en
Feedback
Useful Tips Tamil - M SRI

Useful Tips Tamil - M SRI

Open in Telegram

🤗 பயனுள்ள குறிப்புகள் 🤗 சமையல், அழகு, மருத்துவ குறிப்புகள், மேலும் பல வகையான குறிப்புகளைப் பெறலாம்...! Help-Request & More @MSRI_Editz_bot ☞Subscribe Support us ☟ https://www.youtube.com/c/MSRIEditz

Show more
914
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
*தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன…?* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* வெள்ளரிகாயில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. நீர்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டால் தோல் ஆரோக்கியமாக இருக்கும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கும். வெள்ளரிக்காய் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கும். வெள்ளரி துண்டை கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்தால் கண்கள் குளிர்ச்சியடையும். வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடப்பதற்கு உதவுகிறது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதில் இருக்கும் சத்துகள் அடிக்கடி பசியெடுக்கும் உணர்வை கட்டுப்படுத்தி நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

*மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்ககளா?* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* ரத
*மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்ககளா?* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது. மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.

*நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும். உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும். அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெய்யில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும். ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம். வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும். எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும். ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம். பல் வலிக்கும் நேரத்தில் ஆலம்மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும். ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும். ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

*மணம் தரும் ஆரோக்கியமான மூலிகை மரிக்கொழுந்து!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* மணம் தரும் அற்புதமான மூலிகை மரிக்கொழுந்து. ஆரோக்கியத்தை தரும் இது, பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. நோய் கிருமிகளை தடுக்கிறது. வலியை போக்குகிறது, வீக்கத்தை வற்ற செய்கிறது. மன அழுத்தத்தை போக்கும் ஒன்றாக விளங்குகிறது. மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, நல்லெண்ணெய், சுக்குப்பொடி. *செய்முறை* : ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி இளஞ்சூடாக தலையில் பற்றாக போட்டுவர தலைவலி சரியாகும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் தைலம் தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:* மரிக்கொழுந்து, தேங்காய் எண்ணெய். *செய்முறை* : ஒரு பாத்திரத்தில்தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுது சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்திவர தோல்நோய்கள் குணமாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை வலியையும் போக்க கூடிய தன்மை உடையது. அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. உள், வெளி மருந்தாகவும், விஷத்தை முறிக்க கூடியதாக மரிக்கொழுந்து விளங்குகிறது.மூச்சிரைப்பை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். *தேவையான பொருட்கள்:* துத்தி பூக்கள், பால். *செய்முறை* : சாலையோரங்களில் கிடைக்கும் துத்தி பூக்கள் சுமார் 15 எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து காய்ச்சி இனிப்பு கலந்து குடித்துவர ஆஸ்துமா என்கிற மூச்சுமுட்டுதல், மூச்சிரைப்பு நாளடைவில் குணமாகும்.

*விஷ்ணு கிராந்தி மூலிகையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* வயல், வரப்பு, நடைபாதை போன்ற இடங்களில் காணப்படும் ஒரு மூலிகை தான் விஷ்ணு கிராந்தி. இது பல மருத்துவ குணம் நிறைத்தது. இந்த விஷ்ணு கிராந்தியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். விஷ்ணு கிராந்தி மூலிகையை சாப்பிடுவதால் அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் காய்ச்சல் விலகி போகும். இளைத்த சருமம் கொழுகொழுப்பாய் மாறும் மற்றும் கண்பார்வை, சுவாசத்தை சீராக்கும். விஷ்ணுகிராந்தியை மூலிகையை வேரோடு எடுத்து தினமும் நெல்லிக்காய் அளவு எடுத்து, பாலில் அரைத்து சாப்பிட்டால் மறந்து போன நினைவுகள் திரும்பவும் வரும். விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நோய் குணமாகும். விஷ்ணு கிராந்தி இலையை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியாகும். சீதபேதி குணமாக விஷ்ணு கிராந்தி வேர், இலை, தண்டு, பூ என அனைத்தையும் அரைத்துக் பாக்கு அளவு தயிரில் கொடுக்க குணமாகும். விஷ்ணு கிராந்தி செடியைகாயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உடல் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும். டெங்கு காய்ச்சல் குணமாக சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப்பொடியை விஷ்ணுகிராந்தி வேர்- 6, கீழாநெல்லி வேர்- 6, ஆடாதொடை இலை- 8 ஆகிய மூலிகைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இந்த மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு இதை ஒரு லிட்டராகச் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து பருகலாம். இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அளவும் சிறியவர்களுக்கு 50 அளவும் குழந்தைகளுக்க 5 மில்லி அளவும் கொடுக்கலாம். இதனை தினமும் மூன்று வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாமல் தீராத காய்ச்சலும் குறையும்.

*படர்தாமரையை விரைவில் குணப்படுத்த உதவும் நாட்டு மருத்துவம் நாகமல்லி!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* வெள்ளை நிறத்தில் பூக்களையும், கனகா மர செடியின் இலைகளை போல இலைகளையும் கொண்டது தான் நாகமல்லி மூலிகை. இது பரவலாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இது காடு, புதர்கள் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. இதன் இலை, வேர், பூ என அனைத்து பகுதிகளும் மருத்துவப் பயன் கொண்டது. இது கண்நோய், வண்டு கடி, தேள் கடி, நாள்பட்ட தோல் நோய் போன்றவை குணமாகும். பழங்காலம் முதலே சித்தர்கள் பயன்படுத்தி வந்த மூலிகைகளில் ஒன்று தான் நாகமல்லி . இதன் மருத்துவ நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாகமல்லியின் வேர், விதை போன்றவற்றை எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்து கரப்பான், படர்தாமரை மற்றும் அக்கிள் போன்ற இடங்களில் ஏற்படும் அரிப்பு போன்ற நோய்களுக்கு இதனை அரைத்து வெளிப்பூச்சாக பூசி வந்தால் எளிதில் குணமடையும். பாம்பின் பெயரை கொண்டு தொடங்கும் இந்த மூலிகையை விஷப் பாம்பு கடித்து விட்டால் இதன் இலையை மென்று சாற்றை குடித்து வந்தால் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள்இதன் இலையை அரைத்து மூட்டின் மேல் பூசிவந்தால் மூட்டு வலி நீங்கும். நாகமல்லி மூலிகை வயிற்றுப் பூச்சிகளை நீக்குவது மட்டுமல்லாமல் மலச்சிக்கலைப் போக்கி பசியை தூண்டி விடுகிறது. நாகமல்லியின் வேரினை நிழலில் காயவைத்து அதனை பொடிசெய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து தூங்க செல்லும் செல்லும் முன் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். நாம் அனுதினமும் சாப்பிடும் உணவுகளில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருக்கின்றன. இந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது இதில் இருக்கும் பூச்சிகள் நம் வயிற்றில் வளர ஆரம்பிக்கின்றன. உண்ணும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகின்றன. இதை போக்க நாகமல்லியின் இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரை அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

*உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பப்பாளி!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* பப்பாளி பழத்தை நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பப்பாளி பழம் பிரபலாமாக அறியப்படுகிறது. ஆனால், பச்சை பப்பாளி பழத்தை பற்றி நீங்கள் ஏதேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பச்சை பப்பாளி அல்லது பழுக்காத பச்சை பப்பாளி பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட உணவாகும். இது வெப்பமண்டல நாடுகளுக்கு சொந்தமான சிறிய வற்றாத தாவரமான கரிகா பப்பாளியிலிருந்து பெறப்படுகிறது. வைட்டமின்கள், புரதங்கள், பைட்டோநியூட்ரிய ண்ட்கள் மற்றும் பப்பேன் மற்றும் சைமோபபைன் போன்ற என்சைம்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காயம்-குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது மற்றும் மலச்சிக்கலுக்கு உதவும் போது ஒரு பயனுள்ள செரிமான உதவியாக செயல்படுகிறது. இன்று, பச்சை பப்பாளியின் பல ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். பச்சை பப்பாளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது புளித்த மாவுச்சத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது இறுதியில் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக (ப்ரீபயாடிக்) மாறும். அதனால், ஆரோக்கியமான குடலைப் பெற பச்சை பப்பாளி மேலும் உதவுகிறது. உங்கள் அருகாமையில் உள்ளவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால், பச்சை பப்பாளி இலைகளின் சாற்றை அவர்களுக்குக் கொடுங்கள். இந்த காய்ச்சலின் போது கடுமையாக வீழ்ச்சியடையும் வெள்ளை இரத்த அணுக்களின் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க இது உதவும். இருப்பினும், இந்தக் கோட்பாட்டை நிரூபிக்க இன்னும் குறிப்பிட்ட ஆய்வு/ஆராய்ச்சி எதுவும் இல்லை. பச்சை பப்பாளியில் பல ஆரோக்கியமான என்சைம்கள்உள்ளன. அவை உங்கள் வயிற்றை திறம்பட சுத்தப்படுத்துகின்றன மற்றும் நச்சு இல்லாத செரிமான செயல்முறையை உங்களுக்கு வழங்குகின்றன. மேலும், பப்பாளி குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஏனெனில் இது ஒட்டுண்ணி எதிர்ப்பு மற்றும் அமீபிக் எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் இதன் மூலம், நமது இரைப்பை அமைப்பு ஆரோக்கியமற்ற வாயுவை சேகரிக்க அனுமதிக்காது. பச்சை பப்பாளியில் பல முக்கியமான தாதுக்கள் உள்ளன மற்றும் இது உடலில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது. இந்த தாதுக்கள் இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது வகை 2 நீரிழிவு நோய்க்கு காரணமான முக்கிய நொதிகளுக்கு எதிராகவும் செயல்படும். ஆதலால், இவை உங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. பச்சை பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் பாலூட்டி சுரப்பிகளை உருவாக்கி, மார்பகத்தை மேம்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் வைட்டமின் ஏ உள்ளடக்கம் கருப்பை ஈஸ்ட்ரோஜன் மற்றும் பெண் ஹார்மோன்களின் சுரப்பைத் தூண்டுகிறது. பச்சை பப்பாளி இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கிறது மற்றும் உடலில்உள்ள சோடியம் உள்ளடக்கத்தை சரிபார்க்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை பப்பாளியில், பக்கவாதம் அல்லது மாரடைப்பை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பச்சை பப்பாளி உணவு பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலியைக் குறைக்க உதவுகிறது. பழுக்காத பப்பாளியை உட்கொள்வதால் கருப்பையின் தசைகள் எளிதாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட மாதவிடாய் ஓட்டத்திற்காகவும் சுருங்குகிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யவும் உதவுகிறது. பச்சை பப்பாளியானது ஒட்டுண்ணிகளுக்கு எதிரானது மற்றும் அமீபிக் எதிர்ப்பு தன்மை கொண்டது. இதனால் குடல் இயக்கத்தை சீராக்க முடியும். இதன் விளைவாக மலச்சிக்கல், அஜீரணம், அமில ரிஃப்ளக்ஸ், அல்சர், நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை பிரச்சனைகளை எளிதாக சரிசெய்ய முடியும்.

*பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உங்களுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. எனவே, 2 அல்லது 3 மட்டுமே சாப்பிட வேண்டும். இதனை நேரடியாக சாப்பிடுவதை விட குழம்பு, ரசம் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம். பூண்டில் அதிக சத்துக்கள் இருந்தாலும் அதனை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்ள கூடாது. பூண்டை தோள் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டால் அதன் கெட்ட வாசனை அகலும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. காலை உணவுக்கு பின்பு பூண்டு சாப்பிடுவது நல்லது. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது சிலருக்கு அலர்ஜி, செரிமான கோளாரு, வயிற்றுப்போக்கு, வாந்தி என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பூண்டை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் பூண்டை சமைக்கும் போது அதில் உள்ள அலிசின் என்ற சத்து அழிந்துவிடும். எனவே பூண்டை பச்சையாக கடித்து சாப்பிட்டாலோ அல்லது இடித்து சாப்பிட்டாலோ அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். பூண்டில் ஒரு அடர்த்தியான வாசனைஏற்படும். சிலருக்கு இந்த வாசனை பிடிக்கவே பிடிக்காது. அதனால் பூண்டின் மருத்துவ குணம் அடங்கிய மாத்திரையை சாப்பிடுவர். ஆனால் பூண்டை நேரடியாக சாப்பிடும் சத்துக்கு இந்த மாத்திரை ஈடாகாது. அதனால் மாத்திரை, பவுடர், பேஸ்ட் போன்ற வடிவத்தில் சாப்பிடாமல் நேரடியாக பூண்டு சாப்பிடுவது நல்லது. பாஸ்பரஸ் கேஸ் பூண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே, தான் பூண்டில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறது. அவ்வாறு நாற்றம் ஏற்படும் போது பூண்டை நம்மால் பச்சையாக சாப்பிட முடியாது. அதனால் பூண்டை லேசாக சுட்டோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் அதில் உள்ள கெட்ட நாற்றம் முழுமையாக அகலும்.

*சுண்டக்காய் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா?* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எனவே சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியடையும். சிலருக்கு பசி உணர்வு குறைவாக இருக்கும். இவர்கள் சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும். சுண்டைக்காய்களை காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும். சுண்டைக்காய்களை குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும். எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும். பச்சையான இளம்சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும். மேலும் சுண்டக்காய் குழம்பு, வதக்கல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.

*சுக்குவின் சிறப்பான மருத்துவ குணங்கள்!!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்குத் தூளை பயன்படுத்தி தேனீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையின் அளவை குறைத்து, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. லேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எனவே, எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த சுக்கு பற்றுப் போடக் கூடாது. மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த சுக்கு மல்லி காபி செய்வது எப்படி…? சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்குமிகச் சிறந்த மருந்து. மூன்று சிட்டிகை சுக்குத்தூளைத் தேனில் குழைத்து, உணவுக்குப் பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட்டுவர, தலைவலி காணாமல் போய்விடும். கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கும் பயணத்தின்போதும், மலைப் பயணத்தின்போதும் குமட்டல் ஏற்படும். அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்து. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையைமென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்குத் தூளை பயன்படுத்தி தேனீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையின் அளவை குறைத்து, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. லேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எனவே, எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த சுக்கு பற்றுப் போடக் கூடாது. சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்மிகச் சிறந்த மருந்து. மூன்று சிட்டிகை சுக்குத்தூளைத் தேனில் குழைத்து, உணவுக்குப் பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட்டுவர, தலைவலி காணாமல் போய்விடும். கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கும் பயணத்தின்போதும், மலைப் பயணத்தின்போதும் குமட்டல் ஏற்படும். அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்து.

*முருங்கைக் கீரையின் பயன்கள் உங்களுக்காக..!* *பகிர்வு:* *༄⋆⃝❤இராஜலிங்கம்༄⋆⃝❤* முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும். முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும். முருங்கை இலைகளை நெய்யில்வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும். மேலும் ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. அவர்கள், முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன. எனவே குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது முருங்கைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.