ஸலஃபி மறுப்புகள்
Open in Telegram
வழிகேடுகள் மற்றும் குழப்பங்களிலிருந்து தெளிவு பெற... T.me/salafirefutationstamil salafiyyah.in
Show more219
Subscribers
No data24 hours
+37 days
+930 days
Posts Archive
🔸"என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?🔸
- அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி
- அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி
- அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல்
கேள்வி:
“(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், தெளிவான ஆதாரத்தின் மீதே நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்” (12:108)
(என்ற ஆயத்திற்கும்) “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற பிரபலமான ஹதீஸிற்கும் மத்தியில் எவ்வாறு இணக்கம் ஏற்படுத்தி (புரிந்து) கொள்வது? மேலும், மக்களுக்கு நினைவூட்டுவதற்கும், அவர்களுக்கு தஃஅவத் செய்வதற்கும் கல்வியானது நிபந்தனையாகுமா?
📌 அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி ஹஃபிதஹுல்லாஹ்:
இவ்விரண்டிற்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை.
(நபி) ﷺ அவர்களுடைய “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற கூற்றானது, “அதாவது என்னிடமிருந்து கிடைத்த ஆயத்தில் எதில் உங்களுக்கு பஸீரத் (தெளிவான ஞானம்) இருக்குமோ, (அதை) எத்தி வையுங்கள் என்பதாகும்.”
அதாவது, அதனுடைய பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதிலிருந்து நாடப்படுவதை உறுதி கொண்டிருப்பீர்கள். எனவே, கல்வியிலிருந்து ஏதேனும் ஒன்றை உறுதியாக (அறிந்திருப்பீர்கள் என்றால்), அது ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே, அதனை (பிறருக்கு) நீங்கள் எத்தி வைக்கலாம்.
அவ்வாறல்லாது நீங்கள் ஒரே ஒரு ஆயத் அல்லது ஒரே ஒரு ஹதீஸை மட்டும் தெரிந்து கொண்டு, பின்னர் அதல்லாத மற்றதை எத்திவைப்பதை பொறுத்தமட்டில், இதுவே தடுக்கப்பட்டதாகும்.
எனவே, தஃஅவாவுடைய நிபந்தனைகளிலிருந்து உள்ளதாவது, அது பஸீரத்தின் மீது அமைந்திருப்பதாகும்; அதாவது கல்வியின் மீதும், தெளிவான ஆதாரத்தின் மீதும் அமைந்திருப்பதாகும்.
எனவே, நீங்கள் குறைவாக அறிந்து கொண்டு, குறைவாகத் தெரிந்து கொண்டு, அதிகமாக தஃஅவத் செய்வது, “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற (நபி) ﷺ அவர்களின் கூற்றைக் கொண்டு நாடப்படவில்லை.
மாறாக (அதைக் கொண்டு) நாடப்படுவதாவது, நீங்கள் கல்வியைக் கொண்டு தஃஅவா செய்ய வேண்டும் என்பதாகும்; கல்வியிலிருந்து நீங்கள் அடைந்து கொண்டது ஒரு ஆயத் அளவு இருந்தாலும் சரியே.
🔗 https://youtube.com/watch?v=fstRDJ4d8y8&si=A0Oxu0IeBk77OTNf
📌 அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்:
அல்லாஹ்வை நோக்கிய தஃஅவத்தானது, இது கடமையான, தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
சத்தியத்திலிருந்து நீ அறிந்துக்கொண்டதின் பக்கம் நீ அழைப்பதென்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
ஆம். கட்டாயமாக நீ தஃஅவா செய்ய வேண்டும். (ஆனால்) எதை நோக்கி அழைக்கின்றாயோ அதைப்பற்றி நீ அறிந்தவனாக இருக்கின்றாய் என்ற நிபந்தனையுடன் (அதனை செய்ய வேண்டும்).
இந்த விடயமானது, இதில் (சில) விவரம் உள்ளது.
“கல்வியானது தஃஅவாவில் நிபந்தனையாகும், நானோ இன்னும் (கல்வி) தேடலின் தொடக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றேன், என் மீதும் தஃஅவா செய்வது கடமையா?” என்று சில மக்கள் கேட்கின்றனர்.
(அதற்கான) பதிலானது, தஃஅவாவுடன் கல்விக்கு இருக்கும் தொடர்பில் சில விவரம் உள்ளது.
➡️
தஃஅவாவிற்காக (ஷைஃகாக அல்லது ஆசிரியராக மக்கள்) முன்னிலையில் வருபவருக்கும், அவ்வாறல்லாதவருக்கும் மத்தியில் வேறுபாடு உள்ளது.தஃஅவாவிற்காக முற்படக்கூடியவர், இந்த இடத்திற்கு அவரைத் தகுதியாக்கக்கூடிய (போதுமானதொரு) அளவை மார்க்கக் கல்வியிலிருந்து பெற்றிருப்பது அவசியமாகும். ஏனெனில், அவர் (பிறரை) வழிநடத்தக்கூடிய இடத்தில் உள்ளார். இன்னும், சில வேளைகளில் ஃபத்வா அளிக்கக்கூடிய இடத்திலும் இருக்கக்கூடும். எனவே, கல்வியிலிருந்து (போதுமானதொரு) அளவை அடைந்திருப்பது (இத்தகையவர் மீது) கட்டாயமான ஒன்றாகும். அதற்கு கீழுள்ள (நிலைகளைப்) பொறுத்தவரையில், அது ஒரு மனிதர் அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து அறிந்து கொண்டதின் பக்கம் தஃஅவா செய்வதாகும். (உதாரணத்திற்கு) “லா இலாஹ இல்லல்லாஹ்”வின் அர்த்தத்தை அறிந்துள்ளார், எனவே அறியாதவருக்கு அதனைக் கற்றுக் கொடுப்பது கட்டாயமாகும். சரியான முறையிலான தொழுகையைக் கற்றுக்கொண்டார்; அதனை கற்றுக்கொடுக்க வேண்டும். மக்கள் அவர்களுடைய கொள்கையில் அல்லது அவர்களுடைய நடத்தையில் ஏற்படக்கூடிய தவறுகளை அறிந்தார், அதனைப் பற்றி அறியாதவருக்கு அதைக் கற்றுக்கொடுப்பது அவர் மீது கடமையாகும். எனவே, இந்த இடத்தில் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகும். ஏனெனில் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" நீ அறிந்து கொண்ட ஆயத்தை, இன்னும் நீ விளங்கிய ஹதீஸைப் (பிறருக்கு) எத்திவைப்பது உன்மீது கடமையாகும். எனவே (இந்தக கண்ணோட்டத்தில்) நாம் இவ்விரு நிலைகளுக்கும் மத்தியில் வேறுபடுத்திப் பார்ப்போம். 📚 ஷர்ஹ் ‘ஸலா’ஸதில் உஸூல், பக்கம்: 19, 20
🔸"என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?🔸
- அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி
- அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி
- அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல்
https://t.me/salafirefutationstamil/128
"எந்த ஃபித்னா மிகவும் கடுமையானது?" என ஹுதைஃபா அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.
அவர்கள் "நன்மையும், தீமையும் உனக்கு முன் எடுத்துக்காட்டப்படும், அதில் எந்தவொன்றைப் பின்பற்றுவது என உனக்குத் தெரியாது" என பதிலளித்தார்கள்.
📚 அல்முஸன்னஃப் லிப்னி அபீ ஷைபா 8/666
salafiyyah.in
Repost from மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ்
(அல்லாஹ்) சுப்ஹானஹ் கூறியுள்ளான்: وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا “(நபியே!) எதைப் பற்றி உமக்குத் (தீர்க்கமான) அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது”. (17:36) (ஆகவே), அல்லாஹ்வை நோக்கிய ஒரு அழைப்பாளரின் மீது கடமையாக இருப்பது, தனது இறைவனை அவர் அஞ்சி நடப்பதும், மேலும் அதற்கு (தஃஅவதிற்கு) முன்பாக (அதற்கான) தயாரிப்பை செய்து கொள்வதுமாகும். கல்வியுடைய பாதையானது, கல்வியின் சபைகளில் பங்குபெறுவது, கல்வியைத் தேடுவதில் அக்கறை கொள்வது, மேலும் ஓதுவது, சிந்திப்பது, விளங்குவது மற்றும் புரிந்துகொள்வது என அல்லாஹ்வுடைய வேதத்தில் கவனம் கொள்வது, மேலும் ரஸூல் ﷺ அவர்களின் ஸுன்னாஹ்விலும் ஈடுபாடு கொள்வது, கண்ணியமிகு அல்குர்ஆனுடன் சேர்த்து அவற்றிலிருந்து இயன்றதை மனனம் செய்வது, அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாஹ்வை விளங்குவதில் முயற்சிசெய்வது, மேலும் எது (சரியாக விளங்காமல்) தெளிவற்றதாக இருக்கின்றதோ அது குறித்து அறிஞர்களிடம் கேட்பது முதலியனவாகும். பின்னர் தான் இந்த விடயத்திற்கு (தஃஅவத் செய்வதற்கு) தகுதியுடையவராக ஆகிவிட்டதாக அவர் உணரும் பொழுது - அதாவது (அத்தருணத்தில்) அல்லாஹ் ஏவிய மற்றும் அல்லாஹ் தடுத்தவற்றைப் பற்றியான கல்வி அவருக்கு அதிமாகியிருக்கும், அல்லாஹ் கடமையாக்கிய மற்றும் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை அறிந்திருப்பார், மேலும் அதில் நேர்வழியின் மீதும் பஸீரத்தின் மீதும் ஆகியிருப்பார் - எனவே, அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய விடயங்களின் பக்கம் அவர் அழைத்திடுவார், மேலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவற்றை விட்டும் தடுத்திடுவார். இதுவே அல்லாஹ்வின் பக்கம் தஃஅவா செய்ய விரும்புகின்றவர் மீதும், அதற்காக முன்வரக்கூடியவர் மீதுமுள்ள கடமையாகும்; (அதாவது) கல்வியில் ஈடுபாடு கொள்ள வேண்டும். மேலும் கல்வியானது, (வெறுமனே) ஆசைப்படுவதைக் கொண்டு (கிடைப்பது) அல்ல; விடாமுயற்சியும், பொறுமையும் தேவை.
இதன் காரணமாகவே அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: مَن سلك طريقًا يلتمس فيه علمًا سهَّل الله له به طريقًا إلى الجنة எவரொருவர் கல்வியைத் தேடியவராக ஒரு பாதையில் செல்வாரோ, அதைக்கொண்டு சொர்க்கத்தை நோக்கிய ஒரு பாதையை அல்லாஹ் அவருக்கு எளிதாக்குகின்றான்.
மேலும் ﷺ கூறுகின்றார்கள்: مَن يُرد الله به خيرًا يُفقهه في الدين எவருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ, அவரை மார்க்கத்திலே விளக்கம் பெற செய்கின்றான். (அல்பு’காரி, முஸ்லிம்)இது அல்லாஹ் சுப்ஹானஹு ஒரு அடியானுக்கு நலவை நாடினால், மார்க்கத்திலே அவரை விளக்கம் பெறச் செய்கின்றான், மேலும் அவரை பஸீரத் உடையவராக, கல்வி கற்கக்கூடியவராக ஆக்குகின்றான், இன்னும் அல்லாஹ் எதை அவர் மீது கடமையாக்கினானோ, மேலும் எதை அவர் மீது ஹராமாக்கினானோ அவற்றில் அக்கறை கொள்ளச் செய்கின்றான் என்பதற்கான ஆதாரமாகும். இதனால் அவர் பஸீரத்தின் மீது தனது இறைவனை வணங்கிடுவார். மேலும் அதிலிருந்து புரிந்து கொள்ளப்படுவதாவது, எவர் மார்க்கத்தில் விளக்கம் பெறுவதற்கு தவ்ஃபீக் அளிக்கப்படவில்லையோ, அதனுடைய பொருளாவது அல்லாஹ் அவருக்கு நலவை நாடவில்லை என்பதாகும். எனவே, (மார்க்கத்தை கற்பதை விட்டும்) புறம்திரும்புவது, அறியாமை, கவனம் கொள்ளாமல் (பொடுபோக்காக) இருப்பது ஆகியவற்றிலுள்ள ஆபத்தானது மிகப்பெரியதாகும். 🔗 https://tinyurl.com/bdcxr7w9 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/3fev39mr 🌐 இணையதளம்: www.salafiyyah.in
Repost from மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ்
🔸கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு முன் தஃஅவா செய்வது கூடுமா? "ஹிக்மத்தைக் கொண்டு உமதிறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக" என்ற ஆயத்தின் விளக்கம் என்ன? - அல்இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்🔸
கல்வியறிவின்றி தஃஅவா செய்வது தொடர்பான விடயத்தைப் பொறுத்தவரையில், இது ஆகுமானதன்று. முதலில் ஒரு தா'ஈயின் மீது கடமையாக இருப்பது, (அதற்குரிய) தகுதியைப் பெற்றுக்கொள்வதும், மேலும் அவரது தஃஅவத்திற்கான தயாரிப்பை செய்வதுமாகும். (இது) அவர் எதனை நோக்கி அழைக்கின்றாரோ, மேலும் எதனை விட்டும் தடுக்கின்றாரோ, அது விடயத்தில் அவர் கல்வியின் மீதும், பஸீரத்தின் (தெளிவான ஆதாரத்தின்) மீதும் இருப்பதற்காக ஆகும்.
அல்லாஹ் அஸ்ஸ வஜல் கூறியுள்ளான்: قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ (நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும், தெளிவான ஆதாரத்தின் மீது இருந்து கொண்டு நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். (12:108) தனது நபிக்கு கூறியுள்ளான்:
قل {நீர் கூறுவீராக}தூதரே! மக்களுக்கு நீங்கள் கூறுங்கள்.
هَذِهِ سَبِيلِي: {இதுவே எனது (நேரான) வழியாகும்}இதுவே என்னுடைய பாதையாகும்.
أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ {தெளிவான ஆதாரத்தின் மீது இருந்து கொண்டு நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்}அதாவது, கல்வியின் மீது இருந்தாகும்; கல்வியானது கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
மேலும் அல்லாஹ் அஸ்ஸ வஜல் கூறுகின்றான்:
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ நபியே!) நீர் (மனிதர்களை) ஹிக்மத்தைக் கொண்டு உமதிறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! (16:125) ஹிக்மாஹ் என்பது கல்வியறிவே ஆகும்; (அது) அல்லாஹ் கூறியதும், (அவனது) தூதர் ﷺ கூறியதுமாகும். எனினும், அறியாமையின் மீதும், பஸீரத்தின் மீதும் அல்லாமல் தஃஅவத்தை ஒருவர் எதிர்கொள்வதைப் பொறுத்தவரையில், இது ஆகுமானதன்று. இன்னும், அத்தகையவர் சீர்திருத்துவதை விட அதிகமாக சீர்கெடுத்து விடுவார்.
அல்லாஹ் சுப்ஹானஹ் கூறுகின்றான்: قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ என்னுடைய இறைவன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை - அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும் - (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணை வைப்பதையும் - அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க - இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக! (7:33)கல்வியறிவில்லாமல் அவன் மீது (எதையேனும்) கூறுவதை, ஷிர்க்குடைய படித்தரத்திற்கு மேலாக ஆக்கியுள்ளான். அது இதன் விளைவாக ஏற்படக்கூடிய மிகப்பெரும் குழுப்பத்தினால் ஆகும்.
மேலும் (அல்லாஹ்) சுப்ஹானஹ் கூறியுள்ளான்: يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ إِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ “மனிதர்களே! பூமியிலுள்ளவற்றிலிருந்து (உண்ண) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீயதையும், மானக்கேடானவற்றையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும்தாம்”. (2:168,169)எனவே, ஷைத்தானானவன் தீயதையும், மானக்கேடானவற்றையும், இன்னும் நாம் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் ஏவுவான் என்பதை அல்லாஹ் சுப்ஹானஹ் தெளிவுபடுத்தியுள்ளான். கல்வியறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது (எதையேனும்) கூறுவதென்பது ஷைத்தான் ஏவுகின்ற, இன்னும் அவன் அழைக்கின்றவற்றிலிருந்து உள்ளதாகும். இதற்குக் காரணம், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவைத் தவிர (வேறெவரும்) கணக்கிட இயலாத (பல) குழப்பங்கள் அதன் விளைவாக ஏற்படும் என்பதை அவன் அறிந்திருப்பதனால் ஆகும். அறிவிலியான ஒரு அழைப்பாளர் மார்க்கத்தை விட்டும் (மக்களை) விரண்டோடச் செய்வார்; அவருடைய அறியாமையின் காரணத்தினால் ஹராமை ஹலாலாக்குவார், ஹலாலை ஹராமாக்குவார், இன்னும் ஆகுமானதல்லாதவற்றின் பக்கமும் அழைத்திடுவார்.
Repost from மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ்
கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு முன் தஃஅவா செய்வது கூடுமா? "ஹிக்மத்தைக் கொண்டு உமதிறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக" என்ற ஆயத்தின் விளக்கம் என்ன? - அல்இமாம் இப்னு பாஸ்
https://t.me/salafimaktabahmpm/1162
அஷ்ஷைஃக் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எனவே, ஷைத்தானானவன் தீயதையும், மானக்கேடானவற்றையும், இன்னும் நாம் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் ஏவுவான் என்பதை அல்லாஹ் சுப்ஹானஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
கல்வியறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது (எதையேனும்) கூறுவதென்பது ஷைத்தான் ஏவுகின்ற, இன்னும் அவன் அழைக்கின்றவற்றிலிருந்து உள்ளதாகும். இதற்குக் காரணம், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவைத் தவிர (வேறெவரும்) கணக்கிட இயலாத (பல) குழப்பங்கள் அதன் விளைவாக ஏற்படும் என்பதை அவன் அறிந்திருப்பதனால் ஆகும்.
அறிவிலியான ஒரு அழைப்பாளர் மார்க்கத்தை விட்டும் (மக்களை) விரண்டோடச் செய்வார்; அவருடைய அறியாமையின் காரணத்தினால் ஹராமை ஹலாலாக்குவார், ஹலாலை ஹராமாக்குவார், இன்னும் ஆகுமானதல்லாதவற்றின் பக்கமும் அழைத்திடுவார்.
https://binbaz.org.sa
يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ إِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
“மனிதர்களே! பூமியிலுள்ளவற்றிலிருந்து (உண்ண) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீயதையும், மானக்கேடானவற்றையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும்தாம்”. (2:168,169)
T.me/salafirefutationstamil
இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
ﻓﺈﻥ اﺗﺒﺎﻉ اﻟﻬﻮﻯ ﻳﻌﻤﻲ ﻋﻴﻦ اﻟﻘﻠﺐ ﻓﻼ ﻳﻤﻴﺰ ﺑﻴﻦ السنة ﻭاﻟﺒﺪﻋﺔ ﺃﻭ ﻳﻨﻜﺴﻪ ﻓﻴﺮﻯ اﻟﺒﺪﻋﺔ ﺳﻨﺔ ﻭاﻟﺴﻨﺔ ﺑﺪﻋﺔ
நிச்சயமாக மனோ இச்சையைப் பின்பற்றுவதானது உள்ளத்துடைய கண்ணைக் குருடாக்கிவிடும். எனவே, அ(த்தகைய)வர் ஸுன்னாஹ்விற்கும் பித்'அஹ்விற்கும் மத்தியில் வேறுபடுத்திப் பார்க்க மாட்டார் அல்லது அதனைத் தலை கீழாக ஆக்கி பித்'அஹ்வை ஸுன்னாஹ்வாகவும், ஸுன்னாஹ்வை பித்'அஹ்வாகவும் காண்பார்!
📚 அல்ஃபவாஇத், 1/101
T.me/salafirefutationstamil
அபூ கிலாபாஹ் கூறினார்கள்:
لَا تُجَالِسُوا أَهْلَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ، فَإِنِّي لَا آمَنُ أَنْ يَغْمِسُوكُمْ فِي ضَلَالَتِهِمْ، أَوْ يَلْبِسُوا عَلَيْكُمْ مَا كُنْتُمْ تَعْرِفُونَ
அஹ்லுல் அஹ்வாவுடன் (மனோ இச்சைகளைப் பின்பற்றும் மக்களுடன்) அமராதீர்கள், மேலும் அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள்; ஏனெனில், அவர்களுடைய வழிகேடுகளில் உங்களை அவர்கள் மூழ்கச் செய்திடுவதை விட்டும் அல்லது நீங்கள் (தெளிவாக) அறிந்திருந்த விடயங்களை உங்கள் மீது அவர்கள் குழப்பி விடுவதை விட்டும் நான் பாதுகாப்பாக உணரமாட்டேன்.
📚 அல்இஃதிஸாம், 1/112
ஒரு மனிதர் ஹகமிடத்தில் "எது அஹ்லுல் அஹ்வாவை இதற்கு இட்டுச் சென்றது?" எனக் கேட்டார். அவர்கள் அதற்கு 'தர்க்கங்கள்' என பதிலளித்தார்கள்.
📚 ஸியர் அஃலாமிந்நுபலா, 11/284
T.me/salafirefutationstamil
இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
إِنَّمَا يَنبَغِي لِلْإِنسَانِ أَنْ يَتَّبِعَ الدَّلِيلَ، لَا أَنْ يَتَّبِعَ طَرِيقًا وَيَتَطَلَّبَ دَلِيلَهَا!
ஆதாரத்தைப் பின்பற்றுவதே ஒரு மனிதருக்கு உகந்ததாகும், ஒரு வழியைப் பின்பற்றிவிட்டு அதற்குண்டான ஆதாரத்தைத் தேடுவதில் முயற்சி செய்வதல்ல!
📚 ஸை'துல் ஃகா'திர், பக்கம்: 41
T.me/salafirefutationstamil
அல்ஹஸன் கூறினார்கள்:
ما مِنْ داءٍ أَشَدُّ مِنْ هَوًى خَالَطَ قَلْبًا
உள்ளத்துடன் கலந்து விட்ட மனோ இச்சையை விட கடுமையான நோய் எதுவுமில்லை.
📚 அல்இபானா அஸ்ஸு'க்ரா, எண்: 68
அஷ்ஷைஃக் அப்துல் அஸீஸ் அர்ராஜிஹி இதற்கு விளக்கமளிக்கையில் கூறினார்கள்:
மனோ இச்சைகளின் காரணமாகவே தவிர பித்'அத்கள் உண்டாகவில்லை. ஜஹ்மிய்யாவுடைய பித்'அத், ஃகவாரிஜுடைய பித்'அத், முஃதஸிலாவுடைய பித்'அத், ராஃபிதாக்களுடைய பித்'அத், முர்ஜியாக்களுடைய பித்'அத், இன்னும் அவர்கள் அல்லாத வேறு பித்'அத்வாதிக(ளுடைய பித்'அத் என இவை யாவும்), மனோ இச்சைகளைப் பின்பற்றியதினாலே தோன்றியது; அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றினர், (மார்க்க) ஆதாரங்களைப் புறக்கணித்தனர், அதனால் பித்'அத்கள் ஏற்பட்டு விட்டது.
https://shrajhi.com.sa
T.me/salafirefutationstamil
"உங்களுடைய மகனை பறவைகளுடன் விளையாடுபவனாக நாங்கள் கண்டோம்" என்று மாலிக் இப்னு மி'க்வலிடத்தில் கூறப்பட்டது.
அவர்கள் "பித்'அத்வாதியுடைய சகவாசத்தை விட்டும் அது அவனைப் பராக்காக்கியது சிறப்பாயிற்று!" என்று கூறினார்கள்.
📚 அல்இபானா அஸ்ஸு'க்ரா, எண்: 93
T.me/salafirefutationstamil
முஹம்மத் இப்னுல் ஹனஃபிய்யா கூறினார்கள்:
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَكُونَ خُصُومَةُ النَّاسِ فِي رَبِّهِمْ
மக்களுடைய தர்க்கங்கள் அவர்களுடைய இறைவனின் விடையத்தில் ஏற்படாத வரை மறுமை நாள் நிலைபெறாது.
📚 அல்இபானா அஸ்ஸு'க்ரா, எண்: 120
அஷ்ஷைஃக் அப்துல் அஸீஸ் அர்ராஜிஹி இதற்கு விளக்கமளிக்கையில் கூறினார்கள்:
அதாவது அவர்களுடைய தர்க்கங்களானது (அல்லாஹ்வுடைய) பண்புகள், பெயர்கள், அல்லாஹ்வுடைய செயல்கள், மேலும் அவனுடைய க'த்ர் மற்றும் க'தா (விதி) ஆகிய விடயங்களில் (ஏற்படும்).
https://shrajhi.com.sa/lessons/467
salafiyyah.in
'கு'தைஃப் இப்னுல் ஹாரிஸ் கூறினார்கள்:
لَا تَظْهَرُ بِدْعَةٌ إِلَّا تُرِكَ مِثْلُهَا مِنَ السُّنَّةِ
எந்தவொரு பித்'அத்தும் தோன்றுவதில்லை, ஸுன்னாஹ்விலிருந்து அதைப் போன்றது விடப்பட்டே தவிர.
📚 அல்இபானா அஸ்ஸு'க்ரா, எண்: 133
salafiyyah.in
இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எந்தவொரு பித்’அத்வாதியையும் நீ காணவே மாட்டாய், அவன் தனக்கு மாறுபடக்கூடிய ஆதாரங்களை மறைப்பதை விரும்புபவனாக, அவற்றைக் கடுமையாக வெறுப்பவனாக, அவற்றை வெளிப்படுத்துவதை, அவற்றை அறிவிப்பதை, அவற்றைக் கொண்டு பேசுவதை கடுமையாக வெறுப்பவனாக, மேலும் அதனைச் செய்பவர்களை கடுமையாக வெறுப்பவனாக இருந்தே தவிர.
ஸலஃபுகளில் சிலர் கூறியதைப் போன்று: “எந்த ஒருவனும் ஒரு பித்’அத்தைத் தோற்றுவிக்கவில்லை, அவனுடைய உள்ளத்திலிருந்து ஹதீஸுடைய இனிமையானது நீக்கப்பட்டே தவிர.”
📚 ‘தர்உ த’ஆருதில் அக்ல் வந்நக்ல், 1/221
salafiyyah.in
📌 அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்
ஒருவர் பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அல்லது பாடிக்கொண்டிருக்கின்ற நிலையில் மரணித்தால், அது ஈமானிலுள்ள குறையாகும், (அவரிடத்திலே) ஈமானிலுள்ள குறையைக் காட்டுகின்றது, அவர் காஃபிர் என்பதைக் காட்டவில்லை.
அவர் காஃபிராகிவிடமாட்டார். அவர் ஒரு ஏகத்துவவாதியாக, முஸ்லிமாக இருந்தால், பலகீனமான மற்றும் குறைபாடுடைய ஈமானை உடையவராக இருப்பார். மேலும், அவர் அல்லாஹ்வுடைய நாட்டத்தின் கீழ் உள்ளார்; அல்லாஹ் நாடினால் அவரை மன்னித்து பிழைபொறுத்து விட்டு விடுவான். இன்னும், அவன் நாடினால் அவர் எத்தகைய பாவங்களின் மீது மரணித்தாரோ, (அதன்) அளவிற்கேற்ப அவரைத் தண்டிப்பான்.
அல்லாஹ் சுப்ஹானஹு கூறியதைப் போல்:
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ يَّشَآءُ
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
ஷிர்க் அல்லாத ஏனைய பாவங்கள் அல்லாஹ்வுடைய நாட்டத்தின் கீழ் இருக்கின்றன; (ஒரு அடியான்) விபச்சாரம் செய்தால் அவனது ஈமான் குறைந்துவிடும், திருடினால் அவனது ஈமான் பலகீனமாகிவிடும், பொய் கூறினால் அவனது ஈமான் குறைந்துவிடும், புறம் பேசினால் அவனது ஈமான் குறைந்துவிடும், வட்டியிலிருந்து ஏதேனுமொன்றில் ஈடுபட்டால் அவனது ஈமான் குறைந்துவிடும், மேலும் அவனது ஈமான் பலகீனமாகி விடும்.
இந்த பாவங்களிலிருந்து அவர் தவ்பா செய்தால் அவருடைய ஈமானானது அதிகரித்துவிடும், அவர் பக்கம் திரும்பி விடும்.
அவற்றிலிருந்து ஏதேனுமொன்றின் மீது அவர் (தவ்பா செய்யாது) மரணித்தால், அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் உள்ளவராக ஆகிவிடுவார், குறைபாடுடைய ஈமானின் மீது மரணித்தவராக ஆகிவிடுவார். என்றாலும், அவருடன் தவ்ஹீத் இருக்கின்றது, அவருடன் இஸ்லாம் இருக்கின்றது, மேலும் அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் உள்ளார்; அல்லாஹ் நாடினால் அவரை பிழைபொறுத்து விட்டு விடுவான். இன்னும், அவன் நாடினால் அவர் எத்தகைய பாவங்களின் மீது மரணித்தாரோ, (அதன்) அளவிற்கேற்ப அவரைத் தண்டிப்பான்.
பின்னர், நரகத்தில் (வேதனையின் மூலம் பாவத்திலிருந்து) தூய்மைப்படுத்தப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டப் பின்னர், நரகத்திலிருந்து சுவனத்தின் பால் அவரை அல்லாஹ் வெளியாக்குவான்.
ஒருபோதும் காஃபிர்களைத் தவிர (வேறு எவரும்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்க வைக்கப்படமாட்டார். பாவியான முஸ்லிமானவர், காபிர்கள் நிரந்தரமாக தங்குவதைப் (போன்று) நரகத்தில் நிரந்தரமாக தங்க வைக்கப்படமாட்டார்.
(எனினும், முஸ்லிம்களில் இருந்துள்ள) விபச்சாரன், கொலை செய்தவன் ஆகியோரைப் போன்றோர் அவர்களுடைய அதிகமான பாவங்களின் காரணமாக, முடிவுள்ள ஒரு வெகு நீண்ட காலம் தங்கவைக்கப்படக் கூடும், முடிவுள்ள ஒரு வெகு நீண்ட காலம் தங்கவைக்கப்படக் கூடும்.
ஆனால், காஃபிர்கள் (நரகத்தில்) தங்குவதென்பது நிரந்தரமானது, அதற்கு எந்தவொரு முடிவும் கிடையாது, இன்னும் அது என்றென்றுமானது. அல்லாஹ்வைக் கொண்டு நாம் பாதுகாப்பு தேடுகின்றோம். அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்பைக் கேட்கின்றோம்.
கேள்வியாளர்: ஷைஃக் அவர்களே! அதாவது, “பாவங்கள் குஃப்ரிற்கு இட்டுச் செல்பவை” என்று உலமாக்கள் கூறுவதைப் போன்றா?
அஷ்ஷைஃக்: (பாவங்கள்) குஃப்ரிற்கான காரணிகளிலிருந்து உள்ளவை. அதாவது, நோய் மரணத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய ஒன்றைப் போன்று, பாவங்களானது குஃப்ரிற்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். ஆனால், அவையே (பாவங்களே) குஃப்ர் அல்ல.
ஃகவாரிஜ் மற்றும் முஃதஸிலாவிற்கு மாற்றமாக, யார் பாவத்தின் மீது மரணிப்பாரோ (அவர்) அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார்.
https://binbaz.org.sa/fatwas/20987/%D9%85%D8%A7-%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D9%84%D9%85-%D8%A7%D9%84%D8%B0%D9%8A-%D9%8A%D9%85%D9%88%D8%AA-%D9%88%D9%87%D9%88-%D8%B9%D9%84%D9%89-%D9%85%D8%B9%D8%B5%D9%8A%D8%A9
📜 அரபியுடன் வாசிக்க:
https://docs.google.com/document/d/e/2PACX-1vSu1LQ-G7nGu_n5sHT6H4Aeum5C2qGdiRrDB8THjgiGhPW8POFlQR4zP_0eXhqAIaih62rfXK5mU7yU/pub
✍️ மேலும் பல மொழிபெயர்ப்புகளைக் காண:
t.me/salafimaktabahmpm
🏠 மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
எனினும், (நரக) வேதனையிலிருந்து பாதுகாப்பை உரித்தாக்குகின்ற, பாவங்களுக்குப் பரிகாரத்தை உரித்தாக்குகின்ற, நற்காரியங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதையும், அல்லாஹ்வுடைய கராமத்தையும் அவனது கூலியையும் (உரித்தாக்குகின்ற அத்தகைய முழுமையான) ஈமானை இழந்து விடுகின்றார், அதைக்கொண்டே (அந்த முழுமையான ஈமானைக் கொண்டே) அவர் (அல்லாஹ்விடத்தில்) புகழப்பட்டவராகவும், பொருந்தி கொள்ளப்பட்டவராகவும் இருப்பார்.
[மஜ்மூ'உல் ஃபதாவா, 7/676].
இதுவே இந்த ஹதீஸிற்கு ஏற்ற வெளிப்படையான பொருளாகும்.
📚 ஸியாததுல் ஈமானி வ நுக்ஸானுஹு வ ஹுக்முல் இ’ஸ்திஸ்னா ஃபீஹி லிஷ்ஷைக் அப்திர் ரஸ்ஸாக் அல்பத்ர், பக்கம் 116-118
📝குறிப்பு: **மூலப்புத்தகத்தில் இருந்த எழத்துப்பிழை சரிபார்க்கப்பட்டு அதனுடைய மொழிபெயர்ப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🔸பெரும்பாவத்தில் விழுந்தவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவாரா?🔸
ஃகவாரிஜ்களுக்கு மறுப்பு
- அஷ்ஷைஃக் அப்துர் ரஸ்ஸாக் அல்ப’த்ர்
- அஷ்ஷைஃக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்
📌 அஷ்ஷைஃக் அப்துர் ரஸ்ஸாக் அல்பத்ர் ஹஃபிதஹுல்லாஹ் கூறினார்கள்:
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்:
إِذَا زَنَى العَبْدُ خَرَجَ مِنْهُ الإِيمَانُ، فَكَانَ عَلَى رَأْسِهِ كَالظَّلَةِ، فَإِذَا أَقْلَعَ رَجَعَ إِلَيْهِ
“ஒரு அடியான் விபச்சாரம் செய்யும் பொழுது, ஈமான் அவனிடமிருந்து வெளியாகிவிடும். பின்பு அவனது தலையின் மீது நிழல் தரக்கூடிய முகடு போன்று நிற்கும். அவன் (அந்த பாவத்தை) விட்டு விடும் பொழுது, அவனிடத்தில் திரும்பி விடும்.”
இந்த ஹதீஸை வாசிக்கக்கூடிய சிலர், “பெரும் பாவத்தில் ஈடுபடுபவர் நிராகரித்து விடுவார், மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார். மேலும் (அவரிடத்திலிருந்து) ஈமான் முழுமையாக பறிக்கப்பட்டு விடும்” என்பதற்கு இதில் ஒரு அடையாளம் இருப்பதாக எண்ணக் கூடும்.
மேலும், இதுவே இந்த ஹதீஸிலிருந்து உள்ள வெளிப்படையான மற்றும் (புத்தியிற்கு) முதலாவதாக வெளிப்படக்கூடிய (பொருளாகவும் அதனை) நினைத்துக் கொள்வார். பின்னர் அவருடைய இந்த புரிதலைக் கொண்டு “பெரும் பாவத்தில் ஈடுபடுபவரை மார்க்கத்தை விட்டும் வெளியாக்கி, நரகத்தில் நிரந்தரமாக தங்குவார்” என்ற ஃகவாரிஜ் மற்றும் முஃதஸிலாவின் போக்கில் பயணிப்பார்.
இந்த ஹதீஸிலோ அதனைக் காட்டக்கூடிய எந்த ஒரு அடையாளமும் இல்லை. இன்னும் இந்த ஹதீஸினுடைய வெளிப்படையான, (புத்தியிற்கு) முதலாவதாக வெளிப்படக்கூடிய பொருளானது அதனைக் காட்டவில்லை.
ஷைஃகுல் இஸ்லாம் (இப்னு தைமிய்யாஹ்) கூறினார்கள்: “...இது அந்த ஹதீஸின் வெளிப்படையான பொருளும் அன்று. ஏனென்றால், “அவரிடமிருந்து ஈமான் வெளியாகி, அவரது தலையின் மீது நிழல் அளிக்கக்கூடிய முகடு போன்று நிற்கும்” என்ற (அல்லாஹ்வின் தூதர் ﷺ) அவர்களின் கூற்றானது, ஈமான் அவரை விட்டும் முழுவதுமாக பிரிந்து விடாது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், நிழல் அளிக்கக்கூடிய முகடானது, அதனை உடையவருடன் ஒரு விதமான தொடர்பில் இருக்கும் நிலையில் அவருக்கு நிழல் தரும் (அவரை விட்டும் முழுவதுமாக பிரிந்து விடாது).
[மஜ்மூ'உல் ஃபதாவா 7/673]
‘மிர்ஆதுல் மஃபாதீஹ்’ என்ற நூலின் ஆசிரியர் கூறினார்:
“ஈமானுடைய சட்டத்திற்கு அவர் மாறுபட்ட போதிலும், அவர் அதன் நிழலின் கீழேயே உள்ளார். அவரை விட்டும் ஈமானுடைய சட்டமானது முழுவதுமாக நீங்கி விடாது, அதன் பெயரும் அவரை விட்டு முழுவதுமாக உயர்ந்தும் விடாது என்பதற்கான ஒரு அடையாளம் இதில் (இந்த ஹதீஸில்) உள்ளது.”
[பாகம் 1, பக்கம் 138]
இதன் காரணமாகவே அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா’அத்தினருடைய கொள்கையில் உறுதியான விடயங்களில் இருப்பவற்றிலிருந்து உள்ளதாவது, “எவர் விபச்சாரம் அல்லது பெரும் பாவங்களிலிருந்து உள்ள எந்தவொரு பெரும் பாவத்தையேனும் செய்வாரோ, அவரிடமிருந்து **அடிப்படை ஈமானுடைய பெயரானது பறிக்கப்படாது, அத்தோடு முழுமையான ஈமானுடைய பெயரும் அவருக்கு கொடுக்கப்படாது.
மாறாக, “அவர் ஒரு குறைபாடுடைய ஈமான் கொண்ட முஃமின் அல்லது ஒரு பாவியான முஃமின் அல்லது தனது ஈமானைக் கொண்டு முஃமினாக, தனது பெரும் பாவத்தைக் கொண்டு பாவியாக இருப்பவர்” என்று சொல்லப்படும். மேலும் “உண்மையான முஃமினாக இல்லாதவர் அல்லது உண்மையான ஈமான் இல்லாதவர்” என்றும் சொல்லப்படும்.
➡️ எனினும், பெரும் பாவத்தில் ஈடுபடுபவரை காஃபிர் என்று பிரகடனம் செய்து அவரை மார்க்கத்தை விட்டும் வெளியாக்குவதைப் பொறுத்தவரையில், இது எந்த விதத்திலும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா’அத்தினருடைய கொள்கையிலிருந்து உள்ளதன்று.
மாறாக, அல்குர்ஆன் வஸ்ஸுன்னாவுடைய ஆதாரங்களின் வெளிப்படையான அர்த்தங்களிலும் இந்த கூற்றைக் காட்டக்கூடிய, இன்னும் அதற்கு வலுசேர்க்கக்கூடிய எதுவுமில்லை. எவர் மார்க்க ஆதாரங்களிலிருந்து (அவ்வாறான) ஒன்றை விளங்குவாரோ, அவர் திட்டமாக தனது கெட்ட புரிதல் மற்றும் அறியாமையினால் (அவ்வாறு) விளங்கியவர் ஆவார்.
எனவே, இவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு இந்த ஹதீஸில் எந்தவொரு ஆதாரமும் இல்லை. மாறாக இது “பாவங்களானது ஈமானை குறைத்து அதனை வலுவிழக்கச் செய்திடும்” என்ற அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா’அத்தினர் எடுத்த நிலைப்பாட்டிற்கான ஒரு ஆதாரமாகும்.
(இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்): “ஒரு விபச்சாரன், **திருடன், (மது) அருந்துபவன், மற்றும் கொள்ளையடிப்பவன் ஆகியோர் (அடிப்படை) ஈமானை இழந்து விடமாட்டார்கள். அது எத்தகையதெனில், அதைக் கொண்டே அவர் நரகத்தில் நிரந்தரமாக தங்கமாட்டார். இன்னும், அதைக் கொண்டே அவருக்கு (கியாமத் நாளில்) பரிந்துரையும் மன்னிப்பும் ஆதரவு வைக்கப்படும். மேலும், அதைக் கொண்டே அவருக்கு திருமணம் செய்து வைக்கவும், வாரிசுரிமையைப் பெற்றுக் கொள்ளவும் தகுதியுண்டு.
பெரும்பாவத்தில் விழுந்தவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவாரா?
ஃகவாரிஜ்களுக்கு மறுப்பு
- அஷ்ஷைஃக் அப்துர் ரஸ்ஸாக் அல்ப’த்ர்
- அஷ்ஷைஃக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்
https://t.me/salafirefutationstamil/108
