TAMIL NEWS (தமிழ் நியூஸ் )
Kanalga Telegram’da o‘tish
2 028
Obunachilar
+124 soatlar
+47 kunlar
+430 kunlar
Postlar arxiv
Repost from BBC News Tamil
ஓமன்: கப்பலில் இருந்து மீட்கப்பட்ட தூத்துக்குடி இளைஞரின் உடல் எங்கு உள்ளது? - சமீபத்திய தகவல்கள்
ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த , எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் என்ற இரண்டாம் நிலை அதிகாரி, கடந்த ஜூன் 11ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
'மேற்கு வங்கத்தில் அங்கீகரிக்கப்படாதது' - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் இணையும் கட்சி குறித்து எழும் கேள்விகள்
கிளர்ச்சியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் ஞாயிற்றுக்கிழமையன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் தங்களது பிரிவை இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தனர். இந்த கட்சி குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
உலகக்கோப்பை கால்பந்து முடிவுகள் - புள்ளிப் பட்டியல், போட்டி அட்டவணை
உலகக் கோப்பை கால்பந்து 2026: போட்டி அட்டவணை, முடிவுகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
'கடற்கரை அருகே இடுகாடு'; யாருக்கு சொந்தம் என்பதில் பட்டியலின - மீனவ மக்களுக்கு இடையே பிரச்னை
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள பெரிய கோட்டக்குப்பம் மற்றும் நடுக்குப்பம் கிராமங்கள் பல ஆண்டுகளாக ஒன்றோடொன்று தொடர்புடைய சமூக வாழ்வை கொண்ட பகுதிகளாக இருந்து வருகின்றன. இருப்பினும், கடற்கரை அருகே உள்ள ஒரு இடுகாடு நிலம் தொடர்பான உரிமை விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக இரு சமூகங்களுக்கிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி வந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
'எப்போது கரை சேருவோம்?' - கப்பல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டால் மாலுமிகள் தப்பிப் பிழைக்க என்ன செய்வார்கள்?
கப்பல் திடீரென நடுக்கடலில் சிக்கிக் கொண்டால், அந்த ஆபத்தான சூழலை மாலுமிகள் எப்படி எதிர்கொள்வார்கள்? அதற்கென கப்பலில் முன்னமே தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
சுமார் ஒன்றரை லட்சம் மக்களே வாழும் குட்டித் தீவான 'குராசோவா' உலகக்கோப்பைக்கு முன்னேறிய வரலாறு
நெதர்லாந்து நாட்டின் ஒரு பகுதியும், ஐல் ஆஃப் மேனை விட மிகச்சிறிய பரப்பளவும் கொண்ட கரீபியன் தீவான குராசோ, 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்று, வரலாற்றிலேயே உலகக் கோப்பையில் பங்கேற்கும் மிகச்சிறிய நாடாகப் புதிய சாதனை படைத்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
இந்திய மாலுமிகளுடன் ரஷ்ய கப்பல் பிரிட்டிஷ் படையால் சிறைபிடிப்பு - இந்தியர் ஒருவர் கைது
ஞாயிற்றுக்கிழமையன்று இங்லீஷ் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் டாங்கர் கப்பல் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, பொருளாதாரத் தடைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் இந்தியர் ஒருவரை தேசிய குற்றவியல் முகமை (என்சிஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
ஸ்மிருதி மந்தனா சாதனை: பாகிஸ்தானை இந்திய மகளிர் அணி எளிதில் வீழ்த்தியது எப்படி?
பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், ஸ்மிருதி மந்தனாவின் நிதானமான அரைசத இன்னிங்ஸும், தீப்தி சர்மாவின் அபாரமான 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சும் இணைந்து இந்திய அணிக்கு 64 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைத் தேடித்தந்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
கணிக்க முடியாத இஸ்ரேல்: அமெரிக்கா - இரான் 'ஒப்பந்தம்' பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும்
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
35 வயதுக்கு மேல் கருவுற்றால் இந்த சிறப்பு பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஏன்?
அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலுடன், கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகளுக்கோ அல்லது பிற முக்கிய உடல் பாகங்களுக்கோ பாதிப்பு ஏற்படாதவாறு ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து சிறிதளவு திரவத்தை எடுக்கப்படும் திரவம் பரிசோதனை செய்யப்பட்டு மரபணு அல்லது குரோமோசோம் சார்ந்த குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
'விளக்குகளை அணைத்துவிட்டு மக்களை எல்லை தாண்டி தள்ளிவிடுகிறது' - இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டு
இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக எல்லை தாண்டி வங்கதேசத்திற்கு அனுப்புவதாக வங்கதேசம் குற்றம்சாட்டியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
'அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது': ஹோர்மூஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்கா - இரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அவர் கூறியது என்ன? அமெரிக்காவும் இரானும் இதுகுறித்து தெரிவித்தது என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - சரித்திரம் படைத்தார் தீப்தி ஷர்மா
மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
குராசாவோ: ஃபிஃபா-வுக்கு தகுதி பெற்ற குட்டி நாடு - கொண்டாட்டக் கடலில் மக்கள்
குராசாவோ, வெனிசுவேலாவின் வடக்குக் கடற்கரையில் இருந்து 60கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் குட்டி நாடு கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று அமெரிக்காவில் கலந்து கொள்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
"கணவர் இறந்து 3 நாட்கள் ஆகிறது" - தமிழக மாலுமி நிஷாந்தின் மனைவி கூறுவது என்ன?
ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் (35 வயது) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
ஓமனின் கடற்கரை அருகே பழுதடைந்த இந்திய கொடி ஏந்திய கப்பல் - சமீபத்திய தகவல் என்ன?
ஓமனின் கடற்கரைக்கு அருகே இந்தியக் கொடி ஏந்திய ஒரு கப்பலின் எஞ்சின் பழுதடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாருடைய தவறு காரணம்? விசாரணை அறிக்கை எப்போது வெளியாகும்?
ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமையன்று, இந்தியாவின் விமான விபத்து விசாரணை வாரியம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியுள்ள தகவல்கள் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைந்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிதைந்து விடுமா?
மம்தா பானர்ஜி தனது சக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் காங்கிரஸுடன் இணையக்கூடும் என்ற யூகங்கள் தீவிரமடைந்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
"உடலை பாதுகாக்கவும் வழியில்லை" ; ஓமன் அருகே கப்பலில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மரணம்
பதற்றமான சூழல் காரணமாக ஓமன் நாட்டு கடற்பகுதியில் சிக்கிய கப்பலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய உடல் அழுகாமல் இருப்பதற்கான வசதிகள் கிடைக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனால், சக ஊழியர்கள் குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில்களை கொண்டு உடல் அழுகாமல் தடுக்க முயற்சிப்பதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Repost from BBC News Tamil
3 இந்திய மாலுமிகள் மரணம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை இந்தியாவுக்கான 'எச்சரிக்கையா'?
ஓமன் வளைகுடாவில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இந்தியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
Endi mavjud! Telegram Tadqiqoti 2025 — yilning asosiy insaytlari 
