CPIM Tamilnadu
رفتن به کانال در Telegram
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
نمایش بیشتر864
مشترکین
-124 ساعت
+17 روز
-330 روز
آرشیو پست ها
கம்யூனிஸ்டுகளுக்கு முதலாளித்துவ கட்சிகளுடன் என்றுமே கூட்டணி கிடையாது; தேர்தல் உடன்பாடு மட்டும்தான். - தோழர் ஆர். பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #Communism #LeftPolitics #LeftMovement More : https://youtu.be/Ebby2GmCL7o
+3
ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி #AIDWA & DYFI இணைந்து காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்காதே! ‘விபி-ராம்ஜி’ சட்டத்தைக் கைவிடு!
உழைக்கும் மக்களின் 4 அம்சக் கோரிக்கைகள்:
1. வி பி ஜி ராம் ஜி திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, வலுப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும்.
2. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் 200 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ₹700-ம் வழங்கப்பட வேண்டும். இவவூதியம் ஆண்டுதோறும் சந்தை பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட வேண்டும்.
3. ஊதியம் மற்றும் வருகைப்பதிவு முறைகளில் உள்ள, தொழிலாளர்களை விலக்கு அளிக்கும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
4. கிராமங்கள் முழுவதும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும், சமூகத் தணிக்கை, நிதிச் செலவீனம் ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மையை ஆய்வு செய்வதிலும் கிராம சபைகளை முக்கியப் பங்குதாரராக மாற்றி அதிகாரம் அளிக்க வேண்டும்.
எளிய மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்தும் பாஜக ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து, 2026 ஜூலை 1 ஆம் தேதி தமிழ்நாடெங்கிலும் பாட்டாளி வர்க்கப் படை ஒன்று திரண்டு முழக்கமிட்டு மக்கள் கோரிக்கையை வென்றெடுப்போம்!
- தோழர் எம்.சின்னதுரை, மாநிலத் தலைவர், தவிச #CPIM #SaveMGNREGA #Save100DaysWork More: https://shorturl.at/dcuyC
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #NEET #CancelNEET #NoNEET #SaveStudents More : https://youtube.com/shorts/J7ZCN76L4SQ
கன்னியாகுமரி மாவட்டம்: அணுக் கனிமச் சுரங்கத்திற்கு அனுமதி நீடித்திருப்பது தவறானது. - தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #Mining #MineralMining #NuclearMinerals #KanyakumariMining #ProtectKanyakumari More : https://youtube.com/shorts/WfIWW0Lqg2o
மக்கள் பிரச்சினைகளில் எந்தவித சமரசமும் இன்றி களத்தில் நின்று போராடுவோம். - தோழர் ஜி.செல்வா, மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர், #CPIM #StandWithPeople More : https://youtu.be/9De6Zv9srK4
+1
நீட் தேர்வை ரத்து செய்திடவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் இடதுசாரி மாணவர், வாலிபர் மற்றும் மாதர் சங்கங்களின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம் மாநகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIM #NEET #CancelNEET #Thanjavur
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்கள் மற்றும் பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று இரவு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
பன்னியாண்டி சமூக மக்களுக்கு பழைய சாதிச் சான்றின் அடிப்படையில் இணையவழி சாதிச் சான்று வழங்குதல், தென்காசி நெட்டூர் தலித் மக்களுக்கு நிவாரணம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், விருதுநகர் மாவட்டம் "பரச்சேரி" கிராமத்தின் பெயரை "வடக்கு அச்சம்தவிர்த்தான்" என மாற்றுதல், சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி அனுசியா மற்றும் ஓசூர் நந்தீஸின் சகோதரர் சங்கருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குதல், திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி (தனி) ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதிக்கு பதவியேற்க நீதி வழங்குதல், காஞ்சிபுரம் புத்தகரம் முத்து கொளக்கியம்மன் தேரோட்டம் தலித் குடியிருப்புக்குச் செல்ல உறுதி செய்தல், சேலம் தாதம்பட்டி தோட்டி மானிய நில ஆக்கிரமிப்பை அகற்றி தலித் மக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இச்சந்திப்பில் #DSMM அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் க.சுவாமிநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, துணைத் தலைவர் வி.குபேந்திரன், செயலாளர் கா.வேணி, #CPIM திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.செல்வன், தமிழ்நாடு பன்னியாண்டிகள் நலச் சங்க தலைவர் டி.ஜி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு முன்பு நிகழ்ந்த எல் நினோவால் ஏற்பட்ட விளைவுகள்? #CPIM #ElNino #ClimateChange #ClimateCrisis #ExtremeWeather #GlobalWarming More : https://youtube.com/shorts/kHKzwhPD35g
VB G RAM G - மோடியின் 'மோசடி' மாநிலங்களில் செலவு 7 % லிருந்து 37% ஆக உயர்வு.
மாநிலங்களின் ஈவு ரூ.7,689/- கோடியிலிருந்து ரூ. 50,968/- கோடியாக அதிகரிப்பு.
பணியாளர்கள் கூலியில் 40% மாநிலங்கள் ஏற்க வேண்டும்.
'பேரு' நாங்க வைக்கிறோம், 'சோறு' நீங்க வெச்சுக்கோங்க எனும் மோடியின் 'மோசடி' யே இந்த VB G RAM G திட்டம்.
- தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #VBGRAMG #ModiGovernment #SaveMGNREGA #RuralDevelopment
+3
ஊடக உலகில் உண்மையின் பேரொளி தீக்கதிர் ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்கம் சிவகங்கையில்யில் இன்று நடைபெற்றது. இதில் #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயலாளர் AR.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.உமநாத்,பி.விஸ்வநாதன், ஒன்றியச் செயலாளர் ஜி.உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீக்கதிர் உண்டியல் குளிக்கிகளால் உருவாக்கப்பட்ட பத்திரிகை. கூலிக்காரர்களுடைய பத்திரிகை. நாட்டை உலுக்கிய பத்திரிகை. கார்ப்பரேட் ஊடகங்களினுடைய சதிகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் பக்கம் நின்று உண்மையை உரத்து பேசுகிற பத்திரிகை.
ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர்... வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathir #Theekkathir4People More : https://youtu.be/SG0a7wIDuOc
நீதிமன்றத்தின் மீது பழிபோட்டு ஆட்சியாளர்கள் தப்பிக்க முடியாது, நாங்கள் அவர்களைத் தப்பிக்க விடமாட்டோம்!
சென்னை பாலவாக்கம் திருவள்ளுவர் நகர் மக்களின் குடியிருப்பு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, கந்தன்சாவடி மார்க்கெட்டில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளார் தோழர் பெ.சண்முகம் உரை… #CPIM #ThiruvalluvarNagar #UrbanRights #TamilNadu More : https://youtu.be/AsNWOEJLibw
எல் நினோ - லா நினோ எதனால் ஏற்படுகிறது? #CPIM #ElNino
#LaNina #ClimateChange #ClimateScience #Weather #GlobalWeather More https://youtube.com/shorts/Cg_IZXbtKZw
வரலாற்றுப் பாரம்பரிய தலங்களை திட்டமிட்டு அழித்து வரும் இஸ்ரேல்!
இஸ்ரேலின் போர் என்பது மனிதகுலத்திற்கும், அனைத்து மனிதநேய விழுமியங்களுக்கும் எதிரானதாகும். லெபனானில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ யாத்திரைத் தலங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் பல நூற்றாண்டுகள் பழமையான கிராமங்கள் புல்டோசர்களால் அழிக்கப்பட்டு, அங்கு மக்கள் திரும்பி வர முடியாதபடி முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.
ஏகாதிபத்திய அமெரிக்காவின் ஆதரவும், பின்புலமும் கொண்டு, லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதோடு, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சொந்தமான பண்பாட்டு மற்றும் வரலாற்றுப் பாரம்பரிய தலங்களை திட்டமிட்டு அழித்து வருகிறது இஸ்ரேல்.
அப்படிப்பட்ட இஸ்ரேலையே பிரதமர் மோடி வெட்கமின்றி 'தந்தை நாடு' என்று குறிப்பிட்டார். நேதன்யாகுவையும், டிரம்பையும் வரலாறு மன்னிக்காது. மோடிக்கும் இது பொருந்தும்.
- தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், #CPIM #Israel #Palestine #Lebanon #Gaza #UNESCO
اکنون در دسترس! پژوهش تلگرام ۲۰۲۵ — مهمترین بینشهای سال 
