SLG STUDIES
Kanalga Telegram’da o‘tish
Science Logic Guts by S. Saravana Kumaran IRS EETY FOUNDATION MADRAS 1976 (EDUCATION EMPLOYMENT TRANSFORMATION FOR YOUTH)
Ko'proq ko'rsatish6 865
Obunachilar
-124 soatlar
+17 kun
+1830 kun
Postlar arxiv
6 865
📚 TNPSC முக்கிய குறிப்புகள்இன்றைய தலைப்பு: இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் (Attorney General of India) ⚖️ இந்திய அரசின் மிக உயர்ந்த சட்ட அதிகாரியே தலைமை வழக்கறிஞர் ஆவார். 🎯 முக்கிய அரசியலமைப்புப் பிரிவுகள்: * பிரிவு 76 – இந்தியத் தலைமை வழக்கறிஞர். * பிரிவு 88 – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசவும் பங்கேற்கவும் உரிமை. * பிரிவு 165 – மாநிலத் தலைமை வழக்கறிஞர் (Advocate General). 📌 TNPSC தேர்வுக்கான முக்கியத் தகவல்கள்: * தலைமை வழக்கறிஞரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். * உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். * குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ளவரை பதவியில் நீடிப்பார். * இந்திய அரசுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவார். * நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசலாம்; ஆனால் வாக்களிக்க முடியாது. * தலைமை வழக்கறிஞர் மத்திய அமைச்சரவையின் உறுப்பினர் அல்ல. * இவர் இந்திய அரசின் முதன்மை சட்ட அதிகாரி ஆவார். 🧠 எளிய நினைவுக் குறிப்பு: 76 – மத்திய தலைமை வழக்கறிஞர் 165 – மாநிலத் தலைமை வழக்கறிஞர் 88 – நாடாளுமன்றத்தில் பங்கேற்கும் உரிமை 🌟 TNPSC கவனம்: இந்தியத் தலைமை வழக்கறிஞர் தனது சட்டப் பணிகளை நிறைவேற்றும்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகும் உரிமை பெற்றுள்ளார்.
25 Noy, 10:10
6 865
அரசு துறைகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனத்தை OMCL மூலம் தொடங்கியது தமிழக அரசு! முதற்கட்டமாக டாஸ்மாக்கில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம்!
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தற்காலிக பணிகளுக்கு ஆட்களை வெளிப்படையான முறையில், அரசு நிறுவனம் மூலமாகவே எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஓ.எம்.சி.எல் (Overseas Manpower Corporation Limited) நிறுவனம் மூலம் தற்காலிக பணியாளர்களை எடுக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை முதற்கட்டமாக டாஸ்மாக்கில் செயல்படுத்தும் பணியை தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ளது. டாஸ்மாக்கில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு OMCL நிறுவனம் மூலம் ஆட்களை நியமிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை!
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், டாஸ்மாக்கில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் சில காலியாக இருப்பதால், அலுவலகப் பணிகள், பதிவேடுகள் பராமரிப்பு, கடிதப் போக்குவரத்து, சரக்கு மேலாண்மை பணிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே உண்மையான பணித் தேவையின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கைக்கு மிகாமல், தற்காலிக பணியாளர்களை எடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள்?
முதற்கட்டமாக கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு OMCL மூலம் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்:
- தட்டச்சர் (Typist) - மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் 1, மூத்த மண்டல மேலாளர் அலுவலகத்தில் 1, பறக்கும் படை அலுவலகத்தில் 1
- அலுவலக உதவியாளர் (Office Assistant)- மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் 1, மூத்த மண்டல மேலாளர் அலுவலகத்தில் 1, பறக்கும் படை அலுவலகத்தில் 1, கிடங்குகளில் 2
- *ஓட்டுநர் (Driver)- மூத்த மண்டல மேலாளர் அலுவலகத்தில் 1, பறக்கும் படை அலுவலகத்தில் 1
- காவலர் (Watchman) - மூத்த மண்டல மேலாளர் அலுவலகத்தில் 2, கிடங்குகளில் 4
இந்த பணியிடங்கள் அனைத்தும் அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் தான். அதற்கு மேல் கூடுதலாக யாரும் எடுக்கப்பட மாட்டார்கள் என்றும் சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறையால் என்ன பயன்?
இதுவரை தற்காலிக ஆட்கள் தேவைப்பட்டால், ஒவ்வொரு அலுவலகமும் தனித்தனியாக ஆட்களை எடுத்து வந்தது. இதில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தது. இனி அந்த நிலை மாறும்.
1. வெளிப்படையான நியமனம்: இனி தற்காலிக பணியாளர்கள் அனைவரும் அரசின் சொந்த நிறுவனமான OMCL மூலம் மட்டுமே எடுக்கப்படுவார்கள். இடைத்தரகர் தலையீடு இருக்காது.
2. உரிய ஊதியம் உறுதி: பணியாளர்களுக்கு சம்பளம், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய கணக்கீட்டின் அடிப்படையில் தான் வழங்கப்படும். ஊதியம் குறைக்கப்படாது.
3. தகுதி சரிபார்ப்பு: ஆட்களை எடுப்பதற்கு முன், அவர்களது கல்வித் தகுதி, பணி அனுபவம், நன்னடத்தை சான்று ஆகியவை முறையாக சரிபார்க்கப்படும். தகுதியானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.
4. முறையான கணக்கு வழக்கு: ஊழியர்களின் மாதாந்திர வருகை பதிவேட்டின் அடிப்படையில் வருகை விவரங்கள் தொகுக்கப்பட்டு OMCL-க்கு அனுப்பப்படும். OMCL வழங்கும் Invoice அடிப்படையில் தான் மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். இதனால் கணக்கில் எந்த குழப்பமும் இருக்காது.
5. பணிகள் தடையின்றி நடக்கும்: காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால், கோப்புகள் தேங்காது, கிடங்குகளில் சரக்கு மேலாண்மை, பாதுகாப்பு பணிகள் சீராக நடக்கும். மக்களுக்கான சேவை வேகமாகும்.
அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை
டாஸ்மாக்கில் தொடங்கியுள்ள இந்த OMCL முறை, மற்ற துறைகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக தேவைக்கு ஆட்களை விரைவாகவும், வெளிப்படையாகவும், முறையாகவும் எடுப்பதற்காகவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேவைப்படும் அலுவலகங்கள், அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியில் உள்ளோர், காலிப்பணியிடங்கள், எடுக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் விவரத்தை தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் டாஸ்மாக் அலுவலக பணிகள் இனி எந்த தடையும் இல்லாமல், வேகமாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 Noy, 05:15
6 865
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! TNPSC துறைத் தேர்வுகள் டிசம்பர் 2026 அறிவிப்பு வெளியானது! விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2026! தேர்வு ஜனவரி 31 முதல்! மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), *
துறைத் தேர்வுகள், டிசம்பர்-2026 க்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை எண்: 13/2026*
விளம்பர எண்: 749*
அறிவிக்கை நாள்: 25.11.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2026 அன்று இரவு 11.59 மணி வரை
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு, பணி வரன்முறைக்கு மிக முக்கியமான இந்த துறைத் தேர்வுகளுக்கு, விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
தேர்வு எப்போது? எப்படி?
- கணினி வழியிலான கொள்குறி வகை தேர்வுகள் (40% / 60% / 80% / 100%):* *31.01.2027 முதல் 04.02.2027 வரை* (5 நாட்கள் / 10 அமர்வுகள்)
- *விரிந்துரைக்கும் வகை தேர்வுகள் (20% / 40% / 60% / 100%): 5.02.2027 முதல் 08.02.2027 வரை (4 நாட்கள் / 8 அமர்வுகள்)
- தேர்வு நேரம்:* காலை 9.30 முதல் நண்பகல் 12.00 வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 5.00 வரை
அதாவது மொத்தம் 9 நாட்களுக்கு*
தேர்வுகள் நடைபெறும்.
யார் விண்ணப்பிக்கலாம்? என்ன செய்ய வேண்டும்?*
1. ஒருமுறைப் பதிவு அவசியம்: துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் *ஆதார் எண்ணை* கட்டாயமாக துறைத் தேர்வுக்கான ஒருமுறைப் பதிவுடன் இணைக்க வேண்டும்.
2. பெயர், பிறந்த தேதி மாற்றம்: பெயர், தலைப்பெழுத்து, தகப்பனார் பெயர், பிறந்த தேதி, பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் மாற்றம் தேவைப்பட்டால், முதலில் ஒருமுறைப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
3. *கடைசி நாள் வரை திருத்தலாம்:* விண்ணப்பிக்க இறுதி நாள் வரை, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை திருத்த அனுமதிக்கப்படுவர். ஆனால் ஒரு தேர்வுக் குறியீட்டு எண்ணிற்கு விண்ணப்பதாரர் விண்ணப்ப தொகையை செலுத்தியிருந்தால், அந்த தேர்வுக் குறியீட்டு எண்ணை அவர் நீக்கும் பட்சத்தில், அதற்குரிய தேர்வுக்கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது.
4. *கடைசி நாளுக்கு பின் மாற்றம் கிடையாது:* விண்ணப்பிக்க இறுதி நாளிற்கு பின்னர் தேர்வுக் குறியீட்டு எண் / தேர்வு மையம் / பெயர் / தந்தை பெயர் / வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே மிகுந்த கவனத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வுக் கட்டணம் எவ்வளவு?
- *ஒவ்வொரு தேர்விற்கும்:* தேர்வுக் கட்டணமாக *ரூ.200/-*
- *பதிவுக் கட்டணமாக:* *ரூ.30/-*
- மொத்தம் *ரூ.230/-* இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே செலுத்தலாம். பிற வகைகளில் செலுத்தப்படும் கட்டணங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
கட்டணம் செலுத்தும் போது "Back" அல்லது "Refresh" பொத்தான்களை இயக்காமல் காத்திருக்க வேண்டும் என்று TNPSC எச்சரித்துள்ளது. இல்லையெனில் பணப்பரிமாற்றம் தடைபடும் அல்லது இரண்டாம் முறையாக பணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். ஒரு தேர்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் செலுத்தியிருப்பின் அத்தேர்வுக்கட்டணம் திருப்பி வழங்கப்படமாட்டாது.
*தேர்வு மையங்கள் எங்கே?*
துறைத் தேர்வுகள் கீழ்க்காணும் மையங்களில் நடைபெறும்: சென்னை (001), கோயம்புத்தூர் (002), கடலூர் (003), தருமபுரி (004), திண்டுக்கல் (005), ஈரோடு (006), காஞ்சிபுரம் (007), கரூர் (009), மதுரை (010), நாகப்பட்டினம் (011), நாமக்கல் (012), உதகமண்டலம் (013), பெரம்பலூர் (014), புதுக்கோட்டை (015), இராமநாதபுரம் (016), சேலம் (017), சிவகங்கை (018), தஞ்சாவூர் (019), தேனி (020), திருவள்ளூர் (021), திருவண்ணாமலை (022), திருவாரூர் (023), தூத்துக்குடி (024), திருச்சிராப்பள்ளி (025), திருநெல்வேலி (026), வேலூர் (027), விழுப்புரம் (028), விருதுநகர் (029), அரியலூர் (030), கிருஷ்ணகிரி (031), திருப்பூர் (032), செங்கல்பட்டு (033), கள்ளக்குறிச்சி (034), இராணிப்பேட்டை (035), தென்காசி (036), திருப்பத்தூர் (037), மயிலாடுதுறை (038), கன்னியாகுமரி (119), புதுடில்லி (175).
ஹால் டிக்கெட் எப்போது?
விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வாணைய இணையதளத்தில் தங்களது நுழைவுச்சீட்டினை 25.01.2027 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
25 Noy, 05:12
6 865
10-ம் வகுப்பு படிச்சா போதும்! மாதம் ரூ.58,500 வரை சம்பளம் - கிராம ஊராட்சி செயலாளர் வேலைக்கு டிச.4 முதல் விண்ணப்பம் ஆரம்பம், இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.இப்பணியிடம் Level 2 பிரிவின் கீழ் வரும் நிலையில், சம்பள விகிதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் மாவட்டங்களில் உள்ளவாறு நிரப்பப்படும் என்றும், இனசுழற்சி விவரங்களும் மாவட்டங்களில் உள்ளவாறு பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பைப் பொறுத்தவரை, 01.07.2026 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசாணை நிலை எண்.68, மனிதவள மேலாண்மை துறை, நாள் 30.10.2026-ன்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 35 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் ஆகியோருக்கு 18 முதல் 37 வரையும், ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 முதல் 40 வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயதிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பும், முன்னாள் இராணுவ வீரர் பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 50 வரையும், முன்னாள் இராணுவ வீரர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், ஆதி திராவிடர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 முதல் 55 வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் போன்ற பிரிவினருக்கு ஏற்கனவே எந்த அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் இராணுவ வீரர் மேற்கண்ட வயதுச் சலுகையை பெற இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.100/- ஆகவும், ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை முற்றிலும் ஆன்லைன் வழியிலேயே நடைபெறும். இணையவழியில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 04.12.2026 ஆகும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 18.12.2026 இரவு 11.59 மணி ஆகும். விண்ணப்ப படிவம் tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கால அட்டவணையின்படி, காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் 15 நாட்கள், 04.12.2026 முதல் 18.12.2026 வரை நடைபெறும். ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஊராட்சிகளில், தற்போதைய 1:5 தெரிவுப் பட்டியல் தக்கவைக்கப்பட்டு, புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களில், அப்பட்டியலின் கடைசி விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்ணிற்கு இணையாகவோ அல்லது மதிப்பெண் கூடுதலாகவோ பெற்றவர்கள் சேர்க்கப்படுவர். புதிதாக சேர்க்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் உரிய இடஒதுக்கீட்டு இனசுழற்சியின்படி விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். நேர்காணலுக்கான அழைப்பு 05.01.2027 அன்று அனுப்பப்படும். நேர்காணல் 19.01.2027 முதல் 21.01.2027 வரை 3 நாட்கள் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் 25.01.2027 அன்று வெளியிடப்படும். பணி நியமன ஆணை 27.01.2027 அன்று வழங்கப்படும். நிபந்தனைகளின்படி, விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியின்படி நகல் சரி பார்த்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Noy, 18:57
6 865
குரூப் 4 தேர்வர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்! கம்ப்யூட்டர் படிச்சவங்களுக்கு இனி Office Automation சான்றிதழ் தேவையில்லை! TNPSC போட்ட அதிரடி Addendum!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய Addendum வெளியிட்டுள்ளது.
TNPSC வெளியிட்டுள்ள Notification No.11C/2026, Date: 23.11.2026 - Combined Civil Services Examination - IV (Group IV Services) - Addendum-ன் படி, 06.10.2026 தேதியிட்ட Notification No.11/2026-ல் புதிய பாரா 4.2.1.1 ஆக இது சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த பாராவில் என்ன சொல்லியிருக்கு தெரியுமா?
பல்கலைக்கழக மானியக் குழு / அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு / தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அல்லது அதற்கு இணையான அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டர் இன்பர்மேஷன் சிஸ்டம், கம்ப்யூட்டர் டிசைன் ஆகியவற்றில் Degree அல்லது Diploma வைத்திருக்கும் தேர்வர்கள், Certificate Course in Computer on Office Automation சான்றிதழை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, B.Sc Computer Science, BCA, B.Tech IT, B.E Computer Science, MCA, M.Sc Computer Science, Diploma in Computer Engineering போன்ற படிப்புகள் படித்தவர்கள், இனி தனியாக Office Automation கோர்ஸ் படித்து சான்றிதழ் வாங்க வேண்டாம். அவர்களின் Degree / Diploma-வே அதற்கு போதும் என்று TNPSC தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கு முன்பு குரூப் 4-ல் சில பதவிகளுக்கு, குறிப்பாக Typist, Junior Assistant போன்ற பதவிகளுக்கு, Certificate Course in Computer on Office Automation கட்டாயம் என்று இருந்தது. அதனால் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்கள் கூட, மீண்டும் அந்த சிறிய கோர்ஸை படிக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த சிக்கலுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து விவரங்களும், நிபந்தனைகளும் 06.10.2026 தேதியிட்ட Notification No.11/2026 மற்றும் அதன் Addendum-களில் கூறப்பட்டுள்ளபடியே மாறாமல் இருக்கும் என்றும் TNPSC செயலாளர் கையெழுத்திட்ட இந்த Addendum-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு வரும் 10.01.2027 அன்று நடைபெற உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பின்போது கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கு இந்த விலக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று தேர்வர்கள் வரவேற்றுள்ளனர்.
24 Noy, 01:14
6 865
நல்ல தகவல்
அந்தமான் - நக்காவரம்
மணிமேகலை காப்பியத்தில் ஆதிரை - சாத்துவன் குறித்த தகவல்கள்.
#tnpsc@SLGStudies #slg@SLGStudies
23 Noy, 23:05
