1 555
Підписники
+124 години
Немає даних7 днів
-830 день
Триває завантаження даних...
Схожі канали
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
липень '26
липень '26
+7
в 0 каналах
червень '26
+8
в 0 каналах
Get PRO
травень '26
+18
в 0 каналах
Get PRO
квітень '26
+22
в 1 каналах
Get PRO
березень '26
+41
в 2 каналах
Get PRO
лютий '26
+82
в 1 каналах
Get PRO
січень '26
+60
в 1 каналах
Get PRO
грудень '25
+129
в 3 каналах
Get PRO
листопад '25
+174
в 3 каналах
Get PRO
жовтень '25
+191
в 3 каналах
Get PRO
вересень '25
+203
в 4 каналах
Get PRO
серпень '25
+296
в 3 каналах
Get PRO
липень '25
+56
в 0 каналах
Get PRO
червень '25
+671
в 3 каналах
| Дата | Залучення підписників | Згадування | Канали | |
| 13 липня | 0 | |||
| 12 липня | +1 | |||
| 11 липня | +1 | |||
| 10 липня | 0 | |||
| 09 липня | 0 | |||
| 08 липня | +2 | |||
| 07 липня | 0 | |||
| 06 липня | 0 | |||
| 05 липня | +1 | |||
| 04 липня | 0 | |||
| 03 липня | +1 | |||
| 02 липня | 0 | |||
| 01 липня | +1 |
Дописи каналу
🌿 வெயிலின் தாக்கத்தை குறைக்க ஒரு அற்புதமான யோக ரகசியம்! – வருண முத்திரை 🔥➡️💧
கோடைக்காலம் வந்தாலே உடல் சூடு அதிகரித்து 😓
தாகம், சோர்வு, தோல் வறட்சி, வியர்க்குரு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சினைகள் உருவாகும்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா? 🤔
👉 உடலில் உள்ள நீர் அளவு குறைதல்
👉 உடல் “சூடு” அதிகரித்தல்
இந்த imbalance-ஐ சரிசெய்ய ஒரு எளிய தீர்வு தான் 👉 வருண முத்திரை 🙌
---
✨ வருண முத்திரை என்றால் என்ன?
நம் உடலில் உள்ள 5 பூதங்களில் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) “நீர்” சமநிலையை சரி செய்யும் ஒரு யோக முத்திரை இது.
கோடையில் உடலில் நீர் குறைவதால் வரும் பிரச்சினைகளை இதன் மூலம் சமாளிக்கலாம் 💧
---
🧘♀️ எப்படி செய்ய வேண்டும்?
👉 பெருவிரலை மடக்கி, சிறுவிரல் நுனியுடன் சேர்க்கவும்
👉 மற்ற மூன்று விரல்கள் (சுட்டு, நடு, மோதிரம்) நேராக இருக்கட்டும்
👉 பத்மாசனம் / சுகாசனம் / நாற்காலியில் உட்கார்ந்து செய்யலாம்
👉 முதுகு, கழுத்து நேராக இருக்க வேண்டும்
---
⏰ எவ்வளவு நேரம் செய்யலாம்?
✔️ தினமும் குறைந்தது 24 நிமிடங்கள்
✔️ காலை 12 + மாலை 12 நிமிடங்கள்
🔥 உடல் சூடு அதிகமா இருந்தா:
👉 48 நிமிடங்கள் வரை செய்யலாம் (16 + 16 + 16)
---
💚 செய்தால் கிடைக்கும் பலன்கள்:
✔️ உடல் சூடு குறையும் 🔥⬇️
✔️ உடலில் நீர் சமநிலை சரியாகும் 💧
✔️ தாகம் குறையும்
✔️ வியர்க்குரு & சூட்டுக் கட்டிகள் மறையும்
✔️ தோல் வறட்சி நீங்கி மினுமினுக்கும் ✨
✔️ சுருக்கங்கள் குறையும் – இளமையான தோற்றம் 😍
✔️ ரத்த ஓட்டம் சீராகும்
---
⚠️ கவனிக்க வேண்டியது:
👉 தொடர்ந்து செய்ய வேண்டும்
👉 உடனடி result காக காத்திருக்காமல் பழக்கமாக்குங்கள்
👉 நல்ல தண்ணீர் குடிப்பதும் equally important 💧
---
🔥 Pro Tip:
கோடை ஆரம்பத்திலேயே இந்த முத்திரை practice பண்ணினா…
👉 heat problems வராமலேயே தடுக்கலாம்!
| 2 | Немає тексту... | 135 |
| 3 | வாழ்க வளத்துடன்!
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் ஆரம்ப நிலை வாதத்தின் தாக்கத்தை குறைத்து வாதம் ஏற்படாமல் தவிர்க்கும் எளிதான வழிமுறை :
ஒரு தேக்கரண்டி அளவிற்கு வெந்தயத்தை எடுத்து சிறு வருப்பு வறுத்து அதனுடன் சிறு துண்டு சுக்கும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.இந்த பொடியுடன் ஒரு அரைதேக்கரண்டி அளவிற்கு கருப்பட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.இந்த கலவையை காலை மற்றும் மாலை என இருவேளையும் ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வர ஆரம்ப நிலை வாதத்தின் தாக்கம் முழுமையாக தவிர்க்கப்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இந்த முறையினை மூன்று மாதத்திற்கொருமுறை
மூன்று நாட்கள் சாப்பிடலாம்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ. தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789. | 164 |
| 4 | வாழ்க வளத்துடன்!
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில்
மலச்சிக்கல் பிரச்சினை இலகுவாக தீர எளிய வழிமுறை :
இயற்கை வழங்கி உள்ள மூலிகை வகைகளில் சங்கு பூ செடி என்று ஒன்று உண்டு.இதில் பல வண்ணம் கொண்ட செடிகள் இருப்பினும் வெள்ளைப் பூ பூக்கும் சங்கு பூ செடியே இதற்கு உகந்தது.
வெண் சங்கு பூச்செடியிலிருந்து விதைகளை சேகரித்து அதனை வாணலியில் போட்டு இளம் வருப்பு வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து சுடுநீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக தீர்வாகும்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ. தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789. | 209 |
| 5 | வாழ்க வளத்துடன்
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் உடல் சோர்வும்,பலகீனமும் அடைந்த நிலையில் குளுக்கோஸ் மூலம் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் தரும் ஒரு இயற்கை பானம்.
நல்வேளை என்னும் மூலிகையின் வேர்களை(3--5 செடியின் வேர்)மட்டும் எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 200 மில்லி தண்ணீர் விட்டு அது 50 மில்லியாக சுண்டும் அளவிற்கு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இந்த கசாயத்துடன் காய்ச்சி ஆற வைத்த சம அளவு பாலும், உடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சுத்தமான தேனும் சேர்த்து பருகி வர குளுக்கோஸ் ஏற்றியது போன்ற தெம்பு உடலுக்கு கிடைக்கும்.
மழைக் காலங்களில் அபரீதமாக கிடைக்கும் நல்வேளை செடியின் வேர்களை சேகரித்து சுத்தம் செய்து பத்திரப்படுத்திக் கொண்டு கோடை காலத்தில் இந்த வேரினை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு பயன்படுத்தி இந்த பானத்தை தயாரித்து பருகிவரலாம்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789. | 247 |
| 6 | உங்கள் நாக்கின் நிறம் நீங்கள் நினைப்பதற்கும் மேல் தகவலை தெரிவிக்கக்கூடும்.
இது ஒரு மருத்துவத் தீர்வு (diagnosis) அல்ல, ஆனால் உங்கள் உடல்நிலையை காட்டும் ஒரு எளிய சிக்னல்.
👅 நாக்கின் நிறங்கள் மற்றும் அதன் அர்த்தங்கள்:
• இளஞ்சிவப்பு (Pink) நாக்கு – பொதுவாக ஆரோக்கியமான நிலை
• சிவப்பு (Red) நாக்கு – வைட்டமின் குறைபாடு அல்லது எரிச்சல் காரணமாக இருக்கலாம்
• வெள்ளை (White) நாக்கு – கழிவுகள் சேர்தல் அல்லது பூஞ்சை (fungal) பிரச்சினை இருக்கலாம்
• மஞ்சள் (Yellow) நாக்கு – நீர்ச்சத்து குறைவு அல்லது வாய்சுத்தம் குறைவு காரணமாக இருக்கலாம்
• ஊதா / ஊதா கலந்த (Purple) நாக்கு – இரத்த ஓட்டம் (circulation) தொடர்பான பிரச்சினைகளுடன் இருக்கலாம்
⚠️ பொதுவான தவறு:
பல நாட்கள் நீடிக்கும் மாற்றங்களை கவனிக்காமல் விடுவது.
அது எப்போதும் பெரிய பிரச்சினை ஆகாது, ஆனால் அதை அலட்சியம் செய்ய கூடாது.
💡 கவனிக்க வேண்டியவை:
• உங்கள் நாக்கை கவனமாக பார்க்கவும்
• வாய்சுத்தத்தை பராமரிக்கவும்
• போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். | 260 |
| 7 | வாழ்க வளத்துடன்!
உலக நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் மூலநோய் அதனால் ஏற்படும் வலி,எரிச்சல் முதலியன குணமாகவும், மலச்சிக்கல் இலகுவாகவும் எளிதான இயற்கை சார்ந்த வழிமுறை :
இயல்பாக ரோட்டு ஓரங்களிலும், புதர் பகுதிகளிலும், வேலியிலும் மிகவும் எளிதாக கிடைக்கும் மூலிகை வகைகளில் துத்தி என்ற ஒரு வகை மூலிகை உண்டு
துத்தி செடியில் இருந்து செழிப்பான மூன்று முதல் ஐந்து இலைகளை எடுத்து சுத்தம் செய்து இருநூறு மில்லி தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் இரண்டு மிளகையும், இரண்டு சிட்டியை சீரகத்தையும் தட்டி சேர்க்கவும்.
200 மில்லி தண்ணீர் ஆனது 100 மில்லியாக சுண்டும் அளவிற்கு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி இதமான சூட்டில் காலை வேளையில் வெறும் வயிற்றிலோ அல்லது காலை உணவு உண்பதற்கு முன்பாகவோ தொடர்ந்து பருகி வர வேண்டும்.
இவ்வாறு பருகி வர மூல நோயும் அதனால் ஏற்படும் எரிச்சல்,வலி, அரிப்பு முதலியன குணமாவதோடு மலச்சிக்கல் பிரச்சனை எளிதாகும்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789. | 253 |
| 8 | வாழ்க வளத்துடன்!
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் நுரையீரல் சார்ந்த சளி தொல்லையை இலகுவாக குணமாக்கும் எளிய வழிமுறை:
மூலிகை வழி செடிகளிலே தேள் கொடுக்கு என்னும் செடியிலிருந்து ஐந்தாறு இலைகளை எடுத்து சுத்தம் செய்து அரைத்து 200 மில்லி தண்ணீர் விட்டு அதனுடன் சிறித சுக்கு பொடியும், மூன்று எண்ணிக்கையிலான திப்பிலியை இடித்து பொடியாக்கி அதனையும் சேர்த்து மிதமான தீயில் அது 100 மில்லியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக்கொள்ளவும்.
காய்ச்சிய கசாயத்தை வடிகட்டி அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சுத்தமான தேன் கலந்து காலை வேளையிலே வெறும் வயிற்றிலே தொடர்ந்து பருகிவர நுரையீரல், நுரையீரல் சார்ந்த சளி முதலியன குணமாகி நுரையீரல் வலுப்பெறும்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ.தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789. | 261 |
| 9 | வாழ்க வளத்துடன்!
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மரூத்துவ குறிப்பு தகவலில் மங்கலான கண் பார்வை தெளிவாகவும்,
தூரப்பார்வை குறைபாடு நீங்கவும் எளிதான வழிமுறை.
இயற்கை வழங்கியுள்ள இயற்கலயான பொருட்களைப் பயன்படுத்தி மங்கலான கண் பார்வையை தெளிவாக்குவதோடு தூரப்பார்வை குறைபாட்டையும் போக்கும் பொருட்களின் கூட்டுப்பயன்பாடு.
கைப்பிடியளவு துளசியிலைகளை எடுத்து சுத்தம் செய்துகொள்ளவும்.
இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு கருஞ்சீரகமும், பத்து எண்ணிக்கை அளவிற்கு உலர் திராட்சையும், பத்து எண்ணிக்கை அளவிற்கு குறையாது நிலக்கடலையும் சேர்த்து மைய அரைத்து அதனை ஏழு உருண்டைகளாக பிடித்து காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
தினம் ஒரு உருண்டை என்ற வகையில் காலைவேளையில் சிறிதுநீர் சேர்த்து கரைத்து பருகிவரவும்.
ஏழுநாட்களும் தொடர்ச்சியாக சாப்பிட்டுவர மேற்சொல்லப்பட்ட கண்சார்ந்த உபாதை
எளிதாக குணமாகும்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல்நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ. தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789.. | 299 |
| 10 | இந்த இயற்கை வைத்திய முறைகளுடன், நல்ல வாய்ச் சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். தினமும் இரண்டு முறை புளோரைடு கொண்ட பற்பசையால் பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்ற பல் நூல் (Dental Floss) பயன்படுத்த வேண்டும். அதிக இனிப்பு உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களை அளவோடு உட்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது பல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.
பல் வலியை அலட்சியப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. வீட்டு வைத்தியங்கள் தற்காலிக நிவாரணத்தை அளித்தாலும், அவை அடிப்படை நோய்க்கான நிரந்தர சிகிச்சையாகாது. இரண்டு நாட்களுக்கு மேல் வலி நீடித்தால், முகத்தில் வீக்கம் ஏற்பட்டால், காய்ச்சல் இருந்தால் அல்லது ஈறுகளில் சீழ் வடிந்தால் உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும். சரியான வாய்ச் சுகாதாரப் பழக்கவழக்கங்களும், சமநிலையான உணவுமுறையும், முறையான பல் பரிசோதனைகளும் ஆரோக்கியமான பற்களையும் அழகான புன்னகையையும் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும்.
வாழ்க வளமுடன் நலமுடன்
வளர்க பணமுடன் புகழுடன் | 338 |
| 11 | *பல் வலிக்கான 10 எளிய வீட்டு வைத்தியங்கள் – இயற்கை முறைகளும் சரியான பல் பராமரிப்பும்*
பல் வலி என்பது சிறிய அசௌகரியமாகத் தொடங்கினாலும், கவனிக்காமல் விட்டால் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு கடுமையாக மாறக்கூடிய ஒரு பிரச்சினையாகும். பற்சொத்தை, ஈறு அழற்சி, பல் உடைதல், பல் வேரில் தொற்று, அறிவுப் பல் வளர்ச்சி, உணவுத் துகள்கள் சிக்கிக் கொள்வது, அதிக குளிர் அல்லது சூடான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் பல் வலி ஏற்படலாம். சில நேரங்களில் உடனடியாக பல் மருத்துவரைச் சந்திக்க முடியாத சூழலில், வலியைக் குறைக்க உதவும் சில இயற்கை வீட்டு வைத்திய முறைகள் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், இவை தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீடித்த வலி அல்லது வீக்கம் இருந்தால் பல் மருத்துவரின் ஆலோசியே அவசியம்.
முதலாவதாக, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிப்பது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள முறையாகும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி உப்பைக் கலந்து, 30 முதல் 40 விநாடிகள் வரை வாயில் வைத்துக் கொப்பளிக்க வேண்டும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, ஈறுகளில் உள்ள வீக்கம் மற்றும் சிறிய காயங்களையும் ஆற்ற உதவுகிறது.
இரண்டாவதாக, கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் பல் வலிக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த இயற்கை நிவாரணமாகும். கிராம்பில் உள்ள "யூஜினால்" (Eugenol) என்ற இயற்கை வேதிப்பொருள் வலியைக் குறைக்கும் மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ஒரு கிராம்பை மெதுவாக மென்று வலியுள்ள பகுதியில் வைத்திருக்கலாம். அல்லது ஒரு துளி கிராம்பு எண்ணெயை பஞ்சில் நனைத்து வலியுள்ள இடத்தில் சில நிமிடங்கள் வைக்கலாம். அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மூன்றாவதாக, பூண்டு இயற்கையான ஆன்டிபயாட்டிக் தன்மை கொண்டது. பூண்டில் இருக்கும் அலிசின் (Allicin) என்ற பொருள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு அல்லது இரண்டு பூண்டு பற்களை நசுக்கி சிறிதளவு உப்புடன் கலந்து வலியுள்ள பல்லின் மீது தடவலாம். இதனால் தொற்று குறைவதோடு வலியும் படிப்படியாகக் குறையக்கூடும்.
நான்காவதாக, இஞ்சி அழற்சியைக் குறைக்கும் திறன் கொண்ட ஒரு இயற்கை மூலிகையாகும். சிறிய இஞ்சி துண்டை மென்று சாறு வலியுள்ள பகுதியில் படுமாறு செய்யலாம். அல்லது இஞ்சியை அரைத்து விழுதாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் சில நிமிடங்கள் வைக்கலாம். இது ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவுகிறது.
ஐந்தாவதாக, குளிர் ஒத்தடம் (Cold Compress) வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாகும். ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் சுற்றி, வலி இருக்கும் பக்கத்தின் கன்னத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மெதுவாக ஒத்தடம் கொடுக்கலாம். இது இரத்த நாளங்களைச் சுருக்கி வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது. ஆனால், ஐஸ் கட்டியை நேரடியாக தோலில் வைக்கக் கூடாது.
ஆறாவதாக, வெங்காயம் இயற்கையான கிருமிநாசினி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பச்சை வெங்காயத்தின் ஒரு சிறிய துண்டை மென்று சாப்பிடலாம் அல்லது வலியுள்ள பகுதியில் சில நிமிடங்கள் வைத்திருக்கலாம். இதனால் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் வளர்ச்சி குறைய உதவுகிறது.
ஏழாவதாக, புதினா இலை அல்லது புதினா தேநீர் பல் வலிக்கு இதமான நிவாரணத்தை அளிக்கக்கூடும். புதினாவில் உள்ள மெந்தால் (Menthol) லேசான உணர்விழப்பு தன்மை கொண்டதால் வலி குறைவதாக உணரப்படுகிறது. புதினா இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது புதினா தேநீரை குளிரவைத்து வாயைக் கொப்பளிக்கலாம்.
எட்டாவதாக, மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த இயற்கை அழற்சி எதிர்ப்பு பொருளாகும். மஞ்சள் தூளுடன் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் அல்லது தேன் சேர்த்து விழுதாக்கி வலியுள்ள பகுதியில் தடவலாம். இதில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் அழற்சியைக் குறைக்கவும் கிருமிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஒன்பதாவதாக, கொய்யா இலைகள் பல் மற்றும் ஈறு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. இளம் கொய்யா இலைகளை நன்றாகக் கழுவி மென்று சாப்பிடலாம். அல்லது அவற்றை நீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். இது ஈறுகளில் இரத்தக்கசிவு மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.
பத்தாவதாக, மிளகு மற்றும் உப்பு கலவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எளிய முறையாகும். சம அளவு கருமிளகுத் தூள் மற்றும் உப்புடன் சில துளி நீர் சேர்த்து விழுதாக்கி பாதிக்கப்பட்ட பல்லின் மீது தடவலாம். இது வலியைக் குறைப்பதோடு கிருமிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்த உதவுகிறது. | 291 |
| 12 | Немає тексту... | 232 |
| 13 | வாழ்க வளத்துடன்
வளர்க நலமுடன்
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் முகம் மற்றும் உடலில் உள்ள மருக்கள் கரையவும், முகத்தில் உள்ள பருக்கள் சரியாகவும் எளிதான வழிமுறை::
ஜாதிக்காய், சந்தனம் மற்றும் மிளகு இவைகளை சேர்த்து மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் 7_10 நாட்கள் பூசி வர பருக்கள் குணமாகும்.
பூண்டினை எடுத்து அதனை மைய மசித்து அந்த விழுதினை மருக்கள் மீது வைத்து கட்டி வர மருக்கள் கரையும்.இந்த முறையினை தொடர்ச்சியாக ஏழு முதல் முதல் பத்து நாட்களுக்கு செய்ய வேண்டும்.
சிறுநீரகத்தில் உண்டாகும் உப்பினை கட்டுப்படுத்தி சிறுநீரகத்தை வலுப்படுத்தவும், சிறுநீரக செயல்பாட்டை வலிமையாக்கவும் சூரணம் கிடைக்கும்.
மரம் வளர்ப்போம்!!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல்நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ.தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789. | 288 |
| 14 | 🌿 வீட்டிலேயே செய்யலாம்… உடல்நலத்தை காக்கும் சில பாரம்பரிய குறிப்புகள்! 🌿
🍌 தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவது உடலின் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவலாம்.
🥬 வாழைப்பூ மற்றும் முருங்கைக்கீரையை சேர்த்து சமைத்து சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது.
🌾 வெந்தயத்தை லேசாக வறுத்து சிறிது வெல்லத்துடன் எடுத்துக்கொண்டால் இருமல் மற்றும் செரிமான அசௌகரியங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம்.
❤️ மாதுளைச் சாறுடன் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து பருகுவது உடல் பலம் மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.
🥥 கொப்பரைத் தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து சாப்பிடுவது வாய்ப்புண் குறைய உதவலாம்.
🍯 நெல்லிச்சாறு மற்றும் தேன் கலந்து காலையில் பருகுவது உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடென்ட் பலன் தரக்கூடும்.
🫚 இஞ்சி சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பது வயிற்று அசௌகரியங்களை குறைக்க உதவலாம்.
🍈 தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது கல்லீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது என கூறப்படுகிறது.
🔥 சிறிதளவு இஞ்சி மென்று சாப்பிடுவது நெஞ்செரிச்சலை குறைக்க உதவலாம். | 310 |
| 15 | வாழ்க வளத்துடன்
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் உடல் வலிமை பெறவும் தசைகளும் தசைகளும் பலம் பெறவும், அஜீரண கோளாறு முழுமையாக குணமாகவும், வயிறு எரிச்சல் போன்ற உபாதைகள் எளிதாக குணமாகவும் இனிதான வழிமுறை:
உலர் திராட்சைப் பழத்தை பத்து எண்ணிக்கைக்கு குறையாமல் முதல் நாள் இரவு பாலில் ஊற வைத்து அதை மறுநாள் காலை வேளையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சையை சாப்பிட்டு பாலை பருகிவர மேற்ச் சொல்லப்பட்ட உடல் உபாதைகள் அனைத்தும் குணமாகி உடல் வலிமையாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பும் ஏற்படும்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ.தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381233789. | 343 |
| 16 | கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியா? – இம்ப்ளான்டேஷன் இரத்தப்போக்கு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு, மாதவிடாய் வர வேண்டிய தேதிக்கு முன்பாக லேசான இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது இம்ப்ளான்டேஷன் இரத்தப்போக்கு (Implantation Bleeding) ஆக இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும்.
✅ இதன் பொதுவான அறிகுறிகள்:
🌸 மிகக் குறைவான இரத்தப்போக்கு:
சில துளிகள் அல்லது லேசான புள்ளிகள் மட்டுமே காணப்படும். இது பொதுவாக மாதவிடாய் போல அதிகமாக இருக்காது.
🎨 நிறம்:
இளஞ்சிவப்பு, பழுப்பு அல்லது மிகவும் மங்கலான சிவப்பு நிறமாக இருக்கும். வழக்கமான மாதவிடாய் இரத்தத்தின் நிறத்திலிருந்து வேறுபடலாம்.
⏳ நீடிக்கும் காலம்:
சில மணி நேரம் முதல் 1 அல்லது 2 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும். சிலருக்கு சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் பொதுவாக மாதவிடாயைப் போல பல நாட்கள் நீடிக்காது.
📅 எப்போது ஏற்படும்?
கருவுற்ற முட்டை கருப்பையின் சுவரில் ஒட்டிக்கொள்ளும் போது, பொதுவாக கருத்தரித்த 6 முதல் 12 நாட்களுக்குள் இது ஏற்படலாம். இது மாதவிடாய் வர வேண்டிய நாட்களுடன் ஒத்துப்போகவும் வாய்ப்பு உள்ளது.
😣 மற்ற அறிகுறிகள்:
பொதுவாக அதிக இரத்தப்போக்கு அல்லது இரத்தக் கட்டிகள் இருக்காது. சிலருக்கு லேசான வயிற்றுப் பிடிப்பு இருக்கலாம்; பலருக்கு வேறு எந்த அறிகுறியும் இருக்காது.
⚠️ முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள்:
கர்ப்பமான அனைத்து பெண்களுக்கும் இம்ப்ளான்டேஷன் இரத்தப்போக்கு ஏற்படாது. பலருக்கு இது ஒருபோதும் ஏற்படுவதில்லை.
🚨 உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய சூழ்நிலைகள்:
• மாதவிடாயைப் போல அல்லது அதைவிட அதிகமான இரத்தப்போக்கு இருந்தால்.
• வயிற்றின் ஒரு பக்கத்தில் கடுமையான வலி இருந்தால்.
• தலைச்சுற்றல், மயக்கம் அல்லது தோள்பட்டை வலி ஏற்பட்டால்.
• இரத்தப்போக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தாலோ அல்லது காய்ச்சலுடன் இருந்தாலோ.
🧪 கர்ப்பத்தை உறுதிப்படுத்த ஒரே நம்பகமான வழி:
சரியான நேரத்தில் கர்ப்பப் பரிசோதனை (Pregnancy Test) செய்வது. தேவைப்பட்டால் மருத்துவரின் பரிசோதனையும் அவசியம். | 392 |
| 17 | Немає тексту... | 317 |
| 18 | வாழ்க வளத்துடன்!
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் சிறுநீரக கற்கள் கரையவும்,பித்தப்பை கற்கள் கரையவும், அவை மீண்டும் உருவாமல் தடுக்கவும், பெண்களுக்கான மாதவிடாய் சுழற்சி சீராகவும் அமைய எளிதான வழிமுறை :
இயற்கை வழங்கி உள்ள எண்ணற்ற மூலிகை வளங்களில் ஒன்றான தர்பை புல் மேற்காணும் உபாதையை போக்கும் அருமருந்தாக உதவுகிறது.
அப்போது அறுத்த தர்ப்பை புல்லை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கைப்பிடி அளவு எடுத்து அதை 500 மில்லி தண்ணீரில் போட்டு மிதமான தீயில் அது 250 மில்லியாக சுண்டுமளவிற்கு காய்ச்சி வடிகட்டி காலை வேளையில் வெறும் வயிற்றில் 125 மில்லியும், இரவு உணவுக்கு முன்பாக 125 மல்லியும் தொடர்ச்சியாக ஏழு முதல் ஒன்பது நாட்களுக்கு பருகி வர மேற்சொன்ன உபாதைகள் முழுமையாக குணமாவதோடு அதன் சுழற்சி சீராகும்.
மரம் வளர்ப்போம்!
பூமியை பார்ப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்ண
அ. தமிழ்ச்செல்வன்
பேளுக்குறிச்சி
🪢6381233789.
தகவலகத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெறாது. | 336 |
| 19 | *இன்று 8 Pm*:*அதிசய* *ஞாபக சக்தி பயிற்சி* ( *Super* *Power Memory* ) *இலவச* *அறிமுக வகுப்பு*
நீங்கள் உங்களது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், படிப்பதை மறக்காமல் நன்றாக நினைவில் வைக்கவும் உங்களுக்கு
ஒரு அற்புத வாய்ப்பு
*வகுப்பு நாள்* & *நேரம்* : *Today* *4.7.2026*( *Saturday* )
*8 Pm to 9 Pm*
------------------------------------------
*Zoom Meeting Link* 👇
https://zoom.us/j/95722002513?pwd=cWprV05UeTBRcml1ZlpzbFp2MDRudz09
Meeting ID :
957 2200 2513
Passcode : 830169
8 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம்
பள்ளி மாணவர்கள் எனில் பெற்றோர் உடன் இருப்பது நன்று (நோட் & பேனா வைத்துக் கொள்ளவும்)
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் அவர்களும் பயன்பெறுவார்கள்
*Thank u Genius for Join and Share* | 144 |
| 20 | வாழ்க வளத்துடன்!
வளர்க நலமுடன்!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல், பயம் அதிர்வு அதிர்ச்சி இதன் காரணமாக சிறுநீர் கழிதல், பாரம் தூக்குவதால் சிறுநீர் கழிதல் போன்ற உபாதை குணமாக ஒரு எளிய வழிமுறை:
ஆன்மீக பயன்பாட்டில் குறிப்பாக யாகத்தில் பயன்படுத்தப்படும் பிரதானமான தர்ப்பை புல்லை பற்றி பலரும் அறிந்திருப்போம்.
இந்த தர்ப்பை புல்லை நிழல்பாடாக உலர்த்தி பொடி செய்து அந்த பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து சுத்தமான தேனில் குழைத்து காலை வேளையில் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர மேற்படியான சிறுநீர் தொடர்பான உபாதைகள் குணமாகும்.
மரம் வளர்ப்போம்!
பூமியை காப்போம்!!
மூலிகை வளர்ப்போம்!
உடல் நலம் காப்போம்!!
மூலிகை ஆர்வலர்,
அ தமிழ்ச்செல்வன்,
பேளுக்குறிச்சி,
🪢6381243789. | 416 |
