𝙇𝘼𝙒𝙔𝙀𝙍'𝙎 𝙇𝙀𝙂𝘼𝙇 - 𝙄𝙇𝙇𝙀𝙂𝘼𝙇 𝙎𝙐𝙄𝙏👥👥👥
Open in Telegram
Advocate support CONTACT info - @BackBencher287 @Advocate @Lawyer #Advocate #Lawyer #Law #vakkil #court @court @Law @Legal #crpc
Show more362
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
*சாட்சிகளின் விதங்கள்*
1. பொய் சாட்சி (Lying Witness) .
2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).
3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).
4. தயக்கம் காட்டும் சாட்சி ( Hesitation Witness).
5. பயத்தால் உடல் நடுங்கும் சாட்சி( Nervous Witness) .
6. சிரிப்பூட்டுகின்ற சாட்சி ( Humorous Witness).
7. வஞ்சகச் சாட்சி ( Cunning Witness).
8. கபட சாட்சி ( Canting hypocrite).
9. பாதி உண்மையும் பாதி பொய்யும் சொல்லும் சாட்சி (The Witness Who Speaks partly true and partly false).
10. தொழில் வழியான சாட்சி.( Professional Witness).
11.அலுவல் சார்ந்த சாட்சி . (Official Witness).
12. காவல்துறை சாட்சி. (Police Witness).
13. மருத்துவ சாட்சி.( Medical Witness).
14. நாகரீகமான சாட்சி ( Cultural Witness).
15. நேர்மையான சாட்சி. ( Honest Witness).
16. தனிப்பட்ட சாட்சி.(Independent Witness).
17. பெண் சாட்சி.(Women Witness).
18. குழந்தை சாட்சி. (Child Witness).
19. அயலிடவாத சாட்சி.(Alibi Witness).
20.நேரில் பார்த்த சாட்சி.( Eye Witness).
21. கல்வி அறிவில்லாத சாட்சி.(illiterate Witness).
22. உறவு நிலை சாட்சி ( Relation Witness)
23. தற்செயலாக பார்த்த சாட்சி . (Chance Witness).
24. பிறழ் சாட்சி . (Hostile Witness).
25. குற்றமேற்ற சாட்சி.(Approver Witness).
26. காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட சாட்சி . (Trap Witness).
Interlocutory orders against which no revision was filed, can be challenged in appeal.
Interlocutory orders which could have been earlier challenged by means of Revision could very well be challenged before this Court while challenging the judgement and decree of the First Appeal.
AIR 1960 SC 941 (Satyadhyan Ghosal and others vs. Smt. Deorjin Debi and another) and
(2020) 7 SCC 327 (Mohd. Inam vs. Sanjay Kumar Singhal and others)
Scientific evidence.
Expert Report.
To submit handwriting and signature expert report, signature or thumb impression must be compared with original document and not with photostat copy.
[Para 2]
Vishwanath v Rajmani 2013 (4) AWC 3372
Limitation as preliminary issue.
If the issue of limitation is based on an admitted fact, it can be decided as a preliminary issue under Order XIV Rule (2) (b) of the Code of Civil Procedure.
But if the facts surrounding the issue of limitation are disputed, it cannot be decided as a preliminary issue.
Nusli Neville Wadia v. Ivory Properties : (2020) 6 SCC 557.
Quoted and relied in
Allahabad High Court
National Highway Authority Of India, ... vs Smt. Sampata Devi And 2 Others on 31 October, 2023
*வில்லங்கச் சான்றிதழில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்*
நாம் வீடு, நிலம் வாங்கும்போது அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம்பிக்கையின் அடிப்படையிலும் முழுமையில்லாத தகவல்களின் அடிப்படையிலும் பலர் சொத்துகளை வாங்கிவிடுகிறார்கள். அந்தச் சொத்துகள் மீதுள்ள பிரச்சினை பிறகுதான் நமக்குத் தெரியவரும். அப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்போம். முறையான ஆவணங்கள் இல்லாமல் நாம் புகார்கூடக் கொடுக்க முடியாது.
இம்மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே சட்ட ரீதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் முதன்மையானது வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வாங்குவது நாம் வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டிக்கொடுத்துவிடும்.
*வில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள்*
நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
*வில்லங்கச் சான்றிதழில் நாம் கண்டுபிடிக்க முடியாதவை*
2009ஆம் ஆண்டு நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமாகியது. அதனால் அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது.
*பவர் ஆஃப் அட்டர்னி*
பவர் ஆஃப் அட்டர்னி என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்தப் பவர் ஆஃப் அட்டர்னியை வைத்துதான் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக சொத்தின் உரிமையாளர், 2009ஆம் ஆண்டுக்கு முன்பு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னியை எழுதிக் கொடுத்தார் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஆண்டிலேயே பவர் ஆஃப் அட்டர்னியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால் இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை வைத்து அந்த நபர் அந்தச் சொத்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது 2009 நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி பதிவுசெய்யும் முறை வந்தது என்பதால் உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெறும் பவர் ஆஃப் அட்டானியை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.
*வில்லங்கச் சான்றிதழ் பெறும் முறை*
நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும். இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இந்தச் சேவை எந்த ஊர்களுக்கு இருக்கிறது என்ற விவரமும் அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்பு உள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறக் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்தில் போய் முடியலாம்.
*சொத்துக் குவிப்பு வழக்கு - பொன்முடி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் - இறுதி விசாரணை*
திமுக துணை பொதுச் செயலாளராகவும், உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருப்பவர் பொன்முடி. 1996 -2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடிக்கு எதிராக 2001ம் ஆண்டு அதிமுக அரசில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்தது.
பொன்முடிக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்கு முதலில் விழுப்புரம் நீதிமன்றத்திலும் அதன் பிறகு வேலூர் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இதனால் வழக்கை தாமாகவே முன்வந்து மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்தார் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். வழக்கு விசாரணை மிக மோசமான முறையில் நடைபெற்றதாக விமர்சனமும் செய்தார். முடித்துவைக்கப்பட்ட வழக்கை யாரும் எதிர்பாரத விதமாக மறுஆய்வுக்கு எடுக்கப்பட்டது பொன்முடி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சூமோட்டோவாக மறுஆய்வு செய்வதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் நீதித் துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை சந்திக்க பொன்முடிக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து, இவ்வழக்கில் இறுதி விசாரணை நடத்தவுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.
எனினும், பொன்முடி வழக்கு விசாரணை பல முறை தள்ளிவைக்கப்பட்டதே தவிர இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. இந்த நிலையில்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 18 முதல் 21ம் தேதி வரை நடத்தி முடிக்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
ஏற்கனவே மற்றொரு சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். இதன் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த மார்ச் மாதம்தான் மீண்டும் அமைச்சரானார். இந்த நிலையில் மற்றொரு சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஜூன் மாதம் தள்ளிவைக்கப்பட்டது அவருக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Court cannot overlook or ignore provisions of CPC in the name of inherent power.
Individual Courts do not have liberty to throw Civil Procedure Code into dustbin and formulate their own procedure in the name of justice.
If the procedure as laid down by legislature has to be ignored by the Courts for such trivial reasons, a total anarchy shall prevail and shall make the legislature irrelevant.
Opera Global Pvt. Ltd. vs. Travel Planners Pvt. Ltd., 169 (2010) DLT 271.
Delhi High Court
