en
Feedback
மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ்

மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ்

Open in Telegram

📖 உலமாக்களின் வார்த்தைகள் தமிழ் மொழியில் Maktabah as Sunnah was Salafiyyah salafiyyah.in

Show more
1 147
Subscribers
No data24 hours
+67 days
+2730 days

Data loading in progress...

Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '26
+8
in 0 channels
August '26
+49
in 0 channels
Get PRO
July '26
+21
in 0 channels
Get PRO
June '26
+22
in 0 channels
Get PRO
May '26
+21
in 0 channels
Get PRO
April '26
+16
in 0 channels
Get PRO
March '26
+14
in 0 channels
Get PRO
February '26
+30
in 0 channels
Get PRO
January '26
+10
in 0 channels
Get PRO
December '25
+11
in 0 channels
Get PRO
November '25
+10
in 0 channels
Get PRO
October '25
+14
in 0 channels
Get PRO
September '25
+22
in 0 channels
Get PRO
August '25
+19
in 0 channels
Get PRO
July '25
+22
in 0 channels
Get PRO
June '25
+23
in 1 channels
Get PRO
May '25
+13
in 0 channels
Get PRO
April '25
+15
in 0 channels
Get PRO
March '25
+56
in 0 channels
Get PRO
February '25
+51
in 1 channels
Get PRO
January '25
+44
in 1 channels
Get PRO
December '24
+64
in 0 channels
Get PRO
November '24
+62
in 0 channels
Get PRO
October '24
+47
in 0 channels
Get PRO
September '24
+69
in 0 channels
Get PRO
August '24
+24
in 1 channels
Get PRO
July '24
+9
in 0 channels
Get PRO
June '24
+13
in 1 channels
Get PRO
May '24
+67
in 0 channels
Get PRO
April '24
+43
in 0 channels
Get PRO
March '24
+112
in 0 channels
Get PRO
February '24
+43
in 0 channels
Get PRO
January '24
+75
in 0 channels
Get PRO
December '23
+60
in 0 channels
Get PRO
November '23
+27
in 0 channels
Get PRO
October '23
+12
in 0 channels
Get PRO
September '23
+21
in 0 channels
Get PRO
August '23
+31
in 0 channels
Get PRO
July '23
+50
in 0 channels
Get PRO
June '23
+19
in 0 channels
Get PRO
May '23
+12
in 0 channels
Get PRO
April '23
+22
in 0 channels
Get PRO
March '23
+54
in 0 channels
Get PRO
February '23
+54
in 0 channels
Get PRO
January '23
+59
in 0 channels
Get PRO
December '22
+270
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
09 September+1
08 September+1
07 September0
06 September0
05 September+1
04 September0
03 September0
02 September+3
01 September+2
Channel Posts
வணக்க வழிபாடுகளில் அடிப்படை விதியானது தடையாகும் பழக்கவழக்கங்களில் அடிப்படை விதியானது அனுமதியாகும் - அல்இமாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் மார்க்கத்துடைய அடிப்படைகளை ஆராய்வதன் மூலம் நாம் அறிகிறோம்: அல்லாஹ் கடமையாக்கிய அல்லது அவன் விரும்பக்கூடிய வணக்க வழிபாடுகள், அவற்றைக் கொண்டான கட்டளையென்பது ஷரீ'அஹ்வைக் கொண்டே தவிர வேறதன் மூலமும் நிலைபெறாது. ஆனால் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில், அது மக்கள் தங்களுடைய உலக காரியங்களில் தேவைப்படுபனவற்றில் பழக்கப்பட்டவையாகும். அதில் அடிப்படை விதி என்பது தடையின்மை ஆகும். அவற்றில் அல்லாஹ் - ஸுப்ஹானஹூ வத'ஆலா - தடை செய்தவற்றைத் தவிர வேறெதையும் தடை செய்ய இயலாது. அது ஏனென்றால், ஏவல் மற்றும் விலக்கல்: அவ்விரண்டும் அல்லாஹ்வுடைய ஷரீ'அஹ்வாகும். வணக்க வழிபாடுகள் என்பது கண்டிப்பாக ஏவப்பட்டவையாக இருத்தல் வேண்டும். எனவே எந்த ஒன்று ஏவப்பட்டதாக உறுதிபெறவில்லையோ, அதற்கு வணக்க வழிபாடு என்று எவ்வாறு தீர்ப்பளிக்க இயலும்? மேலும் பழக்கவழக்கங்களில் எந்த ஒன்று தடுக்கப்பட்டதாக உறுதிபெறவில்லையோ, அது தடுக்கப்பட்டது என்று எவ்வாறு தீர்ப்பளிக்க இயலும்? இதன் காரணமாகவே அஹ்மத் மற்றும் அவரல்லாத அஹ்லுல் ஹதீஸைச் சார்ந்த ஃபுகஹாக்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்: வணக்க வழிபாட்டில் அடிப்படை விதியானது 'தவ்கீஃப்' (மார்க்க ஆதாரங்களில் வந்திருப்பவற்றோடு நின்று கொள்வது) ஆகும். எனவே அல்லாஹு த’ஆலா மார்க்கமாக்கியவற்றைத் தவிர வேறெதுவும் மார்க்கமாக்கப்படமாட்டாது. இல்லையெனில், اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ اللّٰهُ‌ மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதியளிக்கவில்லையோ அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா? (42:21) என்ற அவனது கூற்றின் பொருளில் நாம் நுழைந்து விடுவோம். மேலும் பழக்கவழக்கங்களானது அது விடயத்தில் அடிப்படை விதியென்பது மன்னிப்பு (அனுமதி) ஆகும். எனவே அவற்றில் அல்லாஹ் ஹராமாக்கியவற்றைத் தவிர வேறதனையும் தடுத்திட இயலாது. இல்லையெனில், قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا  (நபியே!) நீர் கூறுவீராக! “உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவு வகைகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும் சிலவற்றை ஆகுமானவையென்றும் நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள்”(10:59) என்ற அவனது கூற்றின் பொருளில் நாம் நுழைந்து விடுவோம். 📖 மஜ்மூ'உல் ஃபதாவா 29/16,17 salafiyyah.in

2
வணக்க வழிபாடுகளில் அடிப்படை விதியானது தடையாகும் பழக்கவழக்கங்களில் அடிப்படை விதியானது அனுமதியாகும் - அல்இமாம் இப்னு தைமிய்யாஹ்
வணக்க வழிபாடுகளில் அடிப்படை விதியானது தடையாகும் பழக்கவழக்கங்களில் அடிப்படை விதியானது அனுமதியாகும் - அல்இமாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ்
27
3
வணக்க வழிபாடுகளில் அடிப்படை விதியானது தடையாகும் பழக்கவழக்கங்களில் அடிப்படை விதியானது அனுமதியாகும் - அல்இமாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் மார்க்கத்துடைய அடிப்படைகளை ஆராய்வதன் மூலம் நாம் அறிகிறோம்: அல்லாஹ் கடமையாக்கிய அல்லது அவன் விரும்பக்கூடிய வணக்க வழிபாடுகள், அவற்றைக் கொண்டான கட்டளையென்பது ஷரீ'அஹ்வைக் கொண்டே தவிர வேறதன் மூலமும் நிலைபெறாது. ஆனால் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில், அது மக்கள் தங்களுடைய உலக காரியங்களில் தேவைப்படுபனவற்றில் பழக்கப்பட்டவையாகும். அதில் அடிப்படை விதி என்பது தடையின்மை ஆகும். அவற்றில் அல்லாஹ் - ஸுப்ஹானஹூ வத'ஆலா - தடை செய்தவற்றைத் தவிர வேறெதையும் தடை செய்ய இயலாது. அது ஏனென்றால், ஏவல் மற்றும் விலக்கல்: அவ்விரண்டும் அல்லாஹ்வுடைய ஷரீ'அஹ்வாகும். வணக்க வழிபாடுகள் என்பது கண்டிப்பாக ஏவப்பட்டவையாக இருத்தல் வேண்டும். எனவே எந்த ஒன்று ஏவப்பட்டதாக உறுதிபெறவில்லையோ, அதற்கு வணக்க வழிபாடு என்று எவ்வாறு தீர்ப்பளிக்க இயலும்? மேலும் பழக்கவழக்கங்களில் எந்த ஒன்று தடுக்கப்பட்டதாக உறுதிபெறவில்லையோ, அது தடுக்கப்பட்டது என்று எவ்வாறு தீர்ப்பளிக்க இயலும்? இதன் காரணமாகவே அஹ்மத் மற்றும் அவரல்லாத அஹ்லுல் ஹதீஸைச் சார்ந்த ஃபுகஹாக்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்: வணக்க வழிபாட்டில் அடிப்படை விதியானது 'தவ்கீஃப்' (மார்க்க ஆதாரங்களில் வந்திருப்பவற்றோடு நின்று கொள்வது) ஆகும். எனவே அல்லாஹு த’ஆலா மார்க்கமாக்கியவற்றைத் தவிர வேறெதுவும் மார்க்கமாக்கப்படமாட்டாது. இல்லையெனில், اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ اللّٰهُ‌ மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதியளிக்கவில்லையோ அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா? (42:21) என்ற அவனது கூற்றின் பொருளில் நாம் நுழைந்து விடுவோம். மேலும் பழக்கவழக்கங்களானது அது விடயத்தில் அடிப்படை விதியென்பது மன்னிப்பு (அனுமதி) ஆகும். எனவே அவற்றில் அல்லாஹ் ஹராமாக்கியவற்றைத் தவிர வேறதனையும் தடுத்திட இயலாது. இல்லையெனில், قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا (நபியே!) நீர் கூறுவீராக! “உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவு வகைகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும் சிலவற்றை ஆகுமானவையென்றும் நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள்”(10:59) என்ற அவனது கூற்றின் பொருளில் நாம் நுழைந்து விடுவோம். மஜ்மூ'உல் ஃபதாவா 29/16,17 salafiyyah.in
1
4
🔸உலமாக்களிடமிருந்து பயன்பெறுவதில் வரம்பு மீறுதலும், பொடுபோக்கும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்🔸 கேள்வி: மக்களில் ஒரு வகையினர் மத்ஹப்களில் ஒரு மத்ஹபிற்கு அல்லது உலமாக்களில் ஒரு ஆலிமிற்கு (பின்பற்றக்கூடிய விடயத்தில்) பிடிவாதம் காட்டுகின்றனர். மற்றொரு வகையினரோ அது விடயத்தில் பொருட்படுத்துவதே கிடையாது, உலமாக்கள் மற்றும் இமாம்களுடைய வழிகாட்டுதலை விட்டும் அலட்சியமாக இருக்கின்றனர். இது விடயமாக உங்களுடைய வழிகாட்டுதல் யாது? பதில்: ஆம். இவ்விரண்டு (வகையினரும்) நேர் எதிரான இரு முனைகளில் உள்ளவையாகும். அவர்களில் சிலர் தக்லீத் செய்வதில் வரம்பு மீறுகின்றனர்; எந்தளவுக்கெனில் மனிதர்களுடைய கூற்றுகளுக்கு, அவை ஆதாரத்துடன் மாறுபட்டாலும் சரியே, (அவற்றைப் பின்பற்றுவதில்) பிடிவாதம் காட்டுவர். இது பழிக்கத்தக்க ஒன்றாகும். மேலும் இது குஃப்ரிற்கும் இட்டுச் செல்லலாம். அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறோம். இரண்டாவது பகுதியினர்: உலமாக்களுடைய கூற்றுகளை மொத்தமாக மறுப்பவர்கள், அவற்றிலிருந்து பயன் பெற மாட்டார், அது குர்ஆன் ஸுன்னாஹ்விற்கு உடன்பட்டாலும் சரியே. இது பொடுபோக்காகும். முதலானவர் வரம்பு மீறியவர், மேலும் இவர் பொடுபோக்கானவர். உலமாக்களுடைய கூற்றுகளானது அவற்றில் நலவு உள்ளது, அதிலும் குறிப்பாக ஸலஃபுகளுடைய ஃபிக்ஹ், ஸஹாபாக்கள், தாபிஈன்கள், நான்கு இமாம்களுடைய ஃபிக்ஹ், மேலும் மார்க்க விளக்கம் பெற்றிருப்பதைக் கொண்டு உம்மத்தால் சாட்சியம் பகரப்பட்ட ஃபுகஹாக்களின் ஃபிக்ஹில் (நலவு உள்ளது). அவர்களுடைய கூற்றுகளிலிருந்து பயன் பெறப்பட வேண்டும், அவற்றைக் கொண்டு பிரயோஜனப்பட வேண்டும். ஆனால் (முற்றிலுமாக) ஒப்புக்கொள்ளப்பட்டவை என்ற தரத்தில் அவை எடுத்துக் கொள்ளப்படக் கூடாது. மாறாக ஒரு கூற்றானது ஆதாரத்திற்கு மாற்றமாக இருக்கின்றது என்பதை நாம் அறிந்தால், நிச்சயமாக நாம் ஆதாரத்தை எடுத்துக் கொள்வதைக் கொண்டு ஏவப்பட்டுள்ளோம். ஆனால் அக்கூற்றானது குர்ஆன் ஸுன்னாஹ்விலிருந்துள்ள ஆதாரத்துடன் மாறுபடவில்லை என்றால், அதனை நாம் எடுத்து நடப்பதிலும், ஏற்றுக்கொள்வதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இது பிடிவாதமாக இருப்பது என்ற ரீதியில் அல்ல, (மாறாக) ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய புரிதலைக் கொண்டு பயன்பெறுதல், அவற்றிலிருந்து பிரயோஜனப்படுதல், மேலும் அவற்றைக் கொண்டு ஒளியூட்டம் பெறுதல் என்ற ரீதியில் மட்டுமே ஆகும். ஏனெனில் அதுவே அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனது தூதரின் ஸுன்னாஹ்வுடைய அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கான வழியாகும். இதுவே உண்மையான, நடுநிலையான கூற்றாகும்; உலமாக்கள் மற்றும் ஃபுகஹாக்களுடைய கூற்றுகளில் குர்ஆன் ஸுன்னாஹ்விற்கு ஒத்துப்போகின்றவற்றை நாம் எடுத்துக் கொள்வோம், மேலும் ஆதாரத்திற்கு மாற்றமானவற்றை நாம் விட்டுவிடுவோம், மேலும் உலமாக்களுக்கு அவர்களுடைய பிழைகளில் நாம் அவர்களுக்கு காரணம் கூறிடுவோம், இன்னும் அவர்களுடைய அந்தஸ்தை அறிவோம், அவர்களை தரம் தாழ்த்திட மாட்டோம். (நபி) ﷺ அவர்கள் கூறினார்கள்: إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران، وإذا حكم فاجتهد فأخطأ فله أجر واحد “ஒரு நீதிபதி தீர்ப்பளிக்கும் பொழுது இஜ்திஹாத் செய்து பின்பு சரியானதை அடைந்து கொண்டார் என்றால், அவருக்கு இரு கூலிகள் உண்டு. (அதுவே) அவர் தீர்ப்பளிக்கும் பொழுது இஜ்திஹாத் செய்து பிழை செய்துவிட்டார் என்றால், அவருக்கு ஒரு கூலி உண்டு.” இஜ்திஹாத் செய்வதற்கான நிபந்தனைகள் பூர்த்தியாகக்கூடிய ஒருவர்களில் அவர் இருந்தால், அப்பிழையானது மன்னிக்கப்படும். எனினும் ஒரு அறிவிலி அல்லது ஒரு கல்வி தேடுவதில் தொடக்க நிலையில் உள்ள மாணவரைப் பொறுத்தவரையில், அவருக்கு இஜ்திஹாத் செய்வதற்கான உரிமை கிடையாது, அவர் இஜ்திஹாத் செய்வது அவருக்கு ஆகுமானதன்று. அவருடைய இஜ்திஹாதின் மூலம் பாவியாவார், அவர் பிழையிட்டாலும் சரி அல்லது சரியானதை அடைந்து கொண்டாலும் சரி. ஏனெனில் எதை செய்வதற்கு அவருக்கு உரிமை இல்லையோ, அதை அவர் செய்துவிட்டார். 📖 அல்அஜ்விபதுல் முஃபீதாஹ் ‘அன் அஸ்இலதில் மனாஹிஜில் ஜதீதாஹ், பக்கம்: 69,70 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/dp8s2dd9 🌐 வளைதளம்: salafiyyah.in
88
5
உலமாக்களிடமிருந்து பயன்பெறுவதில் வரம்பு மீறுதலும், பொடுபோக்கும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்
உலமாக்களிடமிருந்து பயன்பெறுவதில் வரம்பு மீறுதலும், பொடுபோக்கும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்
82
6
▪️"அஹ்லுஸ் ஸுன்னாஹ்வுடைய உஸூல்கள் அகீதாவில் தவிர வேறு எதிலும் இருக்காது” என்று சில மக்கள் கூறக்கூடியது சரியானதா? ஒரு குறிப்பிட்ட விடையமானது ஸுன்னாஹ்வுடைய அடிப்படைகளிலிருந்து உள்ளது என நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் https://t.me/salafimaktabahmpm/1406 ▪️புதிதாக விடையங்களை தோற்றுவித்தவரை அன்றி மற்ற அனைத்து முஸ்லிம்களும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா'அஹ் என்று கூறுவது கூடுமா? - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் https://t.me/salafimaktabahmpm/1415 ▪️நல்ல பித்’அஹ் கெட்ட பித்’அஹ் என ஏதேனும் உள்ளதா? - அல்இமாம் இப்னு பாஸ் https://t.me/salafimaktabahmpm/1464 ▪️பித்’அஹ்களை நல்ல பித்’அஹ் கெட்ட பித்’அஹ் என வகைப்படுத்துபவர்களுக்கு மறுப்பு - அஷ்ஷைஃக் இப்னு ஹிஸாம் https://t.me/salafimaktabahmpm/1466 ▪️பித்’அஹ்வுடைய வரைவிலக்கணம் யாது? - அஷ்ஷைஃக் இப்னு ஹிஸாம் https://t.me/salafimaktabahmpm/1475 ▪️தவ்ஹீத் இல்லாத த’அவா தலையில்லாத உடலைப் போன்றது! - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் https://t.me/salafimaktabahmpm/1479 ▪️பித்’அஹ்வின் வகைகளும் அதனுடைய மார்க்கச் சட்டமும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் https://t.me/salafimaktabahmpm/1484 ▪️நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் https://t.me/salafimaktabahmpm/1489 ▪️அரபி மொழியை கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் - அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்ருஹைய்லி, அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக், அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி https://t.me/salafimaktabahmpm/1491
179
7
நல்ல பித்’அஹ் கெட்ட பித்’அஹ் என ஏதேனும் உள்ளதா? - அல்இமாம் இப்னு பாஸ் https://youtu.be/XC9EIzkcsus?si=YuhppndTSjY1kWOu
நல்ல பித்’அஹ் கெட்ட பித்’அஹ் என ஏதேனும் உள்ளதா? - அல்இமாம் இப்னு பாஸ் https://youtu.be/XC9EIzkcsus?si=YuhppndTSjY1kWOu
183
8
திட்டமாக அல்லாஹ் சுப்ஹானஹு கண்ணை உள்ளத்துடைய கண்ணாடியாக ஆக்கியுள்ளான். ஆகவே ஒரு அடியான் தனது பார்வையைத் தாழ்த்திக் கொண்டால்,
திட்டமாக அல்லாஹ் சுப்ஹானஹு கண்ணை உள்ளத்துடைய கண்ணாடியாக ஆக்கியுள்ளான். ஆகவே ஒரு அடியான் தனது பார்வையைத் தாழ்த்திக் கொண்டால், உள்ளமும் அதனுடைய இச்சையையும், ஆசையையும் தாழ்த்திக் கொள்கிறது. அவன் தனது பார்வையை விடுவித்து விட்டால், உள்ளமும் அதனுடைய இச்சையை (கட்டுப்பாடற்று) விடுவித்து விடுகிறது. - இப்னுல் கைய்யிம் رحمه الله 📖 ரவ்'ததுல் முஹிப்பீன், 1/92 salafiyyah.in
220
9
மக்களில் இஸ்லாத்துடைய மக்கள் அந்நியர்கள், இஸ்லாத்துடைய மக்களில் முஃமின்கள் அந்நியர்கள், முஃமின்களில் கல்விமான்கள் அந்நியர்கள்
மக்களில் இஸ்லாத்துடைய மக்கள் அந்நியர்கள், இஸ்லாத்துடைய மக்களில் முஃமின்கள் அந்நியர்கள், முஃமின்களில் கல்விமான்கள் அந்நியர்கள், அதனை (ஸுன்னாஹ்வை) மனோ இச்சைகளிலிருந்தும், பித்'அஹ்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னாஹ் (ஸுன்னாஹ்வுடைய மக்கள்) அவர்கள் அந்நியர்கள், மேலும் அதன் பக்கம் த'அவா செய்து (அதனை) எதிர்க்கக்கூடிய மக்களின் இன்னல்களின் மீது பொறுமை காப்பவர்கள், இவர்களில் மிகக் கடுமையான அந்நியத்தன்மை உடையவர்களாவர். ஆனால் இவர்களே உண்மையில் அல்லாஹ்வுடைய மக்களாவர்; எனவே எந்தவொரு அந்நியத்தனமும் அவர்களுடைய விடயத்தில் இல்லை. அவர்களுடைய அந்நியத்தன்மையானது பெரும்பாலான (மக்களுக்கு) மத்தியில் மட்டுமே. அவர்கள் எத்தகையோரெனில் அல்லாஹ் அஸ்ஸ வஜல் அவர்களின் விடயத்தில் கூறியுள்ளான்: இப்பூமியிலிருப்போரில் பெரும்பாலோருக்கு (அவர்களின் கூற்றை ஏற்று) நீர் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள். (6:116) - இப்னுல் கைய்யிம் رحمه الله 📖 ம'தாரிஜுஸ் ஸாலிகீன் 3/186 salafiyyah.in
259
10
மீலாதுன் நபி கொண்டாடலாமா? | அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹபிதஹுல்லாஹ் | https://youtu.be/nuy8OTwtqYM?si=ehmurNqPdJR9bWHN
மீலாதுன் நபி கொண்டாடலாமா? | அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹபிதஹுல்லாஹ் | https://youtu.be/nuy8OTwtqYM?si=ehmurNqPdJR9bWHN
343
11
https://youtube.com/shorts/pW3Wyv3j1cQ?si=UyM7TSeD5jVQJaXU
341
12
ﻭاﻟﻌﺒﺎﺩاﺕ ﻣﺒﻨﺎﻫﺎ ﻋﻠﻰ اﻟﺘﻮﻗﻴﻒ، ﻭاﻻﺗﺒﺎﻉ، ﻻ ﻋﻠﻰ اﻟﻬﻮﻯ ﻭاﻻﺑﺘﺪاﻉ வணக்க வழிபாடுகள் அதனுடைய அடிப்படையானது (குர்ஆன், ஸுன்னாஹ்வுடன்) ந
ﻭاﻟﻌﺒﺎﺩاﺕ ﻣﺒﻨﺎﻫﺎ ﻋﻠﻰ اﻟﺘﻮﻗﻴﻒ، ﻭاﻻﺗﺒﺎﻉ، ﻻ ﻋﻠﻰ اﻟﻬﻮﻯ ﻭاﻻﺑﺘﺪاﻉ வணக்க வழிபாடுகள் அதனுடைய அடிப்படையானது (குர்ஆன், ஸுன்னாஹ்வுடன்) நின்று கொள்வது மற்றும் பின்பற்றுவதன் மீதுள்ளது, மனோ இச்சை மற்றும் புதிதாக தோற்றுவித்தலின் மீதல்ல. - இப்னு தைமிய்யாஹ் رحمه الله 📖 அல்ஃபதாவா அல்குப்ரா 2/215 T.me/salafirefutationstamil
334
13
ஷரீ'அஹ்வுடைய கல்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்களில் ஒருவராக நீ இருக்க விரும்பினால், (அதனை) ஆதரவு வைத்து தேடுபவராக இருந்தால், அரபி மொழியின் கல்வியில் ஆழமாக வேரூன்றுவது கட்டாயமாகும். ஏனெனில் அதில் முக்கியமான அடித்தளமானது, அரபி மொழியின் அறிவியல்களில் நீ நன்கு தேர்ச்சி பெற்றவனாக இருப்பதாகும். (கல்வியில்) வேரூன்றிய அறிஞர்களின் வரலாறுகளை எவ்வளவு நீ சிந்தித்துப் பார்த்தாலும், ஒரு வேரூன்றிய ஆலிமை உன்னால் காண இயலாது அவர் அரபுகளின் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருந்தே தவிர. குர்ஆனும் ஸுன்னாஹ்வும் தெளிவான அரபி மொழியில் இறங்கியுள்ளன, வந்தடைந்துள்ளன. எனவே அரபி மொழியில் நீ பலவீனமானவனாக இருந்தால், ஷரீ’அஹ்வை விளங்கிக் கொள்ள வேண்டிய விதத்தில் உன்னால் விளங்கிக் கொள்ள இயலாது, மேலும் மார்க்க அறிஞர்களின் பேச்சுக்களை உன்னால் சூழ்ந்தறிய முடியாது. எந்தளவிற்கு உன்னால் (அதில்) ஆழ்ந்து செல்ல இயலுமோ (அவ்வாறு செய்வாயாக), உன்னை (அதிலிருந்து) தடுத்துக் கொள்ளாதே, இன்னும் (அதில்) உன் மீது கருமித்தனம் காட்டாதே. அரபி மொழியின் அறிவியல்களில் உனது படிப்பை அதிகப்படுத்துவாயாக; நஹ்வு மட்டுமல்ல, நஹ்வு படிப்படியாக, ஸர்ஃப் படிப்படியாக, மேலும் மொழியின் சொற்களஞ்சியம் பற்றிய கல்வியையும் படிப்பாயாக. உதாரணத்திற்கு கைரோவில் உள்ள மஜ்மஉல் லுகத்தில் அரபியா தொகுத்த அல்முஃஜமுல் வஸீத் (என்ற அகராதியை) உன் அருகில் வைத்துக் கொள்; ஏனெனில் அது உனக்கு பயனளிக்கக்கூடிய ஒரு புத்தகமாகும். உன்னைக் கடந்து செல்லக்கூடிய எந்தவொரு சொல்லாயினும், நீ அதனுடைய பொருளை அறியவில்லையெனில் அல்லது அதனுடைய பொருளைக் குறித்து சந்தேகித்தாய் எனில், இந்த புத்தகத்தைத் திறந்து வாசிப்பாயாக. காலப்போக்கில் மொழியில் ஒரு நல்ல (சொல்)வளத்தை அடைந்தவனாக நீ இருப்பாய். இந்த புத்தகத்தை உன் அருகில் வைத்துக் கொள், அதில் பார்ப்பதை சுமையாகக் கருதாதே; அல்முஃஜமுல் வஸீத் அல்லது அல்மிஸ்பாஹுல் முனீர் (போன்ற அகராதிகளை உனது அருகில் வைத்துக் கொள்). முக்கியம் என்னவென்றால் இச்சுருக்கமான அகராதிகளில் (ஒன்றை) உன் அருகில் வைத்துக்கொள், மேலும் அதில் அதிகமாக வாசிப்பாயாக. அதப் (இலக்கிய) புத்தகங்களையும் படியுங்கள், உங்களுடைய (மொழி)நடை கட்டாயமாக உயரவும் மேலோங்கவும் வேண்டும். இலக்கிய புத்தகங்களை வாசிப்பதன் மூலமே இது ஏற்படும்; அது பண்டைய கால இலக்கியவாதிகளின் புத்தகங்களாக இருந்தாலும் சரி அல்லது சமகால இலக்கியவாதிகளின் புத்தகங்களாக இருந்தாலும் சரி. அதாவது கடந்த ஹிஜ்ரி நூற்றாண்டில் இருந்த வர்கத்தினர். இலக்கியவாதிகளில் ஒரு கூட்டத்தினர் இருந்தனர், அவர்களுடைய மொழிநடையானது மிகவும் மேலோங்கியதாக இருக்கும். (அவற்றை வாசிப்பதானது) உனக்கு மொழிக் கருவூலத்தையும், நல்லதொரு இலக்கிய வளத்தையும் பெற்றுத்தரும். முக்கியம் என்னவென்றால் இயன்ற அளவிற்கு மொழியின் அறிவியல்களில் ஆழமாக கற்றுக் கொள், இயன்ற அளவுக்கு அரபி மொழியில் தேர்ச்சி பெறுவாயாக. இது குர்ஆனையும், ஸுன்னாஹ்வையும், மார்க்க அறிஞர்களின் பேச்சுகளையும் புரிந்து கொள்வதில் மிகப்பெரும் தாக்கத்தை உன்மீது ஏற்படுத்தும். அல்லாஹ்விடம் - அஸ்ஸ வஜல் - உங்களுக்கும் எனக்கும் வெற்றியையும், நேர்வழியையும், உதவியையும் கேட்கின்றேன், மேலும் தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து அல்லாஹ்வின் பக்கம் த’அவா பணி செய்யக்கூடிய, அமல் செய்யக்கூடிய உலமாக்களிலும் ஆக்கி வைப்பானாக என கேட்கின்றேன். [3] [1] https://youtu.be/GwzqEwbfUmw?si=KtZmqHzJ3RyS9K5X [2] https://youtu.be/67BIvuvZFuA?si=l2KHsc2aUfABLGF_ [3] https://youtu.be/llKmnAdJ7ew?si=PaC4LkTmXr-0uVfs 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/ufft94wu 🌐 வளைதளம்: salafiyyah.in
392
14
🔸அரபி மொழி கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்🔸 - அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி 📌 அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி ஹஃபிதஹுல்லாஹ்: எவரொருவர் ஷரீ'அஹ்வை சரியான, துல்லியமான புரிதலோடு புரிந்து கொள்ள விரும்புவாரோ, அவர் மீது அரபி மொழியை புரிந்து கொள்வதும், மேலும் (அரபி) பேச்சை எதனைக் கொண்டு புரிந்து கொள்ள இயலுமோ (அத்தகைய) அரபி மொழி தொடர்பான அடிப்படைகளை அறிந்து கொள்வதும் அவர் மீது கடமையாகும். இதன் காரணமாகவே கல்வியைத் தேடும் மாணவர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரிடத்தில் தற்போது இருக்கக்கூடிய தவறுகளில் உள்ளதாவது அவர்கள் அரபி மொழியை, அது காரணங்களில் இருந்துள்ள ஒரு விடயம் (இலட்சியமோ, நோக்கமோ அல்ல) என்பதை ஆதாரம் காட்டி அதனை அலட்சியம் செய்கின்றனர். இன்னும் நாவானது எதைக் கொண்டு சீர்படுத்தப்படுமோ அந்த அளவிற்குக் கூட அரபி மொழியில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. இதனால் குர்ஆன் ஸுன்னாஹ்விலுள்ள, மேலும் மார்க்க அறிஞர்களின் பேச்சுகளுடைய விடயத்தில் அவர்களது புரிதல் கெட்டு விடுகிறது. குர்ஆன் ஸுன்னாஹ்வில் உள்ளவற்றையும், மேலும் மார்க்க அறிஞர்களின் புத்தகங்களில் உள்ளவற்றையும் புரிந்து கொள்வதில் அரபி மொழிக்கென பெரும் தாக்கம் இருக்கின்றது. ஆகையால் கல்வியைத் தேடும் மாணவர்களை (அரபி) மொழி கற்பதில் கவனம் செலுத்துவதற்கு நான் ஊக்குவிக்கின்றேன்; நான் நாடுவதாவது: (அதிலுள்ள) சொற்களையும், பொருள்களையும் புரிந்து கொள்ளும் அளவிற்கான (கற்றலாகும்). இது ஒரு கல்வியைத் தேடும் மாணவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். [1] 📌 அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக் ஹஃபிதஹுல்லாஹ்: (மார்க்கக்) கல்வியிலும், த’அவாவிலும் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய மன்ஹஜோடு (வழிமுறையோடு) தொடர்புள்ள ஒரு விடயம் இருக்கின்றது. அதானது அரபி மொழியில் கவனம் செலுத்துவதாகும். குர்ஆனானது தெளிவான அரபி மொழியில் தான் இறக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வாறு குர்ஆனை நாம் விளங்கிக் கொள்வோம்? அதனுடைய செய்திகளை விளங்கிக் கொள்வோம்? அதனுடைய ஏவல்கள், விலக்கல்கள், வரம்புகள், வாக்குறுதிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வோம்? அல்லாஹ் அதில் நமக்கு விவரித்தவற்றை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வோம்? இன்னும் எவ்வாறு அவற்றைக் கொண்டு உள்ளங்கள் அசைக்கப்படும்? அது அரபி மொழியைக் கொண்டு மட்டுமே. எனவேதான் ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் வாளுக்கும் ஈட்டிக்கும் முன்பாக, கல்வியையும் குர்ஆனையும் கொண்டு வென்றெடுத்த எந்தவொரு தேசத்திலும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது, அவர்கள் முதன்முதலாக அரபு மொழியையே மக்களுக்குக் கற்றுக்கொடுப்பர். எனவேதான் அரபி மொழியும், அரபி மொழியின் புரிதலும் (அந்நாடுகளில்) பரவியது. (எந்த அளவிற்கு அரபி மொழி பரவியது என்றால் அரபிகள் அல்லாத) மற்ற சமூகங்களில் பிறந்தவர்கள் கூட நமக்கு அரபி மொழியின் அடிப்படைகளை வகுத்துக் கொடுத்தனர். அதற்கு காரணமாவது அவர்கள் அதற்கு கொடுத்த அக்கறையும், அவர்கள் அதற்குக் காட்டிய அதீத முக்கியத்துவமும் ஆகும். இதன் காரணமாகவே பூமியின் கிழக்குப் பகுதியிலும், அதனுடைய மேற்குப் பகுதியிலும் உள்ள மார்க்க அறிஞர்களிலுள்ள ஸாலிஹீன்களை மக்களுக்கு அரபி மொழியை கற்பிப்பதில் ஆர்வத்துடன் முனைப்பு காட்டுவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். ஏன்? அது அரபி இனத்தின் மொழி என்பதற்காக அல்ல, இல்லை. அது இஸ்லாத்துடைய மொழி, குர்ஆனுடைய மொழி, அல்லாஹ்வை - ஜல்ல வ அலா - பற்றியும், அவனது தூதரைப் பற்றியுமான மார்க்கப் புரிதலை பெறுவதற்கான மொழி என்பதற்காக ஆகும். இதன் காரணமாகவே அரபி மொழியை கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதானது, இது ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய த’அவாவின் வழிமுறையிலுள்ள சிறப்பியல்புகளில் ஒன்றாகும். (அரபியல்லாத) சமூகங்களுடைய மொழிகளில் த’அவா செய்ய மாட்டார்கள், இன்னும் அவர்களை மார்க்க விளக்கம் பெறாதவர்களாக விட்டு விடமாட்டார்கள். (அவர்களிடம்) நீங்கள் வாருங்கள் எனக் கூறி, இஸ்லாத்தில் சில விடயங்களைக் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு, உங்களது மொழியைக் கொண்டு நீங்கள் த’அவாவை மேற்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்களை விட்டு விடமாட்டார்கள். (மாறாக) அவர்களுக்கு அரபி மொழியைக் கொண்டே இயன்றவரை கற்றுக் கொடுப்பார்கள். அரபி மொழியை அறியாத நிலையில் உள்ளவர் அவருடைய த’அவாவில் தெளிவான ஞானமுள்ள ஒரு தா’ஈயாக இருக்க முடியாது. [2] 📌 அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்: நானும் நீங்களும் அதன் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்; அதானது ஆழமான வேரூன்றலின் அவசியமாகும். மார்க்கக் கல்வியைத் தேடும் மாணவரே! அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளரே! அரபி மொழியின் கல்வியில் ஆழமான வேரூன்றலின் அவசியத்தின் பால் (நானும் நீங்களும் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்).
282
15
அரபி மொழி கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் - அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்
அரபி மொழி கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் - அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி
258
16
🔸நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹ்🔸 கேள்வி: ஒரு நலவிற்காக சில வேளைகளில் (ஒரு சில) ஸுன்னாஹ்களை (செய்யாது) விட்டு விடுவது அதனை நிறைவேற்றுவதை விட மிகப் பெரியதா? பதில்: ஆம். (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்த அல்லது ஒரு நலவிற்காக (சில) ஸுன்னாஹ்களை விட்டுவிடுவது ஆகுமானதாகும். ஆனால், ஸுன்னாஹ்களை மரணிக்கச் செய்வது (என்பது அதன் பொருள்) அல்ல. ஏனெனில் (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுவதற்காக அதை ஒரு (குறிப்பிட்ட) காலத்திற்கு விடுவதற்கும், ஸுன்னாஹ் மரணித்திடும் அளவிற்கு அதனை முற்றிலுமாக விட்டுவிடுவதற்கும் மத்தியில் வேறுபாடு உள்ளது. எனவே ஸுன்னாஹ்வை தெளிவுபடுத்துவதற்கு ஒரு மனிதருக்கு திடமான மன உறுதி இருந்து, (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக சில வேளைகளில் அதனை விட்டுவிடுவதானது, அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இதன் காரணமாகவே நபி ﷺ அவர்கள் குறைஷ் (கோத்திரத்தார் ஒரு சில மாற்றங்களுடன்) கட்டிய க’அபாவை இடித்து விட்டு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உடைய அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப நாடினார்கள். எனினும், ஃபித்னா ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அதனை விட்டு விட்டார்கள். ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அன்னார் கூறினார்கள்: لولا أن قومك حديثوا عهد بكفر لهدمت الكعبة وبنيتها على قواعد إبراهيم وجعلت لها بابين باباً يدخل منه الناس وباباً يخرج منه “உன் சமூகத்தார் இறை நிராகரிப்பிலிருந்து சமீபமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையெனில், நான் க’அபாவை இடித்துவிட்டு, இப்ராஹீமுடைய அடித்தளத்தின் மீது அதனைக் கட்டியெழுப்பி, மக்கள் நுழைவதற்கு ஒரு வாசலும், வெளியேறுவதற்கு ஒரு வாசலும் என இரு வாசல்களை அதற்கு நான் அமைத்திருப்பேன்.” இதானது இதிலிருந்து நம்மால் ஒரு பொதுவான விதியை எடுக்க இயலுமான அடிப்படையாகும்; அது (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக சில ஸுன்னாஹ்களை விட்டுவிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதாகும். ஏனெனில், சிறப்பில் குறைந்த மதிப்புடைய ஒரு விடையத்திற்கு சிறந்த ஒரு விடையத்தை விடவும் சிறப்பிற்குரியதாக ஆக்குகின்ற (காரணம்) ஒன்று ஏற்படக்கூடும். ஆனால் அதன் பொருளானது ஸுன்னாஹ் மரணிக்கின்ற அளவிற்கு அதனை நாம் முற்றிலுமாக விட்டுவிடுவது என்பதல்ல. ஏனெனில் இது சத்தியத்தை மறைப்பதையும், ஷரீ’அஹ்வில் சிலவற்றை மரணிக்கச் செய்வதையும் அவசியமாக்கும். (சூழ்நிலைகளைக் கருதி) உபாயமாக மட்டும் நடந்து கொள், சமரசம் செய்யாதே; உபாயமாக நடந்து கொள், சமரசம் செய்திடாதே. எனவே ஸுன்னாஹ்வை தெளிவுபடுத்துவதற்கு ஒரு வாய்ப்பை நீ கண்டால் (அதனை) செய்திடு. மேலும் (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக இந்த சில ஸுன்னாஹ்களை முழுமையாக அல்லாமல் (சில சமயங்களில்) விட்டுவிடுவதை, சிறந்த ஒன்றிலிருந்தும், இன்னும் அல்லாஹ்வின் பக்கம் செய்யும் அழைப்புப்பணியிலிருந்தும் உள்ளதாக நீ கண்டால், (அதனை விட்டுக் கொள்ளலாம்). இது நல்லதாகும்; அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆம், முதலாவதிற்கு நாம் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உதாரணமாக: இரு காலணிகளுடன் தொழுவது; இரு காலணிகளுடன் தொழுவதென்பது ஸுன்னாஹ் கொண்டுவந்த ஒன்றாகும். நபி ﷺ அவர்கள் காலணிகளுடன் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று அவர்களைத் தொட்டும் திட்டமாக உறுதியாகியுள்ளது, இன்னும் நபி ﷺ அவர்கள் காலணிகளுடன் தொழும்படி ஏவியுள்ளார்கள். خالفوا اليهود فإنهم لا يصلون في نعالهم “யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில், அவர்கள் காலணிகளுடன் தொழ மாட்டார்கள்” என்று கூறினார்கள். ஆனால் இதிலிருந்து (இந்த ஸன்னாஹ்வை நிலைநாட்டுவதிலிருந்து) ஃபித்னாவும், சத்தியத்தின் மீதும், அதன் மக்களின் மீதும் வெறுப்பும் அவசியமாகும் என்றால், இந்த ஃபித்னாவை அகற்றுவதற்காக அதனை நாம் விட்டுவிடுவதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் இதன் பொருளாவது நாம் ஸுன்னாஹ்வை மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடாது, அதனை வெளிப்படுத்தக்கூடாது என்பதல்ல. மாறாக நாம் அவற்றை (மக்களுக்கு) தெளிவுபடுத்துவோம், இன்னும் வெளிப்படுத்துவோம். ஆனால் நாம் இதைச் செய்து அது வெறுப்பு, பகைமை, குரோதம் மற்றும் வெருண்டோடுதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றால், (இச்சந்தர்ப்பத்தில்) ஒரு மனிதர் காலணிகளை அணிந்து தொழுவதை விட (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதே மிகவும் முக்கியமானதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 🔗 https://youtu.be/Y8v47K6Vvk0?si=tOB3zsyGSeGtqBnW 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/mvfr4za4 🌐 வளைதளம்: salafiyyah.in
430
17
நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் h
நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் https://t.me/salafimaktabahmpm/1487
333
18
நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன்
நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன்
1
19
அசத்தியவாதிகளில் பலர் தங்களது உலக ஆதாயங்கள் சென்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே சத்தியத்தை (பின்பற்றாது) விட்டு விடுகின்ற
அசத்தியவாதிகளில் பலர் தங்களது உலக ஆதாயங்கள் சென்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே சத்தியத்தை (பின்பற்றாது) விட்டு விடுகின்றனர். இல்லையேல் அவர்கள் சத்தியத்தை அறிகின்றனர், இன்னும் அதனை (உண்மை என) நம்பிக்கை கொள்கின்றனர். - ஸுலைமான் இப்னு அப்தில்லாஹ் ஆலுஷ் ஷைஃக் رحمه الله 📖 அத்துரர் அஸ்ஸனிய்யாஹ் 8/124 T.me/salafirefutationstamil
343
20
➡️ மேலும் அவற்றிலே சில ஷிர்கிற்கு இட்டுச் செல்லும் காரணிகளிலிருந்து உள்ளவை: கப்ரின் மீது (கட்டிடங்களைக்) கட்டுவது, இன்னும் அதனிடத்தில் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வது போன்றவை. ➡️ மேலும் அவற்றிலே சில கொள்கைரீதியான பாவமானவை: தங்களின் கூற்றுகளிலும், நம்பிக்கைகளிலும் ஷரீ’அஹ்வின் ஆதாரங்களுக்கு மாற்றமான ஃகவாரிஜ், கதரிய்யாஹ் மற்றும் முர்ஜியாஹ்களின் பித்'அஹ்களைப் போன்றவை. ➡️ மேலும் அவற்றிலே சில (செயல்ரீதியான) பாவமானவை: துறவறம், சூரிய (வெயிலில்) நின்றபடி நோன்பு நோற்பது, இன்னும் உடலுறவின் இச்சையை துண்டிக்கும் நோக்கத்துடன் காயடிப்பது போன்ற பித்’அஹ்களாகும். 📖 அல்இர்ஷாத் இலா ஸஹீஹில் இஃதிகாத், பக்கம்: 321, 322 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/y9mpcf25 🌐 வளைதளம்: salafiyyah.in
424