389
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Data loading in progress...
Similar Channels
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
October '24
October '24
+3
in 0 channels
September '24
+389
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 08 October | +2 | |||
| 07 October | 0 | |||
| 06 October | 0 | |||
| 05 October | 0 | |||
| 04 October | 0 | |||
| 03 October | 0 | |||
| 02 October | 0 |
Channel Posts
| 2 | https://www.instagram.com/reel/C2MCr8BrDzL/?igsh=MTUzdTZtcXpvenlsbA== | 1 460 |
| 3 | https://youtu.be/WJ85Lby41Uo?si=3bAuSvWvliKHIIRp | 1 582 |
| 4 | No text... | 1 417 |
| 5 | 🙏 ஜெய் குரு 🙏
குருவானவர் தனது சீடனுள் உள்உறங்கிக் கிடக்கும் இறைவனை விழித்தெழச் செய்யும் விழிப்புற்ற இறைவனாவார். கருணை மற்றும் ஞான திருஷ்டி மூலம் ஓர் உண்மையான குரு உடல், உள்ளம் மற்றும் ஆன்ம ஏழ்மையில் உள்ளவர்களிடத்தில் இறைவன் தானே துயர் உறுவதைக் காண்கிறார். அதனால்தான் அவர்களுக்கு உதவி செய்வதை அவர் தன் ஆனந்தமான கடமையாகக் கருதுகிறார்.......
....... குருவானவர், மனிதர்கள் அனைவரிலும் மிகச் சிறந்த கொடையாளி, இறைவனைப் போலவே அவருடைய கொடைத்தன்மைக்கும்
எல்லையை இல்லை.
ஸ்ரீ மிருணாளினி மாதா
குரு-சிஷ்ய உறவு | 1 213 |
| 6 | 🙏 ஜெய் குரு 🙏
"உண்மையான குருவிற்கு உவமையாக நமக்குத் தெரிந்த எதுவும் இம்மூவுலகிலும் இல்லை,
சித்துமணிக் கல்லினால் (அப்படி ஒரு இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்) இரும்பைப் பொன்னாகத்தான் மாற்ற முடியுமே தவிர, அந்த இரும்பை இன்னொரு சித்துமணிக் கல்லாக மாற்ற முடியாது. வணக்கத்திற்குரிய ஆசிரியரோ தன் திருவடிகளில் சரணடையும் சீடனைத் தனக்கு சமமானவனாக செய்து விடுகிறார். ஆதலால் குரு ஒப்புவமை அற்றவர் -- இல்லை, எல்லாவற்றையும் கடந்தவர்.
ஸ்ரீ மிருணாளினி மாதா
குரு-சிஷ்ய உறவு | 968 |
| 7 | 🙏 ஜெய் குரு 🙏
நித்திரை ஒரு அருளாசி ஆகும். ஏனெனில் உங்களுடைய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் உறங்கும்போது அவற்றிலிருந்து விடுபட்டு இருக்கிறீர்கள். நீங்கள் விழித்திருக்கும் நேரங்களில்கூட சுயநினைவுடன் சுதந்திரமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சர்க்கரையை ருசித்திராவிட்டால் அதன் இனிப்புத் தன்மை உங்களுக்குத் தெரியாது. உங்கள் மனத்தின் முழு சக்தியையும் நீங்கள் பயன்படுத்தி இராவிட்டால், அதனுடைய அற்புத ஆற்றலை நீங்கள் உணர மாட்டீர்கள்.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 829 |
| 8 | 🙏 ஜெய் குரு 🙏
உங்களுடைய பகைவர்களைக்கூட நீங்கள் வெறுக்கக் கூடாது. எவரும் முழுவதும் கெட்டவர் இல்லை. ஒரு குறைபாடுள்ள விசைக் கட்டையைக் கொண்ட பியானோவை யாராவது இசைக்கும்போது நீங்கள் கேட்டீர்களானால், முழு பியானோவே கெட்டுவிட்டது என்று மதிப்பிட நினைக்கத் தோன்றும். ஆனால் குறைபாடு வெறும் ஒரு விசைக் கட்டையில்தான் உள்ளது. அதைச் சரி செய்யுங்கள்; பியானோ முழுவதுமே நன்றாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இறைவன் அவனுடைய குழந்தைகள் அனைவருள்ளும் வாழ்கிறான். எவரையாவது வெறுப்பது என்பது உங்களிடத்திலும் மற்றவர்களிடத்திலும் உள்ள அந்த இறைவனையே மறுப்பதாகும்.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 736 |
| 9 | 🙏 ஜெய் குரு 🙏
நட்பு என்னும் பொக்கிஷம்தான் உங்களுடைய மிக உயர்ந்த சொத்தாகும். ஏனெனில் அது இப்பிறவியைக் கடந்து உங்களுடன் சொல்கிறது. நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட உண்மையான சிநேகிதர்கள் அனைவரையும் நீங்கள் மறுபடியும் இறைவனின் இல்லத்தில் சந்திப்பீர்கள். ஏனெனில் உண்மையான அன்பு என்றுமே அழியாது. அதை சமயத்தில் வெறுப்பும்கூட என்றும் அழிவதில்லை. நீங்கள் எதையெல்லாம் வெறுக்கிறீர்களோ, அவற்றை, அந்தத் தீவிர வெறுப்பிலிருந்து நீங்கள் மீளும்வரை, திரும்பத் திரும்ப உங்களிடம் ஈர்க்கவும் செய்கிறீர்கள்
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 616 |
| 10 | 🙏 ஜெய் குரு 🙏
எல்லோருக்கும் நண்பனாக இருங்கள். உங்களுடைய அன்பிற்கும் நம்பிக்கைக்கும் சிலர் துரோகம் இழைத்தாலும்,
கவலைப்பட வேண்டாம். எப்பொழுதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். நீங்கள் எதுவோ அதுதான் நீங்கள். இது ஒன்றுதான் உண்மையான வாழும் வழி.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 546 |
| 11 | 🙏 ஜெய் குரு 🙏
உங்கள் கவலைகளிலிருந்து தப்பி ஓடிப்போக முயல்வது முட்டாள்தனமாகும். ஏனெனில் நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் கவலைகளும் உங்களுடன் செல்கின்றன. நான் செய்திருப்பதைப் போல, நீங்கள் உங்கள் பிரச்சினைகளைப் பயமின்றியும், தெளிவான மனசாட்சியுடனும் எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 550 |
| 12 | 🙏 ஜெய் குரு 🙏
கவலைப்படுவது காலத்தையும் சக்தியையும் விரயமாக்குகிறது. அதற்குப் பதிலாக, உங்கள் மனத்தை ஏதாவது ஆக்கபூர்வ முயற்சி எடுக்க முயல்வதற்கு பயன்படுத்துங்கள். சோம்பேறியாக இருப்பதைவிட, அதிக பிரயத்தனம் செய்யும் லௌகீக மனிதனாக இருந்து எதையாவது சாதிப்பது நல்லதே; சோம்பேறியானவன் இறைவனாலும் மனிதனாலும் கைவிடப் படுகிறான். கடும் முயற்சியுள்ள மனிதர்கள் பல நற்பேறுகளை அடைந்துள்ளனர். ஆனால் பணத்தை உங்கள் வெற்றியின் அளவுகோலாக ஆக்கி விடாதீர்கள். பெரும்பாலும், பணத்தைவிட அதைச் சம்பாதிப்பதற்காக மேற்கொள்ளப்படும் படைக்கும் திறன்தான் மனநிறைவை அளிக்கிறது.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா🙏
கவலை உணர்வைக் களைதல் | 550 |
| 13 | 🙏 ஜெய் குரு 🙏
ஒவ்வொரு முறை நீங்கள் கவலைப்படும் பொழுதும் ஒரு மன வேகத் தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அந்தத் தடைக்கு எதிராகப் போராடும்பொழுது, உங்கள் இதயம் மற்றும் மனத்தின் மீது சிரமத்தை சுமத்துகிறீர்கள்.......
...... கவலை என்பது உங்கள் முயற்சிகள் என்னும் சக்கரங்களின் மீது செலுத்தப்படும் 'தடை' சாதனம் (பிரேக்); அது உங்களை முழு நிறுத்தத்திற்கு கொண்டு வருகிறது. முடியாது என நீங்கள் எண்ணாதவரை, முடியாதது எதுவுமே இல்லை. கலையானது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அது செய்வதற்கு சாத்தியப்படாது என உங்களை உறுதியாக நம்பச் செய்ய வல்லது.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 477 |
| 14 | 🙏 ஜெய் குரு🙏
சமுதாயத்திலுள்ள மற்ற அனைவருமே உங்களைப் பற்றி எதிர்மறையாக எண்ணினாலும், அதை எதிர்த்து, எதையும்-வெல்லும் இறைவன் அளித்த உங்கள் இச்சா சக்தியின் துணை கொண்டு, பிரச்சினை காலங்களில் 'நாம் துன்பப் படுவதற்குத் தனித்து விடப்பட மாட்டோம்' என்று ஒரு மன உறுதியை நீங்கள் மேற்கொண்டால் ஓர் இரகசிய தெய்வீக சக்தி உங்களை ஆட்கொள்வதை உணர்வீர்கள். அந்த உறுதியான நம்பிக்கையின் காந்தத் தன்மையும் சக்தியும் உங்களுக்குப் புது வழியை திறப்பதைக் காணலாம். உங்களுடைய நிகழ்கால நிலையைப் பற்றி துக்கப்படவும் வேண்டாம், கவலைப்படவும் வேண்டாம். கவலைப்பட மறுத்து, சரியான முயற்சியை மேற்கொண்டீர்களானால், நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். மேலும் உங்கள் குறிக்கோளை அடைய நிச்சயம் ஒரு வழியைக் காண்பீர்கள்.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 437 |
| 15 | 🙏 ஜெய் குரு🙏
கவலைப்பட்டுக் கொண்டு காலத்தை வீணாக்குவதை விடுத்து, பிரச்னையின் காரணத்தை எவ்வாறு நீக்கலாம் என ஆக்க பூர்வமாக சிந்தியுங்கள். நீங்கள் ஒரு பிரச்சினையை விட்டொழிக்க வேண்டுமானால், அவ்விஷயத்தின் சாதக பாதகங்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு எழுதி, உங்களுடைய பிரச்சினையை அமைதியாக ஆராயுங்கள். பின்னர் உங்கள் நோக்கத்தை அடைய எந்த மாதிரியான நடவடிக்கைகள் சிறந்தவை எனத் தீர்மானியுங்கள்.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 545 |
| 16 | No text... | 786 |
| 17 | 🙏 ஜெய் குரு 🙏
கவலை என்பது, ஒரு பிரச்சினையை எப்படி விட்டொழிப்பது எனத் தெரியாமல் அதைப் பற்றிய இயலாமை மற்றும் பய உணர்வுகளில் நீங்கள் சிக்கிக் கொண்டுள்ள ஒரு மன-உடல் ரீதியான உணர்வு நிலையாகும்.......
....... அதற்கான உடனடி தீர்வு தெரியாமல், அந்நிலையைப் பற்றி கவலைப்பட ஆரம்பிக்கிறீர்கள். அதனால் உங்களுக்குக் கிடைப்பது என்ன? தலைவலி, நரம்புத் தளர்ச்சி, இருதயக் கோளாறு. நீங்கள் உங்களையும் உங்கள் பிரச்சினைகளையும் தெளிவாக ஆராயாமல் இருப்பதால்தான், உங்கள் உணர்ச்சிகளையோ அல்லது உங்களை எதிர்நோக்கியுள்ள நிலையையோ எப்படிக் கட்டுப்படுத்துவது என உங்களுக்குத் தெரியவில்லை.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா 🙏
கவலை உணர்வைக் களைதல் | 777 |
| 18 | 🙏 ஜெய் குரு 🙏
குரு-சிஷ்ய உறவின் நியதிகளில் நீங்கள் உறுதியாக இருந்தால், ஆன்மீகப் பாதை மிக எளிதாக மாறும். பிறகு நீங்கள் வழி தவறிச் செல்ல மாட்டீர்கள். மாயை உங்களை அந்தப் பாதையிலிருந்து விலக்குவதற்கு எவ்வளவு முயன்றாலும் சரி, இறை அனுபூதி அடைந்த குரு உங்களுடைய இன்னல்களை அறிந்து, மீண்டும் நீங்கள் இறைப் பாதையில் நிலைப்பதற்கு உதவி செய்வார். நீங்கள் குருவோடு ஒத்திசைந்து இருந்தால், இதனைத்தான் அவர் உங்களுக்காகச் செய்வார். உங்களுக்கும் குருவிற்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் இடைவெளி இருந்த போதிலும், அவருடைய உதவி உங்களை வந்து அடையும். இந்த பூமியில் அவர் இல்லாதிருக்கும் போதும் என குரு என்னுடன் இருப்பதை நான் எப்பொழுதும் உணர்கின்றேன். குருவின் வழிகாட்டுதலையும், அருளாசிகளையும் நீங்கள் பெற்றிருப்பது -- இதுவே ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான மிக எளிதான வழி.
ஆன்ம அனுபூதிக்கான பயணம் 574 | 376 |
| 19 | 🙏 ஜெய் குரு 🙏
உங்கள் பலவீனத்தை அகற்ற மிக நல்ல வழி அவற்றைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதுதான். இல்லாவிடில் நீங்கள் உணர்ச்சியில் மூழ்கடிக்கப்படுவீர்கள். ஒளியை உள்ளே கொண்டு வாருங்கள், இருள் எப்பொழுதும் இருக்கவே இல்லை என்பதை உணர்வீர்கள். அந்த எண்ணத்தில்தான் என்னுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய அகத் தூண்டுதல்களில் ஒன்று உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்களாக இருள் இருந்த ஒரு குகைக்குள் ஒளி உட்புக அனுமதித்தால், இருள் அக்கணமே மறைந்து போகும். அவ்வாறே நம்முடைய குறைகளும் பலவீனங்களும் இறைவனின் ஒளியை உள்ளே கொணரும் போது மறைந்து போகும். அறியாமையின் இருள் இனி ஒருபோதும் உட்புக முடியாது.
ஆன்ம அனுபூதிக்கான பயணம் 603 | 339 |
| 20 | 🙏 ஜெய் குரு 🙏
இந்த வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அறிந்து கொள்வதற்கு முன்பே அது மறைந்து விடும். நம்முடைய குழந்தைப் பருவத்தில், வாழ்க்கை மிக அழகானதாகத் தோன்றியது. ஆசைக்கு அதிகமான பொருட்களும், அனுபவிப்பதற்கு அதிகமான விஷயங்களும் பொறுப்பின்றியே கிடைத்தன. ஆனால் இப்பொழுது வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். அந்தக் கனவுகள் அனைத்தும் மறைந்து விட்டன. அதைப் போன்றே, வாழ்க்கையில் இந்த அத்தியாயம் கடந்து விடும். ஆனால் இந்த வாழ்க்கை உங்களுக்கு இருக்கும் வரையிலும், இறைவன் என்ற ஒரே எண்ணப் போக்கு மட்டுமே உங்கள் மனதில் வைத்திருக்கவும். நீங்கள் உண்மையாகவே அவனைத் தேடினால், உங்களுடைய அன்பை அதனால் எப்படித் தடுக்க முடியும்? இடைவிடாமல், அகத்தே அவனுடன் பேசுங்கள்; பிறகு அவனால் உங்களை விட்டு விலகி இருக்க முடியாது.
ஆன்ம அனுபூதிக்கான பயணம் 590 | 335 |
