en
Feedback
ஸுன்னஹ் அகாடமி Sunnah Academy

ஸுன்னஹ் அகாடமி Sunnah Academy

Open in Telegram
2 033
Subscribers
-224 hours
-17 days
+1130 days
Posts Archive
https://youtube.com/shorts/DFnFgImvJ6k?si=bozXIu-SvJYMgVP3 فاذكروني أذكركم நீங்கள் என்னை ஞாபகப்படுத்துங்கள்; நான் உங்களை ஞாபகப்படுத்துவேன்.

ஃபிக்ஹ் வகுப்புகள் பாடம் 14 https://youtu.be/U-dFdkmGffI பாடம் 15 https://youtu.be/yOHeLaG8sJ4 பாடம் 16 https://youtu.be/RA6uZMdV0n0 பாடம் 17 https://youtu.be/iow3xIauOvY பாடம் 18 https://youtu.be/PH3DOwOysao

Repost from N/a
*நபி ﷺ அவர்களை நீங்கள் பின்பற்றினால் மாத்திரமே அள்ளாஹ் உங்களை நேசிப்பான்* قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ (நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: நீங்கள் அள்ளாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அள்ளாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்துவிடுவான்; அள்ளாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். [அல்குர்ஆன் 3:31] 🗒 *விளக்கக் குறிப்புகள்:* ✅ அள்ளாஹ்வை நேசிப்பது கட்டாயக் கடமை, அதற்குரிய அடையாளம், அதனால் விளையும் பயன் ஆகியவற்றை இந்த ஆயஹ் உள்ளடக்கியுள்ளது. ✅ தாம் அள்ளாஹ்வை நேசிப்பதாக சொல்பவர்களின் உண்மை தன்மையைப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியதாக இந்த ஆயஹ் இருக்கிறது. ✅ அள்ளாஹ்வை ஒருவர் நேசிப்பதற்குரிய அடையாளம் அவர் அவன் அனுப்பிய தூதரைப் பின்பற்றுவதாகும். ✅ அள்ளாஹ்வை நேசிப்பதாகக் கூறிவிட்டு அள்ளாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றாமல் இருப்பவர் உண்மையில் அள்ளாஹ்வை நேசித்தவராக இருக்க முடியாது. ✅ ஒரு வாதத்திற்கு அவரிடம் அள்ளாஹ்வின் மீது நேசம் இருந்தாலும் கூட, அள்ளாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றாமல் இருப்பதால் அந்த நேசம் அவருக்குப் பயனளிக்காது. ✅ அள்ளாஹ் தனது தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றுபவர்களையே நேசிப்பான். நபி ﷺ அவர்களை நீங்கள் பின்பற்றாவிட்டால் அள்ளாஹ் உங்களை நேசிக்க மாட்டான். ✅ ஒரு இறைநேசனுக்குரிய அடையாளம் - அதாவது அள்ளாஹ் ஒருவனை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம் அவன் அள்ளாஹ்வின் தூதர் ﷺ அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதாகும். ✅ எந்த அளவுக்கு ஒருவர் அள்ளாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றுகிறாரோ அந்த அளவுக்கு அள்ளாஹ் அவரை நேசிக்கின்றான்; அவருடைய பாவங்களையும் மன்னிக்கின்றான். ✅ நாம் அள்ளாஹ்வை நேசிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதைவிட, அள்ளாஹ் எங்களை நேசிக்கிறானா? என்பதே மிக முக்கியமானது. ✅ தங்களை அஹ்லுல் குர்ஆன் / குர்ஆனிகள் என்று அழைத்துக் கொள்ளும் குர்ஆன் மட்டும் போதுமானது; நபி ﷺ அவர்களின் ஸுன்னஹ் அவசியமில்லை என்று வாதிடும் வழி தவறியவர்களுக்கு இந்த ஆயஹ் மறுப்பாக அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை ஒருவரை இஸ்லாமை விட்டும் வெளியேற்றிவிடும். அவர்கள் அள்ளாஹ்வையும் அவனது வேதத்தையும் நேசிப்பது உண்மையாக இருந்தால் நபி ﷺ அவர்களைப் பின்பற்றி இருப்பார்கள். 📚 பார்க்க: - تفسير ابن كثير - تفسير السعدي ✍️ ஹுஸைன் இப்னு றஃபீக் (மதனி) 🏫 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

*நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எப்போது பிறந்தார்கள்?* ✅ நபி ﷺ அவர்கள் திங்கட்கிழமை பிறந்தார்கள் என்று ஆதாரபூர்வமான ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. ✅ ஆமுல் பீல் எனும் யானை வருடத்தில் பிறந்தார்கள் என்பதும் பலமான அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளது. தற்கால முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் இதனை இன்னும் உறுதி செய்கின்றன. இது கி.பி 571 அல்லது 570 வது வருடம். ✅ றபீஉனில் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள் என்பது பிரபல்யமான கருத்தாகும். எனினும் றபீஉனில் ஆகிர், ஸபர், றமளான் போன்ற கருத்துக்களும் வரலாற்று நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் கருத்தே பலமாகத் தெரிகிறது. ✅ எந்தத் திகதியில் பிறந்தார்கள் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. றபீஉனில் அவ்வல் மாதத்தில் பிறை 2, 3, 8, 9, 10, 12, 22, 17 என பல கருத்துக்கள் உள்ளன. இவற்றில் எதற்கும் ஆதாரபூர்வமான அறிவிப்புகள் இல்லை. மக்கள் மத்தியில் 12 வது நாள் என்பது பிரபல்யமாக இருக்கின்றது. ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த முனாவி (றஹிமஹுள்ளாஹ்) என்ற அறிஞர், 2 வது நாள் என்பது அதிகமான அறிஞர்களின் கருத்து என்று கூறியுள்ளார். ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இப்னு ஹஜர் (றஹிமஹுள்ளாஹ்) அவர்கள், அதிகமான அறிவிப்புகளில் 8 வது நாள் என்று உள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். 1885 இல் வபாதான முக்கியமான எகிப்திய வானியல் அறிஞர் மஹ்மூத் பாஷா என்பவர் தனது வானியல் ஆய்வை மையமாக வைத்து, நபி ﷺ அவர்கள் பிறந்தது 9 வது நாள் என்று கருதுகிறார். பல தற்கால ஆய்வாளர்கள் இந்தக் கருத்தை பலமாகக் கருதுகின்றனர். அதாவது கி.பி 571 ஏப்ரல் மாதம் 11 வது திகதி சனிக்கிழமை பின்னேரம் றபீஉனில் அவ்வல் மாதத்தில் தலைப் பிறை மக்கஹ்வில் வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதற்கு சாத்தியமான நாளாக இருந்தது. இதனடிப்படையில் அந்த றபீஉனில் அவ்வல் மாதத்தில் பின்வரும் பிறை நாட்கள் திங்கள்களாக இருந்துள்ளன: - 2 (கி.பி 571/4/13) - 9 (கி.பி 571/4/20) - 16 (கி.பி 571/4/27) - 23 (கி.பி 571/5/4) - 30 (கி.பி 571/5/11) நபி ﷺ அவர்கள் றபீஉனில் அவ்வலில் பிறந்திருந்தால் மேற்படி வானியல் ஆய்வின் படி இந்நாட்களில் ஒன்றில் தான் நபி ﷺ அவர்கள் பிறந்திருக்க முடியும். மக்களிடம் பிரபலமான 12 வது நாளுக்கு மேற்படி நாட்களில் நெருக்கமாக இருப்பது 9 வது நாள் என்பதாலும் அறிவிப்புக்களில் வந்துள்ள நாட்களில் 8, 9, 10, 12 ஆகிய நாட்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இருப்பதாலும் பல தற்கால ஆய்வாளர்கள் 9 நாள் என்ற கருத்தை பலமாக கருதியிருக்கலாம். ஆனாலும் முனாவி (றஹிமஹுள்ளாஹ்) அவர்களின் கருத்துப்படி, 2 வது நாள் என்பதை அதிகமான அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதனாலும், வானியல் படி அந்த 2 வது நாள் திங்கட்கிழமையாக இருப்பதாலும் 2 வது நாள் நபி ﷺ அவர்கள் பிறந்திருப்பதற்கு அதிக சாத்தியமுள்ளது. அள்ளாஹ்வே மிக அறிந்தவன். 📌 நபி ﷺ அவர்களின் பிறந்த திகதிக்கு மார்க்கத்தில் தனித்துவம் இருக்குமேயானால் அந்தத் திகதியை வரையறுப்பதில் இந்த அளவு கருத்துவேறுபாடு வந்திருக்க முடியாது. அதனை நபி ﷺ அவர்களும் நபித் தோழர்களும் பேணிப் பாதுகாத்து வந்திருப்பார்கள். 📚 உசாத்துணைகள்: - السيرة النبوية الصحيحة - د أكرم العمري. - مسألة: اختلاف العلماء في يوم ولادة رسول الله ﷺ وشهرها - عبد الله بن عبده العواضي. - حوار مع مجيزي الاحتفال بالموالد النبوي - د عبد العزيز الريس ✍️ ஹுஸைன் இப்னு றஃபீக் (மதனி) 🏫 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

*அன்பார்ந்த முஸ்லிம்களே நபி ﷺ அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது?* 👉 அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைக் கற்பது 👉 அதனை வாழ்க்கையில் எடுத்து நடப்பது 👉 அதன் பக்கம் மற்றவர்களை அழைப்பது 👉 மேற்படி விடயங்களில் ஏற்படும் துன்பங்களை சகித்துக் கொள்வது *குறிப்பாக* 👌நபி ﷺ அவர்களின் ஸீறஹ்வை - வரலாற்றைப் படிப்பது, 👌அவர்களின் பண்பாடுகளைப் பரப்புவது, 👌 மங்கிப்போன அவர்களின் ஸுன்னஹ்களை உயிர்ப்பிப்பது, 👌 வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் நபி ﷺ அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்க முயற்சிப்பவர்களுக்கு ஒத்துழைப்பது, 👌 நபி ﷺ அவர்களைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது ஆதாரபூர்வமானது தானா என்பதை அறிவுள்ளவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்வது. அவர்களின் பெயரில் பரப்பப்படும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையோ அல்லது உறுதி செய்யப்படாத செய்திகளையோ பரப்பாமல் இருப்பது. ✅முஹம்மத் ﷺ அவர்கள் அள்ளாஹ்வின் தூதர் என்று நாம் ஏற்றுக் கொள்வதன் அர்த்தம் யாதெனில்: 1️⃣ அவர்கள் சொன்னது என உறுதி செய்யப்பட்ட அனைத்தையும் உண்மை என நம்பவேண்டும். அது எமது புத்திக்கும் விருப்பத்திற்கும் மாற்றமாக இருந்தாலும் சரியே. 2️⃣ அவர்களுடைய கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். 3️⃣ அவர்கள் தடுத்ததில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். 4️⃣ அவர்கள் மார்க்கமாக வழிகாட்டிய முறையில் அல்லாமல் வேறு முறைகளில் அள்ளாஹ்வை வணங்கக் கூடாது. ✍️ ஹுஸைன் இப்னு றஃபீக் (மதனி) 🏫 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

நபி ﷺ அவர்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடலாமா?      https://youtu.be/tojG6QVQ-Rs?si=3P_7yyrw_ObP5VJY&t=18

11- அல்குர்ஆனில் நபித்தோழர்கள் உண்மையான முஅ்மின்கள் (8:74) என்றும் முஅ்மின்களின் வழியல்லாத ஒன்றைப் பின்பற்றக்கூடாது (4:115) என்றும் அள்ளாஹ் கூறியிருக்கின்றான். உண்மை முஅ்மின்களான நபித்தோழர்களிடத்தில் மீலாத் கொண்டாடுவதும் அது நபி ﷺ அவர்களின் மீது வைத்திருக்கும் நேசத்தை வெளிப்படுத்துவதற்குரிய அடையாளமாகவும் இருக்க வில்லை என்றால் மீலாத் விழா மூலம் நபி நேசத்தை வெளிப்படுத்துவது முஅ்மின்களின் வழியாகுமா?   12- இஸ்லாமில் இரண்டு 'ஈத்'கள் (பெருநாள்கள்) மாத்திரமே இருக்கின்றன. மதீனஹ்வாசிகள் குதூகலித்து மகிழ்ந்து கொண்டிருந்த இரு நாட்களுக்கு மாற்றீடாக இவ்விரு ஈத்களும் இஸ்லாமில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனால் இஸ்லாமில் மூன்றாவது ஒரு ஈத் இல்லை. ஈத் என்பது ஒவ்வொரு வருடமும் அதே தினத்தில் திரும்பத்திரும்ப வரும் கொண்டாட்டத்திற்குரிய ஒரு நாளைக் குறிக்கும். நபி ﷺ அவர்களின் மீலாதைக் கொண்டாடுவதால் மூன்றாவது ஒரு ஈத் உருவாக்கப்படுகிறது. மூன்றாவது ஒரு ஈதை மார்க்கம் அனுமதிக்கவில்லை. எனவே மீலாத் என்கின்ற மூன்றாவது ஒரு ஈதை உருவாக்குவதற்கு இஸ்லாமில் அனுமதி உண்டா? 13- முஸ்லிம்களைக் கொன்று குவித்து, மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தி, அராஜகம் செய்த ஆட்சியாளர்களான உபய்திகள் (ஃபாதிமிகள்) எனப்படும் உலமாக்களால் காஃபிர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட அளவுகடந்த ஷீஅஹ் பிரிவினரே ஹிஜ்ரி 363 ஆம் ஆண்டில் மீலாதை முதன்முதலாக அறிமுகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இவர்களுக்கு முன்னர் எவராவது நபி ﷺ அவர்களின் மீலாதைக் கொண்டாடிஇருப்பதற்கான ஆதாரம் இருக்கிறதா? 14- சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி மீலாத் என்பது ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் உபைதிகளால் உருவாக்கப்பட்டாலும் அவர்களின் மீது முஸ்லிம்களுக்கு இருந்த வெறுப்பின் காரணமாக ஸுன்னி முஸ்லிம்களிடத்தில் அது பிரபலமாகவில்லை. எனினும் ஹிஜ்ரி 570 இல் மரணித்த முஈனுத்தீன் இர்பிலி என்பவரால் ஸுன்னிகளுக்கு மத்தியில் அது முதலில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஹிஜ்ரி 630 இல் மரணித்த முளப்பருத்தீன் கூகுபூரி எனப்படும் அய்யூபிய ஆட்சியாளரால் மீண்டும் அது ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தப்பட்டதால் முஸ்லிம்களிடத்திலும் பரவ ஆரம்பித்தது. முஈனுத்தீன் இர்பிலி என்பவருக்கும் முளப்பருத்தீன் எனப்படும் இந்த ஆட்சியாளருக்கும் முன்னர் ஸுன்னி முஸ்லிம்களின் எந்த ஒரு ஆட்சியாளரோ, எந்த ஒரு அறிஞரோ மீலாத் விழாவைக் கொண்டாடியிருக்கிறார்களா? *இல்லை* என்பதே மேற்படி அனைத்துக் கேள்விகளுக்குமான ஒரே பதில். அவ்வாறாயின் மீலாத் கொண்டாடுவது மார்க்கத்தில் இருக்கிறதா இல்லையா என்பதையும், அதனை நீங்கள் இனியும் கொண்டாடப் போகிறீர்களா என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மேற்படி கேள்விகளுக்கு *ஆம்* என்று பதில் சொல்வதற்கு எவராவது முன்வந்து, அதற்குரிய ஆதாரத்தைக் காட்டினால் உடனே நாம் எமது கருத்தை மாற்றிக் கொள்வதோடு, அவருக்கு பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.  ✍️ Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

🎁மீலாத் கேள்வி-பதில் போட்டி💡 நபி ﷺ அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அள்ளாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் ஒரு நற்செயலாக இருந்தால், பின்வரும் கேள்விகளை நாம் நடுநிலையுடன் சிந்தித்துப் பார்ப்போம்: 1- நபி ﷺ அவர்கள், தமக்கு முன்னர் வாழ்ந்த நபிமார்களில் எவருடைய பிறந்தநாளையாவது கொண்டாடியுள்ளார்களா? அல்லது அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுமாறு தமது உம்மஹ்வினருக்கு வழிகாட்டியுள்ளார்களா?   2- நபி ﷺ அவர்கள் தமது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்களா? அல்லது தமது தோழர்களை அதைக் கொண்டாடுமாறு கட்டளையிட்டார்களா? அல்லது அதற்கான ஒரு முறையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்களா? அல்லது தமது பிறந்தநாளைக் கொண்டாடுவது அள்ளாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் ஒரு வணக்கம் என்று கூறியுள்ளார்களா? 3- நபி ﷺ அவர்களை மிகவும் நேசித்தவரும், அவர்களை மிகவும் நெருக்கமாகப் பின்பற்றியவரும் அவர்களுக்குப் பிறகு இந்த உம்மஹ்வின் மிகச்சிறந்த மனிதருமான முதல் கலீபஹ் அபூபக்ர் அஸ்ஸித்தீக் رضي الله عنه அவர்கள், நபி ﷺ அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்களா? 4- அவர்களுக்குப் பிறகு வாழ்ந்த உமர், உஸ்மான், அலீ (றளியள்ளாஹு அன்ஹும்) ஆகிய சிறந்த நேர்வழி நடந்த கலீபஹ்களில் ஒருவரோ அல்லது சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபித்தோழர்களில் ஒருவரோ அல்லது பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்ட நபித்தோழர்களில் ஒருவரோ அல்லது அல்லது பய்அத்துர் றிள்வானில் கலந்து கொண்ட நபித்தோழர்களில் ஒருவரோ அல்லது ஏதோ ஒரு வகையில் ஒரு நிமிடமேனும் நபியின் தோழமையைப் பெற்ற நபித்தோழர்களில் ஒருவரோ நபி ﷺ அவர்களுக்குப் பிறந்ததினம் கொண்டாடியுள்ளார்களா? 5- நபி ﷺ அவர்களின் மரணத்திற்குப் பின்னர், அவர்களின் மனைவியர்களில் எவராவது நபி ﷺ அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்களா? குறிப்பாக அவர்களுக்குப் பிறகு நாற்பத்து ஏழு வருடங்கள் வாழ்ந்த அன்னை ஆஇஷஹ் (றளியள்ளாஹு அன்ஹா) அவர்கள் நபியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடினார்களா? 6- சிறந்த காலங்களைச் சேர்ந்தவர்கள் என்று நபி ﷺ அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட, நபித்தோழர்களின் மாணவர்களான தாபிஈன்களில் எவராவது அல்லது அவர்களின் மாணவர்களான தபஉத் தாபிஈன்களில் எவராவது மீலாத் கொண்டாடி இருக்கிறார்களா? 7- நான்கு மத்ஹபுகளின் இமாம்களான அபூஹனீபஹ், மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் இப்னு ஹம்பல் (றஹிமஹுமுள்ளாஹ்) ஆகிய இமாம்களில் எவராவது மீலாத் கொண்டாடினார்களா அல்லது கொண்டாடுமாறு சொன்னார்களா? 8- இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் போன்ற அல்லது அவர்களின் காலத்தில் அல்லது அதற்கு முன் வாழ்ந்த அறிவிப்பாளர் வரிசைகளோடு நபி ﷺ அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்த மாபெரும் ஹதீஸ் துறை அறிஞர்களில் எவராவது மீலாத் கொண்டாடியிருக்கிறார்களா? 9- நபி ﷺ அவர்களின் பாசறையில் வளர்ந்த நபித்தோழர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கிய அடிப்படையில் விளங்காது; அதற்கு மாற்றமாக விளங்குவது வழிகேடு என்பது இஸ்லாமின் அடிப்படையாகும். ஒரு விடயம் மார்க்கமாக இருந்தால் அது அவர்களுடைய காலத்திலிருந்து தொடர்ந்து வர வேண்டும். அவர்களுடைய காலத்தில் மார்க்கமாக இல்லாதிருந்த ஒன்று அதற்குப் பிறகு மார்க்கமாக முடியாது. அதன் அடிப்படையில் அவர்களுடைய காலத்தில் மீலாத் விழா மார்க்கத்தில் இருந்ததா? 'இல்லை' என்றால் இன்று அது மார்க்கமாக இருக்க முடியுமா? 10- நபி ﷺ அவர்கள் செய்ததைச் செய்வது ஸுன்னஹ்வாக இருப்பதைப் போன்றே அவர்கள் மார்க்க விடயத்தில் விட்டதை விடுவதும் ஸுன்னஹ்வாகும். அதாவது [1] தேவை இருந்தும் [2] தடைகள் இல்லாதிருந்தும் மார்க்கத்தில் ஒரு விடயத்தை நபிகளார் ﷺ அவர்கள் செய்யாது விட்டால் அதனை விடுவது *ஸுன்னஹ் தர்கிய்யஹ்* எனப்படும். இந்த "ஸுன்னஹ் தர்க்கிய்யஹ்"வை செய்வது பித்அஹ் ஆகும். மீலாத் கொண்டாடுவது தேவையான ஒன்றாக இருந்தால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த ஒரு தடங்கலும் நபி ﷺ அவர்களின் காலத்தில் இல்லாதிருந்தும் அதனை அவர்கள் விட்டு விட்டார்கள் என்றால் அதனை நாம் செய்வது ஸுன்னஹ்வாக இருக்குமா?

உதாரணமாக இப்னுல் கய்யிம், இப்னுல் அறபி அல் மாலிகி, ஆலூசி, இப்னு ஆஷூர், அமீன் அஷ்ஷன்கீதி போன்றோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 📚 பிரதான உசாத்துணைகள்: - ﺍﻷﺣﺎﺩﻳﺚ ﺍﻟﻮﺍﺭﺩة في ﻓﻀﻞ ﻳﻮﻡ ﺍﻷﺭﺑﻌﺎﺀ ﻭﺷﺆﻣﻪ ﻭﺃﺣﻜﺎﻣﻪ - د عبد الله بن رفدان بن عبد الله الشهراني - الأحاديث الموضوعة التي تنافي توحيد العبادة - د أسامة عطايا - تخريجُ حديثِ: يوم الأربعاءِ يوم نحسٍ مستمرٍّ - أبو عمر نادر بن وهبي النَّاطُور القَنِّيرِي - الموسوعة القرآنية https://quranpedia.net/ - موسوعة التفسير - الدرر السنية - الباحث القرآني ✍️ ஹுஸைன் இப்னு றஃபீக் (மதனி) 🏫 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

புதன்கிழமை ஆத் சமுதாயம் தண்டிக்கப்பட்டதாகக் கூறி இந்த மூடநம்பிக்கையை நியாயப்படுத்தும் விதமாக நபி ﷺ அவர்கள் மீதும் இப்னு அப்பாஸ் றளியள்ளாஹு அன்ஹுமா அவர்கள் மீதும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. நபி ﷺ அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இப்னு அப்பாஸ் றளியள்ளாஹு அன்ஹுமா அவர்கள், துன்பகரமான நாட்களில் ஆத் சமுதாயம் அழிக்கப்பட்டதைக் குறித்து விளக்கம் சொல்லும் போது, அள்ளாஹ் படைத்த நாட்களில் பாக்கியமுள்ள நாட்களும் துர்பாக்கியமான நாட்களும் இருப்பதாகவும் எந்த ஒரு மாதத்திலும் 7 துர்பாக்கியமான நாட்கள் இருப்பதாகவும் மாதத்தின் இறுதிப் புதன் கிழமை அந்த நாட்களில் ஒன்று என்றும் அதில் தான் ஆத், ஸமூத் சமுதாயங்கள் அழித்தொழிக்கப்பட்டதாகவும் விளக்கம் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஷாஃபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஹதீஸ் கலை அறிஞர் இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுள்ளாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "இது இப்னு அப்பாஸ் (றளியள்ளாஹு அன்ஹுமா) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டதாகும்; இதனை அறிவிப்பது ஹலால் இல்லை" என்று பதில் கூறியுள்ளார்கள். பார்க்க: 📘 تذكرة الموضوعات للفتَّني ص797، 📘 الفوائد المجموعة للشوكاني ص438 📌 அல் குர்ஆனில் 41:16 இல் أيام نحسات *துயரமான நாட்களில்* காற்றை அனுப்பினோம் என்று குறிப்பிடப்பட்டதற்கு, 67:7 இல் தொடர்ச்சியாக *7 இரவுகளும் 8 பகல்களும்* அவர்கள் மீது காற்றை வீசச் செய்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதானது விளக்கமாக அமைந்துள்ளது. மேலும், 54:19 இல் يوم نحس என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் *துயரமான ஒரு நாளில்* காற்றை அனுப்பினோம் அல்லது *துயரமான ஒரு காலப்பகுதியில்* காற்றை அனுப்பினோம் என்பதாகும். 'யவ்ம்' என்பதற்கு ஒரு நாள் என்ற அர்த்தம் உள்ளதைப் போல ஒரு காலப்பகுதி என்ற அர்த்தமும் உள்ளது. முன்னுள்ள இரண்டு ஆயஹ்களிலும் இருந்து ஆத் கூட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்டிக்கப்பட்டனர் என்பது தெளிவு. இந்த ஆயஹ்வில் 'யவ்ம்' என்பது அந்த ஒரு வார காலப்பகுதியைக் குறிப்பதாக இருக்கலாம். அந்த அடிப்படையில் மூன்று ஆயஹ்களும் ஒரே விடயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தக் கருத்தை சில குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பார்க்க: 📘 تفسير الرازي، 📘 تفسير ابن عادل அவ்வாறல்லாமல் 'யவ்ம்' என்பதற்கு ஒரு நாளில் என்று அர்த்தம் கொடுத்தால் அவர்களுக்கு தண்டனை அனுப்பப்பட்ட முதல் நாளை அது குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். 📌 ஆத் சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்ட துயரமான நாட்கள் نحس - نحسات நஹிஸாத், நஹ்ஸ் ஆகிய வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அர்த்தம் துன்பம், துயரம், கெடுதி, கஷ்டம், துர்பாக்கியம் என்பவையாகும். நஹ்ஸ் என்பது سعد ஸஃத் என்ற அறபிச் சொல்லின் எதிர்க் கருத்துச் சொல்லாகும். அதன் அர்த்தம் பாக்கியம், சந்தோசம், இன்பம் என்பவையாகும். ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை எழுதப்பட்ட பல தஃப்ஸீர்களிலும் அகராதிகளிலும் இந்த விளக்கத்தைப் பார்க்க முடியும். உதாரணமாகப் பார்க்க: 📘 مقاييس اللغة لابن فارس -ن ح س / س ع د-، 📘 التحرير والتنوير لابن عاشور எனவே ஆத் சமூகத்திற்கு தண்டனை வழங்கப்பட்ட அந்நாட்கள் அவர்களுக்கு துர்பாக்கியமான, சோதனையான, கெடுதியான, துன்பகரமான நாட்களாக இருந்தன. சிலர் நஹ்ஸ் என்பதை மிடிமை என்று தமிழில் மொழிபெயர்க்கின்றனர். தமிழ் அகராதியில் மிடிமை என்பது வறுமை, துன்பம் என்பவற்றைக் குறிக்கும். இந்த அர்த்தத்தில் நஹ்ஸ் என்பதற்கு மிடிமை என்ற சொல்லைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை. இன்னும் சிலர் மேற்படி அல்குர்ஆன் வசனங்களை மொழிபெயர்க்கும் போது துர்ச்சகுனமான நாட்கள் அல்லது அபசகுனமுடைய நாட்கள் என்று மொழிபெயர்க்கின்றனர். தமிழ் அகராதியில் இவ்விரு சொற்களின் அர்த்தம் "கெடுவது காட்டுங் குறி" என்பதாகும். இந்த மொழிபெயர்ப்புக்கள் சிலரை இஸ்லாம் தடை செய்த சகுனத்தை நம்புவதற்குத் தூண்டுவதாக இருக்கின்றன. 📌 எனவே ஒரு நாள் கெட்ட நாளாக அமைவது கெடுதிக்குள்ளாகும் நபரைச் சார்ந்ததே தவிர அந்த நாளைக் கருத்தில் கொள்ளப்பட்ட விடயமல்ல. ஒரு நாளில் ஒருவருக்குச் சோதனைக்காகவோ தண்டனைக்காகவோ கெடுதிகள் ஏற்பட்டு, அது அவரின் துயரமான நாளாக மாறலாம். ஒருவனின் துர்பாக்கியத்திற்குக் காரணமாக அமைவது அவன் செய்யும் பாவங்களே தவிர நாட்களோ நேரங்களோ அல்ல. எந்த நாளைச் சிலர் மோசமான நாளாகக் கருதுகிறார்களோ அந்த நாளில் அதிகமானவர்களுக்குப் பல்வேறு நலவுகள் நடப்பதைப் பார்க்க முடியும். வரலாறும் இதற்குச் சான்றாக இருக்கின்றது. மேற்படி கருத்துக்களைப் பல அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் மூடநம்பிக்கையை உடைத்தெறியும் விதமாக மேற்படி ஆயஹ்களை விளக்கும் போது எடுத்துரைத்துள்ளார்கள்.

*ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யஹ் நம்பிக்கையும்* தொடர் 🔟 *மூடநம்பிக்கைக்கு அல்குர்ஆனில் ஆதாரமா?* அள்ளாஹ் கூறுகிறான்: - ஆது சமுதாயத்தினர் பேரொலியுடன் வேகமாகச் சுழன்று வீசிய கடும் குளிர் காற்றால் அழிக்கப்பட்டனர். - அதனைத் தொடர்ச்சியாக ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அவர்கள் மீது வீசச் செய்தான். அக்கூட்டத்தினர் வீழ்ந்து கிடக்கும் இற்றுப்போன பேரீச்சமர வேர்களைப் போல் அங்கு வீழ்ந்து கிடப்பதை நீர் காண்பீர். - அவர்களில் யாரேனும் எஞ்சியிருப்பதைக் காண்கிறீரா? (அல்குர்ஆன் 69:6-8) - அவர்களை இவ்வுலக வாழ்வில் இழிவான வேதனையைச் சுவைக்கச் செய்வதற்காகத் *துயரமான நாட்களில்* கடும் சப்தத்துடன் கூடிய கடும் குளிர் புயல் காற்றை அவர்கள்மீது அனுப்பினோம். மறுமை வேதனையோ மிக இழிவானது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 41:16) நீடித்த *துயரம் மிகுந்த ஒரு காலப்பகுதியில்* அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் கூடிய கடும் குளிர் புயல் காற்றை அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19) அள்ளாஹ் படைத்த எந்த ஒரு நாளும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் துயரமான நாளாக இல்லை. எந்த ஒரு நாளிலும் சிலருக்கு நலவு நடக்கும் வேறு சிலருக்கு கெடுதி நடக்கும். ஒரு நாளில் ஒருவருக்கு கெடுதிகள் ஏற்படும் போது அந்த நாள் அவருக்கு மோசமான நாளாக இருந்தது என்று நாம் சொல்வதில் தவறில்லை. அதே நேரம் அந்த நாளைக் குறை கூறும் நோக்கம் இருக்கக் கூடாது. ஆத் சமுதாயத்தை அள்ளாஹ் அழித்தொழித்த நாட்களைப் பற்றி அல்குர்ஆனில் சொல்கின்ற போது, அவை அவர்களுக்கு மோசமான நாட்களாக இருந்தன என்பதைச் சொல்கின்றான். இதை ஆதாரமாக வைத்து சிலர் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இருக்கின்றன; அவர்கள் கெட்ட நாட்களில் அழிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடுகின்றனர். இவர்களின் வாதம் மிகத் தவறானதாகும். அந்த நாட்கள் ஆத் கூட்டத்திற்கு மட்டுமே மோசமான நாட்களாக இருந்தன. ஆனால் ஹூத் நபிக்கும் அவரை விசுவாசம் கொண்டவர்களுக்கும் எதிரிகள் அழிக்கப்பட்டதன் மூலம் அவை நல்ல நாட்களாக இருந்தன. இதனால்தான் தாபிஈன்களில் முக்கியமான தஃப்ஸீர் விரிவுரையாளர்களில் ஒருவரான கதாதஹ் றஹிமஹுள்ளாஹ் அவர்கள் மேற்படி 41:16 ஆயஹ்வை விளக்கும் போது, அள்ளாஹ் மீது சத்தியமாக அவை *அந்த சமுதாயத்திற்கு* துர்பாக்கியமான நாட்களாகவே இருந்தன என்றும் 54:19 ஆயஹ்வை விளக்கும் போது, துர்பாக்கியம் அவர்களுடன் நரகம் வரை தொடரும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்கள். பார்க்க: 📘 الصحيح المبسور இவ்வாறே ஒவ்வொரு கெட்ட கூட்டங்களும் அழிக்கப்பட்ட நாட்கள் நல்லவர்களுக்கு நல்ல நாட்களாக இருந்தன. அந்த நாட்கள் கெட்டவை என்பதற்காக அவர்கள் அழிக்கப்படவில்லை; அவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக அந்நாட்களை அள்ளாஹ் அவர்களுக்குத் துயரம் நிறைந்த நாட்களாக மாற்றி, நல்லவர்களுக்கு சந்தோஷமான நாட்களாக மாற்றினான். இதனால்தான் கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் அழித்தொழிக்கப்பட்ட ஆஷூறாஅ் தினத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அள்ளாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக நோன்பு நோற்றார்கள். சிலர் ஆத் சமுதாயம் அழித்தொழிக்கப்பட்டது ஒரு புதன்கிழமை என்றும் ஒவ்வொரு புதன்கிழமையும் மோசமான நாள் என்றும் வாதிடுகின்றனர். அவர்கள் எந்த நாளில் அழிக்கப்பட்டார்கள் என்று அல்குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ நபித்தோழர்களின் ஆதாரபூர்வமான விளக்கங்களிலோ கிடையாது. சிலர் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டது ஷவ்வால் மாதத்தின் இறுதிப் புதனில் என்றும் வேறு சிலர் வெள்ளியில் என்றும் இன்னும் சிலர் ஞாயிறு காலையில் என்றும் கருத்துக்கள் கூறியுள்ளனர். பார்க்க: 📘 زاد المسير لابن الجوزي இக்கருத்துக்கள் ஆதாரமற்றவையாகும். இஸ்றாஈலிய்யாத் எனும் யூத, கிறிஸ்தவ நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆத் சமுதாயம் ஒரு நாளில் அழித்தொழிக்கப்படவில்லை. அவர்கள் 8 பகல்களும் 7 இரவுகளும் தொடர்ச்சியாக கடும் சூறாவளியால் தண்டிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் தண்டிக்கப்பட்ட நாட்கள் எக்காலத்திலும் தொடச்சியாக அனைவருக்கும் கெட்ட நாட்களாக இருந்தால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் கெட்ட நாளாக இருக்க வேண்டும். இதனால் சிலர் அவர்களுக்கு தண்டனை ஆரம்பிக்கப்பட்டதும் முடிவடைந்ததும் புதன்கிழமையில் என்று கூறுகின்றனர். இவை எதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மேலும், அள்ளாஹ் அல்குர்ஆனில் அவர்களை அழித்த வாரத்தின் ஒரு நாளை மாத்திரம் துயரமான நாள் என்று சொல்லவில்லை; 'அய்யாமின் நஹிஸாத்' துயரமான நாட்கள் என்றும் சொல்லியுள்ளான். எனவே, அல்குர்ஆன் தான் இவர்களின் மூட நம்பிக்கைக்கு ஆதாரம் என்று வாதிடுவார்களேயானால், ஆத் சமுதாயம் அழிக்கப்பட்ட அனைத்து வார நாட்களும் கெட்ட நாட்கள் என்றே சொல்ல வேண்டும். சில நாட்களை கெட்ட நாட்களாகக் கருதுவது வேற்றுமதக் கலாச்சாரங்களில் இருந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஊடுருவியதாகும் என்பதைப் பல அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பார்க்க: 📘 ابن عطية 8/146، 📘 التحرير والتنوير لابن عاشور 27/192

*ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யஹ் நம்பிக்கையும்* தொடர் 9️⃣ புதன்கிழமையில் ஹிஜாமஹ் செய்யக்கூடாதா? ஹிஜாமஹ் எனும் இரத்தம் குத்தி எடுக்கும் சிகிச்சை புதன்கிழமையில் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சில ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்புகளில் புதன்கிழமை மாத்திரம் அல்லாமல் சனிக்கிழமையும் இடம் பெற்றுள்ளது. வேறு சில அறிவிப்புகளில் வேறு நாட்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேற்படி அனைத்து அறிவிப்புகளும் மிகவும் பலவீனமானவையாகும். அவை பலவீனமானவை என்பதை முற்கால ஹதீஸ் கலை மாமேதைகள் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 1️⃣ இப்னு உமர் றளியள்ளாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ். அதில் புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஹிஜாமஹ் செய்வதைத் தவிர்க்குமாறும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஹிஜாமஹ் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், செவ்வாய்க் கிழமையில் தான் அள்ளாஹ் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சோதனையில் இருந்து குணப்படுத்தியதாகவும் அவர்களுக்கு புதன்கிழமை சோதனையைக் கொடுத்ததாகவும் வெண்குஷ்டம், கருங்குஷ்டம் ஆகியவை புதன்கிழமை பகலிலும் அதன் இரவிலும் தான் வெளிப்படுவதாகவும் இடம்பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசைகளில் பல்வேறு பலவீனங்கள் இருக்கின்றன. ஆரம்பகால ஹதீஸ் கலை மாமேதை இமாம் அபுஹாதிம் அவர்களிடம் இந்த ஹதீஸைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்ட போது, "இந்த ஹதீஸ் எந்த ஒன்று(க்கு)ம் (பெறுமதி) இல்லை. இது நம்பகமானவர்களின் ஹதீஸ் அல்ல" என்று பதில் அளித்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஒரு அறிவிப்பாரைப் பற்றி இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடும் போது, "இது போன்ற ஹதீஸ்களைப் புத்தகங்களில் குறிப்பிடுவது ஹலால் இல்லை. ஆனால், (விமர்சன நோக்கத்தில்) படிப்பினைக்காகக் குறிப்பிடலாம். ஏனெனில், இது இட்டுக் கட்டப்பட்டதாகும். இது அள்ளாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் ஹதீஸல்ல. யார் இது போன்ற ஹதீஸை அறிவிக்கிறாரோ அவர் அறிவிக்கும் அனைத்து ஹதீஸ்களும் கட்டாயமாகப் புறக்கணிக்கப்படவேண்டும். அவர் நம்பகமானவர்களுக்கு உடன்பாடாக சில அறிவிப்புகளில் அறிவித்திருந்தாலும் சரியே" என்று கூறுகிறார்கள். 2️⃣ "யார் புதனில் அல்லது சனியில் ஹிஜாமஹ் செய்கிறாரோ அவருக்கு குஷ்டம் ஏற்பட்டால் அவர் தன்னைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல வேண்டாம்" என்று ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விசேடமாக அபூஹுறைறஹ் றளியள்ளாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில அறிவிப்புகளில் வேறு நபித் தோழர்களைத் தொட்டும் இதே போன்ற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பலவீனமான அறிவிப்புக்களாகும். குறிப்பிட்ட நாளில் ஹிஜாமஹ் செய்வதைத் தடை செய்யக்கூடிய எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை என்பதை மாபெரும் ஹதீஸ் கலை இமாம்களான மாலிக், அப்துர் றஹ்மான் இப்னு மஹ்தி, அஹ்மத், அபூ ஸுர்அஹ் அர்ராஸி, உகய்லி போன்றவர்கள் கூறியுள்ளனர். அதேபோன்று அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்த இமாம்களான இப்னுல் ஜவ்ஸி, நவவி, இப்னு ஹஜர் போன்ற அறிஞர்களும் கூறியுள்ளனர். ஒரு சாதாரணமான பலவீனமான ஹதீஸ் பல வழிகளில் வருகின்ற போது அதனை அறிஞர்கள் பலப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் மேற்படி ஹதீஸைப் பலப்படுத்த முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியாது என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில், மேற்படி அறிவிப்புகள் கடுமையான பலவீனத்தையும் இஸ்லாமிய அகீதஹ்வுக்கு முரணான கருத்தையும் கொண்டுள்ளன. அதனால்தான் ஆரம்பகால மூத்த அறிஞர்கள் இவை அனைத்தும் பலவீனமான அறிவிப்புக்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். இது பொதுமக்களுக்கு எழுதப்படும் ஆக்கம் என்பதால் ஒவ்வொரு அறிவிப்புக்களிலும் இருக்கும் பலவீனங்களை மிக விரிவாக விளக்குவது வாசகர்களைச் சோர்வடையச் செய்யும் என்பதால் அதனைத் தவிர்த்துள்ளேன். புதன், சனி நாட்களில் ஹிஜாமஹ் செய்வதைத் தவிர்க்குமாறு வந்திருக்கும் ஹதீஸைப் பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு சில அறிஞர்கள் சாதாரண பலவீனமாகக் கருதி பல வழிகளில் அது வந்திருப்பதை வைத்து அதனைப்பலப்படுத்தியுள்ளனர். ஆனால் சரியான ஆய்வுகளின் அடிப்படையில் அவற்றில் இருக்கும் பலவீனங்கள் கடுமையானவையாகும். அதனால்தான் இமாம்களான இப்னுல் ஜவ்ஸி, தஹபி ஆகியோர் அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கருதுகின்றனர். இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸை மறுப்பதற்காகவே புதன் அல்லது சனி ஆகிய நாட்களிலேயே ஹிஜாமஹ் செய்து கொள்வார்கள். இமாம் அஹ்மத் அவர்கள் இந்த ஹதீஸைப் பலவீனமாகக் கருகினாலும் அவ்விரு நாட்களிலும் ஹிஜாமஹ் செய்வதை விரும்பவில்லை. ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸை ஆதாரபூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதற்கும் புதன்கிழமையைக் கெட்ட சகுனமாகக் கருதுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதிகபட்சமாக குறிப்பிட்ட ஒரு சிகிச்சை குறிப்பிட்ட இரு நாட்களில் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று மாத்திரமே புரிந்துகொள்ளமுடியும். 👉இன்ஷாஅள்ளாஹ் தொடரும் ✍️ஹுஸைன் மதனி 🥏t.me/sunnah_academy

*பரீட்சையும் பிரார்த்தனையும்* பரீட்சையை எதிர்கொள்வதற்கென்று தனியான எந்தப் பிரார்த்தனையும் மார்க்கத்தில் இல்லை. ஆனால் பொதுவாக பயனுள்ள கல்வியை வேண்டுவதும் பயனற்ற கல்வியில் இருந்து பாதுகாப்புத் தேடுவதும் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கஷ்டங்களை இலகுபடுத்துமாறு வேண்டும் துஆஅ்கள் போன்ற பிரார்த்தனைகளைத் தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்த முடியும். அதேபோன்று பொதுவாக ஒரு முஸ்லிம் தன்னுடைய தேவைகளை சந்தர்ப்பத்திற்கேற்ப தனக்குப் புரியும் பாசையில் அள்ளாஹ்விடத்தில் முன்வைத்துப் பிரார்த்திப்பது முக்கியமானது. மேலும், குர்ஆனிலும் நபி வழியிலும் இடம்பெற்றிருக்கும் குறைந்த வார்த்தையில் நிறைந்த அர்த்தங்களைத் தரக்கூடிய பிரார்த்தனைகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. 💎 *{رَبِّ اشْرَحْ لِي صَدْرِي (25) وَيَسِّرْ لِي أَمْرِي}* [طه: 25، 26] 20:25. *என் இரட்சகனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி, மனக்கஷ்டங்களை நீக்கி) விரிவாக்கித் தருவாயாக!* 20:26. *என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!* 💎 *{رَبِّ زِدْنِي عِلْمًا}* [طه: 114] 20:114. *என் இரட்சகனே! எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக!* 💎 *«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا».* *அள்ளாஹ்வே! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், தள்ளாமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக் கொள்கின்றேன். அள்ளாஹ்வே! எனது உள்ளத்திற்கு* (உன் தண்டனை பற்றிய) *அச்சத்தைத் தந்துவிடு! மேலும்,* (அனைத்துக் குறைகள், துர்க்குணங்கள், பாவங்கள் போன்றவையில் இருந்தும்) *அதனைத் தூய்மைப்படுத்துவாயாக! நீயே அதனைத் தூய்மைப்படுத்துவோரில் மிகச் சிறந்தவன். நீயே அதன் பாதுகாவலனும் அதன் உரிமையாளனுமாவாய். அள்ளாஹ்வே!* (இஃக்லாஸ் இன்மை, தேவையின்மை போன்ற காரணங்களால்) *பயனளிக்காத கல்வியிலிருந்தும்* (வன்மையடைவதன் காரணமாக உனக்கு) *பணிந்து அமைதியாகாத உள்ளத்திலிருந்தும்* (உலகாதாயங்களில் பேராசை கொண்டு) *பசிதீராத* (அதாவது நிறைவடையாத) *மனதிலிருந்தும்* (நிபந்தனைகளைப் பேணாததினாலோ, என்னில் அல்லது என் வேண்டுதலிலுள்ள ஒரு குறைக்காகவோ) *பதிலளிக்கப்படாத* (அதாவது ஏற்றுக்கொள்ளப்படாத) *பிரார்த்தனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக் கொள்கிறேன்!* 🔹 அறிவிப்பவர்: ஸய்த் இப்னு அர்கம் (றளியள்ளாஹு அன்ஹு). 📗 முஸ்லிம்: (6906) 💎 *«اَللَّهُمَّ إِنِّيْ أسْأَلُكَ عِلْمًا نافِعًا وَأَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لا يَنْفَعُ».* *அள்ளாஹ்வே! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும், பயனளிக்காத கல்வியில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக் கொள்கின்றேன்.* 🔹 அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (றளியள்ளாஹு அன்ஹுமா). 📗 இப்னு ஹிப்பான்: (82) * حسنه الألباني وش الأرناؤوط. 💎 *«اللَّهمَّ لا سَهْلَ إلّا ما جعلتَه سَهلًا وأنتَ تجعلُ الحزنَ إذا شِئتَ سَهْلًا».* *அள்ளாஹ்வே! நீ இலகுவாக்கியதைத் தவிர இலகுவானது கிடையாது. நீ நாடினால் கரடு முரடான பூமியையோ இலகுவான பூமியாக மாற்றுகிறாய்!* 🔹 அறிவிப்பவர்: அனஸ் (றளியள்ளாஹு அன்ஹு). 📗 இப்னு ஹிப்பான்: (974), அத்-தஃவாதுல் கபீர் - பய்ஹகீ: (266) * صححه الألباني، والوادعي، وش الأرناؤوط. 🅕🅞🅛🅛🅞🅦 ғᴏʀ ᴍᴏʀᴇ ɪsʟᴀᴍɪᴄ ʀᴇᴍɪɴᴅᴇʀs ᴀɴᴅ ɪɴғᴏʀᴍᴀᴛɪᴏɴ ••••••••••••••••••••••••••••••••••••••••••••••• 🖋 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

⛈ அதிக மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் அல்லது ஏற்படும் என்று பயந்தால் கேட்க வேண்டிய துஆஅ்🤲🏻 «اَللَّهُمَّ! حَوَالَيْنَا، وَلَ
⛈ அதிக மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் அல்லது ஏற்படும் என்று பயந்தால் கேட்க வேண்டிய துஆஅ்🤲🏻 «اَللَّهُمَّ! حَوَالَيْنَا، وَلَا عَلَيْنَا، اَللَّهُمَّ! عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ» 'அள்ளாஹும்ம! ஹவாலைனா, வலா அலைனா, அள்ளாஹும்ம! அலல் ஆகாமி, வள்ளிறாபி, வபுதூனில் அவ்தியதி, வமனாபிதிஷ் ஷஜர்' பொருள்: 'அள்ளாஹ்வே! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. அள்ளாஹ்வே! மலைக்குன்றுகள், உயர் நிலங்கள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)' 📖 புகாரி 1014.

🌦 மழை பொழிந்த பிறகு கூறப்படும் திக்ர் 1️⃣ «مُطِرْنَا بِفَضْلِ الله، وَرَحْمَتِهِ» 'முதிர்னா பிஃபள்லில்லாஹி வறஹ்மதிஹ்' பொருள்
🌦 மழை பொழிந்த பிறகு கூறப்படும் திக்ர் 1️⃣ «مُطِرْنَا بِفَضْلِ الله، وَرَحْمَتِهِ» 'முதிர்னா பிஃபள்லில்லாஹி வறஹ்மதிஹ்' பொருள்: அள்ளாஹ்வின் அருட்கொடையாலும் கருணையாலும் எமக்கு மழை பொழிந்தது. 📖 புகாரி 846 2️⃣ «مُطِرْنَا بِرَحْمَةِ الله، وَبِرِزْقِ الله، وَبِفَضْلِ اللَّه» 'முதிர்னா பிறஹ்மதில்லாஹி, வபிரிஸ்கில்லாஹி, வபிஃபள்லில்லாஹ்' பொருள்: அள்ளாஹ்வின் கருணையாலும் அவனது றி(z)ஸ்க்-வாழ்வாதாரத்தாலும் அவனது அருட் கொடையாலும் எமக்கு மழை பொழிந்தது. 📖 புகாரி 4147

🌧 மழையை காணும் போது கேட்க வேண்டிய துஆஅ் 🤲🏻 «اَللَّهُمَّ! صَيِّبًا نَافِعًا» 'அள்ளாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ' பொருள்: 'அள்ளாஹ்வ
🌧 மழையை காணும் போது கேட்க வேண்டிய துஆஅ் 🤲🏻 «اَللَّهُمَّ! صَيِّبًا نَافِعًا» 'அள்ளாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ' பொருள்: 'அள்ளாஹ்வே! (இம்மழையை) பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)' 📖 புகாரி: 1032

*ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யஹ் நம்பிக்கையும்* தொடர் 8️⃣ *புதன் கிழமை கெட்ட சகுனமா?* 3️⃣ 5️⃣ "...آخر أربعاء من الشهر يوم نحس مستمر..." 5- மாதத்தின் இறுதிப் புதன் கிழமை தொடர்ச்சியான சகுனத்துக்குரிய நாள் என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றளியள்ளாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு செய்தி. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் மஸ்லமஹ் இப்னுஸ் ஸல்த் என்கின்ற அறிவிப்பாளரை மிக மோசமான பலவீனத்தைக் குறிக்கும் متروك الحديث என்ற வார்த்தையால் முற்கால ஹதீஸ் துறை வல்லுனர் அபூஹாதிம் றஹிமஹுள்ளாஹ் அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். இந்த செய்தியின் இன்னொரு அறிவிப்பில் இது இப்னு அப்பாஸ் றளியள்ளாஹு அன்ஹுமா அவர்களின் சொந்தக் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹஸன் இப்னு உபைதில்லாஹ் அல்-அப்ஸாரிالأبزاري என்ற ஒரு பொய்யர் இடம்பெற்றுள்ளார். அதேபோன்று அதில் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றுள்ளனர். எனவேதான் இந்த ஹதீஸையும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தொகுத்து அடையாளப்படுத்திய அறிஞர்கள் தமது நூட்களில் பதிவு செய்துள்ளனர். பார்க்க: 📖الموضوعات لابن الجوزي 2/84,85 📖اللآلئ المصنوعة 1/441 📖تنزيه الشريعة لابن عراق 2/55 📖الفوائد المجموعة للشوكاني 438 6️⃣ "... ويومُ الأربعاءِ يومُ نحسٍ، قَرِيبِ الخُطَا، يَشِيبُ فِيهِ الولدانُ، وفيهِ أَرْسَلَ اللَّهُ الرِّيحَ عَلَى قومِ عَادٍ، وفيه وُلِدَ فرعونُ، وفيه ادَّعى الرُّبوبيَّةَ، وفيه أهلكَهُ اللَّهُ ..." 6- "சனிக்கிழமை சூழ்ச்சி மற்றும் துரோகத்திற்குரிய நாள்" என்று ஆரம்பித்து, *"புதன்கிழமை கெட்ட சகுனத்துக்குரிய நாள்... அந்நாளில்தான் அள்ளாஹ் ஆத் சமூகத்தின் மீது காற்றை அனுப்பினான். அதில்தான் ஃபிர்அவ்ன் பிறந்தான். அதில்தான் அவன் தானே இறைவன் என்று வாதிட்டான். அதில்தான் அள்ளாஹ் அவனை அழித்தான்"* என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக இடம் பெறும் ஒரு செய்தி. இதில் ஒவ்வொரு நாளைப் பற்றியும் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் அபூஹுறைறஹ் றளியள்ளாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னுல் ஜவ்ஸி றஹிமஹுள்ளாஹ் அவர்கள் இதனை தன்னுடைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தொகுத்து விமர்சிக்கும் நூலில் 2/71,72 பதிவு செய்துவிட்டு, இது அள்ளாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தி; இதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர்களும் யாரென்று அறிமுகம் இல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இமாம் தஹபி அவர்கள் ميزان الاعتدال 9566 எனும் பலவீனமான அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும் தனது நூலில் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருக்கும் யஹ்யா இப்னு அப்தில்லாஹ் என்ற அறிவிப்பாளரைக் குறித்து இவரிடமிருந்து அப்துர் றஹ்மான் இப்னு ஹாலித் எனும் அறிவிப்பாளர் நாட்களைப் பற்றிய பொய்யான ஒரு ஹதீஸை அறிவித்திருக்கிறார் என்று மேற்படி ஹதீஸ் பொய்யான ஹதீஸ் என்பதை உறுதி செய்துள்ளார். எனவே, புதன்கிழமை அல்லது ஒவ்வொரு மாதத்தினதும் இறுதிப் புதன்கிழமை அல்லது ஸஃபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமை கெட்ட சகனத்துக்குரிய நாள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரபூர்வமான நபி மொழியும் கிடையாது. அதேபோன்று முன் வாழ்ந்த சமுதாயங்கள் புதன் கிழமையில் அல்லது ஸஃபர் மாதத்தில் அழிக்கப்பட்டன என்பதற்கும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் கிடையாது. ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் ஸகாவி அவர்கள், மனிதர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக இருக்கும் ஹதீஸ்களைத் தொகுத்து விமர்சிக்கும் المقاصد الحسنة என்ற தனது நூலில், புதன்கிழமை கெட்ட சகுனம் என்று வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதை எடுத்துரைத்துள்ளார்கள். அதே போன்று அதற்கு மாற்றமாக ஆஇஷஹ் றளியள்ளாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். அந்த செய்தியில் "என்னைச் சார்ந்தவர்கள் பிரயாணத்தை ஆரம்பிப்பதற்கும் திருமணம் நடத்துவதற்கும் என்னைச் சார்ந்த சிறுவர்களை விருத்தசேதனம் செய்வதற்கும் எனக்கு மிக விருப்பமான நாள் புதன்கிழமையாகும் என்று அவர்கள் கூறியுள்ளதாக இடம் பெற்றுள்ளது. (ஹதீஸ் 1354) ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த மற்றுமொரு அறிஞரான இப்னுத் தய்பஃ அஷ்ஷைபானி அவர்களும் மேற்படி நோக்கத்திற்காக எழுதிய تمييز الصحيح من الخبيث என்ற தனது நூலில், மேற்படி ஹதீஸ்கள் மிகவும் பலவீனமானவை என்பதையும் ஆஇஷஹ் றளியள்ளாஹு அன்ஹா அவர்களின் செய்தியையும் எடுத்துரைத்துள்ளார்கள். (பக் 128) ஆஇஷஹ் றளியள்ளாஹு அன்ஹா அவர்களின் செய்தி சரியாக இருந்தால் ஜாஹிலிய்யஹ் காலத்திலும் மக்கள் புதன்கிழமையைக் கெட்ட சகுனமாகக் கருதி இருக்கிறார்கள். அதன் தாக்கத்தை தகர்த்தெறியும் விதத்திலேயே அவர்கள் அவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 👉 இன்ஷாஅள்ளாஹ் தொடரும்... ✍️ ஹுஸய்ன் இப்னு றஃபீக் (மதனி) 🏫 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil t.me/sunnah_academy

*ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யஹ் நம்பிக்கையும்* தொடர் 7️⃣ *புதன் கிழமை கெட்ட சகுனமா?* 2️⃣ 2️⃣ "... يوم الأربعاء يوم نحس مستمر ..." 2- "புதன்கிழமை தொடர்ச்சியான சகுனத்துக்குரிய நாள்" என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ﷺ அவர்களுக்குக் கூறியதாக *அலி றளியள்ளாஹு அன்ஹு* அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ். இமாம் இப்னு அதீ றஹிமஹுள்ளாஹ் அவர்கள், الكامل في ضعفاء الرجال என்ற பலவீனமான அறிவிப்பாளர்களை விமர்சிப்பதற்குரிய தன்னுடைய நூலில் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். அதன் அறிவிப்பாளர் வரிசை மிகப் பலவீனமானதாகும். அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டிருப்பதுடன் அதில் பலவீனமுள்ள அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். குறிப்பாக ஈஸா இப்னு அப்தில்லாஹ் இப்னு முஹம்மத் எனும் அறிவிப்பாளர் மிகப் பலவீனமானவராவார். இமாம் இப்னு அதீ அவர்களும் இமாம் தாறகுத்ணி அவர்களும் இவரை متروك الحديث என்று கடுமையான பலவீனத்தைக் குறிக்கும் வார்த்தையால் விமர்சித்துள்ளனர். "இவர் தன்னுடைய தந்தை, மூதாதையர் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்திருக்கின்றார்; இவரை ஆதாரமாக எடுப்பது ஹலால் இல்லை" என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். "இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படவே கூடாது" என்று இமாம் அபூ நுஐம் கூறியுள்ளார். இந்த ஹதீஸை இப்னு மர்தவய்ஹி அவர்களும் அறிவித்திருப்பதாக ஸுயூதி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளப்படுத்தும் اللآلئ المصنوعة 1/442 எனும் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் அறிவிப்பாளர் வரிசையும் மிகப் பலவீனமானதாகும். குறிப்பாக அதில் யஹ்யா இப்னுல் அலா என்கின்ற ஒரு பொய்யர் இடம் பெறுகிறார். இந்த அறிவிப்பாளர் "றாஃபிளி, பொய்யன், மோசமானவன்" என்று இமாம் அஹ்மத் றஹிமஹுள்ளாஹ் அவர்களால் விமர்சிக்கப்பட்டவர். மேலும், இவர் மூத்த ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். 3️⃣ "... يوم نحس يوم الأربعاء ..." 3- கெட்ட சகுனத்துக்குரிய நாள் புதன்கிழமை என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக *ஆஇஷஹ் றளியள்ளாஹு அன்ஹா* அவர்கள் அறிவிப்பதாக இடம் பெறும் செய்தி. இதன் அறிவிப்பாளர் வரிசை மிகவும் பலவீனமானது. இதில் ஜாஃபர் இப்னு முஹம்மத் இப்னு மர்வான் என்ற ஒரு பலவீனமான அறிவிப்பாளரும் இப்றாஹீம் இப்னு ஹறாஸஹ் என்ற முற்கால பல ஹதீஸ் துறை வல்லுனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மிகப் பலவீனமான ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இதனால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளப்படுத்துவதற்காகத் தொகுக்கப்பட்ட நூல்களில் ஒன்றான ஸுயூதி அவர்களின் اللآلئ المصنوعة 1/441 என்ற நூலில் இந்த ஹதீஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 4️⃣ سُئلَ النبيُّ ﷺ عن الأيامِ وسُئلَ عن يومِ الأربعاءِ قال: يومُ نحسٍ قالوا: وكيفَ ذاك يا رسولَ اللهِ قال أغرقَ اللهُ فرعونَ وقومَهُ وأهلكَ عادًا وثمودًا. 4- நபி ﷺ அவர்களிடத்தில் புதன்கிழமையைப் பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, "அது கெட்ட சகுனத்துக்குரிய நாள்" என்று அவர்கள் கூறியதாகவும், அதற்கு, அது எவ்வாறு? என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, "அள்ளாஹ் பிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும் மூழ்கடித்தான்; ஆத், சமூத் சமூகங்களை அழித்தான்" என்று அவர்கள் பதில் கூறியதாக *அனஸ் றளியள்ளாஹு அன்ஹு* அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸை இப்னு மர்தவய்ஹி அவர்கள் தனது தப்ஸீரில் அறிவித்திருப்பதாக ஸுயூதி அவர்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளப்படுத்தும் اللآلئ المصنوعة 1/442 எனும் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் அறிவிப்பாளர் வரிசை பல அறிமுகமற்ற அறிவிப்பாளர்களைக் கொண்ட மிகப் பலவீனமானதாகும். குறிப்பாக இதில் இடம்பெறும் அபுல் அக்யல் என்பவர் இந்த ஹதீஸை இட்டுக்கட்டி இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர் என்று ஸுயூதியவர்கள் அதே நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். இவரை ஒரு பொய்யர் என்று இவரின் காலத்தில் வாழ்ந்த, இவரைப் பார்த்த இமாம் ஜஃபர் அல் ஃபிர்யாபி அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். 👉 இன்ஷாஅள்ளாஹ் தொடரும்... ✍️ ஹுஸய்ன் இப்னு றஃபீக் (மதனி) 🏫 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

*ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யஹ் நம்பிக்கையும்* தொடர் 6️⃣ *புதன் கிழமை கெட்ட சகுனமா?* 1️⃣ புதன்கிழமை ஒரு கெட்ட நாளா? ஒவ்வொரு மாதமும் இறுதிப் புதன்கிழமை கெட்ட நாளா? ஸஃபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமை சகுனத்துக்குரிய நாளா? எமது சமூகத்தில் சிலரிடத்தில் இந்த கேள்விகளைக் கேட்டால், ஆம் என்று பதில் சொல்வார்கள். ஆனால் அல்குர்ஆனிலும் ஆதாரபூர்வமான ஸுன்னஹ்விலும் இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்று ஆராய்ந்தால், நிச்சயமாக இல்லை என்ற பதிலே உங்களுக்குக் கிடைக்கும். அப்படி என்றால் இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் சிலரிடத்தில் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? சமூகத்தில் பரவிக்கிடக்கும் மார்க்கம் கற்றுத்தராத பித்அஹ்கள் எனும் பல்வேறுபட்ட நூதனங்கள், மூடநம்பிக்கைகள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அறிவீனம், முன் வாழ்ந்த சமுதாயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், கலந்து வாழும் பிறசமூகங்களின் தாக்கம், நபி ﷺ அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அல்லது பலவீனமான ஹதீஸ்கள், மனோ இச்சையைப் பின்பற்றுதல், தங்கள் மூதாதையர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், மார்க்கத்தில் அளவு கடத்தல், மக்களைக் கவர்வதற்காக தகவல்களை உறுதிப்படுத்தாமலும் அறிவு பூர்வமாக அணுகாமலும் பிரச்சாரம் செய்யும் பிரச்சாரகர்கள், வழிகாட்டிகள் போன்ற பல காரணங்களால் மார்க்கத்தின் பெயரால் நூதனங்கள் உருவாகின்றன. சிலர் புதன்கிழமையைக் கெட்ட சகுனத்துக்குரிய நாளாகக் கருதுவதற்குக் காரணமாக அமைந்த சில இட்டுக்கட்டப்பட்ட அல்லது மிகப் பலவீனமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. புதன்கிழமையின் சிறப்பு குறித்தும் சில ஹதீஸ்கள் வந்துள்ளன. சரியான ஆய்வுகளின் அடிப்படையில் அவையும் பலவீனமானவை என்ற கருத்தே சரியானதாகும். ஆனால் அவை புதன்கிழமை கெட்ட நாள் என்று சொல்லும் ஹதீஸ்களை விட பலமானவை என்பதில் சந்தேகமில்லை. 1- புதன்கிழமையில் அள்ளாஹ் ஒளியைப் படைத்ததாக முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ். இருந்தாலும் இமாம் இப்னுல் மதீனி, இமாம் புகாரி போன்ற சில ஹதீஸ் கலை பேரறிஞர்கள் அதனைப் பலவீனமாகக் கருதுகின்றனர். 2- நபி ﷺ அவர்கள் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பிரார்த்தனை செய்த போது புதன்கிழமை அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முஸ்னது அஹ்மத் மற்றும் வேறு சிலகிரந்தங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ். இது கஸீர் இப்னு ஸய்த் என்ற அறிவிப்பாளர் தனித்து அறிவிப்பதன் காரணமாக பலவீனமானது என்பதே சரியான கருத்து. எனவே, இட்டுக்கட்டப்பட்ட அல்லது மிகப் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு புதன்கிழமையை கெட்ட நாளாக் கருதுகிறவர்கள், பல அறிஞர்கள் பலமாகக் கருதும் மேற்படி இரு ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு அதனை நல்ல நாளாக் கருதுவது அல்லவா அறிவுடைமையாக இருக்கும்! அதேபோன்று புதன்கிழமை இரவு இஷாஅ் தொழுகையில் கலந்து கொள்வதின் சிறப்பைப் பற்றிச் சொல்கின்ற ஒரு பலவீனமான செய்தியும், புதன்கிழமையிலே ஒரு மரத்தை நட்டுவதின் சிறப்பைப் பற்றிச் சொல்கிற ஒரு பொய்யர் அறிவிக்கின்ற செய்தியும் இருக்கின்றன. மேலும், புதன்கிழமையில் நோன்பு நோற்பதன் சிறப்பைக் குறிக்கக்கூடிய பல பலவீனமான ஹதீஸ்களும் இருக்கின்றன. இப்போது புதன்கிழமை சகுனத்துக்குரிய நாள் என்று சொல்லும் செய்திகளைப் பார்ப்போம். 1️⃣ "... يوم الأربعاء يوم نحس مستمر ..." 1- "புதன்கிழமை தொடர்ச்சியான சகுனத்துக்குரிய நாள்" என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ﷺ அவர்களுக்கு கூறியதாக *ஜாபிர் றளியள்ளாஹு அன்ஹு அவர்கள்* கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு  ஹதீஸ். இதனை அறிவிக்கும் இப்றாஹீம் இப்னு அபீ ஹய்யஹ் என்பவருடைய ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதையும் இவர் மிகப் பலவீனமான அறிவிப்பாளர் என்பதையும் ஆரம்பகால ஹதீஸ் கலை பேரறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால்தான் இவருடைய இந்த செய்தியை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தொகுத்து அடையாளப்படுத்திய சில அறிஞர்கள் அவர்களுடைய அந்நூல்களில் பதிவு செய்துள்ளனர். பார்க்க:   📖 تنزيه الشريعة لابن عراق، 2/55 📖 تذكرة الموضوعات للفتني، ص115 📖 الأسرار المرفوعة للملا علي قاري، ص٣٩٦. 👉 இன்ஷாஅள்ளாஹ் தொடரும்... ✍️ ஹுஸய்ன் இப்னு றஃபீக் (மதனி) 🏫 Sunnah Academy - Free Islamic & Arabic Education in Tamil 💡ஸுன்னஹ் அகாடமி: 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀 https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

*ஃபிக்ஹ் - பாடம்: 7, 8, 9* تحفة البادئين في الفقه الشرعي https://youtu.be/kIFTJteIF2c?si=sIdUtNx6d0-CdSHF https://youtu.be/pH6rWjIJGLU https://youtu.be/D25jiJ9IWEU