en
Feedback
🌈 Seventh-day Adventists SDA Group

🌈 Seventh-day Adventists SDA Group

Open in Telegram

Daily posts on Scripture and Life's Value based Inspirational Thoughtful Exposition. People of last generation is to warn the world of His soon Coming. Is the body of Christ doing this urgent work? இப்போது **Devotion Time என்ற தியான நேரம்** தமிழில்...

Show more
478
Subscribers
+124 hours
+17 days
-630 days
Posts Archive
🙏 தியான நேரம் : 19-ஜூலை-2024          🛐Father of Lights💫 1 - சாலொமோன் (பகுதி-5) தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார். 2 நாளாகமம் 1:1 மேலும், தேவ காரியங்களில் தவறான நியதிகள் பரவினால் அதை எதிர்த்து, கருத்தோடு போராடுகிறவர்களாய் இருப்பார்கள். ஐசுவரியம், கனம், நீண்ட ஆயுசு ஆகியவற்றை நாடாமல், ஞானத்தை நாடினான் சாலொமோன். அவன் நாடினதை தேவன் அவனுக்கு அருளினார். அவன் விரும்பின் சமயோசித புத்தியும், பரந்த மனதும் கனிவான உள்ளமும் அருளப்பட்டன. தேவன் சாலொமோனுக்கு மிகுதியானஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத் தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க் கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. 1இராஜா 4:29-31 ’’நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜா வுக்கு உண்டென்று கண்டு, இஸ்ரவேலர் எல்லோரும் அவனுக்குப் பயந்தார்கள்’‘ 1இராஜா 3:28. முன்பு தாவீதிடம் மக்கள் தங்கள் இதயங்களைத் திருப்பியிருந்தது போலவே, இப்போது சாலொ மோனுக்கு நேராகவும் தங்கள் இருதயங்களைத் திருப்பி, சகல காரியங்களிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். ‘சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து, அவனை மிகவும் பெரியவனாக்கினார். 2நாளா 1:1. தேவனிடம் சாலொமோன் தன்னை அர்ப்பணித்திருந்த காலங் களில் அவன் செம்மையும் உறுதியுமான கொள்கையுள்ளவனாய் இருந்தான். தேவ கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தான். அரசின் ஒவ்வொரு முக்கிய முயற்சியும் அவருடைய அறிவுரையின்படியே எடுக்கப்பட்டது. ராஜ்யத்தின் செயல்பாடு களை அவன் புத்தியோடு நிர்வகித்தான். அவனிடம் செல்வமும் ஞானமும் இருந்தன; தன் ஆளுகையின் ஆரம்பக் காலத்தில் அவன் அற்புதமான கட்டடங்களையும் பொதுநல வசதிகளையும் கட்டினான்; ஆர்வமும் பக்தியும் நீதியும் பெருந்தன்மையும் அவன் வார்த்தை யிலும் செய்கையிலும் வெளிப்பட்டன. இவற்றினி மித்தம் குடி மக்கள் அவன்மேல் பாசம் வைத்தார்கள்; மற்ற தேசங்களின் ராஜாக் கள் அவனுக்குப் பாராட்டும் மரியாதையும் அளித்தார்கள். சாலொமோன் ஆட்சியின் முதற்பகுதியில் யேகோவாவின் நாமத்தை இஸ்ரவேலர் மிகவும் கனப்படுத்தினார்கள். மன்ன னிடம் வெளிப்பட்ட ஞானமும் நீதியும் அவன் சேவித்த தேவனு டைய நற்குணங்களின் மேன்மையைச் சகல தேசங்களுக்கும் வெளிப்படுத்தின. சிறிது காலம் உலகத்தின் விளக்காக இஸ்ரவேல் தேசம் யேகோவாவின் மேன்மையைப் பறைசாற்றியது. அவன் ஆரம்பக்கால ஆட்சியின் உண்மையான மகிமை, அவனுடைய ஈடு இணையற்ற ஞானத்திலோ, ஐசுவரியத்திலோ, ஒப்புயர்வற்ற அதி காரத்திலோ, புகழிலோ அல்ல; அவன் பரலோக ஈவுகளைப் புத்தி யோடு பயன்படுத்தி, தேவனுடைய நாமத்திற்குக் கனத்தைக் கொண்டுவந்ததில் தான் அவனுடைய ஆட்சியின் உண்மையான மகிமை இருந்தது. வருடங்கள் செல்லச் செல்ல, சாலொமோனின் புகழ் அதிகரித் தது. அவன் தன் ஆவியிலும் ஆத்துமாவிலும் பெலத்தின்மேல் பெலமடைந்து, தான் பெற்ற ஆசீர்வாதங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தேவநாமத்தைக் கனப்படுத்த முயன் றான். தன் அதிகாரமும் ஞானமும் அறிவும் யேகோவாவின் தய வால் தனக்குக் கிடைத்தவை என்பதும், ராஜாதி ராஜாவைப்பற்றிய அறிவை உலகிற்குப் பகிர்ந்தளிக்கவே அந்த ஈவுகள் அருளப் பட்டன என்பதும் பிறருக்குத் தெரிந்திருந்ததை விட அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. [தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]

🙏Devotion Time : 18-July-2024       🛐Father of Lights 💫 Ch. 1 : Solomon (Part-4 of 6) KJV James 1:5 If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him. Those who today occupy positions of trust should seek to learn the lesson taught by Solomon's prayer. The higher the position a man occupies, the greater the responsibility that he has to bear, the wider will be the influence that he exerts and the greater his need of dependence on God. Ever should he remember that with the call to work comes the call to walk circumspectly before his fellow men. He is to stand before God in the attitude of a learner. Position does not give holiness of character. It is by honoring God and obeying His commands that a man is made truly great. The God whom we serve is no respecter of persons. He who gave to Solomon the spirit of wise discernment is willing to impart the same blessing to His children today. "If any of you lack wisdom," His word declares, "let him ask of God, the giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him." James 1:5. When a burden bearer desires wisdom more than he desires wealth, power, or fame, he will not be disappointed. Such a one will learn from the Great Teacher not only what to do, but how to do it in a way that will meet with the divine approval. So long as he remains consecrated, the man whom God has endowed with discernment and ability will not manifest an eagerness for high position, neither will he seek to rule or control. Of necessity men must bear responsibilities; but instead of striving for the supremacy, he who is a true leader will pray for an understanding heart, to discern between good and evil. The path of men who are placed as leaders is not an easy one. But they are to see in every difficulty a call to prayer. Never are they to fail of consulting the great Source of all wisdom. Strengthened and enlightened by the Master Worker, they will be enabled to stand firm against unholy influences and to discern right from wrong, good from evil. They will approve that which God approves, and will strive earnestly against the introduction of wrong principles into His cause. [PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]              ___ Kindly Watch & Share https://youtu.be/Y533vzOQEZA For Daily Christian Posts : Join Telegram Channel https://t.me/FatherOfLights       

🙏 தியான நேரம் : 18-ஜூலை-2024          🛐Father of Lights💫 1 - சாலொமோன் (பகுதி-4) உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5 பதவி எவ்வளவுக்கு உயருகிறதோ, அவ்வளவுக்குப் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன; அதன்பின் அவரால் சமுதாயத்தில் ஏற்படுகிற தாக்கமும் பெரியதாய் இருக் கும். எனவே, அவர் தேவனைச் சார்ந்திருக்கவேண்டியது அதிக அவசியம். சக மனிதர் முன் விழிப்போடு நடந்து கொள்ளும் படி தேவன் தன்னை அழைக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. கற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடு அவன் தன் தேவனுக்கு முன் நிற்கவேண்டும். பதவியால் ஒருவர் குணம் பரிசுத்தமடைந்து விடாது. தேவனைக் கனப்படுத்தி, தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக நாம் மேன்மை அடையலாம். நாம் சேவிக்கும் தேவனிடம் பட்சபாதம் இல்லை. ஞானத் தோடு பகுத்தறியும் ஆவியை சாலொமோனுக்கு அருளிய தேவன் அதே ஆசீர்வாதத்தை இன்றும் தம் பிள்ளைகளுக்கு அருள் ஆயத் தமாக இருக்கிறார். ‘உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ள வனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்’ என்று அவர் வார்த்தை சொல்கிறது. யாக்கோபு 1:5 . ஒரு தலைவன் தனக்குச் செல்வமும் அதிகாரமும் புகழும் வேண்டுமென்று விரும் புவதைக் காட்டிலும், ஞானம் வேண்டுமென்று விரும்பினால், அதை அவன் நிச்சயம் பெற்றுக்கொள்வான். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமல்ல, தேவ அங்கீகாரத்தோடு அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் போதகராம் இயேசுவிடம் கற்றுக்கொள்ளமுடியும். தேவனிடமிருந்து பகுத்தறிவையும் திறமையையும் ஈவாகப் பெற்ற ஒருவன் தன்னை தேவனுக்குத்தத்தம் செய்த நிலையிலேயே இருந்தால், உயர்பதவிதேடியோ ஆளுகையையும் அதிகாரத்தையும் நாடியோ ஓடமாட்டான். பொறுப்புகளை ஏற்று, நிறைவேற்றுகிற ஆட்கள் தேவை. உண்மைத் தலைவன் ஆதிக்கம் செலுத் தாமல், நன்மை - தீமை பகுத்தறியும் ஞான இருதயம் வேண்டி ஜெபிப்பான். தலைவர்களின் பாதை எளிதானது அல்ல. இக்கட்டான சூழ் நிலை ஒவ்வொன்றிலும், தேவன் தங்களை ஜெபிக்க அழைக்கிறா ரென்று உணரவேண்டும். ஞானத்திற்கு ஆதாரமானவரிடம் ஆலோசனை கேட்பதை விட்டுவிடக்கூடாது. பெரிய வேலைக் காரராகிய தேவனிடமிருந்து பெலமும் வழிநடத்தலும் பெற்றுக் கொண்டால், தீமைக்கும் நன்மைக்கும், தவற்றுக்கும் சரியான தற்குமுள்ள வித்தியாசத்தைப் பகுத்தறிய முடியும்; தவறான தூண் டல்களை எதிர்த்து, உறுதியுடன் நிற்கமுடியும்; தேவன் அங்கீகரிப் பதையே அவர்களும் அங்கீகரிப்பார்கள். [தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும்]

🙏Devotion Time : 17-July-2024       🛐Father of Lights 💫 Ch. 1 : Solomon (Part-3) KJV 1 Kings 3:10 And the speech pleased the Lord, that Solomon had asked this thing. "Because this was in thine heart," God said to Solomon, "and thou hast not asked riches, wealth, or honor, nor the life of thine enemies, neither yet hast asked long life; but hast asked wisdom and knowledge for thyself, that thou mayest judge My people," "behold, I have done according to thy words: lo, I have given thee a wise and an understanding heart; so that there was none like thee before thee, neither after thee shall any arise like unto thee. And I have also given thee that which thou hast not asked, both riches, and honor," "such as none of the kings have had that have been before thee, neither shall there any after thee have the like." "And if thou wilt walk in My ways, to keep My statutes and My commandments, as thy father David did walk, then I will lengthen thy days." 1 Kings 3:5-14; 2 Chronicles 1:7-12. God promised that as He had been with David, so He would be with Solomon. If the king would walk before the Lord in uprightness, if he would do what God had commanded him, his throne would be established and his reign would be the means of exalting Israel as "a wise and understanding people," the light of the surrounding nations. Deuteronomy 4:6. The language used by Solomon while praying to God before the ancient altar at Gibeon reveals his humility and his strong desire to honor God. He realized that without divine aid he was as helpless as a little child to fulfill the responsibilities resting on him. He knew that he lacked discernment, and it was a sense of his great need that led him to seek God for wisdom. In his heart there was no selfish aspirations for a knowledge that would exalt him above others. He desired to discharge faithfully the duties devolving upon him, and he chose the gift that would be the means of causing his reign to bring glory to God. Solomon was never so rich or so wise or so truly great as when he confessed, "I am but a little child: I know not how to go out or come in." [PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]              ___ Kindly Watch & Share https://youtu.be/mglmTl_Px2E?feature=shared For Daily Christian Posts : Join Telegram Channel https://t.me/FatherOfLights      

*🙏 தியான நேரம் : 17-ஜூலை-2024**          🛐Father of Lights💫 1 - சாலொமோன் (பகுதி-3) சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. 1 இராஜாக்கள் 3:10 அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி, 'இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத் தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனை யும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண் ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும், உன் வார்த்தையின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந் தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்தது மில்லை; உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக் குத் தந்தேன் ; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை . 'உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப் பண்ணுவேன்" என்றார். 1இராஜாக்கள்3:5-14; 2 நாளாகமம் 1:7-12. தாவீதோடு இருந்ததுபோல சாலொமோனோடும் இருக்கப் போவதாக தேவன் வாக்குப்பண்ணினார். தேவனுக்கு முன் அவன் செம்மையாக நடந்து, தேவன் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்தால், அவன் சிங்காசனம் என்றும் நிலைத்திருக்கும்; 'இஸ்ர வேலர் ஞானமும் விவேகமும் உள்ள ஜனங்கள்' என்று போற்றப் படவும், பிற தேசங்களுக்கு அவர்கள் வழிகாட்டவும் ஏதுவானதாக அவன் ஆட்சி அமைந்திருக்கும். கிபியோனில் இருந்த அந்தப் பழமையான பலிபீடத்தின் முன் பாக நின்று, சாலொமோன் ஜெபித்த வார்த்தைகளில் அவனுடைய தாழ்மை வெளிப்படுகிறது; தேவனைக் கனப்படுத்த அவனுக்கி ருந்த தீராத வாஞ்சையும் வெளிப்படுகிறது. தேவ உதவி இல்லா விட்டால், தன் பொறுப்புகளை நிறைவேற்ற தன்னால் முடியாது என்பதையும், உதவியற்ற சிறுபிள்ளைபோல் தான் இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான். பகுத்தறியும் தன்மை தனக்கு இல்லா ததையும் அவன் உணர்ந்திருந்தான். அதனால், தேவ ஞானத்தை நாடவேண்டியது மாபெரும் அவசியம் என்பதை உணரமுடிந்தது. 'பிறரைவிட மேன்மை அடைய வேண்டும்' என்கிற சுயநல ஆசைக் காக, தனக்கு ஞானம் வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை. தன் கடமைகளை நன்முறையில் நிறைவேற்ற ஆசைப்பட்டான். தன் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதாக தன் ஆட்சி அமைய, தனக்கு எந்த வரம் தேவையென்று அவன் நினைத் தானோ, அந்த வரத்தைத் தருமாறு தேவனிடம் கேட்டான். ''நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறு பிள்ளையா யிருக்கிறேன்'' என்று சாலொமோன் சொன்னதில் தான், அவ னுடைய ஐசுவரியமும் ஞானமும் மேன்மையும் இருந்தது; இந்த நல்ல நிலை வேறு எப்போதும் அவனுக்கு இருந்ததில்லை. [தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும்]

🙏Devotion Time : 16-July-2024       🛐Father of Lights 💫 Ch. 1 : Solomon (Part-2) KJV 1 Kings 3:9 Give therefore thy servant an understanding heart to judge thy people, that I may discern between good and bad: for who is able to judge this thy so great a people? In his youth Solomon made David's choice his own, and for many years he walked uprightly, his life marked with strict obedience to God's commands. Early in his reign he went with his counselors of state to Gibeon, where the tabernacle that had been built in the wilderness still was, and there he united with his chosen advisers, "the captains of thousands and of hundreds," "the judges," and "every governor in all Israel, the chief of the fathers," in offering sacrifices to God and in consecrating themselves fully to the Lord's service. 2 Chronicles 1:2. Comprehending something of the magnitude of the duties connected with the kingly office, Solomon knew that those bearing heavy burdens must seek the Source of Wisdom for guidance, if they would fulfill their responsibilities acceptably. This led him to encourage his counselors to unite with him heartily in making sure of their acceptance with God. Above every earthly good, the king desired wisdom and understanding for the accomplishment of the work God had given him to do. He longed for quickness of mind, for largeness of heart, for tenderness of spirit. That night the Lord appeared to Solomon in a dream and said, "Ask what I shall give thee." In his answer the young and inexperienced ruler gave utterance to his feeling of helplessness and his desire for aid. "Thou hast showed unto Thy servant David my father great mercy," he said, "according as he walked before Thee in truth, and in righteousness, and in uprightness of heart with Thee; and Thou hast kept for him this great kindness, that Thou hast given him a son to sit on his throne, as it is this day. "And now, O Lord my God, Thou hast made Thy servant king instead of David my father: and I am but a little child: I know not how to go out or come in. And Thy servant is in the midst of Thy people which Thou hast chosen, a great people, that cannot be numbered nor counted for multitude. Give therefore Thy servant an understanding heart to judge Thy people, that I may discern between good and bad: for who is able to judge this Thy so great a people? "And the speech pleased the Lord, that Solomon had asked this thing." [PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]              ___ Kindly Watch & Share https://youtu.be/9RhdMpHjQ-Q?feature=shared For Daily Christian Posts : Join Telegram Channel https://t.me/FatherOfLights       

🙏 தியான நேரம் : 16-ஜூலை-2024          🛐Father of Lights💫 1 - சாலொமோன் (பகுதி-2) ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 1 இராஜாக்கள் 3:9 சாலொமோன் தன் வாலிபத்தில் தாவீதின் விருப்பப்படி, பல வருடங்கள் செம்மையான வழியில் நடந்தான்; தேவகட்டளை களுக்கு முற்றிலும் கீழ்ப்படிகிறவனாக வாழ்ந்தான். தன் ஆளுகை யின் ஆரம்பத்தில் ஒரு நாள் அவன் கிபியோனுக்குச் சென்றான். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்தபோது, மோசே எழுப்பின ஆசரிப்புக் கூடாரம் அங்கு இருந்தது. தான் தேர்ந்தெடுத்த ஆலோ சகர்களையும் ஆயிரம் பேருக்கு அதிபதிகளையும் நூறு பேருக்கு அதிபதிகளையும் நியாயாதிபதிகளையும் இஸ்ரவேல் எங்குமி ருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களையும் அழைத்துச் சென்று, தன் தேவனுக்குப் பலிகளைச் செலுத்தி, தேவ சேவைக்குத் தன்னை முற்றிலும் ஒப்படைத்தார். 2நாளா 1:2. ராஜாங்கப் பொறுப்புகளின் பாரம் எத்தகையது என்பது சாலொ மோனுக்கு ஓரளவு தெரிந்திருந்தது. பாரமான சுமைகளைச் சுமப் பவர்கள், தங்கள் பொறுப்புகளை ஏற்றவகையில் நிறைவேற்ற வேண்டுமானால், ஞானத்தின் ஊற்றாகிய தேவனுடைய வழிநடத் தலை நாடவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதனால், தேவன் தங்களை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நிச்சயித்துக்கொள்ள, தன்னுடன் சேர்ந்து விருப்பத்தோடு வருமாறு தன்னுடைய ஆலோசகர்களையும் அவன் ஊக்குவித்தான். ஜெபத்தில் அவன் உலக சம்பத்தைக் கேட்கவில்லை; தேவன் தந்துள்ள பணியை நிறைவேற்றத் தேவையானஞானம் கேட்டான்; புத்தி கேட்டான். எளிதில் புரிந்துகொள்ளும் தன்மையும், பரந்த மனதும், பரிவுமிக்க ஆவியும் வேண்டுமென்று ஏங்கினான். அன்று ராத்திரியில் கர்த்தர் சாலொமோனுக்கு ஒரு சொப்பனத்தில் தரிசன மாகி, ''உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!'' என்றார். அந்த வாலிப அரசர் உடனே தேவனிடம் தனக்கு உதவி தேவைப் படுவதையும், அதைப் பெற தான் ஆசையாயிருப்பதையும் தெரி வித்தான். அவன் கேட்டதை இப்போது நாம் பார்ப்போம். "என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்த படியே, தேவரீர் அவருக்குப் பெரிய கிருபை செய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர். ''இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜா வாக்கினீரே, நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறு பிள் ளையாய் இருக்கிறேன். நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக் கிறேன். ஆகையால், உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும்?'' என் றான். சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. [தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும்]

🙏Devotion Time : 15-July-2024       🛐Father of Lights 💫 Ch. 1 : Solomon (part1) [New series] KJV 2 Samuel 23:3 The God of Israel said, the Rock of Israel spake to me, He that ruleth over men must be just, ruling in the fear of God. In the reign of David and Solomon, Israel became strong among the nations and had many opportunities to wield a mighty influence in behalf of truth and the right. The name of Jehovah was exalted and held in honor, and the purpose for which the Israelites had been established in the Land of Promise bade fair of meeting with fulfillment. Barriers were broken down, and seekers after truth from the lands of the heathen were not turned away unsatisfied. Conversions took place, and the church of God on earth was enlarged and prospered. Solomon was anointed and proclaimed king in the closing years of his father David, who abdicated in his favor. His early life was bright with promise, and it was God’s purpose that he should go on from strength to strength, from glory to glory, ever approaching nearer the similitude of the character of God, and thus inspiring His people to fulfill their sacred trust as the depositaries of divine truth. David knew that God’s high purpose for Israel could be met only as rulers and people should seek with unceasing vigilance to attain to the standard placed before them. He knew that in order for his son Solomon to fulfill the trust with which God was pleased to honor him, the youthful ruler must be not merely a warrior, a statesman, and a sovereign, but a strong, good man, a teacher of righteousness, an example of fidelity. With tender earnestness David entreated Solomon to be manly and noble, to show mercy and loving-kindness to his subjects, and in all his dealings with the nations of earth to honor and glorify the name of God and to make manifest the beauty of holiness. The many trying and remarkable experiences through which David had passed during his lifetime had taught him the value of the nobler virtues and led him to declare in his dying charge to Solomon: “He that ruleth over men must be just, ruling in the fear of God. And he shall be as the light of the morning, when the sun riseth, even a morning without clouds; as the tender grass springing out of the earth by clear shining after rain.” 2 Samuel 23:3, 4. Oh, what an opportunity was Solomon’s! Should he follow the divinely inspired instruction of his father, his reign would be a reign of righteousness, like that described in the seventy-second psalm: “Give the king Thy judgments, O God, And Thy righteousness unto the king’s son. He shall judge Thy people with righteousness, And Thy poor with judgment.... He shall come down like rain upon the mown grass: As showers that water the earth. In his days shall the righteous flourish; And abundance of peace so long as the moon endureth. He shall have dominion also from sea to sea, And from the river unto the ends of the earth.... The kings of Tarshish and of the isles shall bring presents: The kings of Sheba and Seba shall offer gifts. Yea, all kings shall fall down before him: All nations shall serve him. For he shall deliver the needy when he crieth; The poor also, and him that hath no helper.... Prayer also shall be made for him continually; And daily shall he be praised.... His name shall endure forever: His name shall be continued as long as the sun: And men shall be blessed in him: All nations shall call him blessed. “Blessed be the Lord God, the God of Israel, Who only doeth wondrous things. And blessed be His glorious name forever: And let the whole earth be filled with His glory; Amen, and Amen.” PK 27.2 [PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]              ___ Kindly Watch & Share https://youtu.be/aDuesXuIYq4?feature=shared For Daily Christian Posts : Join Telegram Channel https://t.me/FatherOfLights       

🙏 தியான நேரம் : 15-ஜூலை-2024          🛐Father of Lights💫 1 - சாலொமோன் (பகுதி-1) இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார். 2 சாமுவேல் 23:3 தாவீது - சாலொமோன் ஆட்சியில் இஸ்ரவேல் தேசம் ஒருவல் லரசாயிற்று. சத்தியத்திற்கும் நீதிக்கும் சாதகமாகப் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இஸ்ரவேலில் இருந்தன. யேகோவாவின் நாமம் உயர்த்தப்பட்டது; அதற்கு மதிப்பும் உண்டாயிற்று. வாக்குத் தத்த தேசத்தில் இஸ்ரவேலர் நாட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேற இருந்தன; தடைகள் தகர்ந்தன. சத்தியத்தை நாடிவந்த அஞ்ஞான மார்க்கத்தார் மனநிறைவோடு திரும்பிச்சென்றனர்; மனமாற்றங்கள் ஏற்பட்டன. பூமியில் தேவசபை வளர்ந்து, பலத்தது. தாவீது தனது இறுதி நாட்களில், தன் ஆட்சியைத் துறந்து, தன் மகன் சாலொமோனை அபிஷேகம் பண்ணி, அவனை ராஜாவாக அறிவித்தான். சாலொமோனின் ஆரம்பக்காலம் நம்பிக்கை தருவ தாய் இருந்தது. சத்தியத்திற்குப் பாதுகாவலர்களாக இஸ்ரவேலை தேவன் நியமித்திருந்தார். அது நிறைவேற், சாலொமோன் பெலத் தின்மேல் பெலமடைய வேண்டும்; மகிமையின் மேல் மகிமை யடைய வேண்டும்; தேவகுணத்திற்கு ஒத்த குணத்தை அவன் பெற வேண்டும். குடிமக்கள் இதைப் பார்த்து, தங்கள் பரிசுத்தக் கடமை களை நிறைவேற்ற, ஊக்கம் பெறவேண்டும். இதுவே தேவனுடைய திட்டமாய் இருந்தது. இஸ்ரவேலுக்காக தேவன் வைத்திருந்த திட்டம் பெரியது. இஸ்ரவேலை ஆள்பவர்களும் அதன் குடிமக்களும் தங்கள் முன் தேவன்வைத்துள்ள உன்னத தரத்தை அடைய இடைவிடாத விழிப் போடு முயன்றால்தான், தேவனுடைய நோக்கம் நிறைவேறும். இது தாவீதுக்குத் தெரியும். மேலும், அவனுடைய மகன் சாலொ மோனுக்கு தேவன் தந்த பொறுப்பின் மூலம் சாலொமோனை தேவன் கனப்படுத்தியிருந்தார். தேவன் தந்த அந்தப் பொறுப்பை சாலொமோன் நிறைவேற்ற வேண்டுமானால், அவன் சிறந்த வீர னாகவும், ராஜதந்திரியாகவும், அரசனாகவும் இருந்தால் மட்டும் போதாது; மனோபலம் மிக்கவனாகவும், சிறந்த மனிதனாகவும், நீதியைப் போதிக்கிற போதகனாகவும், மெய்ப்பற்றுக்கு இலக்க ணமாகவும் இருக்கவேண்டும். தாவீது அன்போடு தன் மகனிடம், ''நற்பண்புகளும் பெருந் தன்மையும் உள்ள மனிதனாக நீ திகழ வேண்டும். உன் குடிமக்கள் மேல் நீ அன்பும் இரக்கமும் காட்ட வேண்டும். உலக நாடுகளோடு நீ நடந்துகொள்ளும் முறைமையில் தேவனுடைய நாமத்தைக் கனப்படுத்தி, மகிமைப்படுத்தி, பரிசுத்த அலங்காரத்தை வெளிப் படுத்த வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான். தாவீது பெற்ற சோதனைகளும் அதிசயங்களும் நற்குணங்களின் மேன்மையை அவனுக்குப் போதித்திருந்தன. அதனால்தான், ''நீதி பரராய் மனு ஷரை ஆண்டு, தெய்வ பயமாய்த்துரைத்தனம் பண்ணுகிறவர் இருப் பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப் பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்" என்று தன் இறுதி நாட்களில் சாலொமோனிடம் தாவீது சொன்னான். 2 சாமு 23:3,4. எவ்வளவு மேன்மையான வாய்ப்பு! தாவீது தன் தேவனால் தூண்டப்பட்டு, கொடுத்த அறிவுரைகளுக்கு சாலொமோன் செவி கொடுத்திருப்பானானால், 72 ஆம் சங்கீதம் சொன்னதுபோல, அவன் ஆட்சி ஒரு நீதியின் ஆட்சியாக இருந்திருக்கும். "தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும்,ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும்,உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்...புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும்,பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்;சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.ஒரு சமுத்திரத்தொடங்கி மறுசமுத்திரம் வரைக்கும்,நதி தொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார்....தர்சின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும்காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்;ஷேபாவிலும் சோபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.கூப்பிடுகிற எளியவனையும்,உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்...அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும்,எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்;சூரியனுள்ள மட்டும் அவருடைய நாமம்சந்தான பரம்பரையாய் நிலைக்கும்;மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும்அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். "இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். அவருடைய மகிமை பொருந்தியநாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்." [தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும்]

Let Israel hope in God. The Master of the vineyard is even now gathering from among men of all nations and peoples the precious fruits for which He has long been waiting. Soon He will come unto His own; and in that glad day His eternal purpose for the house of Israel will finally be fulfilled. “He shall cause them that come of Jacob to take root: Israel shall blossom and bud, and fill the face of the world with fruit.” Verse 6. “Thus saith the Lord, Let not the wise man glory in his wisdom, neither let the mighty man glory in his might, let not the rich man glory in his riches: but let him that glorieth glory in this, that he understandeth and knoweth Me, that I am the Lord which exercise loving-kindness, judgment, and righteousness, in the earth: for in these things I delight, saith the Lord.” Jeremiah 9:23, 24. [PP - Patriarchs and Kings (1917); Publisher: Review and Herald Publishing Association, Washington, D.C.]              ___ Kindly Watch & Share https://youtu.be/DcSOIoFJTW0?feature=shared For Daily Christian Posts : Join Telegram Channel https://t.me/FatherOfLights       

🙏Devotion Time : 14-July-2024       🛐Father of Lights 💫 The Vineyard of the Lord-3 (3) KJV Jeremiah 9:23 Thus saith the LORD, Let not the wise man glory in his wisdom, neither let the mighty man glory in his might, let not the rich man glory in his riches: The Lord had through Moses set before His people the result of unfaithfulness. By refusing to keep His covenant, they would cut themselves off from the life of God, and His blessing could not come upon them. At times these warnings were heeded, and rich blessings were bestowed upon the Jewish nation and through them upon surrounding peoples. But more often in their history they forgot God and lost sight of their high privilege as His representatives. They robbed Him of the service He required of them, and they robbed their fellow men of religious guidance and a holy example. They desired to appropriate to themselves the fruits of the vineyard over which they had been made stewards. Their covetousness and greed caused them to be despised even by the heathen. Thus the Gentile world was given occasion to misinterpret the character of God and the laws of His kingdom. With a father’s heart, God bore with His people. He pleaded with them by mercies given and mercies withdrawn. Patiently He set their sins before them and in forbearance waited for their acknowledgment. Prophets and messengers were sent to urge His claim upon the husbandmen; but, instead of being welcomed, these men of discernment and spiritual power were treated as enemies. The husbandmen persecuted and killed them. God sent still other messengers, but they received the same treatment as the first, only that the husbandmen showed still more determined hatred. The withdrawal of divine favor during the period of the Exile led many to repentance, yet after their return to the Land of Promise the Jewish people repeated the mistakes of former generations and brought themselves into political conflict with surrounding nations. The prophets whom God sent to correct the prevailing evils were received with the same suspicion and scorn that had been accorded the messengers of earlier times; and thus, from century to century, the keepers of the vineyard added to their guilt. The goodly vine planted by the divine Husbandman upon the hills of Palestine was despised by the men of Israel and was finally cast over the vineyard wall; they bruised it and trampled it under their feet and hoped that they had destroyed it forever. The Husbandman removed the vine and concealed it from their sight. Again He planted it, but on the other side of the wall and in such a manner that the stock was no longer visible. The branches hung over the wall, and grafts might be joined to it; but the stem itself was placed beyond the power of men to reach or harm. Of special value to God’s church on earth today—the keepers of His vineyard—are the messages of counsel and admonition given through the prophets who have made plain His eternal purpose in behalf of mankind. In the teachings of the prophets, His love for the lost race and His plan for their salvation are clearly revealed. The story of Israel’s call, of their successes and failures, of their restoration to divine favor, of their rejection of the Master of the vineyard, and of the carrying out of the plan of the ages by a goodly remnant to whom are to be fulfilled all the covenant promises—this has been the theme of God’s messengers to His church throughout the centuries that have passed. And today God’s message to His church—to those who are occupying His vineyard as faithful husbandmen—is none other than that spoken through the prophet of old: “Sing ye unto her, A vineyard of red wine. I the Lord do keep it; I will water it every moment: lest any hurt it, I will keep it night and day.” Isaiah 27:2, 3.

முற்காலத் தீர்க்கதரிசி ஒருவர் சொல்லியிருக்கிற செய்திதான் இப் போது தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் உண்மையுள்ள ஊழியக்காரர் களாகப் பணிபுரிகிற அவருடைய சபைக்கு தேவன் தருகிற செய்தியாக இருக்கிறது. அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப் படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும் காத்துக்கொள்வேன். ஏசாயா 27:2,3. இஸ்ரவேல் தன் தேவனை நம்பட்டும். திராட்சத்தோட்டத்தின் சொந் தக்காரர் அருமையான கனிகளுக்காக வெகுகாலம் காத்திருக்கிறார். எல் லாத் தேசங்களிலும் உள்ள மக்கள் மத்தியிலிருந்து அந்தக் கனிகளைச் சேக ரித்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் அவர்தமக்குச் சொந்தமானவர்களிடம் வருவார்; இஸ்ரவேல் வீட்டாருக்காக தேவன் வைத்திருக்கிற நித்திய திட் டங்கள் அந்த மகிழ்ச்சியான நாளில் நிறைவேறும். "கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமான வைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியும் மானவைகள்." வசனம் 6. [தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும்]

🙏 தியான நேரம் : 14-ஜூலை-2024          🛐Father of Lights💫 கர்த்தருடைய திராட்சத்தோட்டம்-3 (3) ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம். எரேமியா 9:23 தேவனுக்கு உண்மையாக நடக்காவிட்டால், மனிதருக்கு ஏற்படக் கூடிய விளைவுகளை மோசே மூலம் தேவன் தம்முடைய மக்களுக்குத் தெரிவித்திருந்தார். தேவனோடு செய்துள்ள உடன்படிக்கையை மீறி நடந் தால், தேவனிடமிருந்து நாம் நம்மைப் பிரித்துக்கொள்கிறோம். அப்போது அவருடைய ஆசீர்வாதம் நம்மிடம் வரமுடியாது. இந்த எச்சரிப்புகளுக்கு யூத தேசம் செவிகொடுத்த போதெல்லாம், நிறைவான ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றார்கள்; அதனால், சுற்றியிருந்த மக்களுக்கும் அவர்கள் மூலம் ஆசீர்வாதம் கிடைத்தது. ஆனால், தாங்கள் தேவனுடைய பிரதிநிதிகளாக வாழ்வதின் பாக்கியங்களைப் பலசமயங்களில் அவர்கள் மறந்துபோனார் கள்; அத்தோடு தேவனையும் இஸ்ரவேலர் மறந்துபோனார்கள். தேவனுக் குச் செய்யவேண்டிய சேவையை அவர்கள் செய்யவில்லை; உடன்மனி தருக்கு அவர்கள் தந்திருக்கவேண்டிய வழிகாட்டலையும் அவர்கள் தர வில்லை. நிர்வகிப்பதற்காகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திராட்சத் தோட் டத்தைத் தங்களுக்கே உடமையாக்கிக் கொள்ளப்பார்த்தார்கள். அவர்களு டைய பேராசையைப் பார்த்த அஞ்ஞானிகளும் அவர்களை இழிவாய்ப் பார்த்தார்கள். இவ்வாறு, தேவனுடைய நல்ல குணத்தையும் அவருடைய ராஜ்யத்தின் நல்ல சட்டதிட்டங்களையும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு தகப்பனைப்போல், அவர்கள் தவறுகளை தேவன் பொறுத்துக் கொண்டார். திருந்துமாறு அவர்களிடம் தேவன் கெஞ்சினார்; இரக்கத்தைக் கொடுத்துக் கெஞ்சினார்; இரக்கத்தை எடுத்துக் கெஞ்சினார். பொறுமையாய் அவர்கள் பாவங்களை அவர்கள் கண்முன் நிறுத்தி, அவற்றை அவர்கள் ஒத்துக்கொள்வதற்காக அவர் பொறுத்திருந்தார். தீர்க்கதரிசிகளையும் தூது வர்களையும் தோட்டக்காரரிடம் அனுப்பினார். ஆன்மிகப் பகுத்தறிவுடைய இவர்களைத் தோட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளாமல், எதிரிகளைப்போல நடத்தினார்கள்; அவர்களை உபத்திரவப்படுத்தி, கொலை செய்தார்கள். மீண் டும் தேவன் தமது தூதுவர்களை அனுப்பினார். தோட்டக்காரர்கள் அவர்க ளையும் அவ்வாறே நடத்தி, இன்னமும் அதிகமான வெறுப்பை அவர்கள் மேலும் உமிழ்ந்தார்கள். சிறையிருப்பின்போது, தேவதயவு எடுத்துக்கொள்ளப்பட்டதால் பலர் மனந்திரும்பினார்கள். ஆனாலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு இவர்கள் திரும்பி வந்தபோது, முந்தைய தலைமுறை செய்த அதே தவறு களை இவர்களும் செய்தார்கள்; சுற்றியிருந்த தேசங்களோடு சச்சரவுகளைத் தேடிக்கொண்டார்கள். மக்களில் நிலவிய தீமைகளைச் சுட்டிக்காட்ட அவர் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பின்போது, முன்பு முற்பிதாக்கள் செய்தபடியே இவர்களும் செய்தார்கள்; சந்தேகத்தோடு பார்த்து, தீர்க்கதரிசிகளை அவ மதித்தார்கள். இவ்வாறு, தோட்டக்காரர் தங்கள்மேல் குற்றங்களை அதிகரித் துக்கொண்டார்கள். பலஸ்தீனாவின் மலைகள்மீது தெய்வீக தோட்டக்காரர் நாட்டிய நற் குலத் திராட்சச்செடியை இஸ்ரவேலர் இழிவாய் நினைத்தார்கள்; வேலிக்கு வெளியே எறிந்தார்கள்; கசக்கி, தங்கள் கால்களின் கீழே போட்டு மிதித் தார்கள். அது இனி ஒருபோதும் இராதபடி அழித்துவிட்டதாக நினைத்தார் கள். தெய்வீக தோட்டக்காரரோ அந்தச் செடியை எடுத்து, ஒளித்துவைத்தார். சுவருக்கு அடுத்த பக்கம் அதை நாட்டினார். அதன் அடித்தண்டு வெளியே தெரியாதபடி பார்த்துக்கொண்டார். மதிலைத் தாண்டி கிளைகள் வந்தன; அதனோடு வேறே கிளைகளை ஒட்டவைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், மனிதர் எவரும் அதன் அடித்தண்டைத் தொடமுடியாது; அழிக்கமுடியாது. திராட்சத்தோட்டத்தைப் பராமரிக்கிற வேலையை இன்று தேவசபையே செய்துவருகிறது. தீர்க்கதரிசிகள் மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளும் கடிந்துரைகளும் தேவசபைக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில், மனித இனத்திற்கான தேவதிட்டத்தை தீர்க்கதரிசிகள் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். பாவ மனிதர்மேல் தேவனுக்குள்ள அன்பையும், அவர்களுக்கான இரட்சிப்பின் திட்டத்தையும் தீர்க்கதரிசிகளின் போதனைகள் வெளிப்படுத்துகின்றன. இஸ்ரவேலுக்குத் தேவ அழைப்பு, அவர்களுடைய வெற்றி தோல்விகள், தேவதயவை அவர்கள் திரும்பப்பெறுதல், திராட்சத் தோட்டத்தின் சொந்தக்காரரை அவர்கள் புறக்கணித்தல், ஆதியில் போடப் பட்ட திட்டத்தை மீதமான ஒரு கூட்டம் நிறைவேற்றிவைத்தல், உடன்படிக் கையின் வாக்குத்தத்தங்கள் அந்த மீதமானவர்களுக்கு நிறைவேறுதல் ஆகிய வையே தீர்க்கதரிசிகளின் செய்தியாக இருந்தது; கடந்த காலம் முழுவதும் இவற்றைத்தாம் அறிவித்துவந்தார்கள்.

🙏Devotion Time : 13-July-2024       🛐Father of Lights 💫 The Vineyard of the Lord-2(3) KJV Deuteronomy 7:6 For thou art an holy people unto the LORD thy God: the LORD thy God hath chosen thee to be a special people unto himself, above all people that are upon the face of the earth. Through the chosen nation, God had purposed to bring blessing to all mankind. “The vineyard of the Lord of hosts,” the prophet declared, “is the house of Israel, and the men of Judah His pleasant plant.” Isaiah 5:7. To this people were committed the oracles of God. They were hedged about by the precepts of His law, the everlasting principles of truth, justice, and purity. Obedience to these principles was to be their protection, for it would save them from destroying themselves by sinful practices. And as the tower in the vineyard, God placed in the midst of the land His holy temple. Christ was their instructor. As He had been with them in the wilderness, so He was still to be their teacher and guide. In the tabernacle and the temple His glory dwelt in the holy Shekinah above the mercy seat. In their behalf He constantly manifested the riches of His love and patience. Through Moses the purpose of God was set before them and the terms of their prosperity made plain. “Thou art an holy people unto the Lord thy God,” he said; “the Lord thy God hath chosen thee to be a special people unto Himself, above all people that are upon the face of the earth.” “Thou hast avouched the Lord this day to be thy God, and to walk in His ways, and to keep His statutes, and His commandments, and His judgments, and to hearken unto His voice: and the Lord hath avouched thee this day to be His peculiar people, as He hath promised thee, and that thou shouldest keep all His commandments; and to make thee high above all nations which He hath made, in praise, and in name, and in honor; and that thou mayest be an holy people unto the Lord thy God, as He hath spoken.” Deuteronomy 7:6; 26:17-19. The children of Israel were to occupy all the territory which God appointed them. Those nations that rejected the worship and service of the true God were to be dispossessed. But it was God’s purpose that by the revelation of His character through Israel men should be drawn unto Him. To all the world the gospel invitation was to be given. Through the teaching of the sacrificial service, Christ was to be uplifted before the nations, and all who would look unto Him should live. All who, like Rahab the Canaanite and Ruth the Moabitess, turned from idolatry to the worship of the true God were to unite themselves with His chosen people. As the numbers of Israel increased, they were to enlarge their borders until their kingdom should embrace the world. But ancient Israel did not fulfill God’s purpose. The Lord declared, “I had planted thee a noble vine, wholly a right seed: how then art thou turned into the degenerate plant of a strange vine unto Me?” “Israel is an empty vine, he bringeth forth fruit unto himself.” “And now, O inhabitants of Jerusalem, and men of Judah, judge, I pray you, betwixt Me and My vineyard. What could have been done more to My vineyard, that I have not done in it? Wherefore, when I looked that it should bring forth grapes, brought it forth wild grapes? And now go to; I will tell you what I will do to My vineyard: I will take away the hedge thereof, and it shall be eaten up; and break down the wall thereof, and it shall be trodden down: and I will lay it waste: it shall not be pruned, nor digged; but there shall come up briers and thorns: I will also command the clouds that they rain no rain upon it. For ... He looked for judgment, but behold oppression; for righteousness, but behold a cry.” Jeremiah 2:21; Hosea 10:1; Isaiah 5:3-7. PK 19.2 [PP - Patriarchs and Kings (1917); Publisher: Review and Herald Publishing Association, Washington, D.C.]                ___ Kindly Watch & Share  https://youtu.be/-hhoJfaWkbM?feature=shared For Daily Christian Posts : Join Telegram Channel https://t.me/FatherOfLights       

🙏 தியான நேரம் : 13-ஜூலை-2024          🛐Father of Lights💫 கர்த்தருடைய திராட்சத்தோட்டம்-2(3) நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 7:6 தாம் தெரிந்து கொண்ட இந்தத் தேசத்தின்மூலம் மனித இனம் முழு வதற்கும் ஆசீர்வாதம்தரத் தீர்மானித்திருந்தார் தேவன். சேனைகளின் கர்த் தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மன மகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந் தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு என்று அறிவிக்கிறார் தீர்க்கதரிசி. ஏசாயா 5:7. வேத வாக்கியங்கள் இந்த மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தமது நியாயப்பிரமாணத்தின் கற்பனைகளால் அவர்களைச் சுற்றி வேலி அமைத் தார். சத்தியம், நியாயம், தூய்மை பற்றிய நித்திய நியதிகள் அவை. தாங்கள் பத்திரமாக இருப்பதற்காகவே அவர்கள் இந்த நியமங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஏனெனில், பாவச்செயல்களால் அவர்கள் தங்களை அழித்துக்கொள்ளாதபடி அவை அவர்களைப் பாதுகாக்கின்றன. அவர்கள் மத்தியில் அவர் தமது பரிசுத்த ஆலயத்தை வைத்தார்; அது அந்தத் திராட்சத் தோட்டத்தில் கோபுரமாக இருந்தது. கிறிஸ்துவே அவர்களுடைய பயிற்சியாளர். வனாந்தரத்தில் அவர் களோடு அவர் இருந்ததுபோல, பின்னரும் அவரே அவர்களுடைய போத கராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவந்தார். கிருபாசனத்திற்கு மேலே ஷெக்கைனாவில் தேவனுடைய மகிமை தங்கியிருந்தது. அவர்கள்மேல் தேவன் தமது அன்பையும் பொறுமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். தேவன் தமது திட்டங்களை மோசே மூலமாக விளக்கினார். அவர்கள் வளமாக வாழ்வதற்கான நிபந்தனைகளையும் வெளிப்படுத்தினார். 'நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங் களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும் படி தெரிந்துகொண்டார்.' உபாகமம் 7:6. 'கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியா யங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக் கொடுத்தாய். கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி, நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த் தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்று அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்'. உபாகமம் 26:17-19. ஆனால், தேவனுடைய இந்த நோக்கத்தை ஆதி இஸ்ரவேலர் நிறை வேற்றவில்லை. நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட் சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச் செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?' 'இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது.' ''எருசலேமின் குடிகளே, யூதா வின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங் கள். நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்து போடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம். அதைப் பாழாக்கி விடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப் படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின் மேல் மழைபெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன்'' என் கிறார். சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.'' எரேமியா 2:21; ஓசியா 10:1; ஏசாயா 5:3-7. [தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும்]

'இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட் டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. 'ஏசாயா 5:1,2. [தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும்]

🙏 தியான நேரம் : 12-ஜூலை-2024          🛐Father of Lights💫 கர்த்தருடைய திராட்சத்தோட்டம்-1(3) நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2 பரலோகத்தின் சிறந்த ஈவுகளை மனிதர் அனைவருக்கும் கொடுக்க வேண்டுமென்பதே தேவனுடைய ஆசை. அதற்காகவே, சிலைவழி பாட்டு உறவினர்களோடு வாழ்ந்துவந்த ஆபிரகாமை, கானான் தேசத் திற்கு வரும்படி அழைத்தார் தேவன். நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர் வாதமாய் இருப்பாய் என்று ஆபிரகாமிடம் சொன்னார் தேவன். ஆதியா கமம் 12:2. உலகிற்கு தேவன் தந்துள்ள சத்தியத்தைப் பத்திரமாகப் பாது காக்கவேண்டியதும், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் வருகையால் சகல தேசங்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கவேண்டியதும் இஸ்ரவேலின் வேலையாக இருந்தது. ஆபிரகாம் அந்த இஸ்ரவேல் மக்களின் தேசப்பிதாவாக ஆனது தேவன் அவருக்குத் தந்த மதிப்பு ஆகும். மெய்த் தேவனைப் பற்றிய அறிவு மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. சிலைவழிபாட்டால் அவர்கள் மனது இருள் டைந்துவிட்டது. தேவனுடைய நியமங்கள் நியாயமாயும் பரிசுத்தமாயும் நன்மையாயும் இருந்தபடியால், மனிதர் தங்களுடைய கொடுமையான சுயநல நோக்கங்களுக்கு ஏற்ற சட்டங்களை உருவாக்க முயன்றனர். ஆனா லும், தேவன் இரக்கமுள்ளவராய் இருந்தபடியால், அவர்களை அழித்துப் போடவில்லை. தம்மை அவர்கள் அறிந்துகொள்வதற்காக, தம்முடைய சபையின்மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தீர்மானித்தார். தம் முடைய மக்கள் மூலம் தேவன் வெளிப்படுத்துகிற நியதிகளே, மனிதரில் தேவஒழுக்கத்தின் சாயலை உருவாக்குவதற்கான கருவியாக அமைய வேண்டுமென்று தேவன் திட்டமிட்டார். தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மேன்மைப்படுத்த வேண்டும்; அவருடைய அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும்; மதிப்பான இந்த உன் னத வேலையை இஸ்ரவேல் வீட்டாரிடம் கொடுத்தார் தேவன். அவர்களி டம் இந்தப் பரிசுத்தமான பொறுப்பைக் கொடுப்பதற்காக, அவர்களை உலகிலிருந்து பிரித்தெடுத்தார். தமது நியாயப்பிரமாணத்துக்கு அவர்களைக் காவலாக வைத்தார். தேவனை அறிகிற அறிவு இஸ்ரவேலர் மூலம் மனி தருக்குள் எப்போதும் இருக்கவேண்டுமென்பது தேவனுடைய திட்டம். இருள் சூழ்ந்திருந்த உலகில் இவ்வாறு பரலோக வெளிச்சம் பிரகாசிக்க வேண்டியிருந்தது. சிலைவழிபாட்டை விட்டுவிலகி, ஜீவனுள்ள தேவனைச் சேவிக்குமாறு மனிதரை அழைக்க ஒரு குரல் தேவையாக இருந்தது. தாம் தெரிந்து கொண்ட ஜனத்தை 'மகா பலத்தினாலும் வல்லமை யுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். யாத் திராகமம் 32:11. 'தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்து கொண்ட ஆரோனையும் அனுப்பினார். இவர்கள் அவர்களுக்குள் அவரு டைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய் தார்கள். ''அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறது போல அவர்களை ஆழங்களில் நடந்து போகப்பண்ணினார். ' சங்கீதம் 105:26, 27; 106:9. நல்லதொரு தேசத்திற்குக் கொண்டுவருவதற்காக, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுவித்தார். அவர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிவாழ்வதற்கான புகலிடமாக அத்தேசம் இருக்கவேண்டுமென்பதே தேவதிட்டம். தம்மிடம் அழைத்து, தமது நித்திய கரங்களால் அவர்களை அரவணைத்துக் கொள்ள அவர் ஆசைப்பட்டார். அவர் காட்டுகிற இரக்கத்திற்கும் செய்கிற நன் மைக்கும் பதிலாக, அவர்கள் அவர் நாமத்தை உயர்த்தி, உலகில் அதை மகிமைப்படுத்த வேண்டியிருந்தது. 'கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தர வீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத் தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைக ளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்த தில்லை . உபாகமம் 32:9-12. உன்னதமானவருடைய நிழலில் இஸ்ரவேலர் வாழ்வதற்காக, தேவன் அவர்களைத் தம்மிடம் அழைத்துவந்தார். வனாந் தர அலைச்சல்களின் ஆபத்துகளிலிருந்து அற்புதமாக அவர்களைப் பாது காத்தார். வாக்குத்தத்த நாட்டில் தேவ தயவுபெற்ற தேசமாக அவர்களை நிலைப்படுத்தினார். இஸ்ரவேலரின் அழைப்பையும், அவர்கள் யேகோவாவுக்குப் பிரதி நிதிகளாக இருந்து, நற்செயல் செய்வதற்குத் தேவன் அவர்களுக்குக் கொடுத்த பயிற்சியையும் மனதைத் தொடும் ஓர் உவமை மூலம் வெளிப்படுத்துகிறார் ஏசாயா.

🙏Devotion Time : 12-July-2024       🛐Father of Lights 💫 The Vineyard of the Lord-1(3) KJV Genesis 12:2 And I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing: It was for the purpose of bringing the best gifts of Heaven to all the peoples of earth that God called Abraham out from his idolatrous kindred and bade him dwell in the land of Canaan. “I will make of thee a great nation,” He said, “and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing.” Genesis 12:2. It was a high honor to which Abraham was called—that of being the father of the people who for centuries were to be the guardians and preservers of the truth of God to the world, the people through whom all the nations of the earth should be blessed in the advent of the promised Messiah. PK 15.1 Men had well-nigh lost the knowledge of the true God. Their minds were darkened by idolatry. For the divine statutes, which are “holy, and just, and good” (Romans 7:12), men were endeavoring to substitute laws in harmony with the purposes of their own cruel, selfish hearts. Yet God in His mercy did not blot them out of existence. He purposed to give them opportunity for becoming acquainted with Him through His church. He designed that the principles revealed through His people should be the means of restoring the moral image of God in man. PK 15.2 God’s law must be exalted, His authority maintained; and to the house of Israel was given this great and noble work. God separated them from the world, that He might commit to them a sacred trust. He made them the depositaries of His law, and He purposed through them to preserve among men the knowledge of Himself. Thus the light of heaven was to shine out to a world enshrouded in darkness, and a voice was to be heard appealing to all peoples to turn from idolatry to serve the living God. PK 16.1 “With great power, and with a mighty hand,” God brought His chosen people out of the land of Egypt. Exodus 32:11. “He sent Moses His servant; and Aaron whom He had chosen. They showed His signs among them, and wonders in the land of Ham.” “He rebuked the Red Sea also, and it was dried up: so He led them through the depths.” Psalm 105:26, 27; 106:9. He rescued them from their servile state, that He might bring them to a good land, a land which in His providence He had prepared for them as a refuge from their enemies. He would bring them to Himself and encircle them in His everlasting arms; and in return for His goodness and mercy they were to exalt His name and make it glorious in the earth. PK 16.2 “The Lord’s portion is His people; Jacob is the lot of His inheritance. He found him in a desert land, and in the waste howling wilderness; He led him about, He instructed him, He kept him as the apple of His eye. As an eagle stirreth up her nest, fluttereth over her young, spreadeth abroad her wings, taketh them, beareth them on her wings: so the Lord alone did lead him, and there was no strange god with him.” Deuteronomy 32:9-12. Thus He brought the Israelites unto Himself, that they might dwell as under the shadow of the Most High. Miraculously preserved from the perils of the wilderness wandering, they were finally established in the Land of Promise as a favored nation. PK 17.1 By means of a parable, Isaiah has told with touching pathos the story of Israel’s call and training to stand in the world as Jehovah’s representatives, fruitful in every good work: PK 17.2 “Now will I sing to my well-beloved a song of my beloved touching His vineyard. My well-beloved hath a vineyard in a very fruitful hill: and He fenced it, and gathered out the stones thereof, and planted it with the choicest vine, and built a tower in the midst of it, and also made a wine press therein: and He looked that it should bring forth grapes.” Isaiah 5:1, 2. PK 17.3 [PP - Patriarchs and Kings (1917); Publisher: Review and Herald Publishing Association, Washington, D.C.]              ___ Kindly Watch & Share https://youtu.be/fOINUmHowdw?feature=shared

🙏Devotion Time : 11-July-2024       🛐Father of Lights 💫 Ch. 73-The Last Years of David-10 (of 10) “Whatsoever God doeth, it shall be forever.” Ecclesiastes 3:14. Man “fleeth also as a shadow, and continueth not,” “but the word of our God shall stand forever.” “The mercy of Jehovah is from everlasting to everlasting upon them that fear Him, and His righteousness unto children's children; to such as keep His covenant, and to those that remember His commandments to do them.” Job 14:2; Isaiah 40:8; Psalm 103:17, 18. Glorious are the promises made to David and his house, promises that look forward to the eternal ages, and find their complete fulfillment in Christ. The Lord declared: “I have sworn unto David My servant ... with whom My hand shall be established: Mine arm also shall strengthen him.... My faithfulness and My mercy shall be with him: and in My name shall his horn be exalted. I will set his hand also in the sea, and his right hand in the rivers. He shall cry unto Me, Thou art my Father, my God, and the Rock of my salvation. Also I will make him My first-born, higher than the kings of the earth. My mercy will I keep for him forevermore, and My covenant shall stand fast with him.” Psalm 89:3-28. “His seed also will I make to endure forever, And his throne as the days of heaven.” Psalm 89:29. “He shall judge the poor of the people, He shall save the children of the needy, And shall break in pieces the oppressor. They shall fear thee while the sun endureth, And so long as the moon, throughout all generations.... In his days shall the righteous flourish; And abundance of peace, till the moon be no more. He shall have dominion also from sea to sea, And from the river unto the ends of the earth.” “His name shall endure forever: His name shall be continued as long as the sun: And men shall be blessed in him: All nations shall call him blessed.” Psalm 72:4-8, R.V., 17. “For unto us a Child is born, unto us a Son is given: and the government shall be upon His shoulder: and His name shall be called Wonderful, Counselor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.” “He shall be great, and shall be called the Son of the Highest; and the Lord God shall give unto Him the throne of His father David: and He shall reign over the house of Jacob forever; and of His kingdom there shall be no end.” Isaiah 9:6; Luke 1:32, 33. [PP - Patriarchs and Prophets, (1890); Publisher: Review and Herald Publishing Association, Washington, D.C.]       (End of this title)        ___ Kindly Watch & Share https://youtu.be/bz4jgGhS498?feature=shared For Daily Christian Posts : Join Telegram Channel https://t.me/FatherOfLights       

🙏 தியான நேரம் : 11-ஜூலை-2024          🛐Father of Lights💫 73 - தாவீதின் இறுதி வருடங்கள் -10 (10-ல்) தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும். பிரசங்கி 3:14. தாவீதிற்கும் அவனுடைய வீட்டாருக்கும் ஏற்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் மகிமையானவை. நித்திய காலங்களை நோக்கியிருந்த அவைகள் தங்களுடைய முழுமையான நிறைவேறுதலை கிறிஸ்துவில் காண்கின்றன. என் தாசனாகிய தாவீதை நோக்கி... என்று ஆணையிட் டேன். என் கை அவனோடே உறுதியாயிருக்கும், என் புயம் அவனைப் பலப்படுத்தும். என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும் படி வைப்பேன். அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான், நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன். என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன், என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும் (சங். 893-28) என்று ஆண்டவர் அறிவிக்கிறார். அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ள மட்டும் நிலை நிற்கவும் செய்வேன் - சங். 89:29. ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிற வனை நொறுக்குவார். சூரியனும் சந்திரனுமுள்ள மட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான், சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரத் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார். அவருடைய நாமம் என்றென் றைக்கும் இருக்கும்; சூரியனுள்ள மட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும், மனுஷர் அவருக்குள் ஆசீர் வதிக்கப்படுவார்கள், எல்லாஜாதிகளும் அவரைப்பாக்கியமுடைய வர் என்று வாழ்த்துவார்கள். சங். 72.4-8.17. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமை யுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது. ஏசாயா 9:6, லூக்கா 1:32. [கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்]