cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

The Seithikathir®

WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Show more
Advertising posts
15 110
Subscribers
-224 hours
+17 days
-3430 days
Posting time distributions

Data loading in progress...

Find out who reads your channel

This graph will show you who besides your subscribers reads your channel and learn about other sources of traffic.
Views Sources
Publication analysis
PostsViews
Shares
Views dynamics
01
அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் உருவெடுத்தவர் வி.கே.பாண்டியன் சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்து அக்கட்சி ஆட்சியை பாஜகவிடம் இழந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்
6391Loading...
02
புதிய அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல். 55க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்பு. மோடியின் 3வது அரசின் அமைச்சரவையில் தமிழகம் சார்பில் எல்.முருகனுக்கு மீண்டும் இடம். அமைச்சரவையில் இடம்பெற உள்ளோருக்கு பிரதமர் மோடி அளித்த தேநீர் விருந்தில் எல்.முருகன் பங்கேற்பு.
1 3504Loading...
03
2024-25 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை. மாணவர்களின் தனித்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சிக்கு தனியாக பாட வேளைகள் ஒதுக்கீடு. உணவு இடைவேளைகளில் சிறார் இதழ் வாசித்தல் மற்றும் புத்தக வாசிப்புக்கு தனியாக பாடவேளை அறிமுகம். 6 - 9ம் வகுப்பு வரை இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாடு உள்ளிட்ட தனித்திறனுக்கு பாடவேளைகள் ஒதுக்கீடு. 1 முதல் 3ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் அறிமுகம். மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 5 பாட வேளைகள் ஒதுக்கீடு. மாணவர்களின் தனித்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
1 5596Loading...
04
அருணாச்சல பிரதேச பிரச்சனையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திபெத்திய இடங்களின் பெயரை இந்தியா புதிதாக மாற்றுகிறது.
1 8202Loading...
05
தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் குரூப்4 எழுத்துத் தேர்வு தொடங்கியது. வி.ஏ.ஓ., வனக் காவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப்4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதிவருகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்4 தேர்வு நடைபெறுகிறது.
1 9141Loading...
06
*குறள் எண் : 1241 *பால் : காமத்துப்பால் *அதிகாரம் : நெஞ்சோடு கிளத்தல் *குறள் :* நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. *உரை : நெஞ்சமே! எதனாலும் தீராத (காதலால் வளர்ந்த) என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா? *English : O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady? தி ஆ ௨௦௫௫ விடை (வைகாசி-௩௦) தமிழ் வாழ்க
1 9243Loading...
07
டெல்லியில் இன்று மாலை நடைபெறும் விழாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி. இரவு 7.15 மணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரிசீயஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 9843Loading...
08
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதவுள்ளனர். தேர்வர்கள் காலை 8.30க்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதியில்லை. ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டுவரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 8932Loading...
09
• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 சாவைத் தான் தவிர்க்க முடியாது சஞ்சலத்தை தவிர்க்க முடியும். சிறு வயதில் எனக்கு தாய் தந்தையர்கள் சாவார்கள் என்று எண்ணும் போது தேகம் எல்லாம் நடுங்கும். ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள். 48 மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கி விட்டது. ஐயோ இது நடந்து விடுமோ என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு. நடக்கத்தான் போகிறது என்று முன்கூட்டியே முடிவு கட்டி விட்டால் அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது. தருமனும் அழுதான் பீமனும் அழுதான் ராமனும் அழுதான் ராவணனும் அழுதான் நெஞ்சத்தின் பதைப்பை கடன் பட்ட நெஞ்சம் என்றான் கம்பன். பட்ட கடன் ஒன்றானால் பத்திரத்தை தீர்த்து வாங்கிவிடலாம். ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும் வட்டி பாக்கி நிற்கிறது. மழை நின்று விட்டாலும் தூவானம் தொடர்கிறது. மரணபரியந்தம் மனம் தன் வித்தையை காட்டிக் கொண்டே இருக்கிறது. மனதுக்கு இப்படி எல்லாம் சுபாவங்கள் உண்டு என்று 20 வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டால் பிறகு வருவன எல்லாம் மாயையே என்று வைராக்கியம் பிறந்துவிடும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே. செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள். மனம் அங்காடி நாய் போல் அலைவதை அடக்குங்கள். சாகப் போகும் கட்டைக்கு சஞ்சலம் எதற்கு? செத்தார்க்கு நாம் அழுதோம். நாம் செத்தால் பிறர் அழுவார். அதோடு மறந்து விடுவார். மனதுக்கு நிம்மதியை கொடுங்கள். பகவான் கிருஷ்ணரின் காலடிகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குங்கள். இங்கே இருந்தாலும் அவர்தான் காரணம். அங்கே சென்றாலும் அவன் தான் காரணம். இங்கிருந்து அவன் கொண்டு போகும் தூதுவனுக்கு பேர்தான் மரணம். அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயிக்கட்டும்! ✅ அர்த்தம் உள்ள இந்து மதம்
2 1623Loading...
10
இன்றைய சிந்தனை: மனம் மனத்தை அங்காடி நாய் என்கிறார் பட்டினத்தார். கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகின்ற நாயைப் போல் மனமும் ஓடுகிறது என்றார். மனிதனின் துயரங்களுக்கெல்லாம் காரணம் மனம்தானே! பேயாய் உழலும் சிறு மனமே என்கிறார் பாரதியார். மனதின் ஊசலாட்டத்தை பற்றி அவரும் கவலை கொள்கிறார். பயப்படக்கூடிய விஷயங்களில் சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது. துணிய வேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது. காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்து போன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும் போது சக்தி என்று போய்விடுகிறது. பசுமையை கண்டு மயங்குகிறது! வறட்சியை கண்டு குமுறுகிறது! உறவினருக்காக கலங்குகிறது! ஒரு கட்டத்தில் மரத்துப் போய் விடுகிறது! ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது! ஆசாபாசங்களில் அலை மோதுகிறது! • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 விரக்தி அடைந்த நிலையில் தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்ளும் வலிமையை தன் கைகளுக்கு கொடுத்து விடுகிறது. கொலை ,திருட்டு ,பொய் ,இரக்கம், கருணை , பாசம் எல்லாவற்றுக்கும் மனமே காரணம். மனத்தின் இயக்கமே மனித இயக்கம். எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனத்துக்கு வரும்? எல்லாம் மாயையே என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும். கீதையில் கண்ணன் கூறுகிறான் "என்னை பரம் எனக் கொள்க. வேறொன்றில் பற்றையழித்து என்னை தியானித்து வழிபடுக. இறப்பும் பிறப்பும் ஆகிய கடலில் இருந்து உன்னை நான் கை தூக்கி விடுவேன்" நல்லது அப்படியே செய்து பார்ப்போம். ஆனாலும் முடியவில்லை. நெருப்புக்கு தப்புகிறோம். நீரில் மூழ்குகிறோம். நாய்க்கு தப்புகிறோம். நரியின் வாயில் விழுகிறோம். ஒன்றை மறந்தால் இன்னொன்று வருகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலை போட போய் வெற்றிலை போட்டுக் கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவது போல் மறக்க முயன்றவற்றை மறக்க முடியாமல் புதிய நினைவுகளும் புகுந்து கொண்டுவிடுகின்றன. கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனை சிறையில் தள்ளினார்களாம். அவன் சிறையிலிருந்து கொண்டே கள்ள நோட்டை தயாரித்தானாம். இனி அவனை எங்கே கொண்டு போய் தள்ளுவது? மனதுக்கு மனைவியை விட மற்றொருத்தி அழகாக தோன்றுகிறாள். கைக்குக் கிடைத்துவிட்ட மலரில் வாசம் தெரிவதில்லை. கிடைக்காத மலர்கள் கற்பனையில் எழுந்து மனத்தை இழுக்கின்றன. நிறைவேறிவிட்ட ஆசைகளில் மனது பெருமிதம் படுவதில்லை. நிறைவேறாத ஆசைகளுக்காகவே இது மரண பரியந்தம் போராடுகிறது. மகாலட்சுமியே மனைவியாக கிடைத்தாலும் சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும் ரசிகனைப்போல் உள்ளவற்றை விட இல்லாதன குறித்து மனம் ஏங்குகிறது. பிறர் புகழும் போது நெக்குருகிறது. இகழும் போது கவலைப்படுகிறது. ஓர் ஆயிரம் பின்னல்கள்! ஓர் ஆயிரம் சிக்கல்கள்! சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்குத் தான் தெரியும். இந்த சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத் தான் தெரியும். கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு. அலையில்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும் போது சலனம் இல்லாத மனம் ஒன்று உருவாகிவிடும். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பார்கள். எப்போது ஊற்றுவான் என்று மனம் ஏங்குகிறது! சலனமும் சபலமும் கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்? செத்துப்போன தன் குழந்தையை உயிர் மீட்டு தரும்படி புத்த தேவனிடம் ஒரு தாய் கெஞ்சினாளாம். சாவே நிகழாத வீட்டில் சாம்பல் எடுத்து வா மீட்டு தருகிறேன் என்று புத்தர் சொன்னாராம். தாய் நாடெல்லாம் அலைந்து சாவு நிகழாத வீடு இல்லையே என்றாளாம். இந்தக் கதையும் அதில் ஒன்றுதான் என்று கூறி புத்தர் அவளை வழி அனுப்பினார். கவலையே இல்லாத மனிதன் என்று ஒருவனை நான் பார்த்து விட்டால் நான் கவலைப்படுவதில் நியாயம் உண்டு. எனக்கு 100 என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அது வரைக்கும் நான் பாக்கியசாலி. அவனைவிட குறைவாகத்தான் இருக்கிறேன். எல்லாம் நிறைவேறி நிம்மதியாக உயிர்விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை. ஒருவனுக்கு துயரம் மனைவியால் வருகிறது. ஒருவனுக்கு மக்களால் வருகிறது. ஒருவனுக்கு நண்பனால் வருகிறது. ஒருவனுக்கு எதிரியால் வருகிறது. ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனாலோ வருகிறது. கடலில் பாய்மரக்கப்பல் தான் காற்றிலே தள்ளாடுகிறது. எதிலும் கெட்டிகாரனாக இருப்பவனுக்குதான் அடிக்கடி சஞ்சலம் வருகிறது. காகிதக் கப்பலுக்கு என்ன கவலை? மனம் காகிதம் போல மென்மையாக இருக்கட்டும். சுக துக்கங்கள் கோடை ,பனி, மழை அனைத்தையும் தாங்கட்டும். மனதுக்கு வருகின்ற துயரங்களை பரந்தாமனிடம் ஒப்படைத்து விடு. பிறர்க்கு தொல்லை இல்லாமல் உன் மகிழ்ச்சியை நீ அனுபவி.
2 1605Loading...
11
ஜூன் 14ஆம் தேதி கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என தீர்மானம் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு என முப்பெரும் விழா அரை மணி நேரம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி தீர்மானம் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நீட் தேர்வு விவகாரம் குறித்து, மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு கோரிக்கை நாடாளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க தீர்மானம்
2 1933Loading...
12
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது திமுக மக்களவை குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை திமுக மக்களவை குழு தலைவராக மீண்டும் டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு நீட் விவகாரத்தில் குரல் கொடுப்பது, நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மத்திய அமைச்சர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்க உள்ளார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்பு
2 3672Loading...
13
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு. டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம்.
2 3572Loading...
14
JUST IN: பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு. மக்களவைக் குழுத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படவுள்ளார்.
2 3882Loading...
15
நாளை 09.06.24 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்... 1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : 8:00 -8.30 மணி 2. சலுகை நேரம் : 9.00 மணி 3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : 9.00 மணி 4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : 9:15 மணி 5.தேர்வு தொடங்கும் நேரம் : 9:30 மணி 6.OMR விடைதாளினை முறையாக கையாள வேண்டும். 7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல் எழுதவும். 8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்... 9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. 10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்... 11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும். தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்... • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket) 👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4 👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID) தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்..... 👉1.அறை கண்காணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல் 👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது 👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது) 👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல். 👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள். 👉6.நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும் 👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்... 👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும். 👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்... 👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்...
2 48515Loading...
16
யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை என்றால் நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும். மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும். வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
2 3663Loading...
17
நீட் தேர்வில் குளறுபடியா? - கல்வித்துறை விளக்கம். நீட் தேர்வில் 720க்கு 718 மற்றும் 719 மதிப்பெண்களை மாணவர்களை பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை. 6 மையங்களில் கேள்வித்தாள் தவறாக வழங்கப்பட்டதால் 30 நிமிடங்கள் தாமதமாக தேர்வு தொடங்கியது. குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்பட்டதாக மாணவர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்றத்தின் ஆலோசனைப் படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரைப்படி கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது-நீட் தேர்வில் குளறுபடி குறித்து மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம். கருணை மதிப்பெண்கள் வழங்கியதால்தான் முழு மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. கருணை மதிப்பெண்களால்தான் 718, 719 என மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. நீட் தேர்வு குறித்த மாணவர்களின் புகார்களை விசாரிக்க குழு அமைப்பு; முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 6 தேர்வு மையங்களில் மட்டுமே பிரச்சனை என்பதால் மறு தேர்வு நடத்த வேண்டியதில்லை.
2 5805Loading...
18
டெல்லியில் கூடியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டம். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு. செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்ய தீர்மானம். தேர்தல் முடிவுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை.
2 4875Loading...
19
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு: மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவிற்காக மோடி, அமித் ஷா, நட்டா என பலர் வந்து தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர். திமுகவிற்கு அவர்கள் கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்; தனியாகவே பரப்புரை செய்தேன். 2014 தேர்தலுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 0.62% வாக்குகளை 2024இல் குறைவாகவே பெற்றுள்ளது. திமுக 2019இல் பெற்றதை விட 6.59% குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. ஆட்சி, அதிகாரம்தான் தேவையென்றால் தேசிய கட்சியுடன் சென்றிருப்போம், மாநில கொள்கையே முக்கியம். 2026 சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை. அதிமுகவிற்கு பின்னடைவு என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய். அதிமுக வளர்ந்துதான் வருகிறது; பாஜக பிரிந்து சென்றதால்தான் அதிமுகவிற்கு 1% வாக்குகள் அதிகரிப்பு. 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- எடப்பாடி பழனிசாமி. எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் பிரச்னை என திட்டமிட்டு பொய் பரப்பி குழப்பம் விளைவிக்க முயற்சி.
2 4884Loading...
20
*பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.* ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சென்னை கோட்டத்தை சேர்ந்த பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரெயில்களில் இவர் பணியாற்றி வருகிறார். இதேபோல் மகாராஷ்டிராவை சேர்ந்த நாட்டின் முதல் பெண் ரெயில் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
2 4166Loading...
21
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர் தர வரிசைப் பட்டியல் ஜூலை 10-ந்தேதி வெளியாகிறது. பொறியியல் படிப்பில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், 2024-2025-ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 6-ந்தேதி தொடங்கியது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு மாத காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த அவகாசம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. ஓட்டுமொத்தமாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் இணைய வழியில் விண்ணப்பத்தைப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்தார். இணையவழி விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே வெளியிட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 கால அட்டவணையின் படி, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும். இதைத்தொடர்ந்து ஜூன் 12-ந்தேதி ரேண்டம் நம்பர் எனப்படும் வாய்ப்பு எண் மாணவர்களுக்கு இணைய வழியில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு ஜூன் 13 முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வழியிலேயே நடைபெறும். ஜூலை 10-ந்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து விருப்பமான கல்லூரி மற்றும் பாட பிரிவைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்படும். • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
2 3817Loading...
22
நட்சத்திரம் வெடித்து சிதறுவதை வெறும் கண்களால் பார்க்கலாம். -விஞ்ஞானிகள் தகவல். பூமியிலிருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பில் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும் என்றும், அதை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானி ரெபெக்கா ஹவுன்செல் கூறும்போது, இது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு. இது நிறைய புதிய வானியலாளர்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார். டி கொரோனே பொரியாலிஸ் கடைசியாக 1946-ம் ஆண்டு வெடித்தது. அந்த வெடிப்புக்கு சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த அமைப்பு திடீரென மங்கலானது. அதேபோல் கடந்த ஆண்டு டி கொரோனே பொரியாலிஸ் அமைப்பு மீண்டும் மங்கலானது. இது ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும், அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர் • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
2 3304Loading...
23
டி20- ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து. டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி. அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 75 ரன்களில் ஆல் அவுட் ஆன நியூசிலாந்து அணி, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. ஆப்கான் அணியின் கேப்டன் ரஷீத் கான், ஃபசல்ஹக் ஃபாரூக்கி தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்; நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 18 ரன்கள் எடுத்தார்.
2 5134Loading...
24
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்பனை.
2 4657Loading...
25
*இன்றைய புத்தக மொழி* 08/06/24 📚📚📚🌹📚📚📚 முரண்பாட்டை ஆழமாகப் புரிந்து கொள்ளும் போது தான் நெறியுள்ள வாழ்க்கை சாத்தியமாகும். இந்த புரிதல் தான் நுண்ணறிவு. இந்த நுண்ணறிவு தான் சரியாகச் செயல்படுவது. - ஜே. கிருஷ்ணமூர்த்தி - 📚📚📚🌹📚📚📚
2 6929Loading...
26
*குறள் எண் : ௧௨௪௦ (1240) *பால் : காமத்துப்பால் *அதிகாரம் : உறுப்புநலன் அழிதல் *குறள் : கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. *உரை : அவளின் ஒளியுள்ள நெற்றி, பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது! *English : Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad? தி ஆ ௨௦௫௫ விடை (வைகாசி-௨௬) தமிழ் வாழ்க
2 6417Loading...
27
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு. நாளை மறுநாள் (ஜூன்9) இரவு 7.15 மணிக்கு 3ஆவது முறை பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி. பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு - குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
2 8864Loading...
28
மூன்றாவது முறையாக சேவை செய்ய, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர் வாய்ப்பு வழங்கிய நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை இதயபூர்வமான நன்றி - பிரதமர் மோடி கடந்த 2 முறை ஆட்சி காலத்தில், ஒவ்வொரு துறையிலும் தேசம் முன்னேற்றப் பாதையில் சென்றது 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளும் அதே வேகத்துடனும் தீர்மானத்துடனும் பணியாற்றுவோம் - பிரதமர் மோடி. அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை வழங்குமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார் - பிரதமர் மோடி
2 9022Loading...
29
Media files
2 8223Loading...
30
கடலூர் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் பில் கலெக்டர் கைது. செல்வம் என்பவரிடம் சொத்து வரி வரி நிர்ணயம் செய்ய 50,000 லஞ்சம் கேட்டு இன்று முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தபோது கைது. லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் பில் கலெக்டர் லட்சுமணன் ஆகிய இரண்டு பேரும் கைது. கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் அதிரடி.
2 8766Loading...
31
Media files
2 8062Loading...
32
BREAKING: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, 3வது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார்.
2 8532Loading...
33
மத்திய அரசின் இலவச போட்டித்தேர்வுப் பயிற்சி- ஜூலை 17இல் நுழைவுத்தேர்வு. மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு. நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு. நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 23 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு 6 மாத உறைவிட பயிற்சி தரப்படும்.
2 8266Loading...
34
தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி உயர்வு - மோடி கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வருங்காலத்திலும் பாஜகவின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். ஜெகன்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிஷாவில் பாஜக ஆட்சி தொடரும் - NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு. அடிமட்டத்தில் இருந்து இறங்கி உழைத்ததால்தான் இவ்வளவு வலுவான கூட்டணி சாத்தியமானது. காற்று கூட உள்நுழைய முடியாத அளவிற்கு கூட்டணிக்குள் ஒற்றுமை இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும். 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேர்தல் காலங்களில் பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி தான் பெண்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கி இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கு பாஜக தலைமையிலான அரசு எப்போதும் முக்கியத்தும் அளித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மதிப்பார்கள் என நம்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் காலங்களில் EVM இயந்திரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பிய எதிர்க்கட்சியினர் தற்போது அமைதி காத்து வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கவே ஈவிஎம் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி - NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு இந்தியாவின் ஜனநாயகம் பாதிக்கப்படுவதாக வெளிநாடுகளுக்கு சென்று சிலர் குற்றம் சாட்டினர். NDA கூட்டணியின் எண்ணிக்கையே சொல்கிறது எங்கள் பலம் எப்படி என்று.
2 9463Loading...
35
"தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பா.ஜ.கவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது" - மோடி
2 7792Loading...
36
"என்டிஏ தலைவர் - எனது அதிர்ஷ்டம்" "பாஜக கூட்டணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தை படைக்கும்" "என்டிஏ தலைவராக தேர்வு செய்து புதிய பொறுப்பை வழங்கியது என்னுடைய அதிர்ஷ்டம்" - மோடி
2 8233Loading...
37
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
10Loading...
38
ஜூன் 24-ல் சட்டப்பேரவை கூட்டம். ஜூன் 24ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்- சபாநாயகர் அப்பாவு.
2 8293Loading...
39
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
2 7683Loading...
40
JUST IN: நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்வு. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடியை ராஜ்நாத் முன்மொழிந்ததை அமித்ஷா வழிமொழிந்தார். மோடியின் பெயர் முன்மொழியப்பட்டபோது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
2 7152Loading...
Photo unavailableShow in Telegram
அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் உருவெடுத்தவர் வி.கே.பாண்டியன் சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்து அக்கட்சி ஆட்சியை பாஜகவிடம் இழந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்
Show all...
👍 16👎 2😁 1
00:39
Video unavailableShow in Telegram
புதிய அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல். 55க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்பு. மோடியின் 3வது அரசின் அமைச்சரவையில் தமிழகம் சார்பில் எல்.முருகனுக்கு மீண்டும் இடம். அமைச்சரவையில் இடம்பெற உள்ளோருக்கு பிரதமர் மோடி அளித்த தேநீர் விருந்தில் எல்.முருகன் பங்கேற்பு.
Show all...
IMG_0830.MOV13.40 MB
👍 30👎 14😁 2
Photo unavailableShow in Telegram
2024-25 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை. மாணவர்களின் தனித்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சிக்கு தனியாக பாட வேளைகள் ஒதுக்கீடு. உணவு இடைவேளைகளில் சிறார் இதழ் வாசித்தல் மற்றும் புத்தக வாசிப்புக்கு தனியாக பாடவேளை அறிமுகம். 6 - 9ம் வகுப்பு வரை இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாடு உள்ளிட்ட தனித்திறனுக்கு பாடவேளைகள் ஒதுக்கீடு. 1 முதல் 3ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் அறிமுகம். மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 5 பாட வேளைகள் ஒதுக்கீடு. மாணவர்களின் தனித்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
Show all...
👍 9
Photo unavailableShow in Telegram
அருணாச்சல பிரதேச பிரச்சனையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திபெத்திய இடங்களின் பெயரை இந்தியா புதிதாக மாற்றுகிறது.
Show all...
26🤣 6🔥 5👍 4🤔 1
Photo unavailableShow in Telegram
தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் குரூப்4 எழுத்துத் தேர்வு தொடங்கியது. வி.ஏ.ஓ., வனக் காவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப்4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதிவருகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்4 தேர்வு நடைபெறுகிறது.
Show all...
👍 12😱 2👎 1
*குறள் எண் : 1241 *பால் : காமத்துப்பால் *அதிகாரம் : நெஞ்சோடு கிளத்தல் *குறள் :* நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. *உரை : நெஞ்சமே! எதனாலும் தீராத (காதலால் வளர்ந்த) என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா? *English : O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady? தி ஆ ௨௦௫௫ விடை (வைகாசி-௩௦) தமிழ் வாழ்க
Show all...
👍 5🥰 2
Photo unavailableShow in Telegram
டெல்லியில் இன்று மாலை நடைபெறும் விழாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி. இரவு 7.15 மணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரிசீயஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Show all...
👍 40👎 30 2
Photo unavailableShow in Telegram
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதவுள்ளனர். தேர்வர்கள் காலை 8.30க்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதியில்லை. ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டுவரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Show all...
👎 5🔥 4👍 1
• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 சாவைத் தான் தவிர்க்க முடியாது சஞ்சலத்தை தவிர்க்க முடியும். சிறு வயதில் எனக்கு தாய் தந்தையர்கள் சாவார்கள் என்று எண்ணும் போது தேகம் எல்லாம் நடுங்கும். ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள். 48 மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கி விட்டது. ஐயோ இது நடந்து விடுமோ என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு. நடக்கத்தான் போகிறது என்று முன்கூட்டியே முடிவு கட்டி விட்டால் அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது. தருமனும் அழுதான் பீமனும் அழுதான் ராமனும் அழுதான் ராவணனும் அழுதான் நெஞ்சத்தின் பதைப்பை கடன் பட்ட நெஞ்சம் என்றான் கம்பன். பட்ட கடன் ஒன்றானால் பத்திரத்தை தீர்த்து வாங்கிவிடலாம். ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும் வட்டி பாக்கி நிற்கிறது. மழை நின்று விட்டாலும் தூவானம் தொடர்கிறது. மரணபரியந்தம் மனம் தன் வித்தையை காட்டிக் கொண்டே இருக்கிறது. மனதுக்கு இப்படி எல்லாம் சுபாவங்கள் உண்டு என்று 20 வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டால் பிறகு வருவன எல்லாம் மாயையே என்று வைராக்கியம் பிறந்துவிடும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே. செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள். மனம் அங்காடி நாய் போல் அலைவதை அடக்குங்கள். சாகப் போகும் கட்டைக்கு சஞ்சலம் எதற்கு? செத்தார்க்கு நாம் அழுதோம். நாம் செத்தால் பிறர் அழுவார். அதோடு மறந்து விடுவார். மனதுக்கு நிம்மதியை கொடுங்கள். பகவான் கிருஷ்ணரின் காலடிகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குங்கள். இங்கே இருந்தாலும் அவர்தான் காரணம். அங்கே சென்றாலும் அவன் தான் காரணம். இங்கிருந்து அவன் கொண்டு போகும் தூதுவனுக்கு பேர்தான் மரணம். அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயிக்கட்டும்! ✅ அர்த்தம் உள்ள இந்து மதம்
Show all...
The Seithikathir | WhatsApp Channel

The Seithikathir WhatsApp Channel. WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. • India's Most Trusted News Brand! • Fast, Simple, Accurate.! • Established: 07/10/2014 STAY UPDATED WITH POSITIVE NEWS! THE SEITHIKATHIR was launched in 2014 to create a space for fair, non-hyphenated and probing journalism. Extensive ground reporting, sharp opinion and in-depth analysis are our central propositions. As an independent media platform, we do not take advertisements from governments and corporate houses. It is you, our readers, who have supported us on our journey to do honest and unbiased journalism. WE THANK YOU FOR YOUR TRUST IN US. 14K followers

👍 16🤔 5 4

👍 9🙏 2 1