en
Feedback
M SRI Stories & Articles Tamil

M SRI Stories & Articles Tamil

Open in Telegram

அனைவரும் விரும்பி வாசித்து மகிழும் கதைகள், கட்டுரைகள்...! Help-Request & More @MSRI_Editz_bot ☛ Subscribe & Support us ☟ https://www.youtube.com/c/MSRIEditz வாழ்த்துகள் 💐

Show more
Speaker Box M SRINetwork:Speaker Box M SRIIndia366 940The category is not specified
711
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் #தைப்பொங்கல் #Sticker Available Here Click to Download Now https://t.me/addstickers
அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் #தைப்பொங்கல் #Sticker Available Here Click to Download Now https://t.me/addstickers/Pongal_MSRI_StickerStore

☔ மழைச் சாரல் ☔ https://youtu.be/yjwjUULB6G4

சிரித்து மகிழுங்கள் 😜 https://youtu.be/nQYqBZTs0n8

⪢┈ᗘ ✵ M SRI Editz ✵ ᗛ┈⪡ Good Links Only Allowed Telegram Group https://t.me/joinchat/F-R3BESb488KEa7LvNXFDw

*குறள் வழி நடப்போம்*   ஒரு வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள். அந்நாய் அருகில் இருந்த மரத்தில் குடியிருந்த காகத்துடன் நட்பாய் இருந்தது. ஒரு நாள் காகம் கவலையுடன் இருந்தது. இதைக்கண்ட நாய்க்குட்டி காகத்திடம் சென்று, "என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்?" என்று கேட்டது. "அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றனர். அவைகளின் செயல்களை எல்லாம் பாராட்டுகிறார்கள். ஆனால் என்னை வெறுத்து கல்லை எறிந்து விரட்டுகிறார்களே ஏன்?" என்று கேட்டது காகம். இதற்குக் காரணம் உங்கள் ஒழுக்கமின்மை தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள் என்று நாய்க்குட்டி கூறியது. "எங்களிடம் அப்படி என்ன ஒழுக்கமின்மை இருக்கிறது? கடமை, சுத்தம் இப்படி பல நல்ல குணங்களில் நாங்கள் தான் சிறந்தவர்கள்!", என்று சொன்னது காகம். உண்மை தான்! என்றது நாய்க்குட்டி. பகிர்ந்து உண்ணும் பண்பைக் கற்றுத் தந்ததும் நாங்கள் தான்! என்று பெருமையோடு சொன்னது காகம். ஆமாம், அதுவும் உண்மை தான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி. இப்படிப் பல நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்? அதற்கு நாய்குட்டி, ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் உங்களிடம் இருக்கும் ஒழுக்கமின்மையால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள் என்று கூறியது நாய்க்குட்டி. அப்படி என்ன ஒழுக்கமின்மை எங்களிடம்? எனக் கேட்டது காகம். "மனிதர்களிடம் இருந்து உணவுப் பொருட்களை திருடுவது!" என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது. ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒழுக்கமின்மை அவரின் அத்தனை நல்ல பண்புகளையும் மறைத்து ஒழுக்கமின்மையையே முன்னிறுத்தும். குறள்: #137 பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue அதிகாரம்: ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai) - The Possession of Decorum குறள்: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. Kural in Tanglish: Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin Eydhuvar Eydhaap Pazhi. விளக்கம்: ஒழுக்கத்தினால் எல்லாரும் மேன்மையை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுபவர் அடையக் கூடாதப் பழியை அடைவர். Translation in English:  'Tis source of dignity when 'true decorum' is preserved; Who break 'decorum's' rules endure e'en censures undeserved. Meaning: From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace. பகிர்வு

திருக்குறள் குடும்ப உறவுகளுக்குக் கனிவான வணக்கம், 🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹 *🌷வான்புகழ் வள்ளுவம்🌷* *பால்* - அறத்துப்பால் *இயல்* - இல்லறவியல் *அதிகாரம்* - 15-பிறனில் விழையாமை. *குறள்* :- 14 *பிறன்பொருளாள்* *பெட்டொழுகும்* *பேதைமை ஞாலத்து* *அறம்பொருள்* *கண்டார்கண் இல்.* *விளக்கம் :* -பிறன் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகில் அறம்பொருள் ஆகியவற்றின் இயல்புகளை அறிந்தவர்களிடத்தில் இல்லை. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 எந்த நிலையிலும் பிறன்மனைவியை நாடாமல் இருப்பதே நன்மை தரும். பின் விளைவைப் பற்றிச் சிறிதும் சிந்தியாது பிறன்மனை நயத்தல் பெருமையைக் குலைத்து அழியாப் பழியை உண்டாக்கும். *இக்குறளுக்கு ஏற்புடைய சில* *இலக்கியப் பதிவுகள் :-* "மெல்லினல்லாள் தோள்சேர் " - *ஆத்திசூடி - ஒளவையார்.* பிற மகளிரை நயவாமல் உன் மனைவியோடு சேர்ந்து வாழ். தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப் பிறன்மனைக் கேகும் பேதையும் பதரே. - *நறுந்தொகை _* **அதிவீரராம பாண்டியர்.* * தன் மனைவியை தனியே வருத்தமுறச் செய்து, பிறன்மனைவியை விரும்பிச் செல்லும் அறிவிலி பதரேயாவான். "பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா " - *இன்னா நாற்பது - கபிலர்.* பிறன்மனைவியை இச்சித்துப் பார்க்கும் அறிவின்மை துன்பம் தருவதாகும். அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்று அச்சத்தோடு இந்நாற் பொருள். - *நாலடியார் -சமண* *முனிவர்கள்.* அறமும், புகழும், நட்பும், பெருமையும் ஆகிய இந்த நான்கும் பிறனுடைய மனைவியை விரும்புபவரை ஒருபோதும் சேராவாம். பிறன்மனைவியை விரும்பி நடப்பவரை பகையும் , பழியும், பாவமும், அச்சமுமே ஆகிய நான்கும் வந்து சேரும். இராமகாதை உணர்த்தும் முதல் நீதியே "பிறன்வரையாள் பெண்மை நயவாமை " வேண்டுமென்பதே. "இந்த இப்பிற விக்குஇரு மாதரைச் சிந்தையா லுந்தொடேன்" - *கம்பராமாயணம் .* ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லுகின்ற உயரிய வரிகள். திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை அருத்தம் என்றெண்ணி அறையில் புதைத்து பொருத்த மிலாத புளிமாங் கொம்பேறிக் கருத்தறியாதவர் காலற்ற வாறே. - *திருமந்திரம் - திருமூலர்.* அன்புக்குரிய மனையாளை வீட்டில் தனியே தவிக்க விட்டு பிறன்மனையை நினைக்கும் அறமற்ற செயல் எதனை ஒக்கும் எனில், வீட்டுத் தோட்டத்தில் காய்த்து முதிர்ந்த இன்சுவைப் பலாவை சுவைக்க விரும்பாமல் ஈச்சம் பழத்தைப் பறிக்கப் போய் முள்ளால் குத்தப்பட்டு துன்புறுவது போன்ற அறிவற்ற செயலை ஒக்கும். "கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்" - *பாரதியார்.* தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் தாமே தமியர் புகல்வேண்டா - தீமையோன் ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன் நீர்மிகின் இல்லை சிறை. _ . *பழமொழி நானூறு* *முன்றுறையரையனார்* . பழிச்சொல் எழுந்தால் அதனை எளிதாக மாற்ற முடியாது. நண்பனின் வீடாக இருப்பினும், உடையவன் இல்லாத போது தனியாகச் செல்வது பிறர் பழிக்க இடந்தருமாதலால் அது கூடாது. நீர்மிகின் இல்லை சிறை என்பது பழமொழி. வெள்ளம் மிகுந்து பெருகி வருமானால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு சிறையும் இல்லை. அது போல் ஊரிற் பெருகும் பழியையும் தடுக்க முடியாது. அறம் , பொருள் ஆகியவற்றின் இயல்புகளை அறிந்தவர்கள் பிறன்மனை நயத்தல் என்ற சிறுமையைச் செய்ய மாட்டார்கள். *பிறனில் விழையாமை.* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தன்னவளைக் கலங்கவிட்டு தனிமையிலே தவிக்கவிட்டு பிறன்மனை நோக்கின் பெரும்பழி வந்துசேரும், அற்பமாய் இச்சித்து அயல்மனை நோக்குவான் அறிவிலி யாவான் கற்றறிந்தாலும் கசடனே! *வள்ளுவத்தைப்* *போற்றுவோம்* *வள்ளுவமாய் வாழ்வோம்.* நன்றிகளுடன், சு.அமுதமணி கல்யாணசுந்தரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ( சென்னை), திருக்குறள் குழு . 💐💐💐🙏🙏🙏🙏💐💐💐

திருக்குறள் - எது நிலையானது ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம். விழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொண்ணு மாப்பிள்ளை எல்லோரும் அவரவர் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டார்கள். நீங்கள் மட்டும், அங்கேயே இருப்பீர்களா அல்லது நீங்களும் கிளம்பி விடுவீர்களா? அடடா, என்ன அருமையான அலங்காரம், சுவையான சாப்பாடு, நல்ல இசை, எத்தனையோ சொந்த பந்தம்...இவற்றை எல்லாம் எப்படி விட்டு விட்டுப் போவது என்று அங்கேயே இருப்பீர்களா அல்லது, வந்தமா, எல்லோரையும் பார்த்தோமா, மண மக்களை வாழ்த்தினோமா, மொய் எழுதினோமா, சாப்பிட்டோமோ , கிளம்பினோமா என்றுதானே இருப்பீர்களா? ஏன் அந்தக் கல்யாண மண்டபத்திலேயே இருக்க வேண்டியதுதானே. சுகமாகத்தானே இருந்தது. இருக்க மாட்டோம். ஏன் என்றால், அது நிரந்தரமான இடமல்ல. வந்த வேலை முடிந்தால் கிளம்பி விட வேண்டும். சுற்றுலாப் போகிறோம். புதிய இடம். அற்புதமான சூழ்நிலை. சுவையான உணவு. பெரிய கட்டிடங்கள், மலைகள், அருவி, கடற்கரை. அங்கேயே இருந்து விடுவோமா? அல்லது ஆயிரம் ஆனால் நம்ம வீடு மாதிரி ஆகுமா என்று கிளம்பி விடுவோமா? சுற்றுலா சென்ற இடம் எவ்வளவு இனிமையாக இருந்தாலும், அங்கிருந்து கிளம்பி விடுவோமல்லவா? ஏன் என்றால் அது நிரந்தரமான இடம் அல்ல. இல்லை இந்தக் கல்யாண மண்டபத்திலேயேதான் இருப்பேன் அல்லது இந்த சுற்றுலாத் தலத்திலேயேதான் இருப்பேன் என்று யாராவது அடம் பிடித்தால், அவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? ஏதோ கொஞ்சம் நட்டு கழண்ட கேஸ் என்றுதானே நினைப்பீர்கள். இந்த உலகில் உங்களிடம் நிரந்தரம் என்று உங்களுக்குச் சொன்னது யார்? இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? அல்லது இந்த உலகம் முடியும் வரை இருப்பீர்களா? இது உங்களின் நிரந்தர இடம் அல்ல. வந்தீர்கள், பார்த்தீர்கள், அனுபவித்தீர்கள், கிளம்ப வேண்டியதுதான். இல்லை, இங்கேயே இருப்பேன். அஃது எப்படி, அதுவும் இதுவும் ஒண்ணா, நான் இங்கேயே இருப்பேன், அது மட்டும் அல்ல, இந்தக் கல்யாண வீட்டுக்கு வந்தவர்கள் யாரும் போகக் கூடாது, எல்லோரும் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்லுவது யாரும் எங்கும் போகக் கூடாது என்று சொல்லுவீர்களா? அப்படிச் சொன்னால், அது மதியீனம் அல்லவா? பாடல் நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. பொருள் நில்லாத வற்றை = நிலை இல்லாதவற்றை நிலையின = நிலையானவை என்றுணரும் = என்று உணரும் புல்லறி வாண்மை = குறைந்த அறிவு, சிற்றறிவு கடை. = கீழ்மையானது. இந்த உலகத்தில் உங்கள் இடம் நிரந்தரமானது அல்ல. கொஞ்ச நாள் சுத்திப் பாத்துட்டுக் கிளம்பி விட வேண்டும். எல்லோரும்தான். இல்லை, நான் என்றென்றும் இங்கேயே இருப்பேன், என் கூட உள்ளவர்களும் இங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்லும் அறிவு - "கடை" அது மட்டும் அல்ல, எத்தனை நிலை இல்லாதவற்றை பிடித்துக் கொண்டு, அது நிலைக்க வேண்டும் பாடுபடுகிறீர்கள். இளமை நிற்குமா? எத்தனை டை அடித்தாலும், பௌடர் போட்டாலும், லிப் ஸ்டிக், facial, நகை, நட்டு என்று போட்டாலும், அது நிற்காது. நில்லாது ஓடி விடும். அதுக்கா இந்தப் பாடு? செல்வம். நிற்குமா? என்ன பாடு பட்டாலும், போகும் போது போய் விடும். வாழ் நாளை எல்லாம் அதற்காக செலவழிக்க வேண்டுமா? இந்த உடம்பு? எப்போது வேண்டுமானாலும் சரியும். எனவே தான் அதற்கு சரீரம் என்று பெயர். நிலை இல்லாதவற்றை , உங்களால் நிலைக்கப் பண்ண ஒரு காலும் முடியாது. முதலில் எது எல்லாம் நிலை இல்லாதது என்று அறிய வேண்டும். அஃது, அறிவின் முதல் படி. அரு. லெட்சுமணன் கோவை / சென்னை

#Christmas #Sticker @MSRI_StickerStore. Click To Download Now
#Christmas #Sticker @MSRI_StickerStore. Click To Download Now

பட்டாசு பண்டிகை வாழ்த்துகள் 💐

பட்டாசு பண்டிகை வாழ்த்துகள் 💐

13-10-2020 செவ்வாய் நாள் சிறப்புகள் (பக்தி) இராசிபலன்👇🏻Click on https://youtu.be/0YYbP5npoM4

பாடகர் S.B.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள் தொகுப்பு ☟ (Best Quality Tamil Audio Jukeboxes) ☛ S.P.B Top 100 Songs Collection ☟ h
பாடகர் S.B.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள் தொகுப்பு ☟ (Best Quality Tamil Audio Jukeboxes) ☛ S.P.B Top 100 Songs Collection ☟ https://t.me/MSRI_SpeakerBox/2125 ☛ S.P.B Superhit 46 Songs Collection ☟ https://t.me/MSRI_SpeakerBox/252 ☛ S.P.B & A.R.Rahman 24 Songs ☟ https://t.me/MSRI_SpeakerBox/1139 ☛ S.P.B & Deva Musical 34 Songs ☟ https://t.me/MSRI_SpeakerBox/891 ☛ S.P.B & Deva 38 Duet Songs ☟ https://t.me/MSRI_SpeakerBox/1810 ☛ S.P.B + Chitra & Ilayaraja 34 Songs ☟ https://t.me/MSRI_SpeakerBox/1685 ☛ S.P.B & Ilayaraja 28 Sad Songs ☟ https://t.me/MSRI_SpeakerBox/2289 🔊 M SRI Speaker Box 🔊

Music Director Yuvan Shankar Raja Musical 60 Superhit Love Tamil Songs Collection👇7+ Hours Nonstop https://t.me/MSRI_SpeakerBox/36 👆Download Link to Telegram 👆

30-08-2020 ஞாயிறு தினச் சிறப்புகள் ஆன்மீக தகவல் பிரதோஷ விரத வழிபாடு https://youtu.be/yPBe2udlHfw ☝🏻 YouTube video 📹 👆🏻

28/08/2020 சனிக்கிழமை இன்றைய தினச் சிறப்புகள் ஏகாதசி விரதம் பற்றிய ஆன்மீக தகவல்கள் https://youtu.be/zvl575CwEBo ☛ YouTube Video 📹 👆

┈┉━​ ❁ 🌸🌴 🇮🇳 🌴🌸 ❁ ━┉┈​ 🙈 🙉 🙊 ⪢┈ᗘ ✵ M SRI Editz ✵ ᗛ┈⪡ ♡ கவிதைச் சாரல் ♡ ≼ விடியலை நோக்கி ≽ நள்ளிரவில் சுதந்திரம் பெற்
┈┉━​ ❁ 🌸🌴 🇮🇳 🌴🌸 ❁ ━┉┈​ 🙈 🙉 🙊 ⪢┈ᗘ ✵ M SRI Editz ✵ ᗛ┈⪡ ♡ கவிதைச் சாரல் ♡ ≼ விடியலை நோக்கி ≽ நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்; விடியலை நோக்கி செல்கின்றோம்; வேகம் கொஞ்சம் குறைவுதான்; தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்; ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை; தயங்கி நிற்கவும் போவதில்லை; பயணம் என்றும் தொடரும்...! ☟ Instagram Follow us ☟ https://www.instagram.com/msrieditz/ ​┈┉━​ ❁ 🌹🌷💐🌷🌹 ❁ ━┉┈​

Top 100 Murugar Bhakthy Songs https://t.me/MSRI_SpeakerBox/1128 👆Telegram Download Link 🔗
Top 100 Murugar Bhakthy Songs https://t.me/MSRI_SpeakerBox/1128 👆Telegram Download Link 🔗

Happy Krishna Jayanthy 💐
Happy Krishna Jayanthy 💐

https://youtu.be/nQYqBZTs0n8 இதன் தொடர்ச்சியை காண👆