இ-நூலகம்
Open in Telegram
Destination of Ebooks and Audiobooks Send Your eBook Request to @AttenderBot
Show moreThe country is not specifiedThe category is not specified
1 453
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
1 453
என்னைக் கொல்லுவதற்குப் பல தடவைகளிலும் முயற்சி நடந்திருக்கிறது. ஆனால் கடவுள் இன்றுவரையும் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார். என்னைத தாக்கியவர்களும் தாங்கள் செய்ததை நினைத்து வருந்தியிருக்கிறார்கள். ஆனால், ஒரு அயோக்கியனை ஒழித்துக் கட்டுகிறோம் என்று நினைத்து, இனி யாராவது என்னைச் சுட்டால், அவனால் உண்மையான காந்தியைக் கொல்ல முடியாது. அவன் கண்ணுக்கு எவன் அயோக்கியனாகத் தோன்றினானோ அவனைத்தான் கொல்ல முடியும்.
1 453
"குள்ளக் குள்ளனைக்
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
வினாயக னைத்தொழு"
என்று தான் குழந்தைப் பருவத்தில் கேட்டுப் பாடம் செய்திருந்த பாட்டைப் பாடினான். "யாருக்காவது தீங்கு நேரிட்டால் இந்த பாட்டைச் சொல்லுவது எங்களுக்கு வழக்கம். சுந்தரமும் அதைத்தான் சொல்லத் தொடங்கி, அதற்குள் கண்ணகி எழுந்துவிட்டதால் நிறுத்திவிட்டான்" என்று அவன் வீர்சிங்கிடம் விளக்கம் கூறினான்.
1 453
கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு. வில்லன் வேடம் ஏற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.
அன்றைய திராவிட இயக்க அரசியலில் ராதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பெரியாருக்குத் தோள்கொடுத்து பகுத்தறிவைப் பரப்ப ராதா செய்த பணிகள் அபாரமானவை. ராதாவின் ராமாயணம் என்ற ஒற்றை நாடகம், தமிழகத்தையே உலுக்கியது. அடிதடி, கல்வீச்சு, கலவரம், 144 தடை உத்தரவு. அத்தனையையும் மீறி ராதாவுக்காகக் குவிந்தனர் ரசிகர்கள். அவரை அடக்குவதற்காக நாடகத் தடைச் சட்டம் என்ற தனிச்சட்டத்தையே கொண்டு வந்தது அரசாங்கம். அனைத்தையும் மீறி களமிறங்கிப் போராடிய ராதாவுக்கு என்றைக்குமே நாற்கலிக் கனவு இருந்ததில்லை.
திராவிடர் கழக அனுதாபியாக இருந்தாலும் பெரியாரையும் அண்ணாவையுமே விமிரிசிப்பார். காங்கிரஸ்காரர்களைப் பிடிக்காதென்றாலும் காமராஜரை மதிப்பார். தீவிர நாத்திகரானபோதிலும் பக்திப் படங்களில் எவ்வித மனச் சிடுக்குமின்றி நடிப்பார். ராதா - எளிதில் பிடிபடாத குணச்சித்திரம்!
நூற்றாண்டு கண்ட எம்.ஆர். ராதா என்ற உண்மைக் கலைஞனின் உன்னதமான வாழ்க்கையை, நாளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் இந்தப் புத்தகம்.
