AL ILMUSH SHAREE
Open in Telegram
இது குர்ஆன், ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்பதற்கான குழுமம்
Show moreThe country is not specifiedReligion & Spirituality113 712
366
Subscribers
No data24 hours
+47 days
+2630 days
Posts Archive
بسم الله الرحمن الرحيم
மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான சில முக்கியமான காரணிகள்
◼️நபிமார்கள் வரலாறுகளை படித்து அதில் படிப்பினை பெறுவது
◼️மார்க்க கல்வியை படிப்படியாக தொடர்ந்து கற்று வருவது
◼️குர்ஆனை கற்று, அதன் சரியான விளக்கங்களை புரிந்து, ஆழ்ந்து சிந்திப்பது
◼️மார்க்க கல்வியை தேடி பயணங்களை மேற்கொள்வது.
◼️கற்ற கல்வியை கொண்டு ஸாலிஹான அமல்களை தொடர்ந்து செய்து வருவது
◼️ஷிர்க்கின் பக்கம் சாயாமல் தவ்ஹீதில் உறுதியாக இருப்பது.
◼️அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவி செய்து வருவது.
◼️அல்லாஹ் மட்டும் தான் உறுதிப்படுத்த முடியும், எனவே அல்லாஹ்விடத்தில் மன்றாடி துஆ செய்ய வேண்டும்.
◼️உறுதியான நண்பர்களை எடுத்து கொள்வது
◼️பொருமையாளர்களாக இருப்பது
விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
🎧உரையை செவிமடுக்க..
| AL ILMUSH SHAREE
﷽
கஸ்ஸாவில் தற்போது நிகழக்கூடிய துயரங்களுக்கு காரணம் முஸ்லிம் உம்மத்துடைய கண்ணியம் பலஹீனம் ஆகிவிட்டது. மேலும் இதற்கான காரணங்களில் உள்ளவை
🔻 பிரிவினைவிவாதம் மட்டும் பித்அத்துகள் ஆகியவை சொல்லிலும் செயலிலும் முஸ்லிம்கள் ஒன்றுபடுவதிலிருந்து தடுக்கின்றது
🔻 பாவங்கள் அதிகரித்து இருப்பது அவர்களுடைய இழிநிலைக்கு வழி வகுக்குகின்றது.
மற்றபடி யூதர்கள் எந்த சிறப்பும் இல்லாத மிக இழிவானவர்கள்; மிக உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுவதைப் போன்று,
قُلۡ یَـٰۤأَهۡلَ ٱلۡكِتَـٰبِ لَسۡتُمۡ عَلَىٰ شَیۡءٍ [سُورَةُ المَائـِدَةِ: ٦٨]
நீங்கள் கூறுங்கள், "ஓ வேதம் கொடுக்கப்பட்டவர்களே! "நீங்கள் எதிலும் இல்லை"
◼️ அஷ் ஷெய்க் அப்துல் ஹமீது அல் ஹஜூரி ஹஃபிதஹுல்லாஹ்
[இந்த செய்தியை ஷெய்க் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்]
~~~~
ஃபலஸ்தீன் விவகாரத்தில் ஒரு முஸ்லிம் அறிய வேண்டிய முக்கியமான விஷயங்களை குறித்து வாசிக்க...
t.me/al_ilmush_sharee/1797
| AL ILMUSH SHAREE
﷽
மதினா, மஸ்ஜிதுந் நபவியின் பள்ளியில் பாடங்களை எடுத்து வந்த ஆசிரியராகவும் மேலும் முஃப்தியாகவும் இருந்த அஷ் ஷெய்க் அலீ இப்னு நாஸிர் ஃபகீஹ் இன்று செவ்வாய்க்கிழமை 16/2/1446 வஃபாத் ஆகி விட்டார்கள்.
إنا لله وإنا إليه راجعون
لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى
ஷெய்க் அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் உள்ள மிகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் ஆவார் என்று அஷ் ஷெய்க் அப்துல் ஹமீது அல் ஹஜூரி ஹஃபிதஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.
நாளை புதன்கிழமை 17/2/1446 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுந் நபவியில் ஷெய்குடைய ஜனாஸா தொழுகை நடைபெறும். இன் ஷா அல்லாஹ்.
t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE
﷽
"அல்லாஹ்வுடைய கட்டளைகளை அமல்படுத்தும் பொழுதும்; தடுக்கப்பட்டவைகளை தவிர்ந்து கொள்ளும் பொழுதும்; மேலும் கஷ்டத்தின் பொழுதும், சோதனைகளின் பொழுதும் பொறுமையை கடைப்பிடித்தல்"
விளக்கவுரை : அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2052
| AL ILMUSH SHAREE
﷽ தற்போது நடைபெற்று முடிந்த அஷ் ஷெய்க் நவ்வாஸ் ஹஃபிதஹுல்லாஹ் அவர்களுடைய முஹாதராவின் தலைப்பு,
"மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுவதனால் காஃபிர்களுடைய புறத்திலிருந்து சோதனைகள் வரும் பொழுது பொறுமையுடன் இருப்பது"
تسأل الله التوفيق
ஆடியோ விரைவில் பதிவேற்றம் செய்யப்படும், இன் ஷா அல்லாஹ்.
இன்று, காலை 9.30 மணிக்கு,
இன் ஷா அல்லாஹ்,
கலந்து கொள்ள...
https://meet.google.com/egu-qcnf-otm
بسم الله الرحمن الرحيم
நல்லடியார்களின் கப்ருகளுடைய விஷயத்தில் வரம்பு மீறுவது அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக்கூடிய அவ்ஸானாக أوثانا அது ஆகிவிடும்.
அல்லாஹ்வை அன்றி வணங்கப்படக் கூடிய விஷயங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படும்,
◾வஸன் (அ) அவ்ஸான் وثن، أوثان என்பது உருவம் அல்லாத வணங்கக்கூடிய விஷயங்களை குறிக்கும்.
உதாரணத்திற்கு: கப்ரு, கல், மரம்...
◾ஸனம், அஸ்னாம் صنم، أصنام என்பது உருவம் உள்ள வணங்கப்படக்கூடிய விஷயங்களை குறிக்கும்.
உதாரணத்திற்கு: மிருகங்கள், மனிதர்கள்...
இங்கு இமாம் அந் நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவ்ஸான் என்ற வார்த்தையை தலைப்பிலே பயன்படுத்தி உள்ளார்கள்.
ஜாஹிலியா காலத்து அரபிகள் இவ்வாறு தான் அன்றைய ஹாஜிகளுக்கு உணவு ஏற்பாடு செய்து உதவி வந்த ஒரு மனிதரை அவர் மரணித்த பிறகு அவருடைய கப்ரை வரம்பு மீறி மகிமைபடுத்தினார்கள். இறுதியில் அதையே வணங்கிவிட்டார்கள். இதுதான் அவர்கள் வணங்கி வந்த லாத் اللات -ன் வரலாறு ஆகும்
இந்த செய்தியை இமாம் இப்னு ஜரீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்,
اَفَرَءَيْتُمُ اللّٰتَ وَالْعُزّٰىۙ
நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஜ்ஜாவையும் கண்டீர்களா?
(அல்குர்ஆன் : 53:19)
என்ற சூரதுந் நஜ்ம் -ன் 19 வது வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது தன்னுடைய தப்ஸீர் புத்தகத்தில் சரியான அறிவிப்பாளர் தொடரோடு இதை அறிவிக்கின்றார்கள். அதில்,
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவரான இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது,
كان يلت السويق للحاج فمات، فعكفوا على قبره
ஹாஜிகளுக்காக ஒரு மனிதர் சவீக் என்ற உணவை ஏற்பாடு செய்து உதவி வந்தார். அவர் மரணித்த பிறகு மக்கள் அவருடைய கப்ரின் அருகிலே பரக்கத்து தேடி அமர ஆரம்பித்தார்கள். (இறுதியில் அவரையே வணங்கும்படி ஆகிவிட்டார்கள்)
எனவே, நல்லடியார்களின் கப்ருகளை வரம்பு மீறி மகிமைப்படுத்தும் பொழுது இறுதியில் அந்த கப்ரு வணங்கப்படக்கூடிய இடமாக ஆகிவிடுகின்றது.
நூல்: இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கிதாபுத் தவ்ஹீத்
t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE
﷽
◾ شُرُوْطُ لٓا إِلٰهَ إلّا الله ◾
லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவிற்கு 8 நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளை பரிபூரணம் செய்தால்தான் ஒருவர் உண்மையான முவஹ்ஹித் (موحد) - தவ்ஹீத்வாதியாக - ஏகத்துவவாதியாக இருப்பார்.
அல் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
وليس المراد قولها باللسان مع الجهل بمعناها
லா இலாஹ இல்லல்லாஹ் என்று வெறுமனே நாவால் உச்சரிப்பது மட்டும் போதாது மாறாக அதை பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்.
லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை கூறி அதை அமல்படுத்துவதற்கு எட்டு நிபந்தனைகள் இருக்கின்றன.
அந்த நிபந்தனைகளை பரிபூரணம் செய்தால்தான் ஒருவர் உண்மையான முவஹ்ஹித் (موحد) - தவ்ஹீத்வாதியாக - ஏகத்துவவாதியாக இருப்பார்.
கவிதை வடிவில் தொகுக்கப்பட்ட லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் எட்டு நிபந்தனைகள் பின்வருமாறு:
شُرُوْطُ لٓا إِلٰهَ إلّا الله
*عِلْمٌ يَقِيْنٌ إِخْلاَصٌ وَصِدْقُكَ مَعْ مُحَبَّةٍ وَانْقِيَادٍ وَالْقَبُوْلِ لَهَا وَزِيْدَ ثَامِنُهَا اَلْكُفْرَانُ مِنْكَ بِمَا سِوَى الْإِلٰهِ مِنَ الْأَشْيَاءِ قَدْ أُلِهَا*
1.இல்ம் عِلْمٌ
2.யகீன் يَقِيْنٌ
3.இஃக்லாஸ் إِخْلاَصٌ
4.ஸித்க் صِدْقٌ
5.முஹப்பா مُحَبَّةٌ
6.இன்கியாத் انْقِيَادٌ
7.கபூல் الْقَبُوْلُ
8.குஃப்ரான் اَلْكُفْرَانُ
இந்த எட்டு நிபந்தனைகளையும் ஆதாரங்களுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பரிபூரணம் செய்தால்தான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் அது நமக்கு பலன் தரும். அப்பொழுதுதான் தவ்ஹீதை நமது உள்ளத்தில் நிலைநாட்டி அதை பிறருக்கு தெளிவாக எடுத்து சொல்ல முடியும்.
◾ லா இலாஹ இல்லல்லாஹ்வுடைய நிபந்தனைகளின் விளக்கவுரைகளை வாசிக்க…
1.இல்ம் عِلْمٌ
https://t.me/al_ilmush_sharee/849
2.யகீன் يَقِيْنٌ
https://t.me/al_ilmush_sharee/884
3.இஃக்லாஸ் إِخْلاَصٌ
https://t.me/al_ilmush_sharee/865
4.ஸித்க் صِدْقٌ
https://t.me/al_ilmush_sharee/876
5.முஹப்பா مُحَبَّةٌ
https://t.me/al_ilmush_sharee/894
6.இன்கியாத் انْقِيَادٌ
https://t.me/al_ilmush_sharee/908
7.கபூல் الْقَبُوْلُ
https://t.me/al_ilmush_sharee/923
8.குஃப்ரான் اَلْكُفْرَانُ
https://t.me/al_ilmush_sharee/932
| AL ILMUSH SHAREE
بسم الله الرحمن الرحيم
நல்லடியார்களின் கப்ருகளுடைய விஷயத்தில் வரம்பு மீறுவது அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக்கூடிய அவ்ஸானாக أوثانا அது ஆகிவிடும்.
அல்லாஹ்வை அன்றி வணங்கப்படக் கூடிய விஷயங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படும்,
வஸன் (அ) அவ்ஸான் وثن، أوثان என்பது உருவம் அல்லாத வணங்கக்கூடிய விஷயங்களை குறிக்கும்.
உதாரணத்திற்கு: கப்ரு, கல், மரம்...
ஸனம், அஸ்னாம் صنم، أصنام என்பது உருவம் உள்ள வணங்கப்படக்கூடிய விஷயங்களை குறிக்கும்.