ru
Feedback
Physics Chamber

Physics Chamber

Открыть в Telegram
6 966
Подписчики
+824 часа
+197 дней
+9530 день
Архив постов
AL இல் குறிப்பிட்ட பாடத்திற்கு 01. முழுமையான Theory 02. 2011-2025 வரையான கடந்தகால வினாக்களின் தெளிவான விளக்கம் 03. MCQ ஐ தட்டும் நுணுக்கம் 04. Marking scheme உடனான பயிற்சி 05. ஒவ்வொரு வாரமும் நீங்கள் என்ன என்ன நிறைவு செய்ய வேண்டும் என்ற நேர சூசி 06. பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக்குவதற்கான ஒழுங்கமைப்பு என்பன AL ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு இலவசமாக தரப்படுகின்றன என வைத்துக் கொள்வோம். அக்குறித்த பாடத்தில் மேலே கூறப்பட்ட விடயங்களுக்கு வெளியே வேறு என்ன என்ன வேண்டும் என நீங்கள் எதிர்பார்பபீர்கள்? எங்களது அடுத்து கட்ட நடவடிகைக்கு உங்களது கருத்துக்கள் மிக அவசியம் Please…..

மாணவர்கள் அவசியம் இதை வாசிக்கவும். எனது நீண்டகால ஆய்வின் பின் எழுதும் ஒரு பதிவு இது. 2 வாரங்களுக்கு முன்பே பதிவிட வேண்டிய பதிவு, வேலைப்பளு காரணமாக சற்று தாமதமாகிவிட்டது. உயர்தர கல்வி தனியார் வகுப்புகளையே நம்பி இருக்கும் ஒரு காலம் இது. இங்கு "பாடசாலையா? தனியார் வகுப்பா?" என்ற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், பரீட்சைக் காலம் நெருங்கும் போது மாணவர்களின் பதற்றத்தையும் பயத்தையும் காசாக்கும் ஒரு சில கீழ்த்தரமான தனியார் கல்வி நிலையங்களையும், அவற்றின் கேவலமான ஆசிரியர்களையும் பற்றிய பதிவு இது. பரீட்சை நெருங்கும் நேரத்தில், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும் ஒரு விதமான பதற்றம் தோன்றுவது இயல்பு. "நான் படித்தது போதுமா?", "நான் பயிற்சி செய்தது போதுமா?", "நான் பல்கலைக்கழகத்துக்கு நுழைவேனா?" என்று. இந்நேரம் கொடுக்கப்படும் சிறிய சிறிய நேர்மறை எண்ணங்கள்கூட ஒரு மாணவனின் வாழ்க்கையை தலைகீழாக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு சில ஆசிரியர்களின் கீழ்த்தரமான புத்தி வெளிப்படும். இறுதிக்கட்டம் நெருங்கும் போது, ஒரு சில கயவர்களுக்கு இது பணம் உழைக்கும் பருவம். "எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்" என்பதுபோல, குழப்பத்தில் இருக்கும் மாணவர்களை எப்படி எல்லாம் தலையைக்கழுவி காசு பார்க்க முடியுமோ, அப்படியெல்லாம் பார்ப்பார்கள். இதில் இன்னும் கீழ்த்தரமான ஒரு சிலர் என்ன செய்வார்கள் என்றால், இறுதி நேரத்தில் மாணவர்களைக் குழப்பி, "இந்த வருடம் நீ பாஸ் ஆக மாட்டாய்" என்று மனதை மாற்றி, அடுத்த வருடமும் தங்களிடமே வகுப்பிற்கு வரும்படி மூளைச்சலவை செய்வார்கள். (இது என் கண்ணால் கண்டது.) ஒரு ஆசிரியர், மாணவனிடம் கூறியுள்ளார்: "நீ தயாரானது போதாது. இந்த முறை பரீட்சையை withdraw செய். அடுத்த முறை இன்னும் கொஞ்சம் உனக்கு பயிற்சி தருவேன். அப்போது கண்டிப்பாக நீ மருத்துவராவாய்" என்று. அந்த மாணவன், பரீட்சைக்கு இன்னும் 2 மாதங்கள் இருந்த நிலையில், பரீட்சை எழுத வேண்டாம் என்று முடிவு செய்தான். பின்னர், ஒரு வாரம் கழித்து அவனை சந்தித்த ஏதோ ஒரு புண்ணியவான் புத்திமதி சொல்லி பரீட்சை எழுத வைத்தார். அந்த முறை பரீட்சை எழுதி 3A சித்திகள் பெற்று பல்கலைக்கழகம் சென்றான். இங்கு அந்த ஆசிரியரின் அடுத்த 12 மாத (2000 × 12 = 24000) ரூபாய் வருமானத்திற்காக, ஒரு மாணவனின் எதிர்காலத்தையே நாசமாக்க பார்த்த சுயநலவாதிதான் இன்று "ஆகா! ஓகோ!" என்று புகழப்படும் ஆசிரியர். பரீட்சை நெருங்குவதால், "எப்படியாவது என் நிலையை / புள்ளியை கூட்ட வேண்டும்" என்பதற்காக மாணவர்கள் எதையும் செய்வார்கள் என்பதை அறிந்த இந்தக் கயவர்கள் செய்யும் சில நரித்தனங்கள்: 1. பரீட்சைக்கு முன் எங்கிருந்தோ ஒரு சிங்கள மொழி மாதிரி வினாத்தாளைக் கொண்டு வந்து, "இதுதான் இந்த முறை பரீட்சை வினாத்தாள்" என்று மாணவர்களை ஏமாற்றி, அந்த வினாத்தாள் வகுப்பிற்கு மட்டும் ரூ. 5,000 வரை அறவிடுதல். 2. "இந்த முறை வினாத்தாள் எடுக்கும் பேராசிரியர் எனக்குத் தெரியும்" என்று கூறி, அவருடைய மாதிரி வினாக்கள் என்று சில ஆங்கில மற்றும் சிங்கள வினாக்களை வைத்து நாடகம் ஆடுதல். 3. இறுதி நேரத்தில் "இந்த Package, அந்த Package" என்று எப்படி எல்லாம் பணம் பறிக்க முடியுமோ அப்படிப் பறித்தல். (Package-களுக்கு பெயர் வைப்பதற்கே ஒரு பட்டம் கொடுக்கலாம் அந்த ஆசிரியருக்கு.) 4. மாணவனின் தன்னம்பிக்கையை உடைத்து, "உன்னால் முடியாது. இந்த முறை பரீட்சை எழுதாதே" என்று கூறி, அடுத்த வருட வகுப்புக்கும் இப்போதே ஆள் சேர்த்தல். 5. முடிக்க வேண்டிய Theory-யை முடிக்காமல், கடந்தகால வினாக்கள் (past paper தான் உயர்தரத்தின் பிரம்மாஸ்திரம்) 5 வருடங்கள் கூட செய்து காட்டாமல், ஆரம்பத்திலேயே Model Paper-களுக்கு தாவுவது. (இதில் ஒரு ஆசிரியர் கூறியிருந்தார்: "கடந்தகால வினாக்கள் செய்யத் தேவையில்லை. என்னுடைய Model Paper மட்டும் போதும். A எடுக்கலாம்" என்று. பரீட்சை முடிந்ததும் அந்த மாணவர்கள் விட்ட சாபம் என்னவோ, இன்று அவரிடம் வகுப்பிற்கு செல்லக்கூட ஆட்கள் இல்லை.) 6. தன்னால் கற்பித்து முடிக்க முடியாமல் போன பகுதிகளை, "இது இந்த முறை பரீட்சைக்கு வராது" என்று மாணவர்களை ஏமாற்றுவது. மாணவர்களே, மிகவும் கவனமாக இருங்கள்.உங்களுக்கு அந்த ஆசிரியர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவருக்கு நீங்கள் மாதம் மாதம் காசு தரும் ஒரு Object மட்டுமே. அவ்வளவுதான். 1. அனைத்து Theory-களும் பரீட்சைக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். 2. குறைந்தபட்சம் 10 வருட கடந்தகால வினாத்தாள்களை உங்களுக்குச் செய்து காட்டியிருக்க வேண்டும். 3. கடந்த 5 வருட பரீட்சை வினாத்தாள்களை நேரம் வைத்து எழுதும் பயிற்சியை வகுப்பிலேயே வழங்கியிருக்க வேண்டும். 4. இதற்குப் பிறகும் நேரம் இருந்தால்தான் Model Paper-கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஆரம்பத்திலேயே Model Paper என்றால்... வாத்தியார் அடுத்த வீடு கட்ட ஆயத்தமாகிறார். அவ்வளவுதான்.

Голосовое сообщение06:19

Голосовое сообщение07:05

Голосовое сообщение02:21

Really sorry for the harsh words 😐😐😐

Голосовое сообщение06:29

My mind voice : 2018கு பிறகு இப்ப தான் August ல Exam அமைதியா நடக்க போகுது. (2019 August தான். But after Easter attack) Mean while Dengue : May I come innnnn? பரீட்சை நெருங்குகிறது. தொற்று மற்றும் நோய்களிடமிருந்து அவதானமாக இருங்கள்.

ஒரு மாணவர் அனுப்பிய வினா இது. நீக்கல் முறை ஜாம்பவான்கள் யாரும் உண்டோ???? முறையை கூறுக.
ஒரு மாணவர் அனுப்பிய வினா இது. நீக்கல் முறை ஜாம்பவான்கள் யாரும் உண்டோ???? முறையை கூறுக.

Repost from Physics Chamber

Голосовое сообщение03:29

Голосовое сообщение01:10

Голосовое сообщение00:17

வேகத்தை அதிகரியுங்கள் நிதானத்தை இழக்காதீர்கள். பதற்றத்தை முழுமையாக இல்லாமலாக்கி அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் படியுங்கள். உங்கள் விடைத்தாளைப்பார்த்து யாரும் உங்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. பரீட்சை பற்றிய பயம் துளியளவும் வேண்டாம் நீங்கள் படித்ததை வைத்தே பரீட்சையை சிறப்பாக செய்ய முடியும். வெற்றி உங்களதே

வேகத்தை அதிகரியுங்கள் நிதானத்தை இழக்காதீர்கள். பதற்றை முழுமையாக இல்லாமலாக்கி அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் படியுங்கள். உங்கள் விடைத்தாளைப்பார்த்து உங்களை யாரும் சிறையில் அடைக்கப்போவதில்லை. பரீட்சை பற்றிய பயம் துளியும் வேண்டாம் நீங்கள் படித்ததை வைத்தே பரீட்சையை சிறப்பாக செய்ய முடியும். வெற்றி உங்களதே

Physical Manual PDF
Physical Manual PDF

Голосовое сообщение03:47

என் அன்பின் மாணவர்களே ஏற்கனவே குறிப்பிட்ட அலகுகளுக்கான Theory மற்றும் கடந்த கால வினக்காளுக்கான விளக்கம் மற்றும் இலகு முறைகளை Physics Chamber இன் Physics manual ஊடாக வழங்கியிருந்நோம். இன் ஷா அல்லாஹ் இதன் அடுத்த கட்டமாக பெளதிகவியலின் மிகுதி அலகுகளுக்கும் 2011-2026 வரையான மிகுதி கடந்தகால வினாக்களுக்கான விளக்கங்கள் மற்றும் இலகு முறையில் விடயைய தட்டும் முறைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதை Physics Manual Version -02 PDF இனூடாக வழங்குவதா அல்லது mobile phone Application இனூடாக வழங்குவதாக? எது பிரயோசனம் என நினைக்கிறீர்கள்???

July 01: Check list 01. ஏற்கனவே படித்து முடித்த அலகுகளில் சிறுபகுதிகள் தெளிவில்லாமல் இருந்திருக்கும். அவற்றை இறுதியில் மீண்டும் ஒரு முறை பார்த்து விளங்குவோம் என்வைத்திருப்பீர்கள். இறுதி நாள் வரை காத்திராமல் இப்போதே அவற்றை தெளிவாக்கிக் கொள்ளுங்கள் ✅✅✅✅ 02. வினாத்தாளின் கட்டமைப்பு, எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும், என்ன என்ன பகுதிகள் கட்டாயம், ஒவ்வொரு வினாவுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நேரம், அவ்வினாக்களுக்கு புள்ளிகள் பகிரப்படும் விதம், marking scheme இல் எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் என்பவற்றை சரியாக விளங்கியுள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் ✅✅✅✅ 03. கணிப்புகளை இலகுவாக செய்யும் முறைகள், மடக்கைகள், திரிகோண கணித கணிப்புகளை (log, sin, cos, & tan) என்பவற்றை மடக்கை புத்தகத்தை பாவித்து செய்யும் முறைகள் என்பவற்றை மீண்டும் ஒரு முறை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக தசமங்கள், உயர் வலுக்கள் வரும் இடங்கள் மற்றும் bar ✅✅✅✅ 04. பாடத்திட்டத்தில் உள்ளடங்கும் சகல சமன்பாடுகளையும் பரிசோதனைகளையும் அவற்றின் படிமுறைகளுடன் மீண்டும் கட்டாயம் மீட்டிக்கொள்ளுங்ள். ✅✅✅✅ ஏற்கனவே கடந்தகால பரீட்சைகளில் வினாத்தாளில் தந்திருந்த சமன்பாட்டை உங்களுக்கு வினாத்தாளில் தராமலே வினாக்கள் கேட்கப்படலாம். ஆகவே எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள். 05. குறைந்தபட்சம் கட்டாம் 2021-2025 வினாத்தாளை நேரம் வைத்து செய்து marking scheme வைத்து அதை மதிப்பிட்டு உங்கள் நிலையை இன்னும் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள் ✅✅✅✅ 06. எதிர்பார்க்கை வினாக்கள் என்று தரப்பட்ட வினாக்கள் மற்றும் பாடப்பகுதிகள் பரீட்சைக்கு வந்தால் உங்களுக்கு அவற்றை செய்ய முடியும் என்பதை உறுதி செய்யுங்கள் ✅✅✅✅ எக்காரணம் கொண்டும் அவை தான் வரப்போகின்றன என நம்பிக்கொண்டு இருக்க வேண்டாம்❌❌❌❌ பாடப்பரப்பில் எந்த ஒரு பகுதியும் வராது என்று நினைக்கவும் வேண்டாம. அது கடந்த 10 வருடங்களாக வராத வினாவாக இருந்தாலும் சரி. கடந்த வரும் வந்த வினாவாக இருந்தாலும் சரி ❌❌❌❌❌ 07. இது வரை காலமும் இரவு முழுக்க படித்து காலை தூங்கி பகல் எழுந்தவர்கள் இனி உங்கள் நேரத்தை மாற்ற ஆரம்பியுங்கள். இவ்வளவு காலமும் பழகியதை சடுதியா ஓரிரண்டு நாட்களில் மாற்ற முடியாது. பரீட்சைக்கு முதல் நாள் இரவு தூக்கம் வராமல் மறுநாள் காலை பரீட்சை மண்பம் சென்றால் உங்கள் நிலை என்னவாகும் ??????? இந்த ஒரு மாதத்தில் அதை இலகுவாக மாற்றியமைக்கலாம். நான் கூறுவதை அலட்சியம் செய்யாதீர்கள். ❌❌❌❌❌❌ 08. நடைமுறைச்சாத்தியம் இல்லாத timetable ஐ போட்டு படிக்க நினைத்தல், தேவையில்லாத யோசனைகள், பயம், சரியாக பரீட்சை செய்ய மாட்டேனோ, பிழை விடுவேனோ என யோசித்தல், அநாவசிய மனழுத்தம் போன்ற அனைத்து negative thoughts இலிருந்தும் உங்களை நீங்களே வெளியேற்றுகள்♻️♻️♻️♻️ சிறப்பாக பரீட்சை செய்யலாம் எனும் மனநிலையை உருவாக்குங்கள். 🏆🏆🏆 கடுமையாக படித்து பரீட்சை செல்ல பயப்படுபவனை விட ஓரளவுக்கு படித்து தைரியமாக பரீட்சை சென்று நிதானமாக விடையளிப்பவன் சிறந்த பேறுபேறை பெறுகிறான் என்பதை உணருங்கள். 🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️ உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருங்கள். 🤴🤴🤴🤴 நான் இதுவரை உங்களை கண்டிராவிட்டாலும் என்றும் எனது பிரார்த்தனை உங்களுக்கு உண்டு நாம் வெறும் பெளதிகவியலால் இணைந்த இதயங்கள் அல்ல பெளதிகவியல் கொண்டு இயங்கிய மூளைகள் கணைகள் இலக்கை தாக்கினால் மட்டும் போதாது. தகர்க்கட்டும் 🏹🏹🏹🏹 இறைவன் துணையுடன் நிச்சயமாக வெற்றி உங்களதே Eng KM Mirzaan Physics Chamber 01-07-2026

26 இல் பரீட்சை எழுதும் மாணவர்களே… நீங்கள் இம்முறை பரீட்சைக்கு நன்றாக தயார்செய்திருப்பீர்கள். இன் ஷா அல்லாஹ், சிறந்த பெறுபேறை பெறும் வகையில் நாங்கள் பரீட்சையை செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். நீங்கள் பரீட்சையை சிறப்பாக எழுதியதன் பின்னர் எம்மோடு இணைந்து அடுத்த batch மாணவர்களுக்கு உதவ விரும்பினால் உங்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்க தயாராக உள்ளோம். நன்றாக தேர்ச்சி பெற்ற உதவ விரும்பும் மாணவர்கள் எம்மோடு இணையலாம்.