்துரை, அ. ஜார்ஜ், வி. சைமன், சாகுல் சலீம் போன்றோரது பங்களிப்புகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.
இந்தியக் கம்யூனிட் கட்சியின் அனைத்திந்தியப் பொதுச் செயலாளர் தோழர் து. ராஜா, மாநிலச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் டி.எம். மூர்த்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. சந்தானம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் த. லெனின் ஆகியோரும் தங்களது உரைகளை அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றனர்.
மேலும், தற்போது இத்தகைய சொற்பொழிவுகளின் பதிவுகள் அனைத்தையும் காணொளிக் காட்சிகளாக ‘ஜீவாநாவா தமிழ்’ என்ற பெயரில் ‘யுடியூப்’ தளத்தில் வெளியிட்டு வருவதால், வாய்ப்புகள் அமையும்போது என்றும் எப்பொழுதும் எவரது உரையினையும் கேட்க முடியும் என்ற அரும்பயன் கிடைத்துள்ளது.
நா.வா. வழியில் வாழையடி வாழையாக
‘நெல்லை ஆய்வுக் குழு’ மற்றும் ‘ஆராய்ச்சி’ வழியாக பேரா. நா.வா. தொடங்கிய முயற்சிகள் தொடர்கின்றன. அவரது வழிகாட்டுதலில் தமிழியல் ஆய்வாளர்களாக மலர்ந்த தோழர்கள் மட்டுமல்லாது, வாழையடி வாழையாக அவர்களையெல்லாம் அடியொற்றிப் பலர் தங்களது பங்களிப்பினை இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். தோழர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், தோதாத்ரி, கா. சுப்பிரமணியன், ஆ. சுப்ரமணியன், இராம. சுந்தரம், ந. முத்துமோகன், இ. முத்தையா, நா. ராமச்சந்திரன், ஆ. தனஞ்சயன், ஞா. ஸ்டீபன், அரங்க. பூங்குன்றன், ஆ. பத்மாவதி, வெ. கிருட்டினமூர்த்தி, தி.சு. நடராசன், பொன்னீலன், சி. சொக்கலிங்கம், செந்தீ. நடராசன். எஸ். கே. கங்கா, ப. ஆனந்தகுமார், இரா. காமராசு, டி. மங்கை, துரை சீனிச்சாமி ஆகியோரோடு மே.து.ரா. உள்ளிட்ட பலரும் இதில் உள்ளடங்குவர்.
இன்னும், தோழர் கே.டி.கே. தங்கமணி அவர்களின் மணிமேகலை ஆய்வுகளும், தோழர் ஆர்.கே. கண்ணன் அவர்களின் பங்களிப்புகளும் சிறப்பிடம் பெறுவதாக உள்ளன.
மார்க்சிய நூலகங்கள்
தமிழில் ஆய்வு முயற்சிகளுக்கு உறுதுணையாகத் தூத்துக்குடியில் தோழர் இசக்கி முன்முயற்சியில் ‘வ.உ.சி. ஆய்வு நூலகம்’ இயங்கி வருகிறது. தோழர் ரகுநாதன் திரட்டியிருந்த நூல்களையும் சேர்த்து, எட்டயபுரத்தில் ‘ரகுநாதன் நூலகம்’ தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டுவருகிறது.
தனியராக இருந்தாலும், மார்க்சியம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு நூல்களையும் இதழ்களையும் பல்லாயிரக்கணக்கில் தேடித் திரட்டிக் காத்துவரும் தோழர்கள் வீ. அரசு, ஓடை. துரையரசன் போன்றோர் பல ஆய்வாளர்களின் பணிகளுக்குத் துணை நிற்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தின் பங்களிப்பு
இவர்களுடன், புதுச்சேரி மாநில ஆய்வாளர்களான தோழர்கள் எல்லை சிவக்குமார், நா. இளங்கோ, திருமா. அன்புச்செல்வன், விவேகானந்ததாசன், பா. ரவிக்குமார், லட்சுமி தத்தை போன்றோரும் உள்ளனர்.
புதுச்சேரி விடுதலை இயக்கத்தினைத் தலைமையேற்று நடத்திய தோழர் வ. சுப்பையா அவர்கள் 1934இல் தொடங்கிய ‘சுதந்திரம்’ இதழ், தமிழியல் தொடர்பான பல படைப்புகளுக்கு முன்னிரிமை தந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இயக்குனராக இருந்த டாக்டர் இரா. நாகசாமி தலைவராகவும், பேரா. நா.வா. துணைத்தலைவராகவும், மே.து.ரா. செயலாளராகவும் அமைந்த 'வரலாற்றுப் பேரவை' என்ற பதிவு பெற்ற அமைப்பொன்று 1974இல் உருவாக்கப்பட்டது.
மாநில அளவில் மட்டுமல்லாது, பல மாவட்டங்களிலும் வரலாற்றுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கில நூல்களும் வெளியிடப்பட்டன. தொல்லியல் மற்றும் கல்வெட்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றினை நுட்பத்துடன் காணும் புதிய ஆய்வாளர்கள் பலர் உருவாயினர். இவர்களில், தோழர்கள் அரங்க. பூங்குன்றன், சொ. சாந்தலிங்கம், வெ. வேதாசலம் உள்ளிட்ட பொதுவுடைமை ஆய்வாளர்களின் பங்களிப்புகள் குறிக்கத்தக்கனவாக இருந்தன; இன்னும் தொடர்கின்றன.
குமரியில் கலை இலக்கிய முகாம்
3 425
1961ஆம் ஆண்டில் அமைப்பு மாநாடு என்ற அளவில் தோழர் ஜீவா அவர்களைத் தலைவராகக் கொண்டு கோவையில் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’, கடந்த 65 ஆண்டுகளாகப் பல கருத்தரங்குகளை நடத்தித் தமிழர் வாழ்வுக்குப் புதிய புரிதல்களைக் கொடுத்துவருகிறது. தொடக்க அமைப்பு மாநாட்டில் கலை, இலக்கியம், ஓவியம், நாடோடி இலக்கியம் போன்ற பல துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. நாடோடி இலக்கியத் துணைக் குழுவுக்கு இயக்குநராக இருந்த பேரா. நா.வா. முன்னெடுப்பில் பெருமளவில் பாடல்கள் திரட்டப்பட்டுத் ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ என்ற தலைப்பிலான நூலில் இடம்பெற்றன.
அறிவுத் துறையினரைத் தாண்டி எளிய மக்களிடம் இலக்கிய முனைப்புகளையும் ஆய்வு ஆர்வத்தையும் விதைத்ததில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துக்குப் பெரும்பங்கு உண்டு என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.
எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம்
தோழர் ஜீவாவின் முன் முயற்சியில், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தோழர் சோ. அழகர்சாமி தலைமையில், தோழர் இளசை மணியன் உள்ளிட்டோர் பங்கு கொண்டு 1962 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ‘எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம்’, தோழர்கள் எசு. சந்திரசேகரன், காசி. விசுவநாதன் போன்றோர் இணைந்திட இன்று வரை பாரதி குறித்த நிகழ்வுகளை நடத்துவதோடு நின்றுவிடாமல், பல ஆய்வுக் கருத்தரங்குகளையும் நடத்திவருகிறது.
சமூக விஞ்ஞானம் ஆய்விதழ்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் ‘தென்னக ஆய்வு மையம்’ சார்பில் ‘சமூக விஞ்ஞானம்’ காலாண்டு ஆய்விதழ் நடத்தப்படுகிறது. தோழர் தேவ. பேரின்பன் அவர்களையடுத்து, மே.து.ரா. தற்போது ஆசிரியராக இருக்கிறார். தோழர்கள் உலோ. செந்தமிழ்க்கோதை, தோதாத்ரி, தி.சு. நடராசன், அரங்க. பூங்குன்றன், ஆ. பத்மாவதி ஆகியோர் ஆசிரியர் குழுவில் பங்கேற்றிருந்தனர் – பங்களித்து வருகின்றனர். ஆழமான ஆய்வுகளை வெளியிடுவதில் ‘சமூக விஞ்ஞானம்’ இதழுக்குத் தனிச் சிறப்பு உண்டு.
தமிழியல் ஆய்வுகளை முன்னெடுக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு தொடர்ந்து முனைப்புக் காட்டிவருதற்குச் ‘சமூக விஞ்ஞானம்’ நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
'திணை' காலாண்டிதழ் (நாகர்கோவில்), கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழியல் தொடர்பான பல்வேறு நுட்பமான ஆய்வுகளை மார்க்சியப் பார்வையில் வெளியிட்டு வருகிறது. தோழர்கள் சி. சொக்கலிங்கம் (மேலாண்மை ஆசிரியர்), வி. சிவராமன் (ஆசிரியர்), எசு.கே. கங்கா, ச. அனந்த சுப்ரமணியன், ஹாமீம் முசுதபா (உள்ளிட்ட பலர் இணை ஆசிரியர்கள்) போன்றோர் ‘திணை’ பொறுப்பில் உள்ளனர்.
நியூ செஞ்சுரி நூல் நிறுவனம் - மக்கள் வெளியீடு
பொதுவுடைமை அறிஞர்களின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நியூ செஞ்சுரி நூல் நிறுவனம், மக்கள் வெளியீடு ஆகியவற்றின் பங்கு பெரிதாகும். குறிப்பாக, நியூ செஞ்சுரி நூல் நிறுவனம் பல பெரும்நகரங்களில் கிளைகளைக் கொண்டிருப்பதுடன், நூற்றுக்கணக்கான இடங்களில் நூல் காட்சிகளை நடத்தி மக்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நூல் வெளியீடு மற்றும் விற்பனையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் உள்ளிட்டோரின் அடிப்படை மார்க்சிய நூல்களுடன், மார்க்சியத்தின் அடிப்படையிலான நூற்றுக்கணக்கான நூல்களைத் தொடர்ந்து தமிழில் வெளியிடுகிறது.
நியூ செஞ்சுரி நூல் நிறுவனம் சார்பில் வெளிவரும் ‘உங்கள் நூலகம்’ திங்களிதழில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன.
புத்தகத் திருவிழா மற்றும் தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பாராட்டு என்ற வகையில் தோழர் ஸ்டாலின் குணசேகரன் முயற்சியில் நடத்தப்பட்டுவரும் ‘ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை’ மக்களுடன் மாணவர்களுக்கும் படிப்பில் ஈடுபாட்டினை வளர்த்துவருகிறது.
இணைய வழி ஜீவா நாவா சிந்தனைப் பள்ளி
அண்மைக் காலத்தில் ஏற்பட்டு வரும் நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் மெய்ந்நிகர் மேடை என்ற பெயரில் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதிலும் பொதுவுடைமையினர் பின்தங்கியிருக்கவில்லை.
‘ஜீவா நாவா சிந்தனைப் பள்ளி’, ‘சிங்காரவேலர் சிந்தனைப் பள்ளி’, ‘பேராசிரியர் நா.வா. ஆராய்ச்சிப் பள்ளி’ ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்துகின்ற இணையவழிக் கருத்தரங்குகள் தமிழ்நாட்டில் ஈர்ப்பையும் பாராட்டையும் பெற்றுவருகின்றன என்றுதான் கூறவேண்டும். இவற்றில் முதல் இரண்டு அமைப்புகளுக்குத் தோழர் எஸ். கே. கங்கா இயக்குநராக இருக்கிறார். மூன்றாவது அமைப்பான ‘பேராசிரியர் நா.வா. ஆராய்ச்சிப் பள்ளி’க்குத் தோழர் நா. ராமச்சந்திரன் இயக்குநராக விளங்குகிறார்.
2021 மே இரண்டாம் நாள் முதலடி எடுத்துவைத்து, இன்று வரை 450க்கும் மேற்பட்ட அமர்வுகளை நடத்தியுள்ள இந்த அமைப்புகள், தமிழியல் தொடர்பாகத் தொடாத பொருள்களே இல்லை என்று கூறிவிடலாம்.
3 425
தமிழீழத்தில் பேராசிரியர்கள் க. கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகிய இருவரும் மார்க்சிய நோக்கில் தமிழர் வாழ்வினை வெளிப்படுத்தும் தங்களது ஆய்வுகளை முன்னெடுத்து வந்தனர்.
பேரா. கைலாசபதியின் 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' என்ற நூல் 1966இல் வெளியானது. பேரா. சிவத்தம்பியின் 'பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்' என்ற நூல் அதனைப் பின்தொடர்ந்தது.
ஆய்வாளர்கள் ரகுநாதன், நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய நால்வரும் தமிழியல் ஆய்வுகளை மறுமதிப்பீடு செய்து, புதிய பார்வையில் தமிழர் வாழ்வைக் கட்டமைப்பதில் முன்னின்றனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
தாமரை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு சார்பில் தோழர் ஜீவா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1958 திசம்பரில் தொடங்கப்பட்ட 'தாமரை', கதை, கவிதை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களுடன், தமிழியல் தொடர்பான அன்றைய மரபுவழி முன்னிலை ஆய்வாளர்கள் மு. வரதராசன், மயிலை சீனி வேங்கடசாமி போன்ற பலருடைய கட்டுரைகளையும் வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. அடுத்துத் தோழர் தி.க.சி. வழிகாட்டுதலில் பல கலந்துரையாடல்களைத் 'தாமரை' வெளியிட்டுக் கருத்தாக்கங்களைக் கூர்மைப்படுத்தியது. எழுத்தாளர்களை மட்டுமல்லாது, ஆய்வாளர்களை ஊக்குவதிலும் தோழர் தி.க.சி. முன்னின்றார்.
தோழர் ரகுநாதனுக்குப் பின்னர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் எசு.ஏ. முருகானந்தம் ஆசிரியப் பொறுப்பேற்று நடத்திய ‘சாந்தி’ திங்களிருமுறை அரசியல் இதழாக வெளியானாலும், பேரா. நா.வா. உள்ளிட்டோரது ஆய்வுக் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
உலகத் தமிழ் மாநாடுகள்
முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் 1966இல் நடைபெற்றபோது பேரா. நா.வா. போன்றோர் அழைத்துச் செல்லப்படவில்லை. ஆயினும், அவரது கட்டுரை ஆய்வுலகத்தில் பேசுபொருளாக மாறியது. பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது கட்டுரைகள் தமிழியல் ஆய்வுக்களைப் புதிய பார்வையில் நோக்கவேண்டும் என்னும் எண்ணங்களை ஏற்படுத்தின.
சென்னையில் 1968ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர்கள் நா.வா., கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் வழங்கிய கட்டுரைகள் தமிழியல் ஆய்வுகளுக்குத் திருப்புமுனையாக அமைந்தன. கருத்தரங்க அமர்வுகளில் அவர்களது பங்களிப்புகளும் பாராட்டுக்களைப் பெற்றன.
'இலக்கிய உலகம் எதிர்பார்ப்பது என்ன?' என்ற பேரா. நா.வா. எழுதிய சிறுநூல் ஒன்று மாநாடு நடக்கும்போது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினரால் வெளியிடப்பட்டு அனைவரையும் ஈர்த்தது.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்வுகள் குறித்துத் 'தாமரை' திங்களிதழில் பேரா. நா.வா. எழுதிய கட்டுரைத் தொடர், எதிர்காலத்தில் தமிழியல் தொடர்பான ஆய்வுகளை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலைத் தருவதாகவே இருந்தது.
பேரா. நா.வா. தொகுத்த வழக்காற்றியல் தொடர்பான கதைப் பாடல்கள் உள்ளிட்ட ஆறு நூல்களை 1973, 1974களில் மதுரைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்தது.
நா.வா. தொடங்கிய நெல்லை ஆய்வுக் குழு – ஆராய்ச்சி
1967இல் பேரா. நா. வானமாமலை தொடங்கிய 'நெல்லை ஆய்வுக் குழு' மேலும் மார்க்சிய அடிப்படையிலான ஆய்வுகளுக்கு வித்திட்டது. 'நெல்லை ஆய்வுக் குழு' நடத்திய பல கருத்தரங்குகள், புதிய ஆய்வாளர்களை உருவாக்கி, மார்க்சிய ஆய்வு முறைகளை விரிவாக்கின. இவற்றில், தோழர்கள் இரா. நல்லகண்ணு, எசு.எசு. தியாகராசன் போன்றோர் கலந்து வளப்படுத்தினர்.
இதனையொட்டி 1969இல் தொடங்கப்பட்ட 'ஆராய்ச்சி' காலாண்டிதழ் அடுத்த கட்டப் பாய்ச்சலாகத் தமிழியல் ஆய்வுகளை விரிவுபடுத்தியது எனலாம்.
'ஆராய்ச்சி' இதழ் வளர்ச்சிக்குப் பொதுவுடைமைத் தலைவர்களாக இருந்த தோழர்கள் கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம் ஆகியோர் ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தினர்.
பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், நூலகங்கள் போன்றவற்றில் மட்டுமிருந்த தமிழியல் ஆய்வுகளை மக்களிடம் கொண்டு சென்றதுடன், பல ஆய்வாளர்களை உருவாக்குவதில் 'ஆராய்ச்சி'யின் பெரும்பணிக்கு வேறு ஒப்பீடு இல்லை எனலாம். பேரா. நா.வா. மறைவுக்குப் பின்னர், மே.து.ரா. ஆசிரியப் பொறுப்பில் 'நாவாவின் ஆராய்ச்சி' என்ற பெயரில் வெளியான இதழ், தற்போது தோழர் நா. ராமச்சந்திரன் ஆசிரியராக அமையப் 'புதிய ஆராய்ச்சி' என்ற பெயரில் ஆண்டுக்கு இருமுறையாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தோழர் ப. விருத்தகிரி பொறுப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய 'மார்க்சிய ஒளி' இதழினையும் இங்குச் சேர்த்துக்கொள்ளலாம்.
விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா, தொடக்கத்தில் யாழ்ப்பாணத்திலிருந்தும், பின்னர் கொழும்பிலிருந்தும் கொண்டுவந்த 'மல்லிகை' திங்களிதழின் பங்களிப்புகளும் இங்குச் சுட்டிக்காட்டத் தக்கவையாகும்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
3 425
தமிழியல் ஆய்வுகளின் முன்னெடுப்பில்
தமிழகப் பொதுவுடைமையினர்
மே.து.ரா.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த வேளையில் தமிழ்நாட்டுப் பின்புலத்தில் பொதுவுடைமை இயக்கத்தினரின் பெரும் பங்களிப்பினை நினைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.
பல்வேறு நிலைகளில் மக்கள் நலனுக்காகப் பொதுவுடைமை இயக்கத்தின் செயல்பாடுகள் மனநிறைவைத் தருவதாக அமைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக, தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு போன்ற தமிழியல் துறைகளில் பொதுவுடைமையினர் முன்னெடுத்த முயற்சிகள் பெரிதும் போற்றத் தக்கதாக விளங்குகின்றன.
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையும் புதிய தரவுகளும்
அச்சு நுட்பம் பரவலானபோது 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஓலைச்சுவடிகளில் முடங்கிக் கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட படைப்புகள் யாவும் அச்சிடப்பட்டு நூல் வடிவம் கண்டன.
இதனையொட்டி, 1887 முதல் இந்தியத் தொல்லியல் துறை சார்பில் கோயில்களில் பதியப்பட்டிருந்த கல்வெட்டுக்கள் அடுத்தடுத்துப் படியெடுக்கப்பட்டு ஆண்டு அறிக்கைகளாகவும் கல்வெட்டு வரிகளாகவும் தொடர்ந்து வெளிவந்தன.
இவையன்றி ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்), அரிக்கமேடு (புதுச்சேரி மாநிலம்) போன்ற இடங்களின் அகழ்வுகளில் வரலாற்றுச் சான்றுகள் பல கிடைக்கப்பெற்றன. இவை யாவும் பண்டைத் தமிழரின் வாழ்முறை, வரலாறு, பண்பாடு போன்றவற்றைக் கட்டமைக்கும் வாய்ப்புகளை வழங்கின.
அடுத்து, கொடுமணல் (ஈரோடு), பொருந்தல் (திண்டுக்கல்), கீழடி (சிவகங்கை), மாங்காடு (சேலம்), கீழநமண்டி (திருவண்ணாமலை), மயிலாடும்பாறை (கிருட்டிணகிரி), சிவகளை (தூத்துக்குடி), கொந்தகை (சிவகங்கை) போன்ற மேலும் பல இடங்களின் அகழ்வுகள், தமிழர் பண்பாட்டுத் தொன்மைக்கும் சிறப்புக்கும் புதிய தரவுகளை வழங்கியுள்ளன.
சிவகளையில் அகழ்வில் வேளாண் உற்பத்திக் கருவிகளாகக் கிடைத்த இரும்பபின் காலம் கி.மு. 3395 என்று அறிவியல் முடிவுகள் உறுதிப்படுத்தியதால், தமிழரின் தொன்மை குறித்த ஆய்வுகள் மேலும் விரிவான புரிதல்களுக்கு வழியமைத்துத் தந்துள்ளன.
இதனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கிய ஆய்வுகள் மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் இப்பணிகளில் குறிக்கத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சிங்காரவேலர் – ஜீவா
புதிய தரவுகளையும் சான்றுகளையும் அவ்வப்போது வரும் ஆய்வுக் கருத்தோட்டங்களையும் முற்றாக உள்வாங்கிக்கொள்வதில் தமிழகப் பொதுவுடைமையினர் முன்னின்றனர். இத்தகைய பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள பொதுவுடைமை இயக்கத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தமிழியல் ஆய்வுகளை முன்னெடுத்தும் முறைப்படுத்தியும் நெறிப்படுத்தியும் தமிழரின் சமூக-பொருளிய-அரசியல்-பண்பாட்டு வரலாற்றை வரையறுப்பதில் பெரும்பங்கு பெற்றிருக்கின்றனர் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.
தென்னகத்தின் முதல் பொதுவுடைமையாளராக விளங்கிய சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் தொடங்கி, தோழர் ஜீவா உள்ளிட்ட பலரும் தமிழர்களின் வாழ்வையும் வரலாற்றையும் வெளிப்படுத்தும் முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தனர்.
தங்களது சொற்பொழிவுகளில் தோழர்கள் ஜீவா, தொ.மு.சி. ரகுநாதன் போன்றோர் பழந்தமிழர் பண்பாடு பற்றிய பல கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நாளேடாகவும், பின்னர் வார இதழாகவும் வந்துகொண்டிருக்கும் ‘ஜனசக்தி’, அவ்வப்போது தமிழர் வரலாறு, பண்பாடு குறித்த கட்டுரைகளை வேறுபட்ட நோக்கில் வெளியிட்டுவருகிறது.
சாந்தி – சரஸ்வதி
தோழர் தொ.மு.சி. ரகுநாதன் 1954 திசம்பரில் தொடங்கி 1956 வரை நடத்திய 'சாந்தி' திங்களிதழ், தமிழியல் ஆய்வில் பொதுவுடமையினரின் முதல் முயற்சியாகும். இதில் தோழர்கள் சாமி சிதம்பரனார், நா. வானமாமலை, ரகுநாதன் போன்றோரது எழுத்துக்கள் மாறுபட்ட பார்வைகளைத் தந்தன.
1955 மேத் திங்களில் தோழர் வ. விசயபாஸ்கரன் தொடங்கிய 'சரஸ்வதி' திங்களிதழில், தோழர் ரகுநாதன் 'தமிழ் இலக்கியமும் தத்துவப் போராட்டமும்' என்ற தலைப்பில் புதிய முயற்சியினை மேற்கொண்டார். இதனையொட்டி பேராசிரியர் நா. வானமாமலை 'சரஸ்வதி' இதழில் 'பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி,’ முத்துப்பட்டன் கதைப் பாடல்’ ஆகிய தொடர்களை எழுதினார்.
1962ஆம் ஆண்டு வரை வெளியான 'சரஸ்வதி' ஓர் இலக்கிய இதழாக இருந்தாலும், தமிழியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டது.
1950களில் தோழர்கள் பி.சி. ஜோசி, ப. மாணிக்கம் ஆகியோரது வேண்டுகோளினையடுத்துத் தமிழர் நாட்டார் பாடல்களைத் தொகுத்துத் தமிழ்நாட்டில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்கு அடித்தளத்தினை பேரா. நா.வா. அமைத்தார்.
இவர்கள் தொடங்கி வைத்த பணிகள் தமிழர் வரலாற்றையும் வாழ்வையும் வேறு கண்ணோட்டத்தில் காண முடியும் என்ற புதிய வாயிலைத் திறந்து வைத்தன எனலாம்.
கைலாசபதி – சிவத்தம்பி
3 425
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 08.09.2026
📆 நாள்: செவ்வாய்
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – சிலப்பதிகாரம் தொடர்ச்சி*
வகுப்பு – 05
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 425
*சோழ தேசம் பண்பாட்டுக் கண்காட்சி...2026.*
செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 25 வரை சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது,
சென்னை மக்களுக்குச் சோழர்கால ஆட்சிமுறை, வணிகம்,போர் தெய்வங்கள்,போர் கருவிகள், இசைக் கருவிகள், நாணயங்கள்,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பொற்கால ஆட்சிமுறையை கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்தும் ஓர் அரிய வாய்ப்பு.
சோழர் தேசம் பற்றிய வரலாற்று ஆவணப்படங்களை, மெய் நிகர் தலைக்கருவிகள் மூலம் பார்க்கும் வசதியும் உள்ளது.
திருவருள் பவுண்டேஷன் சு.வாசு, மு.அ தமிழ் ஆய்வகம் திரு. ஹரிஹரன் மற்றும் திரு.விஜயன்.
தமிழர்கள் அனைவரும் கண்டுகளிக்க வேண்டி கண்காட்சி *சோழ தேசம் -2026*
நன்றி 🤝👍🙏
3 425
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 07.09.2026
📆 நாள்: திங்கட்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – சிலப்பதிகாரம் தொடர்ச்சி*
வகுப்பு – 04
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 425
இன்று முகநூல் எக்ஸ் பக்கங்களில் writeup செய்பவர்கள் நினைத்து பார்த்து நன்றி சொல்ல வேண்டியவர் இவர்தான்......
இலங்கை பாழ்யாணத்தில் உள்ள சுண்டிக்குழியில், 130 ஆண்டுகளுக்கு முன்னர் 1886ம் ஆண்டு பிறந்த இவர்
ஆர். முத்தையா, இவரது தந்தை ராமலிங்கம், முதுபெரும் தமிழறிஞர் ஆறுமுக நாவலரின் சீடர்களுள் ஒருவர்.
இவர்தான் தமிழ் தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர். ஆங்கிலத்தில் இருப்பதுபோல், தமிழில் ஒரு தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணியவர், அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசையில் 46 பட்டன்களுக்குள் அடக்குவது அவருக்கு பெரும்பாடாக இருந்தது. எனவே பல எழுத்துக்களுக்கு பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனியாக பட்டன்களில் அமைத்தார்.
இரண்டு பட்டன்களை அழுத்திய பின்னரே அச்சு நகரவேண்டும் என்று நகரா பட்டன் என்ற தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்தினார். சிறந்த எளிய உத்திகள் மூலமாக சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு தமிழ் தட்டச்சு இயந்திரத்தை அவர் உருவாக்கினார்.
அதற்கு ஸ்டாண்டர்ட் தட்டச்சு என பெயரிட்டார். ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துக்கள் கொண்ட தமிழ்மொழியை தட்டச்சு இயந்திரத்துக்குள் அடக்கி, தமிழுக்கென்று பிரத்யேகமான தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார் ஆர்.முத்தையா !!!
தட்டச்சு இயந்திரங்கள் வழக்கொழிந்து போனாலும், நாம் கம்யூட்டர் மூலம் செய்யும் தட்டச்சுக்களுக்கு ஆதார மூலமாக இருந்தவர் முத்தையா.
தமிழ் தட்டச்சுப்பொறி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், நமது இன்றைய முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்க முடியாது. எனவே, ஆர்.முத்தையா அவர்கள் தமிழர்களால் மறக்க முடியாத மற்றும் மறக்க கூடாத ஒரு ஆளுமையாவார். #ஆர்முத்தையா
இராம ஸ்ரீநிவாஸன் #tamiltypewriter #typewriter #typewriting #tamillanguage #தமிழ் #தட்டச்சு #fbviralpost #timetravel
