Onlinemania TNPSC GROUP✍
Open in Telegram
Tnpsc gr2 free test series provides you syllabus wise indepth coverage on a daily basis.
Show more6 562
Subscribers
-424 hours
-147 days
-7630 days
Data loading in progress...
Similar Channels
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '26
+3
in 0 channels
August '26
+11
in 0 channels
Get PRO
July '26
+18
in 0 channels
Get PRO
June '26
+14
in 0 channels
Get PRO
May '26
+11
in 0 channels
Get PRO
April '26
+3
in 0 channels
Get PRO
March '26
+5
in 0 channels
Get PRO
February '26
+2
in 0 channels
Get PRO
January '26
+8
in 0 channels
Get PRO
December '25
+11
in 0 channels
Get PRO
November '25
+15
in 0 channels
Get PRO
October '25
+86
in 0 channels
Get PRO
September '25
+37
in 0 channels
Get PRO
August '25
+9
in 0 channels
Get PRO
July '25
+115
in 0 channels
Get PRO
June '25
+242
in 0 channels
Get PRO
May '25
+642
in 0 channels
Get PRO
April '25
+34
in 0 channels
Get PRO
March '25
+28
in 0 channels
Get PRO
February '25
+32
in 0 channels
Get PRO
January '25
+107
in 0 channels
Get PRO
December '24
+70
in 0 channels
Get PRO
November '24
+38
in 0 channels
Get PRO
October '24
+36
in 0 channels
Get PRO
September '24
+27
in 0 channels
Get PRO
August '24
+27
in 0 channels
Get PRO
July '24
+46
in 0 channels
Get PRO
June '24
+75
in 0 channels
Get PRO
May '24
+130
in 0 channels
Get PRO
April '24
+68
in 0 channels
Get PRO
March '24
+64
in 0 channels
Get PRO
February '24
+55
in 0 channels
Get PRO
January '24
+37
in 0 channels
Get PRO
December '23
+36
in 0 channels
Get PRO
November '23
+48
in 0 channels
Get PRO
October '23
+37
in 0 channels
Get PRO
September '23
+23
in 0 channels
Get PRO
August '23
+47
in 0 channels
Get PRO
July '23
+84
in 0 channels
Get PRO
June '23
+32
in 0 channels
Get PRO
May '23
+46
in 0 channels
Get PRO
April '23
+44
in 0 channels
Get PRO
March '23
+39
in 0 channels
Get PRO
February '23
+16
in 0 channels
Get PRO
January '23
+21
in 0 channels
Get PRO
December '22
+18
in 0 channels
Get PRO
November '22
+11
in 0 channels
Get PRO
October '22
+4
in 0 channels
Get PRO
September '22
+64
in 0 channels
Get PRO
August '22
+4
in 0 channels
Get PRO
July '22
+55
in 0 channels
Get PRO
June '22
+74
in 0 channels
Get PRO
May '22
+84
in 0 channels
Get PRO
April '22
+56
in 0 channels
Get PRO
March '22
+351
in 0 channels
Get PRO
February '22
+53
in 0 channels
Get PRO
January '22
+50
in 0 channels
Get PRO
December '21
+92
in 0 channels
Get PRO
November '21
+33
in 0 channels
Get PRO
October '21
+20
in 0 channels
Get PRO
September '21
+53
in 0 channels
Get PRO
August '21
+31
in 0 channels
Get PRO
July '21
+48
in 0 channels
Get PRO
June '21
+500
in 0 channels
Get PRO
May '21
+589
in 0 channels
Get PRO
April '21
+59
in 0 channels
Get PRO
March '21
+135
in 0 channels
Get PRO
February '21
+119
in 0 channels
Get PRO
January '21
+298
in 0 channels
Get PRO
December '20
+10 636
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 10 September | 0 | |||
| 09 September | 0 | |||
| 08 September | 0 | |||
| 07 September | +1 | |||
| 06 September | +1 | |||
| 05 September | 0 | |||
| 04 September | 0 | |||
| 03 September | +1 | |||
| 02 September | 0 | |||
| 01 September | 0 |
Channel Posts
| 2 | பாதைகள் என்று
எதுவுமில்லை
உன் காலடிச் சுவடே
உன் பாதையை
உருவாக்குகிறது.
*- சுந்தர ராமசாமி -* | 109 |
| 3 | *💥 தவெகவிற்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்.*
தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் அக்கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.
தற்போது தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. | 109 |
| 4 | எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் கூவம், அடையாறு, அமராவதி ஆகிய மூன்று ஆறுகளை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை. மீதமுள்ள ஆறு ஆறுகளுக்கு செயல்திட்டம் உருவாக்கப்பட்ட போதிலும் அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
இவை அனைத்தையும் விஞ்சும் வகையிலான ரசாயன பாதிப்புகளை ஏற்படுத்துவது கடலூர் சிப்காட் வேதிப்பொருள்கள் தொழிற்பேட்டை ஆகும். அங்கிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து அங்கு வளரும் தென்னை மரங்களில் காய்க்கும் இளநீர்களில்கூட டையாக்சின் எனப்படும் நச்சுப்பொருள்கள் உள்ளன. ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தோல் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றாலும் இதே நச்சுப்பொருள் உருவாகி மனிதர்களைத் தாக்குகிறது. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட ஏராளமான கொடிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன.
தமிழ்நாட்டின் கடலோர சுற்றுச்சூழலைக் காப்பதற்காக உலக வங்கியிடம் சுமார் ரூ. 1,200 கோடி கடன்வாங்கி, அதில் ரூ. 21 கோடி செலவிட்டு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. "பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்' என்ற பெயரில் சதுப்புநிலத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் 6 அடி உயரத்துக்கு சுமார் 3 கி.மீ. நீளமான சுற்றுச்சுவரையும், டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களைக் கொண்டு அகலமான நடைபாதையையும் சதுப்பு நிலத்துக்கு உள்ளே அமைக்கிறார்கள். இது சதுப்புநிலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நடவடிக்கை ஆகும்.
இத்தகைய பேரழிவுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு காரணம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்யாததுதான். இந்த ஒற்றைப் பணியை மட்டும் தமிழக அரசு செய்தால், அந்தப் பகுதியில் ஒரு கி.மீ. சுற்றளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கும். சதுப்புநிலத்தின் உள்ளே குப்பையைக் கொட்டுவதும், கழிவுநீரைக் கலப்பதும் தடுக்கப்படும். பள்ளிக்கரணையை காப்பதால் சென்னையின் வெள்ள பாதிப்பும் குறையும். எனவே, இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.
இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள 20 ராம்சார் தளங்கள் உள்பட 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017-இன் கீழ் சட்டப்படி அறிவிக்கை செய்ய வேண்டும். இதற்காக உச்சநீதிமன்றம் பலமுறை நிர்ணயித்த காலக்கெடுகள் காலாவதியாகி விட்ட நிலையில், நடப்பு செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதிய கெடு விதித்திருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்ய வாய்ப்புகள் தென்படவில்லை.
நகரங்களில் உருவாகும் குப்பையில் 30% முதல் 40% அளவு குப்பைகளை மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் தான் காரணமாக உள்ளனர். 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பு, ஒரு நாளுக்கு 40,000 லிட்டர் தண்ணீர் பயன்பாடு, அல்லது ஒரு நாளில் 100 கிலோகிராமுக்கு கூடுதலாக குப்பை உருவாக்கும் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை மொத்தக் கழிவு உற்பத்தியாளர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் உருவாக்கும் கழிவுகளுக்கு அவர்களே பொறுப்பு என திடக்கழிவு மேலாண்மை விதிகள் கூறுகின்றன.
அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அவரவர் மாவட்டத்தில் உள்ள மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் பட்டியலை ஆறு வாரங்களில் தொகுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 18 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் திடக்கழிவு மேலாண்மை விதியை முறையாகச் செயல்படுத்தாவிட்டால் "மின் இணைப்பையும் தண்ணீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை செயல்படுத்துவதுடன், திடக்கழிவுகளை வகை பிரித்து மேலாண்மை செய்வதற்கான முழுமையான செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.
சீரழிக்கப்பட்ட சுற்றுச்சூழலை மீட்டெடுத்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அரசு பாதுகாக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.
நன்றி: தினமணி நாளிதழ் | 105 |
| 5 | *🔴 பள்ளிக்கரணையை காப்பதால் சென்னையின் வெள்ள பாதிப்பும் குறையும்!*
*கட்டுரையாளர்: முனைவர் செளமியா அன்புமணி, தலைவர், பசுமைத் தாயகம்.*
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்குவதுதான் சுற்றுச்சூழல். தூய காற்று, பாதுகாப்பான காலநிலை, பாதுகாப்பான மற்றும் போதுமான தண்ணீர், நலமான மற்றும் நீடித்திருக்கும் முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு, நச்சு இல்லா சுற்றுச்சூழல், நலமான சுழல் மண்டலங்கள் மற்றும் உயிரிப்பன்மயம் ஆகிய ஆறு அம்சங்களும் தூய்மையான, நலமான மற்றும் நீடித்திருக்கும் சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகும். இந்த ஆறு அம்சங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ முடியும்.
காற்று மாசு காரணமாக சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 11 ஆயிரம் பேர் இறப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.11,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. உலக நலவாழ்வு அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட காற்று மக்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் சென்னை மாநகர மக்களின் வாழ்நாள் நான்கு ஆண்டுகள் அதிகரிக்கக்கூடும். இதற்காக 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய தூயக் காற்றுத் திட்டத்தில் 2021-ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், இந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 90% பணிகள் நிறைவேற்றப்படவில்லை.
அது மட்டுமின்றி, சென்னைக்கு காற்று மாசு எங்கிருந்து, எந்த அளவுக்கு வருகிறது என்பதை அறிய ஐஐடி மூலம் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை. இதில் நாம் தலைகுனிய வேண்டிய செய்தி என்னவென்றால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவில் சென்னை கடைசி இடத்தைப் பிடித்திருப்பதுதான். அதேபோல், தமிழ்நாட்டுக்கான "தூய காற்று திட்டம்' 31.01.2025 அன்று உருவாக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அது குறித்த விவரங்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை.
சென்னை தூயக் காற்று திட்டத்துக்காக பெறப்பட்ட ரூ.593 கோடியில் ரூ.194 கோடி செலவிடப்பட்டதும், மீதமுள்ள தொகை பயனில்லாத திட்டங்களுக்கு வீணாகச் செலவிடப்பட்டதும்தான் மிச்சம். ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1995-ஆம் ஆண்டில் மூடப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆலையால் கைவிடப்பட்ட 2.5 லட்சம் டன் குரோமியம் மற்றும் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிலும், நிலத்திலும் கலந்த இந்த கழிவுகளால் விளைநிலங்கள் மலட்டுத்தன்மை கொண்டவையாக மாறிவிட்டன. மக்கள் புற்றுநோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள், மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ஆண்மைக் குறைவு உள்ளிட்ட நோய்களால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; விரிவான திட்டத்தை முதல் ஆறு மாதங்களில் உருவாக்கி, அடுத்த ஆறு மாதங்களில் பணிகளைத் தொடங்க வேண்டும்; இதற்கான செலவுகளை மாசுபடுத்தியவரே பொறுப்பேற்கும் கோட்பாட்டின் படி தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 02.09.2022 அன்று தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும்கூட இன்று வரை பணிகள் தொடங்கப்படவில்லை.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பாலாற்றில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் ஏற்படும் கேடுகளையும் தமிழக அரசு இன்னும் தடுக்கவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும்படி 30.01.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, 2025 மார்ச் மாதம் நீதியரசர் சத்தியநாராயணன் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் ஆய்வு செய்து ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மீண்டும் 16.09.2025 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னமும் பாலாற்றில் தோல் ஆலைக் கழிவுகளும் நகராட்சி கழிவுகளும் கலப்பது தொடர்கிறது.
தமிழக அரசின் தோல்விப் பட்டியல் இன்னும் முடியவில்லை. தமிழ்நாட்டில் மிகவும் மாசுபட்ட ஆறுகளாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறை செய்யப்பட்ட சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, காவிரி, பவானி, தாமிரவருணி, கூவம், அடையாறு, அமராவதி ஆகிய ஒன்பது ஆறுகளை மீட்டெடுத்து ஆறு மாதங்களில் அவற்றில் குளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என 2018-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. | 93 |
| 6 | *💥 iPhone 18 Pro சீரிஸ் ஃபோன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்!*
18 Pro, 18 Pro Max ஆகிய புதிய மாடல் ஐபோன்களுடன் 'Duo' என்ற பெயரில் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனையும் அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்.
இந்திய ரூபாய் மதிப்பில், 18 Pro-வின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், 18 Pro Max-ன் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆகவும், Duo-வின் ஆரம்ப விலை ரூ.2,99,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
இரண்டு Pro மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதியும், உலகளாவிய விற்பனை செப்டம்பர் 18ஆம் தேதியும் தொடங்க உள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனான Duo-வின் முன்பதிவு மட்டும் அக்டோபர் 16ஆம் தேதியும், விற்பனை அக்டோபர் 23ஆம் தேதியும் தொடங்குகின்றன. | 82 |
| 7 | *📢 காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு*
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17இல் தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.
3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.
11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். | 179 |
| 8 | காபியா? தேநீரா? பெண்களின் எலும்பு ஆரோக்கியத்தில் எது சிறந்தது?
(Coffee or Tea? Which is better for women's bone health?)
☕ ஆஸ்திரேலியாவின் Flinders University ஆய்வில் சுமார் 10,000 வயதான பெண்கள் 10 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.
(☕ In a study by Flinders University in Australia, around 10,000 older women were monitored for 10 years.)
🍵 தேநீர் குடிப்பது எலும்பு அடர்த்தியை சிறிதளவு அதிகரிக்க உதவியது.
(🍵 Drinking tea helped to slightly increase bone density.)
☕ ஒரு நாளைக்கு 5 கோப்பைக்கு மேல் காபி குடித்தவர்களிடம் எலும்பு அடர்த்தி குறைந்தது.
(☕ Bone density decreased in those who drank more than 5 cups of coffee a day.)
🌱 தேநீரில் உள்ள Catechins, எலும்பு உருவாக்கத்தை ஊக்குவித்து சிதைவைக் குறைக்க உதவலாம்.
(🌱 Catechins in tea may help stimulate bone formation and reduce breakdown.)
☕ காபியில் உள்ள Caffeine, அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது கால்சியம் உறிஞ்சப்படுவதையும் எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தையும் பாதிக்கலாம்.
(☕ Caffeine in coffee, when taken in high amounts, can affect calcium absorption and bone metabolism.)
🥛 பால் சேர்ப்பது, காபியின் இந்த எதிர்மறை விளைவுகளைத் தணிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(🥛 Researchers stated that adding milk might mitigate these negative effects of coffee.) | 218 |
| 9 | *💥 பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம்; அரசாணை வெளியீடு.*
சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்களை அமைக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்கத் திட்டம் எனவும் அரசாணையில் தகவல்.
கட்டடக் கலை நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக்குழு, கட்டட வடிவமைப்பு, வரைபடம் தயாரிக்க குழுக்கள் அமைக்க திட்டம்.
விரிவான திட்ட அறிக்கையை பொதுப்பணித் துறை தயாரிக்க வேண்டும் என அரசின் பொதுத் துறை செயலாளர் உத்தரவு. | 218 |
| 10 | *💥 2030-க்குள் எல்லாமே முடிந்துவிடும்; மனிதகுலம் அழிந்துவிடும் - AI ஆய்வாளரின் பகீர் எச்சரிக்கையால் பரபரப்பு!*
AI-ஆல் 2030ம் ஆண்டுக்குள் மனிதகுலமே அழியும் பேராபத்து உள்ளதாக ANTHROPIC நிறுவன ஆய்வாளர் திடீரென ராஜினாமா செய்துவிட்டு பகீர் எச்சரிக்கை.
ANTHROPIC, OPENAI ஆகிய நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில், கட்டுக்கடங்காத SUPER-INTELLIGENCE தொழில்நுட்பத்தை உருவாக்கப் போட்டிபோட்டு வருவதாக ஆய்வாளராக பணியாற்றிய ஜேக்கப் காக்சன் குற்றச்சாட்டு.
எதையும் ஹேக் செய்யும் ஆற்றலும், சமூகத்தை மாற்றியமைக்கும் அதிகாரமும் கொண்ட Al அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த ஆபத்தான போட்டியை நிறுத்தாவிட்டால் விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும் என்றும் அவர் கருத்து. | 256 |
| 11 | No text... | 227 |
| 12 | *💥 அழியும் பனிப்பாறைகள்*
சீன - நேபாள எல்லையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த கொடூரமான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே காரணம்! - சீன ஆய்வாளர்கள் தகவல்.
கடந்த 60 ஆண்டுகளில் திபெத் பீடபூமியின் பனிப்பாறை பரப்பளவு 51,000 சதுர கி.மீ-லிருந்து 39,000 சதுர கி.மீ-ஆகக் குறைவு; அங்கு உருவாகியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏரிகளால் பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் அதிகரிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் | 225 |
| 13 | பேசும் முன்னால்
கவனமாகக் கேள்.
எழுதும் முன்னால்
யோசிக்கத் தவறாதே.
செலவழிக்கும் முன்னால்
சம்பாதிக்கப் பார்.
பிறரை விமர்சிக்கும் முன்னால்
உன்னை எண்ணிப்பார்.
ஓய்வுபெறும் முன்னால்
சேமித்து வை.
மரிக்கும் முன்னால்
கொடுத்துவிடு.
*- ராபர்ட் கார்டு வெல் -* | 215 |
| 14 | *💥 27 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.*
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவு.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலராக டி.மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங் தொழில்கல்வித் துறை கூடுதல் செயலராக நியமனம்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்), தாகரே சுபம் ஞானதேவ் ராஜ் நியமனம்.
சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ராஜகோபால் சுங்கரா நியமனம்.
விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம். | 276 |
| 15 | No text... | 254 |
| 16 | *💥 கள் இறக்க அனுமதிக்கலாம் - ஆணையம் பரிந்துரை.*
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்; முடியாவிட்டால், படிப்படியாக அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம்.
கள் இறக்க, விற்க உரிமம் தருவது, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம்.
டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50% குறைக்கலாம்; விலை குறைப்புக்காக மது வகைகளை டெட்ரா பேக்கில் அடைத்து விற்க பரிசீலிக்கலாம்.
காலை 9 முதல் மதியம் 1, மாலை 5 முதல் இரவு 9 வரை என டாஸ்மாக் வணிக நேரத்தை மாற்றலாம்.
ஒருநாளில் ஒருவருக்கான மதுபான விற்பனை அளவை கட்டுப்படுத்த விநியோக அட்டைகளை வழங்கலாம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை. | 273 |
| 17 | *💥 காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு.*
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.
15 நாட்கள் வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்தது.
பரிந்துரையை ஏற்று வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவு. | 232 |
| 18 | No text... | 270 |
| 19 | *💥 "காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - முதலமைச்சர் விஜய்.*
காவல்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது; விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் வழிநடத்துவது பொறுப்பாகும்
சமூக சூழல், குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் குற்றச்செயலில் ஈடுபடும் இளம் வயதினர்
இதற்கெல்லாம் யார் மீது பழிப்போடலாம் என நினைக்கும் எதிர்க்கட்சியினர்
அவர்களுக்கு இணையாக நாமும் 2021-25 வரை நடந்த குற்றச்சம்பவங்களை குறிப்பிட மனம் இடம் தரவில்லை
கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களை சந்தித்தார்
இனி பெண்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்
தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம்.. சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச பேச்சு நதியாக ஓடுகிறது.
காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை.
மக்கள் பாதுகாப்பிற்காக தங்களது உயிரையும் குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் காவலதுறையினர் பணியாற்றுகின்றனர்.
குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம். | 293 |
| 20 | சுய ஒழுக்கத்துடன்
உள்ளபோது
எதுவும் சாத்தியமே.
உங்கள் கண்களை
நட்சத்திரங்களின் மீதும்,
உங்கள் பாதங்களை
தரையின் மீதும்
வைத்திருங்கள்.
*- தியோடர் ரூஸ்வெல்ட் -* | 249 |
