cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

🇱🇰 KINNIYA_NEWS 🇱🇰

கிண்ணியா நியூஸ் telegram channel மற்றும் Whatsapp Group ஊடாக இனைந்திருங்கள்...... உடனடி செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள். 🩸கிண்ணியா செய்திகள் 🩸உள்நாட்டுச் செய்திகள் 🩸வெளிநாட்டு செய்திகள் 🩸இஸ்லாமிய தகவல்கள் 🩸கல்வி விடயங்கள் Telegram Channel பெண்களுக்

Show more
Advertising posts
269
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

*மொனராகலை உயர் பொலிஸ் அதிகாரியை கைது செய்த விசேட அதிரடிப்படையினர்* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு விசேட அதிரடிபடையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர். இதன்போது, 350 கஞ்சா செட்கள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரமொன்றும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரை மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

*அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கவுள்ளது* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியை நாடவுள்ளதாக ஆடிட்டர் ஜெனரல் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்தே தெரிவித்துள்ளார். ஆவணப்படுத்தப்பட்டவாறு சம்பந்தப்பட்ட வாகனங்கள் அரச நிறுவனங்களின் வசம் உள்ளதா, வாகனங்கள் திறமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அமைச்சகங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களை தனித்தனியாக விசாரிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

*இலங்கையில் வேகமாக பரவக்கூடிய மற்றொரு நோய்!* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ இலங்கையில் இந்த ஆண்டு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக வெறிநோய் வேகமாக பரவக்கூடும் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி எச்சரித்துள்ளார். கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு ரேபிஸ் நோயால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து தலா 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, மீதமுள்ளவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள். நாய் கடித்தால் 95% தொற்று ஏற்படுகிறது. இலங்கையில் நாய்க்கடி தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணம் வெறிநோய்க்கு எதிரான நாய்களுக்கு தடுப்பூசி போடாததே ஆகும். சுமார் 7 மில்லியன் நாய்கள் உள்ளன, ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி வரை தடுப்பூசி இயக்கங்கள் பணிகளை மேற்கொள்ளும். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்தால் பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு தடுப்பூசிகள் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் நாய்களுக்கு ரேபிஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டது மற்றும் 40,000 பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது என்றும் நாய்க்கடியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

*வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்!* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தகவல்களைப் பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணித்தியால தகவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

*பொருட்களின் விலை 4 மடங்காக உயர்வு!* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கையில் அழகு கலை துறை முற்றாக முடங்கும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி கட்டுப்பாடுகளால் அழகு சாதனப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது என அழகுக்கலை நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாக்கி அபோன்சு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடி மற்றும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பல இறக்குமதி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவற்றுள் அழகு சாதனப் பொருட்களும் காணப்படுகின்றன. இந்நிலையில் அழகு துறையில் தற்போது பாரியதொரு பிரச்சினை எழுந்துள்ளது. வெளிநாடுகளிடம் இருந்து அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. முன்பு போல் வாடிக்கையாளர்கள் எம்மிடம் இல்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. நாட்டில் கொள்வனவு செய்வதற்கு பொருட்களும் இல்லை. அவற்றின் விலைகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. சர்வதேச தரத்திலான பொருட்களை பழகிக்கொண்டு உள்ளவர்கள் அதனையே எதிர்பார்த்துள்ளனர். எங்களுக்கு வரும் டொலர் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இவ்வாறான உற்பத்திகள் செய்வதில்லை. மேலும் எதிர்காலத்தில் இந்த துறையில் முன்னேறி செல்வது என்பது சிரமமாகும். இதன் காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டி ஏற்படும் பின்னர் அவர்களை நம்பி உள்ளவர்களின் கதி என்ன? அவர்களின் குடும்பம் பாதிக்கும் என தெரிவித்துள்ளார். 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

*புத்தல – கதிர்காமம் பாதையில் பயணிப்போருக்கான அறிவிப்பு* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ புத்தல – கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் வாகனங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது. குறித்த வீதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இந்த நிலைமையை தடுப்பதற்கு குறுகிய கால வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

🌐 *International Chamber of commerce Sri Lanka vacancies 2023* *உயர்தர சித்தியுடன் இலங்கைக்கான சர்வதேச வர்த்தக சபையில் முகாமைத்துவ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு* ✅ Intern/Management Trainee,admin executive ✅ *QUALIFICATION - School Leaver* ⭕ *Full details|முழு விபரம்* - https://bit.ly/3jXkn3A 🗓️ *Closing date- 18.01.2023* ⭕ JOIN OUR WHATSAPP GROUP- https://chat.whatsapp.com/BSQKClIJkqDEHSvxAoPSjl ⭕ JOIN OUR TELEGRAM GROUP- https://t.me/joinchat/GFPrmlh9_6fIdeec
Show all...
Admin & Secretarial Executive / Intern / Management Trainee - international chamber of commerce - Ceylon Vacancy

*தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.10 பில்லியன் போதுமானது - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் !* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா போதுமானது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முந்தைய தேர்தலுக்கு COVID-19 தொற்றுநோய் காரணமாக ரூ. 8 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் எங்களால் ரூ. 5.8 பில்லியன் மட்டுமே செலவழிக்க முடிந்தது, என்று அவர் மேலும் கூறினார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தேர்தலுக்கான இறுதிச் செலவு மதிப்பிடப்பட்ட செலவை விடக் குறைவாக இருக்கும் என நம்புகிறார். "ஆரம்பத்தில் ரூ.11 பில்லியன் கேட்டோம், பிறகு ரூ.9.3 பில்லியன் என்று மதிப்பிட்டோம், ஆனால் பட்ஜெட்டில் ரூ.10 பில்லியன் ஒதுக்கப்பட்டது," என்று அவர் விளக்கினார். 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

*மின்கட்டண திருத்தம் தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கும் என்று நம்புவதாக வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்படும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு அனுமதி கிடைத்து, மின் உற்பத்தி நிலையங்களுக்கான மூலப்பொருட்கள் கிடைக்குமாயின் எதிர்வரும் காலங்களில் மின் துண்டிப்பின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவுறுத்தல்களை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் சட்டத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் மின் கட்டண உயர்வுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

*இன்றைய வானிலை அறிவிப்பு* ➖➖➖➖➖➖➖➖ *16 . Ju Al-Akhirah . 1444* *கிண்ணியா நியூஸ்* *09 . January . 2023* ➖➖➖➖➖➖➖➖ கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்) 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ©️ *🇱🇰KINNIYA_NEWS🇱🇰* *📲 *இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⤵️* https://chat.whatsapp.com/D4yiAH6Wfh66BepugctLto *KINNIYA_NEWS TELEGRAM CHANNEL LINK:* http://t.me/Kinniya_News_channel *♻️அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்! இதுவரை எமது நியூஸ் குழுவில் இனையாதவர்கள் இனைந்து கொள்ளுங்கள்* *விளம்பரங்களுக்கு: http://wa.me/+94758973907*
Show all...
🇱🇰KINNIYA_NEWS🇱🇰 9️⃣

WhatsApp Group Invite

Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.