தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦
Open in Telegram
Show more
The country is not specifiedThe category is not specified
4 276
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
இறுகிய மனதை இலகுவாக்கினால் போதும்..
இல்லை என்ற வார்த்தை மறைய!
✅
எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும்..
கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு!
💛🧡💛
காற்றினால்
ஆடை நெய்தல்
நிகழவிடு!
💙💙💙
நாம் செல்ல வேண்டிய
பாதையைத் தொலைத்துவிட்டு
தடுமாறும் போதெல்லாம்..
ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்கிறது கால்கள்..
நம்பிக்கையோடு பயணிப்போம்!
💐💐💐
காலை வணக்கம்!
நீ ஏன் எனக்காய்
வராமல் போனாய்?
வாழ்வில் வராமலே இருந்திருக்கலாமே!
💔💔
அழைக்கவும் முடியாமல்
அழிக்கவும் இயலாமல்
ஆயிரமாயிரம் எண்கள்
சேமிப்பில்..
அத்தனை எளிதாக
இல்லை
எண்களை அழித்து
விடுவது!
💔💔
நீ
எப்போதும்
உடனிருக்க
வேண்டுமென்றில்லை..
தன்னம்பிக்கை
இழந்து, உடையும் தருணத்தில்
உடனிரு போதும்!
💛🧡💛
இளமையின்
நிகழ்வுகள் யாவும்..
நினைவுகளாய்
முதுமையில்!
💔💔
என் எல்லா செயல்களிலும் உன் நினைவு..
என் தேநீரில் இன்னும் அதிகமாய் நீ..!!
❤️❤️❤️
உலக மொழிகளில்..
மொழி பெயர்க்க முடியாத அழகியல்..
மழலை இவர்களின் புன்னகை..!!
அழகு ❤
அன்பில் சுயநலம் என்ன தெரியுமா?
மொத்த அன்பையும்; மொத்த கோபத்தையும்..
தனக்கானவர்கள்
தன்னிடம் மட்டுமே வெளிப்படுத்த
வேண்டும் என்பது தான்!
💟💟💟
அவள் கைரேகைக்குள்
தான் அடங்கியது
என் ஆயுள் ரேகை.
வாக்குறுதி ஒரு வலிமையான வார்த்தை..
அவை
ஆழமாக எதையோ உருவாக்குகிறது..
அல்லது
எல்லாவற்றையும் உடைக்கிறது!
💙💜
இடைவெளியற்ற
தொடர் பயணத்தின்..
சிறு சிறு
மனம் ரசிக்கும்
இடைவேளைகளில்..
விரிகிறது
ஒரு வானம்
மகிழ்ச்சி !
💙💕💜
புரிதல் இல்லா உறவுகளில்..
வலிகள் மட்டுமே
வானளவுக்கு இருக்கும்!
💗💗💗
காலை வணக்கம்!
துரத்துவது தோல்வியாக இருந்தாலும்..
துவண்டு போகாமல் ஓட்டத்தை தொடருங்கள்..
வெற்றியை இலக்காக கொண்டு!
💐💐💐
இனியநாள்!
நாட்குறிப்பில் நீயில்லா
நாட்கள் என்பது..
சுவாசித்தலில்
சேர்த்தியல்லவே!
❣😌🌱
பக்குவமென்பதெல்லாம் அனிச்சை செயல்!
💚💛
நட்சத்திரங்களை எண்ணி சொன்னால் உன் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றாள்..
நான் சிறிதும் யோசிக்காமல் அவள் விழிகளை பார்த்து இரண்டு என்று சொல்லி முடித்து விட்டேன்!
😍🙈
கடினம் இல்லை வாழ்க்கை..
கடந்து செல்பவனுக்கு!
❤️❤️❤️
