கதை மாற்றத்தை தரும் (Tamil Story)
Open in Telegram
ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிற மீன் போல பொதுநலத்திலும் சுயநலம் வேண்டும்...💖🔗🧠 Suggestion: 7868072071
Show moreIndia260 862The category is not specified
1 393
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Data loading in progress...
Similar Channels
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
December '24
December '24
+116
in 0 channels
November '240
in 0 channels
Get PRO
October '24
+272
in 0 channels
Get PRO
September '240
in 0 channels
Get PRO
August '240
in 0 channels
Get PRO
July '240
in 0 channels
Get PRO
June '240
in 0 channels
Get PRO
May '240
in 0 channels
Get PRO
April '240
in 0 channels
Get PRO
March '240
in 0 channels
Get PRO
February '240
in 0 channels
Get PRO
January '240
in 0 channels
Get PRO
December '230
in 0 channels
Get PRO
November '230
in 0 channels
Get PRO
October '23
+2
in 0 channels
Get PRO
September '23
+3
in 0 channels
Get PRO
August '23
+16
in 0 channels
Get PRO
July '23
+21
in 0 channels
Get PRO
June '23
+14
in 0 channels
Get PRO
May '23
+22
in 0 channels
Get PRO
April '23
+24
in 0 channels
Get PRO
March '23
+21
in 0 channels
Get PRO
February '23
+27
in 0 channels
Get PRO
January '23
+34
in 0 channels
Get PRO
December '22
+49
in 0 channels
Get PRO
November '22
+30
in 0 channels
Get PRO
October '22
+40
in 0 channels
Get PRO
September '22
+34
in 0 channels
Get PRO
August '22
+25
in 0 channels
Get PRO
July '22
+38
in 0 channels
Get PRO
June '22
+44
in 0 channels
Get PRO
May '22
+31
in 0 channels
Get PRO
April '22
+25
in 0 channels
Get PRO
March '22
+31
in 0 channels
Get PRO
February '22
+25
in 0 channels
Get PRO
January '22
+51
in 0 channels
Get PRO
December '21
+58
in 0 channels
Get PRO
November '21
+53
in 0 channels
Get PRO
October '21
+51
in 0 channels
Get PRO
September '21
+49
in 0 channels
Get PRO
August '21
+48
in 0 channels
Get PRO
July '21
+125
in 0 channels
Get PRO
June '21
+220
in 0 channels
Get PRO
May '21
+361
in 0 channels
Get PRO
April '21
+236
in 0 channels
Get PRO
March '21
+210
in 0 channels
Get PRO
February '21
+133
in 0 channels
Get PRO
January '21
+486
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 21 December | +2 | |||
| 20 December | +3 | |||
| 19 December | +1 | |||
| 18 December | +3 | |||
| 17 December | +5 |
Channel Posts
மற்றோர் அம்சத்தில் பார்த்தால், 42 இன்ச் டி.வி. வாங்கியதால், வீட்டில் வரவேற்பறை சின்னதாகத் தெரியும். 'பெரிய வீட்டுக்குப் போகணும். இந்தக் குருவிக் கூட்டுல என்னால குடித்தனம் நடத்த முடியலை’ என்று மனசுக்குள் ஒலிக்கத் தொடங்கும் குரல், பெரிய வீட்டுக்கு இடம் பெயர்ந்தால்தான் மியூட் ஆகும். 10 ஆயிரம் தள்ளுபடிக்கு ஆசைப்பட்டது, மாசம் 10 ஆயிரம் ரூபாய் அதிக வாடகையில் கொண்டுபோய் நிறுத்தும்.
'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் ஐ.டி. வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்யும் கௌதம், 'என் வாழ்க்கையை ஒரு சின்னப் பெட்டிக்குள் அடைச்சுக்க முடியணும். அப்படிச் செய்ய முடிஞ்சுட்டா, டென்ஷனே இல்லை!’ என்று ஒரு வார்த்தை சொன்னார். ஆனால், நம்மால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை.
குழந்தைகளுக்கென நாம் வாங்கிக் குவிக்கும் பொருட் கள் தொடங்கி, படுக்கையறை, குளியலறை வரை அனைத்திலும் பொருட்களாக இறைந்துகிடக்கின்றன.
நாலு பேர் இருக்கும் வீட்டில் ஆறு செல்போன்களும் ஒரு லேண்ட்லைன் தொலைபேசியும் இருக்கிறது. எல்லாரும் வீட்டில் இருக்கும்போது, அது ஒரு பி.பி.ஓ. சென்டர்போல அனைவரும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வரவேற்பறை டி.வி-யில் சீரியலும் படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட்டும் அலறுகிறது. ஏ.சி. ரிமோட்டைக்கொண்டு சேனல் மாற்ற முயற்சிக்கிறோம்; செல்போனை எடுத்து டி.வி-யை நிறுத்தப்பார்க்கிறோம். ஒரு பொம்மையை இழுத்தால், 10 பொம்மைகள் சேர்ந்தே விழுகின்றன.
'இவ்வளவு பொருட்கள் வைத்திருக்கிறோமே... எல்லாவற்றையும் உருப்படியாகப் பயன்படுத்துகிறோமா?’ என்று கேட்டால், நம் மனசாட்சி நம்மை ரூம் போட்டு அடிக் கும். தினுசு தினுசாக ஏழு வாட்ச் வைத்திருந்தாலும், செல்போனில்தான் மணி பார்ப்போம். 'மூன்றெழுத்து மில்க் நடிகை 20 ஜோடி செருப்புவைத்திருக் கிறார்’ போன்ற கிசுகிசுக்களைஇப்போது யாரும் சீந்துவதுகூட இல்லை. ஏனென் றால், எல்லார் வீட்டிலும் பத்துப் பதினைந்து ஜோடி செருப்புகள்இறைந்து கிடக்கின்றன.
பொருட்களாக வாங்கிச் சேர்க்கும் மனோபாவம், ஒருவித அடிமைத்தனத்தை நமக்குள் புகுத்திவிடுகிறது. வாங்க நினைத்த ஒரு பொருளை வாங்க முடியாமல்போனால், அந்தப் பொருள் இருந்திருந்தால் இந்தக் காரியத்தைச் சுலபமாகச் செய்திருக்கலாம் என்றெழும் எண்ணம், பல தருணங்களில் எரிச்சலை உண்டாக்குகிறது.
'கஷ்டப்பட்டுக் காசு சம்பாதிக்கிறோம். ஆசைப்பட்டதை வாங்கிக்கக் கூடாதா? அப்புறம் என்ன வாழ்க்கை?’ என்பது தனி மனிதனின் கேள்வி.
'காசு இருக்கும்போது, பொருள் வாங்கிச் சேருங்கள். அப்போதுதான் பணப் புழக்கம் அதிகமாகும்’ என்பது பொருளாதார யோசனை. ஆனால், 'என் தேவைக்கான பொருட்கள் மட்டுமே எனக்குப் போதும்’ என்பதுதான் வாழ்க்கை.
விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வதன் மூலம், மேல்தட்டு அடுக்கில் வந்துவிடலாம் என நாம் நம்பவைக்கப்பட்டு இருக்கிறோம். அந்த எண்ணத் தில் நாம் வாங்கும் பொருட்கள் பலவும் மறுபடி விற்கிறபோது, அடிமாட்டு விலைக்கே எடுத்துக்கொள்ளப்படும். இல்லையென்றால், அதை எடைக்குப் போடலாம். கப்பல் மாதிரி கார் வாங்கி வாசலில் நிறுத்தும்போது, எதிர் வீட்டுக்காரனை ஜெயித்துவிடலாம். ஆனால், அதை அவசரத்துக்கு விற்க வேண்டி வந்தால், பொம்மை கார் விலைக்குக் கேட்பார்கள்.
காரை, கணினியை, லட்சங்கள் மதிப்புள்ள வாட்ச்சை சமூக அந்தஸ்தாகப் பார்க்கிற நாம், கிராமப்புறத்தில் பணம் ஈட்டி, அதைக் கையி லும் கழுத்திலும் தங்கமாக இழைத்துக்கொண்டு திரிபவர்களைக் கிண்டலாகப் பார்க்கிறோம். நியாயமாகப் பார்த்தால், அவர்களின் செலவு கொஞ்சம் புத்திசாலித்தனமான முதலீடாகத் தெரிகிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை ஒழுங்குபண்ணிப் பாருங்கள். அல்லது வார நாளில் விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த உற்சாகத்துடன் வீட்டின் அடைசலை ஒழித்துக்கட்டுங்கள். அப்போது தேவையே இல்லாமல் நாம் வாங்கிய சாமான்கள் நம்மைப் பார்த்துப் பல் இளிக்கும். 'என்னை வாங்கிச் சும்மா அலமாரியில அடுக்கிட்டு, அதுக்குப் பணம் கட்ட இந்த ஓட்டம் ஓடுறியே’ எனக் கேலி பேசும்.
உலக மகா பணக்காரர் மற்றும் முதலீட்டு ஆலோசகர் வாரன் பஃபெட் இப்படிச் சொல் கிறார்... 'நீங்கள் தேவை இல்லாத பொருட்களை வாங்கிச் சேர்த்தால், விரைவில் தேவையான பொருட்களை விற்க வேண்டி வரும்!’
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்தும்!
| 2 | மற்றோர் அம்சத்தில் பார்த்தால், 42 இன்ச் டி.வி. வாங்கியதால், வீட்டில் வரவேற்பறை சின்னதாகத் தெரியும். 'பெரிய வீட்டுக்குப் போகணும். இந்தக் குருவிக் கூட்டுல என்னால குடித்தனம் நடத்த முடியலை’ என்று மனசுக்குள் ஒலிக்கத் தொடங்கும் குரல், பெரிய வீட்டுக்கு இடம் பெயர்ந்தால்தான் மியூட் ஆகும். 10 ஆயிரம் தள்ளுபடிக்கு ஆசைப்பட்டது, மாசம் 10 ஆயிரம் ரூபாய் அதிக வாடகையில் கொண்டுபோய் நிறுத்தும்.
'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் ஐ.டி. வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்யும் கௌதம், 'என் வாழ்க்கையை ஒரு சின்னப் பெட்டிக்குள் அடைச்சுக்க முடியணும். அப்படிச் செய்ய முடிஞ்சுட்டா, டென்ஷனே இல்லை!’ என்று ஒரு வார்த்தை சொன்னார். ஆனால், நம்மால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை.
குழந்தைகளுக்கென நாம் வாங்கிக் குவிக்கும் பொருட் கள் தொடங்கி, படுக்கையறை, குளியலறை வரை அனைத்திலும் பொருட்களாக இறைந்துகிடக்கின்றன.
நாலு பேர் இருக்கும் வீட்டில் ஆறு செல்போன்களும் ஒரு லேண்ட்லைன் தொலைபேசியும் இருக்கிறது. எல்லாரும் வீட்டில் இருக்கும்போது, அது ஒரு பி.பி.ஓ. சென்டர்போல அனைவரும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வரவேற்பறை டி.வி-யில் சீரியலும் படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட்டும் அலறுகிறது. ஏ.சி. ரிமோட்டைக்கொண்டு சேனல் மாற்ற முயற்சிக்கிறோம்; செல்போனை எடுத்து டி.வி-யை நிறுத்தப்பார்க்கிறோம். ஒரு பொம்மையை இழுத்தால், 10 பொம்மைகள் சேர்ந்தே விழுகின்றன.
'இவ்வளவு பொருட்கள் வைத்திருக்கிறோமே... எல்லாவற்றையும் உருப்படியாகப் பயன்படுத்துகிறோமா?’ என்று கேட்டால், நம் மனசாட்சி நம்மை ரூம் போட்டு அடிக் கும். தினுசு தினுசாக ஏழு வாட்ச் வைத்திருந்தாலும், செல்போனில்தான் மணி பார்ப்போம். 'மூன்றெழுத்து மில்க் நடிகை 20 ஜோடி செருப்புவைத்திருக் கிறார்’ போன்ற கிசுகிசுக்களைஇப்போது யாரும் சீந்துவதுகூட இல்லை. ஏனென் றால், எல்லார் வீட்டிலும் பத்துப் பதினைந்து ஜோடி செருப்புகள்இறைந்து கிடக்கின்றன.
பொருட்களாக வாங்கிச் சேர்க்கும் மனோபாவம், ஒருவித அடிமைத்தனத்தை நமக்குள் புகுத்திவிடுகிறது. வாங்க நினைத்த ஒரு பொருளை வாங்க முடியாமல்போனால், அந்தப் பொருள் இருந்திருந்தால் இந்தக் காரியத்தைச் சுலபமாகச் செய்திருக்கலாம் என்றெழும் எண்ணம், பல தருணங்களில் எரிச்சலை உண்டாக்குகிறது.
'கஷ்டப்பட்டுக் காசு சம்பாதிக்கிறோம். ஆசைப்பட்டதை வாங்கிக்கக் கூடாதா? அப்புறம் என்ன வாழ்க்கை?’ என்பது தனி மனிதனின் கேள்வி.
'காசு இருக்கும்போது, பொருள் வாங்கிச் சேருங்கள். அப்போதுதான் பணப் புழக்கம் அதிகமாகும்’ என்பது பொருளாதார யோசனை. ஆனால், 'என் தேவைக்கான பொருட்கள் மட்டுமே எனக்குப் போதும்’ என்பதுதான் வாழ்க்கை.
விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வதன் மூலம், மேல்தட்டு அடுக்கில் வந்துவிடலாம் என நாம் நம்பவைக்கப்பட்டு இருக்கிறோம். அந்த எண்ணத் தில் நாம் வாங்கும் பொருட்கள் பலவும் மறுபடி விற்கிறபோது, அடிமாட்டு விலைக்கே எடுத்துக்கொள்ளப்படும். இல்லையென்றால், அதை எடைக்குப் போடலாம். கப்பல் மாதிரி கார் வாங்கி வாசலில் நிறுத்தும்போது, எதிர் வீட்டுக்காரனை ஜெயித்துவிடலாம். ஆனால், அதை அவசரத்துக்கு விற்க வேண்டி வந்தால், பொம்மை கார் விலைக்குக் கேட்பார்கள்.
காரை, கணினியை, லட்சங்கள் மதிப்புள்ள வாட்ச்சை சமூக அந்தஸ்தாகப் பார்க்கிற நாம், கிராமப்புறத்தில் பணம் ஈட்டி, அதைக் கையி லும் கழுத்திலும் தங்கமாக இழைத்துக்கொண்டு திரிபவர்களைக் கிண்டலாகப் பார்க்கிறோம். நியாயமாகப் பார்த்தால், அவர்களின் செலவு கொஞ்சம் புத்திசாலித்தனமான முதலீடாகத் தெரிகிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை ஒழுங்குபண்ணிப் பாருங்கள். அல்லது வார நாளில் விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த உற்சாகத்துடன் வீட்டின் அடைசலை ஒழித்துக்கட்டுங்கள். அப்போது தேவையே இல்லாமல் நாம் வாங்கிய சாமான்கள் நம்மைப் பார்த்துப் பல் இளிக்கும். 'என்னை வாங்கிச் சும்மா அலமாரியில அடுக்கிட்டு, அதுக்குப் பணம் கட்ட இந்த ஓட்டம் ஓடுறியே’ எனக் கேலி பேசும்.
உலக மகா பணக்காரர் மற்றும் முதலீட்டு ஆலோசகர் வாரன் பஃபெட் இப்படிச் சொல் கிறார்... 'நீங்கள் தேவை இல்லாத பொருட்களை வாங்கிச் சேர்த்தால், விரைவில் தேவையான பொருட்களை விற்க வேண்டி வரும்!’
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்தும்! | 0 |
| 3 | *ஒரு வார ஓய்வை இதற்கு செலவிட்டு பாருங்கள்...*
1960 வாக்கில் இங்கிலாந்தில் ஒரு சர்வே... நடுத்தரக் குடும்பங்கள் எவ்வளவு வீட்டு உபயோகப் பொருட்களைத் தேவை இல்லாமல் வாங்கிவைத்திருக்கிறார்கள் என்பதே அந்தக் கணக்கெடுப்பு. 60 சதவிகிதத்துக்கும் மேலான வீடுகளில் குறைந்தது மூன்று மைக்ரோவேவ் ஓவன்கள் இருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு சொன்னது. அந்த மூன்றில், இரண்டு இடத்தை அடைத்துக்கொண்டு 'தேமே’ என்று கிடந்தது.
அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டுமல்ல; ஐரோப்பா முழுவதுமே மைக்ரோவேவ் ஓவன்கள் மீது ஒரு தீராத ஆர்வம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் தங்கள் புதிய மாடல் மைக்ரோவேவ் ஓவன்களின் புகழ் பாடிப் பெருமை பேசுவதில் ஐரோப்பியர் களுக்கு அப்படி ஓர் ஆனந்தம்.
இன்றைக்கு இங்கே நம் வீடுகளில் அப்படி ஒரு சர்வே எடுத்தால், அந்த வேலையைச் செய்கிற நிறுவனம் வெறுப்பாகி, 'சர்வேயும் வேணாம்... ஒண்ணும் வேணாம். போய் புள்ளை குட்டிகளைப் படிக்கவைங்கடா’ என்று தலைதெறிக்க ஓடிவிடும். ஓரளவு வசதி படைத்தவர்கள் எல்லாருமே வீட்டை, குப்பைச் சாமான்களை வைக்கும் குடோன்களாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.
'இப்போதெல்லாம் எல்லாப்பொருட் களுமே அத்தியாவசியமாகிவிட்டது’ என்ற ஒரு பொதுக் கருத்தை முன் வைத்துவிட்டு, போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். 30 கோடிப் பேருக்கும் மேல் எகிறும் 'வாங்கும் சக்தி’ கொண்ட இந்திய வாடிக்கையாளர் சந்தையைச் சும்மா விட்டுவிட யாருக்குத்தான் மனசு வரும்?
தினந்தோறும் இந்தியச் சந்தை புதிய புதிய பொருட்களால் நிரம்பிக்கொண்டே இருக்கிறது. நாமும் வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கிறோம்.
சவுக்காரம் போட்டு சட்டையைத் துவைத்துப்போட்ட காலம் போய், வாஷிங் பவுடரில் ஊறவைத்து, வெண்மையாக இருக்க இன்னொரு பொருளைப் பயன்படுத்தி, நிறம் மங்காமல் இருக்க ஒரு கண்டிஷனர் ஊற்றி, சோப்பு வாடை தெரியாமல் இருக்க ஒரு சொல்யூஷனில் முக்கி... அடப் போங்கடா! துவைச்சுப் போடுற துக்குப் பதிலா இன்னொரு சட்டையே வாங்கிடலாம்போல என்ற விரக்தி மனப்பான்மையில் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். பத்தில் ஐந்து பேர் வீட்டில் ட்ரெட்மில் இயந்திரம், துண்டு காயப் போடத்தான் பயன்படுகிறது.
வாக்குவம் க்ளீனரை முதல் ஒரு வாரம் கர்மசிரத்தையாகப் பயன்படுத்தியதோடு சரி... அதற்குப் பிறகு, அதை எங்கே வைப்பது என்று தீர்மானிப்பதில் வீட்டுக்குள் பிரளயமே மூளும். வித விதமான நவீன பொருட்களை வீட்டுக் குள் அடுக்கிவைத்துக்கொள்வதன் மூலம், ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற சித்தாந்தத்தைக் கடந்த 15 ஆண்டுகளில் வணிக நிறுவனங்கள் நம்மவர்களிடையே அழுத்தமாகப் பரப்புரை செய்துவிட்டது.
போதாக்குறைக்கு ஆயிரத்தையோ இரண்டா யிரத்தையோ காசாக எண்ணிக் கொடுக்கிறபோது தோன்றுகிற 'தேவை இல்லா செலவு’ குற்றவுணர்ச்சி, கார்டுகளை 'சர்ரென்று’ தேய்க்கும் போது உண்டாவது இல்லை.
நம்முடைய பணம், பலவீனம் இந்த இரண் டையும் மிகச் சரியாகக் கணக்கெடுத்துக் கடை விரிக்கின்றன நுகர்பொருள் நிறுவனங்கள்.
பலகட்ட ஆராய்ச்சி அலசல்களுக்குப் பிறகு, ஆசை ஆசையாக வாங்கிய செல்போன், ஒரே மாதத்தில் 'அவ்வளவு சரியில்லையோ’ என்று தோன்றும் அளவுக்குச் சின்னச் சின்ன மாற்றங்களுடன் அடுத்த மாடலை உடனடியாக வெளியிடுகின்றன அலைபேசி நிறுவனங்கள். 'இன்னும் இந்த போனையா வெச்சிருக்க?’ என்ற உங்கள் ஈகோவை உரசும் கேள்விகளை விளம்பரங்கள் வாயிலாகத் தூவுகிறார்கள்.
நாலு பேர் வசிக்கும் 800 சதுர அடி வீடு, ஒரு காலத்தில் பெரிய வீடுபோல இருந்தது. இப்போது 8,000 சதுர அடி வீட்டில்கூட இடம் போதவில்லை. அந்த அளவுக்குப் பிரமாண்ட பொருட்களால் வீடுகள் நிரம்பிக்கிடக்கின்றன. நிறையப் பொருட்கள் வாங்கிக்கொண்டே இருப்பது, பண விரயம் மட்டுமல்ல; அது ஒரு கட்டத்தில் மனஇறுக்கத்தையும் கொண்டு வந்துவிடுகிறது.
'இந்தப் பொருட்களைக் கையாள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும், ஒழுங்கு பண்ணுவதற்கும் மிக அதிக நேரம் செலவிட வேண்டும். அந்தப் பொருள் கெட்டுப்போனால், அதைச் சரிசெய்வதற்குள் வீட்டுக்குள் பூகம்பம் வெடிக்கிறது. 'இந்தச் சாமானை வாங்காதேனு அப்பவே சொன்னேனே... கேட்டியா?’ என்று கணவர் கத்த, 'இந்த ஆளைக் கல்யாணம் பண்ணாதேனு எங்க அப்பா அப்பவே சொன்னார்... நான் கேக்கலையே!’ என்று மனைவி கொந்தளிக்கிறார்.
சும்மானாச்சுக்கும் வெளியே போகும்போதுகூட ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வருகிறோம். அப்படிப் பொருட்களை வாங்குவதற்கு நமக்கு நாமே பல சமாதானங்களைச் சொல்லிக்கொள்கிறோம். '42 இன்ச் டி.வி. போன வாரம் 42 ஆயிரம் ரூபாய் வித்துச்சு. இப்போ அதிரடித் தள்ளுபடில அதோட விலை 32 ஆயிரம்தான். 10 ஆயிரம் மிச்சம்’ என்று கணக்குப் போடுகிறோம். ஆனால், உண்மையான கணக்குப்படி, அதிரடித் தள்ளுபடியில் 10 ஆயிரத்தை நாம் மிச்சப்படுத்தவில்லை. தேவையே இல்லாத சமயத்தில் ஒரு டி.வி. வாங்கியதால், 32 ஆயிரம் ரூபாய் இழப்பு என்பதே சரி. | 0 |
| 4 | ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.
அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.
குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...
நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...🗣
மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...
இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.
குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...
இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்....🗣
நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்...... 🙏🌹🙏🌹🙏🌹 | 0 |
| 5 | 👆 | 0 |
| 6 | 70. எல்லா காலத்திலும் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், ஒரு நபர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் தனது எதிர்காலத்தை மாற்ற முடியும்.- ஓப்ரா வின்ஃப்ரே
71. நமது இருண்ட தருணங்களில்தான் ஒளியைக் காண நாம் கவனம் செலுத்த வேண்டும்.- அரிஸ்டாட்டில் ஓனாசிஸ்
72. கனவுகளின் இடத்தை வருத்தம் எடுக்கும் வரை ஒரு மனிதனுக்கு வயதாகாது. - ஜான் பேரிமோர்
73. ஒரு நாளும் சிந்திக்காமல் இருக்க முடியாத ஒன்றை ஒருபோதும் கைவிடாதீர்கள். - வின்ஸ்டன் சர்ச்சில்
74. வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கு முக்கியமாகும். நீங்கள் செய்வதை நேசித்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். - ஆல்பர்ட் ஸ்விட்சர்
75. வாழ்க்கையில் உங்களிடம் இருப்பதைப் பார்த்தால், நீங்கள் எப்போதும் அதிகமாக இருப்பீர்கள். வாழ்க்கையில் உங்களிடம் இல்லாததை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது. - ஓப்ரா வின்ஃப்ரே
76. வெற்றி என்பது உற்சாகம் குறையாமல் தோல்வியில் இருந்து தோல்விக்கு தடுமாறுகிறது. - வின்ஸ்டன் சர்ச்சில்
77. மகிழ்ச்சி என்பது ஆயத்தமான ஒன்று அல்ல. இது உங்கள் சொந்த செயல்களில் இருந்து வருகிறது. - தலாய் லாமா
78. பாதை செல்லும் இடத்திற்குச் செல்லாதீர்கள், அதற்குப் பதிலாக பாதை இல்லாத இடத்திற்குச் சென்று ஒரு தடத்தை விட்டு விடுங்கள். - ரால்ப் வால்டோ எமர்சன்
79. சிறந்த பழிவாங்கல் மகத்தான வெற்றி. - பிராங்க் சினாட்ரா
80. உங்கள் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான நாட்கள் நீங்கள் பிறந்த நாள் மற்றும் ஏன் என்று கண்டுபிடிக்கும் நாள். - மார்க் ட்வைன்
81. வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு ஏறினீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் எப்படி உலகிற்கு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதுதான். - ராய் டி. பென்னட்
82. நாளைய தினத்தை உணர்ந்து கொள்வதற்கான ஒரே வரம்பு இன்றைய நமது சந்தேகங்கள் மட்டுமே. - பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
83. வாழ்க்கை என்பது 10 சதவிகிதம் உங்களுக்கு என்ன நடக்கிறது மற்றும் 90 சதவிகிதம் அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள். - லூ ஹோல்ட்ஸ்
84. ஒருபோதும் கைவிடாதீர்கள், ஏனென்றால் அதுதான் அலை மாறும் இடம் மற்றும் நேரம். - ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்
85. மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, அவற்றைச் சமாளிக்கும் திறன். - ஸ்டீவ் மரபோலி
86. தவறுகள் இல்லை, வாய்ப்புகள் மட்டுமே. - டினா ஃபே
87. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்கள் எண்ணங்களுக்குக் கட்டளையிடும், உங்கள் ஆற்றலை விடுவிக்கும், உங்கள் நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இலக்கை அமைக்கவும். - ஆண்ட்ரூ கார்னகி
88. நான் எவ்வளவு கடினமாக உழைக்கிறேனோ, அவ்வளவு அதிர்ஷ்டம் எனக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. - தாமஸ் ஜெபர்சன்
89. வாய்ப்பு தட்டுவதில்லை, கதவைத் தாழிடும்போது அது தன்னைத்தானே முன்வைக்கிறது. - கைல் சாண்ட்லர்
90. நம் விதியை பிடிப்பது நட்சத்திரங்களில் இல்லை, ஆனால் நம்மில். - வில்லியம் ஷேக்ஸ்பியர்
91. உங்களை நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிவீர்களோ, அவ்வளவு தெளிவு இருக்கும். சுய அறிவுக்கு முடிவே இல்லை. - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
92. உங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்யக்கூடியவற்றில் தலையிட விடாதீர்கள். - ஜான் வூடன்
93. தீமையின் வெற்றிக்குத் தேவையான ஒரே விஷயம் நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதுதான். - எட்மண்ட் பர்க்
94. தயாரிப்பு வாய்ப்பை சந்திக்கும் போது அதிர்ஷ்டம் ஏற்படுகிறது. - சினேகா
95. நீங்கள் நிறுத்தாதவரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை. - கன்பூசியஸ்
96. வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு நட்பு, நான் அதைப் பெற்றேன். - ஹூபர்ட் எச். ஹம்ப்ரி
97. நீங்கள் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ, அவ்வளவு விஷயங்கள் உங்களுக்குத் தெரியும். நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு இடங்களுக்குச் செல்வீர்கள். - டாக்டர் சியூஸ்
98. உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதுதான் உண்மையான ஞானம். - சாக்ரடீஸ்
99. உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. - ஜிக் ஜிக்லர்
100. சிறந்த வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை விரும்புவதுதான். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், தொடர்ந்து தேடுங்கள். தீர்வு வேண்டாம். இதயத்தின் எல்லா விஷயங்களைப் போலவே, நீங்கள் அதைக் கண்டுபிடிக்கும்போது உங்களுக்குத் தெரியும். - ஸ்டீவ் ஜாப்ஸ்
வாசித்ததற்கு நன்றி | 0 |
| 7 | 35. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்கள் எண்ணங்களுக்குக் கட்டளையிடும், உங்கள் ஆற்றலை விடுவிக்கும், உங்கள் நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இலக்கை அமைக்கவும். - ஆண்ட்ரூ கார்னகி
36. நான் எவ்வளவு கடினமாக உழைக்கிறேனோ, அவ்வளவு அதிர்ஷ்டம் எனக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. - தாமஸ் ஜெபர்சன்
37. வாய்ப்பு தட்டுவதில்லை, கதவைத் தாழிடும்போது அது தன்னைத்தானே முன்வைக்கிறது. - கைல் சாண்ட்லர்
38. நம் விதியை பிடிப்பது நட்சத்திரங்களில் இல்லை, ஆனால் நம்மில். - வில்லியம் ஷேக்ஸ்பியர்
39. உங்களை நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிவீர்களோ, அவ்வளவு தெளிவு இருக்கும். சுய அறிவுக்கு முடிவே இல்லை. - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
40. உங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்யக்கூடியவற்றில் தலையிட விடாதீர்கள். - ஜான் வூடன்
41. தீமையின் வெற்றிக்குத் தேவையான ஒரே விஷயம் நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதுதான். - எட்மண்ட் பர்க்
42. தயாரிப்பு வாய்ப்பை சந்திக்கும் போது அதிர்ஷ்டம் ஏற்படுகிறது. - சினேகா
43. நீங்கள் நிறுத்தாதவரை எவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. - கன்பூசியஸ்
44. வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு நட்பு, நான் அதைப் பெற்றேன். - ஹூபர்ட் எச். ஹம்ப்ரி
45. நீங்கள் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ, அவ்வளவு விஷயங்களை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு இடங்களுக்குச் செல்வீர்கள். - டாக்டர் சியூஸ்
46. உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதுதான் உண்மையான ஞானம். - சாக்ரடீஸ்
47. உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. - ஜிக் ஜிக்லர்
48. பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை விரும்புவதுதான். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், தொடர்ந்து தேடுங்கள். தீர்வு வேண்டாம். இதயத்தின் எல்லா விஷயங்களைப் போலவே, நீங்கள் அதைக் கண்டுபிடிக்கும்போது உங்களுக்குத் தெரியும். - ஸ்டீவ் ஜாப்ஸ்
49. வாழ்வதில் உள்ள மிகப் பெரிய மகிமை, ஒருபோதும் வீழ்ச்சியடையாமல் இருப்பதில் இல்லை, ஆனால் விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில் உள்ளது. - நெல்சன் மண்டேலா
50. மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதே உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி. - மகாத்மா காந்தி
51. நேற்றைய தினத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள விடாதீர்கள்.- வில் ரோஜர்ஸ்
52. வாழ்க்கையில் மிகப்பெரிய சவால் நீங்களாக இருப்பதுதான்... உலகில் உங்களை மற்றவர்களைப் போல் ஆக்க முயற்சிக்கிறது. - தெரியவில்லை
53. வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி மரணமானது அல்ல: தொடரும் துணிவுதான் முக்கியம். - வின்ஸ்டன் சர்ச்சில்
54. உங்களால் முடியும் என்று நம்புங்கள், நீங்கள் பாதியிலேயே இருக்கிறீர்கள். - தியோடர் ரூஸ்வெல்ட்
55. உங்கள் நேரம் குறைவாக உள்ளது, வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து வீணாக்காதீர்கள். - ஸ்டீவ் ஜாப்ஸ்
56. வாழ்க்கை என்பது 10% நமக்கு என்ன நடக்கிறது, 90% அதற்கு நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான். - சார்லஸ் ஆர். ஸ்விண்டோல்
57. பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை விரும்புவதுதான். - ஸ்டீவ் ஜாப்ஸ்
58. ஒவ்வொரு நாளையும் நீங்கள் அறுவடை செய்யும் அறுவடையைக் கொண்டு தீர்மானிக்காதீர்கள், ஆனால் நீங்கள் நடும் விதைகளை வைத்து மதிப்பிடாதீர்கள். - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
59. நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு குறிக்கோளுடன் இணைக்கவும், மக்கள் அல்லது பொருட்களுடன் அல்ல. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
60. உங்கள் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவதாகும். - ஆபிரகாம் லிங்கன்
61. நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயம் தானே. - பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
62. நீங்கள் உங்களை உயர்த்த விரும்பினால், வேறொருவரை உயர்த்தவும். - புக்கர் டி. வாஷிங்டன்
63. இறுதியில், நாம் நம் எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, நம் நண்பர்களின் மௌனத்தை நினைவில் கொள்வோம்.- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
64. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக உணர முடியாது. - எலினோர் ரூஸ்வெல்ட்
65. இருபது வருடங்கள் கழித்து நீங்கள் செய்ததை விட நீங்கள் செய்யாத காரியங்களால் அதிக ஏமாற்றம் அடைவீர்கள். - மார்க் ட்வைன்
66. நேற்றைய தினத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள விடாதீர்கள்.- வில் ரோஜர்ஸ்
67. வாழ்வதில் உள்ள மிகப் பெரிய மகிமை, ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஆனால் விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில் உள்ளது. - நெல்சன் மண்டேலா
68. வாழ்க்கை என்பது நாம் அதை உருவாக்குவது, எப்போதும் இருந்தது, எப்போதும் இருக்கும். - பாட்டி மோசஸ்
69. தோல்வி சாத்தியமற்றது போல் நம்புங்கள் மற்றும் செயல்படுங்கள். - சார்லஸ் கெட்டரிங் | 0 |
| 8 | நூலக மனநிலையின் "உங்கள் வாழ்க்கையை மாற்றும் 100 மேற்கோள்கள்" புத்தகத்திலிருந்து 100 மேற்கோள்கள்
1. வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி மரணம் அல்ல: தொடரும் தைரியம்தான் முக்கியம். - வின்ஸ்டன் சர்ச்சில்
2. உங்களால் முடியும் என்று நம்புங்கள், நீங்கள் பாதியிலேயே இருக்கிறீர்கள். - தியோடர் ரூஸ்வெல்ட்
3. உங்கள் நேரம் குறைவாக உள்ளது, மற்றவரின் வாழ்க்கையை வாழ்ந்து வீணாக்காதீர்கள். - ஸ்டீவ் ஜாப்ஸ்
4. வாழ்க்கை என்பது 10% நமக்கு என்ன நடக்கிறது, 90% அதற்கு நாம் எப்படி நடந்துகொள்கிறோம். - சார்லஸ் ஆர். ஸ்விண்டோல்
5. சிறந்த வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை விரும்புவதுதான். - ஸ்டீவ் ஜாப்ஸ்
6. ஒவ்வொரு நாளையும் நீங்கள் அறுவடை செய்யும் அறுவடையை வைத்து மதிப்பிடாதீர்கள், ஆனால் நீங்கள் நடும் விதைகளை வைத்து மதிப்பிடாதீர்கள். - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
7. நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு குறிக்கோளுடன் இணைக்கவும், மக்கள் அல்லது பொருட்களுடன் அல்ல. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
8. உங்கள் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவதுதான். - ஆபிரகாம் லிங்கன்
9. நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயம் தானே.- பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
10. நீங்கள் உங்களை உயர்த்த விரும்பினால், வேறொருவரை உயர்த்தவும். - புக்கர் டி. வாஷிங்டன்
11. இறுதியில், நம் எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, நம் நண்பர்களின் மௌனத்தை நினைவில் கொள்வோம். - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
12. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக உணர முடியாது. - எலினோர் ரூஸ்வெல்ட்
13. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் செய்ததை விட நீங்கள் செய்யாத காரியங்களால் அதிக ஏமாற்றம் அடைவீர்கள். - மார்க் ட்வைன்
14. நேற்றைய தினத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். - வில் ரோஜர்ஸ்
15. வாழ்வதில் உள்ள மிகப் பெரிய மகிமை, ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான் இருக்கிறது. - நெல்சன் மண்டேலா
16. வாழ்க்கை என்பது நாம் அதை உருவாக்குவது, எப்போதும் இருந்துள்ளது, எப்போதும் இருக்கும். - பாட்டி மோசஸ்
17. தோல்வி அடைய முடியாதது போல் நம்பி செயல்படுங்கள். - சார்லஸ் கெட்டரிங்
18. எல்லா காலத்திலும் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், ஒரு நபர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் தனது எதிர்காலத்தை மாற்ற முடியும். - ஓப்ரா வின்ஃப்ரே
19. நமது இருண்ட தருணங்களில்தான் ஒளியைக் காண நாம் கவனம் செலுத்த வேண்டும்.- அரிஸ்டாட்டில் ஓனாசிஸ்
20. கனவுகளின் இடத்தை வருத்தம் எடுக்கும் வரை ஒரு மனிதனுக்கு வயதாகாது. - ஜான் பேரிமோர்
21. ஒரு நாளும் சிந்திக்காமல் இருக்க முடியாத ஒன்றை ஒருபோதும் கைவிடாதீர்கள். - வின்ஸ்டன் சர்ச்சில்
22. வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கு முக்கியமாகும். நீங்கள் செய்வதை நேசித்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். - ஆல்பர்ட் ஸ்விட்சர்
23. வாழ்க்கையில் உங்களிடம் இருப்பதைப் பார்த்தால், உங்களுக்கு எப்போதும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் உங்களிடம் இல்லாததை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது. - ஓப்ரா வின்ஃப்ரே
24. வெற்றி என்பது உற்சாகம் குறையாமல் தோல்வியில் இருந்து தோல்விக்கு தடுமாறுகிறது. - வின்ஸ்டன் சர்ச்சில்
25. மகிழ்ச்சி என்பது ஆயத்தமான ஒன்று அல்ல. இது உங்கள் சொந்த செயல்களில் இருந்து வருகிறது. - தலாய் லாமா
26. பாதை செல்லும் இடத்திற்குச் செல்லாதீர்கள், அதற்குப் பதிலாக பாதை இல்லாத இடத்திற்குச் சென்று ஒரு தடத்தை விட்டு விடுங்கள். - ரால்ப் வால்டோ எமர்சன்
27. சிறந்த பழிவாங்கல் மகத்தான வெற்றி. - பிராங்க் சினாட்ரா
28. உங்கள் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான நாட்கள் நீங்கள் பிறந்த நாள் மற்றும் ஏன் என்று கண்டுபிடிக்கும் நாள். - மார்க் ட்வைன்
29. வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு ஏறினீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் எப்படி உலகிற்கு ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். - ராய் டி. பென்னட்
30. நாளையை நாம் உணர்ந்து கொள்வதற்கான ஒரே வரம்பு இன்றைய நமது சந்தேகங்கள் மட்டுமே. - பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
31. வாழ்க்கை என்பது 10 சதவீதம் உங்களுக்கு என்ன நடக்கிறது, 90 சதவீதம் அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கிறீர்கள் என்பதுதான்.- லூ ஹோல்ட்ஸ்
32. ஒருபோதும் கைவிடாதீர்கள், ஏனென்றால் அதுதான் அலை மாறும் இடம் மற்றும் நேரம். - ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்
33. மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, அவற்றைச் சமாளிக்கும் திறன். - ஸ்டீவ் மரபோலி
34. தவறுகள் இல்லை, வாய்ப்புகள் மட்டுமே. - டினா ஃபே | 0 |
| 9 | முட்டாள்களிடம் வாதம் செய்தால்... 😂😂😂 | 0 |
| 10 | தேவையில்லாத இடங்களில் வாயை திறந்தா... 😁😁😁 | 0 |
| 11 | கண்ணை நம்பாதே... சில நேரங்களில்... 😝😝😝 | 0 |
| 12 | எத பண்ணாலும் பிளான் பண்ணி தான்.... 😀😀😀 | 0 |
| 13 | தொலைபேசியின் மகத்துவம்... 😳😳😳 | 0 |
| 14 | Over involvement sometimes hurt... 🤫🤫🤫 | 0 |
| 15 | கடமைக்காக செய்வதில் பலனொன்றுமில்லை...🤫🤫🤫 | 0 |
| 16 | சில சமயங்களில் மற்றவர்களின் பாதையை அப்படியே பின்பற்றுவதால்... 😁😁😁 | 0 |
| 17 | ஒவ்வொருவரின் புரிதலும் மாறுபாடுடையது... 😜😜😜 | 0 |
| 18 | ............... 😂😂😂 | 0 |
| 19 | சரியான நேரத்தில் கிடைக்காத உதவி பயனற்றது... 😄😄😄 | 0 |
| 20 | Support & Back end work தெரியாம... எப்போதும் மற்றவர்களை அப்படியே பின்பற்றக்கூடாது...🫢🫢🫢 | 0 |
