en
Feedback
Useful Tips Tamil - M SRI

Useful Tips Tamil - M SRI

Open in Telegram

🤗 பயனுள்ள குறிப்புகள் 🤗 சமையல், அழகு, மருத்துவ குறிப்புகள், மேலும் பல வகையான குறிப்புகளைப் பெறலாம்...! Help-Request & More @MSRI_Editz_bot ☞Subscribe Support us ☟ https://www.youtube.com/c/MSRIEditz

Show more
914
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
Repost from MaKi Sri Links
👆 மறைந்த செல்வி ஜெயலலிதா வின் நடிப்பில் Top 50 பாடல்கள் தொகுப்பை சேமிக்க & பகிர்ந்து கொள்ள Pay செய்து இணைந்து கொள்ளுங்கள் ச
👆 மறைந்த செல்வி ஜெயலலிதா வின் நடிப்பில் Top 50 பாடல்கள் தொகுப்பை சேமிக்க & பகிர்ந்து கொள்ள Pay செய்து இணைந்து கொள்ளுங்கள் சிறப்பு உறுப்பினர்கள் Channel லில் 👇 https://rigipay.com/g/MovCnNPtRn 👆 Special Telegram Channel Link 🤩 ⪢┈ᗘ Maki Special ᗛ┈⪡

Repost from MaKi Sri Links
⪢┈ᗘ Maki Special ᗛ┈⪡ 🔊 M SRI Speaker Box 🔊 நாள்தோறும் ( அதிகாலை 3:00 AM ) கார்த்திகை மாத சிறப்பு ஐயப்பன் பக்தி பாடல்கள் தொகுப்பு ( மார்கழி மாத சிறப்பு திருப்பாவை & திருவெம்பாவை Mp3 Coming soon ) மற்றும் மாலையில் (5:30 pm) Superhits திரைப்பட பாடல்கள் தொகுப்பை சேமிக்க & பகிர்ந்து கொள்ள Pay செய்து இணைந்து கொள்ளுங்கள் சிறப்பு உறுப்பினர்கள் Telegram Channel லில் 👇 https://rigipay.com/g/MovCnNPtRn 👆 This Link 🔗 Special Telegram Channel 🤩 ⪢┈ᗘ Maki Special ᗛ┈⪡

sticker.webp0.12 KB

*சர்க்கரை நோயாளிகளை அடக்கி ஆளும் பிஸ்தா!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டால் பிரச்சினை வரும் என்று வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் உண்மை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொழுப்பு சத்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பாதாம், பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்றும் குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் பசி உணர்வைக் கட்டுபடுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும் தன்மை அதற்கு உள்ளது என்றும் அதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தா சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ஆனால் அதே நேரத்தில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 கிராம் வரை தினமும் பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தாவை எடுத்துக்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

*தேங்காய் எண்ணெய் உங்கள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* தேங்காய் எண்ணெய் உங்கள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடை குறைப்பு, டயட் பிளான்கள், வறண்ட சருமத்தில் இருந்து பாதுகாப்பது மற்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளது. ’சூப்பர்ஃபுட்’ என்று அழைக்கப்படும் தேங்காய் எண்ணெய் குறித்த நன்மைகளை தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் என்பது நீங்கள் காணக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அதனாலேயே இது ‘சூப்பர்ஃபுட்’ என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உணவில் தேங்காய் எண்ணெய்யை அடிக்கடி சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தில் பல நல்ல தாக்கங்களை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெய் உங்கள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய்யை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. உடல் பருமனாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யில் உள்ள உணவு கொழுப்புகள் உங்கள் எடையை குறைக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இது மற்ற வகை உணவுக் கொழுப்புகளை விட உடலில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடி கொட்டுவதில் இருந்தும் முடி சேதமடைவதிலிருந்தும் பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் ஒரு சன்ஸ்கிரீனாக செயல்பட்டு சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களில் சுமார் 20 சதவிகிதத்தை தடுத்து நம்மை காக்கிறது. மேலும் பலர், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த காஸ்மெட்டிக் நோக்கங்களுக்காக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். தேங்காய் எண்ணெய் வறண்டசருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி, தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு உள்ளடக்கம் இருக்கின்ற போதிலும், கொலஸ்ட்ரால் அளவை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது. உண்மையில், தேங்காய் எண்ணெய்யில் இயற்கையான நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது உடலில் HDL எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், LDL எனும் கெட்ட கொழுப்பிலிருந்து விடுபட உதவுகிறது.

*மஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. அறிகுறிகள்: சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம். வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம். ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம். சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம். சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

*எலும்பை வலிமையாக வைத்திருக்க உதவும் எருமைப்பால்!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* பசுவின் பாலுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அதிகம் உட்கொள்ள படக்கூடிய பால் எருமை பால். இந்தியாவும், சீனாவும் உலக அளவில் 80% எருமைப் பாலை உற்பத்தி செய்கிறது. அதைத்தொடர்ந்து சீனா, எகிப்து மற்றும் நேபாளம் அதிக அளவு எருமைப் பாலை உற்பத்தி செய்கிறது. பசுவின் பாலை போலவே எருமைப்பாலில் அதிக ஊட்டச் சத்து அடங்கியுள்ளது. மிக முக்கியமாக வெண்ணை, தயிர், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருள்களை தயாரிக்க எருமைப்பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எருமைப் பாலில் அதிக அளவு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ காணப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது எருமைப்பால். எருமைப் பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. கால்சியம் இரத்த நாளங்களை மீள்தன்மையுடன் வைத்திருப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்த அபாயத்தை தடுக்க உதவுகிறது. இது சீரான ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. மற்ற பால் வகைகளை ஒப்பிடும் பொழுது எருமைப்பாலில் கொலஸ்ட்ரால் குறைவு. இது உங்களுடைய இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. எருமைப்பால் எலும்பை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. இதில் கால்சியம் அதிக அளவு உள்ளது. மேலும் எருமைப்பாலில் தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்து உள்ளது. இது நம்முடைய எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. பசும்பாலை விட எருமைப்பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க இது உதவும். இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது எருமைப்பால். இதில் பொட்டாசியம் காணப்படுகிறது. இது ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை விரிவுபடுத்துகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.

*​தேன் வெங்காயம் செய்வது எப்படி?* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது. போதுமான தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் அதிகப்படியான கேஜட்ஸ் பயன்பாடு, மாறிவிட்ட வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு என சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாவற்றின் காரணமாகஏற்படுகிற இன்சோம்னியா பிரச்சினையை சின்ன வெங்காயம் தீர்க்கும் தன்மை கொண்டது. சின்ன வெங்காயம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. குறிப்பாக, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் உ்ணடாகிற மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லைஈ நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும். பொதுவாகவே நெஞ்சு சளி அதிகமானால் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு விட்டு வெந்நீர் குடிக்கச் சொல்வது, சின்ன வெங்காயத்தின் சாறெடுத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிடச் சொல்வது போன்றவற்றை நம் முன்னோர்கள் காலங்காலமாக செய்து வந்தது தான். நாம் அதைப் பின்பற்றாமல் விட்டுவிட்டோம். நெஞ்சு சளியால் அவதிப்படுகிறவர்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பாக தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால், ஓரிரு நாட்களில் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி வாய் அல்லது மலத்தின் வழியேவெளியேறிவிடும். இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச்சதையைக் குறைக்கும். ஒரு சுத்தமாக பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய (அப்போதுதான் தேனுடன் ஊறும்) சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும். இரண்டு நாட்கள் அப்படியே ஓரமாக, கைபடாமல் எடுத்து வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். நீங்கள் வைத்ததை விட சற்று நீர்த்துப் போயிருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறியிருக்கும். இதை தினமும் காலையில் வெறும் சாப்பிட்டு வர நிறைய பலன்கள் கிடைக்கும்.

*அதிக இனிப்பு பழங்கள் தவிர மற்ற அனைத்து பழங்களையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும் நிலையில் ஒரு சில பழங்கள் தவிர அனைத்து பழங்களையும் சாப்பிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல என்றும் அது ஒரு குறைபாடு என்றும் முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அந்த குறைபாட்டை வென்று விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பு துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும் அதிக இனிப்பு பழங்களை மட்டும் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெல்லிக்காய், மாங்காய், நாவல் பழம் உள்ளிட்ட உணவுகளில் புளிப்பு, துவர்ப்பு சுவை உள்ளதால் இவைகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம் அதேபோல் பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளதால் இவற்றையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். அதிக இனிப்பு பழங்கள் தவிர மற்ற அனைத்து பழங்களையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம் என்றும் பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரி அல்ல என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

*உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ் கலமன்சி!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* கலமன்சி சிறிய அளவில் எலுமிச்சை போல காணப்படக்கூடிய ஒரு பழம். இது கலமண்டின், பிலிப்பைன் எலுமிச்சை, கோல்டன் லைம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் முக்கியமாக பிலிப்பைன்ஸில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த பழம் இயற்கையாகவே நல்ல புளிப்பு சுவை கொண்டது. பாரம்பரிய பிலிப்பினோ உணவு வகைகளில் கலமன்சி பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது நம்முடைய ஊர்களிலும் அதிகம் இது காணப்படுகிறது. இதை இங்கு குட்டி ஆரஞ்சு எனக்கு சொல்கிறார்கள். இந்த ஜூஸை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் விரைவில் வெளியேறும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், லிமோனின், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது, சருமத்தை அழகாக்குகிறது, கொழுப்பை குறைக்கிறது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது, நோய்த்தொற்றுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்தப் பழம் உங்களுடைய சருமத்தை அழகாக்க கூடியது. இதில் இருக்கக்கூடிய அமில உள்ளடக்கம் உங்களுடைய முகம் மற்றும் உடலில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், முகப்பரு வடுக்கள் போன்றவற்றை நீக்கும் குணம் கொண்டது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்களுடைய சரும செல்களை புத்துயிர் பெற செய்கிறது. தோலின் நிறத்தை அதிகரிக்கிறது. உடலில் இருக்கக்கூடிய சுருக்கங்களைப் போக்குகிறது. இந்தப்பழம் கொலாஜன் உற்பத்திக்குஉதவுகிறது. இது நம்முடைய உடல் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு வகையான திசுக்களை இணைக்கும் முக்கிய கட்டமைப்பு கொண்ட புரதம். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது வைரஸ்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. இந்த பழத்தில் இருக்கக்கூடிய சிட்ரிக் அமிலம் உங்களுடைய சுவாச அமைப்பில் இருக்கக்கூடிய சளியை வெளியேற்றுகிறது. மேலும் இது சுவாசக்குழாய் மற்றும் தொண்டையில் ஏற்படக்கூடிய வீக்கங்களை குறைக்கவும் உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், இன்சுலின், கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இந்தப்பழம் உங்களுடைய உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. மிக முக்கியமாக சிறுநீரகங்கள், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை போன்ற உறுப்புகளில் இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது இந்த பழம். இந்த பழ ஜூஸை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பழச்சாறைநீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது உங்களுடைய குடல் இயக்கம் அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு அந்த பிரச்சினை குறையும். உடலில் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தைப் போக்க கூடியது இந்த பழச்சாறு. தொடர்ந்து இந்த பழச்சாறை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடலில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் நீங்கும். உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது பாக்டீரியாக்கள். இந்த சாற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உடலில் நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது. அதுபோல குளிக்கும்போது இந்த பழச்சாறு கலந்த தண்ணீரை நீங்கள் குளிக்கும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட துர்நாற்றம் எல்லாம் நீங்கி உடல் நல்ல நறுமணத்தோடு இருக்கும். இந்த பழச்சாறு தொடர்ந்து குடித்து வரும்பொழுது நீரிழிவு நோய் குறையும். இது உடலில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதுபோல இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் நீரிழிவு நோய் பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பழச்சாற்றை குடித்து வரும்போது இந்த பிரச்சனை நீங்கும்.

*தினமும் காலையில் ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..?* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. வேர்க்கடலை ஊற வைத்து சாப்பிடுவதை சிலர் தவிர்க்கலாம். ஆனால் அப்படி சாப்பிடச் சொல்வதற்கு பின்னால் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..? வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கொட்டைகள் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம். வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து உங்களைப்பாதுகாக்கும். வேர்க்கடலையின் இந்த கார்டியோ-பாதுகாப்பு பண்புகள் நீண்ட காலத்திற்கு இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இடுப்பு மற்றும் முதுகு வலி : நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெல்லத்துடன் வேர்க்கடலையை ஊறவைக்கவும். பின் அதை சாப்பிடுவதால் முதுகு வலியை போக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது : வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது. வேர்க்கடலையை வாரத்திற்கு மூன்று முறை, எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும், புற்றுநோய் அபாயத்தை 58 சதவீதம் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எடை குறைக்க உதவுகிறது :வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல கலவை என்பது தெரியுமா? இந்த ஊட்டச்சத்துக்களால், வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும். இது, அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. அவற்றை அளவாகச் சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும். செரிமானம் அதிகரிக்கும் : வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எரிச்சலூட்டும் குடல் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும். அதற்கு நீங்கள் தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட செரிமானப் பிரச்னை ,குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.