Prophetic Words
Open in Telegram
403
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Data loading in progress...
Similar Channels
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
March '24
March '240
in 0 channels
February '24
+403
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 06 March | 0 | |||
| 05 March | 0 | |||
| 04 March | 0 | |||
| 03 March | 0 | |||
| 02 March | 0 | |||
| 01 March | 0 |
Channel Posts
| 2 | ஒருவன் அடிமைத்தனத்தின் கட்டுகளில் தொடர்ந்து சிக்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மூன்று மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. அவற்றினை அறிந்து அதற்காக ஜெபித்தாலே போதும். ஓரளவு பாவ அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர முடியும். சரி அந்த மிக முக்கியமான காரணங்கள் என்னென்ன என்பதனை அரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://www.pwmi.in/2024/02/free%20from%20sin.html | 178 |
| 3 | *வேதாகமம் எழுதும் தேர்வு-2024*
*கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…*
இந்த வருடம் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மிகக் கவனமாக வாசித்த பின்பு எழுதவும். ஏனென்றால் விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும். தேர்வுக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுல்ளது.
*தேர்வு எழுதுவதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள்:*
*மிக முக்கியமான விதிகள் :*
1.இது வேதாகமம் எழுதும் தேர்வு. கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து அப்படியே சொந்தக் கையால் எழுதவேண்டும். நாங்கள் எந்த கேள்வித்தாளும் அனுப்பமாட்டோம். இந்த தேர்வினை கண்டிப்பாக Long Size Note- ல் தான் எழுதவேண்டும். உங்கள் விருப்பப்படி Ruled அல்லது Unruled நோட்டில் எழுதலாம். Paper-ல் எழுதியிருந்தால் Reject செய்யப்படும். Paper-ல் எழுதி Long Size Note போல் Binding Or Spiral Binding செய்து அனுப்பலாம். அது ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு நோட்டில் எழுதி முடித்துவிட்டால், தொடர்ச்சியாக மற்றொரு நோட்டில் எழுத தொடங்கலாம்.
2. முழுவதும் நீலம்(Blue) மற்றும் கருப்பு(Black) நிற பேனாவைக்கொண்டே எழுத வேண்டும். அதிலும் முதல் வசனம் கருப்பு நிறத்திலும் (Black) இரண்டாவது வசனம் நீல (Blue) நிறத்திலுமாக மாறி மாறி எழுத வேண்டும். ஒரு அதிகாரத்தின் (Chapter) கடைசி வசனம் எந்த நிறத்தில் முடிகின்றதோ அதற்கு மாற்று (alternate) நிறத்தில்தான் அடுத்த அதிகாரத்தின் முதல் வசனம் எழுதியிருக்க வேண்டும். அதேபோல் ஒரு புத்தகத்தின் (Book) கடைசி வசனம் எந்த நிறத்தில் முடிகின்றதோ அதற்கு மாற்று (alternate) நிறத்தில்தான் அடுத்த புத்தகத்தின் முதல் வசனம் எழுத வேண்டும். மேலும், தலைப்பை சிவப்பு நிற பேனாவைக்கொண்டே எழுத வேண்டும். உதாரனமாக ஏசாயா என்பதனையும் அதிகாரம் 1 என்பதனையும் சிவப்பு நிறத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுதப்படாமல் இருக்கும் நோட் Reject செய்யப்படும்.
3. உங்கள் விருப்பத்தின்படி எந்த பேனாவை (Ball point or Ink Pen or Gel pen) பயன்படுத்தியும் எழுதலாம். பென்சிலைக் (Pencil) கொண்டு எழுதக்கூடாது. எழுதியிருந்தால் உங்கள் நோட் எங்களால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.
4.தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். ஆங்கிலத்தில் எழுதினால் எந்த Version என்பதனை குறிப்பிட வேண்டும்.(Ex: NIV, NKJV, KJV & etc) எந்த Version என்பதனை குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் நோட் எங்களால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.
5.அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக பிழையின்றி எழுதியிருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருந்தால் கண்டிப்பாக மதிப்பீடு செய்யும் போது Reject செய்யப்படும். ஏதாவது பிழை ஏற்பட்டால் அதை Correction Pen-ஐ பயன்படுத்தி(Whitener) அழித்துவிட்டு சரியாக மறுபடியும் எழுதலாம் அல்லது அந்த Paper –ஐ கிழித்துவிட்டு அடுத்த பக்கத்தில் எழுதலாம்.
6. எந்த வசனத்தையும் மற்றும் எந்த அதிகாரத்தையும் விடாமல் கண்டிப்பாக எல்லா வசனங்களையும் எழுத வேண்டும். (மொத்த வசனங்கள் : 2776) எந்த ஒரு வசனத்தையாவது அல்லது அதிகாரத்தையாவது எழுதாமல் விட்டிருந்தாலும் கண்டிப்பாக Reject செய்யப்படும்.
7.நிறுத்தக்குறிகளான (Punctuation) முற்றுப்புள்ளி (Full stop), முக்காற்புள்ளி (Colon) அரைப்புள்ளி (Semicolon), காற்புள்ளி (Comma), உணர்ச்சிக்குறி (Exclamation point), வினாக்குறி (Question mark), ஒற்றைமேற்கொள்குறி (Apostrophe), போன்றவை பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல் சரியாக இட வேண்டும். Random ஆக check பண்ணும்போது இதில் தவறு கண்டுப்பிடிக்கப்பட்டால் Reject செய்யப்படும்.
8. துவக்கம் முதல் இறுதி வரை ஒரே Hand Writing-ல் இருக்க வேண்டும். வேறு நபர்கள் எழுதியிருக்ககூடாது. Hand Writing-ல் வித்தியாசம் இருந்தால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.
9.நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்கள் கஷ்டங்களை சொல்லி ‘எங்களுக்கு பரிசுகளைத் தாருங்கள்’ என்ற எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவேண்டாம். இவ்வாறு கோரிக்கை வைப்பவர்களின் நோட் Reject செய்யப்படும்.
10. கடைசி நாள் 2024 டிசம்பர் 31. இந்த தேதிக்குள் எழுதிய Long Size Note எங்களுக்கு கிடைக்குமாறு நேரிலோ அல்லது கொரியர் , போஸ்ட் மூலமாக அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : Prophetic Words Trust, 5-13, Thip-Meenachipuram, Thippanampatti-PO, Tenkasi- 627 808. கடைசி தேதிக்கு பின்பு வரும் கொரியர் எங்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது Reject செய்யப்படும்.
இதில் தேர்வுக்கான மிக முக்கியமான விதிமுறைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற விதிமுறைகளை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். https://www.pwmi.in/p/bible-writing-exam.html | 366 |
| 4 | வேதாகமம் எழுதும் தேர்வு-2024
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
திரியேக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துகள். தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த வேதவசனத்தை வாசித்து, எழுதி, தியானிக்க வேண்டும். மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2019 ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் அநேகர் கலந்துக்கொண்டு தேவனுடைய பரிசுத்த வேதத்தினை சொந்தக் கையால் எழுதி, பரலோக தேவனுடைய ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்கள். சத்திய வேதத்தினையும் அறிந்துக்கொண்டார்கள்.
கடந்த வருடங்களைப்போல இந்த வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு-2024 நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். *முதல் பரிசு : நான்கு கிராம் தங்கம்(4 grams). இரண்டாம் பரிசு : மூன்று கிராம் தங்கம் (3 grams). மூன்றாம் பரிசு : இரண்டு கிராம் தங்கம் (2 grams).* இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.
வீட்டிலிருந்தபடியே இந்த தேர்வில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும், எத்தனை முறை வேண்டுமென்றாலும், ஒரே குடும்பத்தில் உள்ள எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் கலந்துக்கொண்டு எழுதலாம். இதற்காக எந்த விதமான கட்டணங்களும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம். கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து Long Size Note –ல் பிழையில்லாமல், சொந்தக்கரத்தினால் தெளிவாக எழுத வேண்டும். எழுதிய நோட்டை கடைசி தேதிக்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
நீங்களும் இத்தேர்வில் கலந்துக் கொண்டு வேதவசனத்தை சொந்தக் கையினால் எழுதலாம். இந்த வருடம் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மிகக் கவனமாக வாசித்த பின்பு எழுதவும். ஏனென்றால் விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும். தேர்வுக்கான விதிமுறைகளை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, அதை கவனமாக வாசித்த பின்பு தேர்வினை எழுத தொடங்குங்கள்.
(குறிப்பு : 1.கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட தேர்வில் கலந்துக் கொண்டு பதிவு செய்திருந்தால் அந்த பதிவு எண்ணைக்கொண்டு இத்தேர்வை எழுதலாம். கடந்த வருடங்களில் கலந்து கொள்ளாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
2. இந்த தேர்வினை குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் 8608833150,8608096748 )
எழுதிய நோட் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 2024 ம் வருடம் டிசம்பர் 31 –ம் தேதி (31-12-2024)
வேதப்பகுதி: ஏசாயா, எரேமியா, புலம்பல்
மொத்த வசனங்கள் : 2776
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் : https://www.pwmi.in/p/bible-writing-exam.html | 262 |
| 5 | No text... | 173 |
| 6 | (இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்காக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த வருடம் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. முதல் பரிசு : நான்கு கிராம் தங்கம்(4 grams). இரண்டாம் பரிசு : மூன்று கிராம் தங்கம் (3 grams). மூன்றாம் பரிசு : இரண்டு கிராம் தங்கம் (2 grams). இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். இந்த மாதம் மூன்றாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதைபற்றி உடனே அறிந்துக்கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து Prophetic Words என்ற Channel –ஐ Subscribe செய்யுங்கள்.
Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c
You Tube : https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw
Telegram : https://t.me/pwmin
மேலும் இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். https://www.pwmi.in/p/contact-us.html | 184 |
| 7 | புது வருட வாக்குத்தத்தம்-2024
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். இந்த 2024 ஆம் வருடத்தில் யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும் (ஏசாயா 27:6) என்ற இந்த தீர்க்கதரிசன வாக்குத்தத்தின்படி பரலோக தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த ஆசீர்வாதம் பிசாசினால் திருடாதபடிக்கு உங்கள் மேலும், உங்கள் குடும்பத்தின் மேலும் நிலைத்திருப்பதாக. ஆமென் . இந்த பதிவில் தீர்க்கதரிசன வாக்குத்தத்தினை பற்றி விரிவாக தியானிப்போம். பரலோக தேவன் ஆவியில் விளங்க செய்வாராக.
இந்த நாளிலிருந்து இனி வரும் காலங்களில் உலகத்தை பலனால் நிரப்பும் நாட்கள் வரும் என்று கர்த்தருடைய ஆவியானவர் வாக்குத்தத்தமாக கொடுக்கின்றார். அதாவது கிறிஸ்துவுக்குள் படுகின்ற பிரயாசத்தின் பலன் உலகம் முழுவதும் சென்று அனேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்பது இதன் அர்த்தமாகும். இதை The Earth will be coverd with the Fruit they produce என்று ஆங்கில வேதாகமத்தில் வாசிக்கலாம். சரி எப்பொழுது நம்முடைய பலன் உலகத்தை நிரப்பும்? இந்த தீர்க்கதரிசன வாக்குத்தத்தத்தினை சுதந்தரிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தொடர்ச்சியாக தியானிக்கலாம்
இந்த வாக்குத்தத்த வசனத்தை கொஞ்சம் நன்றாக ஆழமாக வாசித்துப் பார்த்தால் நிறைய இரகசியங்கள் வெளிப்படும். வார்த்தை வார்த்தை ஆக தியானிக்க வேண்டும். இந்த வருடத்தில் வார்த்தை வார்த்தையாக வேத வசனத்தை தியானிப்பவர்களுக்கும், தியானிக்க அர்பனிப்பவர்களுக்கும் ஆசீர்வாதம் நிச்சயம். இதில் மொத்தம் ஒன்பது வார்த்தைகள் உள்ளன. அதில் யாக்கோபு என்றும் இஸ்ரவேல் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே ஒரே நபர் தான். ஒரே தேசம் தான்.. யாக்கோபு என்பது கர்த்தராகிய தேவனை நெருங்கி சேருவதற்கு முன் உள்ள வாழ்க்கையாகும். இஸ்ரவேல் என்பது தேவனோடு நெருங்கி சேர்ந்த பின் அவரோடு சஞ்சரிக்கின்ற வாழ்க்கையாகும். ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் இப்படிப்பட்ட இரண்டு அனுபவங்கள் இருக்கும். தன்னுடைய பாவத்தினையும், ஜென்ம சுவாவத்தினை விட முடியாமல் யாக்கோபாகவும் இருப்பார்கள். பரலோக தேவனால் தொடப்பட்டு, இரட்சிக்கப்பட்டு இஸ்ரேவேலாகவும் இருப்பார்கள். இரண்டையும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் கடந்து வந்திருப்பார்கள்
யாக்கோபு வேர்பற்றி என்று பரிசுத்த வேத வசனம் கூறுகின்றது. யாக்கோபு என்றால் எத்தன் என்று அர்த்தம். அதாவது என்னுடைய சுபாவங்களில் மாற்றமில்லை, நான் இன்னும் கோவக்காரனாக இருக்கிறேன், இன்னும் எரிச்சல் உள்ளவனாக இருக்கின்றேன், இச்சையடக்கமில்லை, அன்பு இல்லை, ஆவிக்குரிய கனிகள் இல்லை என்றிருப்பவர்கள் யாக்கோபு ஆவார்கள். இவர்கள் வேர்பற்ற வேண்டும். திரும்ப சொல்லுகின்றேன் இவர்கள் வேர் பற்ற வேண்டும். அதே நேரத்தில் ’நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன். என்னுடைய சுபாவம் மாறிக்கொண்டிருக்கின்றது. நான் இஸ்ரவேலராக மாற்றப்பட்டு விட்டேன்’ என்று இருப்பவர்கள் பூத்துக் காய்க்க வேண்டும். அப்பொழுதுதான் உலகத்தினை கனிகளால் நிரப்ப முடியும்.
ஒரு விவசாயி தன் வயலில் பிரயாசப்பட்டு பயிரிட்டு விளைந்த கனிகளை உலகம் முழுவதும் கொண்டு சென்று வர்த்தகம் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்பவர்களுக்கு எவ்வளவு செழிப்பு இருக்கும். இதை வாசிக்கின்ற அநேகர் உலகம் முழுவதும் உங்கள் வர்த்தகத்தினை பெருக்க போகின்றீர்கள். ஏற்றுமதி தொழில் உங்களுக்கு கிடைக்கப்போகின்றது. அதேபோல் உங்கள் கனிகளை உலகம் முழுவதும் நிரப்பும்போது, செழிப்பு, சுகம், ஆசீர்வாதம் வருமானம், நன்மைகள் உங்களைத் தேடி வரும். ஆம் உங்களை நன்மைகள் தேடி வரும். இந்த வருடம் நன்மைகள் தேடி வரும்.
வேர் பற்றுதல் என்றால் என்ன? பூத்துக்காய்த்தல் என்றால் என்ன? என்பதாய் நீங்கள் கேட்கலாம் ஒரு விதையை பூமிக்கடியில் மண்ணுக்குள் போடும்போது, அது முதலில் வேர் பற்றும். அந்த வேர் பூமிக்கடியில் வளர்ந்து பெருகும். பின்பு பூமிக்கு மேல் வளர்ந்து காய் காய்த்து, கடைசியில் கனிகளை கொடுக்கும். அதே போல்தான் வேர் பற்ற வேண்டும். காய் காய்க்க வேண்டும். வேர் பற்றுதல் என்பது பூமிக்கு அடியில் மறைவாக இருந்து, வெளியுலக பார்க்க முடியாதபடிக்கு நடக்கும் காரியம் ஆகும். அதேபோல் தேவனுடைய பிள்ளைகள் அடங்கியிருந்து, நொறுக்கப்பட்டு, மறைவாக வேர்பற்றி வளரும் போது, காய் காய்த்து கனிகளை கொடுப்பர்கள். அப்பொழுது உங்கள் பலன் பூமியை நிரப்பும். மறைந்திருந்து வேர்பற்றி, காய் காய்த்து, கனிகளை கொடுங்கள். உலகத்தை பலனால் நிரப்புவீர்கள். | 169 |
| 8 | No text... | 160 |
| 9 | No text... | 326 |
| 10 | No text... | 397 |
| 11 | No text... | 354 |
| 12 | No text... | 310 |
| 13 | No text... | 294 |
| 14 | No text... | 295 |
| 15 | No text... | 301 |
| 16 | No text... | 307 |
| 17 | No text... | 311 |
| 18 | No text... | 292 |
| 19 | No text... | 268 |
| 20 | No text... | 247 |
