en
Feedback
நமது மருத்துவர்

நமது மருத்துவர்

Open in Telegram

மக்களின் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து மருத்துவச் செய்திகளும் MBBS ,M.D, BSMS, M.D(S)& BDS மருத்துவர்களால் கீழ்க்கண்ட நமது மருத்துவர் எனும் நமது டெலகிராம் சேனலில் இடம் பெறும். தினந்தோறும் ஓரிரு முக்கிய செய்திகள் மட்டுமே இடம்பெறும்.

Show more
1 042
Subscribers
+124 hours
+47 days
+1330 days
Posts Archive
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை நான் ஆதரிப்பதில்லை. ஏன் ? டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் பலரும் "இனிப்பு" சேர்க்க வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் பக்கத்து வீட்டுகாரர் கூறினார் என்றும் வாக்கிக் நண்பர் கூறினார் என்றும் சீனி சேர்ப்பதை நிறுத்தி விட்டு தங்களுக்கு தோதாக நாட்டு சர்க்கரை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள் இது தவறென்று அவர்கள் உணர வேண்டும் நீரிழிவு நோயர்களைப் பொருத்தமட்டில் சீனி நாட்டு சரக்கரை பனங்கற்கண்டு கருப்பட்டி தேன் இனிப்பான பழங்கள் என்று அனைத்தும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக உயர்த்துபவையே இதில் சீனியும் நாட்டு சர்க்கரையும் கரும்பில் இருந்து வருபவையே எனவே இரண்டும் நீரிழிவு நோயரின் ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில் ஒன்று தான் என்று உணர வேண்டும் இதற்கடுத்த படியாக சுகர் ஃப்ரீ எனும் மாத்திரையை பொடியை பலர் பயன்படுத்தி வருகிறார்கள் சுகர் ஃப்ரீ தீவிரமாக ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில்லை என்றாலும் நமது மூளையில் இனிப்பு சுவை உருவாக்கும் போதை என்பது தொடர்ந்து சுகர் ஃப்ரீ உபயோகப்படுத்துபவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும் என்ன ? இனிப்பு சுவை போதையை உருவாக்குமா? ஆம்... ஒவ்வொரு முறை நாம் இனிப்பு சுவையை சுவைக்கும் போதும் மூளையின் ஊக்கமளிக்கும் மண்டலம் தூண்டப்பட்டு மறுமுறை இனிப்பு சுவையை விரும்பி உண்ணச் செய்கிறது. இதனால் நாம் இனிப்பு சுவை தரும் போதைக்கு அடிமையாகிறோம் எப்படி மது அருந்துபவர் கொகைன் கஞ்சா போன்றவற்றை எடுப்பவர் அந்த விசயங்கள் தரும் போதைக்கு அடிமையாகிறாரோ அதே போல் தான் இந்த இனிப்பும் செய்கிறது. இதனால் தான் சீனியை நிறுத்தச் சொன்னால் நம் மனம் நாட்டு சர்க்கரைக்குத் தாவுகிறது நாட்டு சர்க்கரையை நிறுத்தச் சொன்னால் பனங்கருப்பட்டிக்குத் தாவுகிறது அதையும் நிறுத்தச் சொன்னால் இறுதியில் சுகர் ஃப்ரீக்கு வருகிறது இப்படி சுகர் ஃப்ரீ போட்டு பருகுபவர்களுக்கு இந்த இனிப்பு சுவை மீது மூளைக்கு போதையும் அடிமைத்தனமும் இருந்து கொண்டே இருக்கும் எனவே எப்போதெல்லாம் இனிப்பான ஸ்வீட் (இனிப்புப் பண்டங்கள்) சாக்லேட்( இனிப்புக் கட்டி) ஐஸ்க்ரீம்( பனிக்கூழ்) அல்வா ( இனிப்புக் களி) போன்றவற்றைக் காணுங்காள் நாக்கு ஊறி மூளையில் உள்ள போதை மையம் தூண்டப்பட்டு அதை உண்பார்கள் கூடவே தேவைக்கு மீறியும் அரிசி கோதுமை போன்ற தானியங்களினால் செய்யப்பட்ட உணவுகளைக் குறைத்து உண்டாலும் நொறுக்குத் தீனி விசயத்தில் எல்லை மீறுபவர்களாக இருப்பார்கள் இவ்வாறு மாவுச்சத்து சார்ந்த இனிப்பு சார்ந்த விசயங்களை தொடர்ந்து அதிகமாக உண்ணச் சொல்லி மூளை உந்திக் கொண்டே இருப்பதை தான் "க்ரேவிங்" ( அடங்காத அவா) என்று அழைக்கிறோம் இத்தகைய க்ரேவிங்கை மனதால் கட்டுப்படுத்துவது கடினம் இந்த க்ரேவிங்கை வெகுவாகக் கட்டுப்படுத்திட முதன்முதலில் செய்ய வேண்டியது "இனிப்பு சுவை கொண்ட அனைத்தையும் முற்றிலும் ஒதுக்குவதாகும்" Complete Abstinence from Sweet Taste is the First Step Towards Diabetes Control . இன்னும் ஸ்டீவியா சுக்ராலோஸ் எரித்ரிடால் சைலிடால் அஸ்பார்டேம் உள்ளிட்ட சுகர் சப்ஸ்டிட்யூட்ஸ் சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணும் போது அதை உண்ணும் நீரிழிவு நோயர்களை அந்த உணவுகள் ஒரு வகையில் ஏமாற்றுகின்றன. இதனால் ஒரு அசட்டை எண்ணம் உருவாகிறது. இதை Complacence என்கிறோம். அதாவது சீனி போட்டு செய்த பதார்த்தமாக இருந்தால் இது சுகரை ஏற்றி விடும் என்று பயம் இருக்கும். எனவே 50 கிராம் மட்டுமே உட்கொள்ளும் இடத்தில், சுகர் ஃப்ரீ சேர்க்கப்பட்ட ஸ்வீட்டாக இருந்தால் மனதில் இது சுகரை ஏற்றாது என்ற எண்ணம் பதியப்பட்டு 500 கிராம் கூட எடுக்கும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் தாங்கள் சாப்பிட்ட ஸ்வீட் மாவுப்பொருளால் செய்யப்பட்டதை மறந்து அந்த மாவுச்சத்து உள்ளே சென்றால் சுகர் ஏறும் என்பதையும் மறந்து அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு உருவாகும். எனவே நீரிழிவு நோயர்கள் இன்றிலிருந்து தாங்கள் பருகும் தேனீரையோ ( டீ) கொட்டை வடிநீரையோ ( காபி) சீனி நாட்டு சர்க்கரை பனங்கற்கண்டு கருப்பட்டி சுகர் ஃப்ரீ தேன் என்று எதையும் கலக்காமல் பருகலாம் பாலில் கூட லாக்டோஸ் எனும் இயற்கையான இனிப்பு இருப்பதால் அடங்காத நீரிழிவு இருப்பவர்கள் பால் டீ பால் காபி பருகுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இனிப்பு சேர்க்காத ப்ளாக் டீ இனிப்பு சேர்க்காத ப்ளாக் காபி இனிப்பு சேர்க்காத க்ரீன் டீ என்று பருகுவது அவர்கள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும் மந்திரமாகும் இதைக் கூற எனக்குத் தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன் காரணம் நான் கடந்த பத்து வருடங்களாக இனிப்பு சுவை கொண்ட எதையும் உணவில் சேர்ப்பதில்லை நன்றி டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

DHINA TAMILAGAM 28.05.26 (5) (1).pdf

🩸 உலக மாதவிடாய் சுகாதார தினம் – 2026 📅 மே 28 | வியாழக்கிழமை Credits to தின தமிழகம் நாளிதழ் “மாதவிடாய்” என்பது பெண்களின் உடலில் இயல்பாக நடைபெறும் ஒரு ஆரோக்கியமான மாற்றம். அது ஒருபோதும் வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல… மறைக்கப்பட வேண்டியதுமல்ல… ❌ இந்த ஆண்டின் உலக மாதவிடாய் சுகாதார தினக் கருப்பொருள்: 🌍 “மாதவிடாய்க்கு உகந்த உலகத்திற்கான லட்சியக் களம்” இதன் நோக்கம்: ✔️ மாதவிடாய் குறித்து திறந்த உரையாடலை உருவாக்குதல் ✔️ மூடநம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்களை அகற்றுதல் ✔️ அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான மாதவிடாய் பொருட்கள் கிடைக்கச் செய்தல் ✔️ பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் மாதவிடாய்க்கு உகந்த சூழலை உருவாக்குதல் --- 🩺 மாதவிடாய் சுகாதாரம் ஏன் முக்கியம்? மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் உடல்நலத்தை பிரதிபலிக்கும் ஒரு “கண்ணாடி” போன்றது. அதில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். விழிப்புணர்வு தரும் நன்மைகள்: ✅ உடலைப் புரிந்துகொள்ள உதவும் ✅ தொற்று மற்றும் தோல் எரிச்சலைத் தவிர்க்க உதவும் ✅ பாதுகாப்பான மாதவிடாய் பழக்கங்களை உருவாக்கும் ✅ ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக இரத்தப்போக்கு, கடுமையான வலி போன்றவற்றை கவனிக்க உதவும் ✅ தேவையான நேரத்தில் மருத்துவரை அணுக உதவும் --- 🩸 ஆரோக்கியமான மாதவிடாய் பழக்கவழக்கங்கள் 🔸 சானிட்டரி நாப்கின்களை 4–6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள் 🔸 கைகளை சுத்தமாகக் கழுவிய பிறகே பொருட்களைப் பயன்படுத்துங்கள் 🔸 பருத்தி உள்ளாடைகள் அணியுங்கள் 🔸 மாதவிடாய் கோப்பைகள் / reusable pads ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்யுங்கள் 🔸 பயன்படுத்திய பொருட்களை பாதுகாப்பாக அகற்றுங்கள் 🔸 அதிக வலி, அதிக இரத்தப்போக்கு, துர்நாற்றம், ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள் --- 🌸 மௌனத்தை உடைப்போம்… விழிப்புணர்வை வளர்ப்போம்! 🏡 வீட்டிலேயே மாதவிடாய் குறித்து திறந்த மனதுடன் பேசுங்கள் 👧 இளம் பெண்களுக்கு சரியான சுகாதாரப் பழக்கங்களை கற்றுக்கொடுங்கள் 🏫 பள்ளி மற்றும் பணியிடங்களில் மாதவிடாய்க்கு உகந்த சூழலை உருவாக்குங்கள் 📱 சமூக ஊடகங்கள் மூலம் சரியான தகவல்களைப் பகிருங்கள் --- «🗣️ “மாதவிடாய் என்பது பெண்களின் உடல்நலத்தின் முக்கிய அங்கம். அதை மறைப்பதல்ல… புரிந்துகொள்வதே முக்கியம்.” — Dr. சுபத்ரா, PT, MD (OG), DNB, DRM மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்» «🩷 “மாதவிடாய் பற்றிய மௌனத்தைக் கலைப்போம்! பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மாதவிடாய் முறைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்!”» --- 🌺 பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்போம் 🌺 விழிப்புணர்வை பரப்புவோம் 🌺 ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் — நமது மருத்துவர் #MenstrualHygieneDay #MHDay2026 #WomenHealth #PeriodAwareness #MenstruationMatter

🦟 மலேரியா காய்ச்சல் – விழிப்புணர்வே பாதுகாப்பு! மலேரியா என்பது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு ஆபத்தான காய்ச்சல் நோயாகும். இது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனாபிலிஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. ⚠️ மலேரியாவின் முக்கிய அறிகுறிகள் ✅ காய்ச்சல் விட்டுவிட்டு வருதல் ✅ நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல் ✅ அதிக வியர்வை ✅ தீவிர தலைவலி ✅ உடல் சோர்வு இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 🩸 இலவச இரத்தப் பரிசோதனை & சிகிச்சை காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள 🏥 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 🏥 அரசு மருத்துவமனை சென்று இலவசமாக இரத்தப் பரிசோதனை செய்து, முழுமையான சிகிச்சை பெறுங்கள். 🚫 கொசுக்கள் உருவாகாமல் தடுப்போம் 🛑 மேல்நிலை / கீழ்நிலை நீர் தொட்டிகளை மூடி வைத்தல் 🛑 குடங்கள், பாத்திரங்கள் வாரம் ஒருமுறை சுத்தம் செய்தல் 🛑 மழைநீர் தேங்காமல் பாதுகாத்தல் 🛑 கிணறுகளை மூடி வைத்தல் 🛑 சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தல் 🛏️ கொசு கடியிலிருந்து பாதுகாப்பு ✔️ கொசு வலைக்குள் தூங்குங்கள் ✔️ ஜன்னல், கதவுகளுக்கு வலை பொருத்துங்கள் ✔️ மலேரியா பாதித்தவர்கள் கட்டாயம் கொசு வலை பயன்படுத்த வேண்டும் 🌿 “கொசுவை கட்டுப்படுத்தினால்… மலேரியாவைத் தடுக்கலாம்!” #MalariaAwareness #மலேரியா #PublicHealth #HealthAwareness #TamilNadu #NHM

🐝 உலகின் கடைசி தேனீ அழிந்தால்… மனித இனத்தின் நாளும் நெருங்கும்! “உலகின் கடைசி தேனீ அழிந்துவிட்டால், மனிதனுக்கு வாழ நான்கு ஆண்டுகள் கூட இருக்காது” என்ற எச்சரிக்கை வெறும் சொல்லல்ல… ஒரு சாத்தியமான எதிர்காலம்! 🌼 தேனீ – சிறிய உயிர், பெரிய பொறுப்பு ✅ அளவில் மிகச் சிறியவை… ஆனால் சூழலுக்கும், பசுமைக்கும் இன்றியமையாதவை. ஒரு விதையை விதைத்து உரமும் நீரும் கொடுத்து வளர்த்தாலும், அதைத் தேனீக்கள் அணுக முடியாதபடி வைத்தால் என்ன ஆகும்? 🌱 செடி வளரும்… ஆனால் பூ இல்லை! 🍎 பழம் இல்லை! 🌾 விதை இல்லை! அதாவது – இனப்பெருக்கமே இல்லை! 🌸 மகரந்தச் சேர்க்கை – வாழ்க்கையின் சங்கிலி தாவரங்கள் பெருகுவதற்கு மகரந்தச் சேர்க்கை அவசியம். 🔹 சில தாவரங்களில் சுய மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. 🔹 ஆனால் பெரும்பாலான தாவரங்கள் அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே வளர்கின்றன. செடிகள் நகர முடியாது. அவற்றுக்கு உதவுவது யார்? 👉 பூச்சிகள்! 👉 அதிலும் 90% பங்கு வகிப்பது – தேனீக்கள்! 🌍 தேனீக்கள் இல்லையெனில் என்ன ஆகும்? ⚠️ உலகில் சுமார் 2,50,000 தாவர இனங்கள் தேனீக்களைச் சார்ந்தே கருத்தரிக்கின்றன. ⚠️ உலகின் 35% உணவுப் பயிர்கள் தேனீ மகரந்தச் சேர்க்கையை நம்பியுள்ளன. ⚠️ 90% காட்டு மலர்கள் தேனீக்களின் உதவியால் வளர்கின்றன. தேனீக்கள் இல்லையெனில்: ❌ காய், கனி உற்பத்தி கடுமையாக குறையும் ❌ உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும் ❌ ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் ❌ உணவுப் பஞ்சம் உருவாகும் ❌ உலக பொருளாதாரம் பாதிக்கும் ❌ பருத்தி உற்பத்தி குறைந்து ஆடைத் துறை சிக்கலில் சிக்கும் மனிதன் உணவைத் தேடி அலையும் நிலை வரலாம்! 🚨 தேனீக்களின் வருகை ஏன் குறைகிறது? கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பல மாநிலங்களில்: 📉 தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காரணங்கள்: 🧪 அதிகப்படியான ரசாயன உரங்கள் ☠️ பூச்சிக்கொல்லி மருந்துகள் 🌳 இயற்கை வாழ்விடம் அழிவு 🌍 காலநிலை மாற்றம் “உற்பத்தி அதிகரிப்பு” என்ற பெயரில், நாம் இயற்கையை மெதுவாக அழித்து வருகிறோமா? 🐝 May 20 – உலக தேனீ நாள் (World Bee Day) தேனீக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த நாள். 🌿 நாம் என்ன செய்யலாம்? ✅ ரசாயனப் பயன்பாட்டை குறைப்போம் ✅ இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம் ✅ வீட்டுத் தோட்டங்களில் மலர் செடிகள் வளர்ப்போம் ✅ தேனீக்களை அழிக்காமல் பாதுகாப்போம் ✅ சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கையை கடைப்பிடிப்போம் 🐝 தேனீக்களை காப்பது = மனித இனத்தை காப்பது 🌎 இயற்கையை காப்பது = நம்மை காப்பது “ஒரு சிறிய உயிரை பாதுகாப்பது… ஒரு பெரிய உலகை பாதுகாப்பதற்கு சமம்.” நமது மருத்துவர் Dr S முத்துசாமி அரசு மருத்துவர் அரியலூர் பெரம்பலூர் #WorldBeeDay #SaveBees #SaveEarth #May20 #HoneyBee #NamathuMaruthuvar

file_00000000e02471fa9fdb176a3b946261~2.png3.82 KB

✅எந்தவித தொந்தரவும் இல்லை என்றாலும் வருடம் ஒருமுறை உங்கள் இரத்த அழுத்தத்தையும் இரத்தத்தின் சக்கரை அளவையும் கண்டிப்பாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ✅30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 5 பெண்களில் ஒருவருக்கும், ஒவ்வொரு 4 ஆண்களில் ஒருவருக்கும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளது #உலக_இரத்த_அழுத்த_தினம் #worldhypertensionday #hypertension #may17

சார்/மேடம், அனைவருக்கும் வணக்கம். 🙏🙏 இன்று *சர்வதேச கங்காரு தாய் பராமரிப்பு விழிப்புணர்வு தினத்தை( மே 15 )* முன்னிட்டு 12 பக்கங்கள் கொண்ட pdfயிணை உருவாக்கியுள்ளேன். நீங்கள் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ / மாவட்ட அரசு மருத்துவமனைகளிலோ / அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலோ குறை மாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இந்த pdf இணை அனுப்பினால், அவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் பொது மக்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இந்த pdfயினை தேவை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 🙏🙏

Kangaroo Mother Care - 2026-2.pdf

செவிலியர்களே மருத்துவமனையின் இதயம் போன்றவர்கள் அவர்கள் சரியாகத் துடிப்பதாலே இயங்குகின்றன மருத்துவமனைகள். செவிலியர்கள் இன்றி எந்த செயலையும் மருத்துவமனையில் செய்ய இயலாது நோயாளிகளை இன்முகத்துடன் அணுகி அவர்கள் தம் இன்னல் போக்கும் உன்னதப் பணியை நாள்தோறும் விருப்புடன் உவகையுடன் அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் எம் செவிலியச் சகோதரிகள் மது அருந்திவிட்டு வெறி கொண்டு வருபவர் எடுக்கும் துர்நாற்றம் தரும் வாந்தியையும் பொருட்படுத்தாமல் மருத்துவருடன் இணைந்து அவருக்குரிய சிகிச்சையை அளிப்பர் மது போதையில் அவர் ஏகவசனத்தில் தரும் ஏச்சு பேச்சுகளைப் பொருத்துக்கொண்டு எம் செவிலியர் பணிபுரிவர் இன்னும் பலர் செய்வது இன்னதெனத் தெரியாமல் எட்டி உதைப்பதில் பல நேரம் எம்முடன் சேர்ந்து அடி வாங்கிய செவிலயர்களையும் அறிவேன் ஒரு பக்கம் கர்ப்பம் பார்த்து விட்டு சோர்வுடன் வந்து அமர்ந்து ஒரு டீ பருகும் நேரம் பெரிய வாகன விபத்தில் வரிசையாக அடிபட்டு மக்கள் வர அவர்கள் அனைவரையும் சிகிச்சை அளித்து முடிக்கும் போது விஷம் அருந்தி ஒரு பள்ளி மாணவி வந்திருப்பாள் அவளுக்கு விஷ முறிவு மருந்துகள் கொடுத்து விஷத்தை வெளியே எடுத்து முடித்து அவளை மேல்சிகிச்சைக்கு அனுப்பி விட்டுப் பார்த்தால் இரவு கொள்ளைக்கு ஒதுங்கிய தாத்தா பாம்பு கடித்து வந்து விடுவார். அவருக்கு பாம்பு கடி விஷமுறிவு மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து விட்டு நேரத்தைப் பார்த்தால் இரவு உணவு சாப்பிடாமல் மணி பனிரெண்டு ஆகியிருப்பது தெரியும் வீட்டில் இருந்து கொண்டு  வந்த காய்ந்து போன தோசையை முழுதாக சாப்பிடும் முன் மீண்டும் மது அருந்தி வாகனம் ஓட்டி அடிபட்ட நபர் நுழைவார் இப்படித்தான் தங்களின் ட்யூட்டிகளில் ஓய்வின்றி செவிலியர்கள் பணிபுரிகிறார்கள் அவரவர் வீடுகளில் குடும்பத்தில் ஆயிரம் துன்பக்கதைகள் இருப்பினும் பணிக்கு வரும் சூழலில் ஆயிரம் இடற்பாடுகள் இருப்பினும் பணியில் இருக்கும் போது தன்னையே மறந்து அர்ப்பணித்து சேவையாற்றும் அன்பு உள்ளங்கள் செவிலியர்கள் தான் மருத்துவமனையை அன்பின் கூடமாக மாற்றுபவர்கள் நோயாளிகளுக்கு மருந்துடன் அன்பையும் கலந்து கொடுத்து நோய் குணமாகப் பாடுபடுபவர்கள் அத்தகைய செவிலியருக்கு பணிச்சூழல் பாதுகாப்பும் பணி இடங்களில் சிறப்பான வசதிகளும் குறிப்பாக கழிப்பறை வசதிகள் அத்துடன் அனைவருக்கும் சரிசமமான ஊதியம் போன்றவற்றை நாம் உறுதி செய்ய வேண்டும் மருத்துவத் துறையின் வளமான எதிர்காலம் செவிலியர்களின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது வாழ்க எம் செவிலயர்கள் வாழ்க அவர் தம் சேவை அனைத்து செவிலியர்களுக்கும் இனிய செவிலியர் தின வாழ்த்துகள் எனது சகோதர சகோதரிகள் தங்களுக்கு செவிலியர்களுடனும் அவர்தம் சேவை மூலம் விளைந்த நல்ல அனுபவம் இருப்பின் பகிர்ந்து கொள்ளவும் நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

தாவர உணவுகளில் வைட்டமின் பி12 கிடைப்பதில்லை என்பதால் வெஜிடேரியன் உணவுமுறையில் இருப்பவர்கள் தங்களின் உணவில் பால் மற்றும் பால் பொருட்களான யோக்ஹர்ட், சீஸ் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளலாம். பேரீச்சம் பழங்களில் உடலுக்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றை வெறும் சர்க்கரை மட்டுமே நிரம்பிய எந்த சத்தும் இல்லாத மிட்டாய்களுக்குப் பதிலாகவும் நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாகவும் தினசரி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அவற்றில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களுக்காக மகளிர் உட்கொள்வதும் சிறந்தது. எனினும் ரத்த சோகை குறைபாடுடையவர்கள் தங்களது இரும்புச்சத்து தேவைக்காக ஹீம் மற்றும் ஹீம் அல்லாத இரும்புச்சத்து நிரம்பிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதிகம் உண்பது மிகுந்த பலனளிக்கும். நன்றி இந்து தமிழ் மறையாத கட்டுக் கதைகள் - 4 Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

இந்த வகை இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் சதவிகிதம் ஹீம் அல்லாத இரும்புச்சத்தை விட அதிகமாகும். ஹீம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் - சுவரொட்டி - மட்டி கிளிஞ்சல் - ஈரல் - கால்நடை இறைச்சி 2. ஹீம் அல்லாத இரும்புச்சத்து தாவரம் சார்ந்த உணவுகளில் ஹீம் அல்லாத இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தாவர உணவுகளில் ஹீம் இரும்புச்சத்து இருப்பதில்லை. இந்த வகை, ஹீம் அல்லாத இரும்புச்சத்தை நமது உடல் கிரகித்துக் கொள்ளும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவாகும். எனவே, இரும்புச்சத்தை பெறுவதற்கு ஒப்பீட்டளவில் அதிகமான அளவில் நாம் தாவர உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதாவது, நூறு கிராம் கால்நடை கல்லீரலில் 10 மிகி ஹீம் இரும்புச்சத்து இருக்கிறது என்றால் அதே 100 கிராம் பேரீச்சம் பழத்தில் 1 மில்லிகிராம் ஹீம் அல்லாத இரும்புச்சத்து உள்ளது. ஒப்பீட்டளவில் பத்து மடங்கு குறைவாக உள்ளது என்பதை அறியலாம். மருத்துவப் பயனாளர்களைச் சந்திக்கும் போது கூட , இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்து கூறினால், அவர்களிடம் இருந்து தவறாமல் வரும் பதில் நான் தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருகிறேன் என்பதாக உள்ளது. பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருக்கிறது. ஆனால் அதை விட அதிகமாக உடலுக்கு நன்மை தரும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்து உள்ளது. கூடவே உடலுக்கு உகந்த பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவையும் அதிகமாக உள்ளன. ஆயினும் இரும்புச்சத்து என்றால் பேரீச்சம் பழம் என்ற பெயர் நிலைத்து விட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை ( நீரிழிவு மருத்துவப் பயனாளிகள், சிறுநீரக மருத்துவப் பயனாளிகள்) தவிர்த்து அனைவருமே தினசரி சில பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது நன்மையே ஆயினும் அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதாக நம்பி சாப்பிடுவது மூடநம்பிக்கையாகும். ஹீம் அல்லாத இரும்புச்சத்து நிறைந்த தாவர உணவுகள் தாமரைத் தண்டு வத்தல் ( நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பார்களா அறியேன்) அதாவது உலர்த்தப்பட்ட தாமரைத் தண்டில் செய்யப்பட்ட வத்தலில் நூறு கிராம் எடைக்கு 60 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. சுண்டக்காய் வத்தலில் நூறுகிராம் எடைக்கு 22 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. கோதுமை உமியில் நூறு கிராமிற்கு 10.6 மில்லி கிராம் இரும்புச்சத்தும், பூசணி விதையில் 8.8 மில்லி கிராமும், எள்ளு 7.8 மில்லி கிராம், கேழ்வரகில் 4 மில்லிகிராம், முருங்கைக் கீரையில் 4 மில்லிகிராம் என ஹீம் அல்லாத இரும்புச் சத்து நிறைந்துள்ளது. அனைவராலும் தினசரி மாமிசம் சார்ந்த உணவுகளை உண்பது என்பது நிதர்சனமில்லை. எனவே, தாவர உணவுகளாக இருப்பினும் சரியே. இரும்புச்சத்து நிறைந்த தாவர உணவுகளை தேர்ந்தெடுத்து அவற்றை அதிகமாக சாப்பிட்டு வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால், FERMENTATION எனும் நொதித்தலுக்கு உள்ளான உணவுகளில் இரும்புச்சத்தின் வீரியம் அதிகரிப்பது உண்மை. நூறுகிராம் சமைக்கப்பட்ட சோற்றில் 0.34 மிகி மட்டுமே இருக்கும் இரும்புச்சத்து 12 மணிநேரம் முதல் 24 மணிநேர நொதித்தலுக்குப் பின் பழைய சோற்றில் பத்து மடங்கு அளவில் கூடி 3.4 மில்லிகிராம் இரும்புச்சத்தாக மாற்றம் காண்கிறது. தங்களது உணவில் ஹீம் இரும்புச்சத்து நிரம்பிய உணவுகளையும் தாவரம் சார்ந்த ஹீம் அல்லாத இரும்புச்சத்து உணவுகளையும் தொடர்ந்து உட்கொண்டு வர வேண்டும். தாவரம் சார்ந்த இரும்புச்சத்து உட்கொள்ளும் போது அதனுடன் விட்டமின் சி நிரம்பிய பழங்களான கொய்யா, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி ஆகியவற்றையும் சேர்க்கும் போது இன்னும் சிறப்பாக இரும்புச்சத்து கிரகிக்கப்படுகிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் போது அதனுடன் ஃபைட்டிக் அமிலம் நிரம்பிய தானியங்கள், தேநீர், காபி, கால்சியம் அடங்கிய பால் பொருட்களை சாப்பிட்டால் இரும்புச்சத்து குறைவாகவே கிரகிக்கப்படும் என்பதையும் மனதில் கொள்க. இரும்புச்சத்து குறைபாட்டுக்கு உள்ளாகி ரத்த சோகை கண்டறியப்படுபவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரை மருந்துகளில் ஹீம் அல்லாத இரும்புச்சத்து இருப்பதால் , இரும்புச்சத்து மாத்திரையுடன் விட்டமின் சி மாத்திரையும் சேர்த்து பாவிப்பது நல்ல பலனைத் தரக்கூடும். இதுவன்றி, ரத்த சிவப்பு அணுக்கள் நல்ல முறையில் உருவாகவும் முதிர்ச்சி பெறவும் வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் அவசியமாகும். இவற்றின் பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகையை "மெகாலோ ப்ளாஸ்டிக் அனீமியா" என்று குறிப்பிடுகிறோம். வைட்டமின் பி12 - மாமிசம், முட்டை, மீன், பால் பொருட்களில் நிரம்பியுள்ளது.

இரும்புச்சத்துக்கு பேரீச்சம் பழம் மட்டும் போதுமா?? பொதுவாக சமூகத்தில் நிலவும் நம்பிக்கை யாதெனில், பேரீச்சம் பழங்கள் இரும்புச் சத்தை உயர்த்தி ரத்த சோகையை குணப்படுத்தும் என்பதாகும். பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பது உண்மை. எனினும், பேரீச்சம் பழங்கள் மட்டுமே சாப்பிட்டால் போதும்- ரத்த சோகை குணமாகும் என்பது மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டிய நம்பிக்கையாகும். பேரீச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்தை விட அதில் எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இதய நலனுக்குத் தேவையான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியமும் அதிகமாக உள்ளது. எனினும் ஏனைய பல இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவான இரும்புச்சத்து கொண்ட பேரீச்சம் பழம் "இரும்புச்சத்து அதிகம் கொண்டது" என்ற பெயர் பெற்று விட்டது. இக்கட்டுரையில் நாம் ரத்த சோகை என்றால் என்ன? இரும்புச்சத்தின் தேவை என்ன? உணவின் மூலம் கிடைக்கும் இரும்புச்சத்தின் இரண்டு வகைகள், இரும்புச்சத்து நிரம்பிய உணவுகள் குறித்தும் விரிவாகக் காண்போம். முதலில் ரத்த சோகை என்றால் என்ன? அதை எவ்வாறு உணவு மூலம் சரிசெய்வது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம். ரத்த சோகை நமது உடலில் சராசரியாக இருக்க வேண்டிய ரத்த சிவப்பு அணுக்களிலும் ஆக்சிஜனைக் கடத்தும் விகிதத்திலும் ஏற்படும் குறைபாட்டு நோய் "ரத்த சோகை" ( அனீமியா) எனப்படும். ரத்த சிவப்பு அணுக்களில் "ஹீமோகுளோபின்" எனும் புரதம் உள்ளது. இதில் ஹீம் எனும் இரும்புச்சத்தும், குளோபின் எனும் புரதச்சத்தும் இணைந்து உள்ளன. ஹீமோகுளோபினின் பணி நுரையீரலால் சுத்தீகரிக்கப்பட்ட ஆக்சிஜனை உடல் முழுவதும் ஏற்றிச் செல்லும் படகாக இந்த ஹீமோகுளோபின் செயல்படுகிறது. ஹீமோகுளோபின் நன்றாக இருந்தால் தான், சிவப்பு அணுக்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்க முடியும். ஹீமோகுளோபின் நன்றாக இருக்க வேண்டும் என்றால், இரும்புச்சத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இரும்புச்சத்தின் தேவை ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு உருவாவதற்கும், நான்கு இரும்புச்சத்து அணு தேவை. நம் உடலில் உள்ள ட்ரில்லியன் கணக்கான செல்கள் சுவாசிக்கவும், ஆற்றல் உருவாக்கத்திற்கும், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, புரதங்கள் உருவாக்கப்படுதல், மரபணுக்கள் வெளிப்படுதல் ஆகிய முக்கிய பணிகளுக்கு இரும்புச் சத்து இன்றியமையாததாகும். இரும்புச்சத்தை நமது உடலால் உருவாக்கிக் கொள்ள இயலாது என்பதால் நாம் நமது உணவின் மூலம் மட்டுமே இரும்புச் சத்தை அடைய முடியும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு நாறொன்றுக்கு 0.27 மிகி இரும்பும், மாதவிடாய் நிகழும் வயதில் இருக்கும் பெண்கள் 18 மிகி இரும்பும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், ஆண்களுக்கும் தினசரி 8 மிகி இரும்பும், கர்ப்பிணி பெண்களுக்கு 27 மிகி இரும்புச்சத்தும் தினசரி தேவையாக இருக்கிறது. ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 3 முதல் 4 கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. அதில் நான்கில் மூன்று பங்கு - ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், தசைகளில் உள்ள மயோகுளோபின் ஆகியவற்றில் அடங்கியுள்ளன. ஒட்டுமொத்த இரும்புச் சத்தில் 20-30% , ஃபெரிடின் மற்றும் ஹுமோசிடரின் எனும் புரதங்களாக பின்னாள் தேவைக்காக சேமிக்கப்படுகிறது. நாம் உணவில் உட்கொள்ளும் இரும்புச்சத்து சிறு குடல் பகுதியில் உறிஞ்சப்பட்டு, ட்ரான்ஸ்ஃபெரின் எனும் புரதம் மூலம் கடத்தப்பட்டு எலும்புகளின் மஜ்ஜையை அடைகிறது. அங்கே சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உபயோகிக்கப்படுகிறது. தேவைக்கும் மிகுதியான இரும்புச்சத்து கல்லீரலில் ஃபெரிடினாக சேமிக்கப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகை எப்போது ஏற்படுகிறது? - உணவு மூலம் தேவையான அளவு உட்கொள்ளாத போது - இரும்புச்சத்தின் தேவை அதிகமாக இருக்கும் போது ( கர்ப்பிணி, பாலூட்டும் அன்னை) - இரும்புச் சத்து அதிகமாக வெளியேறும் போது ( காயம் மூலம் உதிரப்போக்கு, மேற்கூறிய மூன்று காரணங்களில் "இரும்புச்சத்து குறைபாட்டு ரத்த சோகை" ( IRON DEFICIENCY ANEMIA) ஏற்படும். ரத்த சோகையின் அறிகுறிகள் - உடல் சோர்வு - சிந்தித்தல் திறன் குறைபாடு - எதிர்ப்பு சக்தி குறைபாடு - தலைசுற்றல் - சோம்பேறித்தனம் - நாக்கு வெளிறிப் போதல் சிறியவர் முதல் பெரியவர் வரை, குறிப்பாக மாதவிடாய் பருவத்து மகளிரும், கர்ப்பிணிகளும் பாலூட்டும் அன்னையரும் தினசரி தங்களது இரும்புச் சத்துக்கு உணவைச் சார்ந்தே இருக்கிறார்கள். இரண்டு வகையான இரும்புச்சத்து நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்குக் கிடைக்கும் இரும்புச்சத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. ஹீம் இரும்புச்சத்து 2. ஹீம் அல்லாத இரும்புச்சத்து ஹீம் இரும்புச்சத்து என்பது விலங்குகள் சார்ந்த உணவுகளான கால்நடை மாமிசம், கோழி இறைச்சி, மீன்களிடம் இருந்து கிடைக்கும்.