490
Подписчики
Нет данных24 часа
+17 дней
-630 дней
Архив постов
#திருமயிலை_கபாலீச்சரத்தில்
இன்று (08/10/2026) நடைபெற்ற
#புரட்டாசி_மாத_கிருஷ்ணபட்ச #குருவார_பிரதோஷ_வழிபாடு🙏
🙏✨🔱✨🌺✨❤️✨🌺✨🔱✨🙏
#மயிலையே_கயிலை
#கயிலையே_மயிலை
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத
ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104-வது திவ்ய தேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
.
• மூலவர்: சௌமிய நாராயணன்.
• தாயார்: திருமாமகள் (மகாலட்சுமி).
• அஷ்டாங்க விமானம்:
இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான அஷ்டாங்க விமான அமைப்பைக் கொண்டுள்ளது.
• 3 நிலைகளில் பெருமாள்:
• தரை தளம்: நர்த்தன கிருஷ்ணர் (நடனக் கோலம்).
• இரண்டாம் தளம்: சயனத் திருமேனி (அதிசேஷன் மீது அனந்த சயனம்).
• மேல் தளம்: நின்ற திருக்கோலம் (சௌமிய நாராயணப் பெருமாள்).
வரலாற்று முக்கியத்துவம்
• பெயர் காரணம்: தேவர்களைத் துன்புறுத்திய இரணியனை வதம் செய்ய மும்மூர்த்திகளும் தேவர்களும் கூடி (கோஷ்டி சேர்ந்து) ஆலோசனை செய்த தலம் என்பதால் இது 'திருக்கோஷ்டியூர்' எனப் பெயர் பெற்றது.
• இராமானுசர் உபதேசம்: எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய' என்ற திருமந்திரத்தை ராமானுசருக்கு குரு திருக்கோட்டியூர் நம்பிகள் உபதேசித்த புனித பூமியாகும். ராமானுசர் இத்தலத்தின் ராஜகோபுரத்தின் மீது ஏறி நின்று அனைத்து மக்களுக்கும் அந்த மந்திரத்தை உரக்கக் கூறினார்.
திறக்கும் நேரம்
• காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
• மாலை 3:45 மணி முதல் இரவு 7:30 மணி வரை (வார இறுதி நாட்களில் நேரம் சற்று மாறுபடும்)
==========================================
பெரியாழ்வார் பாசுரம்:
கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடுசீர்
செம்பொனார் மதிள் சூழ் செழுங் கழனியுடைத் திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே... !!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பூரம் நட்சத்திர சிறப்பு
புரட்டாசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த புனிதமான நந்தவனத்தில் சிறப்பு புறப்பாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
*_♏ விருச்சிகம்-ராசி: 🦂_*
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைக்கூடும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* வடக்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 9.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* வெண் மஞ்சள் நிறம்.
*⭐️ விசாகம்:* குழப்பம் விலகும்.
*⭐️ அனுஷம்:* மகிழ்ச்சியான நாள்.
*⭐️ கேட்டை:* ஆரோக்கியம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு-ராசி: 🏹_*
வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கமான சூழல் காணப்படும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்களின் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மனத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* தென்மேற்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 5.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* பொன்னிறம்.
*⭐️ மூலம்:* ஒத்துழைப்பான நாள்.
*⭐️ பூராடம்:* மாற்றங்கள் பிறக்கும்.
*⭐️ உத்திராடம்:* குழப்பம் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம்-ராசி: 🦌_*
மனதில் இருந்த குழப்பங்கள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறுதூரப் பயணங்களால் மனதில் தெளிவுகள் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* வடகிழக்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 3.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* ஆரஞ்சு நிறம்
*⭐️ உத்திராடம்:* குழப்பங்கள் குறையும்.
*⭐️ திருவோணம்:* தெளிவுகள் ஏற்படும்.
*⭐️ அவிட்டம்:* தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம்-ராசி: 🍯_*
நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் உடல் சோர்வு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* வடமேற்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 6.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* வெள்ளை நிறம்.
*⭐️ அவிட்டம்:* தாமதமான நாள்.
*⭐️ சதயம்:* விவேகத்துடன் செயல்படவும்.
*⭐️ பூரட்டாதி:* சிந்தித்து செயல்படவும்.
*_◄•━━━━━━━━━━━━━━•►_*
*_♓ மீனம்-ராசி: 🐟_*
மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* வடக்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 3*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* மஞ்சள் நிறம்.
*⭐️ பூரட்டாதி:* ஆசைகள் நிறைவேறும்.
*⭐️ உத்திரட்டாதி:* ஒத்துழைப்பான நாள்.
*⭐️ ரேவதி:* அறிமுகம் உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*_꧁. 🌈 புரட்டாசி: 𝟮𝟮 🇮🇳꧂_*
*_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟵•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம்-ராசி: 🐐_*
உத்தியோகப் பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* மேற்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 6.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* வெள்ளை நிறம்.
*⭐️ அஸ்வினி:* மேன்மையான நாள்.
*⭐️ பரணி:* உதவிகள் கிடைக்கும்.
*⭐️ கிருத்திகை:* அனுபவம் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம்-ராசி: 🐂_*
எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* தெற்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 1.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* சந்தன நிறம்.
*⭐️ கிருத்திகை:* விவேகத்துடன் செயல்படவும்.
*⭐️ ரோகிணி:* இலக்குகள் பிறக்கும்.
*⭐️ மிருகசீரிஷம்:* சூட்சுமங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்-ராசி: 🤼♀️_*
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* தென்கிழக்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 3.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* ஆரஞ்சு நிறம்.
*⭐️ மிருகசீரிஷம்:* ஆதாயகரமான நாள்.
*⭐️ திருவாதிரை:* பிரச்சனைகள் குறையும்.
*⭐️ புனர்பூசம்:* குழப்பங்கள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம்-ராசி: 🦀_*
பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிதானமான செயல்பாடுகள் எதிர்ப்புகளை குறைக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில்நுட்பக் கருவிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* மேற்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 5.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* வெளிர் சிவப்பு நிறம்.
*⭐️ புனர்பூசம்:* சாதகமான நாள்.
*⭐️ பூசம்:* எதிர்ப்புகள் குறையும்.
*⭐️ ஆயில்யம்:* புரிதல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம்-ராசி: 🦁_*
வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பணிகளில் இருந்த இழுபறியான சூழல் மறையும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். மனை நிமித்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* தெற்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 1.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* வெண் மஞ்சள் நிறம்.
*⭐️ மகம்:* வாய்ப்புகள் கிடைக்கும்.
*⭐️ பூரம்:* புதுமையான நாள்.
*⭐️ உத்திரம்:* மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி-ராசி: 👩_*
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் உள்ள தடைகளை அறிவீர்கள். பொது வாழ்வில் மாறுபட்ட சூழல்கள் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் முழுமை இன்றி ஈடுபடுவீர்கள். குணநலன்களில் மாற்றம் காணப்படும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* வடக்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 6.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* சிவப்பு நிறம்.
*⭐️ உத்திரம்:* வாய்ப்புகள் கிடைக்கும்.
*⭐️ அஸ்தம்:* கவனம் வேண்டும்.
*⭐️ சித்திரை:* மாற்றம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம்-ராசி: ⚖️_*
எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி ஏற்படலாம். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கலாம். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்களும் அனுபவங்களும் கிடைக்கும்.
*🧭 அதிர்ஷ்ட திசை:* தெற்கு
*🔢 அதிர்ஷ்ட எண்: 2.*
*🎨 அதிர்ஷ்ட நிறம்:* பச்சை நிறம்.
*⭐️ சித்திரை:* வாய்ப்புகள் ஏற்படும்.
*⭐️ சுவாதி:* ஆர்வம் ஏற்படும்.
*⭐️ விசாகம்:* அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
Sri_Ayyappan_Arutkavasam_Raju,Vani_Jairam,Dinesh_Anand,Veeramani.mp39.12 MB
