பொது மின் நூலகம்
Open in Telegram
இந்த Telegram சேனலில் புதிய / பழைய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் 📚 pdf வடிவில் கிடைக்கும். புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த சேனலின் நோக்கம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
Show more767
Subscribers
No data24 hours
No data7 days
+130 days
Posts Archive
நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!
தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் எந்தவித நோய்களும் அண்டாது என சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். நம்முடைய உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது நெல்லிக்கனி. தினமும் தொடர்ந்து நெல்லிக்காயைச் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒரு செயலாக மாறும். அப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காய் தண்ணீரை குடிக்கலாம். நெல்லிக்காய் தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உடலில் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த நூலில் பார்க்கலாம்.
நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!
நெல்லிக்காய் தண்ணீர் செய்முறை:
நெல்லிக்காயை துண்டு துண்டாக வெட்டி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அந்த நீரை குடிக்கலாம். இந்த நெல்லிக்காய் தண்ணீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம். மற்ற நேரங்களில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவு உண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம்.
உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
நூலாசிரியர் : என். சி. ஸ்ரீதரன்
பதிப்பகம் : நிலாச்சாரல் லிமிடட்
மொழி : தமிழ்
வருடம் : 2014
நூல் வகை : கல்வி, குழந்தை உளவியல்
உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
நூலாசிரியர் : என். சி. ஸ்ரீதரன்
பதிப்பகம் : நிலாச்சாரல் லிமிடட்
மொழி : தமிழ்
வருடம் : 2014
நூல் வகை : கல்வி, குழந்தை உளவியல்
குறிப்பு:
‘குழந்தைகளுக்குள் நல்ல திறமைகளையும் புத்திசாலித்தனத்தையும் எப்படி வளர்ப்பது?’ என்பதுதான் பலருக்கு ஒரு புதிராகவே இருக்கிறது. இந்தப் புதிருக்கு ஒரு பதில் கொடுக்கத்தான் இந்தப் புத்தகம்.
கற்றலில் மிகுந்த சோதனைகளைச் சந்தித்தவர் ஐன்ஸ்டீன். அவரால் எதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத கற்றல் குறைபாட்டினைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஐன்ஸ்டீன் மாபெரும் விஞ்ஞானியாக, உயரிய விருதான நோபல் பரிசினை வெல்லும் அளவிற்கு மாற்றமடைந்ததென்பது அசாதாரண விஷயம். பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கல்வியில் அவர்கள் மேன்மை பெறுவதற்கு சிறந்த முறையில் வழிகாட்ட உதவும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலிலிருந்து சில வரிகள்...
குழந்தைகளுக்கு ஒட்டுமொத்தமான அறிவு வளர்ச்சி இருக்க வேண்டுமென்றால், அவர்கள் ஓரளவு சுதந்திரமான சூழ்நிலையில் வளர்க்கப்பட வேண்டும், 'அங்கு ஓடாதே, இங்கு குதிக்காதே, சும்மா உட்கார்ந்திரு’ என்றெல்லாம் தேவையில்லாத கட்டுப்பாட்டோடு வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிக் கொண்டு வரமுடியாது.
நம்முடைய குழந்தைகள் படித்ததை நன்றாக மனதில் பதித்துத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றால், பகல் முழுவதும் படித்தும் விளையாடியும் நேரத்தைக் கழிக்க வேண்டும். இரவு நன்றாகத் தூங்க வேண்டும்.
மூளையில் இருக்கும் கோடிக் கணக்கான பாகங்களில் 'நியூரான்கள்' என்று சொல்லப்படும் திசுக்கள் மூலமாக கற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான பரிசோதனையை நடத்தினார்கள். பள்ளிக்கூடத்தையும் அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்ட குழந்தைகளின் மூளையையும், அவைகளை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளாத குழந்தைகளின் மூளையையும் ஆராய்ந்து பார்த்தார்கள். முதலில் சொல்லப்பட்ட குழந்தைகளின் மூளையில் நியூரான்களின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தைகள் வளரும் சூழ்நிலையில் மன இறுக்கமும் அழுத்தமும் அதிகமாக இருந்தால், நச்சுத்தன்மை நிறைந்த Hormoneகள் சுரந்து நாளடைவில் மூளையின் இயக்கம் பாதிக்கப்படும். இதனால் அவர்களுடைய முழுமையான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டிய சக்தி அமையப் பெறமாட்டார்கள். எனவே, இனிமையான இசை, மனதிற்குச் சாந்தியைக் கொடுக்கும் வார்த்தைகள் மற்றும் நகைச்சுவை கதைகளோடு இருக்கும் சூழலை உண்டு பண்ணவேண்டும்.
நன்றாகப் படிக்கும் குழந்தைகளுக்கும், சுமாராகப் படிக்கும் குழந்தைகளுக்கும் உள்ள ஒரு வேறுபாடு, வளரும் சூழ்நிலைதான். ஒரு குழந்தைக்கு முதல் ஆசான் பெற்றோர்கள்தான். இன்னும் சொல்லப் போனால் ஒரு குழந்தையின் முதல் டீச்சர் அம்மாதான்.
நம் புத்திக்கூர்மை, அறிவுக்கூர்மை போன்றவைகள் நாம் வளரும் சூழ்நிலையைப் பொருத்துதான் அமையும். ஒரு குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அந்தக் குழந்தை அதற்கேற்ற ஒரு சூழ்நிலையில் வளர்ந்தது என்பதுதான். அதே போன்று அதிக புத்திக் கூர்மை இல்லாத ஒரு குழந்தை இருக்கிறது என்றால் இதற்கும் அந்தக் குழந்தை வளர்ந்த சூழ்நிலைதான் காரணம்.
அறிவு என்பது ஒரே நாளில் வருவது அல்ல. நம்முடைய உடலில் தசைகளை சீரான உடற்பயிற்சியால்தான் பெற முடியும். அதேபோல நல்ல பொது அறிவை முயற்சியால்தான் அடைய முடியும்.
இந்தப் புத்தகத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1. உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
2. புத்திசாலித்தனத்தின் ரகசியம்
3. குழந்தைகளை யோசனை செய்ய விடுங்கள்
4. உங்கள் குழந்தை ஓர் இளம் ஆராய்ச்சியாளர்!
5. மூளை என்ற ஓர் அதிசயம்
6. 'படிப்பது' வேறு ‘புரிந்து கொள்வது வேறு'
7. மூளையைத் “தயார் செய்யுங்கள்”
8. சத்துணவின் அவசியம்
9. காலத்திற்கேற்ற விளையாட்டுகள்
10. தேவை: தொடர் பயிற்சிகள்
11. கவனமின்மை எதனால் ஏற்படுகிறது?
12. கவனம் - என்பது என்ன?
13. மூளையைப்பற்றிய மற்றுமொரு பரிமாணம்
14. அச்சுறுத்தல் தேவையில்லை!
15. தேவை: தோல்வியையும் ஏற்கும் முதிர்ச்சி
16. இதோ சில பயிற்சிகள்...
17. படிப்பு: அறிவைத் தூண்டும் இனிய தொடர் அனுபவம்
18. குழந்தைகளுக்குத் தேவை நல்ல சூழ்நிலை
19. படங்கள் சொல்லும் பாடங்கள்
20. குழந்தைகளால் சுயமாகச் சிந்திக்க முடியும்
21. நல்ல பொது அறிவை முயற்சியால் அடையலாம்!
22. தேவை நல்ல சூழ்நிலைதான்!
23. ஆற்றல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
24. சிந்தனை செய்ய ஒரு தனி அறை
25. வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லிக் கொடுங்கள்!
26. சான்றோனாக்குதல் உங்கள் கையில்
27. புதைந்து கிடக்கும் புதையல்கள்!
உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
நூலாசிரியர் : என். சி. ஸ்ரீதரன்
நூல் வகை : கல்வி, குழந்தை உளவியல்
நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)
நூலாசிரியர் : சேவியர்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
மொழி : தமிழ்
வருடம் : 2012
நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்
பல மேடைகளில் பேசினார், இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும் பற்றிப் பேசுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. Nick இன் புகழ் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்து இன்று உலகெங்கும் பரவி விட்டது. 2012 இல் Kanae Miyahara என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுற்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.
இன்று உலகெங்கும் பலரால் விரும்பப்படும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்றால் அது Nick தான். ஆனால் தனது இன்றைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது 8 வயதில் சக மாணவி கூறிய "நீயும் அழகானவன்தான் Nick" என்ற வார்த்தைகள்தான் என இவர் அடிக்கடி குறிப்பிடுவார்.
.
வாழ்வின் வெற்றிக்கு Nick Vujicic கூறும் டாப் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்...
1. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.
2. "நீங்கள் எவ்விதத்திலும் சிறந்தவரல்ல, உங்களால் எதுவும் முடியாது" இவை இரண்டுமே உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்கும் மிகப்பெரும் பொய்கள்.
3. இறந்தகால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்கவைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.
4. முயற்சிசெய்யுங்கள். முயற்சி வாழ்வின் ஒரு பகுதியல்ல. முயற்சியே வாழ்க்கை. பயத்திற்கும் கனவிற்கு இடையிலேயே உங்கள் வாழ்க்கை இருக்கின்றது.
5. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது பக்கவாதத்தைவிட மோசமாக அவனை முடக்கிவிடும்.
6. மாற்றங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.
7. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள். மாறாக திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.
8. எனது நம்பிக்கையை இழக்காதவரை நான் ஊனமுற்றவனாகமாட்டேன்.
NICK VUJICIC வாழ்கை பயணம்
உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வலி நிறைந்த வாழ்க்கை வரலாறு.
உலகில் பலநூறு தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் இருந்தாலும் அவர்களில் Nick Vujicic தனித்துவமானவர். பல உலகத் தலைவர்களிற்கும் தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர். பல்லாயிரம் மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்தவர்.
இந்திய உட்பட உலகின் முக்கால்வாசிக்கும் அதிகமான நாடுகளில் உரையாற்றியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு புகழிற்குச் சொந்தமான Nick இன் இறந்தகால வாழ்க்கை மிக வேதனை மிகுந்ததாகவே அமைந்தது. தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள்.
1982 இல் ஆஸ்ட்ரேலியாவின் மெல்பன் நகரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அதன் தந்தை வாந்தியெடுத்துவிட்டார். தாய் "இது என் குழந்தையே அல்ல.." எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அக்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகளும், இரண்டு கால்களும் அற்ற நிலையில் வெறும் தலையும், உடலும் கொண்ட உருவமாகப் பிறந்தது.
சில மணி நேரங்களில் மனதை அமைதிப்படுத்திக்கொண்ட அத் தம்பதியினர் கடவுள் தங்களுக்களித்த அக்குழந்தையை மனமாற ஏற்றுக்கொண்டனர். மற்ற குழந்தைகள் போலவே இவனையும் வளர்க்கவேண்டும் என முடிவு செய்தனர். Nicholas James Vujicic என பெயர் சூட்டி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தனர்.
பிற்காலத்தில் அந்தப் பெயர் சுருக்கமாக Nick Vujicic என மாறிவிட்டது.
அக்காலத்தில் Nick போன்ற குறையுள்ள குழந்தைகள் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்பது தடை செய்யப்பட்டிருந்தது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கென தனியான பாடசாலைகள் இயங்கிவந்தன. இருப்பினும் Nick பள்ளிப்பருவத்தை அடைந்தபோது இந்த சட்டம் மாற்றப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஒன்றாக கல்விகற்கமுடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
Nick தனது குறையை உணரக்கூடாது என விரும்பிய அவரது பெற்றோர்கள் சாதாரண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையிலேயே Nick ஐயும் சேர்த்தனர். அந்த மாநிலத்திலேயே சாதாரண பள்ளியில் சேர்ந்த குறைபாடுள்ள முதல் மாணவர் Nick தான்.
ஆனால் நடந்தது மிக்க கொடுமையானது. Nick இனை பள்ளியிலுள்ள சக மாணவர்களால் ஏற்கமுடியவில்லை. அவரை ஒரு தீண்டத்தகாத பொருளாக அனைவரும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அவருடன் யாரும் பேசமாட்டார்கள். எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து பகிடிவதை செய்வார்கள். ஏன் அடிக்கவும் செய்தார்கள். இது Nick. இன் 6 வயதிலேயே நடந்துவிட்டது. இதனால் சிறுவயதிலேயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.
தனது 8 வயதில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் பாடசாலையில் அமர்ந்திருந்தார் Nick. சக மாணவி ஒருவர் சோகத்தில் அமர்ந்திருந்த அவரிடம் வந்து "Nick நீயும் அழகானவன்தான் ஆனால் உன் அழகை மற்றவர்களால் உணர முடியாது, ஆனால் அதை நான் உணர்கின்றேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கணம் இவனினுள் தன்னம்பிக்கை பிறந்தது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
காலங்கள் கடந்தன. இருப்பினும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நச்சு வார்த்தைகளால் மனமுடைந்துபோனார் Nick. தனது 10 வயதில் தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் எப்படியோ பெற்றோர்கள் இவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் தப்பித்தாலும் 2 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். கண் திறந்தவர் தன் செயலால் தனது தாய் படும் வேதனையைக் கண்டு மனமுடைந்துபோனார். இனி வாழ்க்கையில் தற்கொலை பற்றி எண்ணப்போவதில்லை என முடிவெடுத்தார். சாதாரண ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வானோ அதேபோலவே தானும் வாழவேண்டும் என வைராக்கியம் கொண்டார்.
இரு கைகள், இரு கால்கள் இல்லாமல் நீச்சல் கற்றுக்கொண்டார், உதைப் பந்து விளையாடினார், கோல்ப் விளையாடினார், இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார், நீர்ச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டார் ஏன் கணனியில் மிக வேகமாக type செய்யவும் கற்றுக்கொண்டார். இவை அனைத்தையும் தனது கால் இருக்கவேண்டிய இடத்தில் இருந்த சிறு பாதத் துண்டை வைத்து செய்தார்.
Nick அதிகம் கடவுள் நம்பிக்கை கொண்டவர். தனது இளமைப் பருவம்வரை தனக்கு எப்படியாவது கைகளும் கால்களும் முளைத்துவிடவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் பத்திரிக்கையில் மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் படிக்க நேரிட்டது. அப்போதே தன்னைவிட மோசமான வாழ்க்கை கொண்ட பலர் இருப்பதை அறிந்தார். இவ்வாறான மனிதர்களிற்கு உதவி செய்வதே தான் படைக்கப்பட்ட நோக்கம் என உணர்ந்தார் Nick. இதுவே Nick இனை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாற்றியது.
நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)
நூலாசிரியர் : சேவியர்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
மொழி : தமிழ்
வருடம் : 2012
நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்
குறிப்பு:
தமிழின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் வாயிச்சஸ் எனும் தன்னம்பிக்கை மனிதரின் அசாதாரண பணிகளைப் பற்றிய நூல் இது.
கைகளும், கால்களும் இல்லாத ஒரு மனிதன் எப்படி உலக நாடுகள் அனைத்திலும் பயணித்து கோடிக்கணக்கான மக்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்ப முடியும்? அதற்குக் காரணம் என்ன? அவருடைய உந்து சக்தி என்ன? சிறுவயதில் தற்கொலை செய்து கொள்ள கடுமையாய் முயன்ற அவர் எப்படி பிற்காலத்தில் பல ஆயிரம் மக்களை தற்கொலை சிந்தனையிலிருந்து மாற்றினார்?
நிக்கின் வாழ்க்கை நமக்கெல்லாம் தரப்பட்டிருக்கும் வாழ்க்கைப் பாடம். ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதை நோக்கிய பயணத்தை நம்பிக்கையோடு தொடரவேண்டும். அந்த நம்பிக்கைக்கு இறைவனில் சரணடையும் மனநிலையும் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது அவருடைய வாழ்க்கை.
தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள். சின்னச் சின்ன குறைபாடுகளுக்கே முடங்கிவிடுகின்ற நமக்கு கைகள், கால்கள் இல்லாத நிக்கின் வாழ்க்கை சவால் விடுக்கிறது. எதையும் தாண்டி வெற்றிகளைத் தொடலாம், நம்பிக்கை இருந்தால் போதும் என்பதை அவருடைய வாழ்க்கை சொல்லிச் செல்கிறது. நாற்பது நாடுகள், நாற்பது இலட்சம் மக்கள் என அவருடைய பயணம் விஸ்தாரமானது. இறைவன் மனது வைத்தால் இன்னும் பல கோடி மக்களைத் தொடுவார் என்பதில் ஐயமில்லை.
அவருடைய வீடியோக்கள் இன்றைக்கு பெரிய பெரிய நிறுவனங்களில் மக்களை உற்சாகப்படுத்தப் பயன்படுகிறது. மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைத் துடைத்தெறிய உதவுகிறது. தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என அவர்களைப் பக்குவப்படுத்துகிறது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதைப் போதிக்கிறது. விடா முயற்சி எவ்வளவு முக்கியமானது என்பதை உரக்கச் சொல்கிறது!
இறைவனை நேசி, மனிதனை நேசி எனும் இரட்டை சிந்தனையில் அவருடைய வாழ்க்கை கட்டமைக்கபட்டுள்ளது!
நிக்கின் வாழ்க்கை நமக்கான பாடம்! வாழ்க்கை அழகானது, அதை வாழத் தெரிந்தவர்களுக்கு! என்பதே நிக் உங்களுக்கும் எனக்கும் சொல்லும் புதிய தத்துவம்!
நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)
நூலாசிரியர் : சேவியர்
நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்
உடலோடு பேசுவோம் (நோய் எனப்படுவன எல்லாம் நோயல்ல!)
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : ஆரோக்கியம், மருத்துவம், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
பக்கங்கள் : 130
உடலோடு பேசுவோம் (நோய் எனப்படுவன எல்லாம் நோயல்ல!)
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : ஆரோக்கியம், மருத்துவம், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
பக்கங்கள் : 130
குறிப்பு:
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நோயற்ற வாழ்க்கை மட்டுமல்ல. மகிழ்வான மனநிலை, சுத்தமான சுற்றுப்புறம், அனைவரின் நலன் காக்கும் சமூகம் இவை அனைத்தும் ஒன்றிணைந்த நிலைதான் அது. ஆனால் உடல் ஆரோக்கியம் கெடும்போது, பிற எதுவும் பயனில்லாமல் போகிறது. அதனால்தான் நம் உடலுக்குக் காய்ச்சல், சளி என்று சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதற்காகக் கவலைப்படுகிறோம். உடனடியாக வைத்தியம் செய்துகொள்கிறோமல். நாம் கவனிக்கத் தவறும் விசயம் ஒன்றுண்டு. நம் மனக் கலக்கத்தை குறைக்கக்கூடிய மருத்துவச் செலவை மிச்சப்படுத்தக்கூடிய, நிறைவான வாழ்க்கைக்கு ஆதாரமான ஒன்று அது. எது நோய், எது நோயல்ல என்ற வித்தியாசத்தை அறியும் கலைதான் அது.
இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன. மூளைக்கு சமிக்ஞைகள் எப்படி கடத்தப்படுகின்றன போன்ற நுணுக்கமான மருத்துவத் தகவல்களை அறிந்திருப்பவர்களுக்குக் கூட, தங்கள் உடல் என்ன பேசுகிறது என்பது புரிவதில்லை. ஏனெனில், நாம் எல்லாவற்றையும் பகுதி பகுதியாக, இயந்திரத்தனமாக அறிந்திருக்கிறோமே தவிர, உடல் என்னும் முழுமையான அற்புதத்தைப் புரிந்துகொள்ள முயல்வதேயில்லை. ஆனாலும் உடல் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றி, தன் தேவையைப் பற்றி, ஆபத்துகள் பற்றி, நீங்கள் கேட்காவிட்டாலும் தொடர்ந்து உங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாமோ, உடலை உற்றுக் கவனிக்காமல் உணர்வின்றி இருக்கிறோம். காய்ச்சல், வாந்தி, வலிப்பு, வலி, வயிற்றுப்போக்கு என்று உடல் தன் நிலையை வெளிப்படுத்தும்போதெல்லாம் அதை நோயென்று கருதி மருத்துவரிடம் விரைகிறோம், பணத்தை இறைக்கிறோம். எனினும், மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கிறது. உடல் பேசுவதை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால், நோயைக்கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அதற்கு வழிகாட்டும் ஒரு சிறு முயற்சியின் வெளிப்பாடே இந்நூல். அறிவே பலம்.
உலகில் உள்ள எல்லா மருத்துவங்களும் எதிர்ப்பு சக்தி குறைபாட்டையே நோய்களாகக் கூறுகின்றன. நம் உடலில் தோன்றும் எல்லா விதமான தொந்தரவுகளுக்கும் நம்முடைய எதிர்ப்பு சக்தியை நாம் சரியாகப் பராமரிக்காததே காரணமாக இருக்கிறது.
நம் உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியை நாம் பராமரிக்காத போது, சின்னச் சின்ன தொந்தரவுகள் உடலில் தோன்றுகின்றன. அப்போதும் நாம் உடலைப் பற்றிய அக்கறையின்றி நம் நடவடிக்கைகள் மூலம் மேலும் எதிர்ப்பு சக்தியை பாதிப்புக்குள்ளாக்குகிறோம். சிறிய தொந்தரவுகளை பெரிய நோய்களாக மாற்றுவதற்காக நாம் உதவி செய்கிறோம். பராமரிக்கப்படாத எதிர்ப்பு சக்தி, பயப்படுகிற மனம் என்ற கூட்டு நம் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கிறது.
இன்றைய உலகில் நோய்களுக்கான மிகப்பெரிய காரணமாகக் கூறப்படுவது கிருமித் தாக்குதல்தான். உலகையே அச்சுறுத்துவதாக நம்பப்படும் வைரஸ்கள் பயப்படும் ஒரே விஷயம் என்ன தெரியுமா? அதுதான் நம் எதிர்ப்பு சக்தி. உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ள நபர் எவ்வளவு தீவிரமான கிருமித் தாக்குதலில் இருந்தும் தப்பி விட முடியும் என்று கூறுகிறது நுண்ணியிரியல்.
மிக நுணுக்கமான கட்டுமானத்தைக் கொண்ட உடலின் மொழியைப் புரிந்து கொள்வது ஒரு கலை. அந்த கலையைக் கற்றவர்களை நோய்கள் அண்டாது. நோயற்ற வாழ்க்கை வாழ சற்று நேரம் உடல் பேசும் மொழியைக் கேட்கத் தயாராவோமா?
உடலோடு பேசுவோம் (நோய் எனப்படுவன எல்லாம் நோயல்ல!)
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : ஆரோக்கியம், மருத்துவம், விழிப்புணர்வு
Acupuncture Points Picture Book
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : புத்துயிர் பதிப்பகம்
மொழி : ஆங்கிலம்
பக்கங்கள் : 86
Acupuncture Points Picture Book
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : புத்துயிர் பதிப்பகம்
மொழி : ஆங்கிலம்
பக்கங்கள் : 86
8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 96
8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 96
குறிப்பு:
இந்நூலாசிரியர் டாக்டர் P. சிவஞானம் அவர்கள் SBI வங்கியிலிருந்து பணி முடிந்த பிறகும், அக்குபஞ்சரில் பல புள்ளிகள் பயன்படுத்துவதற்கு பதிலாக குறிப்பிட்ட 12 புள்ளிகளை பயன்படுத்தி எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என்பதை ஆராய்ந்து அதை நமக்கு நூலாக கொடுத்துள்ளார்.
நமது உடலில் உள்ள உயிர் சக்தி நம் உடல் முழுவதும் தங்கு தடையின்றி தொடர்ந்து குறிப்பிட்ட பாதைகளில் சுற்றி வருகிறது. இந்த சக்தியை (Qi) என அழைக்கின்றோம். இந்த சக்தி பாதையை மெரிடியன் அல்லது சேனல்கள் அல்லது வெஸ்ஸல்ஸ் என அழைக்கின்றோம். நமது உடலில் உள்ள பொதுவான சக்தி பாதைகள் அதாவது மெரிடியன்கள் மொத்தம் 14. இந்த பொதுவான 14 மெரிடியன்கள் தவிர 8 அற்புதமான மெரிடியன்கள் உள்ளன. அவைகள் 8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள் எனப்படும். நமது உடலில் சக்திகளை அற்புதமாக செலுத்தும் இவைகளுக்கு சமநிலைப்படுத்தும் மெரிடியன்கள் என்றும் பெயர்.
இந்த 8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியங்களின் மூலம் சிகிச்சை செய்யும்போது அதன் சக்தி பாதைகள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் குறிப்பாக நாளமில்லா சுரப்பீகள், பிட்யூட்டரி, அட்ரீனல் புறனி, தைராய்டு, ஓவரீஸ், டெஸ்டீஸ் உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு சக்தியை உடலின் அனைத்து பாகங்களுக்கும் செலுத்துகிறது... இந்த 8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்களின் சக்தி பாதைகள் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் மிக ஆழமாக செல்வதால், உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. நீண்ட நாள் நோய்களும் , மற்றும் மன நோய்களும் உடனடியாக குணமாகிறது.
இந்த எட்டு எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்களும் சிறுநீரகத்தில் சேர்த்துவைத்துள்ள சக்தியை குழந்தை பிறப்பிற்கு முந்தைய நிலைக்கு கருவில் வலுவூட்டுகிறது. ஆகவே குழந்தை உருவாக, நல்ல வளர்ச்சி பெற, முழு வளர்ச்சியுடன் குழந்தை பிறக்க உதவுகிறது. இது குழந்தைக்கு இரத்தம், நீர்ச்சத்து வழியாக சக்தியை கொடுத்து உதவுகிறது. எலும்பு உள்ளே உள்ள மஜ்ஜை மற்றும் மூளையை வளப்படுத்துகிறது. இந்த எட்டு எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள் உடலில் யின் சக்தி மற்றும் யாங்க் சக்தியை சமநிலைப்படுத்தி உடலை, மனதை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த எட்டு எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள் மூலம் செய்யப்படும் சிகிச்சையால் உடல்ரீதியான, மனரீதியான நோய்கள், குறைபாடுகள், மிக விரைவாகவும் நிரந்தரமாகவும், யின் யாங்க் சம நிலைப்படுத்தப்பட்டு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கிறது. இதனால் இதை அற்புதமான மெரிடியன்கள், அதிசயமான மெரிடியன்கள், விரிவாக செயல்படும் மெரிடியன்கள், மன நோய் தீர்க்கும் மெரிடியன்கள், சிறப்பு மெரிடியன்கள், சமநிலைப் படுத்தும் மெரிடியன்கள் என்று அக்குபங்க்சர் மருத்துவர்கள் பாராட்டுகிறார்கள்.
இந்த எக்ஸ்ட்ராடினரி மெரிடியன் மருத்துவம் அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஒரு பொக்கிஷம்.
8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 96
135 முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 84
135 முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 84
குறிப்பு:
“வணங்கும் கரங்களை விட குணமாக்கும் கரங்களே புனிதமானது”. அதிலும் பக்கவிளைவுகள் அற்ற அக்குபஞ்சர் மருத்துவம் செய்வது அதை விட மகத்துவமானது. அதை கற்றுக் கொள்ள உதவும் நூல்களில் மிகவும் அவசியமானது இந்நூல். டாக்டர் P. சிவஞானம் அவர்கள் தெளிவாக ஒவ்வொரு புள்ளிகளின் இருப்பிடம் மற்றும் தீரும் நோய்களை எழுதியுள்ள விதம் மிகவும் அருமை.
நமது உடலில் ஆயிரக்கனக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. அவைகளில் 361 புள்ளிகள் மட்டும் 14 சிறப்பு பாதைகளில் உள்ளன. மற்றவைகள் பாதைகளுக்கு அப்பால் உள்ளது. அந்த பாதைகள் உடலில் கைகளிலும், கால்களிலும், மற்றும் உடலின் முன் மத்திய கோட்டிலும், பின் மத்திய கோட்டிலும் அமைந்துள்ளன. நாம் சிகிச்சையின் போது 361 புள்ளிகளையும் உபயோகப் படுத்துவதில்லை. அவற்றில் முக்கியமான நல்ல பலன் தரக்கூடிய புள்ளிகள் 135. அந்த புள்ளிகள் பற்றிய முழு விபரம் அதாவது புள்ளி இருக்கும் இடம், தீரும் நோய்கள், ஊசி செலுத்தும் முறை தனித்தனியாக படங்களுடன் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
