Dr Thilshan Nizam
Open in Telegram
1 641
Subscribers
No data24 hours
-17 days
-430 days
Posts Archive
1 641
Dear Students!
இதன் பிறகு இந்த Channel இல் A.L posts இடப்படாது.
அனைத்தும் எனது பின்வரும் channel இலேயே இடப்படும்.
https://t.me/learnbiowithdrthilshan
1 641
Repost from Learn Biology DRTN
2025 AL பெறுபேறுகள் திருப்திகரமாக அமையாததால், இம்முறை (2026) மீண்டும் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவரா நீங்கள்?
இந்த காணொளி உங்களுக்குத்தான்! உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்...
https://youtu.be/8faCoKcoJ84?si=1uWtZgq-VhxMUzpw
1 641
Repost from Learn Biology DRTN
Hey Guys! 😎
2028 Batch students இற்கான online classes ஏற்கனவே start பண்ணிட்டோம் 🚀.
நானும் Shazna teacher உம் சேர்ந்து தான் இந்த classes செய்றோம் 🤝.
எங்கட Classes எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணுமா? 🤔
நான் எதுவுமே type பண்ண போறதில்ல 😌.
நீங்களே எங்கட teaching method ஐ இதுவரை நடந்த classesட recordings ஐ freeயா பார்த்துத் தெரிஞ்சிக்கலாம் 🎥✨.
கீழ இருக்குற Link மூலமா எங்கட Telegram group ல நீங்களும் இப்பவே join ஆகி recordings ஐ பாருங்க 👇📲
https://t.me/+IZoijOE1HD84NjI1
இந்த group 2028 students இற்கு மட்டுமில்லாம, எல்லாருக்கும் useful ஆ இருக்கும் 👍.
👉 AL படிக்கிறது எப்படி? 📚
👉 Easy ஆவும் smart ஆவும் படிக்கிறதுக்கான tips என்ன? 💡
👉 AL படிக்கிறப்ப நீங்க face பண்ண போற பிரச்சினைகள் என்ன? அத எப்படி handle பண்ணுறது? 🔥
போன்ற முக்கியமான விஷயங்களோட,
👉 AL Biology syllabus,
👉 AL Biology paper structure,
👉 Unit 01 recordings உம் இதில் இருக்கு 🧬📖.
இப்பவே join ஆகி பார்த்துத் தெரிஞ்சிக்கங்க 👀✨.
எங்கட online classes ல join ஆகணும்னா, எங்கட Admin இற்கு ஒரு WhatsApp message போடுங்க 📲
0758485007
1 641
Repost from Learn Biology DRTN
இது நம்ம ஏரியா 😎 — சும்மா அரங்கம் அதிரும் 💥🔥.
முடிஞ்சா உங்க friends க்கும் Share பண்ணுங்க!
1 641
Repost from Learn Biology DRTN
Hey guys! 😎
என்னோட online classes பத்தி தான் நீங்க கேள்விப் பட்டிருப்பிங்க 🤔. என்னோட physical classes கேள்விப்பட்டதில்லயே 😌.
நான் physical classes உம் செய்றன் guys 💪.
📍 Place: Kalmunai Brilliant Institute
Main ஆ 2027 Batch க்குத் தான் class செய்றன் 🎯 (others கூட join ஆகலாம் 👍).
ஒரு விசயம் தெரியுமா? 😏
Coming April 11, நான் உங்கட syllabus லயே கடும் important ஆன and very interesting ஆன topic ஒன்டு start பண்ண போறன் 🚀🔥.
அது தான் Unit 05: Animal Forms and Function 🧬🐾
இனி தெரியும் தானே, அது நம்ம ஏரியா 😎 — சும்மா அரங்கம் அதிரும் 💥🔥.
என்ட physical class எப்படி இருக்கும்னு யோசிக்கிறிங்க தானே 🤔, நானே simple ஆ சொல்றன் 👇
சும்மா notes எழுதிக் கொண்டே இருக்கும் class ஆ இது இருக்காது ❌✍️.
முதல்ல subject concept ஐ clear ஆ explain பண்ணுவன் 🧠,
அதுக்கப்புறம் short notes எடுக்க வைப்பன் 📒,
அப்புறம் questions practice பண்ண வைப்பன் ❓🔥.
அதோட அடிக்கடி exams நடக்கும் 📝, practice ரொம்ப முக்கியம் — மறந்துடாதீங்க 💯.
And உங்க எல்லாருக்கும் personal care maintain பண்ணுவன் 🤝❤️.
விசயம் என்னன்னா 😌, இந்த class ல 2027 மட்டும் இல்லாம, unit 05 complete பண்ணனும்னு நினைக்கிற யாரும் participate பண்ணலாம் 👍.
ஆனா ஒரு limit தான் இருக்கும் 🚫 —
நெறய பேர எடுத்தா personal care கொடுக்க கஷ்டம் ஆகிடும் 😅.
So online class பிடிக்காத students இருந்தா 🙋♂️,
Kalmunai Brilliant Institute க்கு ஒருக்கா வந்து பாருங்க 👀.
என்னோட teaching உங்களுக்கு பிடிச்சிருந்தா continue பண்ணலாம் 👍,
பிடிக்கலன்னா… escape 😄🏃♂️💨
ஆனா ஆரம்பத்துலயே சொல்லிடுறன் ⚠️,
சும்மா fun பண்றதுக்கு class வாறவங்களுக்கு என் class கஷ்டமாத் தான் இருக்கும் 😅.
படிக்கனும், விளங்கனும்னு interest ஓட வாறவங்களுக்கு மட்டும் தான் அது இஷ்டமா இருக்கும் 💯🔥.
Class ல join ஆகுறதுக்கு simple ஆ ஒரு WhatsApp message போடுங்க 📲
🔥 Limited seats — first come basis!
0769002515
1 641
Repost from Learn Biology DRTN
Hey Students!😊
நெறய பேர் Biology எப்படி படிக்கிறன்னு அடிக்கடி கேட்குறிங்க... 🤔
சிம்பிளா சொல்லவா?😉
1. Concept ஐ விளங்குங்க. 🧠✨
எல்லாரும் Biology என்டாலே மனப்பாடம் செய்ற பாடம்னு சொல்லிக்கிட்டு, Resource Book ஐ வேதம் ஓதுற மாதிறி ஓதி கரைச்சிக் குடிக்க try பண்றிங்க.😅
இது வேலைக்கு ஆகாது.❌
மனப்பாடம் மட்டும் பண்ணிங்கன்னா easy ஆ மறந்துடும். 🫠
மனப்பாடம் பண்ண முதல் நீங்க செய்ய வேண்டிய வேல,👉 concept ஐ விளங்குறது தான்.
Biology லயும் concept இருக்கான்னு கேட்கிறிங்களா? ஆமா நிச்சயமா ஒவ்வொரு விசயத்துக்கு பினுனாலயுமே concept இருக்கு. 💡
அத சொல்லித் தரத்தானே நாங்க இருக்கம். 🥰
2. Shortnotes எடுங்க. 📝🎨
படிச்சி முடிச்ச உடனேயே, அந்த subject ல shortnotes எடுத்துடுங்க.✔️
Biology ட தாரக மந்திரமே 👉 shortnotes தான். 🔥
Shortnotes எங்குறது resource book ல இருக்குறத அப்படியே பார்த்து குட்டி எழுத்துல எழுதுறது இல்ல.
Shortnotes எங்குறது நீங்க விளங்கின concept ஐ, உங்களுக்கு விளங்கக் கூடிய method ல colurfull ஆவும், image format லயும், code words எல்லாம் use பண்ணி எழுதி வச்சிக்கிறது. 🎯
அந்த shortnotes ஐ பிறகு பார்க்குறப்ப ful theory உம் கண்ணுக்கு முன்னால வரும். 👀✨
Shortnotes எப்படி எடுக்குறன்னும் நாங்க சொல்லித் தருவம். 😉
3. Revise பண்ணுங்க.
இது Biology ல ரொம்ப முக்கியமான விசயம். ⚠️
ஒரு தரம் விளங்கிப் படிச்சி shortnotes எடுத்து மூடி வச்சிட்டா, படிச்ச எல்லாம் memory ல அப்படியே இருக்கும்னு தப்புக் கணக்கு போடாதிங்க. ❌
ஒரு 2 weeks போறப்பவே அரவாசி மறந்துடும். 😬
So என்ன பண்ணனும்?
👉 2 weeks ல shortnotes ஐ எடுத்து again பார்க்கனும், எல்லாத்தையுமே revise பண்ணிக்கனும்.
👉 Again ஒரு 2 months ல revise பண்ணனும்.
Revise பண்றப்ப திரும்ப full ஆ resource book படிக்கத் தேவல்ல. அதுக்குத் தானே shortnotes எடுத்தம். 😎
4. Practice பண்ணுங்க.✍️🔥
மேல இருக்குற மூனு விசயத்தையும் perfect ஆ பண்ணினாலும், practice பண்ணலன்னா, எல்லாத்தையும் zero வால பெருக்கினத்துக்குச் சமன். ❌
Practice will make you perfect. ஒவ்வொரு unit படிக்கிறப்பவும் அதோட சம்பந்தமான அத்தனை past paper questions ஐயும் விடாம செய்ங்க.
👉 குறஞ்சது 10 வருச paper செய்ங்க. திரும்ப term test வாரப்ப, term குரிய practice எடுங்க.
👉 Again a.l exam நெருங்கும் போது, Full paper செய்ங்க.
2026 exam செய்ய இருக்குறவங்க, இப்ப உங்களுக்கு theory முடிஞ்சோ முடியல்லயோ நீங்க full paper செய்ய start பண்ணி இருக்கனும். பண்ணலன்னா இனி பண்ணுங்க.
Full paper சும்மா செய்றல்ல, timer ஐ on பண்ணிட்டு exam மாதிரி செய்ங்க. ⏱
செஞ்சிட்டு marking scheme எடுத்து correct பண்ணுங்க. அப்போ நீங்க விட்ட பிழைகள correct பண்ணுங்க, அதோட related ஆன theory ஐ பாருங்க.
என்னவொரு exam நடந்தாலும், அதுல தவறாம particpate பண்ணுங்க. 🚀
5. Consistency. 🕒💪
இது a.l ஐப் பொறுத்த வரை ரொம்ப ரொம்ப முக்கியம். 🔑
ஒரு motivation வந்தா today நல்லா படிக்கிறது. பிறகு 05 நாளைக்கு ஒன்டுமே படிக்கிறல்ல. பழைய குருடி கதவத் திறடி என்ற மாதிரி phone லயே காலத்தத் தள்றது.
இப்படி இருந்தா நிச்சயமா நீங்க a.l success பண்ண முடியாது.
👉 சின்ன விசயத்தச் செஞ்சாலும் அத தொடர்ந்து செய்யனும்.
👉 Daily படிக்கனும்.
👉 அதுலயும் 3 subjects ஐயும் daily படிச்சா ரொம்ப நல்லம்.
👉 Biology க்கு குறஞ்சது 2 hours daily ஒதுக்குங்க self study க்கு. Not class time.
இப்ப புரிஞ்சதா? Biology படிக்கிற எப்படின்னு. ஐந்து விசயங்கள் தான்.
Concept 🧠 → Shortnotes 📝 → Revision 🔁 → Practice ✍️ → Repeat 🔄
இன்னும் என்னவும் தெரிஞ்சிக்கனும்னா whatsapp பண்ணுங்க. 0769002515
Best wishes
1 641
Repost from Learn Biology DRTN
Unit 01 Updated Model Paper வெளியிடப்பட்டுள்ளது!
https://t.me/alpapersbydrtn/250/1078
1 641
Repost from Learn Biology DRTN
Biology மிகவும் இலகுவானதும், சுவாரஸ்யமானதுமான பாடம் பிள்ளைகள்.
ஆனால் அதனை ஒரு பாடமாக்கும் பாடமாகவும், கஷ்டமான பாடமாகவும் சித்தரித்து வைத்திருக்கின்றனர் சிலர்.
எல்லாம் நீங்கள் படிக்கும் விதத்திலும், நாங்கள் கற்பிக்கும் முறையிலும் தங்கியுள்ளது.
அவ்வளவு தான்!
Physics, Chemistry இல் எல்லாம் A எடுத்த பல கெட்டித்தனமான மாணவர்கள், Biology இல் B உம், C உம் எடுத்திருப்பது கவலை தருகிறது.
Biology கஷ்டமான பாடம், அதனை பாடமாக்கித் தான் படிக்க வேண்டும் எனும் மாயையிலிருந்து வெளியேறி வாருங்கள் பிள்ளைகளே!
Biology ஐ விளங்கிக் கற்போம்!
1 641
Repost from Learn Biology DRTN
இவை எமது online மாணவர்கள் சிலரின் பரீட்சைப் பெறுபேறுகள்.
2025 batch இற்கு நாம் Paper class மற்றும் Revision மாத்திரமே செய்திருந்தோம். அதுவும் அவ்வகுப்புகளில் மிகக்குறைந்தளவிலான மாணவர்களே பங்குபற்றியிருந்தனர்.
அவர்கள் அனைவருமே சித்தியடைந்துள்ளமை மன நிறைவைத் தருகிறது.
அத்தோடு Biology இல் இத்தகைய சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது.
அவர்களது இந்தப் பெறுபேற்றுக்கு பிரதான காரணம் அவர்களது சுயகற்றலும், முயற்சியுமே. அது இல்லாமல் எதுவும் சாத்தியப்படாது.
அதற்கு மேலதிகமாக நாங்கள் வகுப்பில் வழங்கிய தொடர்ச்சியான பயிற்சி, மற்றும் வழிகாட்டல்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியுள்ளது.
கடந்த முறை Biology இல் குறைவான பெறுபேற்றை பெற்ற சில மாணவர்கள், எமது வகுப்புகளூடாக இம்முறை சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எவை எடுத்துக்காட்டுக்கள்!
ஏனையவர்கள் தொடருங்கள், முயற்சி திருவினையாக்கும்.
1 641
Repost from Learn Biology DRTN
Dear Students!
நீங்கள் எதிர்பார்த்த பரீட்சைப் பெறுபேறுகள் வரவில்லை என்று கவலையா?
தலை விறைத்தது போல் உள்ளதா?
கவலை என்பது மனிதனின் உணர்வுகளுள் முக்ககயமானது, வாழ்க்கையில் ஒரு துன்பமான சம்பவம் நிகழும் போது கண்டிப்பாய் கவலைப்பட வேண்டும்.
அதன்மூலம் உங்கள் மனதிலுள்ள துயரங்கள் வெளி உலகில் கொட்டப்படும்.
எனவே கவலைப்படுங்கள், அழ முடிந்தால் அழுங்கள், உங்களுக்கு பிடித்தவர்களுடன் அந்தக் கவலையைச் சொல்லி வருத்தப்படுங்கள்.
இவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை, கவலைப்படும் போது தான் உங்கள் மனதில் உள்ள பாரம், வடு குறைவடையும். இதுவே மனித இயல்பும், இயற்கையும்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்யவே கூடாத ஒரு விடயம் உள்ளது. தயவு செய்து அதை மட்டும் செய்து விடாதீர்கள்.
அதுதான் அவசரமாய் முடிவெடுப்பது.
மனது உணர்வுகளால் நிறைந்திருக்கிற போது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் அவ்வளவு ஆரோக்கியமாக அமையாது.
இப்போது நீங்கள் எடுக்கும் முடிவு அனகமாகத் தவறானதாய்த் தான் அமையும்.
அடுத்த முறை படிப்பதா? அல்லது கிடைப்பதைக் கொண்டு திருப்தி கண்டு கொள்வதா? அல்லது வேறு பாதைகளைத் தேர்வு செய்வதா? என உடனடியாக முடிவெடுக்க வேண்டாம்.
அதற்கு நாட்கள் உள்ளன, உங்கள் மனதின் பாரம் சற்றுக் குறையட்டும். அடுத்த மூன்று நாட்களை உங்கள் கவலைகளை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அல்லது நீங்களே உங்களிடம் சொல்லித்தீர்க்கும் நாட்களாக வைத்துக் கொள்ளுங்கள்.
நிச்சயம் அனைத்திலும் ஒரு நலவு இருக்கும். அந்த நலவினை இப்போது உங்களால் உணர முடியாதிருக்கும். மூன்று நாட்கள் சென்ற பிறகு, அடுத்த முடிவு குறித்துச் சிந்திக்கலாம்.
அப்போது அதனை யாரிடம் பேசுவது என யோசிக்கலாம். இப்போது கவலைகளைப் பகிர்ந்து விட்டு, நன்கு உணவுண்டு தூங்கச் செல்லுங்கள்.
உங்கள் நண்பர்கள் யாருடைய பெறுபேறுகளையும் நீங்களாக வலிந்து பார்க்க வேண்டாம். உற்ற நண்பர்கள் என்றால் மட்டும் கேட்டு விட்டு வாழ்த்தி முடித்துக் கொள்ளுங்கள். ஏனையவர்களின் பெறுபேறுகள் இப்போது உங்களுக்குத் தேவையில்லை.
இப்போது உங்களுக்குத் தேவையானதெல்லாம், மனதுக்கு ஒரு ஆறுதலும், நிம்மதியும்.
இந்தச் செய்தியை உங்களது பெற்றோருக்கும் காண்பியுங்கள்.
அன்புள்ள பெற்றோர்களே!
உங்கள் பிள்ளை சிறந்த பெறுபேற்றினை எடுக்கவில்லை என்பது துன்பகரமானது தான், உங்களுக்குக் கோபத்தை வரவைப்பது தான்.
ஆனால் கோபத்தை அதிகமாக வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் பிள்ளையின் நிலையில் நீங்கள் இருப்பதாக நினைத்துப் பாருங்கள்.
இத்தகைய கவலையான நிலையில் நீங்கள் எதை எதிர்பார்ப்பீர்கள், கோபத்தையா? ஆறுதலையா?
உங்களால் ஆறுதலை வழங்க முடியவில்லையா? கோபத்தை சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். எதுவும் பேசிவிடாதீர்கள்.
உங்களுக்கும் சொல்லும் ஒரே விடயம் தான், கோபம் எனும் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நீங்களும் இப்போது முடிவெடுக்க வேண்டாம்.
நீங்களும் மூன்று நாட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் பிள்ளையிடமும், பேச வேண்டியவர்களுடனும் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம்.
இப்போது கொஞ்சம் அமைதியாயிருங்கள், உங்களால் ஆறுதல் படுத்த முடியாது விடின், பிள்ளைக்கு ஆறுதல் சொல்லக்கூடிய நெருக்கமான ஒருவரைப் பிள்ளையுடன் பேசச் செய்யுங்கள்.
விரும்பும் மாணவர்கள் என்னையும் தொடர்பு கொள்ளலாம், ஆலோசனைகளைப் பெறலாம்.
வட்சப் செய்யுங்கள்: 0769002515
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
முயற்சி திருவினையாக்கும்;
உங்களது முயற்சியின் பலனைக் கண்டடைந்துள்ளீர்கள்.
சந்தோசம் இப்போது உச்சத்தில் இருக்கும், நீங்களும் உங்களது அடுத்து வரும் மூன்று நாடஅகளை சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகப் பயன்படுத்துங்கள்.
நீங்களும் அவசரமாய் முடிவெதுவும் எடுக்கத் தேவையிலல்லை.
மிகுதியை ஆறுதலாய்ப் பார்த்துக் கொள்வோம்.
நன்றிகள்!
1 641
Dear Students!
2025 A.L Results Released...
Please share your results with me.
0758485007
1 641
Repost from Learn Biology DRTN
Dear 2028 Students!
இன்றைய வகுப்பிற்கான Zoom Link:
(Maximum Share பண்ணுங்க!)
Topic: 2028 Batch - Unit 01
Time: Mar 30, 2026 08:30 PM Colombo
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/89116817972?pwd=Zeae4mOOozmpXbRdJpBFNotmtb7kHx.1
Meeting ID: 891 1681 7972
Passcode: 069613
