இஸ்லாமிய கல்வி
Open in Telegram
அஸ்ஸலாமு அலைக்கும், ‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்: அபுதாவூத்
Show more1 156
Subscribers
No data24 hours
+37 days
No data30 days
Posts Archive
1 156
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டு மயக்கமுற்றிருந்தபோது, வேகமாக அழுகுரல் கேட்டது. மயக்கம் தெளிந்ததும் அவர்கள், "உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார்கள். அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Muslim 927.01
In-book
1 156
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவ ரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்குச் சென்று) நெற்றியைத் தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்கள். அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Bukhari 811
In-book reference: Book 10, Hadith 206
1 156
பிரார்த்தனை
رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ
سورة نوح، الآية: ۲۸.
என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பு வழங்கு!
நூஹ் 71:28
1 156
பிரார்த்தனை
رَبِّ إِنِّىٓ أَعُوذُ بِكَ أَنْ أَسْـَٔلَكَ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌۖ وَإِلَّا تَغْفِرْ لِى وَتَرْحَمْنِىٓ أَكُن مِّنَ ٱلْخَٰسِرِينَ
سورة هود، الآية: ٤٧.
என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காதபடி என்னைப் பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்.
ஹூது 11:47
1 156
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
ஆகவே, (விசுவாசங்கொண்டோரே) நீங்கள் எதை விசுவாசங்கொண்டீர்களோ, அது போன்றதை அவர்களும் விசுவாசங்கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர்வழியை அடைந்து விடுவார்கள். இன்னும், அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். அவர்களைப்பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன், மேலும், அவன் (அவர்களின் சூழ்ச்சியான சொற்களைச்) செவியேற்கிறவன்; (அவர்களின் வஞ்சங்களை) மிக்க அறிகிறவன்.
(அல்குர்ஆன் : 2:137)
1 156
பிரார்த்தனை
رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ
سورة الأعراف، الآية: ۲۳.
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவோம்.
அல் அஃராஃப் 7:23
1 156
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று வினவினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். ‘‘நீங்கள் இதன்மேல் அமர்வதற்காகவும் தலை சாய்த்துக்கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்படும். உருவப்படங்கள் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” எனக் கூறினார்கள்.26 அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Bukhari 2105
In-book reference: Book 34, Hadith 58
1 156
நபி (ஸல்) எப்படி தஸ்பீஹ் செய்வார்கள்
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்யும்போது தங்களது வலது கையைக் கொண்டு முடிச்சிடுவார்கள் (எண்ணிக் கொள்வார்கள்). (ஸுனன் அபூதாவூது)
1 156
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவின்) இறுதித் தொழுகையான இஷாவைத் தொழுவார்கள். பிறகு தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அதே தொழுகையை அவர்களுக்குத் தொழுவிப்பார்கள். அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Muslim 465.03
In-book reference: Book 4, Hadith 204
1 156
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
நிரந்தரமான நல்ல அமல்கள் என்பது,
سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்! பாவத்திலிருந்து மீளவோ, நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர! என்ற திக்ருகளாகும்.(முஸ்னது அஹ்மது)
1 156
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமது பயணம் ஒன்றுக்காகப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தார்கள். அவர்கள் பயணம் சென்றுகொண்டிருந்தபோது தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கிடைக்கவில்லை. பயணக் கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் சென்று சிறிதளவு தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதை எடுத்து அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் கை விரல்களில் நான்கைப் பாத்திரத்தின் மீது நீட்டி, “எழுந்து அங்கத் தூய்மை செய்யுங்கள்” என்று உத்தரவிட் டார்கள். மக்கள் அனைவரும் அங்கத் தூய்மை செய்தனர். அவர்கள் விரும்பிய அளவுக்கு அங்கத் தூய்மை செய்வதற் குள்ள தண்ணீரைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் எழுபது அல்லது (கிட்டத்தட்ட) அந்த அளவு எண்ணிக்கையினராக இருந்தனர். அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Bukhari 3574
In-book reference: Book 61, Hadith 83
1 156
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
null
பிரார்த்தனைகளில் மிகச் சிறந்தது,
اَلْحَمْدُ لِلّٰهِ
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!' என்பதாகும்.
திக்ருகளில் மிகச் சிறந்தது, لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்பதாகும். (ஜாமிவுத் திர்மிதி)
1 156
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் “குபா'வில் “சுப்ஹ்' தொழுகை யிலிருந்தபோது, ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு (நபி (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமடித்து கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். (அதற்குமுன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32 அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Bukhari 4493
In-book reference: Book 65, Hadith 20
1 156
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
ஒருவர் இஸ்லாமைத் தழுவும்போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுத் தருவார்கள். பிறகு
اَللّٰهُمَّ اغْفِرِ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
"அல்லாஹ்வே... எனக்கு மன்னிப்பு வழங்கு! எனக்குக் கருணை காட்டு! எனக்கு நேர்வழி காட்டு! என்னைப் பாதுகாத்துக் கொள்! எனக்கு உணவளி!'' என்று பிரார்த்தனை செய்யும்படிக் கூறுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
1 156
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழுந்திருக்க வேண்டாம்.12 “இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்” என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Bukhari 637
In-book reference: Book 10, Hadith 34
1 156
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
null
ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, நான் சொல்வதற்கு ஒரு வாசகத்தைக் கற்றுத் தாருங்கள் என்றார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: நீ சொல்
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ اَللّٰهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا سُبْحَانَ اللّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அல்லாஹ் மிகப்பெரியவன்; நான் அவனை பெரியவனாக ஏற்றுக் கொண்டேன்; அதிகமான புகழ்சியை அல்லாஹ்விற்கு உரியதாக்குகிறேன்; அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் (சகல குறைகளிலிருந்து) மகா தூய்மையானவன்; பாவத்திலிருந்து மீளவோ, நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர! அவன் மிகைத்தவன்; மிக்க ஞானமுடையவன்'.
அப்போது கிராமவாசி கூறினார், "இவை எனதுஇறைவனுக்காக உள்ளவை; எனக்காக உள்ளதைச் சொல்லித் தாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ சொல்
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
"அல்லாஹ்வே... எனக்கு மன்னிப்பு வழங்கு! எனக்குக் கருணை காட்டு! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு உணவளி!' (ஸஹீஹ் முஸ்லிம்)
1 156
அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், விஷமுள்ள எல்லா உயிரினங்களின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Bukhari 5741
In-book reference: Book 76, Hadith 56
1 156
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு மிகப் பிடித்தமான பேச்சு நான்காகும். அவை,
سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ
அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை! அல்லாஹ் மிகப் பெரியவன்!(ஸஹீஹ் முஸ்லிம்
1 156
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தமது கையில் தங்கமோதிரம் அணிந்திருப்பதைக் கண்டபோது, அதைக் கழற்றச்செய்து தூக்கியெறிந்தார்கள். பிறகு "உங்களில் ஒருவர் (நரக) நெருப்பின் கங்கை எடுத்து, அதைத் தமது கையில் வைத்துக் கொள்கிறார்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு அந்த மனிதரிடம், "உமது மோதிரத்தை(க் கழற்றி) எடுத்து நீ (வேறு வகையில்) பயனடைந்துகொள்" என்று கூறப்பட்டது. அவர், "இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீசியெறிந்துவிட்டதை அல்லாஹ்வின் மீதாணையாக ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டார். அத்தியாயம் :
Grades:
Reference: Sahih Muslim 2090
In-book reference: Book 37, Hadith 87
1 156
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
"பாவத்திலிருந்து மீளவோ, நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர!' என்று நீ சொல்' எனக் கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி)
